2 இராஜாக்கள் ஆய்வு
2 இராஜாக்கள்: ராஜ்யத்தின் கடைசி நாட்கள்
வாசிக்க வேண்டிய அதிகாரங்கள்: 2-25.
தலைப்பு
1 மற்றும் 2 இராஜாக்கள் என்ற புத்தகங்கள் தொடக்கத்தில் ஒரே புத்தக மாக, 1 இராஜாக்கள் புத்தகத்தின் தொடக்க வார்த்தையைப் பின்பற்றிப் பெயரிடப்பட்டதாக இருந்தது (1 இராஜாக்கள் மீதான குறிப்புகளைக் காணவும்).
பின்னணி
இந்தப் புத்தகம் 1 இராஜாக்கள் புத்தகத்தின் தொடர்ச்சியாக உள்ளது. இப்புத்தகத்தின் தொடக்கத்தில், ராஜ்யம் இன்னமும் பிரிந்ததாகவே உள்ளது. இஸ்ரவேலின் வடக்கு ராஜ்யம், கி.மு. 722ல் அசீரியாவினால் முற்றிலுமாக அழிக்கப்பட்ட வரையிலும் தொடர்ந்து சீர்கெட்டுப்போனது. வடக்கு ராஜ்யத்தில் மொத்தம் பத்தொன்பது அரசர்கள் ஆண்டனர், அவர்கள் யாவருமே தீயவர்களாய் இருந்தனர்.
அசீரியர்கள் வடக்கு ராஜ்யத்தை அழித்த பின்பு, அவர்கள் யூதா என்ற தெற்கு ராஜ்யத்திற்குள் அணிவகுத்து வந்தனர். எசேக்கியா அரசர் மற்றும் ஏசாயா தீர்க்கதரிசி ஆகியோரின் முயற்சியால், தேவன் தெற்கு ராஜ்யத்தைக் காத்தார், அது மேலும் 150 ஆண்டுகள் வரையில் நிலைத்திருந்தது. இருப்பினும், கடைசியில், தெற்கு ராஜ்யமும் விழுந்தது; அது கி.மு. 586ல் பாபிலோனியர்களால் பிடிக்கப்பட்டது. யூதாவும் மொத்தம் பத்தொன்பது அரசர்களைக்கொண்டிருந்தது. எசேக்கியா மற்றும் யோசியா ஆகியோரைப் போன்று சிலர் நல்லவர்களாய் இருந்தனர். பெரும்பான்மையானவர்கள் தேவனையும் விக்கிரகங்களையும் ஆராதித்தனர்.
அடிப்படையில் சரித்திரப் புத்தகங்களான 1 மற்றும் 2 இராஜாக்கள், மக்களைத் தேவனிடத்திற்குத் திரும்பும்படி அழைக்க முயற்சி செய்த தீர்க்கதரிசிகளின் கருத்துநோக்கில் எழுதப்பட்டன. அரசர்களின் பெரும் பான்மையான அரசியல் சாதனைகள், தேவனுடைய திட்டங்கள் மற்றும் நோக்கங்கள் ஆகியவற்றிற்குப் பொருத்தமற்றவை என்ற வகையில் கண்டுகொள்ளப்படாதுள்ளன.
1 மற்றும் 2 இராஜாக்கள் என்ற புத்தகங்களை எரெமியா தீர்க்கதரிசி எழுதினார் என்று யூதத்துவ பாரம்பரியம் கூறுகிறது (1 இராஜாக்கள் பற்றிய குறிப்புகளில் காணவும்).
வரைகுறிப்பு
1.பிரிந்த ராஜ்யம் தொடருகிறது.
- இஸ்ரவேல் நாட்டில் அகசியாவினுடைய ஆளுகையின் தொடர்ச்சி மற்றும் யோராமின் ஆளுகை (1:1-8:15, 28, 29; 9:1-26, 30-37).
- எலியா சுழற்காற்றில் எடுத்துக்கொள்ளப்படுதல்.
- எலிசாவின் அற்புதங்களின் ஆரம்பம்.
- யூதாவில் யோராம் மற்றும் அகசியா ஆகியோரின் ஆளுகை (8:16- 29; 9:17, 18, 27-29).
- இஸ்ரவேலில் ஏகூவின் ஆளுகை (10).
- யூதாவில் அத்தாலியாளின் “ஆளுகை” மற்றும் யோவாசின் ஆளுகை (11, 12).
- இஸ்ரவேலில் யோவகாஸ் மற்றும் யோவாஸ் ஆகியோரின் ஆளுகை (13:1-13; 14:8-16).
- யூதாவில் அமசியா மற்றும் உசியா (அல்லது அசரியா ஆகியோரின் ஆளுகை (14:1-14, 17-22; 15:1-7).
- இஸ்ரவேலில் யெரொபெயாம், சகரியா, சல்லூம், மனாயீம், பெக்கக்கியா மற்றும் பெக்கா ஆகியோரின் ஆளுகை (14:23-29; 15:8-31; 16:5முதல். காணவும்.); யோனாவின் தீர்க்கதரிசனம் குறிப்பிடப்பட்டுள்ளது (14:25),
- யூதாவில் யோதாம் மற்றும் ஆகாஸ் ஆகியோரின் ஆளுகைகள் (15:32-38; 16).
- இஸ்ரவேலில் ஓசியாவின் ஆளுகை.
- அசீரியர் சிறை (captivity) பிடித்தல் (17).
- யூதா ராஜ்யம் மாத்திரம்.
- எசேக்கியாவின் ஆளுகை (18-20); ஏசாயா (19:2முதல்.).
- மனாசேயின் ஆளுகை (21:1-18).
- ஆமோனின் ஆளுகை (21:19-26).
- யோசியாவின் ஆளுகை (22:1-23:30).
- யோவகாசின் ஆளுகை (23:31-34),
F யோயாக்கீமின் ஆளுகை (23:35-24:5).
G யோயாக்கீனின் ஆளுகை (24:6-16).
- சிதேக்கியாவின் ஆளுகையும் எருசலேமின் அழிவும் (24:17-25:21).
முடிவுரை (25:22-30).
2 இராஜாக்கள் புத்தகத்தில் இருந்து பாடங்கள்
ஒரு நபர் தம்மைத் தேவனுக்கென்று அர்ப்பணித்திருந்தால், அவரால் வித்தியாசத்தை ஏற்படுத்த முடியும். எலியாவையும் எலிசாவையும் கண்ணோக்குங்கள்.
வாழ்வு நம்மை மூழ்கடிப்பதாக நாம் உணருகின்றபோது, தேவன் நமது ஆவிக்குரிய ஆதாரமூலங்களை நாம் காணும்படிக்கு நமது கண்களைத் திறக்கும்படி ஜெபித்தல் நமக்கு அவசியமாக இருக்கலாம் (6:16, 17). எபேசியர் 3:20 தேவன் “நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதி கமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்ல வராய்” இருக்கின்றார் என்று சுட்டிக்காண்பிக்கிறது.
தேவன் நம்மை அளவற்ற வகையில் ஆசீர்வதித்திருக்கின்றார். நாம் அமைதி யாக இருந்து, நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளாமல் போவோமானால், அது எவ்வளவு பரிதாபத்திற்குரியதாக இருக்கும் (7:9; ரோமர் 1:14, 15)!
பூமியில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் 2 இராஜாக்கள் புத்தகத்தில் செய்தியொன்றுள்ளது. ஒரு நாடு தேவனை விட்டு விலகிப் போகும்போது. அழிவு என்பது தவிர்க்க இயலாததாகிறது. சிலவேளைகளில் அழிவு தாமதமாக லாம், ஆனால் அது அப்போதும் தவிர்க்க இயலாததாகவே உள்ளது. தேவன் கட்டுப்பாடு செலுத்துகின்றார், மற்றும் அவர் பரியாசம்பண்ணவொட்டார் (கலாத்தியர் 6:7).
மேசியாவை உலகத்திற்குக் கொண்டுவருதல் என்ற தேவனுடைய திட்டத் திற்கு இடையூறு செய்ய சாத்தான் தொடர்ந்து முயற்சி செய்தான். துன்மார்க்க மான அத்தாலியாள் தாவீதின் வம்சத்தை அழிக்க முயற்சி செய்தாள், ஆனால் தேவனுடைய திட்டங்கள் தடைசெய்யப்பட முடியாது (11:1-3). “அவனோ குஷ்டரோகியாயிருந்தான்” (2 இராஜாக்கள் 5:1-15)
வேதாகமம் ஒரு மனிதன் தன் இயல்பைக் காணும்படி ஒரு கண்ணாடியைப் பிடித்து நிற்கிறது. அதன் பக்கங்களினூடே நடந்து செல்லும் வண்ணமிக்க பாத்திரங்களை நாம் கண்ணோக்குகையில், நம்மைச் சுற்றிலும் உள்ள மக்களை மற்றும் நம்மையும்கூடக் கண்ணோக்காமல் இருக்க முடியாது. நாகமானின் வரலாற்றில் – நாகமான் வியாதிப்படுகையில், அவர் ஒரு நோய்நீக்குமுறையை நாடுகையில், வைத்தியக்குறிப்பு அவருக்குப் பொருந்தாதிருக்கையில் – பல சித்தரிக்கப்படுவதை நாம் காணுகின்றோம். அவர் சினம் தணிந்து வைத்தி யக்குறிப்பை மேற்கொள்ளுகையில்கூடச் சில சித்தரிக்கப்படுவதை நாம் கண்ணோக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
- நோய் ஆய்வு (5:1),
- நாகமானைக் கண்ணோக்குங்கள்.
- அவரைப் பற்றிப் பல நல்ல விஷயங்கள் கூறப்பட்டுள்ளன (வசனம் 1).
- “ஆனால் அவனோ குஷ்டரோகியாயிருந்தான்.” இது சித்த ரிப்பை முற்றிலும் மாற்றுகிறது! அவர் ஒரு வல்லமை நிறைந்த மனிதராயிருந்தார், ஆனால் அவரால் நோய் ஆய்வுக்குறிப்பை மாற்றக்கூடாதிருந்தது.
- ஒரு இணை நிகழ்வு.
- இன்றைய நாட்களில் பல நல்ல மனிதர்கள் இருக்கின்றனர், அவர்களைப் பற்றிப் பல நல்ல விஷயங்களைக் கூறமுடியும்.
- ஆனால் … அவர்கள் பாவிகளாய் இருக்கின்றனர், சுவிஷே சத்திற்குக் கீழ்ப்படியாமல் இருக்கின்றனர். அவர்கள் இழந்து போகப்பட்டுள்ளனர்.
- a நாம் எவ்வளவு நல்லவர்களாய் இருப்பினும், நாம் இன்னமும் பாவிகளாய் இருக்கின்றோம் (ரோமர் 3:23; பிரசங்கி 7:20), பாவத்தில் இழந்துபோகப்பட்டிருக்கின்றோம் (ரோமர் 6:23). நல்ல நபராக இருத்தல் என்பது மாத்திரம் எவரொருவரையும் இரட்சித்துவிட முடியாது (நடபடிகள் 10:2, 22).
- கிறிஸ்துவில் மாத்திரமே இரட்சிப்பு கண்டறியப்படுகிறது. (நடபடிகள் 4:12); நாம் “கிறிஸ்துவுக்குள்” ஞானஸ்நானம் பெறுதல் அவசியமாயிருக்கிறது (ரோமர் 6:3; கலாத்தியர் 3:27).
- ஒருவர் தம் சொந்த வாழ்வினால் இரட்சிக்கப்பட முடியும் என்று நினைப்பாரென்றால், அவர் சுயநீதியுடைமை என்ற பாவத்தினால் குற்றப்பட்டுள்ளார் (நீதிமொழிகள் 30:12; ரோமர் 10:3) மற்றும் அவர் தமது ஆவிக்குரிய உண்மை நிலையைக் கண்ணோக்குதல் அவசியமாய் இருக்கிறது (ஏசாயா 64:6
II நோய்நீக்கக் குறிப்பு (5:2-13).
- என்ன செய்ய வேண்டும் என்று நாகமானுக்குக் கூறப்பட்டது.
- ஒரு நம்பிக்கையின் கதிர் (வசனம் 3).
- முதலில் அவர் தவறான இடத்திற்குச் சென்றார்; அவர் அதி காரத்திற்கு ஒரு பட்டப்பெயரைக் கொண்டு குழப்பிக் கொண்டார்.
- கடைசியில் அவர் எவ்வாறு குணமாக்கப்பட முடியும் என்பதன் மீதான அறிவுறுத்துதல்களைப் பெற்றுக்கொண்டார் (வசனம் 10). அறிவுறுத்துதல் எளியதாகவும் நிபந்தனைக்கு உட்பட்டதாகவும் இருந்தது.
- நோய்நீக்கக் குறிப்பு நோயாளிக்குப் பிரியமானதாக இருக்க வில்லை (வசனம் 11). அது நாகமானுடைய ஆணவத்தைத் துன்புறுத்திற்று; அது எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்று அவர் முன்பே தீர்மானித்திருந்தார் (வசனம் 11). அவர் ஒரு பதிலிச் செயல்முறையைக் கருத்துத் தெரிவித்தார் (வசனம் 12). அவர் கோபத்துடன் சென்றார்! அது சிறுபிள்ளைத்தனமானது. ஆனால் சிலர் இன்றைய நாட்களிலும் அதையே செய்கின்றனர்.
- அவர்கள் பாவம் என்ற தொழுநோய் கொண்டுள்ளனர், ஆனால் நம்பிக்கையின் கதிர் ஒன்றுள்ளது (யோவான் 8:32)!
- ஒருவேளை அவர்கள் தவறான இடத்திற்குச் செல்கின்றனர். மனிதர்களிடத்தில் அவர்கள், “நீங்கள் நினைப்பது என்ன?” என்று கேட்கின்றனர் (நீதிமொழிகள் 14:12). தேவனுடைய வசனம் மாத்திரமே பதிலைக் கொண்டுள்ளது (யோவான் 17:17).
- அறிவுறுத்துதல்கள் கொடுக்கப்பட்டுள்ளன (மாற்கு 16:16; நடபடிகள் 2:38). நோய்நீக்கக்குறிப்பு எளிமையானதாக மற்றும் நிபந்தனைக்கு உட்பட்டதாக இருக்கிறது.
- கர்த்தர் தரும் நோய்நீக்கக்குறிப்பு பலருக்குப் பிரியமானதாக இருப்பதில்லை. “இதோ, நான் நினைப்பது”! அவர்கள் பதி லிச் செயல்முறைகளை முயற்சி செய்கின்றனர். சிலர் இதைக் குறித்துக் கோபம்கூட அடைகின்றனர் (கலாத்தியர் 4:16).
III. குணமாகுதல் (5:14).
- நமது வரலாற்றில் ஒரு திருப்புமுனை உள்ளது.
- நாகமானின் வேலைக்காரன் ஒரு கேள்வியைக் கேட்டார் (5:13).
- நாகமான் நோய்நீக்கக்குறிப்பை எடுத்துக்கொண்டார். அவர் தீர்க்கதரிசி கூறியதை அப்படியே செய்ய வேண்டியிருந்தது (வசனம் 14அ).
- இதன் விளைவாக அவர் குணமாக்கப்பட்டார் – அந்த குணமாகுதல் அவர் நம்பி எதிர்பார்த்திருந்ததைவிட மகாப் பெரியதாய் இருந்தது (வசனம் 14ஆ)!
- நம்பிக்கையும் கீழ்ப்படிதலும் எப்போதுமே திருப்புமுனையாக உள்ளன.
- நாம் முற்றிலுமாக – கீழ்ப்படிய வேண்டும் (மத்தேயு 7:21-23).
- நாம் அவ்வாறு செய்தால், நாம் – நம்மால் கற்பனை செய்யக் கூடியதைவிட அதிகம் ஆச்சரியம் நிறைந்த வகையில் குண மாக்கப்படுவோம் (ரோமர் 6:3-11; எபேசியர் 3:20)! முடிவுரை மற்றும் அழைப்பு மாபெரும் வைத்தியரை நம்புங்கள்! அவருக்குக் கீழ்ப்படியுங்கள்!