“போகும் மனோபாவங்கள்” (மத்தேயு 5:7-12)
“இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள். இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள். சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.. நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோக ராஜ்யம் அவர்களுடையது.
என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள் பேரில் பொய்யாச் சொல்வார் உ களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள். சந்தோஷப்பட்டு. களிகூருங்கள்: பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும். உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே” (மத் 5:7-12).
மலையில் ஏறுதல்
பாக்கியவசனங்கள் மலையில் ஏறுவதைப் போன்றதாகும் என்று எனக்குப் பிடித்த ஒரு வல்லுநர் கூறியிருக்கிறார்; ஆவியில் எளிமையாக இருப்பதும் துயரப்படுவதும் நம்மை மலையில் பாதி வழி ஏறச் செய்கிறது. சாந்தகுணம் மூன்றில் இரண்டு பகுதிக்கு ஏறச் செய்கிறது. நீதிக்காகப் பசிதாகப்பட்டு, அதால் நிரப்பப்படுவது நம்மை மலையுச்சிக்குக் கொண்டுசெல்லுகிறது. அதாவது நாம் வரும் மனோபாவங்களைக் கற்றுக்கொள்ளும்போது மலையுச்சியைச் சென்றடைகிறோம்.
மலையுச்சிக்கு இட்டுச்செல்லும் மனோபாவங்களைச் சீஷர்கள் கற்றுக்கொள்ளும்போது, அவர்கள் மலையின் மறுபக்கமாக இறங்கி, இயேசுவானவர் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க விரும்பும், போகும் மனோபாவங்களைக் கற்றுக்கொள்ளுவதற்கு முன்பாக அவர்கள் எப்படிப்பட்ட நபர்களாக இருப்பார்கள்? அவர்கள் நீதியினால் நிரப்பப் பட்டிருப்பதால் பரிசேயர்களைப் போல இருப்பார்களா? அவர்கள் மக்களைக் கீழ்நோக்கிப் பார்த்து, தாங்கள் அறிந்த வசனங்களைக் கொண்டு அவர்களைக் குற்றம்சாட்டுவார்களா? போகும் மனோபாவங் கள் இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கின்றன,
இரக்கமுள்ளவர்கள்
“இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்’ என்பது ஐந்தாவது பாக்கியவசனமாகும் (வச. 7). ”இரக்கம்” என்றால் ”நிபந்தனையில்லாத அன்பு” என்று அர்த்தமாகும். தேவனுடைய கிருபை தன் வாழ்நாளெல்லாம் தன்னைத் தொடரும் என்று தாவீது எழுதியபோது. “தொடரும்” என்பது உண்மையில் ”தேடிவரும்” என்றே அர்த்தப்படுகிறது. தேவனுடைய நிபந்தனையில் லாத அன்பு தன் வாழ்நாள் முழுவதும் தன்னைத் தேடிவரும் என்றே தாவீது குறிப்பிடுகிறார் (சங். 23:6).
பாபிலோனியர் யூதர்களோடு பயங்கரமாகப் போர்புரிந்து, அவர்களை வென்றபோது, எரேமியா தனது புலம்பல் நூலை எழுதினார். அப்போது அவர் ஒரு வெளிப்பாட்டைப் பெற்றார். தாம் ஒருநாளும் தமது மக்களிடம் அன்புகாட்டுவதை நிறுத்தப்போவதில்லை என்று தேவன் அவருக்கு வெளிப்படுத்தினார். அதனால் எரேமியா அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்” என்று எழுதினார் (புல. 3:22-23).
மல்கியாவின் தீர்க்கதரிசன நூலின் துவக்கத்திலேயே தேவன் “நான் உங்களைச் சிநேகித்தேன்” என்று அறிக்கையிடுகிறார். தேவனுடைய நிபந்தனையில்லாத அன்பைப் பற்றியே ஓசியா தனது தீர்க்கதரிசன நூலில் கூறுகிறார். தேவள் எப்போதுமே அன்புகாட்டுகிறார். அவர் நிபந்தனையில்லாத அன்பாகவே இருக்கிறார் (1 யோவான் 4:16). நமது பாவங்களுக்குத் தகுதியானதை நமக்குத் தராமல் தேவனுடைய இரக்கம் அவரைத் தடுக்கிறது. தேவனுடைய கிருபை நமக்குத் தகுதியில் லாத ஆசீர்வாதங்களை நம்மேல் பொழிகிறது. இந்தப் பாக்கியவசனத் துக்கு ”தேவனுடைய நிபந்தனையில்லாத அன்பினால் முழுவதுமாக நிரப்பப்பட்டவர்கள் பாக்கியவான்கள்” என்று பொழிப்புரை கூறலாம்.
நமக்கு ஒவ்வொரு நாளும் இரக்கம் தேவைப்படுகிறது என்று தேவன் அறிந்திருக்கிறபடியால், வேதாகமத்தில் இந்த வார்த்தை 366 தடவைகள் வருகிறது. லீப் வருடத்துக்காகக் கூட ஒரு எண் கூடச் சேர்க்கப்பட்டிருக்கிறது! தேவனுடய இரக்கத்தைப் பற்றிய இந்த மேற் கோள்களில் 280 மேற்கோள்களை நாம் புதிய ஏற்பாட்டில் காணலாம். தேவன் எப்போதுமே நிபந்தனையில்லாத அன்பின் தேவனாகவே இருக்கிறார்.
இரக்கமுள்ளவர்கள் இரக்கம் பெறுவார்கள் என்று இயேசுவானவர் வாக்குத்தத்தம் அருளுகிறார். அவர்கள் தேவனிடமிருந்தும், யாரிடம் இரக்கம் காட்டுகிறார்களோ அவர்களிடமிருந்தும் இரக்கம் பெறுவது மட்டுமின்றி, நிபந்தனையில்லாமல் அன்புகூரப்பட வேண்டியவர் களுக்கு அவர்கள் தேவனுடைய நிபந்தனையில்லாத அன்பின் வடிகால் களாகவும் இருப்பார்கள்.
நாம் மலையுச்சியிலிருந்து இறங்கி, வேதனைப்படுகிறவர்களுக்கு இயேசுவானவருடைய தீர்வின் பங்காக இருக்க வேண்டுமானால், நாம் தேவனுடைய நிபந்தனையில்லாத அன்பினால் நிரப்பப்பட வேண்டும். இயேசுவானவருடைய தீர்வாகவும் பதிலாகவும் இருக்கும் சீஷர்கள் சுயநீதியுள்ள பரிசேயர்களைப் போல இல்லை, அவர்கள் தேவன் மற்றும் கிறிஸ்துவின் நிடந்தனையில்லாத அன்பை மற்றவர்களுக்குக் கொண்டு செல்லுகிறவர்களாக இருக்கிறார்கள் இயேகவானவரைப் பொருத்த வரையில் நீதியினால் நிரப்பப்படுவது தேவனுடைய அன்பினால் நிரப்பப்படுவதாகும்.
இருதயத்தில் பரிசுத்தமுள்ளவர்கள்
நாம் அன்புகாட்டும்போது, பெரும்பாலும் சுயநலமான நோக்கத் துடனேயே அன்புகாட்டுகிறோம். எனவேதான் அடுத்த பாக்கியவசனம் ‘இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்” என்று கூறுகிறது (வச 8) கிறிஸ்துவைப் பின்பற்றும் ஒருவர் அன்புகாட்டும்போது, அவர் தனது தனிப்பட்ட தேவையை நிறைவுசெய்வதற்காகச் சுயநலத்தோடு அள்பு காட்டுவதில்லை. அவர்கள் ஜீவனுள்ள கிறிஸ்துவின் அன்பினால் நிரப்பப்பட்டிருக்கிறபடியால், அன்புகாட்டுகிறார்கள். அவர்களுடைய நோக்கங்கள் சுத்தமாக இருக்கின்றன.
இந்த வசனத்தில் ”சுத்தம்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்கச் சொல்லிலிருந்து “உடலின் அசுத்தத்தை வெளியேற்று குழல்” என்ற வார்த்தையும் வருகிறது. யாக்கோபு இதே சொல்லைப் பயன் படுத்தும்போது அது ”சுத்திகரிப்பது” என்று மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது (யாக். 4:8). தேவனுடைய நிபந்தனையில்லாத அன்பினால் சீஷன் மற்றவரை நேசிக்கும்போது, அவனுடைய இருதயத்திலிருந்து நலமான நோக்கங்கள் அனைத்தும் சுய. வெளியேற்றப்படுகின்றன என்பது இதற்கு அர்த்தமாகும். நமது இருதயத்தில் கிறிஸ்துவின் அன்னபத் தவிர வேறு எதுவும் இருக்குமானால் அதை அகற்றிச் சுத்திகரிக்கும்படி நாம் நாள்தோறும் பரிசுத்த ஆவியானவரிடம் வேண்டிக்கொள்ள வேண்டும்.
நாம் மக்களுக்கு நன்மைசெய்யும்போது அவர்கள் உடனடியாக நமது உள்நோக்கங்களைப் பற்றிக் கேள்வியெழுப்புகிறார்கள். ஆனால் இயேசுவானவரின் இரக்கமுள்ள சீஷன் மற்றவர்களிடம் ‘கிறிஸ்துவின் அன்பினால் உங்களை நேசிப்பதைத் தவிர வேறு எந்த சிலாக்கியத்தையும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை” என்று கூற முடியும்.
இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள் என்பதே இயேசுவானவரின் வாக்குத்தத்தமாகும். சுத்தமான நோக்கத்தோடு கிறிஸ்துவின் அன்பைக் காட்டுகிறவர்கள். தாங்கள் உலகத்தில் வேதனைப்படுகிறவர்களுக்குக் கிறிஸ்துவின் அன்பைக் கொண்டுசெல்லும்போது, அவர்கள் தேவனைத் தரிசிக்கிறார்கள். அன்பின் அப்போஸ்தலன் கூறுகிறபடி, தேவ அன்பு அவர்கள் மூலமாகப் பாய்ந்துசெல்லும்போது, அவர்கள் தேவனில் ஜீவிக்கிறார்கள். தேவன் அவர்களில் ஜீவிக்கிறார் (1 யோவான் 4:16).
சமாதானம்பண்ணுகிறவர்கள்
ஏழாவது பாக்கியவசனம் “சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்” என்று கூறுகிறது. இயேசுவானவருடைய தீர்வாகவும் பதிலாகவும் இருக்கும் சீஷன் ஒப்புரவாகுதலின் ஊழியக்காரனாகவும் இருக்கிறான். மலையடிவாரத்தில் காணப்பட்ட பயங்கரமான பிரச்சினைகளில் ஒன்று. அந்நியப்படுத்தப்படுதலாகும். மக்கள் தேவனிடமிருந்தும், மற்றவர் களிடமிருந்தும். தங்களிடமிருந்தும்கூடப் பிரிக்கப்பட்டிருந்தார்கள். இந்த மூன்று காரியங்களிலும் ஒப்புரவாகுதலை அனுபவிக்கும்படியாக சீஷர்கள் இந்த மனோபாவத்தைக் கற்றுக்கொண்டு, பிறகு திரளான மக்களிடம் திரும்பி ஒப்புரவாகுதலின் ஊழியக்காரர்களாக இருக்க வேண்டும் என்பதே இயேசுவானவரின் அறைகூவலாகும்.
கிறிஸ்துவின் மூலமாகத் தேவனோடு ஒப்புரவாகும் அற்புதத்தை அனுபவித்துள்ள ஒவ்வொரு விசுவாசிக்கும் தேவன் ஒப்பரவாகுதலின் உபதேசத்தையும் ஊழியத்தையும் கொடுத்திருக்கிறார் என்று பவுல் அப்போஸ்தலன் கூறுகிறார் (2 கொரி. 5:14-6:2). இந்தப் பகுதியின் அடிப்படையில் ஒரு இறையியலாளர் “தேவனோடு ஒப்புரவாக்கப் பட்டவர்கள் ஒப்புரவாக்கப்படாதவர்களின் வாழ்க்கையில் ஒப்புரவாகுதலைக் கொண்டுவர வேண்டும் என்பதே ஒப்புரவாக்கும் தேவனுடைய சித்தமாக இருக்கிறது’ என்று எழுதியிருக்கிறார். இயேசு வானவர் இந்த ஏழாம் பாக்கியவசனத்தைப் போதிக்கும்போது. இதுவே அவருடைய திட்டத்தின் சாராம்சமாகும்.
பனிப்போரின்போது, சைபீரியாவில் ஒரு பயங்கரமான கைதி முகாமில் இருந்த ஒரு அறுவைச்சிகிச்சை நிபுணர் விசுவாசியானார். இயேசு கிறிஸ்துவைத் தனது ஆண்டவராகவும் இரட்சகராகவும் ஏற்றுக் கொண்ட போரிஸ் கோர்ன்பெல்ட என்ற அந்த யூத மருத்துவர். அந்தப் பயங்கரமான இடத்தில் ஒப்புரவாக்கும் ஊழியத்தைச் (ministry of rec- onciliation) செய்ய வேண்டுமென்று தீர்மானித்தார். ஒரு கைதிக்கு அறுவைச் சிகிச்சை செய்தபின்னர் அவரைக் கிறிஸ்துவிடம் வழிநடத்தினார். ஆனால் இந்தச் செயலுக்காக அன்றிரவு அவர் படுக்கையிலேயே கொல்லப்பட்டார். அவரிடம் சிகிச்சை பெற்றவர் சுகமாகி இறுதியில் அந்த முகாமின் பயங்கரங்களை உலகுக்கு வெளிப்படுத்தினார். அவர்தான் அலெக்சாண்டர் ஷோல்நிட்சின்.
அந்த அறுவைச் சிகிச்சை நிபுணர் தன்னிடம் சிகிச்சை பெற்றவர் புகழ்பெற்றவராகி. பல நூல்களை எழுதுவார் என்பதை அறிந்திருக்க வில்லை. இயேசுவானவர் தமது ஏழாவது பாக்கியவசனத்தில் போதித்ததை அவர் செயல்படுத்தினார். இவ்வாறு ஒப்புரவாகச் செய்யும் ஊழியக்காரர்கள் தேவனுடைய புத்திரர் என்று அழைக்கப்படுவார்கள் என்று இயேசுவானவர் வாக்குத்தத்தம் அருளியிருக்கிறார். தேவனுக்கு ஒரே குமாரனே இருந்தார். அவர் அருட்பணி செய்தார். அவரால் அனுப்பப்பட்டவர்களைத் தேவன் நமது புத்திரர்களாக ஏற்றுக் கொள்வதில் வியப்பேதுமில்லை. இதன்மூலம் அவர்கள் தேவனுடைய குமாரர்களாகவும் குமாரத்திகளாகவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். துன்புறுத்தப்படுபவர்கள்
“நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோக ராஜ்யம் அவர்களுடையது. இந்தப் பாக்கியவசனங்கள் இரட்டை இரட்டையாகக் கொடுக்கப்பட்டுள்ளன என்று ஏற்கெனவே பார்த்தோம். ஏழாவது பாக்கியவசனமும் இந்த வசனமும் இரட்டை வசனங்களாக இருக்கின்றன.
அலெக்சாண்டர் ஷோல்நிட்சின் ஒப்புரவாக்கும் ஊழியக்காரனாக இருக்கும்படி போரிஸ் கோர்ன்பெல்ட் தனது உயிரைக் கொடுத்தார். சபை வரலாறு முழுவதிலும் ஒப்புரவாக்கும் ஊழியர்கள் இவ்வாறு துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள் எனவேதான் ஏழாவது பாக்கியவசனம் “ஒப்புரவாக்கும் ஊழியக்காரர்கள் பாக்கியவான்கள்'” என்றும் எட்டாவது வசனம் “நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கிய வான்கள்; பரலோக ராஜ்யம் அவர்களுடையது” என்றும் கூறுகிறது. தாங்கள் ஒப்புரவாக்கும் ஊழியக்காரர்களாக இருப்பதற்காகத் துன்புறுத்தப்பட்டவர்கள், அதற்காகத் தங்கள் உயிரையே கிரயமாகக் கொடுக்க நேரிட்டாலும், தேவன் தங்கள் இருதயங்களில் ஆளுகைசெய்கிறார் என்பதை மெய்யாகவே வெளிப்படுத்துகிறார்கள்.
வெறுமனே ‘துன்பப்படுகிறவர்கள்’ என்று குறிப்பிடப்படாமல் “நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள்” என்று கூறப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். அவர்கள் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ளுவதால், இயேசுகிறிஸ்துவோடு தங்களை இணைத்துக்கொள்வதால் துன்புறுத்தப் படுவார்கள் இப்போது இந்தக் கடைசி இரண்டு பாக்கியவசனங்களும் ஏன் சேர்ந்து இருக்கின்றன என்பதைத் தெளிவாகக் காண்கிறோம்.
ஒப்புரவாகுதலின் ஊழியத்தைச் செய்பவர்கள் சச்சரவு மற்றும் அந்நியப் படுத்தப்படுதலுக்கு நடுவே இருக்க வேண்டியிருப்பதால். அவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். அந்நியப்படுத்தப்பட்டவர்கள் ஒருவரோடொருவர் சண்டைபோட்டுக்கொண்டிருக்கும் இடத்துக்கு அவர்கள் போகிறார்கள் கடுமையான சண்டைகள் காணப்படும் மத்திய கிழக்குப் பகுதி போன்ற நாடுகளை எண்ணிப் பாருங்கள். ஒப்புரவாக்கும் ஊழியத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அத்தகைய அபாயகரமான இடங்களுக்குச் செல்லுகிறார்கள்.
இயேசுவானவர் இந்த எட்டுப் பாக்கியவசனங்களைப் போதித்து முடித்தவுடன், பதினோராம் வசனத்திலிருந்து அவைகளைச் செயல் படுத்திக் காண்பிக்கத் துவங்குகிறார். இந்தப் பாக்கியவசனங்கள் பொதுவானவை என்பதை ”சமாதானம்பண்ணுகிறவர்கள்’ “துன்பப் படுகிறவர்கள்” என்று பொதுவாகக் குறிப்பிடப்பட்டதிலிருந்து நாம் அறிகிறோம். ஆனால் பதினோராம் வசனத்திலிருந்து அவர் “நீங்கள்” ”உங்கள்’ என்று சொல்லி நேரடியாகப் பேசத் துவங்குகிறார். “என்னியித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள் பேரில் பொய்யாச் சொல்வார்களாளால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்”
அவர் தமது பேச்சைக் கேட்டுக்கொண்டிருப்பவர்களிடம் திரும்பி, இப்போது தனிப்பட்ட முறையில் அவர்களோடு பேசுகிறார். அவர்கள் எவ்வாறு துன்பப்படுத்தப்படுவார்கள் என்பதைப் பற்றி நேரடியாகப் பொருத்திக் கூறுகிறார். அவர் எட்டுப் பாக்கியவசனங்ளையும் இந்த வசனத்திலிருந்து பொருத்திக் காண்பிக்கத் துவங்குகிறார். அது அவருடைய போதனயின் முடிவுவரையில் தொடருகிறது.
இந்த அருமையான பாக்கியவசனங்களின்படி நடப்பவர்களை இன்றைய உலகத்தார் பாராட்டுவார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்த இறுதியான பாக்கியவசனமோ இந்த மனோபாவங்களை உடைய இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் துன்புறுத்தப்படுவார்கள் என்றே கூறுகிறது. ஏன்?
இந்த மனோபாவங்களைப் பெற்றிருக்கும் சீஷர்கள் மக்களுக்கு ஒரு முன்மாதிரியானவர்களாக அவர்களிடம் செல்லுகிறார்கள். இந்த மனோபாவங்களைக் கொண்ட ஒரு சீஷனைக் காணும்போது உலகத்தார் இரண்டில் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது: தாங்கள் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இந்த முன்மாதிரியை அவர்கள் ஏற்றுக்கொள்ளலாம், அவற்றை அவர்கள் வாஞ்சிக்கலாம். அல்லது, அந்தச் சீஷனை அவர்கள் தாக்கலாம். இரண்டாயிரம் ஆண்டுகளாகப் இந்தக் கேடான உலகம் இரண்டாவது காரியத்தையே பெரும்பாலும் செய்துவருகிறது.
எட்டுப் பாக்கியவசனங்களின் சுருக்கம்
இந்த எட்டுப் பாக்கியவசனங்களே பிரசங்கமாகும்; மலைப்பிரசங்கத்தின் எஞ்சிய பகுதி இந்தப் பிரசங்கத்தைச் செயல்படுத் திக் காட்டுவதாகவே இருக்கிறது. மத்தேயு சுட்டிக்காட்டும் இந்தப் பிரசங்கத்தின் பின்னணி ஒரு கிறிஸ்தவனாக மாறுவதிலுள்ள போராட்டத்தை எடுத்துக்காட்டுகிறது. கிறிஸ்தவனாக மாறுவது என்பது கிறிஸ்து உங்களுக்காக என்ன செய்யப்போகிறார் என்பதைப் பொருத்ததல்ல. நீங்கள் இயேசுவுக்காக என்ன செய்யப் போகிறீர்கள்? நீங்கள் பிரச்சினையின் பங்காக இருக்கிறீர்களா அல்லது இயேசுவின் தீர்வின் பங்காக இருக்கிறீர்களா? நீங்கள் அவருடைய பதிலாக இருக்கிறீர்களா அல்லது வெறும் கேள்விக்குறியாக இருக்கிறீர்களா?” என்பதையே வலியுறுத்திக் கூறுகிறது.
ஒரு கிறிஸ்தவனாக இருப்பதில் வெளிப்படும் பண்பை இந்தப் பாக்கியவசனங்கள் வெளிப்படுத்துகின்றன. பாக்கிய வசனத்தைத் தொடர்ந்துவரும் உப்பு, வெளிச்சம், பட்டணம், விளக்கு ஆகிய உருவகங்கள் ஒரு கிறிஸ்தவ ஆளுமை பொதுவான கலாச்சாரத்தில் தாக்கம் விளைவிக்கும்போது அதிலுள்ள அறைகூவல்களை அறிமுகம் செய்கின்றன.
நான்காம் மற்றும் ஐந்தாம் பாக்கியவசனங்களுக்கு இடையில் ஒரு கற்பனையான ”ஆவிக்குரிய பூமத்தியரேகை (imaginary spiritual equator) இருப்பதுபோலத் தோன்றுகிறது. இந்த எட்டுப் பாக்கியவசனங்களும் நான்கு நான்கு மனோபாவங்களாகப் பிரிக்கப்படுகின்றன. முதல் நான்கு பாக்கிய வசனங்களும் கிறிஸ்துவிடம் வருவதோடு தொடர்புடையவை. அடுத்த நான்கு பாக்கியவசனங்களும் கிறிஸ்துவுக்காகப் போவதோடு தொடர்புடைய மனோபாவங்களை விவரிக்கின்றன. முதல் நான்கு பாக்கியவசனங்களும் மலையுச்சியில் உருவாக்கப்படுகின்றன. தேவனோடும் கிறிஸ்துவோடுமுள்ள நமது தனிப்பட்ட உறவில் அவை உருவாக்கப்படுகின்றன. ஆனால் மனிதரோடுள்ள நமது உறவில் அடுத்த நான்கு பாக்கியவசனங்களையும் நாம் சுற்றுக்கொண்டு வளர்த்துக் கொள்ள வேண்டும்.
பாக்கியவசனங்களை நான்கு இரட்டை வசனங்களாகவும் பிரிக்கலாம். துயரப்படும் ஆவியில் எளிமையுள்ளவர்கள்; நீதிக்காகப் பசிதாகம் கொண்டிருக்கும் சாந்தகுணமுள்ளவர்கள்; சுத்தமான இருதயத்தைக் கொண்ட இரக்கமுள்ளவர்கள். துன்புறுத்தப்படும் சமாதானம்பண்ணுகிறவர்கள். ஒவ்வொரு இரட்டைப் பாக்கியவசனத் திலும் ஒரு இரகசியம் இருக்கிறது. கிறிஸ்துவின் சீஷன் அவருடைய தீர்வாகவும் அவருடைய பதிலாகவும் மாறுவதற்கு முன்பாக அவன் இந்த இரகசியத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். முதல் இரண்டு பாக்கிய வசனங்களும் – ஆவியில் எளிமையாயிருத்தல் மற்றும் துயரப்படுதல் – ”என்னால் என்ன செய்ய முடியும் என்பது காரியமல்ல, கிறிஸ்துவால் என்ன செய்ய முடியும் என்பதே காரியமாகும் என்பதை வெளிப்படுத்துகின்றன.
இரண்டாவது இரட்டைப் பாக்கியவசனங்கள் – சாந்தகுணம் மற்றும் நீதிக்காகப் பசிதாகம் கொள்ளுதல் – இவை ஆவிக்குரிய இரகசியத்தை வெளிப்படுத்துகின்றன: “நான் எதை விரும்புகிறேன் என்பதல்ல, அவர் எதை விரும்புகிறார் என்பதே முக்கியமானதாகும்.!! மூன்றாவது இரட்டை வசனம் – இரக்கமுள்ளவர்கள் மற்றும் இருதயத்தில் சுத்தமுள்ள வர்கள் “நான் யார், என்ன செய்கிறேன் என்பது காரியமல்ல. இயேசுவானவர் யார் என்ன செய்கிறார் என்பதே முக்கியமாகும்” என்ற இரகசியத்தை வெளிப்படுத்துகின்றன.
நான்காவது இரட்டைவசனம் – துன்புறுத்தப்படும் சமாதானம் பண்ணுகிறவர்கள் – கிறிஸ்து நம்மைப் பயன்படுத்தும்போது, நாம் அறிக்கையிட வேண்டிய ஆவிக்குரிய சத்தியத்தை வெளிப்படுத்துகிறது: “அது நான் செய்த எந்தக் காரியமும் அல்ல, ஆனால் அவர் செய்ததே முக்கியமானதாகும். அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்தியருக்கு எழுதியபோது, அவர் அந்தப் பட்டணத்தில் ஊழியம்செய்தபோது. எதுவும் அவரிடமிருந்து வரவில்லை என்றும் எல்லாம் தேவனிடமிருந்தே வந்தது என்றும் எழுதியிருக்கிறார் (2 கொரி.3:5).
”பாக்கியம்” என்ற வார்த்தையின் அர்த்தத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும், சில மொழிபெயர்ப்புகளில் அது “மகிழ்ச்சி’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இது ஆவியின் கனியாக சந்தோஷத் துக்கு இணையானதாகும் (கலா. 5:22, 23), இது நமது வாழ்க்கையில் பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்திலிருந்து வருவதாகும். சூழ்நிலை கள் இதைப் பாதிப்பதில்லை.
இந்தப் ‘பாக்கியம்” என்ற சொல்லை” ‘ஆவிக்குரிய செல்வம்” என்றும் நாம் குறிப்பிடலாம். இது உலகப்பிரகாரமான செல்வத்தைக் குறிக்கவில்லை. உலகப்பிரகாரமான செல்வமே பாக்கியமாக இருக்கு மானால் எந்த அப்போஸ்தலரும் இந்தப் பாக்கியத்தைப் பெற்றிருக்க வில்லை. அவர்கள் இயேசுவானவரின் இந்தப் பாக்கியவசனங்களின்படி வாழ்ந்தபடியால், அவர்கள் பயங்கரமான மரணங்களைச் சந்தித்தபோது செல்வந்தராக இருக்கவில்லை.