ஆதியாகமம்: தொடக்கங்களின் புத்தகம்
வாசிக்க வேண்டிய அதிகாரங்கள்: 1-4, 6-8, 12, 18, 21, 22, 25, 28, 35, 37, 39-42, 45, 46, 49, 50.
தலைப்பு
பழைய ஏற்பாடு அடிப்படையில் எபிரெய மொழியில் எழுதப்பட் டிருந்தாலும், பழைய ஏற்பாட்டு புத்தகங்கள் பலவற்றின் தலைப்புகள் கிரேக்க மொழியிலேயே அமைந்துள்ளன. அவைகள் பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிப்பதிப்பாகிய செப்துவஜிந்த் என்ற புத்தகத்தில் இருந்து வருகின்றன. இப்புத்தகம் ஏற்பாடுகளுக்கு இடையிலான காலகட்டத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. “ஆதியாகமம்” என்ற தலைப்பு “தோற்றம்” அல்லது “தொடக்கம்” என்று அர்த்தப்படுகிற கிரேக்க வார்த்தையாக உள்ளது. இந்தத் தலைப்பு, “ஆதியிலே” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள இப்புத்தகத்தின் முதல் வசனத்தில் உள்ள முதல் வார்த்தையில் இருந்து வருகிறது. இந்தத்தலைப்பு ஏற்புடையதாகவே உள்ளது, ஏனெனில் இப்புத்தகம் பல விஷயங்களின் தோற்றம் பற்றிக் கூறுகிறது.
பின்னனி
பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து புத்தகங்கள் சில வேளைகளில், “ஐந்து புத்தகங்கள்” அல்லது “ஐந்து தொகுதிகளால் ஆன புத்தகங்கள்” என்று அர்த்தப்படுகிற “பென்ட்டகூக்” என்ற கிரேக்கச் சொற்றொடரைக் கொண்டு குறிப்பிடப்படுகின்றன. நாம் பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து புத்தகங்களை “நியாயப்பிரமாணத்தின் புத்தகங்கள்” என்று அழைக்கின்றோம், ஏனெனில் மோசேயின் நியாயப்பிரமாணத்தினுடைய இருதயம் போன்ற மையப்பகுதி இங்கு காணப்படுகிறது, விசேஷமாக கடைசி நான்கு புத்தகங்களில் அது காணப்படுகிறது. இந்தப் புத்தகத்தில் அதிகமான வரலாறு, சில கவிதைகள் மற்றும் சில தீர்க்கதரிசனங்களும்கூட அடங்கியுள்ளன.
இஸ்ரவேல் மக்களை அடிமைத்தளையிலிருந்து வெளியே வழிநடத்திசென்ற மோசே, முதல் ஐந்து புத்தகங்களின் எழுத்தாளராக இருக்கின்றார். ஆதியாகமம் என்ற புத்தகம் எப்போது எழுதப்பட்டது என்று மிகச்சரியாக நாம் அறிவதில்லை, ஆனால் இது அனேகமாக, இஸ்ரவேல் மக்கள் வனாந்தரத்தில் அலைந்து திரிந்து கொண்டிருந்த வேளையின்போது எழுதப்பட்டிருக்கலாம். இஸ்ரவேல் மக்கள் சீனாய் மலையின் அருகில் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் செலவிட்டிருந்ததால், அக்காலகட்டத்தில் ஒரு வேளை ஆதியாகமம் எழுதப்பட்டிருக்கலாம்.
ஆதியாகமம் என்பது நியாயப்பிரமாணப் புத்தகங்களில் விசேஷித்த புத்தக மாக உள்ளது, ஏனெனில் இது யூதமக்களுக்குத் தரப்பட்டிருந்த விசேஷித்த பிர மாணங்கள் எதையும் கொண்டிருப்பதில்லை. பழைய ஏற்பாடு, இஸ்ரவேலர் அல்லது யூதர்கள் என்ற ஒரு மக்களினத்திற்கு மாத்திரம் எழுதப்பட்டது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பழைய ஏற்பாடு எழுதப்படுவதற்கு முன்பு, எழுதப்பட்ட பிரமாணம் எதையும் தேவன் கொடுத்திருக்கவில்லை. அவர் மனித குலத்துடன் மிகவும் நேரடியாக, “முற்பிதாக்கள்” என்று அழைக்கப்பட்ட குடும்பங்களின் தலைவர்கள் மூலமாகச் செயல்பட்டார். தேவன் இஸ்ரவேலின் இனத்தைப் பிரித்து அவர்களுக்கு நியாயப்பிரமாணத்தைக் கொடுப்பதற்கு முற்பட்ட காலகட்டத்தைப் பற்றி ஆதியாகமம் கூறுகிறது.
பழைய ஏற்பாடு யூதர்களுக்காக எழுதப்பட்டது மற்றும் ஆதியாகமம் நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முந்திய காலகட்டத்தில் நடந்தவற்றைப் பற்றியது என்றால், பழைய ஏற்பாட்டில் ஆதியாகமம் இடம் பெற்றுள்ளது ஏன்? ஆதியாகமம் பழைய ஏற்பாட்டிற்கு ஒரு முன்னுரையாகப் பயன்படுகிறது. இது யூதர்களுக்கு அவர்களின் பின்னணியைப் பற்றியும் அவர்கள் எவ்வாறு தேவனு டைய விசேஷித்த மக்களானார்கள் என்பதை பற்றியும் கூறிற்று. ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு ஆகியோருக்குத் தரப்பட்டிருந்த வாக்குத்தத்தங்கள் யூதர்களுக்கு விசேஷித்த தனிச்சிறப்புடையவைகளாயிருந்தன.
ஆதியாகமம் நமக்கும் விசேஷித்த தனிச்சிறப்பைக் கொண்டுள்ளது, ஏனென்றால் அது நமக்குத் தொடர்புடைய பல விஷயங்களின் தோற்றம் பற்றிக் கூறுகிறது: அது மனிதகுலத்தின் தோற்றம், திருமணம் மற்றும் இல்லம் ஆகியவற்றின் தோற்றம், இயேசு கிறிஸ்துவில் உச்சம் பெற்று முடித்துவைக்கப்பட்ட தேவனுடைய திட்டத்தின் தோற்றம் ஆகியவற்றை எடுத்துரைக்கிறது.
ஆதியாகமம் ஒரு அறிமுகப் புத்தகமாய் இருப்பதால், அது பல வருடங்களை ஒரு குறுகிய இடைவெளியில் கூறிமுடிக்கிறது. ஆதியாகமத்தின் ஐம்பது அதிகாரங்கள் 2,000க்கும் மேற்பட்ட வருடங்களில் நடந்தவற்றைப் பற்றிக் கூறிமுடிக்கின்றன, அதே வேளையில் பழைய ஏற்பாட்டின் எஞ்சிய பகுதியானது 1,500க்கும் சற்றுக்குறைவான வருடங்களில் நடந்தவற்றைப் பற்றிக் கூறிமுடிக்கின்றன. வம்சவழி அட்டவணைகள், பரம்பரை வரிசையில் ஒவ்வொரு நபரையும் உள்ளடக்குதலைவிட பரம்பரை வரிசையைப் பற்றி அதிக அக்கறை செலுத்துவதாய் இருப்பதால், ஆதியாகமத்தின் தொடக்கத்தினு டைய காலக்குறிப்பு பற்றி நாம் முற்றிலும் சரியாகக் கணித்தறிய இயலாது. இருப்பினும், வேதாகமம் மனிதனின் தோற்றம் பற்றிச் சில அறிவியல் அறிஞர்கள் சித்தரிப்பதுபோல் பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டது என்று கூறுவதற்கு மாறாக, அவனது தோற்றத்தைச் சார்புநிலையில் சமீபத்தில் ஏற்பட்டதாகச் சித்தரிக்கிறது. இந்தப் புத்தகம் யோசேப்பின் மரணத்துடன் முடிவடைகிறது.
வரைகுறிப்பு
- உலகத்தின் தொடக்கம் (1:1-2:3).
II மனிதனின் தொடக்கம் (2:4-25),
III. பாவத்தின் தொடக்கம் (3:1-13).
- A. கீழ்ப்படியாமையின் தொடக்கம்.
- B. மரணத்தின் தொடக்கம்.
- மனிதனை மீட்பதற்குத் தேவனுடைய திட்டத்தின் தொடக்கம் (3:14- 5:32).
- A. பலியின் தொடக்கம்.
- B. கொலையின் தொடக்கம்.
- C. கைத்தொழில் மற்றும் வணிகம் ஆகியவற்றின் தொடக்கம்.
- மீண்டும் தொடக்கம் (6-11),
- A. வெள்ளப் பெருக்கிற்குப் பின்பு புதிய தொடக்கம்.
- B. மக்கள் இனங்களின் தொடக்கம்.
VI ஆபிரகாமுடன் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் தொடக்கம் (12-50).
- A. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு மற்றும் யோசேப்பு ஆகியோரின் வரலாறுகள்.
- B. இஸ்ரவேல் மக்களினத்தின் தொடக்கம்.
ஆதியாகமத்தில் இருந்து பாடங்கள்
ஆதியாகமம் என்ற புத்தகம், நாம் தாழ்ந்த நிலையிலான விலங்குகளின் வடிவிலிருந்து பரிணாமமடையவில்லை என்பதை நமக்குக் கூறுகிறது. நாம் தேவனுடைய சாயலாக உருவாக்கப்பட்டோம் – நாம் அதற்கேற்ப செயல்பட வேண்டும்!
ஆதியாகமத்தின் தொடக்க அதிகாரங்கள், வாழ்க்கைக்கு ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்குமான திருமணத்தைத் தேவன் எவ்வாறு ஏற்படுத்தினார் என்று கூறுகின்றன. வேதாகமத்தின் எஞ்சிய பகுதியில் திருமணம் பற்றிக் கலந்துரையாடப்படும்போது, இந்த அதிகாரங்கள் குறிப்புக்கான கருத்துக்களாக இருக்கின்றன (மத்தேயு 19:3-9).
மனிதன் பாவம் செய்தபோது, மனிதனின் மீட்புக்கென்று ஒரு திட்டத்தைத் தேவன் உடனடியாகச் செயல்படுத்தத் தொடங்கினார் (ஆதியாகமம் 3:15). பழைய ஏற்பாட்டின் எஞ்சியபகுதியானது, தேவன் இந்தத் திட்டத்தை எவ்வாறு செயல்படுத்தினார் என்பதைப் பற்றிய வரலாறாக உள்ளது. இயேசுவில் நிறைவேற்றம் அடைந்ததான, ஆபிரகாமுக்கு தரப்பட்ட “சந்ததி” பற்றிய வாக்குத்தத்தம் இந்தத் திட்டத்தின் முக்கியமான படிநிலைகளில் ஒன்றாக உள்ளது (ஆதியாகமம் 22:18; இவற்றுடன் கலாத்தியர் 3:16, 19).
இறுதியான சோதனை (ஆதியாகமம் 22:1-19) ஆதியாகமம் பற்றிய இந்தப் படிப்பானது வேதாகமத்தில் ஒரு வருடப் பயணம் என்பதைத் தொடங்கி வைக்கிறது. நீங்கள் உங்கள் ஆவிக்குரிய ஓட்டக் காலணியைக் கொண்டிருப்பீர்கள் என்று நான் நம்புகின்றேன், ஏனென்றால் இது நமது விரைவான பயணமாய் இருக்கப்போகிறது.
ஒருமுறை ஒரு மனிதர் தமது மகனை, அவர் வளர்ந்த இடத்திற்கு அழைத்துச் சென்றார். அவர் செய்தவற்றை எடுத்துக்கூறி அவர் அவற்றைச் செய்த இடங்களையும் காண்பித்தார். அவர் தமது மகனுக்கு அவரது வேர்களைப் பற்றிக் கூறினார். ஆதியாகமம் யாவும் வேர்களைப் பற்றியதாயிருக்கிறது.
“ஆதியாகமம்” (“Genesis”) என்பது, “தோற்றங்கள்” அல்லது “தொடக்கங்கள்” என்று அர்த்தப்படுகிறது; இப்புத்தகம் பலவிஷயங்களின் தொடக்கம் பற்றிக் கூறுகிறது. ஆபிரகாமுக்குத் தரப்பட்டதான சந்ததி பற்றிய வாக்குத்தத்தம் போன்று அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக வேறெதுவும் இருப்பதில்லை மற்றும் ஆபிரகாம் போன்று இப்புத்தகத்தின் மையமாக வேறெவரும் இருப்பதில்லை. உலகம் முழுவதும் புறதெய்வ வணக்கத்திற்குச் சென்றிருந்த வேளையில், அவர் இன்னமும் யெகோவா என்ற உண்மையான ஒரே தேவன்மீது நம்பிக்கையாய் இருந்தார்.
ஆபிரகாமின் வாழ்வில் இறுதியான சோதனையை நாம் உற்று நோக்குவோம். ஆபிரகாமின் விசுவாசம் அதற்கு முன்னதாகவும் சோதிக்கப்பட்டிருந்தது, ஆனால் 22ம் அதிகாரத்தில் உள்ளது போன்ற சோதனை வேறெதுவும் இல்லை. 17:19 மற்றும் 21:1-3, 12 மற்றும் அதன்பின்பு 22ம் அதிகாரம் ஆகியவற்றைக் கண்ணோக்கவும்.
- ஆபிரகாமுக்கு இறுதியான சோதனை.
- A. தேவன் ஆபிரகாமைச் சோதித்தார் (22:1-19).
- 1. இறுதியான நிபந்தனை/செயல்தேவை (வசனங்கள் 1, 2).
- a பல ஆண்டுகளாக ஆபிரகாம் தேவனிடத்தில் இருந்து எந்த வார்த்தையையும் கேள்வியுறாதிருந்தார். “நல்லது செய்தாய்!” என்று தேவன் தம்மிடம் கூறும்படி அவர் எதிர்பார்த்திருக்கலாம்.
- b. இந்தக் கட்டளை அனேகமாக அவர் எதிர்பார்த்த கடைசி விஷயமாக இருக்கும்.
- 2. இறுதியான பதில்செயல் (வசனங்கள் 3-10).
- a ஆபிரகாம் தேவனிடத்தில் வாக்குவாதம் செய்திருக்கலாம். அவர் மாற்றுச் செயல்களை ஆலோசனையாகக் கூறியிருக்கலாம். அவர் தனது தயாரிப்புப் பணிகளை நீளச் செய்திருக்கலாம். ஆனால் இவற்றிற்குப் பதிலாக, அவர் தேவனுடைய சித்தத்தின்படி செய்வதற்கு “அதி காலையில் எழுந்தார்.”
- b, 5ம் வசனத்தில் உள்ள விசுவாசத்தைக் கவனியுங்கள்: “நானும் பிள்ளையாண்டானும் அவ்விடமட்டும் போய், தொழுது கொண்டு, உங்களிடத்துக்குத் திரும்பி வருவோம்.” 8ம் வசனம், “தேவன்… பார்த்துக் கொள்வார்” என்று கூறுகிறது.
- c. 120 வயதான ஒரு மனிதர், மிகவும் இளையவனான பையனை மற்றும் அனேகமாக மிகவும் பெலசாலியானவனை எவ்வாறு கட்ட முடிந்தது? அவர் தமது மகனைச் சரியான வகையில் வளர்த்திருந்தார்!
- 3. இறுதியான வெகுமதி (வசனங்கள் 11-19).
- a. ஆபிரகாம் தனக்கு நேர்ந்த சோதனையைச் சந்தித்தார். இந்த நிகழ்ச்சி, ஆபிரகாமின் விசுவாசத்திற்கு மாபெரும் உதாரணமாகப் பயன்படுத்தப்படுகிறது (ரோமர் 4:1-22; யாக்கோபு 2:21-23).
- (1) தேவனைத் தவிர வேறு எவரும்/எதுவும் ஆபிரகாமுக்கு அதிக முக்கியத்துவமாயிருக்க வில்லை!
- (2) தேவனுக்குக் கீழ்ப்படிவதைக் காட்டிலும் வேறு எதுவும் இவ்வுலகில் நமக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளதா? வேலை, ஆரோக்கியம், குடும்பம், உடைமைகள், திட்டங்கள் மற்றும் கனவுகள்?
- b. தேவன் பார்த்துக்கொண்டார்.
- C. தேவன் தமது உடன்படிக்கையை உறுதிப்படுத்தினார். “சந்ததி” பற்றி வாக்குத்தத்தம் தரப்பட்டிருந்தது (வசனம் 18) மற்றும் அது கிறிஸ்துவில் நிறைவேற்றப்பட்டிருந்தது (கலாத்தியர் 3:16),
- 1. இறுதியான நிபந்தனை/செயல்தேவை (வசனங்கள் 1, 2).
- B. ஆபிரகாம் சோதனையை எவ்வாறு சந்தித்தார் (எபிரெயர் 11:17- 19).
- 1. அவர் விசுவாசத்தினால் சோதனையைச் சந்தித்தார் (எபிரெயர் 11:17).
- a எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளும் ஒரு தேவனில் அவர் விசுவாசம் கொண்டார் (ஆதியாகமம் 22:8, 15).
- b. மாபெரும் திறன்களைக் கொண்ட ஒரு தேவனில் அவர் விசுவாசம் கொண்டார் (எபிரெயர் 11:19).
- 2. ஆபிரகாம் எல்லாவற்றையும் நேர்த்தியாகக் கணக்கிட்டிருக்க வில்லை. தேவன் ஈசாக்கை மரித்தோரில் இருந்து எழுப்ப வில்லை (எபிரெயர் 11:19); தேவன் ஒரு ஆட்டுக்குட்டியைத் தரவில்லை (ஆதியாகமம் 22:8), ஆனால் அதற்கு மாறாக அவர் ஒரு ஆட்டுக்கடாவைத் தந்தார். ஆபிரகாம், தேவன் எல்லாவற் றையும் நன்மைக்கேதுவாகச் செய்வார் என்ற விசுவாசத்தைக் கொண்டிருந்தார்- அவ்வாறே செய்யப்பட்டது!
- 1. அவர் விசுவாசத்தினால் சோதனையைச் சந்தித்தார் (எபிரெயர் 11:17).
- நமக்கு இறுதியான சோதனை.
- A. நாம் யாவருமே நமது வாழ்வில் சோதனைகளை எதிர்கொள்ளு கின்றோம், ஆனால் சில வேளைகளில் நாம் இறுதியான சோதனை களைச் சந்திக்கலாம், அதாவது, நாம் மிகவும் மதிக்கின்ற சிலவற்றை விட்டுவிடும்படி கேட்டுக்கொள்ளப்படலாம்.
- 1. கோர்ரீ டென் பூம் என்பவர், “விலைமதிப்பானவற்றை நான் தளர்வாகப் பிடித்திருக்க முயற்சி செய்கின்றேன், ஏனெனில் அவைகளை எடுத்துக்கொள்ள தேவன் எனது விரல்களைபிரிக்கும் போது [நான் அவற்றை இறுக்கமாய் பற்றியிருந்தால் எனக்கு வேதனையாய் இருக்கும்” என்று கூறினார்.
- 2. நம்மைச் சந்தோஷமான, வசதிநிறைந்த மக்களாக ஆக்க வேண்டும் என்பது தேவனுடைய நோக்கமாயிருப்பதில்லை; நம்மை மேன்மையான மக்களாக்க வேண்டும் என்பதுதான் தேவனுடைய நோக்கமாயிருக்கிறது.
- B. இறுதியான சோதனையினூடே நாம் கடந்து செல்லும்போது, தேவனால் எல்லாம் கூடும் என்று நம்மால் விசுவாசிக்க முடியுமா? தேவன் பார்த்துக்கொள்வார் என்று நாம் விசுவாசிக்க முடியுமா? தேவன் எல்லாவற்றையும் நன்மைக்கேதுவாக வாய்க்கச் செய்வார் என்று நம்மால் விசுவாசிக்க முடியுமா (ரோமர் 8:28)? “ஆம்” என்பதே பதிலாக உள்ளது!
முடிவுரை
நீங்கள் இப்போது இறுதியான சோதனையினூடே கடந்து கொண்டி ருக்கலாம். தேவன் உங்களுடன் இருப்பாராக. நீங்கள் ஒரு மேன்மை யான நபராகுவீர்கள் … அல்லது ஒரு கசப்பான நபராகுவீர்கள். ஆபிரகாம் கொண்டிருந்த விசுவாசத்தை நீங்களும் காத்துக்கொள்ளப் பிரயாசப்படுங்கள். அவர் பார்த்துக்கொள்ளுவார் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.