வேதாகம நாட்டின் வாழ்க்கை முறைகள் 7. யூத சமுதாயம்

வேதாகம நாட்டின் வாழ்க்கை முறைகள் 7. யூத சமுதாயம்

அ. மக்கபேயர்கள்

மத்தியாஸ் என்னும் பிரதான ஆசாரியனின் மரபுப் பெயரே ‘மெக்க பீஸ்’ என்பதாகும். அவன் யூத மக்களிடையே மிகவும் புகழ்வாய்ந் தவனாக விளங்கினான். பின்னர், அவன் வழிவந்தோரும் அவனைப் பின்பற்றிய கூட்டத்தாரும் அப்பெயரினைப் பெற்றனர். பாலஸ்தீன நாட்டை மகா அலெக்ஸாண்டனர் வெற்றி கொண்டான். அம்மாமன்ன னின் மரணத்திற்குப் பின்னர் அவனுடைய படைத் தளபதிகள் பாலஸ் தீனத்தை ஆண்டு வந்தனர். சீரிய அரசனாகிய ஆண்டியோகஸ் எபி பெனஸ் என்பவனுடைய ஆட்சிக் காலத்தில் கிரேக்க சமயத்தையும், கிரேக்க மொழியையும் யூத நாட்டில் புகுத்த முயற்சி செய்தான். மேலும் யூதர்களுடைய முறைமையாகிய விருத்தசேதனம் மற்றும் ஓய்வுநாள் அனுசரிப்பு ஆகியவற்றைத் தடைசெய்தான்.

எருசலேம் தேவாலயத்தில் புறஇன மக்கள் செலுத்தும் பலிகளை செலுத்தும்படியும், விலைமகள் பழக்கத்தையும் தோற்றுவித்தான். உண்மையுள்ள யூதர்கள் கொடுமைக்கும் அவமானத்திற்கும் ஆளா யினர். மோடீன் என்னும் நகரில் வாழ்ந்த மத்தியாஸ் என்னும் ஆசாரி யன், அரசனை எதிர்த்துப் போராடினான். தன் ஆண்மக்களோடு சேர்ந்து கொரில்லா போர் முறையைக் கையாண்ட மத்தியாஸ் கொலையுண் டான். அவனுடைய மூன்றாவது மகன் யூதாஸ் தொடர்ந்து சீரிய நாட்டு மன்னனோடு போர் புரிந்தான். கி. மு. 165 -இல் தனது படைவீரர்களோடு எருசலேம் நகருக்குள் சென்ற யூதாஸ் தேவாலயத்தைத் தூய்மைப் படுத்தி, மீண்டும் தேவாராதனை தொடரும்படிச் செய்தான்.

யூதாசுக்கும் பின்னர் யோனத்தான் தொடர்ந்து சீரிய அரசனை எதிர்த்து கொரில்லா போரில் ஈடுபட்டான். யூதேயா நாட்டை அவன் சில காலம் திறம்பட ஆட்சி செய்தான். கி. மு. 150 -இல் மக்கள் ஆட்சியை அவன் நிறுவினான். அதன் பின்னர் சீமோன் ஆட்சியை ஏற்றுக் கொண்டான்.கி.மு. 104-இல் அவனுடைய மகன் அரிஸ்டோபுலஸ் ஆட் சிக்கு வந்து இரண்டாண்டுக் காலமே அரசாட்சி புரிந்தான். ஆனால் அவனுக்குப் பின்வந்த அவனுடைய குமாரர்கள் ஆட்சியை கைப்பற்றத் தங்களுக்குள்ளாகச் சண்டையிட்டுக் கொண்டனர். பிரதான ஆசாரிய வழியில் வந்த கடைசி அரசனாகிய ஆண்டிகோனியஸ் ரோமர்களால் கி.மு.37-இல் கொலைசெய்யப்பட்டான். மெக்கபீஸ் ஆட்சி அத்துடன் முடிவடைந்துபோயிற்று.

ஆ.பரிசேயர்கள்

பிரித்தெடுக்கப்பட்டவர்கள் என்பதே “பரி சேயர்” என்னும் சொல்லின் பொருளாகும். சமுதாயத்திலிருந்து அவர்கள் பிரிந்து வாழ்ந் தனர். இஸ்ரவேல் நாட்டின் சமயத்தை தங்களு டைய ஆளுகைக்குள்ளாக வைத்துக்கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தில் அவர்கள் செயல் புரிந்தனர். யூதர்களுடைய ஆலோசனைச் சங்கத்தில் ஆதிக்கம் செலுத்தத்தக்கபடி பதவி வகித்தனர். அவர்களே யூதர்களின் தலைவர் களாகத் திகழ்ந்தனர். மனித வரலாற்றின் இறுதி யில் தேவன் தலையிட்டு எல்லாவற்றையும் அவரே முடிவு கட்டுவார் என்ற நம்பிக்கையுடை யவர்களாக அவர்கள் விளங்கினர். மேலும் மனிதன் மரித்தபின் கடைசி நாட்களில் உயிர்த்தெழுவான் என்னும் கொள்கையிலும் அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். சதுசேயரோ இவ்வுண்மையை நம்பவில்லை.

நியாயப்பிரமாணத்திலும், பாரம்பரியச் சடங்குகளிலும் தேவனு டைய சித்தம் விளங்குகிறது என்ற கொள்கையில் வைராக்கியம் உடையவர்கள். மேலும் அந்த நியாயப்பிரமாணத்திற்கு விளக்கம் அளிப்பதற்குத் தாங்கள் உரிமைபெற்ற வர்கள் என்றும் நம்பினர். உயர்ந்த நன் னெறியைக் கடைப்பிடித்தனர். நீதிநெறிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென் றும் போதித்தனர். பரிசேயர்கள் அல்லா தோருடைய வீடுகளில் உணவருந்த மாட் டார்கள். தசம பாகம் கொடுப்பதில் தவறாது இருந்தனர். தசமபாகம் தருவதில் உறுதி யுடன் விளங்கி, தேவனுக்கு உண்மையுள் ளவர்கள் என்பதை வெளிப்படுத்தினர்.

இ. சதுசேயர்கள்

“சாதோக்கு” என்னும் பெயரிலிருந்து மருவிவந்ததே “சதுசேயர்கள்” என்னும் சொல்லாகும். சாதோக்கு என்னும் பெயரு டைய ஆசாரியனின் மரபில் தோன்றியவர் கள் இப்பெயர் பெற்றனர். பெரும்பாலும் ஒரு அரசியல் கட்சி போன்று அவர்கள் செயல் பட்டனர். சதுசேயர்கள் பரிசேயர்களை எதிர்த்து நின்றனர். தம்மையொத்த மனிதர் களிடம் மிகவும் கடுமையாகவே நடந்து கொண்டனர். பெருஞ்செல்வந் தர்களாக விளங்கிய இக்கூட்டத்தார், மற்றவர்களிடம் குறைகண்டு கடுமையாகக் குற்றஞ்சாட்டக் கூடியவர்களாக விளங்கினர். அதிகாரம் மிக்க ஆசாரியர் குடும்பங்களில் தோன்றிய இவர்கள் ஆலோசனைச் சங்கத்திலும் செல்வாக்கு மிக்கவர்களாக விளங்கினர். ஏரோது அரசர்கள் மற்றும் ரோம அரசாங்கத்தினருக்குக் கீழாகச் செயல்பட்ட ஆலோசனைச் சங்கத்தில் பிரபலமாக விளங்கிய சதுசேயர் நாளடை வில் வலுக்குன்றிப் போயினர். தேவாலயம் கி.பி. 70 ஆண்டு அழிவிற் குட்பட்ட பிறகு, இவர்களுடைய எண்ணிக்கை நலிந்து போயிற்று. சமயக் கொள்கையில் மாறுதலைப் பெரிதும் விரும்பாத இம்மக்கள் மரித்தோரின் உயிர்த்தெழுதலை நம்பவில்லை. மனிதர்களுடைய செழிப்பும், அவர்களுடைய தாழ்வும் அவரவருடைய நடக்கையின் விளைபயன் என்றே இக்கூட்டத்தினர் கருதினர்.

ஈ. யூதருடைய பண்டிகைகள்

சமயத்தின் அடிப்படையில் சில நாட்கள் அல்லது குறிப்பிட்ட காலத் தைக் குறித்துக்கொண்டு மகிழ்ச்சிக்குரிய வகையில் கொண்டாடப் படுவதைப் பண்டிகைகள் என்று கூறுகிறோம். வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பண்டிகைகளின் தொடக்கமும், நோக்கமும், பொருளும் பிற மதங்களின் பண்டிகைகளிலிருந்து முற்றும் வேறுபட் டவை. தேவனிடத்திலிருந்து பெற்றுக்கொண்ட நன்மைகளை நினைவு கூர்ந்து குறிப்பிட்ட காலங்களில் சில விழாக்களை இஸ்ரவேல் மக்கள் கொண்டாடினர். அப்பண்டிகைகளின் வாயிலாக, தமது மக்களின் வாழ்க்கையில் தேவன் ஈடுபட்ட நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்தனர்.

பண்டிகைக் காலங்களில் தேவனுக்குப் பலிகளையும் காணிக்கை களையும் செலுத்தி, தாங்கள் பெற்ற சிலாக்கியத்தை உளமார்ந்த மகிழ்ச்சியோடு வெளிப்படுத்தினர் (எண். 9:7). உண்ணுதலும், குடித் தலும், களியாட்டமும் அக்காலங்களில் மக்களிடையே காணப்படும்.

மக்கள் தங்களது மனவருத்தத்தை வெளிப்படுத்தும் வகையிலும் சில பண்டிகைகளைக் கொண்டாடினர். பக்திமிக்க யூதர்கள், தங்களுடைய பாவத்தின் பொருட்டு பலிசெலுத்தி, கவனத்தோடு அக்கற்பனைகளைக் கைக்கொண்டனர். இஸ்ரவேல் மக்கள் கொண்டாடிய ஏழு பண்டிகைகளாவன: 

  • பஸ்கா பண்டிகை 
  • வாரங்களின் பண்டிகை 
  • கூடாரப் பண்டிகை
  • ஓய்வு நாள் பண்டிகை
  •  எக்காளப் பண்டிகை 
  • பாவநிவாரண நாள் 
  • பூரிம் பண்டிகை.

இவற்றைக் குறித்துச் சற்று விரிவாகக் காணலாம்.

அ. பஸ்கா பண்டிகையும் புளிப்பில்லாக அப்பப் பண்டிகையும் 

இஸ்ரவேல் மக்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து தாங்கள் அடைந்த விடுதலையை நினைவுகூர்ந்து கொண்டாடும் பண்டிகையே இது. பஸ்கா என்பது மரணத்திலிருந்து காப்பாற்றப்படுதல் என்று பொருள்படும் (யாத். 12:13). பஸ்கா ஆட்டின் இரத்தம் எந்தெந்த வீடுகளின் நிலைக்கால்களில் தெளிக்கப்பட்டிருந்ததோ அந்த வீடுகளின் முதற் பிறந்த அனைத்தையும் தேவன் அழிக்காமல் கடந்து சென்றார்.

ஆபீப் (நிஸான்) என்னும் மாதமே யூதர் களுடைய முதலாம் மாதம். அந்த மாதத்தில் 14 -ஆம் நாளில் பஸ்கா பண்டிகை கொண்டாடப் பட்டது (யாத்.12:2). அன்று ஒரு ஆட்டுக்குட்டி யைப் பலியாகச் செலுத்துவார்கள். அந்த ஆட்டுக்குட்டி பஸ்கா ஆட்டுக்குட்டி என்று அழைக்கப்படும். கிறிஸ்தவ விசுவாசிகள் அனுபவிக்கும் கர்த்தருடைய பந்திக்கும் பஸ்கா பண்டி கைக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. நமக்காக அடிக்கப்பட்ட பஸ்கா வாகிய கிறிஸ்து என்று 1 கொரிந்தியர் 5:7 – இல் காண்கிறோம்.கி.பி. 70-இல் எருசலேம் நகரில் இருந்த ஆலயம் அழிக்கப்பட்ட பிறகு, பஸ்கா பலி செலுத்தப்படுவது நின்று போயிற்று. ஆயினும் யூதக் குடும்பங் களில் இப்பண்டிகை இன்னும் தொடர்கிறது.

பஸ்கா பண்டிகைக்கு அடுத்த நாளிலிருந்து தொடர்ந்து ஏழு நாட்களுக்கு இஸ்ரவேல் மக்கள் புளிப்பில்லா அப்பத்தை உண்ண வேண்டும். புளிப்பு பாவத்தைக் குறிக்கிறது. பழைய புளித்த மாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டி கையை ஆசரிக்கக்கடவோம் (1 கொரி. 5:8). எந்நாளும் நாம் கடைப் பிக்க வேண்டிய பரிசுத்த வாழ்க்கை முறையை இது குறிக்கிறது.

ஆ. வாரங்களின் பண்டிகை

இஃது அறுவடையின் பண்டிகை என்றும் அழைக்கப்படுகிறது (லேவி. 23:16). முதற் கனியின் படைப்பு என்றும் இது பெயர்பெற்றது. தேசத்தின் முதற்கனிகளில் அனைத்தையும் ஒரு கூடையில் போட்டு, தேவன் தெரிந்து கொண்ட சந்நிதிக்கு அதைக் கொண்டு போய், ஆசாரியனிடத்தில் கொடுத்து அசைவாட்டவேண்டும் (உபா.26:10). இவ்வாறு அவர்கள் தேவனைத் தொழுதுகொள்ள வேண்டும்.

தாங்கள் எகிப்து நாட்டில் அடிமைகளாக இருந்ததை நினைவு கூர்ந்து, கர்த்தருடைய சமு கத்தில் அறிக்கை செய்யவேண்டும். எகிப்திலி ருந்து அவர்களை தேவன் விடுதலை செய்து, பாலும் தேனும் ஓடுகிற தேசத்திற்குக் கொண்டு வந்து, எல்லா நன்மைகளையும் கொடுத்தார் என்று சொல்லி, கர்த்தருடைய சமுகத்தில் களிகூர வேண்டும் (உபா. 26:11). அது களிகூருதலின் நாளாகும்,நன்றியறிதலின் நாளாகும்.

கர்த்தருடைய உயிர்த்தெழுதலைக் குறிக்கும் முதற்கனியாகிய கதிர்க்கட்டு அசைவாட்டப்படும் நாளிலிருந்து 50 -ஆவது நாளில் பெந்தெகொஸ்தே பண்டிகை கொண்டாடப்படும். அது வாற்கோதுமை அறுப்பின் முடிவைக் காண்பிக்கிறது. பெந்தெகொஸ்தே நாளில் சீஷர்கள் எருசலேமில் கூடினார்கள் என்பதை நாம் புதிய ஏற்பாட்டில் காண்கின்றோம் (அப். 2:1). பரிசுத்த ஆவியானவர் அவர்கள்மேல் இறங்கி னார் (அப். 2:3). அப்பொழுது யோவேலின் தீர்க்கதரிசனம் நிறை வேறுகிறதாக பேதுரு எடுத்துரைத்தார்

அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு ஆவி யானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு மொழி களிலே பேசினார்கள் (வச. 4). அவர்கள் தேவனுடைய மகத்துவங் களைப் பேசினார்கள் (வச. 11). சங்கீதத்திலிருந்து மேற்கோள்களைக் காட்டி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மரணத்தையும் உயிர்த்தெழு தலையும் குறித்து பேதுரு பேசினார். செய்தியைக் கேட்ட மக்கள் இருத யத்தில் குத்தப்பட்டவர்களாகி, தங்களுடைய பாவத்தை உணர்ந்தார் கள். பேதுரு உரைத்த வார்த்தையைச் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட வர்கள் (விசுவாசித்தவர்கள்) ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத் தினம் ஏறக்குறைய மூவாயிரம் பேர் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள் (வச.41). அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நி யோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும் (ஆராதனை), ஜெபம் பண்ணு தலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள் (அப். 2:42). அது பரிசுத்த ஆவியானவராகிய தேவனின் வல்லமையுள்ள செயலாக்கமாகும்.

இ. கூடாரப் பண்டிகை

கூடாரப் பண்டிகை ஏழு நாட்கள் ஆசரிக்கப்பட வேண்டும். முதலாம் நாளும், கடைசி நாளும் சபை கூடும் பரிசுத்த நாட்களாகும். நிலத்தின் பலன் சேர்க்கப்பட்டு, பேரீச்சின் ஓலைகளாலும் தழைத் திருக்கிற விருட்சங்களின் கிளைகளாலும் செய்யப் பட்ட கூடாரங்களில் மக்கள் குடியிருப்பார்கள் (லேவி.23:39-43).ஆசரிப்புக் கூடாரத்திலே மக்கள் சபையாகக் கூடுவார்கள். அந்த நாட்களில் ஆசரிப் புக் கூடாரம் இடம் பெயர்ந்து கொண்டுபோகக் கூடியதாக இருந்தது.

யூதருடைய ஆண்டிலே மூன்று முறை சபை கூடுதல் இருக்கும். கூடாரப் பண்டிகை அவற்றில் ஒன்றாகும். அது மகிழ்ச்சிக்குரிய கால மாகும் (உபா.16:14). ஏழு நாட்களும் கர்த்தருக்குப் பலிசெலுத்து வார்கள். தேவனே மழையைப் பொழியச் செய்கிறவராக இருக்கிறார் என்பதற்கு நன்றி செலுத்துகிற பண்டிகையாக அது விளங்கியது. இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வந்தபோது அவர்கள் வனாந்தரத்தில் கூடாரங்களில் வசித்ததை நினைவுகூரும் பண்டிகையாகவும் இது விளங்கிற்று (லேவி.23:43).

ஈ. ஓய்வுநாள் பண்டிகை

பரிசுத்த ஓய்வுநாள் மனமகிழ்ச்சியின் நாளாகும். அந்நாளில் ஏதொரு வேலையும் செய்யாமல் மக்கள் கர்த்தரில் மனமகிழ்ச்சியாக இருப்பார்கள் (ஏசா. 58:13). சிருஷ்டிப்பு ஆறு நாட்கள் நடந்தன. ஏழாம் நாளில் தேவன் ஓய்ந்திருந்தார். அன்று தேவன் தம் கிரியை யாவற் றையும் முடித்து ஓய்ந்திருந்தார். அவருக்கு இளைப்பாறுதல் தேவை யில்லை. அவர் களைப்படையவும் இல்லை. மனிதன் பின்பற்றுவதற் கென்று ஓய்வுநாள் மாதிரியாக நிறுவப்பட்டது (யாத். 20:11).தெய் வீக மாதிரியை ஏற்படுத்தி மனிதன் ஆறுநாட்களும் வேலை செய்து ஏழாம் நாளில் வேலை செய்யாது ஓய்ந்திருக்க வேண்டும் என்று தேவன் இதை ஏற்படுத்தினார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்மை ஓய்வு நாளுக்கும் ஆண்டவர் என்று வெளிப்படுத்தினார் (மாற்கு 2:28).

உ. எக்காளப் பண்டிகை (எண்.29:1)

ஏழாம் மாதம் முதலாம் நாள் இப்பண்டிகை கொண்டாடப்படும். இது பரிசுத்த சபைகூடும் நாள். அந்நாளில் ஒரு வேலையும் செய்ய லாகாது. அந்த நாளில் எக்காளம் ஊத வேண்டும். கர்த்தருக்கு தகன பலியும் செலுத்த வேண்டும். அந்நாளில் அதைக் குறித்த வேத பகுதிகள் வாசிக்கப்பட வேண்டும்.

ஊ. பாவநிவர்த்தி நாள் (யாத். 30:10)

ஏழாம் மாதம் பத்தாம் தேதியில் இது ஆசரிக்கப்படும். அது பரி சுத்த சபைகூடும் நாளாகும். இது பாவத்திற்காக பலி செலுத்தும் நாளாகும். ஆண்டிற்கு ஒரு முறை அனுசரிக்கப்படும் பாவநிவாரணபலி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பாவநிவாரணராகப் பலிசெலுத்தப்பட்ட திற்கு நிழலாக உள்ளது என்று எபிரெய நிருபத்தில் காண்கிறோம். ஆகவே விசுவாசிகள் கிறிஸ்துவின் மூலமாக தேவனுடைய கிருபா சனத்தண்டையில் சேரக்கூடியவர்களாயிருக்கின்றனர்.

எ. பூரிம் பண்டிகை

எஸ்தர் 9-ஆவது அதிகாரத்தில் இதனுடைய விளக்கம் கொடுக் கப்பட்டுள்ளது. அகாஸ்வேரு என்னும் அரசனின் காலத்தில் மொர்தெ காய் இப்பண்டிகையை நிறுவினான். பூரிம் பண்டிகை நாளை இஸ்ர வேலர் விருந்துண்டு சந்தோஷமாய்க் கொண்டாடினர். பகைஞனாகிய ஆமான் என்பவனுடைய பொல்லாங்கான திட்டங்களிலிருந்து யூதர் கள் விடுவிக்கப்பட்ட நாளை நினைவுகூர்ந்து இப்பண்டிகை கொண் டாடப்பட்டது. மெக்கபேயரால் கி. மு. 164 – இல் எருசலேமில் தேவால யம் சுத்திகரிக்கப்பட்டு மீட்கப்பட்ட நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து இப்பண்டிகை பின்னர் கொண்டாடப்பட்டது. ஒளியின் பண்டிகை என்றும் இது பெயர்பெற்றது.

Have any Question or Comment?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page