1 இராஜாக்கள்: ஆய்வு

1 இராஜாக்கள்: ஆய்வு

இஸ்ரவேல் சாம்ராஜ்யத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்

வாசிக்க வேண்டிய அதிகாரங்கள்: 1-19, 21, 22.

தலைப்பு

தொடக்கத்தில் 1 மற்றும் 2 சாமுவேல் புத்தகங்கள் போன்றே 1 மற்றும் 2 இராஜாக்கள் புத்தகங்களும் ஒரே புத்தகமாகவே இருந்தன. 1 மற்றும் 2 சாமுவேல் புத்தகங்கள் “1 இராஜாக்கள்,” என்றும் 1 மற்றும் 2 இராஜாக்கள் புத்தகங்கள் “2 இராஜாக்கள்” என்றும் அறியப்பட்டிருந்தன. நாம் தற்போது கொண்டிருக்கின்ற 1 மற்றும் 2 இராஜாக்கள் புத்தகங்கள், எபிரெய மொழியில் 1 இராஜாக்கள் 1:1ல் முதலாவதாக உள்ளது, தமிழ் மொழிபெயர்ப்பில் “இராஜா. …” என்றும் உள்ளதுமான வார்த்தையைக் கொண்டு பெயரிடப்பட்டுள்ளன.

பின்னணி

1 இராஜாக்கள் புத்தகம் இயல்பான இரு பிரிவுகளைக் கொண்டுள்ளது: (1) சமஸ்த இஸ்ரவேல்மீது சாலொமோனின் ஆளுகை மற்றும் (2) இஸ்ரவேல், தெற்கு ராஜ்யம் மற்றும் வடக்கு ராஜ்யம் என்று பிரிக்கப்படுதல்.

சாலொமோனின் ஆளுகை, 120 ஆண்டுகளாக இருந்த ஒன்றுபட்ட ராஜ்யத்தின் கால அளவை நிறைவு செய்தது. சவுல், தாவீது மற்றும் சாலொமோன் ஆகியோர் ஒவ்வொருவரும் நாற்பது ஆண்டுகள் ஆட்சி செய்தனர். சாலொமோன் தேவாலயத்தைக் கட்டினார் என்ற வகையில் குறிப்பாகப் பேசப்படுகின்றார். அவரது ஆட்சியின்போது, இஸ்ரவேல் பேரரசானது, பொருளாதாரம், அரசியல் மற்றும் புவியியல் ஆகிய ரீதியில் தனது உச்சத்தை அடைந்திருந்தது (4:21; 10:23, 24).

சாலொமோன் மரணத்திற்குப்பின்பு, அவரது மகன், ரெகொபெயாம், மோசமான ஆலோசனைகளுக்குச் செவிசாய்த்தார். வடக்கில் இருந்த பத்துக்கோத்திரங்கள் கலகம் செய்து இஸ்ரவேல் என்ற ராஜ்யத்தை ஏற்படுத்திக் கொண்டன. ரெகொபெயாமுக்கு, தெற்கில் இருந்த இரண்டு கோத்திரங்கள் மாத்திரம் விடப்பட்டன, அது யூதா ராஜ்யம் என்று அறியப்பட்டது. அவ்வேளையில் இருந்து, நாட்டில் எப்போதும் இரண்டு அரசர்கள் இருந்தனர்: ஒருவர் தெற்கிலும் இன்னொருவர் வடக்கிலும் இருந்து ஆட்சிசெய்தனர். இது தொடக்ககால மாணவர்களுக்கு குழப்பமானதாக இருக்கக்கூடும். எல்லாவற்றையும் நேராக்குவதற்காக, இடது புறத்தில் யூதாவின் அரசர்களையும் வலதுபுறத்தில் இஸ்ரவேலின் அரசர்களையும் பட்டியலிடும் வரைவட்டவணை ஒன்றைத் தயார் செய்யுங்கள்.

2 சாமுவேல் 7ல், தாவீதுக்குச் செய்யப்பட்ட வாக்குத்தத்தத்தின் காரண மாகவே, யூதாவின் அரசர்கள் தாவீதின் அரசபரம்பரை ஆட்சியைத் தொடர்ந்தனர். சிலர் நல்லவர்களாய் இருந்தனர்; சிலர் மோசமானவர்களாயிருந்தனர். வடக்கில், எப்போதாவது ஒருமுறைதான் ஒரு தந்தையின் அரியணையில் அவருக்குப் பதி லாக அவரது மகன் அமர்ந்தார். வடக்கில் இருந்த எல்லா அரசர்களுமே மோச மானவர்களாய் இருந்தனர்! சிலர் மற்றவர்களைக் காட்டிலும் மிகவும் மோசமான வர்களாய் இருந்தனர். ஆகாப் என்ற அரசன், தன் மனைவி யேசபேலுடன் சேர்ந்து, மிகமிக மோசமானவனாய் இருந்தான். ஆகாபின் ஆட்சியின்போது, தேவன் உயிர்வாழ்ந்தவர்களில் மிகவும் திகைப்புக்குரிய மனிதர்களில் ஒருவரான: எலியா என்ற, தீர்க்கதரிசியை அனுப்பினார்.

இப்புத்தகத்தை எரேமியா எழுதினார் என்று யூதப்பாரம்பரியம் கூறுகிறது. அப்படி அவர் எழுதியிருந்தால், அவர் இராஜாக்கள் மற்றும் தீர்க்கதரிசிகளால் பாதுகாக்கப்பட்ட சில பதிவேடுகளை (1 இராஜாக்கள் 11:41; 2 நாளாகமம் 9:29; முதலியன.; இ.வ. ஏசாயா 36-39 மற்றும் 2 இராஜாக்கள் 18-20) பயன்படுத்தும்படிக்குப் பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்பட்டிருக்கலாம். அவர் 2 இராஜாக்கள் புத்தகத்தின் எழுத்தாளராயிருந்தால், இதன் கடைசி அதி காரத்தை வேறு யாரேனும் ஒருவர் எழுதினார் என்றாகிறது.

வரைகுறிப்பு

சாலொமோனின் ஆளுகை (1-11).

 1. வேதாகமத்திலேயே மிக ஞானமுள்ள மனிதர் (1-10).
 • சமஸ்த இஸ்ரவேல்மீது மூன்றாவது அரசர் (1, 2).
 • சாலொமோன் ஞானத்தைத் தேர்ந்து கொள்ளுதல் (3).
 • சாலொமோனின் அதிகாரம், செல்வம் மற்றும் ஞானம் (4).
 • தேவாலயம் கட்டப்படுதல் (5-8),
 • சாலொமோனுடைய ராஜ்யத்தின் மேன்மை (9,10).
 1. வேதாகமத்திலேயே மிகவும் மதியீனமான மனிதன் (11).
 • சாலொமோனின் மனைவிகள் (11:1-3).
 • விசுவாச விலக்கம் (11:4-8).
 • ராஜ்யம் பெரும்பகுதியும் எடுத்துக்கொள்ளப்படுதல் (11:9-40).
 • சாலொமோனின் மரணம் (11:41-43).
 1. பிரிந்த ராஜ்யம் (12-22).
 • ராஜ்யத்தின் பிரிவினை (12:1-24),
 • தொடர்ந்து வந்த வரலாறு (12:25-22:53).

o   இஸ்ரவேலில் யெரோபெயாமின் ஆளுகை (12:25-14:20).

o   யூதாவில் ரெகோபெயாமின் ஆளுகை (14:21-31).

o   யூதாவில் அபியாமின் ஆளுகை (15:1-8).

o   யூதாவில் ஆசாவின் ஆளுகை (15:9-24).

o   இஸ்ரவேலில் நாதாபின் ஆளுகை (15:25-31).

o   இஸ்ரவேலில் பாசாவின் ஆளுகை (15:32-16:7).

o   இஸ்ரவேலில் ஏலாவின் ஆளுகை (16:8-14).

o   இஸ்ரவேலில் சிம்ரியின் ஆளுகை (16:15-20).

o   இஸ்ரவேலில் உம்ரியின் ஆளுகை (16:21-28).

o   இஸ்ரவேலில் ஆகாபின் ஆளுகை (16:29-22:40); எலியாவின் ஊழியம்!

o   யூதாவில் யோசபாத்தின் ஆளுகை (22:41-50).

o   12.இஸ்ரவேலில் அகசியாவின் ஆளுகையினுடைய தொடக்கம் (22:51-53).

1 இராஜாக்கள் புத்தகத்தில் இருந்து பாடங்கள்

கிறிஸ்தவராகுதல் என்று முடிவெடுத்தலுக்கு அடுத்ததாக, ஒருவர் அல்லது ஒருத்தி யாரைத் திருமணம் செய்து கொள்வது என்று முடிவெடுத்தலானது மிகவும் முக்கியமானதாக உள்ளது. அந்நியப் பெண்களுடன் சாலொமோன் செய்த திருமணங்களையும் ஆகாப் யேசபேலைத் திருமணம் செய்து கொண்டதையும் பற்றி ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள்.

“முதியோர் சொன்ன ஆலோசனையை தள்ளிவிட்டு” தன் வயதுடையவர்கள் கூறியதைக் கவனித்துக் கேட்ட (12:8; 1 கொரிந்தியர் 15:33) ரெகோபெயாமிடத்தில் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். தேவனுடய கட்டளைகள் மீதான அக்கறை குறைவடையும்போது, பிரிவினை பொதுவாக விளைகிறது.

ஒரு பொய்யை நம்பி அதனால் கொல்லப்பட்ட ஒரு இளம் தீர்க்கதரிசியின் வரலாறு வேதாகமத்திலுள்ள மிகவும் கவலைக்குரிய வரலாறுகளில் ஒன்றாக உள்ளது (13). தேவனுக்காகப் பேசுகின்றோம் என்று கூறுபவர்களைச் சோதித்தறியும் பொறுப்பைத் தேவன் நம்மீது வைத்துள்ளார் (1 யோவான் 4:1).

யோவான் ஸ்நானன் எலியாவின் ஆவியுடன் வந்தார் (மல்கியா 3:1-3; மத்தேயு 17:10-13), அவர் மேசியா (இயேசு)வுக்கு வழியை ஆயத்தம் செய்தார்.

தண்ணீர் அற்றுப்போகச் செய்தவர் யார்? (1 இராஜாக்கள் 17:1-16)

நீங்கள் உங்கள் வீட்டில் தண்ணீர் அற்றுப்போன அனுபவம் எதையாவது கொண்டிருக்கின்றீர்களா? ஆம் என்றால், நீங்கள் இரண்டு கேள்விகளைக் கேட்டிருப்பீர்கள்: “தண்ணீரை அற்றுப்போகச் செய்தது யார்?” மற்றும் “ஏன்?” நாம் 1 இராஜாக்கள் 17:1-15ஐப் படிக்கையில், “தண்ணீர் அற்றுப்போகச் செய்தவர் யார்?” மற்றும் “ஏன்?” என்ற இரு கேள்விகளைக் கேட்போம்.

“ஏன்?” என்பது போராட வேண்டிய கேள்வியாக உள்ளது: “ஆண்ட வரே, நான் என்னால் இயன்ற அளவுக்கு மிகச்சிறந்தவற்றைச் செய்து கொண்டிருக்கின்றேன். பின்பு ஏன் மோசமான இந்தக் காரியங்கள் யாவும் எனக்கு நடைபெறுகிறது?” நாம் “ஏன்?” என்ற கேள்வியைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்கும்போது, ஏசாயா 55:8, 9ஐ நமது சிந்தைகளில் காத்துக்கொள்ள வேண்டும். இதை நாம் மற்றவர்களுக்கு நடைமுறைப்படுத்தும் வரையில் இவ்வசனப்பகுதியின் சத்தியத்தை நியாயமாகக் கையாளுகின்றோம். இதை நமக்கு நடைமுறைப்படுத்துதல் என்பது மிகக் கடினமானதாக உள்ளது!

 1. இஸ்ரவேல் நாட்டில் தேவன் தண்ணீர் அற்றுப்போகச் செய்தது ஏன்(17:1)?
 2. இஸ்ரவேல் நாட்டில் என்ன நடந்திருந்தது என்று நாம் மறுகண் ணோட்டம் இடுவோம்.
 • 1.உபாகமம் 7:1-6ல் உள்ள, சுற்றிலும் இருக்கும் மக்களினங்களுடன் கலப்புத்திருமணம் செய்ய வேண்டாம் என்ற எச்சரிக்கையைக் கவனியுங்கள். இந்த எச்சரிக்கை கவனமாக பின்பற்றப்படவில்லை. ஆகாபின் அருகில் யேசபேல் இருக் கின்றாள்.
 • 2. தேவன் தமது அச்சுறுத்துதல்களைச் செயல்படுத்த என்ன செய்தார்? அவர் எலியாவை ஆகாபிடம் அனுப்பினார்: 1 இராஜாக்கள் 17:1, “வருஷங்கள்” என்ற வார்த்தையைக் கவனியுங்கள்; மூன்றரை வருடங்களாக மழை பெய்யாதி ருந்தது (லூக்கா 4:25; யாக்கோபு 5:17).
 1. தேவன் இஸ்ரவேல் நாட்டில் தண்ணீரை அற்றுப்போகச் செய்தது ஏன்?
 • தேவனுடைய எச்சரிக்கை (உபாகமம் 7) பின்தொடரப்பட்டது (உபாகமம் 11:16, 17). எலியா மழை பெய்யாதிருக்கும்படி ஜெபித்தார் (யாக்கோபு 5:17). உபாகமம் 11ல், தேவன் தாம் செய்யும்படி நோக்கங்கொண்டிருந்ததைச் செய்ய வேண்டும் என்று எலியா ஜெபித்தார் என்பது தெளிவு.
 • “ஏன்?” என்ற கேள்விக்குத் தேவன் பதில் அளிக்கக்கூடும்:

o   “ஏனென்றால் மக்கள் என் குரலுக்குக் கீழ்ப்படியாமல், போய் தண்டனை பெறத்தக்கவர்கள் ஆயினர்.”

o   “ஏனென்றால் உண்மையுள்ள என் ஊழியக்காரன் எலியா ஊக்கமாய் ஜெபித்தான்.”

o   “நானே தேவன் என்று காண்பிக்கவும்; அவர்களுடைய வழிகளின் தவறை அவர்களுக்குக் காண்பிப்பதினால்  அவர்கள் மனந்திரும்பி என்னிடம் திரும்பிவரவும்.”

 1. தேவன் கேரீத் ஆற்றில் தண்ணீரை அற்றுப்போகச் செய்தது ஏன் (17:2- 7)?
 2. ஆகாபுக்கு எச்சரிக்கை செய்தபின்பு தேவன் தமது திட்டத்தில்இரண்டாம் படியை விடுவித்தார்.
 • ஒரு தடவை ஒரு படிமுறைச் செயலை மாத்திரம் செய்யும்படி எலியா கூறப்பட்டார்.
 • இரண்டாவது படிமுறைச் செயல் என்பது எதிர்பாராததாக இருந்தது: “நீ… போய், … கேரீத் ஆற்றண்டையில் ஒளித்துக் கொண்டிரு” (வசனங்கள் 3, 4).
 • எலியா செய்யும்படி தேவன் கூறியவற்றை எலியா செய்தார் (வசனங்கள் 5, 6).

o   “கேரீத்” என்றால் “துண்டிக்கப்பட்டிருத்தல்” அல்லது “பிரிவு” என்று அர்த்தப்படுகிறது. அந்த நீரோடைக்கருகில் தங்கியிருந்த ஒன்று அல்லது அதற்குச் சற்றேறக்குறையலான ஆண்டுக்காலம், எலியா மற்ற எல் லாரிடத்தில் இருந்தும் துண்டிக்கப்பட்டிருந்தார்.

o   செயலற்ற இந்தக் காலம் எலியாவுக்குக் கடினமாக இருந் திருக்க வேண்டும்.

 1. பின்பு தேவன் கேரீத் ஆற்றில் இருந்த தண்ணீரை அற்றுப்போகச் செய்தார்!
 • எலியா இருக்கும்படி தேவன் விரும்பிய இடத்திலேயே அவர் இருந்தார், ஆனால் தண்ணீர் அற்றுப்போயிற்று! (வசனம் 7).
 • தேவன் கேரீத் ஆற்றில் இருந்த தண்ணீரை அற்றுப் போகச் செய்தது ஏன்?

o   ஏனென்றால் எலியா ஜெபித்திருந்தார் (வசனம் 7; யாக் கோபு 5:17), சில வேளைகளில் நமது ஜெபம் நாம் எதிர் பார்த்திராத வகையில் பதில் அளிக்கப்படுகின்றன.

o   ஏனென்றால் அது அடுத்த படிமுறைச் செயலுக்கான காலமாய் இருந்தது. நாம் தேவன்மீதும் நம் வாழ்விற்கு அவர் கொண்டுள்ள திட்டத்தின்மீதும் நம்பிக்கை வைக்கக் கற்றுக் கொள்வது அவசியமாய் இருக்கிறது. III. சாரிபாத் ஊரில் தேவன் தண்ணீரை அற்றுப்போகச் செய்தது ஏன் (17:8- 16)?

 1. தேவன் எலியாவை சாரிபாத் ஊருக்குப் போகச் சொன்னார்(வசனங்கள் 8, 9).
 • சாரிபாத் என்பது இஸ்ரவேல் நாட்டிற்கு நேர் வடக்கில் உள்ள பெனிக்கியா நாட்டின் கடலோரத்தில் இருந்த ஒரு சிறிய நகரம் ஆகும். இது எலியா இருந்த இடத்தில் இருந்து வடமே ற்கில், வரட்சி தாக்கிய பகுதியில் 75 முதல் 100 மைல்களுக்கு அப்பால் இருந்தது. எலியா இன்னமும் மிகத் தாழ்ந்த நிலையைத் தக்க வைக்க வேண்டியிருந்தது. அவர் அங்கு ஒரு விதவையின் வீட்டில் தங்க வேண்டியிருந்தது.
 • எலியா எவ்வாறு பதில்செயல் செய்தார்? “அவர் எழுந்து சென்றார்.”
 1. எலியா அங்கு சென்றபோது,அங்கேயும்கூடத் தண்ணீர் அற்றுப் போயிற்று!
 • அவர் சென்று தங்கியிருக்க வேண்டிய வீட்டின் விதவை பட்டினியால் இறந்துகொண்டிருந்தாள்!
 • சாரிபாத் ஊரில் தேவன் தண்ணீர் அற்றுப்போகச் செய்தது ஏன்?

o   இஸ்ரவேல் நாட்டில் இருந்த இடர்ப்பாடு வடக்கில் இருந்து வந்தது; எனவே, அவர்கள் விளைவுகளிலும் பங்கேற்க வேண்டியிருந்தது.

o   b.எலியாவை நிர்ப்பந்திக்கத் தொடர்ந்தது, அவர் தேவனை முற்றிலுமாகச் சார்ந்திருக்க வேண்டும் என்பதற்காக.

o   யெகோவாதாம் உண்மையான தேவனாக இருக்கின்றார் என்று ஒரு ஏழை விதவையை நம்பச் செய்வதற்காக.

முடிவுரை

 • வாழ்வில் நமக்கு என்ன நேர்ந்தாலும், தேவன் நம்மை மறந்துவிட வில்லை, ஆனால் இன்னமும் நம்மீது அன்புகூருகின்றார் மற்றும் நமக்குத் தேவையானவற்றை அளிப்பார் என்று நாம் உணர்ந்தறிதல் எவ்வளவு முக்கியமானதாக உள்ளது (ஏசாயா 49:14-16)!
 • 1 இராஜாக்கள் 17:1-15ல் உள்ள ஒருசில மாபெரும் பாடங்கள் பின்வருமாறு:

o   1.உங்களால் புரிந்துகொள்ள இயலாதபோதும்கூட, தேவனுக்குக் கீழ்ப்படியுங்கள்.

o   2. நீங்கள் முற்றிலும் புரிந்துகொண்டிராதபோதும்கூட, தேவன்மீது நம்பிக்கை வையுங்கள்.

o   3.நீங்கள் விரும்பியதைக் கொண்டிராதபோதும்கூட, நீங்கள் கொண்டுள்ளவைகளுக்காக தேவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

Leave a Reply