வேதாகம நாட்டின் வாழ்க்கை முறைகள் 2.உணவு
அ.அப்பம்
வேதாகமத்தில் ‘அப்பம்’ என்று வாசிக்கும்போது, இக்காலத்தில் உள்ள ரொட்டியைப் (Bread) போன்று இருக்கும் என்று நாம் நினைக்கக் கூடாது. வேதத்தில் சொல்லப்பட்ட அப்பம், நாம் சாப்பிடும் சப்பாத்தி அல்லது ரொட்டியைப் போன்றது. தட்டையான வடிவில் செய்யப்படும் ரொட்டி தடியாகவோ மெல்லியதாகவோ இருக்கும். அது ஒலிவ எண்ணெய் அல்லது வெண்ணையால் செய்யப்படும். அப்பத்தைப் பாலாடைக்கட்டி, பழங்கள், காய்கறிகள், பயறு வகைகள் இவை களுடனும், அரிதாக இறைச்சியுடனும் சேர்த்துச் சாப்பிடுவார்கள். பணக்காரர்கள் கோதுமை ரொட்டியையும், ஏழைகள் பார்லி (வாற் கோதுமை) ரொட்டியையும் உண்பார்கள். ரொட்டியே அவர்களுக்கு முக்கியமான உணவு. அது புனிதமானதாகவும் கருதப்பட்டது. ஏனெனில் விதைப்பு, அறுவடை, வேகவைத்தல் (சமைத்தல்) ஆகிய செயல்கள் தேவனுடைய நாமத்தினால் செயப்பட்டன. ரொட்டியை கத்தியால் வெட்ட (அறுக்க) மாட்டார்கள். விரல்களால் பிய்த்து உண் பார்கள். ரொட்டி உயிருக்கு ஜீவநாடி.”ஜீவ அப்பம் நானே” என்று இயேசு சொன்னார் (யோவான் 6:35). அந்த வாசகத்தின் சரியான அர்த்தத்தை அப்போதைய மக்கள், புரிந்து வைத்திருந்தார்கள்.
i திருகை
ஒன்றன்மேல் ஒன்றாக வைக்கப்பட்ட இரண்டு வட்ட வடிவான கற்களால் திருகை செய்யப்பட்டிருக்கும். திரிகையின் அடியில் உள்ள கல்லின்நடுவில் சுழலச்சு முளை இருக்கும். மேல்கல், தானியங்களைப் போடுவதற்குப் புனல் வடிவத்தில் நடுவில் ஒரு துவாரத்துடன் இருக்கும். ஒன்று அல்லது இரண்டு பெண்கள் மேல் கல்லைச் சுற்றுவார்கள். ஒரு கையால் சுற்றி, மறுகையால் தானியத்தை திரிகைக்குள் போடுவார்கள். அரைக் கப்பட்ட மாவு, திருகைக்கு அடியில் விரிக்கப்பட்டிருக்கும் செம்மறியாட்டுத் தோலிலோ, துணியிலோ வந்து விழும். “இரண்டு ஸ்திரீகள் ஏந்திரம் அரைத்துக் கொண்டிருப்பார்கள், ஒருத்தி ஏற்றுக் கொள்ளப்படுவாள், மற்றொருத்தி கைவிடப்படுவாள்” (LDS. 24:41).
ii. அடுப்பு
மண்ணால் செய்யப்பட்ட அடுப்பின் நடுவில் விறகை வைத்து எரிப்பதற்குக் குழிபோன்ற பகுதி இருக்கும். எரிந்து கொண்டிருக்கும் நெருப்பின் மேலே நேரடியாகவோ அல்லது அதற்கு மேல் வைக்கப்பட்ட வானலி சட்டியிலோ ரொட்டியைச் சுடுவார்கள். சிற்றூர்களில் பொதுவான இடத்தில் கிராமத்துச் சமையல்காரர்கள் அடுப்பை வைத்திருப்பார்கள். பெரிய கல்லினாலோ இரும்பினாலோ செய்யப்பட்ட தட்டில் ரொட்டியைச் சுடுவார்கள். கிராம மக்கள் அங்கு வந்து பணம் கொடுத்து தங்களுக் குத் தேவையான ரொட்டியைச் சுட்டுக்கொண்டு போவார்கள்.
iii. எரிபொருளாகிய அக்கினித்தழல்
கிராமப்புற வீடுகளில் அடுப்புகள் சிறியதாக இருக்கும். வீடுகளில் அடுப்பைப்பற்ற வைக்கப் பொது அடுப்பிலிருந்து கங்குகளை அதாவது அக்கினித் தழலை வாங்கிச் செய்வார்கள் பொதுவாக, இந்த எரிபொருளை வாங்கு வதற்கு வாலிபப் பெண் பிள்ளைகளை அனுப்புவார்கள். கங்குகளை உடைந்த மண்ணாலான தண்ணீர் ஜாடிகளில் வைத்து தலை யின்மேல் சுமந்து வருவார்கள். “பிரியமானவர்களே, பழி வாங்குதல் எனக்குரியது. நானே பதில் செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழி வாங்காமல் கோபாக் கினைக்கு இடங்கொடுங்கள். அன்றியும், உன் சத்துரு பசியாயிருந் தால், அவனுக்குப் போஜனம் கொடு. அவன் தாகமாயிருந்தால், அவனுக்கு பானங்கொடு. நீ இப்படிச் செய்வதினால் அக்கினித் தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய்” (ரோமர் 12:19,20). அக்கினித் தழலைத் தலையில் குவித்தல் என்றால் என்ன அர்த்தம்? அது பழி வாங்குதலா? பின்வரும் வசனத்தைக் கவனியுங்கள். “நீ தீமை யினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு” (ரோமர் 12:21).உன் எதிரிக்கும், நன்மை செய்வதில் தாராளமாய் இரு. இதுவே அதனுடைய சரியான அர்த்தம். அக்கினித் தழல் தாராளமாகக் கொடுக்கப்பட வேண்டும், கொஞ்சமாகக் கொடுத்தால் போகும் வழியில் அணைந்து போகும். தீமைக்குப் பதில் நன்மை செய். நன்மையைத் தாராளமாகச் செய்.
iv. உண்ணுதல்
ரொட்டியில் கொஞ்சத்தைக் கையால் பிய்த்து அதனை மடக்கியோ சுருட்டியோ, பொதுவான பெரிய பாத்திரத்திலி ருக்கும் சாற்றைத் (குழம்பைத்) தொட்டுச் சாப்பிடுவார்கள். சாதா ரணமாக இறைச்சியை அகலமான பெரிய தட்டில் வைத்திருப்பார்கள். அதனைக் கையில் எடுத்து உண்பார்கள். போவாசின் வயலிலே, கதிர்களைப் பொறுக்க, ரூத் போனாள். சாப்பாட்டு வேளையில், அவன் ரூத்திடம், “நீ இங்கே வந்து, இந்த அப்பத்திலே புசித்து, காடியிலே உன் துணிக்கையைத் தோய்த்துக்கொள்” என்று கூறினான் (ரூத் 2:14).
ஆண்டவராகிய இயேசு, தனக்கு அன்பான சீஷனிடம், தம்மைக் காட்டிக் கொடுக்கப் போகிற சீஷனைக் குறிப்பாக அடையாளம் காட்டி னார். என்னோடே கூட தாலத்தில் கையிடுகிறவனே என்னைக் காட்டிக் கொடுப்பான் என்றார் (மத்.26:23).அவர் கூறியது யாரைக் குறிக்கிறது என்று முதலில் தெளிவாக இல்லை. ஏனென்றால், எல்லாருமே பொதுவான பாத்திரத்தில் கையிட்டார்கள். நான் இந்தத் துணிக்கை யைத் தோய்த்து எவனுக்குக் கொடுப்பேனோ அவன்தான் என்று இயேசு கிறிஸ்து சொன்ன பின்புதான், அது தெளிவாயிற்று (யோவான் 13:26). யூதாஸ்காரியோத்துக்கு துணிக்கையின் சிறப்பான பகுதியை அவர் கொடுத்ததின் மூலம், அவனை எதிரியாக எண்ணுவதற்கு மாறாகச் சிறப்பு விருந்தினராகவே கனப்படுத்தினார். நண்பனைப் போல, மரியாதையாக நடத்தினார். அவன் அறிவடைய வேண்டும் என விரும்பி, இயேசு அப்படிச் செய்தார். தன் பாவத்தின் அகோரத்தை அவன் உணர வேண்டுமென்ற விருப்பத்துடன் அவ்வாறு செய்தார்.
V. உட்காரும் முறை
வட்டமாக அல்லது அரைவட்டமாக உட்கார்ந்து யூத மக்கள் சாப்பிடுவார்கள். கால்களை மடக்கி, பின்புறமாக நீட்டி, இடது கையைத் தரையில் ஊன்றிக்கொண்டு, வலது கையால் எளிதாக அப்பத்தை எடுத்து உண்பார்கள். இப்படி உட்கார்ந்து சாப்பிடும்போது, இரண்டாவது உட்கார்ந்திருக்கும் விருந்தினரின் மார்பு, முதல் விருந்தினரின் மார்புக்கு பக்கமாகவும், எதிர்ப்புறமாகவும் இருக்கும். இப்படித்தான், இயேசு கிறிஸ்துவின் அன்புக்குரிய சீஷன் யோவான், அவருடைய மார்பில் சாய்ந்து கொண்டிருந்தான் (யோவான் 13:23). வெளியிலிருந்து வருபவர் எவரும், விருந்தினர்களுக்கோ, விருந்துக்கோ இடைஞ்சல் இல்லாமல், அவர்களின் பாதங்களைத் தொடமுடியும். பாவியான ஒரு பெண், இயேசுவுக்குப் பின்னால் நின்று கொண்டு, அவருடைய பாதங்களைக் கண்ணீரால் நனைக்கவும், தன்னுடைய தலைமுடியால் துடைக்கவும் செய்தாள் (லூக். 7:38).
vi. சாப்பிடும்போது உட்கார வேண்டிய ஒழுங்கு
விருந்தினர்கள் வட்ட அல்லது அரைவட்ட வடிவத்திலே உட்காரு வார்கள். உபசரிப்பவர் நடுவில் உட்கார்ந்திருப்பார். அவருக்கு வலது புறம் உட்கார்ந்திருப்பவருக்கு முதலாவது ஸ்தானத்திற்கும் இடது புறம் உட்கார்ந்திருப்பவர், அடுத்தபடியான மரியாதைக்கும் உரியவர். கர்த்தருடைய ராஜ்ஜியத்தில் இப்படிப்பட்ட முக்கியமான முதலாவது மற்றும் இரண்டாவது இடங்களில் தங்களை அமர வைக்கும்படியாக செபெதேயுவின் குமாரராகிய யாக்கோபும், யோவானும் வேண்டிக் கொண்டார்கள். உமது மகிமையிலே, எங்களில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி எங்களுக்கு அருள் செய்யவேண்டும் என்று அவர்கள் அவரிடம் சொன்னார்கள் (மாற்.10:37).
பொதுவாக, யூதர்கள், விருந்துகளில் ஒரு குறிப்பிட்ட ஒழுங்கின் படி உட்கார்ந்து சாப்பிடுவார்கள். விருந்துக்கு அழைக்கப்படும்போது, முதன்மையான இடத்தில் உட்காராமல், தாழ்ந்த இடத்தில் உட்கார வேண்டும் என்று ஆண்டவர் அவர்களுக்குப் போதித்தார். “நீ விருந் துக்கு அழைக்கப்படும்போது, போய் தாழ்ந்த இடத்தில் உட்காரு. அப் பொழுது உன்னை அழைத்தவன் வந்து, சிநேகிதனே, உயர்ந்த இடத்தில் வாரும் என்று சொல்லும்போது, உன்னுடனே கூடப் பந்தி யிருக்கிறவர்களுக்கு முன்பாக உனக்குக் கனமுண்டாகும்”(லூக். 14:10).
One thought on “வேதாகம நாட்டின் வாழ்க்கை முறைகள் 2.உணவு”
நன்றி ஐயா