யோசுவா ஆய்வு

யோசுவா: கானானில் வெற்றி!

வாசிக்க வேண்டிய அதிகாரங்கள்: 1-11, 13, 14, 18, 21-24.

தலைப்பு

யோசுவா புத்தகமானது அதன் பிரதானப் பாத்திரத்தைக் கொண்டு பெயரிடப்பட்டுள்ளது, அவர் மோசேக்குப் (பின்பு அவருக்குப்) பதிலாக இஸ்ரவேல் மக்களின் நடத்துனராக இருந்தார். அவரது பெயரானது “இரட்சிப்பு” என்று அர்த்தப்படுகிற ஓசேயா (எண்ணாகமம் 13:8), என்று இருந்தது; ஆனால் மோசே அப்பெயரை, “யெகோவா இரட்சகராயிருக்கிறார்” என்று அர்த்தம் தரும் “யோசுவா” என்று மாற்றினார் (எண்ணாகமம் 13:16), இது இப்புத்தகத் தின் பொருளடக்கத்திற்கு ஏற்ற தலைப்பாக உள்ளது. “இயேசு” என்பது புதிய ஏற்பாட்டில் “யோசுவா” என்ற பெயருக்குச் சமமானதாக உள்ளது.

பின்னணி

இந்தப் புத்தகம் உபாகமத்தின் பின்தொடர்ச்சியாய் இருந்தபோதிலும், இது பழைய ஏற்பாட்டின் ஒரு புதிய உட்பிரிவைத் துவக்குகிறது: (யூதத்துவ) வரலாற்றின் பன்னிரெண்டு புத்தகங்கள். பழைய ஏற்பாட்டின் முதல் பதினேழு புத்தகங்கள், பழைய ஏற்பாட்டின் புத்தகங்கள் யாவற்றிற்கும் வரலாற்றுச்சட்டக அமைவை அளிக்கின்றன.

கடைசியாக, யோசுவாவினுடைய நடத்துவத்தின்கீழ், இஸ்ரவேல் மக்கள், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட நாட்டிற்குள் பிரவேசித்தனர். இப்புத்தகத் தின் முதல் பாதியானது, தேவனுடைய உதவியுடன் இஸ்ரவேல் மக்கள் நாட்டை வெற்றிகொள்வதைப் பற்றிக் கூறுகிறது. எரிகோவும் ஆய்யும் எடுத்துக்கொள்ளப்படுகின்றன, நாடு இரண்டு பாதியாகப் பிரிக்கப்படுகிறது. நாட்டின் தென்பகுதியும் பின்பு வடபகுதியும் வெற்றி கொள்ளப்படுகின்றன.

இப்புத்தகத்தின் பின்பாதியானது நாட்டைப் பங்கிடுதல் பற்றிக் கூறுகிறது. ஒவ்வொரு கோத்திரமும் ஒருபகுதியைப் பெறுகின்றன. காலேப் மற்றும் யோசுவா என்ற உண்மை நிறைந்த இரண்டு வேவுகாரர்களுக்கு விஷேச அளிப்புகள் ஏற்படுத்தப்பட்டன. லேவியர்கள் தங்களின் சுதந்தரவீத மாக நகரங்களையும் நிலத்தையும் பெற்றனர். மக்களிடத்தில் யோசுவா விடுத்த அறைகூவல் மற்றும் அவரது மரணம் ஆகியவற்றுடன் இப்புத்தகம் முடிவடைகிறது. யோசுவா 11ல் உள்ள மூன்று வசனங்கள் இப்புத்தகத்தினு டைய கருத்துக்களைத் தொகுத்துரைக்கின்றன: 15, 18, 23. பதினைந்து மற்றும் இருபது ஆண்டுகளுக்கிடையிலான வரலாறு எடுத்துக்கூறப்பட்டுள்ளது (24:29; உபாகமம் 34:5-9).

இந்தப் புத்தகத்தை யார் எழுதினார் என்று நாம் நிச்சயிக்க முடிவதில்லை. இதை எழுதியிருப்பதாக ஆலோசனை செய்யப்படும் எழுத்தாளர்களில் பினேகால் மற்றும் எலெயேசர் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர். யோசுவாவே இப்புத்தகத்தை எழுதினார் என்று யூதப்பாரம்பரியம் கூறுகிறது. நாம் கொண்டுள்ள தகவலும் இதை யோசுவா எழுதியிருப்பார் என்பதற்குக் கருத்தொருமைப்படுகிறது. 5:1ல் தன்மைப் பெயர்ச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ள விஷயமானது, இதை எழுதியவர் யோர்தானை கடந்து சென்றார் என்று சுட்டிக்காண்பிக்கிறது; 24:26, இந்தப்புத்தகத்தின் எல்லாப்பகுதி யையும் அல்லது ஒருசிலபகுதிகளை யோசுவா எழுதியிருத்தல் பற்றிப் பேசுகிறது. இப்புத்தகத்தை முடித்துவைத்தார்.

யோசுவா இப்புத்தகத்தை எழுதினார் என்றால், இப்புத்தகத்தின் முடிவில் உள்ள யோசுவாவின் மரணம் பற்றிய விவரத்தை இன்னொரு எழுத்தாளர் எழுதி

வரைகுறிப்பு

அறிமுகம்: நடத்துவத்துவம் யோசுவாவினிடத்தில் ஒப்புவிக்கப்பட்டது (1).

 1. நாட்டைப் பிடித்தல் (2-12).
 • A. எரிகோவை வேவுபார்த்தல் (2).
 • B. உலர்ந்த நிலத்தில் யோர்தானைக் கடத்தல் மற்றும் நினைவுச் சின்னம் ஒன்றை அமைத்தல் (3, 4),
 • C. யுத்தத்திற்கு ஆயத்தம் செய்தல் (5)
 • D. எரிகோவை மேற்கொள்ளுதல் (6). 
 • E. ஆயியை மேற்கொள்வதில் பிரச்சனைகள்; ஆசீர்வாதங்களும் சாபங் களும் வாசிக்கப்படுதல் (7, 8).
 • F. தந்திரமுள்ள/கபடு நிறைந்த கிபியோன்; தெற்கில் இருந்த அரசர் களுடன் யுத்தம் (9,10).
 • G. வடக்கில் இருந்த அரசர்களின் தோல்வி (11).
 • H. யுத்தங்கள் பற்றிய ஒரு தொகுப்புரை (12).
 1. நாட்டைப் பங்கிடுதல் (13-22).
 • A. இரண்டரைக் கோத்திரத்தாருக்குச் சுதந்தரவீதம் (13).
 • B. காலேபுக்குச் சுதந்திரவீதம் (14). 
 • C. யூதாவின் கோத்திரத்தில் எஞ்சியிருந்தவர்களுக்குச் சுதந்தரவீதம் (15).
 • D. யோசேப்பின் பிள்ளைகளில் எஞ்சியிருந்தவர்களுக்குச் சுதந்தரவீதம் (16, 17).
 • E. எஞ்சியிருந்த ஏழு கோத்திரங்கள் மற்றும் யோசுவா ஆகியோருக்குச் சுதந்திரவீதம்; ஆசரிப்புக்கூடாரம் அமைக்கப்படுதல் (18, 19). 
 • F. அடைக்கலப் பட்டணங்கள் (20).
 • G. லேவியர்களுக்குச் சுதந்தரவீதம் (21).
 • H. இரண்டரைக் கோத்திரத்தார் இல்லம் திரும்புதல்; நினைவுச் சின்ன மாக பலிபீடம் ஒன்று எழுப்பப்படுதல் (22). 

முடிவுரை

யோசுவாவின் பிரியாவிடை மற்றும் மரணம் (23, 24). யோசுவாவின் புத்தகத்தில் இருந்து பாடங்கள் யோசுவாவின் புத்தகம், தேவனுடைய மக்கள் விசுவாசத்தின்மூலமாக எவ்வாறு வெற்றிக்கொள்ள முடியும் என்று கூறுகிறது. இப்புத்தகம், தேவன் தமது மக்களுடன் இருத்தல், மற்றும் அவர்கள் அவரை விசுவாசித்து அவருக்குக் கீழ்ப்படிந்திருந்தால் – அவர்களுக்கு வெற்றியை கொடுத்தல் ஆகியவை பற்றி மாபெரும் வசனப்பகுதிகளைக் கொண்டுள்ளது. 1:5-9 அத்தகைய வசனப்பகுதி களில் ஒன்றாக உள்ளது.

தேவனுக்குக் கீழ்ப்படியும் விஷயத்தில், உச்சச்செயல்முனைப்புகளாகிய பின்வருவனவற்றிற்கு சென்றுவிடுதல் சுலபமானதாக உள்ளது: சட்டவியல் (தேவன் ஏற்படுத்தியிராத பிரமாணங்களைக் கட்டுவித்தல்) என்பதன் வலது கடைசி முனைக்குச் செல்லுதல் அல்லது விடுதலையியல் (தேவன் ஏற்படுத்தி யுள்ள பிரமாணங்களைத் தளர்த்துதல்) என்பதன் இடது கடைசி முனைக்குச்செல் லுதல். 1:7ல், நாம் பிரயாசப்பட வேண்டிய சமான நிலையைக் காணுகின்றோம்: “அதைவிட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக.”

ஆகானின் பாவத்தைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சிகள், “பாளையத்தில் பாவம் இருக்கும்”போது தேவனுடைய மக்கள் வெற்றியடைய முடியாது என்பதைச் செயல்விளக்கப்படுத்துகின்றன. 7:20, 21ல், நாம் ஒரு மனிதனின் வாழ்வில் பாவம் உட்புகுந்து வளருவது எவ்வாறு என்று கண்டறிகின்றோம். இதை யாக்கோபு 1:14, 15உடன் ஒப்பிடவும்.

யோசுவா புத்தகத்தின் வசனப்பகுதிகளுக்குப் புதிய ஏற்பாட்டில் பல குறிப்புகள் உள்ளன. (நடபடிகள் 7:16; 13:19; எபிரெயர் 4:8; 11:22, 30, 31; 13:5; யாக்கோபு 2:25 ஆகியவற்றைக் கவனிக்கவும்.) இயேசுவின் முன்னோர்களில் ஒருத்தியான இராகாப் என்பவளின் வரலாறு அனேகமாக இயேசுவுக்கு மிகவும் அக்கறைக்குரிய ஒன்றாக இருந்திருக்கலாம் (மத்தேயு 1:5),

மதில்கள் இடிந்து விழுந்தன (யோசுவா 6) யோசுவாவின் புத்தகமானது, இஸ்ரவேல் மக்கள் யோசுவாவின் நடத்துவத் தின்கீழ் கானான் நாட்டை வெற்றிக்கொண்டது பற்றிக் கூறுகிறது. “விசுவாசத்தின் மூலம் வெற்றி” என்பதே இப்புத்தகத்தினுடைய ஆய்வுப்பொருளாக உள்ளது (1:5-9). நாம் யாவரும் வெற்றியுள்ள வாழ்வை வாழ விரும்புவோம். நாம் அதை எவ்வாறு செய்ய முடியும் என்று காண்பதற்கு, எரிகோ யுத்தத்தில் தேவன் இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுத்த வெற்றியைக் கண்ணோக்குவோம், அங்கு (பழம் பாடல் ஒன்றின் வரிகளைப் பயன்படுத்துவதென்றால் “மதில்கள் இடிந்து விழுந்தன”! இவைகள் மூன்றுமாடி அளவுக்கு உயரமும் பதினெட்டு அடிகள் கனமும் உடைய மாபெரும் மதில்களாய் இருந்தன!

நமக்கும் தேவனுக்கும் இடையில், நமக்கும் மற்ற மக்களுக்கும் இடையில், நாம் என்னவாக இருக்கின்றோம் மற்றும் நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பவற்றிற்கு இடையில் இருக்கின்றவைகளும் இடித்து வீழ்த்தப்பட வேண்டியவைகளுமான “மதில்களை” நாம் யாவருமே கொண்டுள்ளோம்: நாம் திருமணம் மற்றும் குடும்ப மதில்கள், நிதிநிலை மதில்கள், உடல் ஆரோக்கிய மதில்கள் மற்றும் உணர்ச்சிப்பூர்வம் என்ற மதில்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளோம். நன்கு பழக்கமான இந்த வரலாறு, குறைந்தபட்சம் நான்கு பாடங்களை, மதில்கள் “இடிந்து கீழே விழுதல்” என்பதை ஏற்படுத்துவதற்கு அவசியமான நான்கு விஷயங்களைப் போதிக்கிறது:

 • தேவனுடைய வழிகள் மதிக்கப்பட வேண்டும். A. ஒரு சிறு பையன், வேதாகம வகுப்பில் தான் கற்றுக் கொண்டதைத் தனது தாயினிடத்தில் (பின்வருமாறு) கூறினான்: “அவர்கள் விமானங் களையும் டாங்கிகளையும் ஏவுகணைகளையும் எடுத்துச் சென்று எரிகோவின் மதில்களைச் சாய்த்தனர்!” அவனது தாய் நம்பிக்கையற்று அவனிடத்தில். “உங்கள் ஆசிரியை நிச்சய மாக இவ்வாறுதான் இவ்வரலாற்றைக் கூறினார்களா?’ என்று கேட்டாள். அதற்கு அந்தச் சிறு பையன், “இல்லை, ஆனால் அவர்கள் கூறியதை நான் உங்களுக்குச் சொன்னால் நிச்சயமா கவே நீங்கள் என்னை (நான் கூறுவதை) நம்பமாட்டீர்கள்” என்று கூறினான். உண்மையில், யோசுவா 6ம் அதிகாரம் நாம் எவ்வாறு ஒரு நகரத்தைப் பிடிப்போம் என்பதைப் பற்றியதல்ல – மற்றும் அது அந்த நாட்களில் படைகள் எவ்வாறு நகரங்களைப் பிடித்தன என்பதைப் பற்றியதும் அல்ல. அவர்கள் வீரநடையிடும் படைகளை, வில்லாளர்களின் கோபுரங்களை, ஏறிச் செல்லப் பயன்படும் ஏணிகளை மற்றும் யுத்தத்தினுடைய பிற இயந்திரங் களைப் பயன்படுத்தினர். பின்பு ஏன் தேவன் தாம் செயல்பட்ட வழியைத் தேர்ந்து கொண்டார்?
  • 1. அவர், “என்னுடைய வழிகள் உங்களுடைய வழிகள் அல்ல” என்று கூறினார். அவர், “இது உங்களுடைய வெற்றியல்ல, ஆனால் என்னுடைய வெற்றி என்று நீங்கள் அறிய வேண்டும் என்று விரும்புகின்றேன்” என்று கூறினார்.
  • 2. யோசுவாவும் இஸ்ரவேல் மக்களும் தேவனுடைய வழிகளை மதித்தனர்; வனாந்தரத்தில் நாற்பது ஆண்டுகள் என்பது அவர்களைத் தேவன் மிகச்சிறந்தவற்றை அறிகிறார் என்று நம்பச் செய்தது.
 • தேவனுடைய வழிகள் நம்முடைய வழிகள் அல்ல என்பது இன்னமும் உண்மையாய் இருக்கிறது (ஏசாயா 55:8, 9).
  • 1. தேவனுடைய இரட்சிப்பு, ஆராதனை, ஒழுக்கம் மற்றும் பொதுவாக தேவபக்தி ஆகியவற்றைப் பற்றி மனிதர்கள் இரண்டாவது யூகம் செய்ய முயற்சிக்கின்றனர்.
  • 2. தேவனுடைய வழியை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்ற அவசியமின்றி, அவர் கூறியிருப்பதினாலேயே நாம் அவரது வழியைக் கற்று அதற்குக் கீழ்ப்படிய வேண்டும். தேவனுடைய வழி செயல்படுகிறது!

II தேவனுடைய வரங்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

 • இந்த வரலாற்றில், கிருபையின்மீது வல்லமைமிக்க செய்தி ஒன்றுள்ளது. தேவன் அந்த நகரத்தை இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுத்தார் என்பதைக் கவனியுங்கள் (6:2, 16). எனவே அவர்கள் செய்வதற்கு ஒன்றுமில்லாதிருந்தது என்று இது அர்த்தப்படுகிறதா? இல்லை, இந்த வரத்தை ஏற்றுக்கொள்வதற்கு அவர்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் இன்னமும் இருந்தன (6:3முதல்.).
 • இன்றைய நாட்களில், நாம் கிருபையினால் இரட்சிக்கப்படுகிறோம் என்பதை மக்கள் அறியும்போது (எபேசியர் 2:5), சிலர் “அது நாம் எதையும் செய்ய அவசியமில்லை, எதையும் செய்ய இயலாது என்று அர்த்தப்படுகிறது” என்று கூறுகின்றனர். கொடைகள் என்பவை ஏற்றுக்கொள்ளப்படவோ அல்லது மறுக்கப்படவோ முடியும். நாம் செய்யும்படி தேவன் நமக்குக் கூறியுள்ளவற்றை செய்வதின்மூலம் நாம் தேவனுடைய கொடையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
  • 1. எபேசியர் 2:8, விசுவாசத்தினாலே நாம் தேவனுடைய ஆவிக்குரிய கொடையை ஏற்றுக்கொள்ளுகின்றோம் என்று வலியுறுத்துகிறது. விசுவாசமே வெற்றியைக் கொடுக்கிறது (1 யோவான் 5:4)!
  • 2. இது செத்த அல்லது செயல்துடிப்பற்ற விசுவாசமோ அல்ல (யாக்கோபு 2:14-26). நமக்கு ஜீவனுள்ள மற்றும் செயல் துடிப்புள்ள விசுவாசம் தேவை (கலாத்தியர் 5:6). இஸ்ரவேல் மக்கள் தேவனை விசுவாசித்தபடியினால் அவர்கள் அவருக்குக்கீழ்ப்படிந்தனர்.

III. நமது விசுவாசம் செயல்விளக்கப்படுத்தப்பட வேண்டும். 

 • எபிரெயர் 11:30, எரிகோவின் மதில்கள் விசுவாசத்தினால் இடிந்து விழுந்தன என்று வலியுறுத்துகிறது, ஆனால் “பின்பு” என்ற வார்த்தையைக் கவனியுங்கள். அது, மக்கள் பலவற்றைச் செய்த பின்பே நடைபெற்றது (6:8முதல்.).

அதுபோலவே, தேவன்மீது நாம் கொண்டுள்ள விசுவாசமும் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

 • 1. ஒரு கிறிஸ்தவராவதற்கு (மாற்கு 16:16; நடபடிகள் 2:36-38; 8:35-39).
 •  2. கிறிஸ்தவ வாழ்வை வாழ்வதற்கு, வெளிப்படுத்தின விசேஷம் 2:10: “உண்மையாயிரு” என்பது “உண்மைநிறைந்திரு” என்ற நேரடி அர்த்தம் கொண்டுள்ளது.

நமது கீழ்ப்படிதல் நிறைவடைய வேண்டும்.

 • மக்கள் முதல் நாளிலும், இரண்டாவது நாளிலும், ஆறாவது நாளிலும், ஏழாவது நாளில் ஆறாம் முறையாகவும் அந்த நகரத்தைச் சுற்றி வந்த காட்சியைக் கற்பனை செய்து பாருங்கள்: பூமியில் அதிர்ச்சி எதுவும் ஏற்படவில்லை; மதில்களில் விரிசல் எதுவும் ஏற்படவில்லை. ஏழாம் நாளில் அந்த நகரம் ஏழாவது முறை சுற்றி வரப்பட்டபோது, எக்காளங்கள் ஊதப்பட்டன, மக்கள் முழக்கமிட்டனர். பின்பு மதில்கள் இடிந்து விழுந்தன (6:20). எபிரெயர் 11:30, அவர்கள் ஏழு நாட்கள் சுற்றிவந்த பின்பு மதில்கள் இடிந்து விழுந்தன என்று வலியுறுத்துகிறது.
 • முற்றிலுமான கீழ்ப்படிதல் என்பது எப்போதுமே நமது வாழ்வின் இலக்காக இருக்க வேண்டும் (மத்தேயு 7:21; எபிரெயர் 5:8, 9). நாம் ஒருவேளை அந்த இலக்கை ஒருக்காலும் அடையாதவர்களா யிருக்கலாம், ஆனால் ஏதொன்றிற்கும் குறைவாகக் குறிவைத்தல் என்பது நாம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று தேவன் விரும்பு கின்றாரோ, அதைவிடக் குறைவுபட்டு இருத்தலும் நமது ஆத்து மாக்களை இடர்ப்பாட்டிற்கு உட்படுத்துதலுமாக இருக்கிறது.

முடிவுரை

நாம் தேவனிடம் விவாதம் செய்யாதிருப்போமாக. நாம் தேவனை விசுவாசிப்போமாக (எபிரெயர் 13:5ஆ, 6) மற்றும் அவர் கூறுபவற்றையும் செய்வோமாக. அப்போது நமது மதில்களும் இடிந்து கீழே விழும்! நாம் தேவனு டைய வழியை முற்றிலுமாகப் புரிந்துகொண்டிருப்பினும் இல்லாதிருப்பினும், அது செயல்படுகிறது!

Leave a Reply