மலைப்பிரசங்கத்தின் உள்ளடக்கம் “வரும் மனோபாவங்கள்” (மத்தேயு 5:3-6)
பொருளடக்கம்
- வரும் மனோபாவங்கள்
- ஆவியில் எளிமையுள்ளவர்கள்
- துயரப்படுகிறவர்கள்
- சாந்தகுணமுள்ளவர்கள்
- நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள்
கலிலேயாவில் ஒரு மலையுச்சியில் இயேசுவானவர் இந்தப் பிரசங்கத்தைச் செய்தார். தமது சீஷர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் தேவனுடைய அன்புக்கும் உலகத்திலுள்ள வேதனைப்படும் மக்களுக்கு மிடையே பாலமாகச் செயல்பட வேண்டுமென்று அவர் அறைகூவல் விடுத்தார். தமது அன்பைச் சீஷர்கள் மற்றவர்களுக்குக் காட்ட வேண்டு மென்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். ஒப்படைப்புக்கான அழைப்போடு அவர் தமது பிரசங்கத்தை முடித்தார். பிறகு அவர் தமது பிரசங்கத்தைக் கேட்டவர்களில் பன்னிருவரைத் தமது ‘அப்போஸ்தலர் களாக அதாவது, ”அனுப்பப்படுகிறவர்களாக” நியமித்தார். இந்த அப்போஸ்தலர்கள் இயேசுவானவருக்காக வாழ்ந்து, உலகெங்கிலும் சீஷர்களை உருவாக்கி அவருக்காக மரித்தார்கள்.
இப்போது நாம் இந்தப் பிரசங்கத்தின் பின்னணியை அறிந்து கொண்டோம். தொடர்ந்து பிரசங்கத்தின் உள்ளடக்கத்தைப் பார்ப்போம். ‘அப்பொழுது அவர் தமது வாயைத் திறந்து அவர்களுக்கு உபதேசித்துச் சொன்னது என்னவென்றால். ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோக ராஜ்யம் அவர்களுடையது. துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள். சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் கதந்தரித்துக்கொள்ளுவார்கள். நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள் (5:2-6).
எட்டு மனோபாவங்களைப்பற்றித் தமது சீஷர்களுக்குப் போதிப்பதின்மூலம் இயேசுவானவர் தமது பிரசங்கத்தைத் தொடங்கு கிறார். இவைகளை “பாக்கியவசனங்கள்” அல்லது ‘பாக்கியமான மனோபாவங்கன்” என்று அழைக்கிறோம். ஏனென்றால் ஒவ்வொரு வசனமும் யார் பாக்கியவான்கள் என்று எடுத்துக் கூறுகிறது. “பாக்கியம்” என்பதற்கு ஆவிக்குரிய வளமையான நிலை” அல்லது “கிருபையின் நிலை என்று அர்த்தம் கூறலாம். ஒவ்வொரு மனோபாவமும் அதைச் சீஷன் பின்பற்றினால் அவனுக்கு என்ன கிடைக்கும் என்ற வாக்குத் தத்தத்தையும் கொண்டிருக்கிறது.
இந்த எட்டுப் பாக்கியமான மனோபாவங்களும் ஒரு சீஷனின் மனநிலை எப்படி இருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. இந்தப் பிரசங்கம் கொடுக்கப்பட்ட பின்னணியில் மலையடிவாரத்தில் நோயில் வேதனைப்படும் பலர் கூடியிருந்தார்கள். சீஷர்கள் இந்த மனோபாவங்களைப் பெற்றிருப்பார்களானால், இந்த உலகத்தின் வேதனைகளுக்குத் தீர்வுகாணும் கிறிஸ்துவின் திட்டத்தில் அவர்களும் பங்கேற்சு முடியும்.
இயேசுவானரின் சீஷர்களாக, பிரச்சினையின் பங்காக இராமல். தீர்வின் பங்காக இருப்பதை நாம் தெரிந்துகொள்ளும்போது, இந்த மனோபாவங்களை ஆராய்ந்து பார்த்து. நமது வாழ்க்கையின் ஒவ்வொரு நானிலும் அவைகளைப் பின்பற்ற ஒப்படைப்புக் கொண்டிருப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் சாரியமாகும். இந்தப் பாக்கியவசனங்களே உண்மையில் அவருடைய பிரசங்கம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அடுத்துவருபவை இந்தப் பிரசங்கத்தின் செயல்படுத்துதல் பகுதியேயாகும். இந்தப் பாக்கியவசனங்களின்படி நாம் எப்படி நடக்க வேண்டும் என்பதை அவை எடுத்துக் கூறுகின்றன.
இந்தப் பிரசங்கத்தின் பின்னொரு பகுதியில் இயேசுவானவர் சரியான மனோபாவங்களே வெளிச்சம் நிறைந்த வாழ்க்கைக்கும் (பரிசுத்தம். சத்தியம். சந்தோஷம்). இருள் நிறைந்த வாழ்க்கைக்கும் இடையேயுள்ள வேறுபாடாக இருக்கிறது என்று போதிக்கிறார் (மத். 6:22-23). நாம் தவறான மனோபாவங்களைக் கொண்டிருந்தால் நமது வாழ்க்கை இருண்டிருக்கும் என்றும், நமக்குச் சந்தோஷம் கிடைக்காது என்றும் கூறுகிறார்.
தவறான மனோபாவத்தைக் கொண்டிருந்ததினால் அடால்ப் ஹிட்லர், ஜோசப் ஸ்டாலின் போன்றவர்கள் திரளான மக்களைக் கொன்று குவித்து, இலட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் பயங்கர இருளைக் கொண்டுவந்தனர். எனவேதான் இயேசுவானவர் தமது முதல் தியான முகாமில் சரியான மனோபாவத்தைக் கொண்டிருப்பதை அதிகமாக வலியுறுத்துகிறார்.
வரும் மனோபாவங்கள்
இந்த எட்டு மனோபாவங்களையும் நான்கு மனோபாவங்களைக் கொண்ட இரண்டு தொகுதிகளாகப் பிரிக்கலாம். வேதாகமம் முழுவதிலும், தேவன் தமது பணிக்காகத் தலைவர்களைத் தெரிந்தெடுக் கும்போது, ஒரு ஒழுங்குமுறைப் பின்பற்றுவதை நாம் பார்க்கலாம் அவர்கள் ”வரும் அனுபவங்களையும் “போகும் அனுபவங்களையும்” பெற்றிருக்கிறார்கள். தேவனுக்காகக் கனிகொடுக்கும் வகையில் போகு முன்பாக, அவர்கள் அவர் முக்கியத்துவத்தை உணர்ந்து அவரிடம் வரவேண்டியிருக்கிறது,
தாலந்தைப்போன்ற சில காரியங்களைத் தனிமையில் வளர்த்துக் கொள்ள முடியும் என்றாலும். ஒருவருடைய குணத்தை வளர்த்துக் கொள்வதற்கு மக்களோடுள்ள உறவு தேவைப்படுகிறது. முதல் நான்கு பாக்கியவசனங்களும் தேவனோடுள்ள நமது தனிப்பட்ட அனுபவத்தில், நமது “அறை வீட்டுக்குள்” (மத். 6:6) வளர்த்துக்கொள்ள வேண்டியவையாக இருக்கின்றன. தேவனோடுள்ள நமது தனிப்பட்ட உறவில் நாம் முதல் நான்கு பாக்கியவசனங்களையும் சுற்றுக்கொண்டு வளர்த்துக்கொள்கிறோம். ஆனால் அடுத்த நான்கு பாக்கியவசனங் களையும் மக்களோடுள்ள உறவிலேயே நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
ஆவியில் எளிமையுள்ளவர்கள்
‘ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோக ராஜ்யம் அவர்களுடையது” என்பதே முதல் பாக்கியவசளமாகும் (மத்- 5:3) இது சமயத்தலைவர்கள் யோவான்ஸ்நானனிடம் கேட்ட கேள்விக் குப்பொருத்தமாக இருக்கிறது: “உம்மைக் குறித்து நீர் என்ன சொல்லுகிறீர்?” (யோவான் 1:22). நம்மைக் குறித்த சரியான மனோபாவத்தை நாம் பெற்றிராவிட்டால், தேவனுடைய தீர்வுகளில் பங்கேற்க முடியாது.
இந்தப் பாக்கியம் நாம் தனிப்பட்ட முறையில் இயேசுகிறிஸ்துவை நமது ஆண்டவராகவும், இரட்சகராகவும். ராஜாவாகவும் ஏற்றுக் கொள்வதைக் குறிக்கிறது. நாம் பரலோக ராஜ்யத்தின் பங்காக இருக்கிறோம் என்றால். நாம் கர்த்தாதி கர்த்தாவும், ராஜாதி ராஜாவும், அனைத்துக்கும் தீர்வாகவும் இருப்பவருக்குக் கீழ்ப்படிருக் கிறோம் என்று அர்த்தமாகும். கிறிஸ்து தமது சீஷர்களின் மூலமாக இந்த உலகத்துக்குக் கொண்டுவர விரும்பும் தீர்வின் அங்கமாக நாம் இருக்க வேண்டு மானால், முதலாவதாக நாம் இந்த மனோபாவத்தைப் பெற்றிருக்க வேண்டும்..
ஆவியில் எளிமையை ஆவியில் நொறுங்குண்ட நிலை” என்றும் மொழிபெயர்க்கலாம். அதாவது இது நொருங்குண்ட மனோபாவத்தைக் குறிக்கிறது. தேவன் சிறப்பான ஊழியத்துக்காக அழைத்து ஆயத்தப்படுத்துபவர்களின் வாழ்க்கையில் நம்மால் இதைக் காண முடியும், நீங்கள் வேதாகமத்தை வாசிக்கும்போது, தேவள் தமது மகிமைக்காகப் பெரிய கிரியைகளைச் செய்யும்படி அழைப்பவர்களின் வாழ்க்கையில் இந்தப் பாக்கியமான மனோபாவத்தை நாம் காண முடியும். யாக்கோபு இரவு முழுவதும் ஒரு தேவதூதனோடு போராடியபோது, அவன் நொறுங்குண்ட நிலையை அனுபவித்தான் (ஆதி.32:24-32).
தேவன் அவர்களை ஆவியில் எளிமையுள்ளவர்களாக மாற்றும் போது, யாக்கோபு. மோசே மற்றும் அப்போஸ்தலனாகிய பேதுரு போன்றவர்கள் மூன்று பாடங்களைக் சுற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. தாங்கள் ஒன்றுமில்லாதவர்கள் என்பதை அவர்கள் கற்றுக்கொண் டார்கள்; தாங்கள் யாரோ ஒருவர் என்பதை அவர்கள் கற்றுக்கொண்டார். கள் தான் ஒன்றுமில்லாதவன் என்று அறிந்த யாரோ ஒருவரைத் தேவனால் பயன்படுத்த முடியும் என்பதையும் அவர்கள் கற்றுக்கொண்டார்கள் அதாவது ‘நீங்கள் நீங்களாகவே ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கும்போது பாக்கியவான்களாக இருக்கிறீர்கள்; நீங்கள் குறைவு படும்போது தேவனையும் அவருடைய ஆளுகையையும் அதிகமாகக் காண முடியும்” என்று சொல்லப்படுகிறது.
ஒரே வார்த்தையில் கூறுவோமானால், ஆவியில் எளிமை என்று இயேசுவானவர் விவரிக்கும் கிருபையின் நிலை தாழ்மையாகும். தாழ்மையைப் புரிந்துகொள்வது கடினமாகும். நீங்கள் தாழ்மையுள்ளவர் என்று நினைத்தால் அதுவே நீங்கள் பெருமைகொள்வதற்கு ஏதுவாகி விடும். ஒரு சபை தனது போதகருக்கு தாழ்மையைப் பாராட்டும் ஒரு பதக்கத்தைக் கொடுத்தது. ஆனால் அவர் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை யும் அதை அணிந்து வந்தபடியால் அதைத் திரும்ப வாங்கிக்கொண்டது! தேவனே நாள் தீர்வு அல்ல. என்னால் எனது சொந்தப் பிரச்சினை களைக்கூடத்தீர்த்துக்கொள்ள முடியவில்லை. மற்ற மக்களின் பிரச்சினை களை என்னால் நிச்சயமாகத் தீர்க்க முடியாது. ஆனால் உம்மால் முடியும் என்பதை நான் அறிகிறேன். நீரே தீர்வாக இருக்கிறீர், நீர் என்னிலும், நான் உம்முடைய உறவிலும் இருப்பேனானால், மக்களோடும் அவர்களுடைய பிரச்சினைகளோடும் இடைபடும்போது உமது தீர்வுக்கு ஒரு பாத்திரமாக இருக்கும் வல்லமையை நான் பெறுவேன்” என்று நாம் ஜெபிப்போமானால் அது நாம் தாழ்மையைப் புரிந்துகொண்டிருக் கிறோம் என்பதைக் காட்டுகிறது.
துயரப்படுகிறவர்கள்
“துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடை வார்கள்” என்பது இரண்டாவது பாக்கியவசனமாகும் (5:4) மதிப்பீடு களைக் குறித்த ஒரு பாடத்தை இயேசுவானவர் நமக்குக் கற்றுக்கொடுக் கிறார். நாம் துயரப்படும்போது நம்மைப் பாக்கியவான்களாகக் கருது கிறோமா? நமது துயர வேளைகளில் நமக்குச் சிறப்பான ஆசீர்வாதத் தையும் ஆறுதலையும் தருவதாக இயேசுவானவர் வாக்குத்தத்தம் அருளியிருக்கிறார். துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள் என்று கூறி மதிப்பீடுகளைக் குறித்த அறிக்கையை அவர் கொடுக்கிறார்!
மகாஞானியாகிய சாலொமோனின் வார்த்தைகள் இயேசு வானவரின் வார்த்தைகளுக்கு ஒத்துப்போகின்றன: ‘விருந்துவீட்டுக்குப் போவதிலும் துக்க வீட்டுக்குப் போவது நலம்; இதிலே எல்லா மனுஷரின் முடிவும் காணப்படும்; உயிரோடிருக்கிறவன் இதைத் தன் மனதிலே சிந்திப்பான் நகைப்பைப் பார்க்கிலும் துக்கிப்பு நலம்: முகதுக்கத்தினாலே இருதயம் சீர்ப்படும்.. வாழ்வுகாலத்தில் நன்மையை அநுபவித்திரு. தாழ்வு காலத்தில் சிந்தனைசெய் மனுஷன் தனக்குப் பின் வருவதொன் றையும் கண்டுபிடியாதபடிக்கு தேவன் இவ்விரண்டையும் ஒன்றுக் கொன்று எதிரிடையாக வைத்திருக்கிறார்” (பிர. 7:2-4.14)
அதாவது, துக்கப்படுகிறவர்கள் பாக்கியவான்கள். நாம் ஒரு துக்க வீட்டுக்குச் சென்று நாம் நேசித்த அல்லது அறிந்த ஒருவர் மரித்தபின் அவருடைய சரீரத்தைப் பார்க்கும்போது அது நமக்குப் பயபக்தியைத் தோற்றுவிக்கும் அனுபவமாக இருக்கிறது. நாம் எப்போது அப்படி அடக்கம்பண்ணப்படும் சரீரமாகப் போகிறோம் என்பதை நினைக்கும் போது ஆழமாக அசைக்கப்படுகிறோம். நாம் ஒரு துக்க வீட்டில் இருக்கும் போது தேவன் நமக்குப் போதிக்க விரும்பும் நித்திய மதிப்பீடுகளை ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களாக இருக்கிறோம் என்று சாலொமோன் கூறுகிறார். எனவே ஒரு விருந்துக்குச் செல்லுவதைவிட துக்சு வீட்டுக்குச் செல்வது சிறப்பானதாகும்..
அன்புக்குரிய ஒருவரின் இழப்புக்காகத் துயரப்படும்போது அது அவர்கள் விசுவாசத்தில் பலவீனமாக இருப்பதையே சாட்டுகிறது என்று சில விசுவாசிகள் நினைத்துக்கொள்கிறார்கள். இயேசுவானவர் தான் அறிந்த ஒருவனுடைய கல்லறைக்குச் சென்றபோது கண்ணீர் விட்டார். அதைப் பார்த்தவர்கள் “இதோ, இவர் அவனை எவ்வளவாய்ச் சிநேகித்தார்” என்றார்கள் (யோவான் 11:35, 36). நாம் ஒருபோதும் நமது துயாத்தை அடக்கிவைக்கக்கூடாது என்பதே இந்த இரண்டாவது பாக்கியவசனம் முதலாவதாக நமக்குப் போதிக்கும் காரியமாகும்.
நாம் விசுவாசிகளாக இருக்கும் நமது அன்புக்குரியவர்களை இழந்துபோகும்போது, நாம் இழந்த ஒருவரை மறுபடியும் காண்பதற்கு நம்பிக்கையில்லாமல் இருக்கும் அவிசுவாசிகளைப் போல அழுது புலம்பக் கூடாது என்று பவுல் கூறியிருக்கிறார் (1 தெச. 4:13). தாவீது தன் குழந்தையை இழந்தபோது. பயபக்தியான துக்கம்கொண்டாடுதலின் நம்பிக்கையையும் துக்கத்தையும் வெளிப்படுத்தினான். அவன் “நான் அதினிடத்திற்குப் போவேனே அல்லாமல், அது என்னிடத்திற்குத் திரும்பிவரப் போவதில்லை” என்று கூறினான் (2 சாமு. 12:23) இயேசு கிறிஸ்துவைத் தங்கள் ஆண்டவராகவும் இரட்சகராகவும் அறிந்த அவரை நாம் மறுபடியுமாகப் பரலோகத்தில் காணுவோம் என்பதே நம்முடைய நம்பிக்கையாகும். என்றாலும். நமது வாழ்க்கையின் எஞ்சிய நாளை அந்த அன்புக்குரியவரைப் பார்க்க முடியாமலேயே கழிக்க வேண்டும். என்பதே நமது துக்கத்துக்கான நியாயமான காரணமாகும்.
நமது துயர அனுபவத்தில் இயேசுவானவர் நமக்கு வாக்குத்தத்த மாகக் கூறும் ஆசீர்வாதத்தையும் ஆறுதலையும் நாம் கண்டடைய வேண்டு மானால் தேவன் நம்மை அசைப்பதற்கு மூன்று வழிகளில் நமது துக்கத்தைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்: முதலாவதாக, நமது துக்கம் நாம் சரியான கேள்விகளைக் கேட்கும் இடத்துக்கு நம்மைக் கொண்டுசெல்ல வேண்டும் – ஒருவேளை நமது வாழ்க்கையில் முதல் முறையாக நாம் சரியான கேள்விகளைக் கேட்கலாம். பலர் வாழ்க்கையில் ஒருபோதும் சரியான கேள்விகளைக் கேட்பதில்லை. என்றாலும், நாம் துக்கப்படும்போது சில கேள்விகளைக் கேட்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.
யோபு இதற்குச் சிறந்த முன்மாதிரியாக இருக்கிறான். அவன் தனது பத்துப் பிள்ளைகளையும், உடைமைகளையும், தனது உடல்நலத்தையும் இழந்துபோனான். அவன் துக்கப்பட்ட வேளையில் அது சரியான கேள்விகளைக் கேட்கும் இடத்துக்குத் தன்னைக் கொண்டுவர அனுமதித்தான். மனுஷனோவென்றால் செத்தபின் ஒழிந்துபோகிறான், மனுபுத்திரன் ஜீவித்துப் போனபின் அவன் எங்கே? மனுஷன் செத்தபின் பிழைப்பானோ?” போன்ற பெரிய கேள்விகளை அவன் கேட்டான் (யோபு 14:10-14). நாம் கேட்க வேண்டுமென்று தேவன் விரும்பும் சரியான கேள்விகளுக்கு இவை எடுத்துக்காட்டாக இருக்கின்றன.
இரண்டாவதாக, நாம் சரியான கேள்விகளைக் கேட்கும்போது அவருடைய பதில்களைக் கேட்கும் இடத்துக்கு நமது துக்கம் நம்மைக் கொண்டுசெல்ல வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். யோபு தனது பாடுகளின் மோசமான நிலையில் தனது கேள்விக்கு மேன்மையான பதிலைப் பெற்றான்: அவன் மேசியாவைக் குறித்த வெளிப்பாட்டைப் பெற்றான். அவன் ‘என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசிநாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன் என்று அறிக்கையிட்டான் (யோபு 19:25).
தேவன் யோபுக்குக் கொடுத்ததுபோன்ற இயல்புக்கு அப்பாற்பட்ட வெளிப்பாடுகளை நமக்குக் கொடுக்காமலிருக்கலாம் ஆனால் அந்தச் சரியான கேள்விகளுக்கான பதில்களால் வேதாகமம் நிறைந்திருக்கிறது.
எனக்கு மிகவும் பிடித்தமான மேய்ப்பரின் சங்கீதத்தில் (சங்.23) என்னால் பல பதில்களைக் காண முடிகிறது.
இயேசுவானவர் தாம் கண்ணீர் வடித்த அடக்கத்துக்குச் சென்ற போது பெரிய பதிலை நமக்குக் கொடுத்திருக்கிறார். ஒருமுறை கல்லறையின் அருகே துயரப்பட்டுக்கொண்டிருந்த அன்புக்குரிய பெண்ணிடம் அவர் “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், உ என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான், உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான். இதை விசுவாசிக்கிறாயா” என்று கேட்டார் (யோவான் 11:25, 26).
இயேசுவானவரின் இந்தக் கேள்வி நாம் துக்கப்படும்போது எப்படி அசைக்கப்பட வேண்டும் என்று தேவன் விரும்பும் மூன்றாவது வழிக்கு நம்மை இட்டுச் செல்லுகிறது. துயரப்படுகிறவர்களுக்கு இயேசுவாளவர் வாக்குத்தத்தம் பண்ணியிருக்கும் ஆசீர்வாதத்தையும் ஆறுதலையும் நாம் பெற விரும்பினால், சரியான கேள்விகளுக்குத் தேவனுடைய பதிலை நாம் விசுவாசிக்கும் இடத்துக்கு அது நம்மைக் கொண்டுசெல்ல நாம் அனுமதிக்க வேண்டும்.
சரியான கேள்விகளுக்குரிய தேவனுடைய பதில்களை நாம் விசுவாசிக்கும்போது. இயேசுவானவர் துயரப்படுகிறவர்களுக்கு வாக்குத்தத்தமாக அருளியிருக்கும் ஆசீர்வாதமும் ஆறுதலும் ”இரட்சிப்பே” என்பதை நாம் கண்டுகொள்வோம். இந்தச் சொல்லுக்கு ”’விடுவிக்கப்படுதல்” என்பது அர்த்தமாகும். நாம் இரட்சிப்பின் விடுதலையையோ அல்லது நமது துக்கம் மற்றும் மனக்கிலேசத்திலிருந்து விடுதலையையோ பெறலாம். தமது துயரம் நம்மைக் கேள்விகேட்கவும், செவிகொடுக்கவும், விசுவாசிக்கவும் அசைக்குமானால், நமது வாழ்க்கையிலேயே மிக முக்கியமான அனுபவத்தை நாம் பெற முடியும்.
இந்தப் போதனையின் பின்னணி இந்த இரண்டாவது பாக்கிய வசனத்துக்கு மற்றொரு அர்த்தத்தையும் கொடுக்கிறது. கீழே மலை யடிவாரத்தைப் பாருங்கள் அங்கிருக்கும் மக்களைப் பார்க்க முடிகிறதா? அவர்கள் வேதனையில் இருக்கிறார்கள். நீங்கள் கீழே இறங்கிச் சென்று, அவர்களுடைய தீர்வின் பங்காகவும், அவர்களுடைய சோகமான கேள்விக்குரிய பதிலின் பங்காகவும் இருந்து உங்களை நீங்களே வேதனைப்படுத்திக்கொள்ளாமல் இருக்க முடியும் என்று உண்மையாகவே நம்புகிறீர்களா?” என்பதே இயேசுவானவரின் கேள்வியாகும். “மனதுருக்கும் என்றால் ”சேர்ந்து உணர்வது ” என்று அர்த்தமமாகும். நீங்கள் ஒருபோதும் வேதனைப்படாவிட்டால் எப்படி உங்களால் வேதனைப்படும் மக்களின் உணர்வைப் பெற முடியும்?
‘நற்செய்தி அறிவிப்பது என்பது ஒரு பிச்சைக்காரன் மற்றொரு பிச்சைக்காரனிடம் அப்பம் எங்கே கிடைக்கிறது என்று சொல்லுவதாகும்” என்று ஒருவர் கூறியிருக்கிறார், வேதனைப்பட்டு தேவனிடம் ஆறுதல் பெற்ற ஒருவனே மற்றவருக்கு ஆறுதலைக் கூற முடியும். வேதனைப்படும் ஒரு இருதயம் மற்றொரு வேதனைப்படும் இருதயத்துக்கு ஆறுதலளிப்பவர் யார் அவர் எங்கே இருக்கிறார். என்பதைக் கூறுகிறது.’பலர் உங்களிடம் தாங்கள் தேவனை விசுவாசிப்ப தாகவும் அவரை அறிந்திருப்பதாகவும் கூறலாம். ஆனால் தேவனால் மட்டுமே ஆறுதலளிக்கக் கூடிய வேதனையை அவர்கள் அனுபவித்திரா விட்டால் அவர்கள் தேவனை அறிந்திருக்கவில்லை என்றே அர்த்தமாகும். அவர்கள் தேற்றரவாளனைக் கண்டுபிடிக்கும்படி விரட்டப் படும்போது தேவனோடு உறவை ஏற்படுத்திக்கொள்கிறார்சுன்
“உங்களுக்கு மிகவும் அருமையான ஒன்றை நீங்கள் இழந்திருப் பதாக நீங்கள் உணரும்போது நீங்கள் பாக்கியவான்களாக இருக் கிறீர்கள், அப்போதுதான் உங்களுக்கு மிகவும் அருமையானவரால் நீங்கள் ஆறுதலைப் பெற முடியும் என்பது இந்தப் பாக்கிய வசனத்துக்குரிய ஒரு விளக்கமாகும்.
இந்த இரண்டாவது பாக்கியவசனத்தை முதலாவது பாக்கிய வசனத்தோடு சேர்த்துப் பார்க்கும்போது. மற்றொன்றையும் நாம் கண்டு கொள்கிறோம். நாம் ஆவியில் எளிமையாயிருக்கிறோம் என்பதைக் கற்றுக்கொள்ளும்போது, பெரும்பாலும் துயரப்படுகிறோம். தோற்றுப் போவது அதிக வேதனையைத் தருவதால் அதைக் குறித்த பயம் பலரை விரட்டுகிறது தோற்றுப்போகும்போது நாம் துயரப்படுகிறோம். ஆனால் அவரில்லாமல் நம்மால் எதையும் செய்ய முடியாது என்று நமக்கு உணர்த்துவதற்கு நமது தனிப்பட்ட தோல்வி தேவனுக்கு ஒரு பிடித்தமான கருவியாக இருக்கிறது. மோசேயும் பேதுருவும் துயரமான அனுபவங் களால் வேதனைப்பட்டார்கள்; பிறகு தேவனால் தாங்கள் வல்லமை யாகப் பயன்படுத்தப்படுவதற்கு முன்பாகத் தாங்கள் ஆவியில் எளிமை யாக இருக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டார்கள்.
சாந்தகுணமுள்ளவர்கள்
”சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் பூமியைச் கதந்தரித்துக்கொள்ளுவார்கள்” என்ற அடுத்த பாக்கியவசனம் நாம் எதை விரும்புகிறோம் என்பதை அடுத்ததாகும். சாந்த குணம் என்றால் என்ன? இந்த எட்டுப்பாக்கிய வசனங்களில் இதுவே அதிகமாகத் தவறாகப் புரிந்துகொள்ளப்படும் ஒன்றாகும். தாம் சாந்தமாக இருப்பதாக இயேசுவானவர் அறிக்கையிட்டிருக்கிறார் (மத். 11:29). நீங்கள் வேத வசனம் கூறும் இயேசுவானவரை அறிந்து கொள்ளும்போது இந்தச் சாந்தம் என்பது அவர் பலவீனமான ஒருவராக இருந்தார் என்பதைக் குறிக்கவில்லை என்பதை அறிந்துகொள்கிறோம்.
“மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்த குணமுள்ளவனாயிருந்தாள்” என்று பழைய ஏற்பாட்டில் நாம் வாசிக் கிறோம் (எண்.12:3). பழைய ஏற்பாட்டை நீங்கள் வாசிக்கும்போது மோசே டலவீனமானவன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இயேசு வானவரும் மோசேயும் சாந்தகுணமுள்ளவர்களாக இருந்தபடியால் அவர்கள் பலவீனமானவர்கள் என்று அர்த்தமல்ல
பழக்கப்படுத்தப்படாத சக்திவாய்ந்த ஒரு குதிரையைப் பற்றி நாம் நினைக்கும்போது ”சாந்தகுணம்’ என்ற வேதாசும வார்த்தையின் அர்த்தத்தை நாம் புரிந்துகொள்ள முடியும். குதிரை வலுவான மிருகமாகும். அது தானாகவே தன்னிஷ்டம்போல் இயங்குவது அதைத் தன் வழிக்குக் கொண்டுவர குதிரைகளுக்குப் பயிற்சியளிப்பவர்கள் அதன் தலை வழியாக வாயில் கடிவாளத்தை மாட்டி, அதன் முதுகில் சேணத்தைக் கட்டுகிறார்கள் குதிரை கடைசியாக அந்தக் கடிவாளத் தினால் கட்டுப்படுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ளும்போது, அதன் சேணத்தின்மீது அமர்ந்திருப்பவரால் அதன்மீது சவாரி செய்ய முடியும். குதிரையின் சித்தம் (விருப்பம்) நொறுக்கப்பட்டு, கட்டுப்படுத்தப் படுகிறது. அந்தக் குதிரை இப்போதும் வலுவானதாகவே இருக்கிறது. ஆனால் சாந்தகுணமுள்ளதாகிவிட்டது.
தமஸ்குவுக்குச் செல்லும் சாலையில் தர்சு பட்டணத்துச் சவுல் இயேசுவானவரைச் சந்தித்தபோது அவர் அவனிடம் கேட்ட கேள்விக்கு இப்படியும் நாம் விளக்கம் கூறலாம்: “நீ என்னை ஏன் துன்டப் படுத்துகிறாய்? நீ ஏன் கடிவாளத்தை மீறி இழுத்துக்கொண்டிருக்கிறாய்? அது உனக்குக் கடினமாக இருக்கும்” (அப். 9:4, 5),
ஆனால் சவுல் ”ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக் கிறீர்?” என்று கேட்டபோது, அவன் அந்தக் கடிவாளத்தை ஏற்றுக் கொண்டாள். அதுவும் அவனுடைய வாழ்க்கையைக் குறித்த கிறிஸ்துவின் சித்தமாக இருந்தது. அப்போதுதான் தர்சுபட்டணத்துச் சவுல் சாந்தகுணமுள்ளவனானான். இதுவே சாந்தகுணம் என்பதின் அர்த்தமாகும்.
இயேசுவானவர் தமது அழைப்பைக் கொடுக்கும்போதே தாம் சாந்தகுணமுள்ளவர் என்பதை அறிக்கையிட்டார். பாரமான சுமை களைக் கொண்ட மக்கள் தம்மிடம் வந்து, தமது பாரத்தையும், தமது இருதயத்தையும், தமது நுகத்தையும் அறிந்துகொள்ளும்படி இயேசு வானவர் அழைப்புவிடுக்கிறார். அவருடைய பாரம் இலகுவானது என்பதை அவர்கள் அறிய வேண்டுமென்று அவர் விரும்புகிறார். (உண்மையில் அவர் உலகத்தைத் தமது தோள்களில் சுமந்துகொண்டிருந்தபடியால் இலகுவானது என்று கூறுவது நம்மை வியப்படைய வைக்கிறது). அவருடைய இருதயம் தாழ்மையாகவும் சாந்தமாகவும் இருக்கிறது என்று அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டு மென்று அவர் விரும்புகிறார். அவருடைய நுகமே அவருடைய பாரத்தை இலகுவாக்குகிறது. அவருடைய வாழ்க்கையை எளிதாக்குகிறது என்பதை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
நன்றாகச் செய்யப்பட்டு, பொருத்தப்பட்ட நுகம். மிருகத்துக்கு அதிகச் சிரமத்தைக் கொடுக்காது. அது அதன் பாரத்தை எளிதாக்கும். இயேசுவானவரைப் போன்ற தச்சர்கள் பொருத்தமான நுகத்தைச் செய்து பழக்கப்பட்டிருக்கிறார்கள். அது மிருசுத்தை உறுத்தாதபடி உட்புறத்தில் வழவழப்பாகச் செதுக்கப்பட்டிருக்கும். தாம் ஒவ்வொருநாளும் சுமக்கும் நுசும், நுசுமில்லாததினால் போராடிக்கொண்டிருக்கிறவர்களின் பாரத்தை எளிமையாக்கும் வாழ்க்கையை இலகுவாக்கும் என்பதை இயேசு வானவர் அறிந்திருந்தபடியால் அவர் சாந்தகுணத்தைப் பற்றிய இந்தப் பாக்கிய வசனத்தைப் போதிக்கிறார்.
”உங்களுடைய வாழ்க்கையைச் சரியான வழியில் வாழ முடியும். நான் வாழுகிறபடி நீங்கள் வாழ்வீர்களானால், உங்கள் வாழ்க்கை பாரமோ அல்லது சோர்வோ இல்லாததாக இருக்கும். உங்கள் பிரச்சினை களினால் நீங்கள் முற்றிலுமாகச் சோர்ந்துபோக வேண்டிய அவசிய மில்லை’ என்பதே இயேசுவானவரின் மூன்றாவது பாக்கிய வசனத்தின் பொழிப்புரையாகும். “நான் வாழ்க்கையை எடுத்துக்கொள்ளுகிற விதமாக நீங்களும் எடுத்துக்கொள்ளுங்கள் நீங்கள் என்னுடைய சாந்தகுணத்தின் நுகத்தை ஏற்றுக்கொள்வீர்களானால், அது உங்கள் பாரத்தை இலகுவாக்குவதை நீங்கள் காண்பீர்கள் நீங்கள் எதிர்நோக்கும் அறைகூவல்கள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும், அது உங்கள் வாழ்க்கையை எளிதாக்கும்” என்றே அவர் போதிக்கிறார்.
‘வாழ்க்கையின் பாரத்தை எவ்வாறு இழுப்பது என்பதை அறிந்திராதபடியால் கீழே மலையடிவாரத்திலிருக்கும் மக்கள் பாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் எந்த நுகமும் இல்லாத படியால் அவர்களால் பாரத்தை இழுக்க முடியவில்லை. ஆனால் நீங்கள் என் மதிப்பீடுகளை அறிக்கையிட்டு எனது மனோபாவங்களோடு உங்கள் வாழ்க்கையை வாழ்வீர்களானால், நீங்கள் என்னைப் பின்பற்றும்போது நான் உங்களுக்குக் காட்டும் ஆவிக்குரிய ஒழுக்கத்தில் பயிற்சிபெறுவீர்களானால் எனது பாரத்தைப்பற்றியும், எனது இருதயம் மற்றும் நுகத்தைப் பற்றியும் கற்றுக்கொள்வீர்கள். அது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதலைக் கொடுக்கும்” என்பதே இயேசு வானவருடைய போதனையின் சாராம்சமாகும்.
சாந்தகுணம் நமது சித்தத்தின் (விருப்பத்தின்) ஒழுக்கமாகும். “சீஷன்” (disciple) மற்றும் ‘ஒழுக்கம்” (discipline) என்ற சொற்களின் ஆங்கிலப் பதங்கள் ஒரே வேர்ச்சொல்லிலிருந்தே வருகின்றன. சாந்தகுணமுள்ள சீஷன் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வாள் என்பதை இயேசுவானவர் இங்கே வலியுறுத்தும் வாக்குத்தத்தமாகும். இதற்கு இரண்டு அர்த்தங்களைக் கூறவாம்: 1) இயேசுவானவரின் சீஷன் ஒழுக்கமுள்ளவனாக இருப்பான் என்பதை நாம் எதிர்பார்க்க வேண்டும். 2) ஒழுக்கத்தோடிருக்கும் இயேசுவானவரின் சீஷன் இயேசுவானவர் மற்றும் அவருடைய பிதாவானவரின் நுகத்தை தன் வாழ்நாளின் ஒவ்வொரு நாளிலும் கொண்டிருப்பானானால், அவன் அனைத்தையும் ஆதாயமாக்கிக் கொள்வான்.
நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள்
“நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்” என்பது நான்காவது பாக்கியவசனமாகும் (மத். 5:6) நாம் சாந்தகுணமுள்ளவர்களாக இருக்கும்போது, இயேசுவான வரை நமது ஆண்டவராக ஏற்றுக்கொண்டு, நமது வாழ்க்கையை அவருடைய கட்டுப்பாட்டுக்குள் கீழ்ப்படுத்தும்போது, நீதிக்காக நாம் பசிதாகமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று இயேசுவானவர் போதிக்கிறார்.
பாக்கியவசனங்கள் இரட்டை இரட்டையாக வருகின்றன என்ற ஒழுங்கை இப்போது நம்மால் உணர முடிகிறது. நாம் ஆவியில் எளிமை யுள்ளவர்களாக இருக்கக் கற்றுக்கொள்ளும்போது, துயரப்படுகிறோம். நாம் சாந்தகுணமுள்ளவர்களாகும்போது, நீதிக்காகப் பசிதாகம் கொள்கிறோம். நீதி என்பது சரியானதைச் செய்வதாகும். நீதிக்காகப் பசிதாகம் கொள்வது என்பது, சரியானதைச் செய்யப் பசிதாகம் கொள் வதாகும். குறிப்பாக சரியானது எது என்று அறிய விரும்புவதாகும்.
சவுல் தமஸ்குவுக்குச் செல்லும் சாலையில் சாந்தகுணத்தைப் பெற்றவுடன் தனக்கு எது சரியானது என்பதை அறிய விரும்பினான். அவன் இயேசுவானவரை “ஆண்டவரே” என்று அழைத்துத் தான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டபோது, அவன் சாந்தகுணத்தை மட்டும் வெளிப்படுத்தவில்லை. நீதிக்காகப் பசிதாகம் கொள்ளுவது என்றால் என்ன என்பதையும் எடுத்துக்காட்டினான்.
சுவிசேஷங்களை வாசிக்கும்போது, சமயத்தலைவர்கள் தேவனுடைய ஆலயத்தைக் கள்ளர் குகையாக்கியபோது அது சரியான காரியத்துக்கு முரண்பாடாக இருந்தபடியால். இயேசுவானவர் நியாயமான கோபம் கொள்ளுவதை நாம் பார்க்கிறோம். தமது பிதா வானரின் சித்தத்தைச் செய்ய இயேசுவானவர் எவ்வளவாக வாஞ்சை கொண்டிருக்கிறார் என்பதைப் பாருங்கள். சரியானதைச் செய்வதற்கான வாஞ்சை, எது தவறென்று தெளிவாகத் தெரிகிறதோ அதைச் சரியாக்கு வற்கான வாஞ்சையுமாகும் என்பதையும் நாம் பார்க்கிறோம்.
இங்கே மலைப்பிரசங்கத்தில் இயேசுவானவர் நீதிக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பாருங்கள். ‘கடைசிப் பாக்கியவசனம் “நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோக ராஜ்யம் அவர்களுடையது” என்று கூறுகிறது (மத். 5:10) எட்டுப் பாக்கியவசனங்களில் இரண்டு நீதியைப் பற்றியதாகும். பின்னர் அவர் இதே அதிகாரத்தில் வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று அவர் போதிக்கிறார் (மத். 5:20). மேலும் ஆறாம் அதிகாரத்தின் இரண்டாவது பகுதியில் அவர் மதிப்பீடுகளைப் பற்றிப் போதிக்கிறார். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள் என்று அவர் கூறும்போது. நமது மதிப்பீடுகளில் எவை முன்னுரிமை பெறுகின்றன என்பதை அவர் வெளிப்படுத்துகிறார் (மத். 6:33).
இந்தப் பாக்கியவசனத்திலுள்ள வாக்குத்தத்தம் நீதியின்மேல் பசிதாகம் கொள்ளும் சீஷர்கள் அதே நீதியினால் நிரப்பப்படுவார்கள் என்பதாகும். அவர்கள் திணறிப்போகும் வரையில் நீதியினால் நிரப்பப் படுவார்கள் என்பதையே மூலக் கிரேக்கச் சொற்கள் உணர்த்துகின்றன. அதாவது, அவர் நீதியாயிருக்கிற பரிசுத்த ஆவியானவரால் முழுமை யாக நிரப்பப்படுவார்கள். தாங்கள்என்ன செய்ய வேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்பதை அறிய அவர்கள் பசிதாகம் கொள்ளுவார்கள்.
“சந்தோஷத்துக்காகப் பசிதாகம் கொள்ளுகிறவர்கள் பாக்கிய வான்கள். அவர்கள் சந்தோஷமாக்கப்படுவார்கள்” என்று இந்தப் பாக்கியவசனம் கூறவில்லை என்பதைக் கவனியுங்கள். “திருப்திக்காகப் பசிதாகம் கொள்ளுபவர்கள்” என்றும் குறிப்பிடப்படவில்லை. வளத்துக்காகப் பசிதாகம்கொள்ளுபவர்கள் பாக்கியவான்கள், அவர் அதிக செல்வத்தைப் பெறுவார்கள்” என்றும் இங்கே கூறப்படவில்லை. “நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்” என்றே இந்தப் பாக்கியவசனம் கூறுகிறது. அவர்கள் நீதியினாலும், சரியானதைச் செய்யும் வாஞ்சையினாலும் நிரப்பப்படுவார்கள் என்பதே அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள வாக்குத்தத்தமாகும்.
அடிமைத்தனத்தை ஒழித்தவர்கள் போன்று அநீதிக்கு எதிராகப் போராடிய பெரிய வீரர்கள் இயேசுவானவரைப் பயபக்தியுடன் பின்பற்றிய சீஷர்களாக இருந்தார்கள். எது சரியானது என்பதற்காக அவர்கள் பசிதாகம் கொண்டிருந்த அதே வேளையில் எது சரியில்லையோ அதைத் தாக்குவதற்கான வாஞ்சையையும் கொண்டி ருந்தார்கள். மார்ட்டின் லுத்தர் கிங், நெல்சன் மண்டேலா போன்ற நோபல் பரிசு பெற்றவர்கள் இனப்பாகுபாடு என்ற அநீதிக்கு எதிராகச் சமாதான மான முறையில் குரல்கொடுத்து, தாங்கள் நீதிக்காகப் பசிதாகம் கொண்டிருப்பதைக் காட்டினார்கள். நாம் வேதாகமத்தை ஆராய்ந்து பார்ப்போமானால், நீதியினால் நிரப்பப்படும் சீஷர்கள் அநீதியை எதிர்க் வேண்டும் என்பதை இயேசுவானவர் வலியுறுத்துவதைக் காணலாம்.
இயேசுவானவர் தமது சீஷர்களின் தனிப்பட்ட நேர்மையையும் நீதியையும் வலியுறுத்தும்போது, மலையடிவாரத்திலிருந்த மக்கள் துன்பத்திலிருப்பதற்குக் காரணம் அவர்கள் எல்லோரும் செய்வதைத் தாங்களும் செய்வதுதான் என்பதையும் உணர்த்துகிறார். அவர்கள் சரியானதைச் செய்வதற்குப் பதிலாகச் சூழ்நிலைக்கு உகந்ததைச் செய்து கொண்டிருந்தார்கள்.
இந்த உலகத்தின் இழந்துபோன மக்களுக்குப் பிரதிநிதிகளாக உ இருக்கும் மலையடிவாரத்திலுள்ள துன்பப்படும் மக்களிடம் அவர்கள் திரும்பும்போது, அவர்கள் நீதிக்கு வடிகால்களாக இருக்க வேண்டும். என்பதே தமது சீஷர்களைக் குறித்த இயேசுவானவரின் செயல்திட்ட மாகவும் தேவனுடைய திட்டமாகவும் இருந்தது. தமது சீஷர்கள் இந்த உலகத்தில் தேவனுடைய மகிமைக்காக நடப்பட்டிருக்கும் நீதியின் விருட்சங்களாக இருக்க வேண்டும் என்பதை அவருடைய திட்டமாகும்.