உபாகமம் ஆய்வு

உபாகமம்: மோசேயின் பிரியாவிடை உரை

வாசிக்க வேண்டிய அதிகாரங்கள்: 1-8, 17, 18, 24, 27, 28, 30-32, 34.

தலைப்பு

“உபாகமம்” என்ற தலைப்பு, “இரண்டாவது பிரமாணம்” என்ற நேரடி அர்த்தம் தரும் கிரேக்கக் கூட்டு வார்த்தையாக உள்ளது. இருப்பினும், இது இரண்டாவது பிரமாணம் அல்ல, ஆனால் பிரமாணத்தை இரண்டாம் முறை கொடுத்தலாக (திரும்பக் கொடுத்தலாக) உள்ளது. பத்துக் கட்டளைகள் கொடுக்கப்பட்டு நாற்பது ஆண்டுகள் கடக்கும் வேளையின் அருகில், மாண்புமிக்க நடத்துனரான மோசே. பிரமாணத்தையும் வனாந்தரத்தில் நடைபெற்றவற்றையும் மறுகண்ணோட்டம் இடுகின்றார்.

பின்னணி

வனாந்தரத்தில் அலைந்து திரிதல்கள் முடிந்து போயின. இஸ்ரவேல் மக்கள், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட நாட்டிற்குள் செல்வதற்குத் தயாராக யோர்தான் நதியின் கிழக்குப்பகுதியில் இருக்கின்றனர். மோசே தமது நடத்துவத்தை யோசுவா என்ற தம் வலதுகைபோன்ற மனிதருக்குக் கொடுப்பதற்கு முன்னர் பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றார். அவரது “பிரியாவிடை உரை” உண்மையில் நான்கு செய்திகள் நெருக்கமாய் ஒன்றுகூட்டித் தரப்பட்டதாக உள்ளது (வரைகுறிப்பின் நான்கு மடங்கு பிரிவைக் கவனிக்கவும்).

மோசேயே உபாகமத்தின் பெரும்பகுதியை எழுதியவராக இருக்கின்றார், ஆனால் இப்புத்தகத்தினுடைய இறுதிப்பகுதியில் மோசேயின் மரணம் பதிவுசெய்யப்பட்டுள்ளதால், இந்தக் கடைசிக்குறிப்பு யாரேனும் ஒருவரால் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். அடுத்த புத்தகத்தை யோசுவா எழுதியிருப்பார் என்றால் (யோசுவா புத்தகத்தின் பின்னணியைக் காணவும்), இப்புத்தகத்தின் கடைசி வார்த்தைகள் அனேகமாக அவராலேயே எழுதப்பட்டிருக்கலாம்.

உபாகமத்தின் பெரும்பகுதியானது (முன்பு கூறப்பட்டதையே) திரும் பக்கூறுதலாக இருப்பதால், இதைப் புறக்கணிக்கும்படி சோதனை ஏற்படுவது உண்டு. இருப்பினும், இயேசு சோதிக்கப்பட்டபோது, அவர் மேற்கோள் காண்பித்தது, உபாகமம் புத்தகத்தில் இருந்துதான் என்பதை ஆழ்ந்து சிந்திக்கவும் (மத்தேயு 4:4, 7, 10; உபாகமம் 6:13, 16; 8:3). இயேசு இப்புத்தகத்தை மனப்பாடம் செய்ய வேண்டிய அளவுக்கு முக்கியமானதாக நினைத்திருப்பார் என்றால், நாம் இதை இலேசாக நினைக்கக் கூடாது.

வரைகுறிப்பு

  1. அறிமுகம்: வரலாற்று மறுகண்ணோட்டம் (1-4). 
  2. பிரமாணம் மறுகண்ணோட்டமிடப்படுதல், விரிவாக்கப்படுதல் மற்றும் நடைமுறைப்படுத்தப்படுதல் (5-26).
  3. பின்னோக்கிக் காணுதல்: பிரமாணம் மறுகண்ணோட்டமிடப் பட்டது (5-11).
  4. பிரமாணத்தின் பின்னணியில் பின்னோக்கிக் காணுதல் (5-7).
  •         பிரமாணத்தின் அடிப்படை: பத்துக் கட்டளைகள் (5)
  •         கீழ்ப்படிதலின் அடிப்படை: தேவனிடத்தில் அன்பு (6)!
  •         தூய்மையின் அடிப்படை: கானானியர்களையும் அவர்களின் விக்கிரகங்களையும் அழித்தல் (7).

2.பயணத்தையும் வனாந்தரத்தில் அலைந்து திரிதல்களையும் பின்னோக்கிக் காணுதல்; சில நடைமுறைப் பயன்பாடுகள் (8-11).

  1. முன்னோக்கிக் காணுதல்: பிரமாணத்தின் பகுதிகள், கானான் நாட்டில் அவர்கள் சந்திக்க இருந்த சூழ்நிலைக்குத் தக்கவகையில் விரிவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன (12-26).

III “தேர்ந்துகொள்ளுதல் உங்களுடையது: தேவனுக்குக் கீழ்ப்படிந்து ஆசீர்வதிக்கப்பட்டிருத்தல் அல்லது தேவனுக்குக் கீழ்ப்படியாமல் சாபத்தைப் பெற்றுக்கொள்ளுதல்” (27-30).

  1. ஏபால் மலையில் பிரமாணம் பதிவு செய்யப்பட வேண்டியது (27).
  2. தேர்ந்துகொள்ளுதல்களும் அவற்றின் விளைவுகளும் வரைகுறிப் பிடப்பட்டன (28).
  3. தேவனுடனான அவர்களின் உடன்படிக்கை நினைவூட்டப் பட்டது (29).
  4. “இவைகளெல்லாம் நடக்கும்போது, நினைவுகூருங்கள் …” (30),
  5. முடிவுரை: மோசேயின் கடைசி நாட்கள் (மற்றும் கடைசி வார்த்தைகள்) (31-34).
  6. மோசேயின் 120ம் பிறந்த நாளன்று (31-33):
  •         பிரமாணம் நிறைவடைந்தது; ஒரு பாடல் (31, 32).
  •         மோசே கோத்திரங்களை ஆசீர்வதிக்கின்றார் (33).
  1. மோசே மலையுச்சிக்குச் சென்று, கானானைப் பார்க்கின்றார், மரிக்கின்றார், மற்றும் அறியப்படாத கல்லறையொன்றில் புதைக்கப் படுகின்றார் (34).

உபாகமத்தில் இருந்து பாடங்கள்

மோசேயின் வாழ்வு என்பதே மாபெரும் பாடங்களில் ஒன்றாக உள்ளது. மோசே வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட நாட்டிற்குள் பிரவேசிக்க இயலாது என்று அவரிடத்திலேயே கூறப்பட்டிருந்த போதிலும், அவர் மனக்கிலேசம் அடைய வில்லை (தம் பணியைவிட்டு) வெளியேறவும் இல்லை. அவர் முடிவுபரியந்தமும் விசுவாசத்துடன் நிலைத்து நின்றார்!

6:4-9ல் காணப்படுகிற ஷேமா என்பது எபிரெய மதத்தின் இருதயம் போன்ற மையப்பகுதியாக இருந்தது. இவ்வார்த்தைகள் பரிசுத்தமான ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பயபக்தியுள்ள யூதர்களால் பேசப்பட்டன (மற்றும் பேசப்படுகின்றன). “நியாயப்பிரமாணத்திலேயே பெரிய கட்டளை எது?” என்று இயேசுவினிடத்தில் கேட்கப்பட்டபோது (மத்தேயு 22:35-38), அவர் இவ்வசனப் பகுதியில் இருந்துதான் மேற்கோள் காண்பித்தார்: ” ‘உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக. இது முதலாம் பிரதான கற்பனை” (வசனம் 38).

28ம் அதிகாரத்தில் உள்ள வல்லமை நிறைந்த வசனப்பகுதியொன்று, நாம் தேவனுக்குக் கீழ்ப்படியும்போது வருகிற ஆசீர்வாதங்களையும், நாம் அவருக்குக் கீழ்ப்படியாமல் போகும்போது நாமே நம்மீது வருவித்துக் கொள்கிற சாபங்களையும் விவரிக்கிறது. 28ம் அதிகாரத்தை மறுபடியும் வாசித்து, யூதமக்களின் பின்தொடர்ந்த வரலாறு பற்றி நினைத்துப் பாருங்கள். ஒரு மக்களினம் என்ற வகையில் அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை இது முன்னுரைக்கிறது.

உபாகமத்திற்கும் கிறிஸ்துவின் வாழ்வுக்கும் இடையில் பல பிணைப்புகள் உள்ளன. ஏற்கனவே குறிப்பிட்டுள்ளவைகளுடன் கூடுதலாக 18:15-19 மற்றும் 21:23 ஆகியவற்றைக் காணவும்.

தேவனிடத்தில் அன்புகூரும்படி பிள்ளைகளுக்குப்

 போதித்தல் (உபாகமம் 6:4-9) நமது வேதபாடப் பகுதியாகிய உபாகமம் 6:4-9, யூதமக்களின் மையமாக இருந்தது. இதில் 4ம் வசனம் ஷேமா என்று அழைக்கப்பட்டது, ஏனென்றால் “கேள்,” என்பதற்கான எபிரெய வார்த்தையான ஷேமா என்பது (எபிரெய மொழியில்) இவ்வசனத்தின் முதல் வார்த்தையாக உள்ளது. காலம் கடந்தபோது, ஷேமா என்பது 9ம் வசனம் வரை விரிவாக்கப்பட்டது மற்றும் சிலவேளைகளில் இது ஏற்புடைய மற்ற குறிப்புகளையும் உள்ளடக்கிற்று. “இஸ்ரவேலே கேள்! நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்!” என்ற வசனப்பகு தியைத் தொடர்ந்து, தேவனை ஒருவர் தமது முழு இருதயத்தோடும். முழு ஆத்துமாவோடும், முழு பலத்தோடும் அன்புகூரவேண்டும் என்ற அறைகூவல் தரப்படுகிறது. இது யூத மக்களின் ஆராதனைக்கான அழைப்பாக, யுத்தக் கூக்குரலாக, மற்றும் மரிக்கும் வேளையில் அவர்களின் ஜெபமாக ஆயிற்று. இது ஒரு தெய்வ வணக்கத்தின் சிறப்புக்கூற்றாகவும் ஒரே தேவனுடன் ஒரு நபர் கொண்டுள்ள உறவுமுறையாகவும் உள்ளது,

இவ்வசனப்பகுதியின் முக்கியத்துவத்தைக் கிறிஸ்தவர்களுக்கு இயேசு வலியுறுத்தினார் (மத்தேயு 22:37-40). அவரது வார்த்தைகள், நாம் தேவன்மீது நமக்குள் இருக்கும் யாவற்றுடனும் அன்புகூரவேண்டுமென்று மற்றும் அதன்பின்பு அவ்வாறே செய்யும்படி நமது பிள்ளைகளுக்குப் போதிக்க வேண்டுமென்று நமக்கு அறைகூவல் விடுக்கின்றன.

  1. தேவன்மீது அன்புகூரும்படி நமது பிள்ளைகளுக்கு நாம் போதிக்க வேண்டியது ஏன்?
  •         தேவன்மீது அன்புகூருதலில் தேவனுக்குக் கீழ்ப்படிதல் – கிறிஸ்தவ ராகுதல்கூட உள்ளடங்கியிருக்கிறது (யோவான் 14:15; 1யோவான் 5:3; ரோமர் 6:17, 18; 1 கொரிந்தியர் 13:1-3).
  •         தேவன்மீது அன்புகூருதல் என்பது கிறிஸ்தவர் என்ற வகையில் மகிழ்வுடன் இருப்பதற்கு அத்தியாவசியமானதாக உள்ளது (1 யோவான் 4:18; ரோமர் 8:28)
  •         நம்மில் பெரும்பான்மையானவர்களுக்கு, தேவன்மீது அன்பு கூருதல் என்பது மரணபரியந்தம் உண்மையாய் இருத்தல் என்பதுடன் வலிவார்ந்த வகையில் இணைவுகொண்டுள்ளது (வெளிப்படுத்தின விசேஷம் 2:10; 2:4),
  1. தேவன்மீது அன்புகூரும்படி நமது பிள்ளைகளுக்கு நாம் எவ்வாறு போதிக்க முடியும் (6:4-9)?
  •         A நாமே தேவன்மீது அன்புகூருவதைக் கொண்டு நாம் தொடங்குகின் றோம் (வசனங்கள் 5, 6).

o   6:4-9ல் நமக்கு முதலில், தேவன்மீது நாம் நமக்குள்ள யாவற் றுடனும் அன்புகூர வேண்டும் என்றும் பின்பு அதை நமது பிள்ளைகளுக்குப் போதிக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. நமது பிள்ளைகள் தேவன்மீது அன்புகூர வேண்டும் என்றால், அவர்கள் அந்த அன்பை முதலில் நமக்குள் காணவேண்டும்.

o   நாம் தேவன்மீது எவ்வாறு அன்புகூர முடியும்? “அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்பு கூருகிறோம்” (1 யோவான் 4:19).

  • நாம் தேவனுடைய அன்பை வேதாகமத்தில் இருந்து கற்றுக் கொள்வோமாக – பின்பு நாம் தேவன் நமக்குச் செய்துள்ள யாவற்றைக் குறித்தும் தியானிப்போமாக.
  • நாம் தேவனில் அன்பு கூருகின்றோம் என்பதை நம் செயல்கள் காட்டட்டும்; நம் முழு பலத்தோடும் நாம் அவரில் அன்பு கூருவோமாக (வெளிப்படுத்தின விசேஷம் 2:5).
  •         B. பின்பு நாம் அந்த அன்பை நமது பிள்ளைகளிடத்தில் பகிர்ந்து கொள்வோமாக (வசனம் 7).

o   நமது பிள்ளைகள் அந்த அன்பைப் பற்றித் தாமாகவே அறிந்து கொள்ளமாட்டார்கள்; நாம் அவர்களுக்குப் போதிக்க வேண்டும்.

o   2.நாம் அவர்களுக்கு எல்லா வேளைகளிலும் போதிப்பது அவசியமாய் இருக்கிறது: நாம் நடக்கையிலும், நிற்கையிலும், உட்கார்ந் திருக்கையிலும், படுத்துக்கொள்ளுகையிலும்! சில ஆலோசனைகள்: .

  •         சபையின் எல்லா வகுப்புக்களையும் இளைஞர்களுக்கான எல்லா நடவடிக்கைகளையும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
  •         வீட்டு தியானங்கள் மற்றும் திட்டமிட்ட நடவடிக்கைகளை அளியுங்கள்.
  •         C எந்த மற்றும் ஒவ்வொரு வேளையையும்/நிகழ்வையும் போதித்தலுக்கான வேளையாக மாற்றுங்கள்: நல்ல வேளைகள், மோசமான வேளைகள், இல்லத்தின் உள்ளே, இல்லத்திற்கு வெளியே, உறவுமுறைகள் தொடர்பானவை (1 யோவான் 4:11) .
  •         நமது பிள்ளைகள் தேவனுக்குக் கீழ்ப்படியும்படி நாம்
  •         அவர்களைப் பயிற்றுவிக்க வேண்டும்; கீழ்ப்படிதல் இன்றி அன்பு இருக்க முடியாது (1 யோவான் 5:3),
  1. கடைசியாக, நாம் நமது பிள்ளைகளுக்கு அன்பின் சூழ்நிலையை அளிக்க வேண்டும் (வசனங்கள் 8, 9),
  •         இவ்வார்த்தைகள் கையில், கண்களுக்கு இடையில், மற்றும் கதவுநிலைகளில் வைக்கப்பட வேண்டியவையாக இருந்தன. யூதர்கள் பைலேக்டரிகள் (phylacteries என்பது “காவலர்கள்” என்று அர்த்தப்படுகிற கிரேக்க வார்த்தையாகும்] என்ற சிறியபெட்டிகளைக் கண்டுபிடித்தனர், அவற்றினுள் இவ்வார்த்தைகள் இருக்கும், அப்பெட்டிகளை அவர்கள் தங்கள் கைகளிலும் நெற்றிகளிலும் அணிந்துகொண்டனர் (மத்தேயு 23:5). மோசே தமது கரமானது அன்பிலிருந்து செயல்படும்படி. அதில் அன்பின் பிரமாணத்துடனும்; மூளையானது அன்பில் இருந்து சிந்திக்கும்படி; தலையில் அன்பின் பிரமாணத்துடனும், இல்லமானது அன்பினால் நிறைந்திருக்கும்படி, கதவுநிலைகளில் அன்பின் பிரமாணத் துடனும் பேசிக்கொண்டிருந்தார்.
  •         சில ஆலோசனைகள் நமது இல்லங்களை அன்பினால் நிரப்பு கின்றன:

o   நமது பிள்ளைகள் தேவன்மீதான நமது அன்பைக் காணட்டும்.

o   நமது பிள்ளைகள் நாம் அவர்களின்மீது கொண்டுள்ள அன்பைக் காணட்டும் (தீத்து 2:4).

  •         நாம் எப்போதும் “அவர்களுக்கு மிகச் சிறந்தவற்றை (agape என்ற அன்பின் அர்த்தத்தை).
  •         நாம் இரக்கம், பொறுமை முதலானவைகளுடன் நாடுவோமாக” இருப்போமாக (1 கொரிந்தியர் 13:4-7).
  •         நாம் அவர்களை அன்புடன் ஒழுங்குபடுத்துவோ மாக (எபிரெயர் 12:6, 7, 9),
  •         நாம் மன்னிப்பவர்களாய் இருப்போமாக. (தந்தையர்களுக்குக் குறிப்பு: ஒரு பிள்ளை தனது தந்தையைக் கண்ணோக்கும் வழியே பொதுவாக தேவனைப் பற்றிய கருத்தை அந்தப் பிள்ளைக்குள் வடிவமைக்கிறது!)
  1. இல்லத்தில் ஒவ்வொருவரும் மற்ற ஒவ்வொருவரையும் அன்பு கூருவதை நமது பிள்ளைகள் காணட்டும் (எபேசியர் 5:25, 28, 33; தீத்து 2:4; 1 யோவான் 4:20ஐ நினைவில் வைக்கவும்).

முடிவுரை 

யூதர்களைப்போல் நாமும், நமது வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் வேதவசனங்களின் போதனையை அமுல்படுத்தப் பிரயாசப்பட வேண்டும். இதைச் செய்வதால் மாத்திரமே நாம் நமது பிள்ளைகளுக்குத் தேவன்மீது அன்புகூருதலின் முக்கியத்துவத்தைப் போதிக்க முடியும்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *