1 மற்றும் 2 நாளாகமங்கள்: ஆய்வு
சிறையிருப்பிலிருந்து திரும்புவதற்கு ஆயத்தம்
வாசிக்க வேண்டிய அதிகாரங்கள்: 1 நாளாகமம் 13, 15, 17, 21-24, 28, 29; 2நாளாகமம் 3, 6, 9, 11, 23, 24, 29, 32, 35, 36.
தலைப்பு தொடக்கத்தில் 1 மற்றும் 2 நாளாகமங்கள் ஒரே புத்தகமாய் இருந்தன. இதன் எபிரெயப் பெயர், “நாட்குறிப்புகள், இதழ்கள் அல்லது வரலாற்றுக் குறிப்புகள்” என்று அர்த்தப்படுகிறது. செப்துவஜிந்த் மொழிபெயர்ப்பில் உள்ள இதற்குரிய கிரேக்கப் பெயர் “கடந்துபோன விஷயங்கள்” என்று அர்த்தப்படுகிறது. இது தொகுப்புகளில் உள்ள துணை விஷயங்களைக் குறிக்கிறது. ஆங்கிலப் பெயரான “Chronicles” என்பது ஜெரோம் என்பவரால் கொடுக்கப்பட்டது.
பின்னணி
1 மற்றும் 2 நாளாகமங்கள் முதல் பார்வைக்கு, சோர்வு ஏற்படுத்தும் வம்சவழிகளும் திரும்பக்கூறுதல்களுமாகக் காணப்படுகின்றன. திரும்பக் கூறுதல் கள் சில உள்ளன, ஆனால் அவை திரும்பக்கூறுதல்களாக மாத்திரம் இருப்ப தில்லை. இது வேறுபட்ட காலத்தில் வேறுபட்ட நோக்கத்திற்காக எழுதப்பட்ட விஷயமாக உள்ளது.
2 இராஜாக்கள் புத்தகத்தின் கடைசி நிகழ்ச்சிகள் நடந்து ஏறக்குறைய எழுபது ஆண்டுகள் கடந்திருந்தன. (அந்த எழுபது ஆண்டுக் கால கட்டத்திற் கென்று தனியான வரலாற்றுப் புத்தகங்கள் எதுவும் இல்லை; சிறையிருப்பின் ஆண்டுகள் மீதான தகவலுக்கு எசேக்கியேல் மற்றும் தானியேல் தீர்க்கதரிசனப் புத்தகங்களைக் காணவும்.) இஸ்ரவேல் மக்கள் பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து திரும்ப தயாராக இருக்கின்றனர் (2 நாளாகமம் 35:25; 36:23 ஆகியவற்றைக் கவனிக்கவும்). 1 மற்றும் 2 நாளாகமப் புத்தகங்கள் (இஸ்ரவேல்) நாட்டில் திரும்பக் குடியமர்வதற்கும் தேவாலய ஆராதனையை திரும்பவும் நிலைநாட்டுவதற்கும் அவசியமான தகவல்களைத் தருவதற்காக எழுதப்பட்டன. மக்கள் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்றால் – மற்றும் அவர்கள் கடந்துபோன துன்பங்கள் திரும்ப நிகழாது காத்துக்கொள்ள வேண்டுமென்றால் – தேவனுக்குக் கீழ்ப்படிவது அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டது.
1 மற்றும் 2 நாளாகமப் புத்தகங்களை, 1, 2 சாமுவேல் மற்றும் 1, 2 இராஜாக்கள் என்ற புத்தகங்களுடன் ஒப்பிடுவதில், நாம் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளைக் கவனிக்கலாம்: (1) 1 மற்றும் 2 நாளாகமப் புத்தகங்களில், யூதா என்ற தெற்கு ராஜ்யம் மாத்திரமே வலியுறுத்தப்படுகிறது, மற்றும் (2) இந்தப் புத்தகங்களில் உள்ள வரலாறு, தீர்க்கதரிசிகளின் கருத்துநோக்கு என்பதைக்காட்டிலும் அதிக
மாக, ஆசாரியர்களின் கருத்து நோக்கு என்பதிலேயே எழுதப்பட்டன. 1 மற்றும் 2 நாளாகமப் புத்தகங்களை, 1 மற்றும் 2 சாமுவேல், 1 மற்றும் 2 இராஜாக்கள் என்ற புத்தகங்களுடன் சேர்த்து வைத்து ஆய்வு செய்தல், விசேஷமாக 1 மற்றும் 2 நாளாகமப் புத்தகங்களில் உள்ள துணை/ கூடுதல் விவரங்களைக் கவனித்துப் பார்த்தல் என்பது, இப்புத்தகங்களைப் படிப் பதற்கு மிகச்சிறந்த வழிகளில் ஒன்றாக இருக்கிறது. பின்வரும் வரை குறிப்பானது இந்தத் தகவல்களில் சிலவற்றைக் குறிப்பிடுகிறது.
1 மற்றும் 2 நாளாகமம் என்ற புத்தகங்கள் ஆசாரியரான எஸ்றாவினால் எழுதப்பட்டன என்று யூதப்பாரம்பரியம் குறிப்பிடுகிறது (எஸ்றா புத்தகத் திற்கான பின்னணிக் குறிப்புகளைக் காணவும்). எஸ்றா என்ற புத்தகமானது 2 நாளாகமம் புத்தகம் விட்ட இடத்தில் இருந்து தொடருவதாலும், இம்மூன்று புத்தகங்களும் ஒரே நடையைக் கொண்டுள்ளதாலும், இவர் இவற்றை எழுதி யிருக்கச் சாத்தியக்கூறு உள்ளது.
1 நாளாகமம் வரைகுறிப்புகள்
- வம்சவரலாறு (1-9). II. தாவீதின் ஆளுகை (10-29).
- ஊசாவின் பாவம் பற்றிய மற்ற குறிப்புகள் (15:2, 13, 15). சரியான விஷயத்தைத் தவறான வழியில் செய்தலுக்கு இது மிகச்சிறந்த உதாரணமாக உள்ளது.
- தாவீதை ஜனத்தொகைக் கணக்கெடுக்கும்படி சாத்தான் தூண்டுதல் (21:1).
- தேவனால் ஆசரிப்புக்கூடாரத்தின் மாதிரி தரப்பட்டது போலவே, தேவாலயத்திற்கான வடிவமைப்பு மாதிரிகள் தரப்பட்டது (28:11, 12, 19), தாவீது “கால மாற்றத்திற்கு” ஏற்றாற்போன்று “தகவமைப்பு” செய்யும் உரிமை கொண்டிருக்கவில்லை.
2 நாளாகமம் வரைகுறிப்புகள்
- சாலொமோனின் ஆளுகை (1-9).
- சாலொமோனுடைய அரசின் விரிவளவு (9:26).
- யூதர்களுக்குத் தரப்பட்ட தேசம் பற்றிய வாக்குத்தத்தம் நிறைவே றிற்று.
- யூதாவின் அரசர்கள் (10:1-36:13).
- பத்துக் கோத்திரத்தார்களில், தேவனை அவர் கட்டளையிட்டபடி ஆராதிக்க விரும்பியவர்கள் ரெகொபெயாமைச் சேர்ந்து கொண் டனர் (11:16,17). வேதாகமம், “இழந்துபோகப்பட்ட பத்துக்கோத் திரத்தார்” தேவனுடைய திட்டங்கள் மற்றும் நோக்கங்களில் பாகமாக நிலைத்து இருந்தனர் என்று கூறுவதில்லை.
- ஏசாயா (26:22; 32:20, 32) மற்றும் எரெமியா (35:25:36:12, 21, 22ஐயும் காணவும்) ஆகியோரின் ஊழியம்.
III. சிறையிருப்பு (36:14-23).
- தேவனுடைய செய்தியாளர்கள் புறக்கணிக்கப்பட்டனர் (36:15, 16).
- எழுபது ஆண்டு காலகட்டம் ஒரு வசனத்தில் கூறிமுடிக்கப்படுகிறது (36:20).
- அவர்கள் எழுபது ஆண்டுகள் சிறையிருப்பில் இருப்பார்கள் என்ற எரெமியாவின் தீர்க்கதரிசனம் – மற்றும் அதன் நிறைவேற்றம் (36:21-23).
1 மற்றும் 2 நாளாகமப் புத்தகங்களில் இருந்து பாடங்கள்
திரும்பக்கூறுதல் என்பது மோசமாக இருக்க வேண்டும் என்று அவசிய மில்லை. திரும்பக்கூறுதலில் இருந்து நாம் கற்றுக்கொள்கின்றோம்; அது வலியுறுத்தத்தை அளிக்கிறது. குறிப்பிட்ட சில தகவல்களைத் திரும்பத் கூறுதல் பொருத்தமானதென்று தேவன் காணுகின்றார் என்றால், அது முக்கியத்துவத்தைக் காண்பிக்கிறது. அதை நாம் கவனமாய்ப் படிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் அதன்மீது வைத்து அதை வலியுறுத்துகின்றார். இன்றைய நாட்களில் மக்கள் “நவமானகாரியங்களை” தேடுகின்றனர் (நடபடிகள் 17:21); இதற்குப்பதி லாக, தேவனுடைய நித்தியமான சத்தியங்கள் திருப்பிக்கூறப்படுதலே நமக்கு அவசியமானதாக உள்ளது: “இதினிமித்தம், இவைகளை நீங்கள் அறிந்தும், நீங்கள் இப்பொழுது அறிந்திருக்கிற சத்தியத்தில் உறுதிப்பட்டிருந்தும், உங்களுக்கு இவைகளை எப்பொழுதும் நினைப்பூட்ட நான் அசதியாயிரேன். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து எனக்கு அறிவித்தபடி நான் என்கூடாரத்தைவிட்டுப் போவது சீக்கிரத்தில் நேரிடுமென்று அறிந்து, இந்தக் கூடாரத்தில் நான் இருக்குமளவும் உங்களை நினைப்பூட்டிஎழுப்பி விடுவது நியாயமென்று எண்ணுகிறேன்” (2 பேதுரு 1:12, 13),
1 மற்றும் 2 நாளாகமம் புத்தகங்களில் உலர்ந்துபோன பட்டியல்களும் உண்மைகளும் மாத்திரம் இருப்பதில்லை. மேசியாத்துவம் பற்றிய ஆழ மான செய்தியும் இருக்கிறது. பட்டியலிடப்பட்ட பெயர்கள் தேவனுடைய நோக்கங்கள் மலர்விக்கப்பட்ட மாபெரும் காலங்களைக் குறித்து நிற்கின்றன. தேவன் கடந்துபோன காலத்தில் தம் மக்களுக்காக அக்கறை கொண்டிருந்தது போன்றே, யூதமக்களிடம் தொடர்ந்து அக்கறை கொண்டிருப்பதாக அவர்களிடத்தில் கூறினார். ஏற்றகாலத்தில் அவர் மேசியாவுக்கான அவர்களின்
நம்பிக்கைகளை நிறைவேற்றுவார். தேவன் தமது சொந்த ஜனங்கள்மீது தொடர்ந்து அக்கறையாய் இருக்கின்றார்! உயிர்ப்பித்தலுக்குத் தேவனுடைய திட்டம் (2 நாளாகமம் 7:14)
உயிர்ப்பித்தலுக்கான தேவை என்பது நமது நாட்களில் உள்ள மாபெரும் தேவைகளில் ஒன்றாக உள்ளது. பழைய ஏற்பாடு உயிர்ப்பித்தலுக்கான தேவனுடைய திட்டத்தை மறைவான வசனப்பகுதி ஒன்றில் தருகிறது: “நான் மழையில்லாதபடிக்கு வானத்தை அடைத்து, அல்லது தேசத்தை அழிக்க வெட்டுக்கிளிகளுக்குக் கட்டளையிட்டு, அல்லது என் ஜனத்திற்குள் கொள்ளைநோயை அனுப்பும்போது, என்நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்” (7:13, 14).
தேவாலயம் கட்டப்பட்டிருந்தது, சாலொமோன் அதைப் பிரதிஷ்டை செய்திருந்தார். அதற்குப் பதில்செயலாகத் தேவன், “சாலொமோனே, நான் இவ்வீட்டை ஏற்றுக்கொள்கின்றேன், ஆனால் வீடுகளைக் கட்டுதல் என்பது வாழ்வைக் கட்டியெழுப்பும் இடத்தை எடுத்துக்கொள்ள முடியும் என்று நினைக்காதே. இந்தக் கட்டிடத்தைப் பிரதிஷ்டை செய்ததுடன் கூடுதலாக, நீயும் உன் மக்களும் உங்களுடைய வாழ்வைப் பிரதிஷ்டை செய்ய வேண்டும். நீங்கள் அதைச் செய்யாவிட்டால் உங்களை என்னிடத்திற்குத் திரும்ப கொண்டுவருவதற்கு, நான் உங்கள்மீது கொள்ளை நோயை – பஞ்சம், வெட்டுக்கிளிகள் மற்றும் எல்லா வகையான துன்பத்தையும் – அனுப்புவேன்” என்றே செயல்விளைவில் கூறினார். பின்பு அவர் நமது வேதபாடப்பகுதியான, 7:14ஐக் கொடுத்தார். உயிர்ப்பித்தலுக்குத் தேவனுடைய திட்டம் என்ன என்று காண நாம் இதை ஆராய்ந்து பார்ப்போம்.
- மக்கள்: “சபைகளுக்குப் பழைய உறுப்பினர்கள் திடப்படுத்தப்படுவதைக் காட்டிலும் அதிகமாகப் புதிய உறுப்பினர்கள் அவசியமில்லை.”
- “என் ஜனங்கள்.”
- தேவன் எப்போதுமே தமது மக்களைக் கொண்டிருந்தார்.
- இன்றைய நாட்களில்: யோவான் 1:12; 3:5; 1 பேதுரு 1:22, 23.
- “என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள்.” தேவனுடைய மக்கள் அவரது நாமத்தைத் தரித்திருக்கின்றனர்.
- பழைய ஏற்பாடு (எண்ணாகமம் 6:27).
- புதிய ஏற்பாடு (1 யோவான் 3:1, 2; 1 கொரிந்தியர் 1:2;
- நடபடிகள் 11:26).
ஆவிக்குரியவகையில் ஆயத்தமாக்கப்பட்ட மக்கள்.
- தாழ்மையின் மூலமாக: “தங்களைத் தாழ்த்தி.” நீதிமொழிகள் 6:16, 17; 8:13; 16:18; ஏசாயா 57:15; மத்தேயு 5:3; லூக்கா 14:11; யாக்கோபு 4:6; 1 பேதுரு 5:5, 6 ஆகியவற்றைக் காணவும்.
- ஜெபத்தின் மூலமாக: “ஜெபம்பண்ணி.” மத்தேயு 7:11; 21:22; யாக் கோபு: 1:17; 5:16; 1 யோவான் 5:14, 15 ஆகியவற்றைக் காணவும். “நாம் ஜெபித்திராதவரையில் நாம் ஆயத்தமாய் இருப்பதில்லை.”
- தேவனுடைய முகத்தைத் தேடுதல் மூலமாக: “என் முகத்தைத் தேடி.”
- இது முயற்சியை மறைமுகமாய் உணர்த்துகிறது.
- இது நமது சித்தங்களைத் தேவனுடைய சித்தத்திற்குக் கீழ்ப் படுத்துதலை மறைமுகமாய் உணர்த்துகிறது (மத்தேயு 6:33; சங்கீதம் 27:8).
- வாழ்வில் மாற்றத்தின் மூலமாக: “தங்கள் பொல்லாத வழிகளை விட்டுத் திரும்பினால்,”
- நாம் வேதாகமத்தைப் புறக்கணிப்பதை விட்டுத் திரும்புதல் (ஓசியா 4:6).
- நாம் ஒருவர் மற்றவர்மீது கொண்டுள்ள அழகற்ற எண்ணப் போக்கிலிருந்து திரும்புதல் (யோவான் 13:35).
- இழந்துபோகப்பட்டுள்ளவர்கள்மீது நாம் கொண்டுள்ள மாறு பட்ட சிந்தனையில் இருந்து திரும்புதல்.
- உலகப்பிரகாரமான எல்லா விஷயங்களிலும் இருந்து, தேவனுக் குரியவைகளுக்கு மேலாக உலகத்திற்குரிய விஷயங்களை வைப்பதில் இருந்து, திரும்புதல். “நாம் தாழ்வான வாழ்விற்குள் இருக்கும்படி அதிகமாய் வற்புறுத்தப்படுகின்றோம்.”
III. தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள ஆயத்தமாக்கப் பட்ட ஜனங்கள்.
- தேவன் (ஜனங்கள் கூறுவதை) கேட்கும் ஆசீர்வாதம்: “பரலோகத்தி
லிருக்கிற நான் கேட்டு.”
- தேவனுடைய மன்னிப்பின் ஆசீர்வாதம்: “அவர்கள் பாவத்தை மன்னித்து,”
- தேவனுடைய குணமாக்குதலின் ஆசீர்வாதம்: “அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்.”
- பழைய ஏற்பாட்டில், சரீரப்பிரகாரமான க்ஷேமத்தின்மீது வலியுறுத்தம் இருந்தது.
- புதிய ஏற்பாட்டில், ஆவிக்குரிய க்ஷேமத்தின்மீது வலியுறுத்தம் இருக்கிறது.
முடிவுரை
சங்கீதம் 85:6ஐ ஆழ்ந்து சிந்திக்கவும்: “உமது ஜனங்கள்மீது உம்மில் மகிழ்ந்திருக்கும்படி, நீர் எங்களைத் திரும்ப உயிர்ப்பிக்கமாட்டீரோ?” நாம் ஒவ்வொருவரும், “உயிர்ப்பித்தல் என்பது என்னில் இருந்து தொடங்கட்டும்!” என்று கூறுவோமாக.