“முதல் கிறிஸ்தவ தியான முகாம்” (மத்தேயு 4:23-5:1)
கிறிஸ்துவைப் பின்பற்றாத பலரும்கூட மலைப் பிரசங்கத்தில் இயேசுவானவரின் போதனைகளுக்கு ஒப்புதல் அளிப்பார்கள். காலம்காலமாக. அறிஞர்களும், அரசியல்வாதிகளும், கவிஞர்களும் இதைப் பிரசங்கித்தது யார் என்று அறியாமலே இதன் வார்த்தைகளை மேற்கோளாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இயேசுவானவரின் பிரசங்கங்களிலேயே இதைவிட அதிகமாக எடுத்துக் கூறப்பட்டது எதுவும் கிடையாது. சரியாகப் புரிந்துகொள்ளப்பட்டதும் கிடையாது.
மலைப் பிரசங்கத்தின் பின்னணி
இந்தப் பெரிய பிரசங்கத்தை நாம் ஆராய்வதற்கு முன்பாக அதன் பின்னணியை அறிந்துகொள்ளுவது முக்கியமாகும். மத்தேயு அதன் பின்னணியை இவ்வாறு விவரிக்கிறார்: “பின்பு, இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார். அவருடைய கீர்த்தி சீரியா எங்கும் பிரசித்தமாயிற்று. அப்பொழுது பலவித வியாதிகளையும் வேதனைகளையும் அடைந்திருந்த சகல பிணியாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும் சந்திரரோகிகளையும், திமிர்வாதக்காரரையும் அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவர்களைச் சொஸ்தமாக்கினார். கலிலேயாவிலும், தெக்கப்போலியிலும் எருசலேமிலும், யூதேயாவிலும் யோர்தானுக்கு அப்புறத்திலும் இருந்து திரளான ஜனங்கள் வந்து, அவருக்குப் பின்சென்றார்கள்.
‘அவர் திரளான ஜனங்களைக் கண்டு மலையின்மேல் ஏறினார்; அவர் உட்கார்ந்தபொழுது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்தார்கள். அப்பொழுது அவர் தமது வாயைத் திறந்து அவர்களுக்கு உபதேசித்துச் சொன்னது என்னவென்றால்…” (மத் 4:23-5:2)
இதைத் தொடர்ந்து இந்தப் பின்னணியில் இயேசுவானவரின் பெரிய பிரசங்கம் ஐந்தாம், ஆறாம் மற்றும் ஏழாம் அதிகாரங்களில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பெரிய போதனை கொடுக்கப்பட்ட பின்னணி உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? நான் இதை ‘முதல் கிறிஸ்தவ தியான முகாம்” என்று அழைக்கிறேன். இன்றைய பிரசங்கங்களைப் போல இது ஒரு பிரசங்கம் அல்ல. ஆனால் ஒரு மலையுச்சியில் நடத்தப் பட்ட தியான முகாமில் இயேசுவானரால் கொடுக்கப்பட்ட போதனையாக இருக்கிறது.
இயேசுவானவர் தமது மூன்றாண்டுகாலப் பொது ஊழியத்தை முடித்தபோது, தாம் கைதுசெய்யப்பட்டு சிலுவையில் அறையப் படுவதற்கு முன்பாகத் தமது இறுதி மணி நேரங்களை ஒரு மேல் அறையில் தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டு, பயிற்சியளிக்கப்பட்ட அப்போஸ்தலர் களுடன் தனியாகக் கழித்தார். அந்தப் பின்னணியில் இந்தப் பிரசங்கத்தைச் செய்தார். இதை இயேசுவானவர் தமது சீஷர்களோடு கழித்த ‘இறுதிக் கிறிஸ்தவதியான முகாம்” என்று நான் குறிப்பிடுகிறேன் (யோவான் 13-14),
இந்த முதல் கிறிஸ்தவ தியான முகாமின் பின்னணியைப் பற்றி மத்தேயு கூறியவைகளை நாம் பார்த்தோம். கலிலேயாக் கடலைச் சுற்றியிருந்த மலைச்சரிவுகளில் இயேசுவானவர் எல்லாவகைப்பட்ட வியாதிகளினால் பாதிக்கப்பட்டவர்களையும் சுகமாக்கினார். ‘அப்பொழுது பலவித வியாதிகளையும் வேதனைகளையும் அடைந்திருந்த சகல பிணியாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும் சந்திரரோகிகளையும், திமிர்வாதக்காரரையும் அவரிடத்தில் கொண்டு வந்தார்கள்; அவர்களைச் சொஸ்தமாக்கினார்” என்று மத்தேயு குறிப்பிடு கிறார் (மத்.4:24).
கலிலேயாக் கடற்கரையில் கூடியிருந்தவர்கள் “கவிலேயாவிலும், தெக்கப்போலியிலும், எருசலேமிலும், யூதேயாவிலும், யோர்தானுக்கு அப்புறத்திலும் இருந்து வந்திருந்தார்கள் என்று நாம் வாசிக்கிறோம் (வச.25) யோர்தானுக்கு அப்புறத்திலிருந்து இயேசுவானவர் சுகமளித்த கலிலேயாக் கடற்கரைக்கு வரவேண்டுமானால் நான்கு நாட்கள் கால்நடையாகப் பயணம்செய்திருக்க வேண்டும்.
இன்று நமது கலாச்சாரங்களில் நோயினால் மரித்துக் கொண்டிருப்பவர்கள், மனோவியாதி கொண்டவர்கள், முதியவர்கள், போரில் ஊனமுற்று வயோதிபம் அடைந்தவர்கள் போன்றவர்களை நமது பார்வைக்கு அப்பால் ஏதோ இல்லங்களில் சேர்த்துவிட்டு, அநேகமாக அவர்களை மறந்துவிடுகிறோம். ஆனால் இயேசுவானவர் தமது தியான முகாமைத் திட்டமிட்டபோது இந்தப் பிரச்சினைகளைக் கொண்ட அனைவரும் அங்கே கூடிவந்தார்கள்.
ஒரு சிறப்பான நிர்வாகியாக ஆவதற்கு நீங்கள் பட்டப்படிப்புப் படித்தாலும் அல்லது கருத்தரங்குகளுக்குச் சென்றாலும், ஒரு நல்ல நிர்வாகியாகும்படி நீங்கள் ஆராய்ந்து பார்க்கவும். ஏற்பாடு செய்யவும். பணிகளைப் பகிர்ந்து கொடுக்கவும். மேற்பார்வை பார்க்கவும், பிறகு வேதனைப்படவும் கற்றுக்கொள்ள வேண்டும்!
இந்த அனைத்து மக்களையும் குணமாக்குவதை இயேசுவானவர் தெரிந்துகொள்ளவில்லை. கலிலேயாக் கடலிலிருந்து படிப்படியாக உயர்ந்துசென்ற மலை உச்சியின் மேலான மட்டத்தில் தம்மோடுகூட வரும்படி அவர் தமது சீஷர்களில் சிலரை அழைத்தார் (மாற்கு 3:13). இது அந்தத் திரள் கூட்டத்தினரை இரண்டாகப் பிரித்தது மலையின் அடிவாரத்தில் பிரச்சினையுடைவர்கள் இருந்தார்கள். பிரச்சினை சுளுக்குத் தீர்வின் பங்காக இருக்க விரும்பியவர்கள் மலையுச்சியில் மேலான மட்டத்தில் இயேசுவானவரோடுகூட இருந்தார்கள்.
இயேசுவானவர் மானிட சரீரத்தின் பிரச்சினைகளை அறிந்திருந்த படியாலும், தாம் சிறிதுகாலமே இந்தப் பூமியில் இருப்போம் என்பதை உணர்ந்திருந்தபடியாலும், அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தாமாசுவே தீர்வைக் கண்டுவிட முடியாது என்பதை அவர் அறிந்திருந்தார். எனவே அவர் ஆராய்ந்துபார்த்தார்.” அவருடைய மாபெரும் திட்டத்தின் பங்காகத் துவக்கத்திலிருந்தே அவர் பலவீனமான மானிடரைப் பயன்படுத்தினார். பிறகு அவர் இந்த முதல் கிறிஸ்தவ தியான முகாமை ஏற்பாடு செய்தார். இயேசுவானவர் தமக்குச் சித்தமானவர்களைத் தம்மிடத்தில் வரவழைத்தார் என்று மாற்கு கூறுகிறார். “தம்மோடுகூட இருக்கவும்… தாம் அவர்களை அனுப்பவும்” அவர் அவர்களை அழைத்தார் (மாற்கு 3:13, 14).
இந்த முகாமுக்கு ஏற்பாடு செய்த விதத்தின்மூலம் “நீங்கள் பிரச்சினையின் பங்காக இருக்கிறீர்களா அல்வது தீர்வின் பங்காக இருக்கிறீர்களா?’ என்று இயேசுவானவர் நமக்கு அறைகூவல் விடுக்கிறார். மலையின் அடிவாரத்தில் கூடியிருந்தவர்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளின் தீர்வுகளுக்கான பங்காக இருப்பது எப்படி என்பதைத் தமது தியானமுகாமுக்கு வந்தவர்களுக்குக் காட்டுவதே இயேசு வானவரின் செயல்திட்டமாக இருந்தது.
யோவான் இந்தத் தியான முகாமின் பின்னணியைக் குறிப்பிடு கிறார். திரளான மக்கள் சுகம்பெறும்படி வந்தபோது, இயேசுவானவர் மலையின்மேல் ஏறி, தமது சீஷர்களோடு அங்கே உட்கார்ந்தார் என்று அவர் எழுதியிருக்கிறார் (யோவான் 6:1-3). இந்தப் பிரசங்கத்தில் இயேசுவானவர் முக்கியமான சத்தியங்களைச் சொல்லுகிறார்.