லேவியராகமம் ஆய்வு

லேவியராகமம்: ஆசாரியர்களின் கைப்புத்தகம்

வாசிக்க வேண்டிய அதிகாரங்கள்: 1-5, 8-14, 16, 17, 19, 22, 23, 25, 26.

தலைப்பு

“லேவியராகமம்” என்பது “லேவியருக்கு உரியது” என்று அர்த்தப்படுகிறது. லேவியர்கள் என்போர், யாக்கோபினுடைய பன்னிரெண்டு மகன்களில் ஒருவரான, லேவியின் வழித்தோன்றல்களாக இருந்தனர். லேவியின் சந்ததி யார்கள் “ஆசாரியத்துவக் கோத்திரமாக” ஆயினர். ஆரோன் என்ற, முதல் பிரதான ஆசாரியர், ஒரு லேவியராய் இருந்தார்; பிரதான ஆசாரியத்துவம் என்பது குடும்பத்தின் முதல் மகனில் இருந்து அடுத்து வரும் முதல் மகனுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. ஆரோனின் மற்ற சந்ததியார் ஆசாரியர்கள் ஆயினர். மற்ற எல்லா லேவியர்களும், ஆசாரியர்களுக்கு உதவியாளர்களாய் இருந்தனர். லேவியர்கள், ஆசரிப்புக்கூடாரம் மற்றும் பிற்பாடு தேவாலயம் ஆகியவை தொடர்புடைய பல கடமைகளைக் கவனிக்கும்படி அவற்றை எடுத்துக் கொண்டிருந்தனர்.

பின்னணி

இந்தப் புத்தகம், யாத்திராகமம் எழுதப்பட்டதற்குச் சற்றே பின்பு மோசேயினால் எழுதப்பட்டது என்பது உறுதி. இது பிரமாணங்களின் புத்தகமாய் இருக்கிறது; இது சிறிதளவு வரலாற்றுத் தகவல்களையும் கொண்டுள்ளது. ஆராதனை தொடர்பான பல பிரமாணங்கள் ஆசாரியர்களால் நிர்வகிக்கப்பட வேண்டியிருந்தன.

“பரிசுத்தம்” என்பது இப்புத்தகத்தின் திறவுகோல் வார்த்தையாக உள்ளது, இது இப்புத்தகத்தில் எண்பத்தேழு முறை காணப்படுகிறது. “பரிசுத்தம்” (“holy”) என்ற வார்த்தை “பரிசுத்தப்படுத்துதல்” (sanctified) என்பதைப் போன்றதாகவே உள்ளது; இவ்விரண்டுமே, ஒரு விசேஷித்த நோக்கத்திற்குத் “தனியே பிரித்துவைத்தல்” என்று அர்த்தப்படுகிறது. இஸ்ரவேல் மக்களிடத்தில் தேவன், “கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிற படியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக; நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு, உங்களை மற்ற ஜனங்களை விட்டுபிரித்தெடுத்தேன்” என்று கூறினார் (20:26; NASB).

வரைகுறிப்பு

  1. பரிசுத்த பலிகள்.
  • A. முற்றிலும் எரிக்க வேண்டிய தகன பலி (1).
  • B. போஜன பலி (2).
  • C. சமாதான பலி (3).
  • D. அறியாமல் செய்த பாவங்களுக்காகப் பாவநிவாரண பலி (4). 
  • E. குற்ற நிவாரண பலி (5)
  • F. இந்த பலிகள் குறித்து ஆசாரியர்கள் தங்கள் கடமைகளை எவ்வாறு நிறைவேற்ற வேண்டியிருந்தது (6, 7).
  1. பரிசுத்த நடத்துனர்கள், பாகம் 1. 
  • A. ஆரோனையும் அவரது மகன்களையும் பரிசுத்தப்படுத்துதல் (8).
  • B. அவர்கள் தங்கள் முதல் பலிகளைச் செலுத்துதல் (9). 
  • C. நாதாப் மற்றும் அபியூ ஆகியோர் அந்நிய அக்கினியில் பலி செலுத்துதல் (10)

III. பரிசுத்தமான மக்கள், பாகம் II.

  • A. சுத்தமான மற்றும் அசுத்தமான மிருகங்கள் (11). 
  • B. பிள்ளை பிறந்தபின்பு தாயைச் சுத்திகரிக்கும் முறைமை (12).
  • C. தொழுநோய் பற்றிய பிரமாணங்கள் (13,14).
  • D. அசுத்தமானவை சம்பந்தப்பட்டவை (15).
  1. பரிசுத்தமான நாட்கள், பாகம் 1: பாவநிவாரணச் சடங்கு (16, 17).
  2. பரிசுத்தமான மக்கள், பாகம் 2.
  • A. கானான் மக்களின் அருவருப்புகள் (18).
  • B. ஒழுக்கத்திற்குத் தேவனுடைய தர அளவை (19).
  • C. அவர்களைச் சுற்றிலும் உள்ள மக்களினங்களைப் பின்பற்றா திருக்கும்படி எச்சரிக்கை (20).
  1. பரிசுத்தமான நடத்துனர்கள், பாகம் 2: 

ஆசாரியர்கள் பிரித்து வைக்கப் பட்ட மற்றும் பரிசுத்தமான மக்களாய் இருக்க வேண்டியது (21, 22).

VII. பரிசுத்தமான நாட்கள், பாகம் 2.

  • A. வாராந்திர ஓய்வுநாளும் வருடாந்திரப் பண்டிகைகளும்: பஸ்கா, அறுவடை (பெந்தெகொஸ்தே), எக்காளங்கள் (23)
  • B. தேவசமூகத்து அப்பங்களை வாராந்திரம் உண்ணுதல்; ஒரு நிகழ்ச்சி (24). 
  • C. விசேஷித்த “நாட்கள்”: ஓய்வு ஆண்டு மற்றும் யூபிலி ஆண்டு (25).

VIII. பரிசுத்தமான மக்கள், பாகம் 3, மற்றும் முடிவுரை.

  • A. கீழ்ப்படிதல் மற்றும் கீழ்ப்படியாமை – மற்றும் விளைவுகள் (26).
  •  B. பொருத்தனைகள் பற்றிய பிரமாணங்கள் (27).

லேவியராகமத்தில் இருந்து பாடங்கள்

நீங்கள் லேவியராகமத்தை வாசிக்கும்போது, பழைய உடன்படிக்கைக்குப் பதிலாகப் புதிய உடன்படிக்கையின் (ஏற்பாட்டின்) கீழ் நீங்கள் இருப்பது பற்றி மகிழ்ச்சியடைவதில்லையா? பிரமாணங்களின் சிக்கல் என்பதே அனேகமாக பிரமாணத்தினுடைய “அடிமைத்தனத்தின் நுகத்தடி”யினுடைய பாகமாய் இருந்தது (கலாத்தியர் 5:1).

இருப்பினும், இந்தப் பிரமாணங்கள் யாவும் முக்கியமானவைகளாய் இருந்தன. அவைகள் மேசியா வரவிருந்த மக்களினத்தை வழிநடத்தவும் பாதுகாக்கவும் முக்கியமானவைகளாய் இருந்தன. அவைகள் பாவம் பயங்கர மானதென்று அறிவித்தன; இரத்தம் (மரணம்) மாத்திரமே பாவத்திற்குப் பரிகாரமாய் இருந்தது. செலுத்தப்பட்ட ஒவ்வொரு பலியும், சிலுவையில் இயேசு செலுத்தும் பூரணமான பலிக்கு மக்களின் மனங்களை ஆயத்தப்படுத்த உதவின.

தேவன் தமது மக்கள் பரிசுத்தமான மக்களாக, தமது பரிசுத்த நோக்கங்களுக்கென்று உலகில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று இன்னமும் விரும்புகின்றார் (1 தெசலோனிக்கேயர் 3:13; 4:3 முதல்.)!

பிரமாணங்களைக் கண்டுகொள்ளாது விட்டுவிடலாம் என்பதாக உள்ள சிக்கல்களில் அகப்படாமல் புறம்பே உள்ளது, பிறர்மீது அன்புகூர வேண்டும் என்ற கட்டளையாகும். இதை இயேசு பழைய ஏற்பாட்டின் இரண்டாவது மிகமுக்கியமான கட்டளை என்று அழைத்தார் (லேவியராகமம் 19:18; மாற்கு 12:31)!

பாவம் சந்தோஷத்தை எவ்வாறு அழிக்கிறது (லேவியராகமம் 10:1-11) ஆரோனின் வாழ்வில் அது மிகவும் மன எழுச்சியுள்ள நாட்களில் ஒன்றாகத் தொடங்கிற்று. ஒரு சில மாதங்களுக்கு முன்பு ஆரோன் ஒரு அடிமையாயிருந்தார், நம்பிக்கையற்ற எதிர்காலத்தை எதிர்கொண்டிருந்தார். பின்பு மோசே வந்து, “யெகோவா உன்னை எனக்காகப் பேசுபவராக நியமித்து இருக்கின்றார்” என்று கூறினார். ஆரோன் தமது சகோதரனின் தோளோடு தோள்கொடுத்து நின்று, தேவன் மக்களை அடிமைத்தளையில் இருந்து வெளியே கொண்டு வந்ததைக் கண்டிருந்தார். பின்பு அவரைத் தேவன் பிரதான ஆசாரியராக நியமித்தார். இந்த நாளில் அவர் தனது புதிய பிரதான ஆசாரியருக்கான உடையில் பெருமையும் சந்தோஷமும் உள்ள மனிதராக நின்றார். அவருடன் தேவனால் ஆசாரியர்களாக நியமிக்கப்பட்ட அவரது மகன்கள் இருந்தனர், அவர்களில் மூத்தமகன் அடுத்து பிரதான ஆசாரியராக வர இருந்தார். அவர்களின் முதல் பலியைப் பட்சிக்கும்படி இயற்கைக்கு மாறான அக்கினியை அனுப்பியதுமூலம், தேவன் தமது அங்கீகாரத்தைச் சைகை காண்பித்தபோது, ஆரோனின் சந்தோஷம் பொங்கிப் பெருக்கெடுத்திருக்க வேண்டும் (லேவியராகமம் 9:22-24).

இருப்பினும், சில நிமிடங்களில் அந்த நாளானது ஆரோனின் வாழ்வில் கவலைமிகுந்த நாட்களில் ஒன்றாகிப் போனது. அவர் தமது மூத்த மகன்கள் இறந்துபோனதையும் அவர்கள் தங்கள் ஆசாரியத்துவ உடையிலேயே, அவமான மிக்க கல்லறையொன்றில் அடக்கம்செய்யத் தூக்கிச்செல்லப்பட்டதையும் கண்டார். அவர் தேவனுடைய வாயிலிருந்து உறுதிமிக்க எச்சரிப்புகளைக் கேட்டார். இவையாவும் பாவத்தினிமித்தமாக நடைபெற்றன. பாவம் ஆரோனின் சந்தோஷத்தை அழித்தது – அது நமது சந்தோஷத்தையும் அழிக்கக்கூடும். பாவம் எவ்வளவு பயங்கரமானதாக இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாயிருக்கிறது. 

  1. பாவம் வாழ்வை அழிக்கக்கூடும் (10:1-3).
  1. பாவம், நாதாப் மற்றும் அபியூ ஆகியோரின் உயிரை அழித்தது. 
  1. அவர்கள் “அந்நிய அக்கினியை” செலுத்தியபோது. பலிகளைப் பட்சித்த அதே அக்கினி அவர்களையும் பட்சித்துப்போட்டது.
  • a. “அந்நிய அக்கினி” என்பது என்னவென்று நாம் நிச்சய மாய் அறிவதில்லை, ஆனால் அது அங்கீகரிக்கப்படாத அக்கினியாய் இருந்தது. “இந்த அக்கினியை எனக்கு செலுத்த வேண்டாம்” என்று தேவன் சொல்லியிருந்தார் என்பதால் அல்ல, ஆனால் அதற்கு மாறாகத் தேவன் தமது அறிவுறுத்துதலைக் கொடுத்திருந்தார், மற்றும் நாதாபும் மற்றும் அபியூவும், வேறு சிலவற்றையும் செய்வது நல்லதுதான் என்று நினைத்தனர்.
  • b. இன்றைய நாட்களில் “அந்நிய அக்கினியை” செலுத்தாதபடி நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். மக்கள், “இதை அல்லது அதைச் செய்யக்கூடாது என்று எங்கே கூறப்பட்டுள்ளது என்று எனக்குக் காண்பியுங்கள்” என்று அடிக்கடி கேட்கின்றனர். “நாம் செய்யும்படி தேவன் கூறியுள்ளவை யாவை?” என்பதே கேட்கவேண்டிய கேள்வியாக உள்ளது. மற்றவையாவும் “அந்நிய அக்கினியாகவே” உள்ளது.
  1. அவர்கள் ஏன் இந்த அந்நிய அக்கினியைச் செலுத்தினர் என்று நாம் அறிவதில்லை. அவர்களின் நோக்கம் நல்லதாக இருந்தி ருக்கலாம்; அவர்கள் உணர்வுப்பூர்வமான இக்காட்சிக்கு வனப்பூட்ட விரும்பியிருக்கலாம். நல்ல நோக்கங்கள் என்பவை கீழ்ப்படியாமையை இழப்பீடு செய்ய இயலாது.
  1. பாவம் இன்னமும் இன்றைய நாட்களிலும் வாழ்வை அழிக்கிறது. 
  1. நாமும் தேவனுக்கு முன்பாக ஆசாரியர்களாய் இருக்கின்றோம் (1 பேதுரு 2:5), நாதாப், அபியூ ஆகியோர் செல்வாக்குக் கொண்டிருந்தது போலவே நாமும் செல்வாக்குக் கொண்டி ருக்கிறோம் (மத்தேயு 5:13-16). கீழ்ப்படியாமையைத் தேவனால் தண்டியாமல் விடமுடியாது (லேவியராகமம் 10:3).
  • a சில பாவங்கள் நமது உடல்ரீதியான வாழ்வை அழிக்கக் கூடும். 
  • b. எல்லாப் பாவங்களும் நமது ஆவிக்குரிய வாழ்வை அழிக்கக் கூடும்.
  1. நாம் எல்லாவற்றிலும் தேவனுக்குக் கீழ்ப்படிந்திருக்கத் தீர் மானம் செய்வோம்!
  1. பாவம் இருதயங்களை அழிக்கக்கூடும் (10:4-7). 
  1. ஆரோனின் மகன்கள் எடுத்துச் செல்லப்படுவதை ஆரோன் கவனிக்கும் பரிதாபமான காட்சியைக் கற்பனை செய்து பாருங்கள். அவர் (ஆரோன்] புலம்புவதற்கு அனுமதிக்கப்படாதிருந்தார், ஏனெனில் அது தேவனுடைய செயல்பாட்டிற்கான பிரதிபலித்தல் என்று மக்களால் விளக்கம் கொள்ளப்படும். சவ அடக்கத்திற்குச் செல்வதற்கு அவர் அனுமதிக்கப்படாதிருந்தார். நியமிக்கப்பட்ட வேளை முழுமையடையும் வரையில் அவர் தமது பதவிநிலையில் தரித்திருக்க வேண்டியதாய் இருந்தது. அவரது இருதயம் எப்படி உடைந்து போயிருக்கும் என்று நீங்கள் கற்பனை செய்து பாருங்கள்!
  1. பாவம் இருதயங்களைத் தொடர்ந்து உடைக்கிறது. 
  • 1. பாவம் நிறைந்த மக்கள் தாங்கள் விதைத்ததை அறுக்கின்றனர்.
  • 2. பாவம் நிறைந்த தனிநபர்கள் தங்கள் துணைவர்களின் இருதயங்களை உடைக்கின்றனர்.
  • 3. பாவம் நிறைந்த பிள்ளைகள் தங்கள் பெற்றோரின் இருதயங் களை உடைக்கின்றனர். 
  • 4. பாவம் நிறைந்த கிறிஸ்தவர்கள் சபையின் இருதயத்தை – மற்றும் தேவனின் – இருதயத்தை உடைக்கின்றனர்!

III. பாவம் ஞானத்தை அழிக்கக் கூடும்: ஞானமாக முடிவெடுக்கும் திறன் (10:8-11).

  1. 8-11 வசனங்கள் “எஞ்சிய வரலாற்றை” கூறுகின்றனவா?
  1. இரு பகுதிகளிலும் உள்ள இணைவுகளினிமித்தம் பல கல்வி யாளர்கள் இவ்வாறே நினைக்கின்றனர். 
  • a. நாதாப் மற்றும் அபியூ ஆகியோர் இறந்தனர் (வசனம் 2); மதுபானம் மரணத்தைக் கொண்டுவரக்கூடும் (வசனம் 9). 
  • b. நாதாப் மற்றும் அபியூ ஆகியோர், தேவனால் “அங்கீ கரிக்கப்படாத” அக்கினிக்கும் அங்கீகரிக்கப்பட்ட அக்கினிக்கும் இடையில் வித்தியாசப்படுத்தத் தவறி விட்டனர் (வசனம் 1); மதுபானம் ஒருவரை பரிசுத்த மானதற்கும் தீட்டானதற்கும் இடையில் வித்தியாசப் படுத்தக் கூடாதபடிக்கு ஆக்கக்கூடும் (வசனம் 10).
  1. ஒருவேளை நாதாபும் அபியூவும் மதுபானம் பண்ணி அந்த விசேஷித்த நாளை “கொண்டாடி” இருக்கலாம். விஷயம் அப்படி இருந்தாலும் இல்லாவிட்டாலும், மதுபானம் ஒருவரின் தீர்மானமான முடிவுசெய்யும் திறனைப் பாதிக்கிறது என்பது உண்மையாகவே உள்ளது.
  1. இன்றைய நாட்களில்:
  1. பாவம் என்பது மக்களின் முடிவுசெய்யும் திறனை மேகம் போல் சூழ்ந்துகொள்ளத் தொடருகிறது. 
  • a. விளக்கம்: ஏதேன் தோட்டம்.
  • b. சில பாவங்கள் முடிவுசெய்யும் திறனை அழித்துப்போடு கின்றன: மேட்டிமை, தப்பான எண்ணங்கள் மற்றும் வேறுபாடுள்ள எண்ணங்கள்.
  1. குடிக்கும் மதுபானம் என்பது இன்னமும் ஒரு தலையாய குற்றம் தூண்டும் பொருளாக உள்ளது.
  1. ஆசாரியர்கள் “கடமையில்” இருக்கும்போது மதுபானம் பண்ணக்கூடாது என்பதைக் கவனியுங்கள். ஒவ்வொரு கிறிஸ்தவரும் ஆசாரியராய் இருக்கிறார் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் மற்றும் நாம் எப்போதுமே “கடமையில்” இருக்கின்றோம்.
  1. மதுபானம் பண்ணுதல் என்பது ஆசாரியரின் போதிக்கும் திறனைப் பாதிக்கும் என்று வசனப்பகுதி சுட்டிக் காண் பிக்கிறது. இன்றைய நாட்களில் ஒவ்வொரு கிறிஸ்தவரும் மற்றவர்களுக்குப் போதிக்க வேண்டியுள்ளது (மத்தேயு 28:18-20), ஆனால் மதுபானமானது போதகர்கள் என்ற வகையில் நமக்குள்ள செல்வாக்கை அழித்துவிட முடியும். மதுபானம் என்பது ஒவ்வொரு கிறிஸ்தவருமே அது இல்லாமல் இருக்கக்கூடிய ஒன்றாக உள்ளது!

முடிவுரை

நாம் பரிசுத்தமானவை மற்றும் பரிசுத்தமல்லாதவை ஆகியவற்றிற்கு இடையில் வித்தியாசப்படுத்திக்காண்பதற்கு, தேவனுக்குக் கீழ்ப்படியும்படி தீர் மானம் செய்வதற்கு, தெளிவான முடிவுகளை மேற்கொள்ளும் நமது திறனைத் தடைசெய்யக்கூடிய எதையும் நமது வாழ்வில் இருந்து நீக்கிப்போடுவதற்குத் தேவன் நமக்கு உதவுவாராக. இது ஒன்றுதான் வாழ்வில் நாம் உண்மையான மகிழ்ச்சியைக் கொண்டிருப்பதற்கான ஒரே வழியாக உள்ளது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *