எஸ்றா மற்றும் நெகேமியா: ஆய்வு
சிறையிருப்பிலிருந்து திரும்புதல்
வாசிக்க வேண்டிய அதிகாரங்கள்: எஸ்றா 1, 3-10; நெகேமியா 1-8, 13.
தலைப்பு
எஸ்றா என்ற புத்தகம், பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து இஸ்ரவேல் மக்களை இரண்டாம் முறை வழிநடத்தி வந்த ஆசாரியரின் பெயரால் வழங்கப்படுகிறது. நெகேமியா என்ற புத்தகம் மூன்றாம் முறை வழிநடத்தி வந்த அப்புத்தகத்தின் பிரதானப் பாத்திரப் பெயரால் வழங்கப்படுகிறது.
பின்னணி
எரெமியா, எழுபது ஆண்டுகளில் சிறையிருப்பு ஒழியும் என்று தீர்க்கதரிசனம் கூறியிருந்தார் (எரெமியா 25:11, 12; 29:10). இந்த எழுபது ஆண்டுகள் என்பவை, கி.மு. 605ல் ராஜரீக வம்சத்தை பாபிலோனுக்கு முதன்முறையாக இட்டுச் சென்றதில் இருந்து (2 இராஜாக்கள் 24; தானியேல் 1) செருபாபேலின் நடத்துவத்தின்கீழ் அவர்கள் முதல்முறை திரும்பி வந்தது வரையிலான (எஸ்றா 1) காலமாகும். இஸ்ரவேல் மக்கள் சிறையிருப்புக்கு கொண்டுபோகப்படுதல் மூன்று நிகழ்ச்சிகளின் படி நிலைகளிலும், அவர்கள் திரும்பிவருதல் மூன்று நிகழ்ச்சிகளின் படி நிலைகளிலும் நடந்தது.
எஸ்றாவின் புத்தகம் முதல் இரண்டு திரும்பி வருதல்களைப் பற்றிக் கூறுகிறது. கி.மு. 538ல் செருபாபேல் முதல் திரும்பி வருதலை வழி நடத்தினார், அவர் ஒரு அதிபதியாகப் பணிபுரிந்தார் (ஆகாய் 1:1). ஆசாரியரான யோசுவாவும் (எஸ்றா 3:2), தீர்க்கதரிசிகளான ஆகாய் மற்றும் சகரியா என்பவர்களும் (எஸ்றா 5:1, 2) அவருடன் ஊழியம் செய்தனர். தேவாலயத்தைத் திரும்பக்கட்டுதல் என்பதே அவர்களுக்கு மாபெரும் அறைகூவலாக இருந்தது.
யூதா என்ற ஒரு கோத்திரம் மாத்திரமே மொத்தமாக சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்திருந்தபடியால், எஞ்சியவர்கள் இப்போது “யூதர்கள்” என்று அழைக்கப்பட்டனர் (எஸ்றா 4:23). இருப்பினும் இது, யூதா கோத்திரத்தார் மாத்திரமே திரும்பி வந்தனர் என்று அர்த்தப்படுவதில்லை. பன்னிரெண்டு கோத்திரங்களில் எஞ்சியிருந்தவர்களும் திரும்பியிருந்தனர் (எஸ்றா 6:17; 8:35).
எஸ்தரின் வரலாறு தேவாலயம் திரும்பக் கட்டப்பட்ட காலகட்டத்திற்குப் பொருந்துகிறது. அறுபது ஆண்டுகள் கடந்து சென்றன, அதன்பின்பு கி.மு. 458ல் எஸ்றா இரண்டாவது திரும்புதலை வழி நடத்தினார். தேவாலய ஆராதனையை மீண்டும் கட்டியெழுப்புதல் என்பது அவரது ஊழியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. எஸ்றா நியாயப்பிரமாண விற்பன்னர்களில் முதலாவதானவராக இருந்தார், இவர் “வேதபாரகர்” என்று(ம்) அறியப்பட்டார் (எஸ்றா 7:6).
எஸ்றா, கி.மு. 444ல் மூன்றாவது திரும்பி வருதலை வழிநடத்திய நெகேமியாவுடன் இணைந்து, எருசலேமின் மதில்களைத் திரும்ப எடுத்துக்கட்டுவதில் ஊழியம் செய்தார். நெகேமியா ஒரு அதிபதியாயிருந்து பணியாற்றினார் (நெகேமியா 5:14). மல்கியா என்ற தீர்க்கதரிசி அனேகமாக, நெகேமியா மற்றும் எஸ்றா ஆகியோருடன் ஊழியம் செய்திருக்கலாம்; அவர் நெகேமியா புத்தகத்தின் இறுதிப்பாதியில் கையாளப்பட்ட பிரச்சனைகளை எடுத்துரைத்தார்.
எஸ்றாவே தமது பெயர்கொண்ட இப்புத்தகத்தை எழுதியிருக்கலாம்; 7-10 வரையுள்ள அதிகாரங்களில் தன்மைப் பெயர்ச்சொல் பயன்படுத்தப் பட்டுள்ளதைக் கவனியுங்கள். நெகேமியா என்ற புத்தகத்தையும் இவரே எழுதி யிருப்பார் என்றால், இவர் அனேகமாக நெகேமியாவின் தனிப்பட்ட பதி வேடுகளைப் பரிசுத்த ஆவியானவருடைய வழிநடத்துதலினால் பயன்படுத்தி யிருக்கலாம் (நெகேமியா 1:1ஐக் கவனிக்கவும்).
வரைகுறிப்புகள்
எஸ்றா
1 முதல் திரும்புதல்: தேவாலயத்தைத் திரும்பக் கட்டியெழுப்புதல் (1-6); சமாரியர்களால் எதிர்ப்பு (4).
- இரண்டாம் திரும்புதல்: ஆவிக்குரிய தன்மையைத் திரும்ப கட்டி யெழுப்புதல் (7-10).
நெகேமியா
1 மூன்றாம் திரும்புதல்: மதில்களைத் திரும்பக் கட்டியெழுப்புதல் (1-6)
- A. “கட்டியெழுப்புதல்” எவ்வாறு என்பதற்கு மாபெரும் உதாரணம்.
- 1. மாபெரும் நடத்துவத்துவம்: நெகேமியா (ஜெபத்தின் மனிதர்: 2:4; 4:4, 5; 6:9, 14).
- 2. மாபெரும் பின்பற்றுதல்: மக்கள் (2:18; 4:6).
- B. ஊக்கமிழக்கச் செய்ய முயற்சிகள்.
- 1. சக்கந்தம் பண்ணுதல் (4:1-6).
- 2. யுத்தம் (4:7-23),
- 3. “உச்சி” மாநாட்டிற்கு அழைப்பு (6:1-4).
- 4. நெகேமியாவின் நோக்கங்கள் தவறு என்று குற்றம் சாட்டப் படுதல் (6:5-9).
- 5. கள்ளத் தீர்க்கதரிசி (6:10-14).
- ஆளுகைசெய்தல்: நாட்டைத் திரும்பக் கட்டியெழுப்புதல் (7-13).
எஸ்றா மற்றும் நெகேமியா என்ற புத்தகங்களில் இருந்து பாடங்கள்
யூதர்கள் சிறையிருப்பிலிருந்து திரும்புதல் என்பது தேவன் இரண்டாவது வாய்ப்பு எதுவுமின்றி தேவனாகவே இருக்கின்றார் என்ற மாபெரும் சத்தியத்தை மீண்டும் அடிக்கோடு இடுகிறது.
விக்கிரகாராதனையின் விளைவு என்பது இஸ்ரவேல் மக்கள் தங்கள் சிறையிருப்பிலிருந்து கற்றுக்கொண்ட ஒரு பாடமாக இருந்தது. யூதர்களிடத்தில் விக்கிரகாராதனை என்பது திரும்ப ஒருக்காலும் ஒரு பிரச்சனையாக இருந்த தில்லை.
கலப்பினத் திருமணம் – யூதரல்லாதவர்களுடன் திருமண உறவு – என்பது அவர்கள் தொடர்ந்து போராடிக்கொண்டிருந்த ஒரு பிரச்சனையாக இருந்தது (எஸ்றா 9, 10; நெகேமியா 13). ஒருவர் யாரைத் திருமணம் செய்துகொள்கின்றார்
என்பது உண்மையிலேயே மாறுபாட்டை ஏற்படுத்துகிறது. உண்மையான போதித்தல், பிரசங்கித்தல், மற்றும் வேதவாசிப்பு ஆகியவை பற்றிய மாபெரும் விவரிப்புகளில் ஒன்று நெகேமியா 8:8ல் தரப்பட்டுள்ளது.
தேவன், மேசியாவை உலகிற்குக் கொண்டுவருதல் என்ற தமது திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்தினார். செருபாபேல் என்பவர் தாவீதின் ராஜரீக வம்சத்தில் வந்த யோயாக்கீன் என்ற அரசரின் கொள்ளுப்பேரனாக இருந்தார் (1 நாளாகமம் 3:19), அவர் கிறிஸ்துவின் முன்னோர்களில் ஒருவராயிருந்தார் (மத்தேயு 1:12)!
கர்த்தருடைய வீட்டைக் கைவிடுதல் (நெகேமியா 13:1-11)
நெகேமியா எருசலேமின் மதில்களைக் கட்டுவித்தவர் என்று அறியப்படுகின்றார், ஆனால் அவர் அதைக் காட்டிலும் அதிகக் கடினமான பணிமுயற்சிகளைச் செய்திருந்தார். அவரது புத்தகத்தின் முதல் ஆறு அதிகாரங்கள், மதில்களைக் கட்டியெழுப்புதல் என்ற விஷயத்தைச் சுற்றிச்சுழல்கின்றன; கடைசி ஏழு அதிகாரங்கள். அவர் யூதாவின் அதிபதியாக இருந்து பணியாற்றுதலைப் பற்றியவைகளாக இருக்கின்றன. மக்களைக் கட்டியெழுப்புதல் என்பது மதிலைக் கட்டியெழுப்புதலைக் காட்டிலும் கடினமான பணிமுயற்சியாக உள்ளது.
13ம் அதிகாரமானது, நெகேமியா எதிர்கொண்ட மிகக்கடினமான பணி முயற்சியைப் பற்றிக் கூறுகிறது. அவர் பன்னிரெண்டு ஆண்டுகள் அதிபதியாகப் பணியாற்றிய பின்பு, சற்றுக்காலம் பாபிலோனுக்குத் திரும்பவும் சென்றிருந்தார். அவர் யூதாவுக்குத் திரும்பி வந்தபோது, அவர் செய்து முடித்திருந்தவற்றில் பலவிஷயங்கள் மீண்டும் செய்யப்பட வேண்டியவைகளாய் இருந்தன. இந்தப் பிரச்சனையைத் தொகுத்துரைக்கும் கேள்வியொன்று 13ம் வசனத்தில் காணப்படுகிறது: “தேவனுடைய ஆலயம் கைவிடப்பட்டுப் போவானேன்?”
நெகேமியா (யூதேயாவைவிட்டு பாபிலோனுக்கு) போவதற்கு முன்பு, மக்கள் தேவனுடைய சித்தத்தைச் செய்யவும் அவரை மகிமைப்படுத்தவும் தங்களை அர்ப்பணித்திருந்தனர் (10:28,29), இருப்பினும், அவர்கள் செய்வதாகக் கூறியிருந்த யாவற்றையும் அவர்கள் செய்திருக்கவில்லை; அவர்கள் செய்ய மாட்டோம் என்று கூறியிருந்த யாவற்றையும் அவர்கள் செய்திருந்தனர். அவர்கள் கர்த்தருடைய வீட்டைக் கைவிட்டிருந்தனர்.
கர்த்தருடைய வீட்டைக் கைவிடுதல் என்பதில், அவர்கள் தேவாலயத்தில் நியமிக்கப்பட்டிருந்த ஆராதனைகளைக் கைவிடுதல் மற்றும் குறிப்பிடப்பட்ட பலிகளைச் செலுத்தத் தவறுதல் ஆகியவை உள்ளடங்கியிருந்தன, ஆனால் இவற்றைக் காட்டிலும் அதிகமானவையும் அதில் உள்ளடங்கியிருந்தன. தேவாலய ஆராதனை ஊழியத்தைக் கைவிடுதல் என்பது மக்களின் பொதுவான மதரீதியான வீழ்ச்சியின் அடையாளமாயிருந்தது. தேவனைச் சேவித்தலும் தேவனை மகிமைப்படுத்துதலும் அவர்களின் இருதயங்களிலும் வாழ்விலும் இரண்டாம் இடத்தையே பெற்றிருந்தன.
“ஏன்?” என்பதே கேள்வியாக உள்ளது. நமது வேதபாடப்பகுதியானது, கர்த்தருடைய வீடு கைவிடப்பட்டிருந்தது ஏன் – மற்றும் இன்றைய நாட்களில் மக்கள் அதை(யே) செய்வது ஏன்? என்பதற்குப் பல காரணங்களைக் கொடுக்கிறது.
- அறியாமையினால் மக்கள் கர்த்தருடைய வீட்டைக் கைவிடுகின்றனர் 13:1-3).
- A. இது மற்ற எல்லாப் பிரச்சனைகளுக்கும் அடிப்படையாக உள்ளது. அவர்கள் தேவனுடைய சித்தத்தை அறியாதிருந்தனர்.
- B. நாம் வருகைதருதல் அல்லது ஈடுபாடு இவற்றில் எதைப்பற்றிப் பேசினாலும், அறியாமை என்பது தேவனுடைய வீட்டைக் கைவிடும் எல்லாருக்கும் பின்பாக உள்ளது.
- மக்கள் தங்களை இவ்வுலகில் இருந்து பிரித்துக்கொள்ளாமல் இருக் கின்றதினால் அவர்கள் தேவனுடைய வீட்டைக் கைவிடுகின்றனர் (13:1- 3).
- A. யூதர்கள் ஒரு தனிப்பட்ட மக்களாக இருக்க வேண்டியிருந்தது (உபாகமம் 23:3-5). புறதெய்வ மக்களுடன் அவர்கள் கொண்டிருந்த ஒரு நெருக்கமான இணைவு, அவர்கள் தங்கள் தனித்தன்மையை இழந்துபோகச் செய்தது.
- B. நாம் இன்னமும் ஒரு தனித்தன்மையான மக்களாக நிலைத் திருக்க வேண்டியுள்ளது (2 கொரிந்தியர் 6:14-18; ரோமர் 12:2; யாக்கோபு 4:4; 1 யோவான் 2:15-17). நாம் இவ்வுலகத்தில் இருக்க வேண்டும், ஆனால் இவ்வுலகத்தாராக இருக்கக்கூடாது (யோவான் 17:11, 14- 16).
III. மக்கள் தங்கள் வாழ்வில் உள்ள அசுத்தங்களினால் கர்த்தருடைய வீட்டைக் கைவிடுகின்றனர் (13:4-8).
- A. நடத்துனர்கள் உடன்படுதல் என்ற ஆவியினால் பாதிக்கப்பட்டும் இருந்தனர். அவர்கள் பிரச்சனைக்குத் தீர்வு காணமுடிவதற்குமுன்பு அசுத்தத்தன்மையை ஒதுக்கிப்போட வேண்டியதாக இருந்தது.
- B. நாம் சிந்தனையிலும் (பிலிப்பியர் 4:8) வாழ்விலும் (யாக்கோபு 1:27; 1 தீமோத்தேயு 5:22) தூய்மையானவர்களாக இருக்க வேண்டியது அவசியம்.
- பேராசை மற்றும் கருமித்தனம் ஆகியவற்றினால் மக்கள் கர்த்தருடைய வீட்டைக் கைவிடுகின்றனர் (13:10-13),
- A. நெகேமியா தசமபாகங்கள் செலுத்தப்படுதலை உறுதியாக்க நடவடிக்கை மேற்கொண்டார்.
- B. புதிய ஏற்பாட்டில் நாம் தசமபாகம் செலுத்தும்படியல்ல, ஆனால் கொடுக்கும்படி கூறப்பட்டுள்ளோம்: 1 கொரிந்தியர் 16:2; 2 கொரிந்தியர் 9:6, 7,
V மக்கள் கர்த்தரின் நாளானது மற்ற எந்த நாளையும் போன்றே இருப்பதாக நினைப்பதால், அவர்கள் கர்த்தருடைய வீட்டைக் கைவிடுகின்றனர் (13:15-17).
- A. மக்கள் தேவனுடைய விஷயங்களைப் பற்றி நினைத்துப் பார்ப்ப தற்காக ஓய்வுநாள் ஒதுக்கப்பட்டிருந்தது.
- B. கர்த்தருடைய நாளை உலகப்பிரகாரமாக்குதல் என்பது நாம் இன்றைய நாட்களில் எதிர்கொள்ளுகிற மாபெரும் அறைகூவல் களில் ஒன்றாக உள்ளது. நாம் பிரச்சனையின் பாகமாக இருக்கின் றோமா அல்லது தீர்வின் பாகமாக இருக்கின்றோமா?
VI மக்கள் தங்களைக் கர்த்தரிடத்தில் இருந்து புறம்பே இழுத்துப் போடுபவர்களைத் திருமணம் செய்து கொள்வதால், கர்த்தருடைய வீட்டைக் கைவிடுகின்றனர் (13:23-25,28).
- A. ஒருவரின் துணைவர்/துணைவி மற்ற/எதிர்த்திசையில் இழுக்கும் போது தேவனைச் சேவித்தல் என்பது கடினமானதாக உள்ளது.
- B. 2 கொரிந்தியர் 6:14ஐக் காணவும்.
முடிவுரை:
இவ்வதிகாரத்தில் இரண்டு விஷயங்கள் நிலைநிற்கின்றன:
- A. நெகேமியா கர்த்தருடைய வீட்டின்மீது அன்பாய் இருந்தார். நாம் சபையின்மீது அன்பாய் இருக்கின்றோமா (1 தீமோத்தேயு 3:15)?
- B. தேவனுடைய சித்தத்துடன் தொடர்புடைய சிலவிஷயங்கள் செய்யப்படத் தேவையாக இருந்தபோது, நெகேமியா அதைச் செய்தார். நாம் அவ்வாறு செய்கின்றோமா?