யாத்திராகமம் ஆய்வு

யாத்திராகமம்: புறப்பட்டு செல்லுதலின் புத்தகம்

வாசிக்க வேண்டிய அதிகாரங்கள்: 1-5, 7-14, 16, 19, 20, 24, 25, 27, 28, 30, 32, 34, 35, 40.

தலைப்பு

“யாத்திராகமம்” என்ற தலைப்பு, “வெளிச்செல்லுதல்” அல்லது “புறப்பட்டுச் செல்லுதல்” என்று அர்த்தப்படும் கிரேக்க வார்த்தையாக உள்ளது. இது “வெளியே” என்று அர்த்தப்படும் கிரேக்க முன்னிடைச் சொல்லான ek மற்றும் “சாலை” அல்லது “வழி” (இயேசு, “நானே வழி” என்று கூறியபோது பயன்படுத் திய சொல்) என்பதற்கான கிரேக்கச் சொல்லான hodos ஆகியவை இணைந்த கூட்டு வார்த்தையாக உள்ளது. நேரடியான அர்த்தத்தில் இவ்வார்த்தை “வெளியே செல்லும் வழி” என்று பொருள்படுகிறது. இது “exit” என்ற நமது ஆங்கில வார்த்தைக்குத் தொடர்புடையதாகும்.

இப்புத்தகத்தின் தலைப்பு, இஸ்ரவேல் மக்கள் எகிப்தில் இருந்து வெளியேறி யெகோவாவுடன் ஒரு விசேஷித்த உறவை நிலைநாட்டியதைக் குறிக்கிறது.

பின்னணி

ஆதியாகமம் விட்ட இடத்தில் இருந்து யாத்திராகமம் தொடருகிறது. மோசே இதன் எழுத்தாளராயிருக்கின்றார். இந்தப் புத்தகம் தேவன் தமது வலியுறுத்தத்தை தனிநபர்களில் இருந்து இஸ்ரவேல் மக்களினம் என்ற ஒரு மக்களினத்திற்கு மாற்றிக்கொண்டதை வெளிப்படுத்துகிறது.

யோசேப்பை அறியாத ஒரு பார்வோன் அதிகாரத்திற்கு வந்தான், அவன் இஸ்ரவேல் மக்களை அடிமைகளாக்கினான். தேவன் மோசேயை ஒரு விடுவிப்பாளராக எழுப்பினார். யாத்திராகமத்தில் தேவன் மோசேயை அழைத்து, அவர் பார்வோனை எதிர்த்து நின்றது, மற்றும் பத்து வாதைகள் முதலியவை பற்றிய மனங்கவரும் வரலாறுகள் அடங்கியுள்ளன. கடைசியில் மோசே இஸ்ரவேல் மக்களை எகிப்தில் இருந்து வெளியே அழைத்துச் சென்று, செங்கடலைக் கடந்து, வனாந்தரத்திற்குள் சென்று, சீனாய் தீபகற்பம் மற்றும் சீனாய் மலைக்குச் சென்று, அங்கு பத்து கற்பனைகளும் அவை தொடர்பான நியாயப்பிரமாணமும் கொடுக்கப்பட்டது எவ்வாறு என்றும் இப்புத்தகம் நமக்குக் கூறுகிறது. ஆராதிக்க ஆசரிப்புக்கூடாரம் என்ற விசேஷித்த இடம் ஒன்று கட்டப்பட்டது. இப்புத்தகத்தின் முடிவில், மக்கள் இன்னமும் சீனாய் மலையின் அடிவாரத்திலேயே இருந்தனர்.

தொடர்ச்சிக்காக, நாம் இப்புத்தகத்தின் தலைப்பில் இருந்து “செல்லுதல்” என்ற கருத்தை எடுத்து நமது வரைகுறிப்பின் பிரதானக் கருத்துக்களுக்குப் பயன்படுத்துவோம்.

வரைகுறிப்பு

1 வெளியே செல்லுதல்: விடுதலை. 

 • A. அடிமைகளாக எபிரெய மக்கள் (1).
 • B. மோசே பார்வோனின் அரண்மனைக்கு எடுத்துச் செல்லப்படுதல் (2).
 • C. விடுதலை (3-14).
 • D. விடுதலைப் பாடல் (15:1-22அ).

II முன்னோக்கிச் செல்லுதல்: பயணம் செய்தல்.

 • A. வனாந்தரத்தில் பயணம் செய்தல் (15:22ஆ-18:27). 
 • B. சீனாய் மலையை அடைதல் (19:1, 2).

III. தேவனுடன் செல்லுதல்: உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ளுதல். 

 • A. தேவனுக்கும் இஸ்ரவேல் மக்களுக்கும் இடையில் ஒரு உடன் படிக்கை ஏற்படுத்தப்பட்டது (19:3-25; 3-6 வசனங்கள் திறவு கோல் வசனங்களாக உள்ளன).
 • B. பத்துக்கட்டளைகள் (20:1-17). 
 • C. தொடர்புடைய நியாயப்பிரமாணங்கள் (20:18-23:19).
 • D உடன்படிக்கை விரிவாக்கப்பட்டது (23:20-24:11).
 • 1. தேவடைய பகுதி: “நான் உங்களை ஆசீர்வதிப்பேன்.”
 • 2. இஸ்ரவேல் மக்களுடைய பகுதி: “நாங்கள் உமக்குக் கீழ்ப்படிவோம்.”

IV தேவனிடம் செல்லுதல்: ஆராதனை – ஆசரிப்புக்கூடாரம். 

 • A. சீனாய் மலையில் மோசே நாற்பது நாட்கள் இரவும் பகலும் இருத்தல் (24:12-18).
 • B. ஆசரிப்புக்கூடாரம் பற்றிய அறிவுறுத்தல் (25:1-31:11). 
 • C. கடைசி அறிவுறுத்தல்கள் (31:12-18).

V தேவனை விட்டு விலகிச் செல்லுதல்: பொன் கன்றுக்குட்டி (32).

 1. தேவனிடம் மீண்டும் திரும்பிச் செல்லுதல்: மனந்திரும்புதலும் ஆசரிப்புக்கூடாரம் கட்டப்படுதலும். 
 • A. தேவனுடைய எச்சரிக்கை; மனந்திரும்புதல் (33:1-11).
 • B. நியாயப்பிரமாணத்தை இரண்டாம் முறையாகப் பெறுவதற்காக மோசே மலைக்குத் திரும்பிச் செல்லுதல் (33:12-34:35); உடன் படிக்கை புதுப்பிக்கப்படுதல் (34:10லிருந்து.). 
 • C. ஆசரிப்புக்கூடாரம் கட்டப்படுதல் (35-39).
 • D. ஆசரிப்புக்கூடாரம் எழுப்பப்பட்டு ஆராதனை தொடங்குதல் (40; இவற்றுடன் 33:7-11).

யாத்திராகமத்தில் இருந்து பாடங்கள்

மோசே தாம் செய்யும்படி தம்மிடத்தில் தேவன் கேட்டிருந்ததைத் தம்மால் செய்ய முடியும் என்று நினைக்கவில்லை, ஆனால் தேவன் எவரொருவரும் செய்ய முடியாத ஒன்றைச் செய்யும்படி யாரிடத்திலும் கேட்பதில்லை. மோசே அந்த வேலையைச் செய்வதற்குத் தேவையான எல்லாவற்றையும் அவருக்குத் தேவன் தந்தருளியிருந்தார். நமக்குத் தேவை யானவற்றையும் – நாம் தேவனு டைய பணிக்கு நம்மையே அர்ப்பணித்திருக்கும் வரையில் – தேவன் நமக்கும் தந்தருளுவார்.

தேவன் இஸ்ரவேல் மக்களுடன் ஒரு உடன்படிக்கையை (பரிசுத்தமான ஒப்பந்தத்தை) ஏற்படுத்தி இருந்தார். இஸ்ரவேல் மக்கள் தேவனுக்குக் கீழ்ப்படியத் தங்களையே உறுதியாய் ஒப்புக்கொடுத்திருந்தனர். அதைத் தேவன் இலேசானதாக எடுத்துக்கொள்ளவில்லை. நாம் ஞானஸ்நானம் பெறும்போது. நம்முடன் தேவன் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்ளுகின்றார். அவர் நம்மை ஆசீர்வதிக்கத் தாமே உறுதி எடுத்துக் கொள்கின்றார், நாம் நமது வாழ்வின் எஞ்சிய காலம் முழுவதும் அவருக்குக் கீழ்ப்படிந்திருப்போம் என்று நமக்கு நாமே உறுதி எடுத்துக்கொள்கின்றோம். நமது உறுதிப்பாட்டினை நாம் மும்முரமானதாய் எடுத்துக் கொள்ள வேண்டும். தேவனுடைய பிள்ளையாய் இருக்கிற ஒருவர் தேவனுடைய புத்தகத்தில் இருந்து “கிறுக்கிப்போடப்பட” முடியும் (32:32, 33).

பத்துக்கட்டளைகளுக்குப் பின்பு நியாயப்பிரமாணத்தின் எஞ்சிய பகுதி யானது, அடிப்படையில் அந்தப் பத்தின் விரிவாக்கமாக உள்ளன. 21:22, 24; 22:16, 17, 25, 26, 27; 23:2, 4, 8 ஆகியவற்றில் ஆர்வத்திற்குரிய பிரமாணங்கள் உள்ளடங்கி இருக்கின்றன.

ஆசரிப்புக்கூடாரம் கட்டுதல் பற்றி மிக விவரமாக அறிவுறுத்துதல்களைத் தேவன் கொடுத்தார். ஆராதனை என்பது தேவனைப் பொறுத்த மட்டில் ஒரு மும்முரமான விஷயமாக உள்ளது. இஸ்ரவேல் மக்கள் தாங்கள் விரும்பியபடி ஆசரிப்புக்கூடாரத்தை ஏற்படுத்த இயலாதிருந்தது. (25:9, 40; 39:32; எபிரெயர் 8:5; ஆகியவற்றைக் கவனிக்கவும்.)

யாத்திராகமம் கிறிஸ்துவின் பல “வகைகளை” அல்லது சித்தரிப்புக்களைக் கொண்டுள்ளது: பஸ்கா ஆட்டுக்குட்டி (யோவான் 19:36), வானத்திலிருந்து மன்னா (யோவான் 6:33), தண்ணீர் கொடுத்த கன்மலை (1 கொரிந்தியர் 10:4), முதலியன.

எகிப்தில் உடன்பாடு (யாத்திராகமம் 7-10)

பார்வோனுக்கும் மோசேக்கும் இடையில் நடந்த இழுபறிப் போராட்டம், மனவிருப்பங்களின் மோதல் என்பதை எந்த வரலாறு அல்லது கதையில் கண்டறிதல் என்பது கடினமானதாக உள்ளது. அது ஒரு நீண்ட, இழுபறியான போராட்டமாக இருந்தது.

மோசேக்கும் பார்வோனுக்கும் இடையில் ஏற்பட்ட முதல் மோதல்/ எதிர்த்து நிற்குதல் என்பது, மோசே, “ ‘வனாந்தரத்தில் எனக்கு ஆராதனை செய்ய என் ஜனங்களை அனுப்பிவிடவேண்டும் என்று சொல்லும்படி’ எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர் என்னை உம்மிடத்திற்கு அனுப்பினார்” என்று கூறுகையில் (யாத்திராகமம் 7:16), அந்த எதிர்த்து நிற்குதல் பற்றிக்கொள்ளக்கூடியதாக இருந்திருக்க வேண்டும்.

இந்தக் காலகட்டத்தில், வாதைகளின் நாடகத்துவமான வரிசைத் தொடர் நடைபெற்றது. பார்வோன் மற்றும் மோசே ஆகியோரின் மனவிருப்பங்களுக்கு இடையிலான மோதலை அல்லது மிகச்சரியாகச் சொல்வதென்றால், பார்வோ னுக்கும் தேவனுக்கும் இடையில் நடைபெற்ற மோதலைப் பார்வையில் இருந்து தவறவிடுதல் என்பது சுலபமானதாக உள்ளது.

பார்வோனின் பொருளாதார பலம் அவனது அடிமைகளின் அடிப்படையில் அமைந்திருந்தது; எனவே அவனால் அவர்களைப் போகும்படி அனுமதிக்கக் கூடாதிருந்தது. இஸ்ரவேல் மக்களைப் பிடித்துவைத்துக் கொள்வதற்கு அவன் பயன்படுத்திய வழிமுறைகள் யாவை? உடன்பாடு. அவனுடைய உடன்பாடுகள் மேம்போக்காகப் பார்த்தால் ஒன்றுமறியாதவைபோல் ஒலித்தன, ஆனால் அப்படிப்பட்ட உடன்பாடுகள், மோசே – மற்றும் தேவன் -நிறைவேற்றும்படி விரும்பிய விஷயங்களின் இருதயத்தையும் ஆன்மாவையும் அழித்துவிடுவதாயிருக்கும்.

உடன்பாடுகள் இன்றைய நாட்களிலும் நம்மை அச்சுறுத்துகின்றன. முற்றிலும் மோசமான கீழ்ப்படியாமைக்கு நம்மைத் தூண்டுவது பற்றிச் சாத்தான் அதிகமாய்க் கவலைப்படுவதில்லை; நம்மை உடன்பாடுகள் செய்துகொள்ளும்படிச் செய்ய அவன் முயற்சி செய்கின்றான். சில வழிகளில், உடன்பாடு அவனுக்கு மேன்மையானதாகப் பொருந்துகிறது, ஏனெனில் அது மனச்சாட்சியை அதிகம் வஞ்சிப்பதாக உள்ளது மற்றும் அது கிறிஸ்துவின் ஊழியத்திற்கு அதிக சேதம் விளைவிக்கவும் முடியும்.

பார்வோன் மோசேயிடம் முன்வைத்த நான்கு உடன்பாடுகளைக் கவனிப்போம்:

I “தேசத்திலேதான் பலியிடுங்கள்” (8:25). 

 • A. உடன்பாடு:
 • 1. “இங்கு எகிப்தில் இன்னொரு கடவுளைச் சேர்த்துக்கொள்வது பற்றி எங்களுக்குக் கவலையில்லை (மற்றும் நாங்கள் உங்கள்மீது எங்கள் கண்களை வைத்திருக்க முடியும்).”
 •  2. இன்றைய நாட்களில்: “ஆராதனையும் நன்மை செய்தலும் முக்கியமான விஷயங்கள் – மற்றும் அவற்றை நாம் எவ்விடத்தில் செய்கின்றோம் என்பது முக்கியமற்றது.” 
 • B. மோசேயின் பதில்: 8:26, 27.
 • 1. “நாங்கள் அதை இங்கு செய்ய முடியாது. அது தேவனுக்கு அருவருப்பானதாயிருக்கும்.”
 • 2. “எங்கு” என்பது ஒரு வேறுபாட்டை ஏற்படுத்துகிறது. சபை என்பது தேவனுடைய இரத்தத்தைக் கொண்டு விலைக்கு வாங்கப்பட்ட நிறுவனமாக உள்ளது (நடபடிகள் 20:28; எபேசியர் 1:22, 23: 2:16; 3:10). வெளியே வருதல் என்பது அறைகூவலாக உள்ளது: ” ‘ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய்,’ ‘அசுத்த மானதைத் தொடாதிருங்கள்; என்று கர்த்தர் சொல்லுகிறார். அப்பொழுது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், …” (2 கொரிந்தியர் 6:17, 18).
 1. “அதிக தூரமாய்ப் போக வேண்டாம்” (8:28).
 • A. உடன்பாடு:
 • 1. “நான் உங்கள்மீது கண் வைத்து இருக்கும் இடத்திலேயே மற்றும் நீங்கள் என்பிடிக்குள் இருக்கும் இடத்திலேயே தங்கியிருங்கள்.”
 • 2. இன்றைய நாட்களில்: “மதத்தைப் பற்றிப் பைத்தியம் பிடித்துத் திரிய வேண்டாம்!” 
 • B. நாங்கள் கர்த்தருடன் “வழி முழுவதிலும்” போக வேண்டியது அவசியமாய் இருக்கிறது!
 • 1. உபதேசத்தில் “வழி முழுவதிலும்,” கிறிஸ்தவ வாழ்வில் “வழி முழுவதிலும்.”
 • 2. மோசே பார்வோனின் பிரசன்னத்தை விட்டுச் உடன்பாடு இல்லை!

III. “பிள்ளைகளை இங்கேயே விட்டுச் செல்லுங்கள்” (10:8-11), 

 • A. உடன்பாடு: “ஆண்கள் மாத்திரம்” செல்ல முடியும்.
 • 1. பார்வோனின் புத்திசாலித்தனமான வேண்டுகோள்: “நீங்கள் இதைச் செய்தால், நீங்கள் வெகுதூரம் செல்லமாட்டீர்கள்; நீங்கள் அனேகமாகத் திரும்பி வந்துவிடுவீர்கள்; மற்றும் நீங்கள் திரும்பி வராதிருந்தாலும், நீங்கள் இறக்கும்போது இந்த இயக்கம் அழிந்துபோய்விடும்.”
 • 2. இன்றைய நாட்களில்: “தேவபக்தியாய் இருங்கள், ஆனால் உங்கள் தேவபக்தியை உங்களுடைய பிள்ளைகளிடம் வற்புறுத்தாதீர்கள்.”
 • B. இந்தப் பகுதியில் உடன்பாடு எதுவும் இருக்க முடியாது!
 • 1. மோசே (அனேகமாக பார்வோனின் முகத்தில் ஒரு சினக் குறிப்புடன்) துரத்தப்பட்டார்.
 • 2. பெற்றோர்கள் என்ற வகையில் நமக்குத் தேவன் உதவு கின்றார்: ஆவிக்குரிய சூழ்நிலையைக் கொடுப்பதற்கு, உண்மை யான மதிப்பீடுகளைப் போதிப்பதற்கு, நமது பிள்ளைகளுக்கு முன்பாக கிறிஸ்தவ வாழ்வை வாழ்வதற்கு. அவர்கள் இதை விரும்பாதபோது, அவர்களுக்குள் ஒரு விருப்பத்தை உருவாக்கு வதற்குத் தேவன் நமக்கு உதவுகின்றார்!
 1. “ஆட்டு மந்தைகளையும் மாட்டு மந்தைகளையும் விட்டுச் செல்லுங்கள்” (10:24).
 • A. உடன்பாடு:
 • 1. “இவ்விதமாய் நீங்கள் பலிசெலுத்தக் கூடாது போகும்; உங்க ளுக்கு உணவு இராது, எனவே நீங்கள் திரும்பி வருவீர்கள்.”
 • 2.இன்றைய நாட்களில்: “வேலை செய்வதற்கான வழிகளை (பணம், திறமைகள், காலம்) விட்டுச் செல்லுங்கள். அவற்றில் ஈடுபாடு கொள்ளாதிருங்கள்.”
 •  B. உடன்பாடு ஏற்படுத்திக்கொள்ளாத ஆவிக்கு மாபெரும் செயல்:10:25, 26.

முடிவுரை

 1. இஸ்ரவேல் மக்கள், பார்வோனின் நிபந்தனைகளின்படியல்ல, ஆனால் தேவனுடைய நிபந்தனைகளின்படியே எகிப்தை விட்டுப் புறப்பட்டுச் சென்றனர்.
 1. அவர்கள் மிருகங்களைப் பலிசெலுத்தினர்: நாம் நமது வாழ்வைப் பலியாகச் செலுத்த வேண்டியுள்ளது. ரோமர் 12:1,2 பின்வரு மாறு கூறுகிறது, “அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.”

Leave a Reply