நியாயாதிபதிகள் மற்றும் ரூத் ஆய்வு

நியாயாதிபதிகள் மற்றும் ரூத்: கொந்தளிப்பின் மத்தியில் அன்பு

வாசிக்க வேண்டிய அதிகாரங்கள்: நியாயாதிபதிகள் 1-4, 6-16; ரூத் 1-4.

தலைப்பு

நியாயாதிபதிகள் என்ற தலைப்பு, யோசுவா மரணத்திற்குப் பின்பு தேவனால் (2:16) எழுப்பப்பட்ட இஸ்ரவேல் மக்களின் நடத்துனர்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதற்குரிய கிரேக்க மொழித்தலைப்பானது, “நீதிபதி கள்” என்று மாத்திரம் அர்த்தப்படுத்துவதாயிருக்கலாம். ஆனால் இவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஒருக்காலும் எந்த ஒரு நீதி மன்றத்திலும் தலைமை வகித்திருந்ததில்லை. எபிரெய மொழியில் இந்தத் தலைப்பானது மிகவும் பொருள் விரிவானதாக உள்ளது, இது “நீதிபதிகள், ஆட்சியாளர்கள், விடுதலையாளர்கள்” என்று அர்த்தப்படுகிறது.

ரூத் புத்தகத்தின் தலைப்பானது, அதன் முக்கியமான கதாபாத்திரத்தில் ஒருவரான, உண்மையான தேவனில் விசுவாசியான ரூத் என்ற மோவாபியப் பெண்ணின் பெயரிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது.

பின்னணி

நியாயாதிபதிகளின் காலம் கொந்தளிப்பின் காலமாக இருந்தது. யோசுவாவின் மரணத்திற்குப் பின்பு, மைய அரசு எதுவும் இருக்கவில்லை; “அவனவன் தன்தன் பார்வைக்குச் சரியானபடி செய்துவந்தான்” (17:6; 18:1; 19:1; 21:25).

அந்த நாட்டின் குடிகளை முற்றிலுமாகத் துரத்திவிடும்படி தேவன் இஸ்ரவேல் மக்களுக்குக் கூறியிருந்தார், ஆனால் அவர்கள் அதைச் செய்ய வில்லை (1:21-36). அவர்களிடையில் இருந்த புறதெய்வ ஜனங்களின் செல் வாக்கினால் இஸ்ரவேல் மக்கள் தேவனை விட்டுப் புறம்பே திரும்பினார்கள். அவர்கள் இதைச் செய்தபோது, மற்ற மக்களினங்கள் வந்து இஸ்ரவேல் மக்களை அடக்கியாளத் தேவன் அனுமதித்தார். அவர்கள் (இஸ்ரவேல் மக்கள் மனந்திரும்பியபோது, தேவன் ஒரு விடுதலையாளரை, “ஒரு நியாயாதி பதியை” அனுப்பினார் (2:16-19). சற்றுக்காலம் மக்கள் தேவனுக்குக் கீழ்ப்படிந்தி ருப்பார்கள்; பின்பு அவர்கள் மீண்டும் விக்கிரகாராதனையில் வீழ்ந்து போவார்கள், பின்பு முன்கூறப்பட்ட செயல்கள் யாவும் திரும்பவும் நடைபெறும். மீண்டும் விழுந்துபோகுதல், தண்டனை பெறுதல், மனந்திரும்புதல் மற்றும் மீட்கப்படுதல் என்ற சுழற்சியானது திரும்பத் திரும்ப நடைபெற்றது.

நியாயாதிபதிகள் நாட்டை முழுவதும் ஆண்ட அரசர்களைப்போல் இருக்கவில்லை, மாறாக அவர்கள் குறிப்பிட்ட தேவைகளுக்காகத் தேவனால் எழுப்பப்பட்ட உள்ளூர் விடுதலையாளர்களாய் இருந்தனர். அனேகமாக அவர்களின் ஊழியமானது ஒன்றின்மீது இன்னொன்று கவிந்திருந்தது.

ஒருவர் நியாயாதிபதிகளின் புத்தகத்தை வாசிக்கும்போது, நாட்டில் வன்முறை மாத்திரமே இருந்தது என்ற கருத்து ஏற்படலாம்; ஆனால் ரூத் என்ற அமைதியும் இனிமையும் உடைய புத்தகமானது “நியாயாதிபதிகள் ஆண்ட நாட்களில்” நடைபெற்றதைக் குறிப்பதாக உள்ளது. கலகத்தின் மத்தியிலும் சாதாரண மக்கள் இன்னமும் தேவனுக்கு உண்மையுள்ள வாழ்வை வாழ்ந்து கொண்டிருந்தனர்.

தாவீது அரசரின் வம்சவழியை நிலைநாட்டுதல் (4:21, 22) மற்றும் நிறைவாக இயேசுவின் வம்சவழியை நிலைநாட்டுதல் (மத்தேயு 1:5, 6) என்பதே ரூத் புத்தகத்தின் அடிப்படை நோக்கமாகக் காணப்படுகிறது. இந்தப் புத்தகங்களை எழுதியது யார் என்று நாம் அறிவதில்லை; இஸ்ரவேல் மக்களின் கடைசி நிாயாதிபதியான சாமுவேல் இவற்றை எழுதியிருக்கலாம் என்பது நல்ல யூகமா யிருக்கும்.

நியாயாதிபதிகள் புத்தகத்தின் வரைகுறிப்பு பின்னணி: இஸ்ரவேல் மக்கள் (கானான் நாட்டின்) குடிகளை முற்றிலுமாகத் துரத்தியிருக்கவில்லை (1), இதனால் தேவன் அவர்கள்மீது பிரியமற்றுப் போனார். (2:1-5). கடும் தீமையான சுழற்சியொன்று தொடங்கிற்று (2:6-3:4).

 1. முதல் சுழற்சி.
 • A விசுவாச விலக்கம் (3:5-7),
 • மெசொப்பொத்தாமியர்களின்: அடக்குமுறைக்
 • விடுவிக்கப்படுதல்: ஒத்னியேல் (3:9-11).

II இரண்டாம் சுழற்சி.

 • விசுவாச விலக்கம் (3:12அ).
 • அம்மோனியர்கள் மற்றும் அமலேக்கியர்களுடன் சேர்ந்து மோவாபியர்களின்: அடக்குமுறைக் கொடுமை (3:12ஆ-14).
 • விடுவிக்கப்படுதல்: ஏகூத் (3:15-30).

III. மூன்றாம் சுழற்சி.

 • அடக்குமுறைக் கொடுமை: பெலிஸ்தர்கள் (3:31).
 • விடுவிப்பவர்: சம்கார் (3:31).
 1. நான்காம் சுழற்சி.
 • விசுவாச விலக்கம் (4:1).
 • அடக்குமுறைக் கொடுமை: கானானியர்கள் (4:2, 3),
 • விடுவிப்பவர்கள்: தெபொராள் மற்றும் பாராக் (4:4-5:31),
 1. ஐந்தாவது சுழற்சி.
 • A விசுவாச விலக்கம் (6:1அ).
 • அடக்குமுறைக் கொடுமை: அமலேக்கியர்களுடன் சேர்ந்து மீதியா

னியர்கள் (6:1ஆ-10).

 • விடுதலையாளர்: கிதியோன் (6:11-8:32).
 • மீண்டும் விசுவாச விலக்கம் (8:33-35). E. அபகரிப்பாளன்: அபிமெலேக்கு (9).
 • விடுதலையாளர்கள்: தோலா (10:1, 2) மற்றும் யாயீர் (10:3-5).

VI ஆறாம் சுழற்சி.

 • விசுவாச விலக்கம் (10:6).
 • அடக்குமுறைக் கொடுமை: பெலிஸ்தர்கள் மற்றும் அம்மோனி- யர்கள் (10:7-18).
 • விடுதலையாளர்கள்: யெப்தா (11:1-12:7), இப்சான் (12:8-10), ஏலோன் (12:11, 12), மற்றும் அப்தோன் (12:13-15).

VII ஏழாம் சுழற்சி.

 • விசுவாச விலக்கம் (13:1அ).
 • அடக்குமுறைக் கொடுமை: பெலிஸ்தர்கள்
 • விடுதலையாளர்: சிம்சோன் (13:2-16:31).

பிற்சேர்க்கை: ஒழுக்கச் சூழ்நிலை (17-21).

நியாயாதிபதிகள் மற்றும் ரூத்தின் சரித்திரம் என்ற புத்தகங்களில் இருந்து பாடங்கள்

மனிதன் தேவனுடைய வழியைப் பின்பற்றுவதற்குப் பதிலாகத் தனது சொந்த வழியைப் பின்பற்றும்போது, குழப்பமே விளைகிறது. தேவன் தமது மக்களின் மத்தியில் பாவத்தை சகித்துக்கொண்டிருப்பதில்லை. நம்மைத் தட்டியெழுப்புவதற்காகத் தேவன் நம்மீது தண்டனையை அனுப்பலாம். நாம் மனந்திரும்பினால், தேவன் நம்மைத் திரும்பவும் ஏற்றுக்கொள்வார்.

நாம் நமது பிள்ளைகளுக்குப் போதிக்க வேண்டும். நாம் தவறினால், ஒரு தலைமுறையிலேயே சபையானது இழந்து போகப்படக்கூடும் (நியாயாபதிகள் 2:10-13ஐக் காணவும்).

நாம் உலகத்தில் மோசமான நிலையைக் கொண்டிருந்தாலும்,நகோமி, ரூத், மற்றும் போவாசு ஆகியோர் செய்ததைப் போன்று நாமும் நமது தேவனுக்கு உண்மை நிறைந்த வாழ்வை வாழ்ந்து அதன்மூலம் நமது கடமையை நிறைவேற்ற முடியும்.

தேவன் உலகத்திற்கு இயேசுவைக் கொண்டுவருதல் என்ற தமது திட்டத்தைத் தொடர்ந்தார் என்பது மிகவும் முக்கியமானதாக உள்ளது!

அன்பின் வரலாறு (ரூத்)

நியாயாதிபதிகளின் முரட்டுத்தனமான ஆளுகையைப் பற்றி நாம் வாசித்தபின்பு, இஸ்ரவேல் மக்கள் உண்மையற்றதன்மை, விசுவாசவிலக்கம், மற்றும் ஒழுக்கச் சீர்குலைவு ஆகியவற்றினால் மாத்திரம் நிரப்பப்பட்டிருந்தனர் என்று நாம் நினைக்கத் தலைப்படலாம். ரூத் என்ற அழகிய புத்தகமானது, அமைதி யான காட்சிகளில் உண்மை, நற்பண்பு, மற்றும் அன்பு ஆகியவை இன்னமும் தங்கியிருந்தன என்று காண்பிக்கிறது. மிக மோசமான காலங்களிலும்கூட, தேவனுக்கு உண்மைநிறைந்தவர்கள் இருக்கின்றனர்.

இந்த அன்பின் வரலாறு உண்மையில் அன்பின் மூன்று வரலாறுகளாக உள்ளது. இவற்றில் முதல் இரண்டு ரூத்தை மையமாகக் கொண்டுள்ளன; நகோமியின்மீது ரூத்தின் அன்பு மற்றும் ரூத் மற்றும் போவாசு ஆகியோரின் அன்பு. மூன்றாவது அன்பின் வரலாறு குறைவான தெளிவுடையதாக உள்ளது, ஆனால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இவ்வரலாற்றை நாம் திரும்பவும் கூறுகையில் இதை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று பாருங்கள்.

 1. ரூத்தும் நகோமியும் ஒருவருக்கொருவர் கொண்டிருந்த அன்பு.
 2. பலஸ்தீன நாட்டில் ஏற்பட்ட பஞ்சத்தின் காரணமாக, எலிமெ லேக்கும் நகோமியும், தங்கள் இரண்டு மகன்களுடன் மோவாபிய நாட்டிற்குச் சென்றனர். அங்கு, அவர்கள்மீது துன்பத்தின் மேல் துன்பமாக விழுகிறது. எலிமெலேக்கு மரிக்கின்றார். மகன்கள் மோவாபியப் பெண்களான ஒர்ப்பாள் மற்றும் ரூத் என்பவர்களைத் திருமணம் செய்துகொள்கின்றனர். இரண்டு மகன்களும் மரிக் கின்றனர் (1:3-5, 13, 20, 21).
 3. யூதேயாவில் நிலைமை இப்போது மேன்மையானது என்பதை அறிந்த நகோமி, இல்லம் திரும்ப முடிவு செய்கின்றாள். அவளது மருமகள்களும் அவளுடன் நாட்டு எல்லை வரையிலும் செல்லு கின்றனர். நகோமியின் வற்புறுத்தலினால், ஓர்ப்பாள் திரும்பிச் செல்லுகின்றாள் (1:8-10, 14), ஆனால் ரூத்தோ நகோமியைவிட்டுச் செல்வதற்கு மறுத்து விடுகின்றாள் (1:15-17).
 • ரூத் 1:16, 17ல் உள்ளவை, ஒப்புக்கொடுத்தலுக்கென்று வேதாகமத்தில் உள்ள மாபெரும் கூற்றுக்களில் ஒன்றாக உள்ளது. அன்பு என்பது ஒருவர், மற்றொருவரின் மகிழ்ச்சிக் காகத் தன்னையே தியாகம் செய்தலாக உள்ளது.
 • நாம் நமது துணைவர்களிடம்/துணைவியர்களிடம் இவ்வகை யான ஒப்புக்கொடுத்தலை ஏற்படுத்துதல் அவசியமாய் இருக்கிறது. நாம் கர்த்தரிடத்திலும் இவ்வகையான ஒப்புக்  கொடுத்தலை ஏற்படுத்துதல் அவசியமாய் இருக்கிறது.
 1. ரூத்தும் போவாசும் ஒருவர் மற்றவர்மீது கொண்டிருந்த அன்பு.
 2. ரூத் தனக்கும் நகோமிக்கும் பிழைப்பு உண்டாகும்படிக்கு வயல்களில் கோதுமையைப் பொறுக்கினாள் (லேவியராகமம் 23:22ஐக் கவனிக்கவும்). அவள் அவ்வாறு கோதுமையைப் பொறுக்கிக் கொண்டிருந்தபோது, உறவினனான போவாசு வயலுக்கு வருகின்றார் (2:1, 4) மற்றும் அவர் அவளது அன்பின் தியாகம் அறியப்பட்டது என்று வெளிப்படுத்துகின்றார் (2:11, 12). போவாசு ரூத்தின் செய்கையால் மனம் கவரப்படுகின்றார் (2:5, 6) மற்றும் அவர் அவளிடம் தனது வேலைக்காரர்களுடன் கோதுமை யைப் பொறுக்கிக்கொள்ளுவதில் சுதந்திரமாய்ச் செயல்படும்படி அவளிடம் கூறுகின்றார். அன்று இரவில் அவள் ஒரு எப்பா (மூன்றுபடி) அளவு வாற்கோதுமையை – இது பல நாட்களுக்குப் போதுமானது சேர்த்திருந்தாள்.
 3. நகோமி, போவாசு நெருங்கிய உறவினன் என்பதைக் கவனிக் கின்றாள் (2:19, 20) மற்றும் “இது நல்லது” என்று கூறுகின்றாள் (2:22). மரணம் அடைந்தவரின் நெருங்கிய உறவினர், மரணம் அடைந்தவரின் உடைமைகளை மீட்டுக்கொள்ளும் உரிமை யையும், (லேவியராகமம் 25:25) மரணம் அடைந்தவரின் பெயரில் பிள்ளைகளைப் பெற்றுவளர்க்கும் உரிமையையும் (மத்தேயு 22:24ஐக் காணவும்) நியாயப்பிரமாணம் அளித்திருந்தது.
 4. போவாசு ரூத்தின்மீது தனது பிரியத்தைக் காண்பிக்கின்றார், ஆனால் அவர் அவளைவிட முதியவராய் இருந்தபடியால் தமது திருமண உறவை அவளிடம் வலியுறுத்தவில்லை. நகோமி, காலம் மற்றும் இடத்தின் பழக்க வழக்கங்களை அறிந்தவளாக, ரூத் ஆர்வ மாய் இருப்பதைப் போவாசிடம் கூறுவது எப்படி என்று அவளுக்குக் கூறுகின்றாள்.
 • ரூத் போவாசின் பாதங்களின் கீழ் இருக்கின்றாள் (3:9, 10). போவாசு மன எழுச்சியடைகின்றார்! காரியங்கள் செயல்படும் என்பதை நகோமி அறிகின்றாள் (3:18).
 • போவாசும் (முதல் உரிமையைக் கொண்டிருந்த இன்னொரு) உறவினனும் (4:1, 3-6, 8) சந்திக்கின்றனர். பாதரட்சையைக் கழற்றிப்போடும் சடங்கு பெறுகிறது (உபாகமம் 25:9முதல்.).
 1. போவாசும் ரூத்தும் திருமணம் செய்துகொள்கின்றனர், ஒரு மகன் பிறக்கின்றான் (4:13)

III இஸ்ரவேல் மக்கள் மற்றும் நம்மீது தேவனுடைய அன்பு.

 1. தேவன் தம் மக்கள்மீது கொண்ட அன்பு என்பது மிகக்குறைவாய் வெளிப்படுத்தப்பட்ட வரலாறாக இதில் உள்ளது.
 • தேவன் கட்டுப்பாடு செலுத்துகின்றார் என்பதற்கு இப்புத்த கத்தில் பல குறிப்புகள் இருக்கின்றன என்பதைக் கவனியுங்கள் (1:6, 8, 9, 17, 20, 21; 2:4, 12; 4:11-14). நாம் நகோமியின் இறையியல்மீது (1:20, 21) வாக்குவாதம் செய்யலாம், ஆனால் அவளது விசுவாசத்தின்மீது வாக்குவாதம் செய்ய இயலாது.
 • தேவன் இந்த வரலாற்றை வேதாகமத்தில் உள்ளடக்கியது ஏன்?
  • ஏனென்றால் அன்பு என்பது ஒரு அழகுமிக்க விஷயமாக உள்ளது.
  • அவர் மனிதருக்கென்று தாம் கொண்டுள்ள திட்டத்தைச் செயல்படுத்துவதைக் காட்டுவதற்காக இதை உள்ளடக்கி னார். இங்கு தேவன், தாவீது அரசர் வரக்கூடிய வம்ச வழியை நிலை நாட்டினார் (4:17)!
 1. ரூத்தின் சரித்திரமானது, இஸ்ரவேல்மீது தேவன் கொண்ட அன்பையும் நம்மீது தேவன் கொண்டுள்ள அன்பையும் காண் பிக்கிறது.
 • காலங்கள் எப்படியிருப்பினும், தேவன் இன்னமும் தமது அன்பைக் காண்பிப்பார்: என்று இப்புத்தகம் இஸ்ரவேல் மக்களுக்குக் கூறிற்று.
  • a அவர் தம்மீது விசுவாசம் கொண்டிருந்த சாதாரண மக்களின் வாழ்வில் செயல்பட்டுக்கொண்டிருந்தார்.
  • அவர் இஸ்ரவேல் மக்களினத்திற்குத் தாவீது அரசரைக் கொடுப்பதற்காக அவர்களிடத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தார்.
 • இப்புத்தகம் நமக்கும் சிலவற்றை உரைக்கிறது; காலங்கள் எப்படி இருப்பினும், தேவன் எப்போதும் தமது அன்பைக் காண்பிப்பார்.
  • தேவன் மக்கள்மீது பொதுவில் தமது அன்பைக் காண்பிக் கின்றார். தாவீதின் வம்சவழியானது நிறைவாகக் கிறிஸ் துவைக் கொண்டுவந்தது (மத்தேயு 1:15, 16)!
  • தேவன் நம்மீது கொண்டுள்ள அன்பை, நாம் வாழ்கின்ற ஒவ்வொரு நாளிலும் குறிப்பாகக் காண்பிக்கின்றார்!

முடிவுரை

 1. ரூத் நகோமியின்மீது அன்புகூர்ந்தாள், ஆனால் நகோமியும் ரூத்தின் மீது அன்புகூர்ந்தாள்.
 2. போவாசு ரூத்தின்மீது அன்புகூர்ந்தார், ஆனால் ரூத்தும் போவாசு மீது அன்புகூர்ந்தாள்.
 3. தேவன் நம்மீது அன்புகூருகின்றார். D. அன்பு என்பது ஒரு பக்கம் மாத்திரமே உள்ளது என்றால் அது கவலைப்படக் கூடியதாக இருக்காதா (1 யோவான் 5:2, 3)?

Leave a Reply