2 சாமுவேல்: ஆய்வு
தேவனுடைய இருதயத்திற்கு ஏற்ற மனிதர்
வாசிக்க வேண்டிய அதிகாரங்கள்: 1-7, 9-20, 23, 24,
தலைப்பு
2 சாமுவேல் என்ற இப்புத்தகத்தில் சாமுவேல் காணப்படாத போதி லும், தொடக்கத்தில் 1 மற்றும் 2 சாமுவேல் புத்தகங்கள் ஒரே புத்தகமாய் இருந்ததால், இது அவரது பெயரைத் தாங்கியுள்ளது (1 சாமுவேல் புத்தகம் பற்றிய குறிப்புகளில் காணவும்).
பின்னணி
2 சாமுவேல் புத்தகம் தாவீதின் ஆட்சியைப் பற்றியதாக உள்ளது. தாவீது நாற்பது ஆண்டுகள் ஆட்சிசெய்தார், ஆனால் இவற்றில் முப்பத்து மூன்று ஆண்டுகள் மாத்திரமே சமஸ்த இஸ்ரவேல்மீதும் ஆட்சிசெய்தார்; முதல் ஏழு ஆண்டுகளும் ஆறுமாதங்களும், அவர் யூதாவின்மீது மாத்திரம் ஆட்சி செய்தார் (5:4, 5). இந்தப் பிரிவினையானது, சாலொமோனுடைய மரணத்திற்குப் பின்பு நாடு பிரிந்த ராஜ்யமாக உடைபடும்வரையிலும் தொடர்ந்து நிலவிவந்தது.
தாவீதின் ஆளுகையானது நிறைவாக, மற்ற எல்லா ஆளுகைகளும் அளக்கப்படுவதற்கான அளவு தொகையாயிற்று (1 இராஜாக்கள் 15:3; முதலியன.). எருசலேமில் தலைநகரத்தை நிலைநாட்டுதல் என்பது தாவீதின் சாதனைகளில் ஒன்றாக இருந்தது (5:6-10), அந்த நகரம் பெரும்பான்மையான இஸ்ரவேல் மக்களின் சிந்தைகளில், அவர்களின் தேவபக்திக்கு/மதத்திற்கு மையமாயிற்று.
வேதாகமம் மனிதர்களிடத்தில் இருந்தல்ல, ஆனால் தேவனிடத்தில் இருந்து வந்துள்ளது என்பதற்கு, அதன் மாபெரும் பாத்திரங்கள் பற்றிய அதன் திறந்த தன்மை ஒரு ஆதாரமாக உள்ளது. தாவீதின் பாவங்கள் மூடி மறைக்கப்பட்டு இருப்பதில்லை. தாவீது பூரணமானவர் என்பதால் அல்ல, ஆனால் அவர் மனந்தி ரும்பி தேவனிடம் திரும்ப மனவிருப்பம் கொண்டிருந்ததாலேயே, அவர் “தேவனுடைய இருதயத்திற்கு ஏற்ற மனிதராக” இருந்தார் (சங்கீதம் 32 மற்றும் 51 ஆகியவற்றைக் காணவும்).
நாத்தான் மற்றும் காத் என்பவர்கள் இப்புத்தகத்தை எழுதியிருக்கச் சாத்தி யக்கூறுள்ளது (1 சாமுவேல் புத்தகத்திற்கான குறிப்புகளில் காணவும்).
வரைகுறிப்பு
தாவீதின் புகழ் (1-10).
- சவுலின் மரணம் குறித்துத் தாவீதின் புலம்பல் (1)
- தாவீது யூதாவின்மீது மாத்திரம் அரசராக ஏற்படுத்தப்படுதல் (2:1-11).
- உள்நாட்டு யுத்தத்தின் காலம் (2:12-4:12).
- தாவீது சமஸ்த இஸ்ரவேல்மீதும் அரசராக ஏற்படுத்தப்படுதல்; அவர் அற்புதமான வகையில் ஆட்சி செய்கிறார் (5,6).
- என்றென்றைக்கும் இருக்கும் ராஜ்யம் பற்றி ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கை (7).
- தாவீதின் ஆட்சியில் உச்சக் கட்டம் (8-10).
தாவீதின் வெட்கக்கேடு (11-24).
- தாவீது பத்சேபாளுடன் பாவம் செய்தல் (11).
- தாவீதின் மனந்திரும்புதல் (12:1-14).
- பட்டயம் அவர் வீட்டை விட்டு நீங்காதிருத்தல் (12:15-18:33).
- பிள்ளையின் மரணம் (12:15-25).
- தாமார் கற்பழிக்கப்படுதல் (13:1-22).
- அப்சலோம் அம்மோன்மீது பழி வாங்குதல் (13:23-29).
- அப்சலோமின் கலகம் (14-17).
- அப்சலோம் கொல்லப்படுதல் (18)
தாவீதின் கடைசி நாட்கள்: கலக்கம் அடைதல், ஆனாலும் வெற்றி கொள்ளுதல் (19-24).
- தாவீது எருசலேமில் மீண்டும் நிலைநாட்டப்படுதல் (19).
- மீண்டும் உள்நாட்டு யுத்தம் (20).
- பஞ்சமும் யுத்தமும் (21).
- நன்றி செலுத்தலின் சங்கீதம் (22).
- தாவீதின் கடைசி வார்த்தைகள் (23),
- ஜனத்தொகைக் கணக்கெடுத்தல் என்ற பாவமும் கொள்ளை நோயும் (24)
2 சாமுவேல் புத்தகத்தில் இருந்து பாடங்கள்
தாவீதின் வாழ்வு, பாவத்தின் விளைவின்மீதான மாபெரும் கருத்து நோக்கப் பாடமாக உள்ளது. கலாத்தியர் 6:7, 8ன் சத்தியமானது இந்த அண்டத்தின் பின்னலுக்குள் எழுதப்பட்டுள்ளது: “மோசம் போகாதிருங்கள். தேவன் தம்மைப் பரியாசம் பண்ணவெட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினாலே அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்.” ஒருவர் மனந்திரும்பி, அவரது பாவக்குற்றம் நீக்கப்பட்டாலும்கூட, பாவத்தின் விளைவு இன்னும் உள்ளது. அறுபது நிமிட நடவடிக்கையானது அறுபது ஆண்டுகள் வாழ்வை நிர்மூலமாக்கக்கூடும். இளம் மக்களே, முதிய மக்களே பாவத்தில் இருந்து விலகியிருங்கள்! பாவம் பயங்கரமானதாக
உள்ளது! யாரேனும் ஒருவர் எப்போதும் நமக்கு மோசமான ஆலோசனைகளைக் கொடுப்பதற்கென்று இருக்கின்றார் (13:3-5), வஞ்சகமான ஆண்கள், பெண்ணிடம் “நீ உண்மையிலேயே என்னை
நேசித்தால், என்னுடன் நீ படுத்துக்கொள்வாய்” என்று கூறுகின்றனர். அவர்கள் தாங்கள் விரும்பியதைப் பெற்ற பின்பு, அவர்களின் “அன்பு” என்பது பொதுவாக வெறுப்பாக மாறுகிறது (13:1, 15).
தாவீது தமது மகனைப் பற்றி, “அது மரித்திருக்கிற இப்போது நான் உபவாசிக்கவேண்டியது என்ன? இனி நான் அதைத் திரும்பி வரப் பண்ணக்கூடுமோ?” என்று கேட்கும் 12:23ம் வசனமும், எபூசியனாகிய அர்வனாவிடத்தில் தாவீது, “நான் இலவசமாய் வாங்கி, என் தேவனாகிய கர்த்தருக்குச் சர்வாங்க தகன பலிகளைச் செலுத்தாமல்” என்று கூறும் 24:24ம் வசனமும் சிந்தனையைத் தூண்டும் இரண்டு வசனங்களாக உள்ளன.
2 சாமுவேல் 7, வேதாகமத்தில் உள்ள மாபெரும் அதிகாரங்களில் ஒன்றாகும், அதில் நாம் தாவீதுடன் தேவன் செய்துகொண்ட உடன்படிக்கையானது, ஒரு பகுதி சாலொமோன் மற்றும் யூதாவின் அரசர்களில் நிறைவேறிற்று (1 நாளாகமம் 22:6-10; 28:3-6), ஆனால் இது இயேசு கிறிஸ்துவின் வருகையில் முற்றிலுமாக நிறைவேறிற்று (எபிரெயர் 1:1-8).
இளம்பிராயத்துக் கலகக்காரன் (2 சாமுவேல் 13-18) தாவீதை அவரது கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடிய நிலையில், “என் மகனாகிய அப்சலோமே, என் மகனே, என் மகனாகிய அப்சலோமே, நான் உனக்குப் பதிலாகச் செத்தேனானால் நலமாயிருக்கும்; அப்சலோமே, என் மகனே, என் மகனே” என்று அழுவதைச் சித்தரித்துப் பாருங்கள் (2 சாமுவேல் 18:33). தாவீது இவ்வளவு அதிகமாய் அன்பு செலுத்திய இந்த இளைஞனை நாம் கண்ணோக்குவோம்.
நல்ல எதிர்காலத்தைக் கொண்டிருந்த ஒரு இளைஞன்.
நமது வரலாறு, அப்சலோம் இளைஞனாக, ஒருவேளை இன்னும் தனது விடலைப்பருவத்தில் இருக்கையில் தொடங்குகிறது.
- நமது உலகம் இன்றைய நாட்களில் இளமையாக உள்ளது. நமது மக்கள்தொகையில் மிக உயர்ந்த சதவிகிதம் இளைஞர் களாக உள்ளது – மற்றும் எஞ்சியுள்ள நாம் இளைஞர்களாய் இருப்பது போன்று நடிக்க முயற்சி செய்கின்றோம்.
- இளம்பிராயம் என்பது அற்புதமான காலமாக உள்ளது, ஆனால் இது பொறுப்பின் காலமாகவும் உள்ளது. அப்சலோம் இளைஞனாயிருந்தது மட்டுமின்றி; மாபெரும் எதிர் காலத்தையும் கொண்டிருந்தார்.
- அவர் அரசரின் – தாவீது அரசரின் – மகனாயிருந்தார்.
- அவர் நல்ல தோற்றம் மற்றும் ஆளுகைத்தன்மை ஆகியவற் றினால் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தார். அவர் மக்கள் நேசித்த ஒரு மனிதனாக இருந்தார்.
கலகக்காரர்.
- அப்சலோமைப் போன்ற சில இளைஞர்களுக்கு, கலகம் (“rebellion”] என்பது “நான்காவது” போன்றதாக உள்ளது.
- பெரும்பான்மையான மனிதர்கள் தங்கள் விடலைப் பருவத்தில் கலகம் விளைவிக்கும் காலகட்டம் ஒன்றினூடே கடந்து செல்கின்றனர், ஆனால் அவர்களின் பெரும்பான்மை யானவர்கள் இந்தக் காலகட்டத்தில் சிறிதளவு சேதமே அடைகின்றனர்.
- இருப்பினும், சில மனிதர்களுக்கு, இந்தக் கலகம் என்பது வாழ்வின் வழியாகிறது, அவர்கள் இதிலிருந்து எவ்வகையிலும் வளர்வதில்லை. அப்சலோம் இவர்களில் ஒருவராக இருந்தார்.
- அப்சலோமின் இருதயம் நேர்மையாக இருக்கவில்லை என்பதே இடர்பாடாக இருந்தது.
- வெளிப்புறத்தில் அவர் அழகியவராய் இருந்தார்; உள்ளேயோ அவர் அழகற்றவராக இருந்தார்.
- அவர் அனேகமாக பத்சேபாளிடத்தில் தாவீது செய்த பாவத்தை சுட்டிக்காட்டியிருக்கலாம் – மற்றும் ஒரு வேளை அவரைத் தாவீது புறக்கணித்திருக்கலாம் – ஆனால் அவர் இன்னமும் தேவனுக்கு முன்பாகத் தமக்காகப் பொறுப்பு ஒப்புவிக்க வேண்டியவராக இருந்தார்.
- அவரது கலகத்தின் சில வெளிப்பாடுகள்:
- அவர் வஞ்சகமானவராக இருந்தார். அவர் தமது தந்தையிடம் ஒரு முகத்தையும் மக்களிடம் வேறொரு முகத்தையும் முன் வைத்தார். அவர் ஆதரவை ஆதாயப்படுத்துவதற்காக குசுகுசுப்பு ஒன்றைத் தொடங்கினார்.
- அவர் தவறான கூட்டத்துடன் சேர்ந்து ஓடினார்.
- சிலர் தவறான கூட்டத்தால் ஈர்க்கப்பட்டு, பின்பு அதி லேயே நிலைத்து விடுகின்றனர்.
- கூட்டத்துடன் சென்றுவிடாதபடி இயேசு நமக்கு அறைகூவல் விடுக்கின்றார். இது கடினமானதாக உள்ளது, ஆனால் அவர் உதவ முடியும்.
- அவர் ஒழுக்கமற்றவராக இருந்தார்.
- a அவரது ஒழுக்கவீனத்தின் வரலாறு கீழ்த்தரமானதாக இருக்கிறது.
- தேவன் உங்களுக்குப் பாலுறவு என்ற கொடையைக் கொடுத்தார்; அதைத் தவறாகப் பயன்படுத்த வேண்டாம்.
- அவர் சுயநலமுள்ளவராக இருந்தார். அவர் அரசராக இருக்க விரும்பிய காரணத்தால் 20,000 பேர்களுக்கும் அதிகமான வர்கள் கொல்லப்பட்டனர். அவர் தம் வழியில் செல்வதற்கு முடிகின்ற வரையில், யார் துன்புற்றார் என்பது பற்றி அவர் அக்கறை கொள்ளாதிருந்தார்.
- அவர் ஓரளவு தேவபக்தியுள்ளவராக இருந்தார், அது மிகவும் கொஞ்சமாக இருந்தது – அது அவரது வாழ்வில் செயல்விளைவை ஏற்படுத்த உண்மையில் போதுமானதாக இருந்ததில்லை – என்பது அவரது பிரச்சனைகளில் ஒன்றாக இருந்தது. கடைசியில் நியாயத்தீர்ப்பு வந்தது.
- அவரிடத்தில் தேவன் பொறுமையாய் இருந்தார். ஆனால் அப்ச லோமின்மீது கடைசியில் நியாயத்தீர்ப்பு வந்தது.
- இது இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் ஆகிய அனை வருக்கும் வருகிறது.
- அப்சலோமின் கவலைதரும் மரணம். (அப்சலோமே, அது எந்த அளவுக்குத் தகுதியானதாக இருந்தது?)
- ஒரு கருத்தைக் குறிப்பிட்டாக வேண்டும்: அவர்மீது தாவீது கொண்டிருந்த அன்பு, நியாயத்தீர்ப்பு வருவதைத் தடைசெய்ய இயலாததாக இருந்தது.
- நாம் தொடங்கிய காட்சிக்குப் பின்திரும்புதல்.
- தேவன் உங்கள்மீது அன்பு கூருகின்றார்! அவர் தமது குமாரனை உங்களுக்காக மரிக்கும்படி அனுப்பினார்! நீங்கள் அவரை மறுதலித்தால், நியாயத்தீர்ப்பு வரும்! தேவனுக்கு எதிராகக் கலகம் செய்யாதீர்கள்!
முடிவுரை
ஒரு பெற்றோரின் மாபெரும் அன்புகூட, பாவத்தின் விளைவைத் தடுத்து நிறுத்த முடியாது. கலகம் செய்கின்ற பிள்ளை அழிந்து போவான், அவனது பெற்றோரும் அவனுடன் சேர்ந்து துன்புறுவார்கள். நமது பிதாவாகிய தேவன், நமது பாவங்களின் விளைவுகளில் இருந்து நாம் புறம்பே திரும்ப ஒரு அளிப்பை ஏற்படுத்தியுள்ளார். அவரது அன்பிற்குப் பதில் அவரது நியாயத்தீர்ப்பைத் தேர்ந்து கொள்ளாதீர்கள்!