எண்ணாகமம் ஆய்வு

எண்ணாகமம்: வனாந்தரத்தில் ஜனத்தொகை அறிக்கை

வாசிக்க வேண்டிய அதிகாரங்கள்: 1, 3, 6, 9-11, 13, 14, 16, 17, 20-27, 30-33, 35.

தலைப்பு நமது ஆங்கில (தமிழ்) வேதாகமத்தில் உள்ள “எண்ணாகமம்” என்ற தலைப்பு, யுத்தம் செய்யக்கூடிய ஆண்களின் தொகைபற்றி மேற்கொள்ளப்பட்ட இரண்டு ஜனத்தொகைக் கணக்கெடுப்பைக் குறிக்கிறது. அவற்றில் ஒன்று (அதி காரம் 1), மக்கள் சீனாய் மலையை விட்டு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட நாட்டிற்குச் செல்லக் கிளம்பியபோது எடுக்கப்பட்டது. இன்னொன்று (அதி காரம் 26), முப்பத்து எட்டு ஆண்டுகளுக்குப் பின்பு, அடுத்த தலைமுறையினர் கானான் நாட்டிற்குள் செல்ல ஆயத்தமானபோது எடுக்கப்பட்டது.

பின்னணி

மோசே இந்தப் புத்தகத்தின் எழுத்தாளராய் இருக்கின்றார் (1:1 மற்றும் 33:2 ஆகியவற்றைக் கவனிக்கவும்). இது வனாந்தரத்தில் அலைந்து திரிதல் முடிந்த வேளையில் எழுதப்பட்டது. செயல்பாட்டில், இப்புத்தகம் யாத்திராகமத்தைப் பின்தொடருகிறது; பிரமாணங்களில் இப்புத்தகம் லேவியராகமத்தைப் பின்தொடருகிறது.

தேவனை எவ்வாறு அணுகுவது என்பது பற்றிய அறிவுறுத்தலைப் பெற்றுக்கொண்ட நிலையில், மக்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட நாட்டிற்குள் செல்லத் தயாராயினர். அவர்கள் சீனாய் மலையை விட்டுப் புறப்பட்டு, சற்றே குறுகிய அணிநடையில் கானானின் வடபகுதியை நோக்கி முன்னேறினர். அவர்கள் தெற்கு எல்லையை அடைந்தபோது, நாட்டை வேவுபார்த்து வரும்படி வேவுகாரர்கள் அனுப்பப்பட்டனர். அவர்களில் ஏமாற்றம்தரும் அறிக்கையைக் கொண்டுவந்த பத்துப்பேரை மக்கள் நம்பினர். அவர்களின் அவிசுவாசம் என்ற பாவத்தினால், எகிப்தில் இருந்து புறப்பட்ட சந்ததியாரில் பெரும்பான்மை யானவர்கள் இறந்து போகும் வரைக்கும் மக்கள் வனாந்தரத்தில் அலைந்து திரிந்தனர். இது முப்பத்தியெட்டு ஆண்டுகள் காலத்தை உள்ளடக்குவதாக இருந்தது (எண்ணாகமம் 1:1; உபாகமம் 1:13).

“எண்ணிக் கணக்கிடுதல்” மற்றும் “கொலைசெய்தல்” என்ற இருவார்த் தைகள் இப்புத்தகத்தின் கருத்துக்களைத் தொகுத்துரைக்கின்றன.

வரைகுறிப்பு (பிரமாணங்கள் சாய்வெழுத்துக்களில் குறிப்பிடப்பட்டு உள்ளன) 

1 சீனாய் மலையை விட்டுப் புறப்படத் தயாராகுதல்.

  • A. முதல் ஜனத்தொகைக் கணக்கெடுப்பு (1). 
  • B பயணம் செய்வதற்கென்று முகாமை ஒழுங்கமைத்தல் (2-4).
  • C. சுத்திகரித்தல் மற்றும் நசரேய விரதம் பற்றிய பிரமாணங்கள் (5,6). 
  • D. ஒவ்வொரு கோத்திரமும் செலுத்திய பலிகள் (7).
  • E. லேவியர்கள் பற்றிய பிரமாணங்கள் (8),
  • F. பஸ்கா ஆசரிக்கப்படுதல்; மேகம் வழிகாட்டுதல் (9) 
  • G. சைகை செய்யும் எக்காளங்கள் (10:1-10)

 II நாற்பது ஆண்டுகள் காலம் எடுத்துக்கொண்ட நாற்பது நாள் பயணம்.

A வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட நாட்டிற்கு முதல் பயணம். 

  • 1. நாட்டை நோக்கிச் செல்லத் தொடங்குதல் (10:11-36).
  • 2. வழியில்; முறுமுறுத்தல் (11,12).
  • 3. வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட நாட்டின் தெற்கு முனையும் பத்து வேவுகாரர்களும் (13).
  • 4. நாற்பது ஆண்டுகள் வனாந்தரத்தில் அலைந்து திரியும்படி சீரழிக்கப்படுதல் (14),

B  அலைந்து திரிதல் (சிறிதளவே தகவல் தரப்பட்டுள்ளது).

  • 1. குறிப்பிட்ட சில காணிக்கைகள் பற்றிய பிரமாணங்கள்; ஒரு மனிதன் கல்லெறியப்படுதல் (15)
  • 2. கோரா மற்றும் பிறரின் கலகம் (16, 17).
  • 3. காணிக்கைகள் பற்றிய பிரமாணங்கள் (18).
  • 4. தண்ணீர் சுத்திகரிக்கப்படுதல் (19).

C வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட நாட்டிற்குக் கடைசிப் பயணம்.

  • 1. காதேசில் இருந்து பயணம் தொடங்குதல்; மோசேயின் பாவம் (20).
  • 2. வழியில்; முறுமுறுத்தல் (21).
  • 3. வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட நாட்டின் கிழக்குப் பகுதிக்கு வந்து சேருதல் (22:1).

III கானானுக்குள் பிரவேசிக்க ஆயத்தமாகுதல். 

  • A. பாலாக் மற்றும் பாலாம் ஆகியோரிடத்தில் இருந்து எதிர்ப்பு (22:2-25:18).
  • B. இரண்டாம் முறை ஜனத்தொகைக் கணக்கெடுத்தல் (26).
  • C. சுதந்தரவிகிதம் பற்றிய ஒரு பிரச்சனை; யோசுவா தேர்ந்தெடுக்கப் படுதல் (27).
  • D. குறிப்பிட்ட நாட்களில் செலுத்தப்படும் காணிக்கைகள் மற்றும் பொருத்தனைகள் பற்றிய பிரமாணங்கள் (28-30).
  • E. மீதியானியருக்கு எதிரான ஒரு யுத்தம் (31). 
  • F. இரண்டரைக் கோத்திரத்தார் யோர்தான் நதிக்குக் கிழக்குப் புறத்தி லேயே தங்கிக்கொள்ள முடிவு செய்தல் (32).
  • G. வனாந்தரத்தில் அலைந்து திரிந்தது பற்றிய தொகுப்புரை (33).
  • H. அவர்கள் கானான் நாட்டிற்குள் பிரவேசித்த பின்பு சுதந்திர விகிதம் பற்றிய அறிவுறுத்தல் (34-36).

எண்ணாகமத்தில் இருந்து பாடங்கள்

1 கொரிந்தியர் 10ல், பவுல் வல்லமை நிறைந்த ஒரு விவாதத்தை ஏற்படுத்துகின்றார். அவர் அதில் வனாந்தரத்தில் அலைந்து திரிதல்கள் பற்றிக் கூறுகின்றார், ஒரே சம்பவத்தில் தேவனுடைய மக்கள் எத்தனை பேர் இறந்தனர் என்று குறிப்பிடுகின்றார், அதன்பின்பு, “தன்னை நிற்கிறவ னென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்” என்று கூறுகின்றார் (வசனம் 12). தேவனுடைய பிள்ளையாய் இருக்கிறவர் விழக்கூடும். எண்ணாகமம் 1ல் இருந்த யுத்தம் செய்யக்கூடிய ஆறுலட்சம் ஆண்களில், யோசுவா மற்றும் காலேப் என்ற இருவர் மாத்திரமே வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட நாட்டிற்குள் பிரவேசிக்க முடிந்தது!

எபிரெயருக்கு நிருபத்தை எழுதியவரும்கூட, எச்சரிக்கை செய்வதற்கு இஸ்ரவேல் மக்களின் உதாரணத்தைப் பயன்படுத்துகின்றார் (எபிரெயர் 3:7- 4:12). அவர்கள் கீழ்ப்படியாமையினால் விழுந்தனர் என்று அவர் கூறுகின்றார் (3:11), இது அவர்களின் அவிசுவாசத்திற்கு ஒரு அடையாளமாயிருந்தது (3:12). இஸ்ரவேல் மக்களின் முறையீடு என்பது அவர்களின் அவிசுவாசத்திற்கு மிகத் தெளிவான செயல் விளக்கமாய் இருந்தது. நாம் எப்போதாவது இந்தப் பாவத்தினால் குற்றப்பட்டு இருக்கிறோமா?

எண்ணாகமம் 6:24-26ல் உள்ள ஆசீர்வாதம் போன்ற நினைவு கூறத்தக்க வசனப்பகுதிகள் பல எண்ணாகமத்தில் உள்ளன. இருப்பினும், பழைய ஏற்பாட்டில் உள்ள ஒவ்வொன்றும் (1) மனிதர்களைக் கிறிஸ்து வினிடம் கொண்டு வருதலுக்கோ அல்லது (2) அவருக்கென்று மனங்களைத் தயார் செய்வதற்கோ நடந்தவைகளாய் இருக்கின்றன என்பதை நினைவில் வைக்கவும். வெண்கல சர்ப்பம் (எண்ணாகமம் 21:8, 9) மற்றும் சிலுவையில் கிறிஸ்து (யோவான் 3:14, 15) ஆகியவற்றிற்கு இடையிலான இணைவைக் கவனிக்கவும்.

வனாந்தரத்தில் சர்ப்பம் (எண்ணாகமம் 21:4-9)

கிறிஸ்துவுக்குப் பல “முன்மாதிரிகள்,” அல்லது அடையாளங்கள், பழைய ஏற்பாட்டில் உள்ளன. கிறிஸ்து தனிப்பட்ட வகையில் வனாந்தரத்தில் சர்ப்பம் (யோவான் 3:14-17; எண்ணாகமம் 21:4-9) என்ற ஒரே ஒரு விஷயத்தை அடையாளம் காண்பித்தார். நாம் இந்தப் பழைய ஏற்பாட்டு வரலாற்றிற்கும் புதிய ஏற்பாட்டில் அதன் நடைமுறைப் பயன்பாட்டிற்கும் இடையில் ஒரு இணைவைத் தரவழைப்போம்.

I மக்கள் பாவம் செய்து தண்டிக்கப்பட்டனர் (21:4-6). 

A இஸ்ரவேல் மக்கள் பாவம் செய்தனர்.

  • 1. பாவம்: இஸ்ரவேல் மக்கள் நாற்பது ஆண்டுகளாக அலைந்து திரிந்தனர். இப்போது அவர்கள் மீண்டுமாகப் பாலைவனத்தில் வெப்பகாலத்தில் செல்ல வேண்டியிருந்தது (அதிகாரம் 33 மற்றும் 20), அவர்கள் தனிமையான சமவெளிப் பகுதியான “செங்கடல் வழியாக” பயணம் செய்துகொண்டிருந்தனர். ஏதோமியர்களினிமித்தம், அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட நாட்டை நோக்கியல்ல, ஆனால் அதைவிட்டுப் புறம்பே சென்று கொண்டிருந்தனர். அவர்கள் ஊக்கம் இழந்து போயிருந்தனர் (வசனம் 4) மற்றும் முறையிட்டனர் (வசனம் 5).
  • 2. தண்டனை: கொள்ளிவாய்ச் சர்ப்பங்கள் முகாமை வியாதி யாலும் மரணத்தாலும் நிரப்பின (வசனம் 6). 

B இன்றைய நாட்களில், நாம் பாவம் செய்து ஆக்கினைத்தீர்ப்பின் கீழ் இருக்கின்றோம்.

  • 1. எல்லாரும் பாவம் செய்தோம் (ரோமர் 3:23). அதை ஒரு சர்ப்பம் தொடங்கிற்று (ஆதியாகமம் 3; வெளிப்படுத்தின. விசேஷம் 12:9). ரோமர் 6:23 ஆக்கினைத் தீர்ப்பைப் பற்றிக் கூறுகிறது.
  •  2. இஸ்ரவேல் மக்களைப்போல், நாம் அடிக்கடி தேவன் யாரென்பதையும், அவர் நமக்குச் செய்துள்ளவை என்ன என்பதையும் மதிக்கத் தவறிவிடுகின்றோம்!

II தேவன் இரட்சிப்பின் வழியை அருளியிருக்கின்றார் (21:7, 8).

A தேவன் தப்புவதற்கான வழியை அருளியிருக்கின்றார். மக்களால் அது முடியாது; மோசேயினால் அது முடியாதிருந்தது; தேவன் மாத்திரமே அதை அருள முடியும்.

  • 1. மக்கள் மோசேயினிடத்திற்குத் திரும்பினர் (வசனம் 7). இந்த ஒரே ஒரு முறைதான் மோசே வேண்டுதல் செய்யும்படி இஸ்ரவேல் மக்கள் கேட்டுக்கொண்டனர். அவர்கள் தங்கள் பாவங்களை ஒப்புக் கொண்டனர், மோசே அவர்களுக்காக ஜெபித்தார்.
  • 2. தேவன், “நீ ஒரு கொள்ளிவாய்ச் சர்ப்பத்தின் உருவத்தைச் செய்து, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவை” என்று கூறினார் (வசனம் 8). “ஒரு கம்பம்” என்பது “உயரமாக உள்ள ஒரு மேடை” என்று நேரடி அர்த்தம் கொண்டுள்ளது. “கொள்ளிவாய்ச் சர்ப்பம்” அல்லது “வெண்கல சர்ப்பம்” தயாரிக்கப்பட்டது (வசனம் 9). 

a இது சிலருக்கு மதியீனமானதாகத் தோன்றியிருக்கும், ஆனால் தேவன் இதைச் செய்யும்படி கூறினார் (ஏசாயா 55:8, 9)!

b தேவனுடைய திட்டம் மாத்திரமே தப்பிக்கும் வழியாக இருந்தது. 

B இன்றைய நாட்களிலும் தங்கள் பாவம் நிறைந்த தன்மையை எதிர்கொள்ள மனவிருப்பமாய் இருப்பவர்களுக்குத் தேவன் இரட்சிப்பின் வழியை அருளியிருக்கின்றார்.

  • 1. நான் அந்த வழியை அருள இயலாது; உங்களாலும் அது இயலாது (எரெமியா 10:23; நீதிமொழிகள் 14:12). தேவனால் மாத்திரமே இயலும். ஒரே ஒரு வழிதான் உள்ளது (யோவான் 14:6).
  • 2. தேவன் அருளியது என்ன? இயேசு சிலுவையில் உயர்த்தப் பட்டார் (யோவான் 3:14-17; 12:32; ரோமர் 5:8-10)!

a வல்லமைநிறைந்த ஒரு இணைகருத்து. (1) இஸ்ரவேல் மக்கள் சர்ப்பங்களால் கடியுண்டனர், மற்றும் ஒரு சர்ப்பம் கோலில் உயர்த்தப்பட்டது. (2) பாவம் நம்மை அழிக்கிறது. சிலுவையில் இயேசு நமக்காகப் பாவமானார் (2 கொரிந்தியர் 5:21).

b இது சிலருக்கு மதியீனமாகத் தோன்றுகிறது (1 கொரிந்தியர் 1:18), ஆனால் இதுவே இன்னமும் இரட்சிப்புக்குத் தேவனுடைய அளிப்பாக – அவரது ஒரே அளிப்பாக உள்ளது (நடபடிகள் 4:12). 

III தேவனுடைய அளிப்பு ஏற்புடையதாக்கப்பட வேண்டும் (21:8,9).

A குணமாக்குவதற்குத் தேவனுடைய வழியானது தானாகவே ஒவ் வொருவரையும் சர்ப்பத்தின் கடியிலிருந்து குணப்படுத்தவில்லை; கடிபட்டவர்கள் குணமாவதற்குச் சிலவற்றைச் செய்ய வேண்டி யிருந்தது.

  • 1. அவர்கள் சர்ப்பத்தை நோக்கிப் பார்ப்பதன்மூலம் தங்கள் விசுவாசத்தைச் செயல்விளக்கப்படுத்த வேண்டியிருந்தது (வசனம் 8). 
  • 2. அதை அவர்கள் செய்தபோது, அவர்கள் குணமாக்கப்பட்டனர் (வசனம் 9). 

B எல்லாருக்காகவும் இயேசு மரித்தார் (யோவான் 3:16), ஆனால் எல் லாரும் இரட்சிக்கப்படுவது இல்லை (மத்தேயு 7:13, 14). தேவன் நமக்குச் செய்துள்ளதை நாம் நமக்கு ஏற்புடையதாக்கிக் கொள்ள வேண்டும்.

  •  1. நமது இரட்சிப்பை நாமே ஈட்டிக்கொள்ள இயலாது (எபேசியர் 2:8, 9), ஆனால் நாம் கீழ்ப்படிய வேண்டும் (மத்தேயு 7:21).
  • 2. இரத்தத்தின் மூலம் இரட்சிப்பைப் பெறுவதற்கு விசுவாசித்து ஞானஸ்நானம் பெற வேண்டும் என்று இயேசு கூறினார் (மாற்கு 16:16).

a இரத்தம்/ஞானஸ்நானம் உறவைக் கவனியுங்கள் (இ.வ. மத்தேயு 26:28 மற்றும் நடபடிகள் 2:38; வெளிப்படுத்தின விசேஷம் 1:5 மற்றும் நடபடிகள் 22:16; எபிரெயர் 9:14 மற்றும் 1 பேதுரு 3:21).

b இவ்வசனப்பகுதிகளுக்கு இடையில் எதிர்மாறு எதுவும் இல்லை. இவ்வசனப்பகுதிகளின் ஒரு குழு நம்மை இரட்சிப்பது எது என்று கூறுகிறது (இரத்தம்); இன்னொரு குழு எப்போது என்று கூறுகிறது (ஞானஸ்நானத்தின்போது).

IV ஏற்புடையதாக்காமல் இருத்தல் சாத்தியமா. 

A ஒருவர் கடியுண்டால், அவர் சர்ப்பத்தை நோக்கிப் பார்க்கும் போது குணமாக்கப்படுவார் என்று 9ம் வசனம் வலியுறுத்துகிறது. கடியுண்ட ஒருவர் அவ்வாறு நோக்கிப்பார்க்காது இருந்தால், அவர் குணமாக்கப்படவில்லை.

  • 1. தேவனுடைய அளிப்பைக் குறைந்தபட்சம் ஒருசிலராவது பயன்படுத்தத் தவறியிருப்பர் அநேகமாக இது அவிசுவாசத்தினால், மாறுபாடான கருத்தினால், அல்லது அவர்கள் அதிகநேரம் காத்திருந்ததினால் நடந்திருக்கலாம்.
  • 2. நமக்கு நிச்சயமாகத் தெரிவதாவது: ஏற்புடையதாக்காமல் இருத்தல் என்ற சாத்தியக்கூறு நிலவுகிறது; தேவன் தமது ஆசீர் வாதங்களை எவரொருவர்மீதும் வலிந்துதிணிப்பதில்லை. எவராவது குணமாக்கப்படவில்லையென்றால், அது அவரது தவறுதானே தவிர தேவனுடைய தவறல்ல.

B  இன்றைய நாட்களில், இரட்சிப்புக்குச் சிலுவையின்மூலம் தேவன் அருளியுள்ளவற்றை ஏற்புடையதாக்காமல் இருக்கச் சாத்தியம் உள்ளது.

  • 1. இதைச் செய்துள்ளவர்களுக்கு நாம் நன்றியுள்ளவர்களாய் இருக்கின்றோம்: பெந்தெகொஸ்தே அன்று (ஏறக்குறைய) மூவாயிரம் பேர் (நடபடிகள் 2:36-38, 41), முதலியவர்கள்.
  • 2. சிலர் இதைச் செய்யாதிருந்தனர் (நடபடிகள் 24:25; 26:28).

முடிவுரை 

நாம் இழந்துபோகப்பட்டிருந்தால், நம்மைத் தவிர நாம் வேறு யாரையும் குற்றம் சாட்ட இயலாது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *