வேதாகம நாட்டின் வாழ்க்கை முறைகள் 4.தொழில்கள்
மேய்ப்பர்
இஸ்ரவேல் மக்கள் மேய்ப்பர்கள். அவர்கள் கானான் தேசத்தில் குடியேறின பின்பு, சிலர் விவசாயிகள் ஆனார்கள். ஆனாலும் தொடர்ந்து, மேய்ப்பர்களாகவும் இருந்தார்கள். யெகோவாவே-அவர் களின் மேய்ப்பராய் இருந்தார். மேய்ப்பனைப் போல, யெகோவா தம்முடைய மந்தையை போஷிப்பார் (மேய்ப்பார்). ஆட்டுக் குட்டி களைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து, கறவ லாடுகளை மெதுவாய் நடத்துவார் (ஏசா. 40:11). “கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார், நான் தாழ்ச்சி அடையேன்” என்று தாவீது சொன்னான் (சங். 23:1). “நானே நல்ல மேய்ப்பன்” என்று இயேசு கிறிஸ்து சொன்னார் (யோவான் 10:11).
அ. மேய்ப்பர்களுடைய தளவாடங்கள் (ஆயுதங்கள்)
i.தடி
அது 30 அங்குலம் நீளமுள்ள ஒரு கட்டை. ஒரு நுனியில் முடிச்சு காணப்படும். மறுநுனி பருமனாக இருக்கும். அதில் கனமாக ஆணி கள் அடிக்கப்பட்டிருக்கும். அது மேய்ப்பனின் இடைக்கச்சையோடு இணைக்கப்பட்டிருக்கும். காட்டு மிருகங்களிலிருந்து, தன்னுடைய ஆடுகளைப் பாதுகாக்க, தாவீது இதை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி னான் (1 சாமு.17:34,35). ஆடுகளைத் தாக்க வந்த மிருகங்களை தடியால் அடித்துத் துரத்துவான்.
ii. கோல்
நடக்கப் பயன்படும் ஊன்று கோல் போல அது இருந்தது. சுமார் ஆறு அடி நீளம் இருக்கும். ஒரு நுனியில் ஒரு வளைவு அல்லி போன்ற கொக்கி இருக்கும். ஆடுகளை நடத்திக் கொண்டு போவதற்கும், மரங்களிலிருந்து ஆடுகளுக்கு இலைகளைப் பறித்துப் போடுவதற்கும், மேய்ப்பர்கள் அதைப் பயன்படுத்தினர். “உமது கோலும், உமது தடியும் என்னைத் தேற்றும்” என்று தாவீது பாடினான் (சங்.23:4). ஆடுகளை எதிரிகளிடமிருந்து பாதுகாக்க தடி பயன்பட்டது; ஆடுகளை நடத்திச் செல்வதற்கும், மேய்ப்பதற்கும் கோல் பயன்பட்டது. எனவே, கோலும், தடியும், உணவைக் கொடுப்பதற்கும் பாதுகாப்பதற்கும் பயன்பட்டன. அவ்விதமாக அவை ஆடு களுக்கு பாதுகாவலாகவும் ஆறுதலாகவும் உதவின.
iii. மேய்ப்பருக்குரிய அடைப்பப்பை
அது தோலினால் செய்யப்பட்ட ஒரு பை. அதில் மேய்ப்பனுக்குத் தேவையான உணவை யும் ஆடுகளுக்கு மருந்தாகப் பயன்படும் ஒலிவ எண்ணையையும் எடுத்துச் செல்வார்கள். ரொட்டி, பாலாடைக்கட்டி, உலர்த்திய அத்திப் பழங்கள், பொரித்த தானியங்கள் இவைதான் உணவு. அந்தப் பையைத் தோளில் தொங்க விட்டுக் கொள்வார்கள். தாவீது தடியைத் தன் கையில் எடுத்துக் கொண்டு, ஆற்றிலிருந்து வழவழப்பான கூழாங்கற்களைத் தெரிந்தெடுத்து தன்னுடைய அடைப்பையிலே போட்டுக் கொண்டான்.
iv. கவண்
இது சுமார் 15 அங்குல நீளமுள்ள இரண்டு கயிறுகளைக் கொண்டது. கற் களைப் போட்டுக் கொள்ளும்படியான,நாற் கர உருவமுடைய ஒரு சிறு தோல் பையோடு கயிறுகள் இணைக்கப்பட்டிருக்கும். அந்தச் சிறு தோல் பையில், கற்கள் போடப்படும். ஒரு கயிற்றை இறுக்கமாகவும், ஒரு கயிற்றை இலேசாகவும் பிடித்துக் கொள்ள வேண்டும். பிறகு, கயிற்றை முறுக்கேற்ற (சுழற்ற) வேண்டும். அப் பொழுது தான் வேகம் கிடைக்கும். அதன்பின், ஒரு கயிற்றை பிடித்துக் கொண்டு, மறு கயிற்றை வேகமாக சுழற்றி வீசவேண்டும். அப்பொழுது பையில் உள்ள கல் மிக வேகமாகப் பாய்ந்து செல்லும். அனுபவம்மிக் கவர், குறி தவறாமல் சரியாக அடிக்கும்படியாகவும் மிக வேகமாகவும் கல்லை வீசுவார்கள்.
தாவீது கவணைக்குறி தவறாமல் சுழற்றி எறிந்து, கோலியாத்தை வீழ்த்தினான். கல் கோலியாத்தின் நெற்றியில் பதிந்து அவன் முகங் குப்புற விழுந்தான் (1 சாமு. 17:49). ஆடுகளைத் தாக்கவரும் மிருகங் களை விரட்டவும், திருடர்களை எதிர்க்கவும் இந்தக் கவண் அந் நாட்களில் பயன்பட்டது.
V.புல்லாங்குழல்
நாணலால் செய்யப்பட்ட புல்லாங்குழலை மேய்ப்பர்கள் தாங்கள் இளைப்பாறும் நேரத்தில் ஊதி மகிழ்வார்கள். ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி நிழலில் அமர்த்திய பின் தாங்களும் உணவருந்துவர். பின்னர் நேரத்தை மகிழ்ச்சியோடு கழிக்க, புல்லாங்குழலை ஊதுவார்கள். அந்த இசையை ஆடுகளும் கேட்டு மகிழும். தாவீது வீணையையும் குழலையும் வாசிக்கிறவனாக இருந்தான். அவன் எழுதிய சங்கீதங்கள் அவனது இசைத் திறமைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன.
vi. வெளி ஆடை
கையினால் நெய்யப்பட்டதும், கனமானதுமான மேய்ப்பனின் வெளி ஆடை அவனுடைய அடிவரை தொங்கக்கூடிய அளவு நீண்ட தாக இருக்கும். தலையை மூடிக் கொள்வதற்கான முக்காடும் உடை யது. மேய்ப்பன் அந்த ஆடையைக் கொண்டு இரவில் தன் தலையையும் கால்களையும் கைகளையும் மூடிக் கொள்வான். தன் ஆடையையே படுக்கையாகவும், போர்வையாகவும் பயன்படுத்தி, படுத்து உறங்குவான். அந்த ஆடையின் தொங்கலில் நோயுற்ற ஆட்டுக் குட்டிகளை வைத்து சுமந்து செல்வான். கர்த் தரும் தம் மக்களை இப்படியே சுமந்து செல்கிறார். மேய்ப்பனைப் போலத் தமது மந்தையை மேய்ப்பார். ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியில் சுமந்து, கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார் (ஏசா. 40:11).
ஆ. மேய்ப்பனுக்கும் ஆடுகளுக்கும் உள்ள உறவு
i. நெருங்கிய உறவு
நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளைப் பெயர் சொல்லி அழைக்கிறான் (யோவா.10:3).வரியுள்ளவை, புள்ளியுள்ளவை, கறுப்பானவை, பழுப்பு நிறமுடையவை… இவை மேய்ப்பர்கள், தங்கள் ஆடுகளைக் கூப்பிடும் பெயர்களில் சில. மேய்ப்பன் ஆடுகளின் சுபாவத்தை அறிந்திருந்தான் (யோவான் 10:15). நூற்றுக்கணக்கான ஆடுகள் இருந்தாலும், தன்னுடைய ஆடுகளைப் பிரிக்க ஒரு மேய்ப்பனால் கூடும். ஆடுகள் அவன் சத்தத்தை அறியும் (யோவான் 10:4).
ii.வழி நடத்துதல்
ஆடுகளுக்கு வழிகாட்டிக் கொண்டு, மேய்ப்பன் முன்னே நடந்து போகிறான்.ஆடுகள் அவனுக்குப் பின் செல்லுகின்றன (யோவா. 10:4). கூட்டத்தை விட்டுவிட்டுத் தனியாகப் போகும் ஆட்டை, கோலினால் இலேசாகத் தட்டுவான். அது வெகு தூரம் தள்ளிப் போய்விட்டால், கவணில் கல்லை வைத்து எறிந்து, அதை மடக்குவான். மற்றவர் களுடைய வயலுக்குள் அவன் தன் ஆடுகளைப் போக விடமாட்டான். அவ்விதமாகவே நல்ல மேய்ப்பர் அவர் நாமத்தினிமித்தம், நீதியின் பாதையில் நம்மை நடத்துகிறார்.
iii. திருப்பிக் கொண்டு வருதல்
ஆடு திசை அறிவு இல்லாத ஒரு விலங்காகும். நாய்களுக்கு திசை அறிவு அதிகம். வெகு தூரம் கொண்டு போய் விட்டுவிட்டு வந்தாலும், நாய் தன் எஜமான் வீட்டிற்கு வந்து விடும். ஆனால் ஆடு அப்படி அல்ல. நாமெல்லாரும் ஆடுகளைப் போல வழி தப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம் (ஏசா. 53:6). மேய்ப்பனைப் போல, தேவன் நம்மைத் தேடுகிறார். ஒரு மேய்ப்பன், சிதறுண்ட தன் ஆடுகளின் நடுவே இருக்கிற நாளில், தன் மந்தையைத் தேடிக் கொண்டிருக்கிறது போல, நான் என் ஆடுகளைத் தேடி, அவைகள் சிதறு ண்டு போன எல்லா இடங்களிலு மிருந்து, அவைகளைத் தப்பிவரப் பண்ணுவேன் (எசேக்.34:12).
காணாமல் போய் கண்டுபிடிக்கப்பட்ட ஆட்டின் உவமையில், மேய்ப்பன் அந்த ஒரு ஆட்டைத் தேடி அலைந்து, கண்டு பிடித்துக் கொண்டு வருகிறான் (லூக். 15:4). அவர் என் ஆத்துமாவைத் தேற்று கிறார், அதாவது தன்னிடம் சேர்க்கிறார் (சங். 23:3).
iv. பாதுகாப்பும் பராமரிப்பும்
திருடன் திருடவும் கொல்லவும், அழிக்கவுமே வருகிறான் (யோவான் 10:10). தாவீது தன் அனுபவத்தில் இத்தகைய திருடனைக் கண்டிருந்தான். ஒரு சிங்கமும், ஒரு கரடியும் தன் ஆடுகளைத் தாக்கிய போது, தாவீது அவைகளைப் பின்தொடர்ந்து போய், அவைகளி டமிருந்து, ஆட்டை மீட்டுக் கொண்டு வந்தான் (1 சாமு. 17:35). ஆடு களை மேய்ப்பது (பராமரிப்பது) கடினமான வேலை. “பகலிலே வெயிலும், இரவிலே குளிரும் என்னைப் பட்சித்தது. நித்திரை என் கண்களுக்குத் தூரமாயிருந்தது” (ஆதி. 31:40) என்று கூறி யாக்கோபு தான் மேய்ப்பனாயிருந்த அனுபவத்தைப் பற்றிக் கூறுகின்றான்.
V.ஆடுகளின் பயன்கள்
தேவனுக்குப் பலிசெலுத்தப்படுவதே ஆடுகளின் உன்னதமான பயனாகும். செம்மறி மற்றும் வெள்ளாடுகள் பலி செலுத்தப்பட்டன. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தேவ ஆட்டுக்குட்டியாக வர்ணிக்கப் பட்டுள்ளார். “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கும் தேவ ஆட்டுக்குட்டி” (யோவான் 1:29).மேலும் ஆடுகளின் இறைச்சி உண வாகப் பயன்பட்டது. பால், பாலாடைக்கட்டி, வெண்ணெய் ஆகியவை அதிலிருந்து கிடைக்கும் பிற உணவுப் பொருட்களாகும். அதன் தோல் பை, உடை போன்றவற்றைத் தைப்பதற்கும், அதன் உரோமம் ஆடை, கூடாரம் செய்வதற்கும், செம்மறி ஆட்டுக்கிடாவின் கொம்பு எக்காள மாகவும் பயன்பட்டன.
விவசாயம்
இஸ்ரவேல் மக்கள் கானான் தேசத்திற்குப்போய்ச் சேர்ந்த பின், ஒரு நிலையான வாழ்க்கை அமைந்தது. மேய்ப்பர் தொழிலோடு கூட விவசாயத்திலும் அவர்கள் ஈடுபட்டார்கள். விவசாயம் என்பது விதைத்தல், வளர்த்தல், அறுவடை செய்தல் ஆகியவற்றைக் கொண்டது. விவசாய முறைகளில் அதிக மாற்றம் இல்லை.
i.உழுதல்
முன்மாரி வந்தவுடன், அக்டோபர் பின் பகுதி அல்லது நவம்பர் முன் பகுதியில், உழவு நடைபெறும். முன் மழையினால், மண் உழுவதற்கு ஏற்றாற் போல் மெதுவாகும். மழை இல்லாவிட்டால், நிலம் காய்ந்து, கடினமாகிவிடும், நிலத்தை உழ முடியாது. அது உழவர் களுக்குப் பெரிய ஏமாற்றமாக இருக்கும்.
ii. கலப்பை
இது மரத்தினாலான ஒரு தடி. அது நுகத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். குறுக்குத் தடியுடன் கட்டப்பட்டிருக்கும். மேல் பகுதியில், கைப்பிடி உண்டு. கீழ்ப்பகுதியில் இரும்பில் செய்த கொழு இருக்கும். உழுபவன் இடது கையால் கலப்பையை அழுத்திப் பிடிப்பான். வலது கையால் மாடுகளை ஓட்டுவான். கலப்பையில் கைவைத்தவன் திரும்பிப் பார்த்தால்,எருதுகளுக்கு (மாடுகளுக்கு) தீங்கு ஏற்படும். உழவுசால் நேராக வராது. ஆகவே தான் ஆண்டவராகிய இயேசு, “கலப் பையின் மேல் கையை வைத் துப் பின்னிட்டுத் பார்க்கிற எவ னும், தேவனுடைய ராஜ்ஜியத் துக்குத் தகுதியுள்ளவன் அல்ல” என்று கூறினார் (லூக்.9:62). கொழுக்களை பட்டயங்களாக அடிக்குங்காலம் வரும். கர்த்தர் தேசங்களை நியாயந்தீர்க்கும் காலம் அது. உங்கள் மண்வெட்டிகளை (கொழுக்களை பட்டயங்களாக அடியுங்கள் (யோவேல் 3:10). பட்டயங்கள் மண்வெட்டிகளாக (கொழுக்களாக) அடிக்கப்படும். அது கர்த்தருடைய பொற்காலத்திலே நடக்கும். அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாக (கொழுக்களாக) அடிப்பார்கள் (ஏசா.2:4).
iii. நுகம்
இது கலப்பையின் நுனியில் கட்டப்பட்டுள்ள, உருண்டை வடிவமான தடி. நுகம் என்பது சாதாரணமான பாரம் இழுப்பதைக் குறிக்கும். கீழ்ப்படிதலுள்ள ஊழியர்களுக்கு, கிறிஸ்து வின் நுகம் மெதுவாக இருக்கும். என் நுகம் மெதுவாக இருக்கும் என்று இயேசு சொன்னார் (மத். 11:30). நுகம் உடன் பங்காளரையும் குறிக் கிறது. ஒரு விசுவாசி, கூட்டுறவு வைத்துக் கொள் ளக்கூடாது. அந்நிய நுகத்திலே, அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படா திருப்பீர்களாக (2 கொரி. 6:14). திருமணத்தில் மாத்திரம் அல்ல, வேறு எந்தத் தொழிலிலும் அவிசுவாசியுடன் கூட்டுறவு கூடாது.
iv. விதைத்தல்
பாலஸ்தீனாவின் முக்கியமான தானியங்கள் கோதுமையும் வாற்கோதுமையுமாகும். விதைக்கிறவன் விதையை ஒரு பையில் போட்டு, தன் தோளில் தொங்கவிட்டுக் கொள்வான், பையில் கையை இட்டு விதைகளை அள்ளி, நடந்து கொண்டே தூவி விதைப்பான். விதையைப் பற்றிய உவமையில், கர்த்தர் நான்கு விதமான நிலங்களில் விதைப்பது பற்றியும், அவற்றின் வெவ்வேறு விதமான விளைவுகளைப் பற்றியும் கூறுகிறார் (மத்.13:3-8).
V. பயிர்கள்
முதிர்ச்சி அடைதல் மார்ச் மாத இறுதியிலோ, ஏப்ரல் ஆரம்பத்திலோ வரும் பின்மாரிக் காக, விவசாயிகள் காத்திருப்பர். (வாற்கோதுமையும்)கோதுமையும் முற்றுவதற்கு அது அவசியம். உங்க ளுக்கு முன் மாரியைக் கொடுத்து, உங்களுக்குப் பின்மாரியையும் வரு ஷிக்கப் பண்ணுவார் (யோவேல் 2:23).
vi. அறுவடை செய்தல்
பால் பருவத்திற்குப் பிறகு தானியங்கள் முதிர்ச்சி அடைகின்றன. முற்றுவதற்கு முன்பாக, தானியம் தின்பதற்கு ருசியாக இருக்கும். அப்படிப்பட்ட கதிர்களைக் கொய்து, இரண்டு கைகளாலும் கசக்கித் தின்னலாம். ஆனால் வீட்டுக்குக் கொண்டு போக முடியாது. பிறருடைய விளைச்சலில் பிரவேசித்தால், உன் கையினால் கதிர்களைக் கொய்யலாம். நீ அந்த விளைச்சலில் அரிவாளை இடலாகாது (உபா. 23:25). சீஷர்கள் ஓய்வுநாளில் கதிர்களைக் கொய்து கைகளினால் கசக்கினார்கள். அவ்வாறு சீஷர்கள் தானியத்தைக் கசக்கும் வேலையைச் செய்வதைப் பரி சேயர்கள் குற்றமாகக் கருதிச் சாடினர். ஆனால் சாப்பிடுவதை நியாயப் பிரமாணம் அனுமதிக்கிறது (உபா. 23:25). பஸ்கா பண்டிகையின் இரண்டாம் நாளைக்குப்பின் வந்த முதலாம் ஓய்வு நாளிலே, அவர் பயிர் வழியே நடந்து போகையில், அவ ருடைய சீஷர்கள் கதிர்களைக் கொய்து, கைகளினால் நிமிட்டித் தின் றார்கள். பரிசேயர்களில் சிலர், அவர் களை நோக்கி, ஓய்வு நாளில் செய் யத்தகாததை (வேலையை) நீங்கள் ஏன் செய்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்கள்.
vii. ஏழைகள் கதிர்களைப் பொறுக்குதல்
ஒரு வயலில் அறுவடை முடிந்த பிறகு, அறுக்கப்படாமல் நிற்கும் கதிர்களையும் அறுத்த கதிர்களைக் கட்டும்போது கீழே விழுந்த கதிர்களையும், அந்நியரும், ஏழைகளும் விதவைகளும் பொறுக்கிக் கொள்ளும்படி விட்டுவிட வேண்டும்.அவர்களுக்குச் சொந்த வயல் கிடையாது. உங்கள் தேசத் தின் வேளாண்மையை நீங்கள் அறுக்கையில், வயலின் ஓரத்தில் இருக்கிறதை முற்றிலும் அறுக்காமலும், சிந்திக்கிடக்கிற கதிர்களைப் பொறுக்காமலும், எளியவனுக்கும், பரதேசிக்கும் அவைகளை விட்டு விடவேண்டும். நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் (லேவி.23:22).
மோவாபிய ஸ்திரீயான ரூத், போவாசின் வயலில் கதிர்களைப் பொறுக்கினாள். ரூத் வயல் வெளியில் அறுக்கிறவர்கள் பிறகே சென்று கதிர்களைப் பொறுக்கினாள். தற்செயலாய் அவளுக்கு நேரிட்ட அந்த வயல் நிலம் எலிமலேக்கின் வம்சத்தானாகிய போவாசுடையதாயிருந் தது (ரூத்.2:3).ஆண்கள் கதிர்களை அறுவடை செய்து, கட்டுகளாகக் கட்டுவார்கள். பெண்கள் விட்டுப் போனவற்றைப் பொறுக்குவார்கள்.
கோதுமை மணிகள் முற்றியவுடன், அவற்றை அறுவடை செய்துவிட வேண்டும். இல்லாவிட்டால், கதிர்குலைகள் வளைந்து தொங்கித் தரையில் படும். தானியம் கெட்டுப் போய் விடும். கோதுமை பயிராகப் பழுக்கும். அறுப்புக் காலம் வருகிறதற்கு இன்னும் நாலு மாதம் செல்லும் என்று நீங்கள் சொல்லுகிறதில்லையா? இதோ, வயல் நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை ஏறெடுத்துப் பாருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகின்றேன் (யோவான் 4:5).சரியான பருவத்தில் அறுவடை செய்யாவிட்டால், தானியம் வீணாய்ப் போகும். கீழை நாடுகளில் செய்வது போலவே, கதிர்களை ஒரு கையால் பிடித்துக் கொண்டு, மறு கையால் சிற்றரிவாளால் அறுவடை செய்வார்கள். அறுவடை செய்த கதிர்களைக் கையால் சேகரித்து, அரிக்கட்டுகளாகக் கட்டுவார்கள். கதிர்க்கட்டுகளைத் தலையில் சுமந்தோ, கழுதை அல்லது ஒட்டகங் கள் மீது வைத்தோ போரடிக்கும் களத்துக்குக் கொண்டு செல்வார்கள்.
viii. போரடிக்கும் களம்
அது சுமார் 30 முதல் 50 அடி விட்டம் கொண்ட, வட்ட வடிவமான இடமாக இருக்கும். அதை நன்றாகச் சமப்படுத்தி உறுதியாக்குவார்கள். பின்பு சாணம் கலந்த தண்ணீரை ஊற்றி, மட்டப்படுத்தி, மண்ணும், தானியமும் கலந்துவிடாதபடிச் செய்வார்கள். சில சமயம், சமதளமான பாறையைக் களமாகப் பயன் படுத்துவார்கள். அர்வனாவின் களத்தை, தாவீது விலைக்கு வாங்கி, கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டினான் (2 சாமு.24:18-25).
சாலொமோன் அந்த இடத்திலேதான் தேவலாலயத்தைக் கட்டினான்.ஆபிரகாம் தன் மகன் ஈசாக்கைப் பலியிட, பலிபீடம் கட்டிய இடமும் அதுவே. இந்தப் பாறை எருசலேமில் இருக்கிறது. அது எருசலே மின் குடை அல்லது மண்டபம் என்றழைக்கப்படுகிறது. அவ்விடத்தில் தற்போது ஓமர் என்னும் இஸ்லாமியத் தலைவரின் நினைவாகக் கட்டப்பட்ட மசூதி இருக்கிறது. மீண்டும் அங்கே முன்னுரைக்கப்பட்ட வண்ணம் தேவலாயம் கட்டப்பட்டு தேவராதனையும் பலி செலுத்தலும் நடைபெறும்.
ix. போரடித்தல்
கதிர்களிலிருந்து தானியத்தைப் பிரிக்க மரத் தடிகளால் அடிப்பார்கள். கிதியோன், கோதுமையை ஆலைக்குச் சமீபமாய் போரடித்தான் (நியா.6:11). ரூத் தான் பொறுக்கின கதிரைத் தட்டி எடுத்தாள் (ரூத் 2:17). கதிர்களைப் போரடிக்க, மாடுகளைப் பயன் படுத்துவார்கள். மாடு களை இணைத்து, சுற்றிச் சுற்றி வரும்படி ஓட்டுவார் கள். அப்பொழுது அவை களின் கால் குளம்புகளில் மிதிபட்டு, தானியங்கள் பிரிந்து வெளியே வரும். அந்த மாடுகளை, கதி ரைத் தின்னவும் விடுவார் கள் (உபா. 25:4).இதைப் பயன்படுத்தி, வேலையாள் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்பதை பவுல் விளக்குகிறார் (1 கொரி. 9.9; 1 தீமோ. 5:18).
சில சமயம் போரடிக்க அதற்கான கருவியையும் பயன்படுத்து வார்கள். ஒரு மரப்பலகையில் கூரான உலோக ஆணிகள் இருக்கும். அதைக் கதிர்களின் மேல் வைத்து, மாடுகளால் இழுக்கச் செய்வார் கள். ஆணிகள் பொருந்திய பலகையின் அழுத்தத்தால் கதிர்களி லிருந்து தானியம் பிரிந்துவரும்.
X. தூற்றுதல் (சுத்தம் செய்தல்)
போரடிக்கப்பட்ட தானியத்தை, மேலே தூக்கி வீசும்போது, காற்றில் பதர் பறந்து போய்விடும். போவாஸ் இன்றிரவு வாற்கோதுமையைத் தூற்றுவான் (ரூத் 3:2). துன்மார்க்கரோ அப்படியிரா மல், காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள் (சங்.1:4). பதரையோ அவியாத அக்கினியால் சுட் டெரிப்பார்கள் (மத்.3:12). இங்கு பதர் இரட்சிக் கப்படாத பாவிகளைக் குறிக் கிறது. சல்லடையை வைத்து, கையால் சலிப்பதும் உண்டு. இதனால், சிறு கற்களும் மற்ற கசடுகளும் பிரிக்கப்படும். பேதுருவுக்கு ஒரு அதிர்ச்சியைக் கொடுப்பதற்காக கோதுமையைச் சுளகினால் புடைக்கிறது போல, சாத்தான் புடைக்க விரும்பினான் (லூக்.22:31).
xi சேர்த்து வைத்தல் (சேமித்தல்)
தானியங்களை மண்பானைகள் அல்லது தகர பீப்பாய்களில் சேமித்து வைப்பார்கள். கர்த்தர் களஞ்சியங்களில் ஆசிர்வாதத்தைக் கட்டளையிடுவார் (உபா. 28:8). தரையில் வட்ட வடிவமாகக் குழிகளைத் தோண்டி, வாய்ப் பகுதியை வைக்கோலால் மூடுவார்கள். குழியில் தானியத்தை சேமித்து வைப்பார்கள்.
தோட்டக்கலை
அ. திராட்சைத் தோட்டம்
ஏசாயாவின் தீர்க்கதரிசன நூலிலும் (ஏசா. 5:1,2), மத்தேயுவின் நற்செய்தி நூலிலும் (மத்.21:33-46) திராட்சைத் தோட்டத்தைப் பற்றிய உவமையைக் காண்கிறோம்.
i. நிலத்தைத் தேர்ந்தெடுத்தல்
திராட்சைத் தோட்டத்துக்கு, மலைப் பாங்கான பகுதியைத் தேர்ந்தெடுப்பார்கள். அது மலைச் சரிவுகளாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் சூரிய ஒளி நன்றாகக் கிடைக்கும். இரவு நேரங்களில் பெய்யும் பனி, மலைச் சரிவுகளை ஈரமாக்கும். தென் பாலஸ்தீனா, எபிரோன், வடக்கு லெபனோன் ஆகிய பகுதிகளில் மலைச் சரிவுகள் அதிகம் உள்ளன. மகா செழிப்பான மேட்டையே தேவன் அவருடைய ஐனங்களாகிய தன் திராட்சைத் தோட்டத்துக்காகத் தேர்ந்தெடுத்தார்.(ஏசா.5:1). ஒரு திராட்சைக் குலையை இரண்டு பேர், ஒரு தடியிலே கட்டித் தூக்கிக்கொண்டு வந்ததன் மூலம், இது நிரூபிக்கப்பட்டது (எண்.13:23).
ii. ஆயத்தம் செய்தல்
முதலில் தரையைக் கிளறி, அதிலுள்ள கற்களைப் பொறுக்கி எடுப்பார்கள் (ஏசா. 5:2). பெரிய கற்களும் தோண்டி எடுக்கப்பட்டு, மலைச் சரிவுகளிலிருந்து நீக்கப்படும். அவற்றை அவ்வாறே விட்டுவிட்டால், திராட்சைக் கொடியின் வளர்ச் சியை அவை பாதிக்கும். மிதமான மழை பெய்தாலும், ஈரத்தை உறிஞ்சி வைத்துக் கொள்ளும்படியாக, சிறு சிறு கற்களை விட்டுவிடுவார்கள். தரையை ஆழமாகக் கிளறுவதால் தரை மென்மையாக்கப்படும். இவ்வா றாக சாகுபடிக்கு நிலம் ஆயத்தப் படுத்தப்படும்.
iii. வேலியமைத்தல்
அப்புறப் படுத்தப்பட்ட பெரிய கற்களை வேலி யமைக்கப் பயன்படுத்துவார்கள். தோட்டத்தைச் சுற்றிலும் கற்களை அடுக்கி மண்ணினால் பூசி, சூரிய ஒளி யில் காயவிடுவார்கள். இதனை, ஒரு திராட்சைத் தோட்டக்காரன், திராட்சைத் தோட்டத்தை நாட்டி அதற்குச் சுற்றி வேலியடைத்தான் (மத்.21:33) என எழுதியிருக்கக் காண்கிறோம். திருடர்களிமிருந்தும், நரிகளிடமிருந்தும், திராட்சைத் தோட்டத்தைக் கெடுக் கிற சிறு நரிகளைப் பிடியுங்கள் (உன். 2:15). இது வேலியின் பயனை விளக் குகிறது. இஸ்ரவேல் மக்கள் கீழ்ப்படியாதபோது, பாதுகாவலான வேலியை எடுத்துப்போடுவேன் என்று தேவன் கூறினார் (ஏசா. 5:5).
iv. காவல் காக்கும் மேடை
திராட்சைத் தோட்டத்தைக் காவல் செய்வதற்காக மரக்கிளைகளாலும், இலைகளாலும், அதிக உயரத் தில் செய்யப்பட்ட அக்கோபுரம், மேடைக் காவலாளி தங்குமிடமாகப் பயன்படும். அதின் நடுவில் அவர் ஒரு கோபுரத்தைக் கட்டினார் (ஏசா. 5:2) என்பதைக் காண்க.
V.நறுக்கி, சுத்தம் செய்தல்
நான் மெய்யான திராட்சைச் செடி. என் பிதா தோட்டக்காரர். என்னில் கனி கொடாதிருக்கிற கொடி எதுவோ, அதை அவர் அறுத்துப் போடுகிறார். க்னி கொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம் பண்ணுகிறார் (யோவா. 15:1,2). மேலே உள்ள, உறுதியற்ற கிளை களை அறுத்து விடுவார்கள். அப்படிச் செய்வதால் ஆரோக்கியமான கிளைகளுக்குள் சாறு பாய்ந்தோடி, அதிகக் கனிகளைக் கொடுக்கும்.
vi. திராட்சை ஆலை
அதில் ஒரு ஆலையையும் உண்டு பண்ணி னார் (ஏசா. 5:2).அது ஒரு கற்பாறையிலிருந்து குடைந்து உருவாக்கப் பட்டது. அடியில் ஒரு குழாய் இருக்கும். அறுவடை செய்யப்பட்ட திராட்சைப் பழங்களை இந்த ஆலை யின் தட்டையான, வட்டமான மேற் புறத்தில் போட்டு, அதை ஆண்களும், பெண்களும் காலால் நன்றாக மிதிப் பார்கள். திராட்சைச்சாறு வடிந்து, கீழே சேகரிக்கப்படும். குழாயைத் திறந்து, பின்தோல் பைகளில் திராட்சைச் சாற்றை சேர்த்து வைப்பார்கள்.
இயேசு கிறிஸ்துவால் நியாயந் தீர்க்கப்படும் தேசங்கள் திராட்சை ஆலையின் உவமையால் விளக்கப்படுகிறது. நான் ஒருவனாய் ஆலையை மிதித்தேன். ஜனங்களில் ஒருவனும் என்னோடிருந்ததில்லை. நான் என் கோபத்திலே அவர்களை மிதித்து, என் உக்கிரத் திலே அவர்களை நசுக்கிப்போட்டேன். அதினால் அவர்கள் இரத்தம் என் வஸ்திரங்களின் மேல் தெறித்தது, என் உடுப்பையெல்லாம் கறைப்படுத்திக் கொண்டேன் (ஏசா.63:3). வல்லமையுள்ள தேவனின் கடும் உக்கிரத்தையும் அது காட்டுகிறது. புற ஜாதிகளை வெட்டும் படிக்கு, அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்படுகிறது. இருப்புக் கோலால் அவர்களை அரசாளுவார். அவர் சர்வ வல்லமை யுள்ள தேவனுடைய உக்கிர கோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதிக்கிறார் (வெளி.19:15).
ஆ. ஒலிவ மரங்கள்
பாலஸ்தீனம், ஒலிவ மரங்கள் நிறைந்த தேசம் என்று அழைக் கப்படுகிறது. அது கோதுமையும், வாற்கோதுமையும், திராட்சைச் செடிகளும், அத்தி மரங்களும், மாதளஞ் செடிகளுமுள்ள தேசம். அது ஒலிவ மரங்களும், எண்ணெயும் தேனுமுள்ள தேசம் (உபா.8:8). ஒலிவ மரம், நீண்ட ஆயுளையும் கனி கொடுக்கும் தன்மையையும் குறிக் கிறது. உன் மனைவி வீட்டோரங்களில் கனிதரும் திராட்சைக் கொடியைப் போல் இருப்பாள். உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவ மரக் கன்றுகளைப் போல் இருப்பார்கள். கனி தருவதும், நீண்ட காலம் வாழ்வதும் நற்பேறுகளாகும் (சங்.128:3).
i. ஒட்டுக் கட்டுதல்
விளைச்சலை அதிகப்படுத்துவதற்காக ஒட்டுக் கட்டப்படும். நல்ல பலன் தரும் ஒலிவ மரத்தின் ஒரு கிளை, காட்டு ஒலிவ மரத்துடன் ஒட்டுக்கட்டப்படும். இதிலிருந்து வரும் கிளைகள் அதிக சத்துள்ள ஒலிவப் பழங்களைக் கொடுக்கிறது. காட்டு ஒலிவ மரக்கிளை, நல்ல ஒலிவ மரத்தோடு ஒட்டுக்கட்டப்படுவதில்லை. அதனால் பயனில்லை.
புற ஜாதி மக்கள் இரட்சிக்கப்பட்டு, இஸ்ரவேல் மக்களோடு, தேவ னுடைய மக்களாகக் கருதப்பட்ட போது இந்த நிகழ்ச்சி உண்மையா கவே நிறைவேறிற்று. இதனை புறஇன மக்களுக்கு பவுல் அப்போஸ் தலன் நினைவுபடுத்தியுள்ளார். நீங்கள் காட்டொலிவ மரத்திலிருந்து வெட்டப்பட்டு, உங்கள் சுபாவத்திற்கு மாறாக உள்ள நல்ல ஒலிவ மரத்திலே ஒட்ட வைக்கப்பட்டீர்கள் (ரோமர் 11:24).
பழங்கள் நன்றாய்ப் பழுத்த பின், நீண்ட தடிகளால் அடித்து, அந்த விதைகளை நசுக்கி, எண்ணெய் எடுக்கப்படும்.
இ. ஒலிவ எண்ணெயின் உபயோகங்கள்
i. வெளிச்சம்
மண் அல்லது உலோகத்தால் செய்யப்பட்ட விளக் குகளை வீடுகள், ஆசாரிப்புக் கூடா ரம், ஆலயம் இவற்றில் பயன்படுத் தினர். அந்த விளக்குகளில் ஒலிவ எண்ணெய் பயன்படுத்தப்படும். புத்தியுள்ள கன்னிகள், தங்கள் தீவட்டிகளோடு, எண்ணெயையும் கொண்டு போனார்கள் (மத்.25:4
ii. உணவு
உணவுப்பொருட்களைப் பொரிப்பதற்கு ஒலிவ எண்ணெய் பயன்பட்டது.
iii. வாசனைப் பொருட்கள் (அழகு சாதனப் பொருட்கள்]
ஒலிவ எண்ணெய், தோலை மிருதுவாக்கும். பளபளப்பைத் தரும். இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சைரசத்தையும், முகக் களையை உண்டு பண்ணும் எண்ணெயையும் கொடுக்கும் (சங். 104:15).
iv. மருந்து
வெட்டுக் காயங்களுக்கும், புண்களுக்கும் ஒலிவ எண்ணெய் மருந்தாகத் தடவப்படும். நல்ல சமாரியன் கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும், திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டினான் (லூக்.10:34).
V.பலி செலுத்துதல்
ஒலிவ எண்ணெய், போஜன பலியின்ஒரு பகுதியாயிருந்தது. ஒருவன் போஜன பலியாகிய காணிக்கையைக் கர்த்தருக்குச் செலுத்த வேண்டுமானால், அவன் காணிக்கை மெல்லிய மாவாயிருப்பதாக. அவன் அதின்மேல் எண்ணெய் வார்த்து ஊற்றுவானாக (லேவி.2:1).
vi. அபிஷேகம்
சில குறிப்பிட்ட ஊழியங்களுக்காக இஸ்ரவேல் மக்கள் அந்த நாட்களில் அபிஷேகம் பண்ணப்பட்டார்கள். தீர்க்க தரிசிகள், ஆசாரியர்கள் மற்றும் அரசர்கள் ஆகியவை அவ்விதச் சிறப்பான பதவிகளாகும். அபிஷேகத் தைலத்திலே கொஞ்சம், ஆரோ னுடைய சிரசின்மேல் வார்த்து, அவனைப் பரிசுத்தப்படுத்தும்படி, அபிஷேகம் பண்ணப்பட்டார்கள் (லேவி. 8:12). அவர்களை அபிஷேகம் செய்து, பிரதிஷ்டைபண்ணி, பரிசுத்தப்படுத்துவாயாக (யாத்.28:41). எலிசா தீர்க்கதரிசியை அபிஷேகம்பண்ணும்படி, எலியாவுக்குச் சொல்லப்பட்டது. ஆபேல்மேகொலா ஊரானான சாப்பாத்தின் ஊரானா கிய எலிசாவை உன் ஸ்தானத்திலே தீர்க்கதரிசியாக அபிஷேகம் பண்ணு (1 இராஜா. 19:16).
அங்கே ஆசாரியனான சாதோக்கும், தீர்க்கதரிசியாகிய நாத்தானும், அவனை (சாலொமோனை) இஸ்ரவேலின் மேல் ராஜா வாக அபிஷேகம் பண்ணக்கடவர்கள் (1 இராஜா. 1:34) என்ற கட்டளையைப் பெற்றனர்.
ஈ. அத்தி மரங்கள்
அத்தி மரம், இஸ்ரவேல் நாட்டின் தேசியச் சின்னமாகும். அத்தி மரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக் கொள்ளுங்கள், அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்த காலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள் (மத். 24:32). என்ன காலம் என்பதை அறிய துளிர் விடும் அத்திமரம் மக்களுக்கு உதவியது.
i. அத்திமரத்தைச் சபிக்கக் காரணம்
சாதாரணமாக அத்தி மரம், இரண்டு விதமான பழங்களைக் கொடுக்கும். ஆரம்பத்திலே பழுக்கும் பழத்திற்கு பாக்கூர் என்று பெயர். இலைகள் தோன்றும், மார்ச்சு மாத்தில் பாக்கூரும் தோன்றும். சரியான பருவத்தில் தோன்றும் அத்திப் பழத்திற்கு கிரிமாஸ் என்று பெயர். இது பிந்தி வரும். அதன் பிறகு இலைகள் உதிர்ந்து விடும். எனவே, அத்திமரத்தில் இலைகளும், பழங்களும் ஒரே சமயத்தில் தோன்றும். ஒரே சமயத்தில் மறையும். “மறு நாளிலே அவர்கள் பெத்தானியாவிலிருந்து புறப்பட்டு வருகையில், அவருக்குப் பசியுண்டாயிற்று. அப்பொழுது இலைகளுள்ள ஒரு அத்தி மரத்தைத் தூரத்திலே கண்டு, அதில் ஏதாகிலும் அகப்படுமோ என்று பார்க்க வந்தார். அத்திப் பழக்காலமாயிராதபடியால், வேறொன்றையும் காணவில்லை” (மாற். 11:12,13).
அது கனி கொடுக்கும் காலமல்ல (கிரிமாஸ்). எனவே அதில் பழங்கள் இல்லை. ஆனால் அதில் இலைகள் இருந்தபடியால், பருவ ஆரம்பத்தில் தோன்றும் கனிகள் (பாக்கூர்) இருந்திருக்க வேண்டும். இலைகள் நிறைந்த மரம், பார்வைக்குக் கனிகள் உள்ளதுபோலத் தோன்றிற்று. கனிகள் அற்ற மரம் பரிசேயருக்கு ஒப்பாயிருக்கிறது.
அவர்கள் மாய்மாலக்காரராய் இருந்தார்கள். வாக்கிலே உண்மை யில்லை. வெளித்தோற்றமே காணப்பட்டது. உள்ளான பரிசுத்தம் இல்லை.ஆண்டவர் மாய்மாலத்தை வெறுக்கிறார். எனவே, அவர் அந்த அத்தி மரத்தைச் சபித்தார்.
உ. அத்திப் பழத்தின் பயன்கள்
i. உணவு
அபிகாயில், தாவீதுக்கும் அவனுடைய ஆட் களுக்கும் வற்றலான இருநூறு அத்திப்பழ அடைகளைக் கொண்டு வந்தாள் (1 சாமு. 25:18).
ii. மருந்து
எசேக்கியா பிளவை நோயினால் பாதிக்கப்பட்டு மரணத் தறுவாயில் இருந்தான். அவனைக் காண வந்த ஏசாயா அந்த மன்னனுக்கு அத்திப்பழ அடையினால் பிளவையின் மீது பற்றுப் போட்டதினால் அவன் பிழைத்தான் (2இராஜா.20:7).
iii. செல்வச் செழிப்பும், சமாதானமும்
சாலொமோன் ராஜாவின் நாட்களில் இஸ்ரவேல் நாட்டில் செல்வச் செழிப்பும், சமாதானமும் பெருகியிருந்தன. அந்நாட்களில் தாண் தொடங்கிப் பெயர்செபா மட்டும் (இமயம் முதல் குமரி வரை என்று நம் நாட்டில் கூறுவது போல்), யூதாவும் இஸ்ரவேலும் அவரவர் தங்கள் தங்கள் திராட்சைச் செடியின் நிழலிலும், தங்கள் தங்கள் அத்தி மரத்தின் நிழலிலும் சுகமாய்க் குடியிருந்தார்கள் (1 இராஜா. 4:25). கர்த்தரின் பொற் காலத்திலும் அப்படியே இருக்கும். அவனவன் தன் தன் திராட்சைச் செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும், பயப்படுத்து வாரில்லா மல் உட்காருவான். சேனைகளுடைய கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று (மீகா. 4:4).
பிற தொழில்கள்
அ. குயவன்
வீட்டில் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் அனைத்தும் களிமண் ணால் செய்யப்பட்டவை. குயவன் திறமையாக அவைகளைச் செய் தான். சமையலுக்குப் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் பளபளப்பாக் கப்பட்டன. மண்ணைக் காலால் மிதித்து, பாத்திரங்கள் செய்வதற்கு ஏற்ற களிமண்ணாக்கப்படும். அவன் வந்து, அதிபதிகளைச் சேற்றைப் போலவும், குயவன் களிமண்ணை மிதிப்பது போலவும் மிதிப்பான் (ஏசா. 41:25). குயவனுடைய சக்கரம் ஒன்று அல்லது இரண்டு சக்கரங்களால் ஆனதாகக் காணப்படும். அந்தச் சக்கரம் அச்சாகிய நடுத்தண்டின் மீது, சுழலும்படியாக இருக்கும். ஒரு குச்சியைக் கொண்டோ, அல்லது தன் காலாலோ, குயவன் அதைச் சுற்றுவான். சக்கரத்தின் மத்தியில், வைக்கப்படும் பதப்படுத்தப்பட்ட களிமண், குயவனின் கையினால் சுழலும் சக்கரத்தில் உருவமைக்கப்படும்.
i. கர்த்தரின் ராஜரீக சித்தம்
கர்த்தருடைய ராஜரீக சித்தத்தை விளக்குவதற்கு களிமண்ணால் ஒரு குயவன் ஒரு பாண்டத்தை (வனைவது) உவமையாகக் கையாளப்பட்டுள்ளது. தேவன் தம்மு டைய ஊழியன், தீர்க்கதரிசி எரேமியாவுக்கு ஒரு குறிப்பிட்ட பாடத் தைக் கற்றுக் கொடுத்தார். தேவன் அவனை ஒரு குயவனிடம் போய், அவனை எப்படி ஒரு பாண்டத்தைச் செய்கிறான் என்பதைக் கவனிக்கச் சொன்னார். அப்படியே நான் குயவன் வீட்டிற்குப் போனேன். இதோ, அவன் சக்கரத்திலே வனைந்து (உரு வாக்கிக்) கொண்டிருந்தான். குயவன் வனைந்து கொண்டிருந்த மண்பாண்டம் அவன் கையிலே கெட்டுப் போயிற்று. அப் பொழுது அதைத் திருத்தமாய்ச் செய்யும் படிக்கு, தன் பார்வைக்குச் சரியாய்க் கண்டபடி, குயவன் அதைத் திரும்ப வேறே பாண்டமாக வனைந்தான் (எரே. 18:3,4). களிமண்ணில் இருந்த ஏதோ ஒரு கல் அல்லது ஒரு குறைப்பாட்டினால், பாண் டம் கெட்டுப்போயிற்று. அந்தக் களி மண்ணை அவன் எறிந்து விடவில்லை. ஆனால் குயவன் மறுபடியும் அதைச் செய்தான். நம்முடைய கர்த்தர், பாவத்தினால் கெட்டுப்போன, நம்முடைய வாழ்க்கையைப் புதிதாக்கும் படியாய் விரும்புகிறார். அவர் எது நல்லது என்று தமக்குத் தோன்று கிறதோ, அதன்படி தம்முடைய ராஜரீகச் சித்தத்தின்படி பாண்டங்களை உருவாக்குகிறார். அப்படியானால், மனுஷனே, தேவனோடு எதிர்த்துத் தர்க்கிக்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட வஸ்து உருவாக்கினவனை நோக்கி, நீ என்னை ஏன் இப்படி உண்டாக்கினாய் என்று சொல்லலாமா? மிதியிட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான பயனுக்கும், ஒரு பாத்திரதைக் கனவீனமான பயனுக்கும் பண்ணுகிற தற்கு மண்ணின் மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ? கிறிஸ்து வுக்குள் புதிய படைப்புகளாக மாற்ற, தேவனால் முடியும். இப்படி யிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால், புதுச் சிருஷ்டியாய் இருக்கிறான், பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின (2 கொரி. 5:17).
ii. தெய்வீக நியாயத் தீர்ப்பு
ஒரு இரும்புக் கோலால், மண் பானைகளை உடைத்து நொறுக்குவதற்கு தேவனின் நியாயத்தீர்ப்பு ஒப்பிடப்பட்டுள்ளது. இருப்புக் கோலால் அவர்களை நொறுக்கி,குயக் கலத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவீர் (சங்.2:9).ஒரு தேசத்தின் நியாயத்தீர்ப்பு இப்படியாக விளக்கப்பட்டுள்ளது. அவன் இருப்புக் கோலால் அவர்களை ஆளுவான். அவர்கள் மண்பாண்டங் களைப் போல் நொறுக்கப்படுவார்கள் (வெளி. 2:27).
iii. ஒரு கலசம்
குளிர்ந்த தண்ணீர் புதிதாக வனையப்பட்ட, பளபளப்பேற்றப்படாத, மண்பாண்டங்களில் நுண்ணிய துவாரங்கள் வழியாக, நீர் கசியும். இப்படிக் கசிந்த நீர், நீராவியாகப் போய் விடும். இப்படி ஆவியாவதற்குத் தேவையான வெப்பத்தை, மண்பாண்டத்தில் உள்ள நீரிலிருந்து, அது எடுத்துக்கொள்ளுகிறது. ஆகவே,மண்பாண் டத்தில் உள்ள நீர் குளிர்ச்சியாகி விடுகிறது. சீஷன் என்னும் நாமத் தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற் போகான் என்று மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத்.10:42).
ஆ. மீனவர்
மத்தியதரைக் கடற்கரை ஓரங்களிலும், கலிலேயக் கடலைச் சுற்றியும் வாழ்ந்தவர்களுக்கு, மீன் பிடிப்பது ஒரு முக்கிய தொழிலாக இருந்தது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சீடர்களில் சிலர் மீனவர் களாக இருந்தனர். மீன் பிடிப்பதற்குப் பலவிதமான வழிகளைக் கையாண்ட னர். தூண்டில் போடுவது ஒரு முறை. மேலும் வட்டவடிவமான வலைகளை யும், இழுவலைகளையும் பயன்படுத்தி னார்கள். கட்டிடம் கட்டுதல், தோல் பத னிடுதல், வாணிபம் போன்ற தொழில் களையும் அம்மக்கள் செய்து வந்தார் கள்.
இ. தச்சன்
தச்சுத்தொழில் மக்களின் முக்கிய தொழில்களில் ஒன்றாக இருந்தது.கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தச்சன் எனக் குறிப்பிடப் படுள்ளார். இவன் தச்சன் அல்லவோ? மரியாளுடைய குமாரன் அல்லவோ? யாக்கோபு, யோசேப்பு, யூதா, சீமோன் என்பவர்களுக்குச் சகோதரன் அல்லவோ? (மாற். 6:3).அவர்கள் கலப்பைகள், நுகத்தடி, கதவு, ஜன்னல், நாற்காலி முதலியவற்றைச் செய்தார்கள். நுட்ப மில்லாத பழமையான கருவிகளைப் பயன்படுத்தினார்கள். என்றாலும் அவை மிக அழகான பொருட்களாக இருந்தன. பலகணிக்குத் தேவை யான சித்திர வேலைப்பாடுகள் மிக்க கிராதிகளையும் செய்தனர்.
ஈ.ஆயக்காரர்கள் (வரி வசூலிப்போர்
யூதர்கள் சுதந்திரத்தைப் பெரிதும் விரும்பினர். புற இனத்தவராகிய ரோமர் தங்களை ஆளுகை செய்வதை அவர்கள் வெறுத்தனர். மேலும், ஆயக்காரர்கள், சட்டப்படி நியமித்த வரிகளைவிட அதிகமாய் வாங்கினார்கள். பணம் வசூலிப்பதில் வன்முறைகளைக் கையாண் டனர். அவர்கள் மக்களிடம் லஞ்சம் வாங்கினார்கள். எனவே அவர்கள் பாவிகளாகக் கருதப்பட்டனர். பரிசேயர்கள், உங்கள் போதகர் ஆயக் காரரோடும் பாவிகளோடும் போஜனம் பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள் (மத். 9:11). வேசி களைப்போல இவர்களும் மிக கேவலமானவர்களாகக் கருதப் பட்டனர். இயேசு கிறிஸ்து, பிரதான ஆசாரியரிடமும், மூப்பர்களிடமும் ஆயக்காரரும் வேசிகளும் உங்க ளுக்கு முன்னே தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்கிறார் கள் என்று மெய்யாகவே உங்க ளுக்குச் சொல்லுகிறேன் என்று சொன்னார் (மத்.21:31).
ஆயக்காரன் என்ற முறை யில், மத்தேயு பயணிகளிடம் சுங்க வரியை வசூலித்துக் கொண்டிருந் தான். அவன் ஒரு வேளை சுங்க அதிகாரியாக இருந்திருக்கலாம். அவனுக்கு ஒரு அலுவலகம் இருந்தது. மற்றவர்கள் அவனிடத்தில் பணி செய்தனர். தன்னைப் பின்பற்றி வரும்படி மத்தேயுவிடம் இயேசு கிறிஸ்து கூறினார். “இவைகளுக்குப் பின்பு, அவர் புறப்பட்டு, ஆயத் துறையில் உட்கார்ந்திருந்த லேவி என்னும் பேருடைய ஒரு ஆயக்கார னைக் கண்டு, எனக்குப் பின் சென்று வா என்றார்”(லூக். 5:27).