வேதாகம நாட்டின் வாழ்க்கை முறைகள் 5.பண்பாடு 

வேதாகம நாட்டின் வாழ்க்கை முறைகள் 5.பண்பாடு 

கல்வி

பழங்கால உலகில், உயர்தரமான கல்வி இருந்தது என்பது, தொல்பொருள் ஆராய்ச்சியிலிருந்து நிரூபணமாகிறது. ஆபிரகாம் காலத்தில், மெசெப்பத்தோமியா நாகரிகத்தில், களிமண்ணால் ஆன எழுத்துப் பட்டைகள் இருந்தன. கணிதம், செயல்முறை வடிவியல், வணிகச் சட்ட ஒழுங்குகள் ஆகியவை பாடங்களாகக் கற்பிக்கப்பட்டன. மோசே எகிப்தியருடைய சகல சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு வாக்கிலும், செய்கையிலும் வல்லவனான் (அப். 7:22)

மெசெப்பத்தோமியா, நாகரிக காலத்திலேயே, எகிப்திய நாகரி கமும் இருந்தது. மக்கள் வாசிக்கவும் எழுதவும் அறிந்திருந்தனர். நிலத்தைத் துல்லியமாக அளப்பதற்கு அவர்கள் வடிவியலைப் பயன் படுத்தினர். ஏனெனில் நிலத்திற்கு நல்ல மதிப்பு இருந்தது. வேதியியல், மருத்துவம் ஆகிய துறைகளிலும் முன்னேற்றம் அடைந்திருந்தனர். உலோகங்களைப் பற்றிய அறிவும் உடையவராயிருந்தனர். 

அ. கல்வி கற்ற முறைகள்

i. வீடு 

மோசேயின் நியாயப்பிர மாணத்தின்படி வீடே குழந்தையின் முதல் பள்ளிக்கூடமாகும். பெற்றோர் களே ஆசிரியர்கள். இன்று நான் உனக் குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தை கள் உன் இருதயத்தில் இருக்கக்கட வது. நீ அவைகளை உன் பிள்ளை களுக்குக் கருத்தாய் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிற போதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்கிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசு (உபா. 6:6,7).

ii. ஜெபாலயம் 

ஐந்து அல்லது ஆறு வயதுப் பிள்ளைகள் ஜெபால யத்திற்குக் கல்வி கற்கச் செல்வார்கள். பன்னிரெண்டு வயது வரை, அவர்களுக்குப் பாரம்பரியான நியாயப்பிரமாணங்கள் கற்பிக்கப்பட் டன. பதினைந்து வயதிற்குப் பிறகு, பழைய ஏற்பாட்டின் இறையியல் கல்வி கற்றார்கள். அவர்கள் பழைய ஏற்பாட்டைப் படிப்பதற்குத்தான் முக்கியமாக எபிரெய மொழியைக் கற்றார்கள். கல்வியின் முக்கியத்துவம் மத போதனையாக இருந்தது (Religious Education).

iii. தீர்க்கதரிசிகளின் பள்ளிக் கூடம் 

தீர்க்கதரிகளுக்கான பள்ளி களை சாமுவேல் நிறுவினார். மதப் பணிகளைச் செய்யும்படியாக, லேவி யர்களுக்குப் பயிற்சி கொடுப்பதே அதன் முக்கிய நோக்கமாகும். சாமு வேல் சவுலிடம் பெலிஸ்தரின் தாணை யம் இருக்கிற தேவனுடைய மலைக் குப் போவாயாக. அங்கே நீ பட்டணத்திற்குள் பிரவேசிக்கையில், மேடையிலிருந்து இறங்கிவருகிற தீர்க்கதரிசிகளின் கூட்டத்திற்கு எதிர்ப்படுவாய் என்றான் (1 சாமு. 10:5). அவர்கள் அந்த மலைக்கு வந்தபோது, இதோ, தீர்க்கதரிசிகளின் கூட்டம் அவனுக்கு எதிராக வந்தது (1 சாமு.10:10), அந்த வாலிபர்கள் கிபியாவிலே சாமுவேலிடம் கற்றார்கள். ராமாவிலே, தீர்க்கதரிசிகளுக்கு மற்றுமோர் பள்ளி இருந்தது (1சாமு.19:18). நியாயப்பிரமாணம், இஸ்ரவேலின் சரித்திரம், புனித வரலாறு, வேதத்தை நகல் எடுப்பது ஆகிய காரியங்களில் சாமுவேலின் சீடர்கள் பயிற்சி பெற்றார்கள். பிற்காலத்தில அவர்கள் வேதபாரகர்கள் எனப்பட்டனர்.

iv. பயிற்சிப் பள்ளிகள் 

போதகருக்கான உயர்கல்வி கற்றவர்கள் ரபீ என்றழைக்கப்பட்டனர். அத்தகையோரை உருவாக்கும் பள்ளிகளே இவ்வகைப்பள்ளிகள். கமாலியேலிடம் பவுல் கல்வி கற்றான். நான் எருசலேமிலே கமாலியேலின் பாதத்தருகே வளர்ந்து, முன்னோர் களுடைய வேதப்பிரமானத்தின்படியே திட்டமாய் போதிக்கப்பட்டேன் என்று பவுல் கூறினார் (அப். 22:3). கமாலியேல் கண்டிப்பான பரிசேய ரபீ (போதகர்) ஆவார். கர்த்தராகிய இயேசுகிறிஸ்து அவருடைய சீடர்களால் ரபீ என்று அழைக்கப்பட்டதைக் காணுங்கள். கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார். காலை தோறும் என்னை எழுப்புகிறார்; கற்றுக்கொள்கிறவர்களைப் போல, நான் கேட்கும்படி என் செவியைக் கவனிக்கச் செய்கிறார் (ஏசா. 50:4). நமது கர்த்தர் ஞானத்தின் திருவுருவானவர் (நீதி. 8:14). சர்வ ஞானியான இயேசு கிறிஸ்து பிதாவிற்கு செவிகொடுத்து, அவருடைய சித்தத்தை நிறைவேற்றினார்.

V. ரோமர் பள்ளி 

திறன்னு என்பவனுடைய பள்ளியை வாடகைக்கு எடுத்து, அதில் கர்த்தருடைய வார்த்தையை பவுல் போதித்து வந்தார். (அப். 19:9). அது திறன்னுவின் வீட்டின் ஒரு பகுதியாக இருந்திருக் கலாம். பகலிலே அது ஒரு ஆரம்பப்பள்ளியாக இருந்திருக்க வேண்டும். அதை,மாலையிலும், இரவிலும் பிரசங்கிக்கவும், போதிக்கவும் பவுல் பயன்படுத்தினார்.

தங்களுடைய பிள்ளைகளைப் பள்ளிக்குக் கூட்டிக்கொண்டு போக, செல்வந்தர்கள் அடிமைகளை உபயோகப்படுத்தினார்கள். அந்த அடிமைகள் கூட சில சமங்களில் குழந்தைகளுக்குக் கற்பிப்பது உண்டு. அந்த அடிமைகளை நியாயப் பிரமாணத்துக்கு ஒப்பிட்டு, நம்மைக் கிறிஸ்துவாகிய போதகரிடம் கொண்டுவருபவராகப் பவுல் குறிப்பிடுகிறார். இவ்விதமாக, விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப் படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மை கிறிஸ்துவினிடத்தில் வழி நடத்துகிற உபாத்தியாக இருந்தது (கலா.3:24). 

ஆ. இசைக் கருவிகள்

ஆடுகளின் மகிழ்ச்சிக்காக வும் தங்களுக்குப் பொழுது போக் குக்காகவும், மேய்ப்பர்கள் புல் லாங்குழல் வாசிப்பார்கள் என்று ஏற்கனவே பார்த்தோம். மக்கள் Harp (நரம்பு, மெல்லிய கம்பிகள் உள்ள இசைக் கருவி), Pipe (குழல்), Timbrels (கஞ்சிரா போன்ற இசைக் கருவி) அல்லது கைதாளம் (தம்புரு) மற்றும் எக்காளங்களைப் பயன்படுத்தினார்கள். பழைய ஏற்பாட்டு ஆலயத் தொழுகைக்காகத்தான் பெரும்பாலும் இசைக்கருவிகளைப் பயன் படுத்தினர்.

திருமணம்

இஸ்ரவேல் மக்களின் வாழ்க்கையில், விவாகம் ஒரு இன்றி யமையாத நிகழ்ச்சியாகவும், புனிதமானதாகவும் கருதப்பட்டது.

i. திருமணம் ஒரு சாயல் 

அது யேகோவாவிற்கும், இஸ்ரவேல் மக்களுக்கும் உள்ள உறவின் அடையாளமாக இருந்தது. நித்திய விவாகத்திற்கென்று உன்னை (இஸ்ரவேலை, எனக்கு (யேகோவா) நியமித்துக் கொள்ளுவேன். நீதியும் நியாயமும் கிருபையும் உருக்க இரக்கமுமாய் உன்னை எனக்கு நியமித்துக் கொள்ளுவேன் (ஓசி. 2:19).கிறிஸ்துவுக்கும், அவருடைய சபைக்குமுள்ள உறவுக்கும் அது அடையாளமாயிருக்கிறது. கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறது போல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான். அவரே சரீரத்துக்கும் இரட்சகராயிருக்கிறார் (எபே.5:23).

கீழை நாடுகளில், மணமகளை மணமகனின் பெற்றோர்களே தெரிவு செய்கின்றனர். பெற்றோர் மட்டுமல்ல, மணமகனின் முழுக் குடும்பமும், மணமகளைத் தேர்வு செய்வதில் பங்கெடுக்கிறார்கள். ஏனென்றால், விவாகத்திற்குப் பிறகு மணமகள், மணமகனின் குடும் பத்தில் ஒருவராகி விடுகிறார்.

ii. விவாகத்திற்குமுன் பேச்சு வார்த்தை நடத்துதல் 

மணமகனின் தந்தை, ஒரு தரகரிடம் தொடர்பு கொண்டு, தன் மகனுக்கு எப்படிப்பட்ட பெண் வேண்டுமென்று தெரிவிக்கிறார். பின், அந்தத் தரகர் பெண் வீட்டாரையும், உறவினர்களையும் சந்திக்கிறார். அவர்கள் ஒத்துக்கொண்டால், இரண்டு குடும்பங்களும் மேற்கொண்டு பேச்சு வார்த்தைக்குக் கூடிவருகிறார்கள். வந்த காரியம் முடியாவிட்டால் தரகர்கள் சாப்பிட மாட்டார்கள். ஆபிரகாமின் மகன் ஈசாக்குக்குப் பெண் பார்க்க ஆபிரகாமின் வேலைக்காரன் போனான். அவனுக்கு முன் உணவு வைக்கப்பட்டது. அவனோ, நான் வந்த காரியத்தைச் சொல்லுமுன்னே புசிக்கமாட்டேன் என்றான் (ஆதி. 24:33).

iii. நிச்சயதார்த்தம் 

இது ஒரு உடன்படிக்கை. விவாகத்தைப் போலவே இதுவும் ஒரு உடன்படிக்கை தான். இந்த வைபவத்திற்கு, இரு வீட்டாரும் வருவார்கள். வந்த மற்றவர்கள் சாட்சிகள். மணமகன் ஒரு மோதிரத்தையோ அல்லது விலையுயர்ந்த ஒரு பொருளையோ, மணமகளுக்குக் கொடுப்பான்.

விவாகத்திற்கு வெகு முன்பாகவே நிச்சயதார்த்தம் நடைபெறும். சில சமயங்களில் விவாகத்திற்கு ஒரு வருடத்துக்கு முன்பாகக்கூட, இது நடக்கும். அவருடைய தாயாராகிய மரியாள், யோசேப்புக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடிவருமுன்னே, அவள் பரி சுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது (மத்.1:18).

iv. மணமகன் 

மணமகன் ஒரு விவசாயியாக இருந்தாலும், விவாகத்தன்று ஒரு இளவரசனைப் போல் ஆடையலங்காரம் செய்யப்படுவான். மணவாளன் ஆபரணங்களினால், தன்னைச் சிங் காரித்துக் கொள்ளுகிறதற்கு ஒப்பாக (ஏசா.61:10).அவனுடைய நண்பர்கள் அவனுடன் வருவார்கள்.

V. மணப்பெண்ணை அலங்கரித்தல் 

மணப்பெண்ணை அதிக செலவு செய்து ஆடம்பரமாக அலங்கரிப்பார்கள். அனைத்தும் அவ ளுக்கு அணிவிக்கப்டும். குடும்பம் ஏழையாக இருந்தால் மணப் பெண்ணை அலங்கரிக்க நண்பர்களிடமிருந்து நகைகளைக் கடனாக வாங்குவார்கள். மணமகள் தன்னுடைய விவாக சேலையை,பல ஆண்டுகளுக்கு ஒரு பொக்கி ஷம் போல வைத்திருப்பாள். ஒரு பெண் தன் ஆபரணத் தையும், தன் ஆடைகளையும் மறப்பாளோ?என் ஜனங்களோ எண்ணிமுடியாத நாட்களாய் என்னை மறந்து விட்டார்கள். (எரே.2:32).யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தைத் தேவனிடத் தினின்று பரலோகத்தை விட்டு இறங்கி வரக்கண்டேன். அது தன் புருஷனுக்காக அலங்கரிக் கப்பட்ட மண வாட்டியைப் போல ஆபரணங்கள், உடைகள் அணிதிருந்தது (வெளி 21:2).

vi. திருமண ஊர்வலம் 

முதலில் மணப்பெண் ஊர்வலமாக வருவாள். தன்னுடைய குடும்பத்தாரால் அன்பளிப்பாகக் கொடுக்கப் பட்ட வீட்டுச் சாமான்கள் ஊர்வலமாக எடுத்து வரப்படும். அத்தோடு நண்பர்கள் கொடுத்த பரிசுப் பொருட்களும் கணவன் வீட்டார் கொடுத்த பரிசத்தோடு வந்த மற்ற பொருட்களும் வரும். குடும்பத்தினர்களும், நண்பர்களும், மணப்பெண்ணைத் தொடர்ந்து வருவார்கள். அப்பொழுது மணமகன் வரமாட்டான்.

அதன் பின்பு, மணமகன் கோலாகலமாக ஊர்வலமாக வருவான். எல்லோருடைய கவனமும் அவன் மேலேயே இருக்கும். இந்த ஊர்வலம் பொதுவாக விளக்குகளோடும், தீப்பந்தகளோடும் இரவில் நடக்கும். ஆண்டவர் கூறிய பத்துக் கன்னிகைகளின் உவமையைக் காண்போம். ஐந்து கன்னிகைகள், தங்கள் தீவட்டிகளுக்கு எண்ணெய் ஆயத்தமாய் வைத்திருந்தார்கள். ஆனால் புத்தியில்லாத மற்ற ஐந்து கன்னிகைகள் தங்களிடம் எண்ணெய் இல்லாததால் அதனை வாங்கப் போன போது மணவாளன் வந்துவிட்டார். ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடுகூடக் கலியாண வீட்டுக்குள் பிரவேசித்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது (மத்.25:10).

திருமண விருந்தைப் பற்றி ஆண்டவர் ஒரு உவமையைச் சொன்னார் (மத்.22:1-14). மணமகன் வீட்டார் சிறப்பான திருமண ஆடையை இலவசமாகக் கொடுப்பார்கள். இந்தச் சிறப்பு ஆடை இல்லா விட்டால், திருமண விருந்துக்கு உள்ளே செல்ல முடியாது. அழைக் கப்பட்டு சரியானபடி வாசல் வழியாக வந்தவர்கள் யாவரும் திருமண உடை அணிந்திருப்பார்கள்.

கால்களைக் கழுவுதல்

இஃது கிழக்கத்திய நாட்டினரின் வழக்கமாகும். நம் நாட்டில் சிற்றூர்களில் இந்நாட்களிலும் இப்பழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆயினும், இன்று கொஞ்சம் கொஞ்சமாக இந்த வழக்கம் மறைந்து வருகிறது. நீர் நிரம்பிய தொட்டி வீட்டின் வாசல் அருகில் வைக்கப் பட்டிருக்கும். அதன் அருகே ஒரு குவளையையும் வைத்திருப்பார்கள். வெளியிலிருந்து வருவோர் வீட்டின் உள்ளே செல்வதற்கு முன்ன தாகத் தங்களுடைய கால்களை நன்றாகக் கழுவி தூய்மைப்படுத்து வார்கள்.

யூதர்களுக்குள்ளான செல்வந் தர்கள் தங்களுடைய வீட்டில் பணி புரிய அடிமைகளை நியமித்திருந்த னர். வீட்டிற்கு விருந்தினர்கள் வருகை புரியும் நேரங்களில் அவர் களுடைய கால்களைக் கழுவிவிடு வது இந்த அடிமைகளின் வேலை யாகும். தம்முடைய சீடர்களின் கால் களைக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கழுவினபோது தம்மை அடி மையாக வெளிப்படுத்திக் காட்டி னார். “தம்மைத்தாமே வெறுமை யாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்” (பிலி. 2:7). வேதத்தில் தண்ணீர் வசனத்தைக் குறிப்பதாகும். வசனத்தினால் விசுவாசியானவன் தன்னைச் சுத்தம் செய்துகொள்ள வேண்டியதை யும் இந்நிகழ்ச்சி குறிக்கிறது. விசுவாசிகள் ஒருவருக்கொருவர் தாழ்மையுடன் நடந்துகொள்ள வேண்டுமென்பதையும் இது குறிக் கிறது. ஆயின் இதனை இன்றைய நாட்களில் சில சபைகள் ஒரு சடங்காகக் கடைப்பிடிப்பதில் எவ்விதப் பயனுமில்லை.

மரணம்

மரணத்தைப் பற்றி கீழை நாட்டு மக்கள் கொண்டிருந்த மனோ பாவமும், நடக்கையும், மேலே நாட்டு மக்களின் மனோபாவமும், நடக்கையும் முற்றிலும் வித்தியாசமானது. ஒரு வீட்டில் மரணம் சம்பவித்தவுடன், அவ்வீட்டார் மிகுந்த சத்தமிட்டு அழுவார்கள். அதன் காரணமாக அவ்விசயம் அண்டை, அயலாருக்குத் தெரியவரும். எகிப்திலே பெரிய அழுகை உண்டாயிற்று. மகா கூக்குரல் எகிப்திலே உண்டாயிற்று. சாவில்லாத ஒரு வீடும் இருந்ததில்லை (யாத்.12:30).

யவீரு ஒரு ஜெப ஆலயத் தலைவனாயிருந்தான். அவனுடைய மகள் இறந்து விட்டாள். இயேசு கிறிஸ்து யவீருவின் வீட்டுக்குள் சென்றார். ஜெப ஆலயத்தலைவனுடைய வீட்டிலே வந்து, சந்தடி யையும் மிகவும் அழுது புலம்புகிறவர்களையும் கண்டார் (மாற்கு 5:38). சில சமயம் முதிர்வயதுள்ளவர் மரித்தால், அழுவதற்குக் கூலி கொடுத்து ஆட்களை வரவழைப்பார்கள். மக்கள் மனஸ்தாபப்படு வதில்லை. அவர்களிடம் தெய்வீகத் துக்கம் ஏற்படாது. சேனைகளின் கர்த்தர் இவ்வாறு கூறுகிறார். நீங்கள் யோசனை பண்ணி, புலம்பற் காரிகளை வரவழைத்து, அதிலே பழகின ஸ்திரீகளைக் (கூலிக்கு மாரடிப்பார்களை) கூப்பிடுங்கள். அவர்கள் சீக்கிரமாய் வந்து, தம் முடைய கண்கள் கண்ணீராய்ச் சொரியத்தக்கதாவும், தம்முடைய இமைகள் தண்ணீராய் ஓடத்ததக்கதாவும் ஒப்பாரி சொல்லக்கடவர்கள் (எரே. 9:17,18).

இறந்தவர்களுக்காக மக்கள் அழும்போது, மிகவும் உணர்ச்சி வசப்படுவார்கள். இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தபோது, ஸ்திரீ கள் துக்கத்தின் அடையாளமாக, மார்பில் அடித்துக் கொண்டார்கள். இந்தக் காட்சியைப் பார்க்கும்படி கூடிவந்திருந்த ஜனங்கள் எல்லாரும் சம்பவித்தவைகளைப் பார்த்த பொழுது, தங்கள் மார்பில் அடித்துக் கொண்டு திரும்பிப் போனார்கள் (லூக். 23:48).மேலும், அவர்கள் தங்கள் ஆடைகளைக் கிழித்து, சாக்கை உடுத்திக் கொள்வார்கள். தாவீது அப்னேருக்காகப் புலம்பினான். தாவீது யோவாபையும் அவ னோடிருந்த சகல மக்களையும், நீங்கள் உங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு இரட்டுடுத்தி, அப்னேருக்கு முன்னாக நடந்து, துக்கங் கொண்டாடுங்கள் என்று சொன்னான் (2 சாமு. 3:31).

கர்த்தருடைய மக்களுக்காகத் தீர்க்கதரிசி அழுதான். எரேமியா, “ஆ! என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமானால் நலமாயிருக்கும். அப்பொழுது என் ஜனமாகிய குமாரத்தி,கொலை யுண்ணக் கொடுத்தவர்கள் நிமித்தம் நான் இரவும் பகலும் அழுவேன்” (எரே.9:1).இக்காலங்களில் கர்த்தருடைய ஊழியக்காரர்கள் கர்த்தருடைய ஜனங்களிடம் கதறுகிறார்கள். அம்மக்களுக்காகவும், அவர்களுடைய ஆத்தும நிலைமைக்காகவும் அழுவதில்லை. கண்ணீர்விட்டு அழும் தகப்பன்கள் நமக்கு வேண்டும். தாவீதுக்கு விரோதமாக அநேக காரியங்களைச் செய்த அவனுடைய மகன் அப்சலோமுக்காக தாவீது கதறி அழுதான். அப்பொழுது ராஜா மிகவும் கலங்கி, கெவுனி வாசலின் மேல் வீட்டிற்குள் ஏறிப்போய் அழுதான்.. அவன் ஏறிப் போகையில், “என் மகனாகிய அப்சலேமே, என் மகனே, என் மகனாகிய அப்சலோமே, நான் உனக்குப் பதிலாகச் செத்தே னானால் நலமாயிருக்கும். அப்சலோமே, என் மகனே, என் மகனே என்று சொல்லி அழுதான் (2 சாமு. 18:33). சந்தோஷப்படுகிறவர் களுடனே சந்தோஷப்படுங்கள். அழுகிறவர்களுடனே அழுங்கள் (ரோமர் 12:15).என்று சொல்லப்பட்டுள்ளது. லாசரு இறந்தபோது மக்கள் அவனுக்காக அழுதார்கள். அவள் அழுகிறதையும், அவனோடேகூட வந்த யூதர்கள் அழுகிறதையும் இயேசு கண்டபோது, ஆவியிலே கலங்கித் துயரமடைந்தார் (யோவான் 11:33). இயேசு கண்ணீர் விட்டார் (யோவான் 11:35). இயேசு கிறிஸ்துவானவர் எப்படி மக்களோடு தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் என்று பாருங்கள். அழுகிறவர்களோடு அவர் அழுதார். எருசலேமிலுள்ள மக்களுக்காக ஆண்டவர் அழுதார். மேலை நாட்டு மக்கள் சிலர் நினைப்பது போல, அழுவது ஒரு பலவீனம் அல்ல.

i. அடக்கம் செய்யும் முறை 

அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, யூதர்கள் அடக்கம் பண்ணும் முறைமையின்படியே அதைச் சுகந்தவர்க்கங்களுடனே சீலைகளில் சுற்றிக் கட்டினார்கள் (யோவான் 19:40). அவரது சரீரத்தைத் துணிகளாலும், சுகந்தவர்க்கங்களினாலும் கட்டி, பதப்படுத்தினார்கள். லாசரு, கல்லறையை விட்டு வெளியே வந்தபோது சீலைகளினால் கட்டப்பட்டிருந்தான். அப்போது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலை களினால் கட்டப்பட்டிருந்தது. அவன் முகமும் சீலையால் சுற்றப்பட்டி ருந்தது. இயேசு அவர்களை நோக்கி, இவனைக் கட்டவிழ்த்து விடும்படி கூறினார் (யோவான் 11:44).

மரணத்திற்குப் பிறகு உடனே அடக்கம் நடைபெறும். வெப்பமான காலநிலையில், சரீரத்தை அதிக நேரம் வைத்திருக்க முடியாது. ஏழை கள் ஊருக்கு வெளியே புதைக்கப்படுவார்கள். பிரேதக்குழி பொதுவாக மண்ணிலே வெட்டப்படும். அவர் ஊரின் வாசலுக்குச் சமீபித்தபோது, மரித்துப்போன ஒருவனை அடக்கம் பண்ணும்படிக் கொண்டு வந்தார் கள். அவன் தன் தாய்க்கு ஒரே மகனாயிருந்தான் (லூக். 7:12). செல்வந் தர்கள், கன்மலையில், தங்களுக்குக் கல்லறைகளை வெட்டிக்கொள் வார்கள். அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு ஒரு செல்வந்தன் (மத். 27:57). யோசேப்பு இயேசு கிறிஸ்துவின் சரீரத்தை எடுத்து, தூய்மை யான மெல்லிய துப்பட்டியிலே சுற்றி, தான் கன்மலையில் வெட்டி யிருந்த தன்னுடைய புதிய கல்லறையிலே அதை வைத்து, கல்லறை யின் வாசலில் ஒரு பெரிய கல்லைப் புரட்டி வைத்துப் போனான் (மத். 27:59,60).

தீர்க்கதரிசியாகிய சாமுவேல் தன்னுடைய வீட்டிலே அடக்கம் செய்யப்பட்டான். சாமுவேல் மரணமடைந்தான். இஸ்ரவேலர் எல்லா ரும் கூடிவந்து, அவனுக்காகத் துக்கம் கொண்டாடி, ராமாவிலிருக்கிற அவனுடைய வயலிலே அவனை அடக்கம் பண்ணினார்கள் (1 சாமு. 25:1). தாவீது ராஜா, தாவீதின் நகரத் திலே அடக்கம் பண்ணப்பட்டான். பின்பு தாவீது தன் பிதாக்களோடே நித்திரை அடைந்து, தாவீதின் நகரத்தில் அடக்கம் பண்ணப்பட்டான் (1 இராஜா. 2:10). ஒரு மனிதன் இறந்ததிலிருந்து, அடக்கம் பண்ணப்படும்வரை, மக்கள் உபவாசம் இருப்பார்கள் (சாப்பிட மாட்டார்கள்). அதற்குப்பின் துக்க விருந்து நடக்கும்.

தேவாலயமும் ஜெபாலயமும்

அ. ஆலயம்

பழைய ஏற்பாட்டு ஆசரிப் புக் கூடாரத்தின் அமைப்பின் படியே தேவாலயமும் கட்டப் பட்டது. அதில் மூன்று பிரிவு கள் இருந்தன. அவையாவன: வெளிப்பிரகாரம், பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்த லம். பாலைவனப் பயணத்தின் போது ஆசரிப்புக் கூடாரம் இருந்தது. அவர்கள் பாலஸ் தீன நாட்டைச் சுதந்தரித்துக் கொண்ட பிறகு சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர், கர்த்தருக்கு ஆலயத்தைக் கட்ட வேண்டும் என்று தாவீது அரசன் விரும்பினான். அவன் தொடர்ந்து போர்செய்த காரணத்தினால் யுத்த மனுஷன் என்று பெயர் பெற்றிருந்தான். ஆகவே அவனது விருப்பத்தின்படி தேவாலயம் கட்டுவதற்குத் தேவன் அவனை அனுமதிக்கவில்லை.

தாவீதின் குமாரனாகிய சாலொமோன் எருசலேம் நகரில் மகிமை பொருந்திய ஆலயத்தைக் கட்டினான். அந்த ஆலயம் பாபிலோனி யருடைய படையெடுப்பின்போது அழிக்கப்பட்டுவிட்டது. சிறையிருப் பினின்று விடுதலை பெற்ற யூதர்கள் யெருபாபேல் தலைமையில் எருசலேமிற்குத் திரும்பி வந்தனர். யெருபாபேலின் காலத்தில் புதிய தேவாலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர் அது கட்டப்பட்டது. எஸ்றா அதனை அழகு படுத்தினான். நெகேமியா எருசலேம் நகர மதிற்சுவரைப் பழுதுபார்த்துக் கட்டினான்.

யூத மக்களைக் மகிழ்விக்கச் செய்யவும், அவர்களுடைய ஆதர வைப் பெறவும் ஏரோது மன்னன் புதிய தேவாலயத்தை விரிவுபடுத்தி மீண்டும் புதுபித்து கட்டினான். அதனை அவன் கட்டிமுடிக்க 46 ஆண்டு கள் ஆயின. அவ்வாலயம் கி. பி. 70 -இல் ரோம படைத்தளபதி தீத்து வினால் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது. இந்நாள்வரை அது மீண்டும் கட்டப்படவில்லை. எதிர்காலத்தில் மகிமை பொருந்திய வகையில் தேவா லயம் அங்கு கட்டப்படும் என்று எசேக்கியல் முன்னுரைத்துள்ளான்.

ஆ. ஜெபாலயம்

ஆளுகையும் அதிகாரமும் பெற்ற யூதர்கள் தேவாலயத் தைக் கட்டவில்லை. மாறாக ஜெப ஆலயங் களையே அவர்கள் கட்டினர். ஜெப ஆல் யங்களில் பலிபீடம் இடம் பெறவில்லை; அங்கே பலிகளும் செலுத்தப்படவில்லை. தேவனுடைய வார்த்தையைக் கற்றிடவும், ஜெபம் செய்யவும், ஐக்கியம் கொள்ளவும் அந்த ஜெப ஆலயங்கள் பயன்பட்டன. மூப்பர்கள் அவற்றின் நடவடிக்கைகளை நிருவகித்தனர். புதிய ஏற்பாட்டு சபைகளும் அதற்கொத்த வகையில் நிருவகிக்கப்படுகின் றன. சபையின் மூப்பர்கள் சபை நடவடிக்கைகளைக் கண்காணிக் கின்றனர். அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந் நியோன்னியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம் பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்திருந்தார்கள் (அப். 2:42). இதுவே புதிய ஏற்பாட்டுச் சபைகளின் நடைமுறை ஒழுங்காகும்.

நகர வாசல்

வாசல்களைப் பற்றி வேதத்தில் சுமார் 400 இடங்களில் சொல்லப் பட்டுள்ளது. வாசல் என்னும் வார்த் தைக்குப் பல அர்த்தங்கள் உள் ளன. பொதுவாக நகரத்தைச் சுற்றி, சுவர்கள் கட்டப்படுகின்றன. சில சமயம், இரண்டு சுவர்கள் எழுப்பப்படும். வாசலிலும், சுவர்களின் மூலைகளிலும் காவல் கோபுரங்கள் கட்டப்படும். அந்தக் கோபுரத்தில் நின்று கொண்டு காவல் செய்யும் காவலாளி கள், நக ரத்திற்கு ஏதாவது ஆபுத்து வருமானால், உடனே எச்சரிக்கை பண்ண வேண்டும்.

சில சமயம் உள் சுவர், வெளிச் சுவர் என இரண்டு கட்டப்படுவ துண்டு. இந்த இரண்டு சுவர்களுக்கும் உள்ள இடைவெளி பலவிதங் களில் பயன்படும். வாசல் அழகாகவும், அலங்காரமாகவும் இருக்கும். வாசல்களின் கதவுகள் மரத்தா லானவை. அவை உலோகங்களால் மூடப்பட்டு மிகவும் உறுதியாக இருக்கும். நகர வாசலால் அநேக பயன்கள் உண்டு.

i. சந்தைவெளி

 சாதாரணமாக, மக்கள் நகர வாசலிலே கூடுவார்கள். அது ஒரு சந்தை வெளியாகப் பயன்படுத்தப்பட்டது. நாளை இந்நேரத்தில், சமாரியாவின் வாசலிலே ஒரு மரக்கால் கோதுமை மா ஒரு சேக்கலுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் விற்கப்படும். (2 இராஜா. 7:1).

ii. பொது அறிவிப்புக்குரிய இடம் 

நகர வாசலிலிருந்த மக்களிடம் எசேக்கியா இராஜா பேசினான். ஜனத்தின்மேல் படைத்தலைவரை வைத்து, அவர்களை நகர வாசலின் வீதியிலே தன்னண்டையில் கூடிவரச் செய்து அவர்களை உற்சாகப்படுத்தினான் (2 நாளா.32:6). எரேமியா தீர்க்கதரிசி, நகர வாசலிலிருந்து, கர்த்தருடைய செய்தியைச் சொன்னான். “கர்த்தர் என்னை நோக்கி, நீ போய் யூதாவின் ராஜாக்கள் வரத்தும் போக்குமாயிருக்கிற இந்த ஜனங்களின் புத்திரருடைய வாசலிலும் எருசலேமின் எல்லா வாசல்களிலும் நின்றுகொண்டு, அவர்களுடனே சொல்ல வேண்டியது என்னவென்றால், இந்த வாசல்களில் பிரவேசிக்கிற யூதாவின் ராஜாக்களும், எல்லா யூதரும், எருசலேமின் எல்லாக் குடிகளுமாகிய நீங்கள் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்” (எரே.17:19,20).

iii. நீதி விசாரணை செய்யும் இடம் (COURT) 

லோத்து, நகர வாசலிலே நியாயாதிபதியாய் உட்கார்ந்திருந்தான். அந்த இரண்டு தூதரும் சாயங்காலத்திலே சோதோமுக்கு வந்தார்கள். லோத்து சோதோமின் வாசலிலே உட்கார்ந்திருந்தான் (ஆதி.19:1). அது நியாயத்தீர்ப்பு வழங்கும் இடம். கர்த்தர் உனக்குக் கொடுக்கும் வாசல்களிலெல்லாம், நியாயாதிபதிகளையும் தலைவரையும் ஏற்படுத்துவாயாக (உபா.16:18). போவாஸ் எலிமெலேக்கின் வயல் நிலத்தை மீட்டான். போவாஸ் பட்டணத்து மூப்பர் கூடும் இடத்தில் அதைப் பெற்றுக் கொண்டான் (ரூத் 4:9).

iv. குறியீடான பொருள் 

நகர வாசல் என்பது முழுப் பட்டணத் தையும் குறிக்கும். உன் சந்ததியார் தங்கள் பகைஞருடைய வாசல் களை, அதாவது நாடுகளைச் சுதந்தரித்துக் கொள்வார்களாக (ஆதி. 24:60). நகரத்தின் மகிமை, நகரத்தின் வாசல்களைச் சார்ந்தது. புதிய எருசலேமின் பன்னிரண்டு வாசல்களும் பன்னிரெண்டு முத்துக்களா யிருந்தன.ஒவ்வொரு வாசலும் ஒரு முத்தாயிருந்தது. நகரத்தின் வீதி தெளிவுள்ள பளிங்கு போலச் சுத்தப் பொன்னாயிருந்தது (வெளி. 21:21). தங்கள் பலத்துக்கும், இராணுவ வல்லமைக்கும் குறியீடாக வாசல்கள் கருதப்பட்டன. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் (வல்லமை) அதை மேற்கொள்ளுவதில்லை (மத்.16:18). பாதாளம் உண்மையான சபையை ஜெயிக்க முடியாது.

V. ஆவிக்குரிய பொருள் 

வாசல் (கதவு) தான் பட்டணத்துக் குள்ளே போக ஒரே வழி. இரட்சிப்படைவதற்குக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தான் ஒரே வழி. நானே வாசல். ஒருவன் என் வழியாய் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான் 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *