You are currently viewing வேதாகம நாட்டின் வாழ்க்கை முறைகள் 3.அணிகலன்களும் ஆபரணங்களும்

வேதாகம நாட்டின் வாழ்க்கை முறைகள் 3.அணிகலன்களும் ஆபரணங்களும்

வேதாகம நாட்டின் வாழ்க்கை முறைகள் 3.அணிகலன்களும் ஆபரணங்களும்

அ. உடைகள்

மக்கள் உடையணிதலில் அதிக வேறுபாடு காணப்படவில்லை. துணி, கம்பளியாலோ, செயற்கை நூலாலோ உண்டாக்கப்படும். தற் காலத்திலே, பஞ்சினாலே செய்யப்படுகிறது. இரண்டு பகுதிகளைக் கொண்ட உடையில் ஒன்று உள்ளாடை. அது குட்டையாகவும், கையில்லாமலும் இருக்கும். அது முழங்கால் அல்லது கணுக்கால் வரை இருக்கும். வெளி உடை நீளமாகவும், கைவைத்தும் இருக்கும். வேலை செய்வோரின் வெளி உடை குட்டையாகவும், பணக்காரர்கள் உடை நீளமாகவும் இருக்கும்.

i. இடுப்புக் கச்சை 

ஒருவருடைய உடையில் இடுப்புக் கச்சை (Belt) மிகவும் பயனுள்ளதாகும். தோலினால் செய்யப்பட்டிருக்கும் இக்கச்சை ஆடையை உடலோடு இறுக் கிச் சேர்ப்பதால், அவரால் எளிதாகத் தடையின்றி நடக்க முடியும். சில கச் சைகள் சித்திர வேலைப்பாடுகளுடனும் கூடியதாகவும் கையளவு அகலம் உள்ள தாகவும் இருக்கும். பணம், பட்டயம் மற்றும் சில பயணத்திற்குத் தேவையான பொருட்களையும் எடுத்துச் செல்ல அது உதவும்.அப்சலோமைக் கண்ட மனிதனி டம், யோவாப் “நீ அதைக் கண்டாயே, பின்னே ஏன் அவனை அங்கே வெட்டி, தரையிலே தள்ளிப் போடவில்லை? நான் உனக்குப் பத்து வெள்ளிக்காசையும், ஒரு கச்சையையும் கொடுக்கக் கடமைப்பட்ட வனாயிருப்பேனே” என்றான் (2 சாமு. 18:11). தாவீது தன் மனிதர் களிடம், “அவனவன் தன் பட்டயத்தை எடுத்துக் கொள்ளக்கடவன்” என்றான் (1 சாமு. 25:13). “வழிக்குப் பையையாகிலும், அப்பத்தை யாகிலும், கச்சையில் காசையாகிலும் எடுத்துக்கொண்டு போகாமல், ஒரு தடியை மாத்திரம் எடுத்துக் கொண்டு போகவும்” என்று இயேசு கிறிஸ்து தம் சீடர்களிடம் கூறினார் (மாற்கு 6:8). இவ்வசனங்கள் வார்க்கச்சையின் பயன்களை எடுத்தியம்புகின்றன.

ii. வெளி ஆடை 

கம்பளியினால் செய்யப்பட்ட வெளி ஆடை, மேலங்கி யாகப் பயன்படும். இது பெரிய விரிப்பாகக் காணப்படுவதால் ஒருவருக்கு காற்று, வெயில், மழை ஆகியவற்றிலிருந்து நல்ல பாதுகாப்பைத் தரும். மேலும் இரவிலே படுக்கை விரிப்பாகவும் மூடிக்கொள்ள போர்வையாகவும் அது பயன்படும். ஏனெ னில், பாலஸ்தீன தேசத்திலே இரவிலே அதிக குளிராகவும், பகலிலே அதிக வெப்பமாகவும் இருக்கும்.

ஆகவே ஒரு ஏழை மனிதனிட மிருந்து,வெளி ஆடையை எடுத்துக் கொள்ளக்கூடாது என்று கட்டளை கொடுக்கப்பட்டது. வஸ்திரத்தை ஈடாக வாங்கினால், பொழுது போகுமுன்னமே, அதை அவனுக்குத் திரும்பக் கொடுத்து விடுவாயாக. அவன் போர்வை அது தானே. அதுவே அவன் தன் உடம்பை மூடிக்கொள்ளுகிற வஸ்திரம். வேறு எதினாலே போர்த்துப் படுத்துக் கொள்ளுவான்? அவன் என்னை நோக்கி முறையிடும்போது, நான் அவனுக்குச் செவிகொடுப்பேன். நான் இரக்கமுள்ளவரா யிருக்கிறேன்” (யாத். 22:26,27). ஏழைகளைப் பற்றியும், ஒடுக்கப்பட்ட வர்களைப் பற்றியும் கர்த்தர் கரிசனை உள்ளவராயிருக்கிறார். பொது வாக, வெளி ஆடைகள், மார்பை ஒட்டிய பகுதி யில் மடிப்புகள் இருக்கும். அந்த மடிப்பில் அநேக பொருள்களைக் கொண்டு போகலாம். தானியத்தை இப்படித்தான் கொண்டு போவார் கள். “கொடுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும். அமுக்கிக் குலுக்கி, சரிந்து விழும்படி,நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்” (லூக். 6:38). பெண்கள் அணியும் வெளியாடைகள் சற்று வித்தியாசமானதாக இருக்கும். அது சற்று நீளமாகவும், மெல்லிய தாகவும் இருக்கும்.

iii. ஆண்களுக்கான தலைப்பாகை 

பொதுவாக, ஆண்கள் வெளியே போகும் போது, தலைப்பாகை அணிவார்கள். இல்லை யெனில் வெப்பத் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். அது அவர்களுக்கு மரணத்தையும் வருவிக்கக் கூடும். அது நீண்ட கனமான துணியில் ஆனதாக இருப்பதால் அதைத் தலையில் பலமுறை சுற்றிக் கட்டு வார்கள். ஆண்களுக்குத் தலைப்பாகை நல்ல தொரு பாதுகாப்பு.

vi. பெண்களுக்கான முக்காடு 

அவர்கள் வேலைப்பாடுள்ள அலங்காரமான ஒரு உயர் மான தொப்பியை தலையில் அணிவார்கள். அவர்கள் தங்கள் முகங் களை மறைத்துக் கொள்ள சிறப்பான முறையில் தொப்பியோடு இணைந்த முக்காட்டை அணிவார்கள். அது கீழை நாட்டின் வழக்கம். பெண்களோடு இருக்கும்போது, அந்த முக்காட்டை பின்னால் போட்டுக் கொள்வார்கள். எதிரே ஆண் கள் வரும்போது முக்காட்டை முன்பக்கம் போட் டுக்கொள்வார்கள். ரெபேக்காள் தன் கண்களை ஏறெடுத்து, ஈசாக்கைப் பார்த்தாள். அவர்தான் தனது எஜமான் என்று வேலைக்காரன் சொன்னவுடன், அவள் முக்காட்டைப் போட்டுக் கொண்டாள் (ஆதி. 24:65).

ஆ.இயேசு கிறிஸ்துவின் உடை

இயேசு கிறிஸ்து, ஒரு தலைப்பாகை அணிந்திருக்கக் கூடும். அது யூத தேச உடையின் ஒரு பகுதி. ஓவியர்களின் கற்பனையால் வரைந்த, இயேசு கிறிஸ்துவின் உருவப்படத்தை நாம் பார்த்திருக்கிறோம். அவர்கள் முழுவதும் சரியான யூதமுறையின்படி படத்தை வரைய வில்லை. அவருக்கு நீண்ட முடியும், வாரிவிடாத தாடியும் இருந்திருக் கலாம். அவர் உள்ளாடை அணிந்திருந்தார். அவருடைய வெளி ஆடை (மேலாடை) தையலில்லாமல், ஒரே அங்கியாக இருந்தது. அது தொளதொளப்பான ஆடையாயிருந்தது. தமது இடுப்பைச் சுற்றி ஒரு கச்சை கட்டியிருந்தார். காலுக்குச் செருப்பும், கையில் ஒரு கோலும் வைத்திருக்கக் கூடும்.

இ. ஆபரணங்கள்

i. பொன் ஆபரணங்கள் 

பெண்கள் காதணிகள் அணிவார்கள். யாக்கோபின் குடும்பத்தார், அங்கே தங்கள் கையிலிருந்த எல்லா அந்நிய தெய்வங்களையும், தங்கள் காதணிகளையும் யாக்கோபினிடத்தில் கொடுத்தார்கள் (ஆதி.35:4). ஆபிரகாமின் வேலைக்காரன், அரைச் சேக்கல் எடையுள்ள பொற்காதணியையும், அவள் கைகளுக் குப் பத்து சேக்கல் எடையுள்ள இரண்டு பொன் கடகங்களையும் காப்புகளையும் எடுத்துக் கொடுத்தான் (ஆதி.24:22).ஏசாயா, யூதாவின் மேலும், எருசலேமின் மேலும் வரப்போகும் தேவனின் நியாயத்தீர்ப்பைப் பற்றி, தீர்க்கதரிசனம் கூறினான். “அந்நாளிலே ஆண்டவர் அவர்களுடைய ஆபரணங்களாகிய சிலம்புகளையும், சுட்டிகளையும், பிறைச் சிந்தாக்குகளையும், ஆரங்களையும், அஸ்தகடங்களையும், தலைமுக்காடுகளையும் நீக்கிப்போடுவார் (ஏசாயா 3:18,19).

ii. வெள்ளி நாணயங்கள் 

பெண்கள் உயரமான தொப்பியை அணிவர் என்று கண்டோம். அந்தத் தொப்பிகளில் வெள்ளி, தங்க நாணயங்கள் சில வைத்துத் தைக்கப்பட்டிருக்கும். சில சமயங்களில், அவற்றைக் கழுத்திலும் அணிந்து கொள்வார்கள். கணவன் மனைவிக்குக் கொடுத்த பரிசமாகவோ திருமணப்பரிசின் ஒரு பகுதியாகவோ இருக்கலாம். எனவே அது மிகவும் விலைமதிப் புள்ளதாகக் கருதப்படும். லூக்கா 15:8-இல் சொல்லப்பட்டுள்ள உவமையில், ஒரு பெண் ஒரு வெள்ளிக்காசைத் தொலைத்து விட்டாள். அது அவளுக்கு அவ மானமாகும். அதன் காரணமாக குணக்குறைவுள்ளவளாக அவள் கருதப்படுவாள். எனவேதான், மிகுந்த சிரமப்பட்டு, தேடிக் கண்டுபிடித்தாள். அந்தக்காசு அவளுக்குத் திரும்பக் கிடைக்காதிருந்தால் அவள் அன்பற்றவள், உண்மையற்ற வள் என்று அவளுடைய கணவன் அவளைக் குறித்து சந்தேகிக்கக் கூடும். அவள் அந்த வெள்ளிக்காசைக் கண்டுபிடித்தபின், மிகுந்த மகிழ்ச்சியோடு, தன்னுடைய நண்பர்களும் மகிழும்படியாக, அவர் களிடம் தெரிவித்தாள் (லூக். 15:9).

This Post Has One Comment

  1. Glory Inpanathan

    உங்களது பதிவுகள் யாவும் பிரயோசனமாக இருக்கின்றது. எனவே பிடிஎப் பில் பதிவிடுங்கள். நன்றி

Leave a Reply