உப்பு, வெளிச்சம், விளக்கு, பட்டணம் (மத்தேயு 5:13-16)

உப்பு, வெளிச்சம், விளக்கு, பட்டணம் (மத்தேயு 5:13-16)

‘வேலிக்கம்பத்தில் ஒரு ஆமை’ 

கிறிஸ்துவைப் போன்ற குணாதிசயத்தை விவரிப்பதற்கு இயேசு வானவர் நான்கு உருவகங்களைப் பயன்படுத்துகிறார். அவருடைய பாக்கியவசனங்களைப் பின்பற்றும் ஒருவர் உலகப்பிரகாரமான சுலாச்சாரத்தில் தாக்கம் விளைவிக்கும்போது என்ன நடக்கிறது என்பதை அவை காட்டுகின்றன. “நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும். மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது. நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக் கிறீர்கள். மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்க மாட்டாது. விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும். இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது!” என்று இயேசுவானவர் போதித்தார் (மத் 5:13- 16).

பூமிக்கு உப்பு

இந்த நான்கு உருவகங்களின் மூலம் இயேசுவானவர் தமது மேன்மையான பிரசங்கத்தின் செயல்படுத்தும் பகுதியைத் துவங்குகிறார். இப்படிப்பட்ட மனோபாவங்களைக் கொண்ட சீஷன் பூமிக்கு உப்பாயிருக்கிறான் என்பதே முதல் உருவகமாகும். மூல பாஷையில் நீங்கள் நீங்கள் மட்டுமே பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்” என்று கூறப்பட்டிருக்கிறது.

இயேசுவானவரின் நாட்களில் குளிர்சாதன வசதி எதுவும் கிடையாது. மீனையோ அல்லது மாம்சத்தையோ பாதுகாத்து வைக்க வேண்டுமானால் உப்பை அதன்மீது தடவி அதைப் பதப்படுத்தினார்கள். இதன் மூலம் உலகம் அழுகிக்கொண்டிருக்கும் மாம்சத்தைப் போலிருக் கிறது என்றும், தமது சீஷர்களே அது நன்னெறிப்பிரகாரமாகக் கெட்டுப் போகாமல் காக்கும் உப்பாக இருக்கிறார்கள் என்றும் இயேசுவானவர் போதிக்கிறார். உலகத்தை அந்தச் சீஷர்கள் அழிவிலிருந்து காக்க வேண்டுமானால் அவர்கள் உலக மக்களின்மீது ‘தடவப்பட வேண்டும். அப்போது கிறிஸ்தவ ஆளுமையின் “உப்பாகிய” தாக்கம் உலகம் நன்னெறிப்பிரகாரமாக அழிந்துபோகாமல் காக்கும்.

மற்றொரு வகையாகவும் நாம் இந்த உருவகத்துக்கு அர்த்தம் கூறலாம். “உப்புப் பணம்” (sait money) என்ற சொல்லிலிருந்தே ”சம்பளம்”‘ (salary)என்ற வார்த்தை உருவாகியது இவை ரோமப் பேரரசின் காலத்தில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளாகும். எந்த உயிரும் உப்பில்லாமல் வாழ முடியாது என்று ரோமர்கள் அறிந்திருந்தார்கள் எனவே அவர்கள் உலகத்தின் உப்பு உற்பத்தியைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். அவர்கள் அடிமைகளுக்கு உப்புப் பாளங்களையே சம்பளமாகக் கொடுத்தார்கள்.

”கீழே அடிவாரத்தில் இருக்கும் மக்கள் ஜீவனற்றவர்களாக இருக்கிறார்கள். இந்த எட்டுப் பாக்கியவசனங்களின்மூலமாக நான் போதித்ததை நீங்கள் புரிந்துகொண்டு, செயல்படுத்துவீர்களானால் நீங்கள் ஜீவனை அடைவீர்கள். மக்கள் உங்கள் வாழ்க்கையைக் கண்டு. விடாமல் அதைச் செயல்படுத்தி, அதில் சிறப்பானதைச் செய்வதற்கான ஆதாரத்தை உங்களிடமிருந்து பெற்றுக்கொள்வார்கள். எனவே இந்த மக்கள் ஜீவனைக் கண்டடைவதற்கான ஒரே வாய்ப்பாக நீங்கள் இருக்கிறீர்கள் என்பதே இயேசுவானவர் போதித்ததின் சாராம்சமாகும்.

இயேசுவானவரின் எல்லா உருவகங்களையும் நீங்கள் வாசித்துத் தியானிப்பீர்களானால், பல்வேறு செயல்படுத்துதல்களை நீங்கள் காண முடியும் உப்பு மக்களைத் தாகமடையச் செய்கிறது. உலக மக்கள் தாள் இயேசுவில் கண்டடைந்ததை அறியும்படி சீஷன் அவர்களைத் தாகம் கொள்ளச் செய்கிறான். காயங்களில் படும்போது உப்பு எரிச்சலுண் டாக்குகிறது. இதைப் போலவே ஒரு பாவிக்கு அருகே இயேசு வானவரின் சீஷன் வாழும்போது அவனுடைய வாழ்க்கை பாவியை எரிச்சலடையச் செய்கிறது. உப்புக்குச் சுத்திகரித்துக் குணமாக்கும் சக்தியும் உண்டு. பாக்கியவசனங்களின்படி வாழும் சீஷன் தன்னுடைய வாழ்க்கையில் சந்திக்கும் நபர்களைச் சுத்திகரிக்கும்படி அவர்கள்மீது ஆக்கபூர்வமான தாக்கத்தை விளைவிக்கிறான்.

”கலாச்சாரம்” என்றால் என்ன? கலாச்சாரம் என்பது ஒரு குறிப்பிட்ட இடத்திலோ, நாட்டிலோ நாம் காரியங்ளைச் செய்யும் வழியாகும். இயேசுவானவர் கலாச்சாரத்தைப் புரட்சிகரமாக மாற்றும்படி இந்த உலகத்துக்கு வந்தார். மக்களின் இருதயத்தை மாற்றி, சுலாச்சாரத்தில் புரட்சிகரமான மாற்றம் ஏற்படுத்தும்படியாக அவர்களைக் சுலாச்சாரத்துக்குள் அனுப்பவதே இயேசுவானவரின் செயல்முறை யாகும். இந்த மூன்று அதிகாரங்களும் உலகத்தைப் புரட்சிகரமாக மாற்றக்கூடிய அவருடைய போதனைகளைக் கொண்டிருக்கின்றன. இயேசுவானவர் “நீங்கள் நீங்கள் மட்டுமே பூமிக்கு உப்பாயிருக் கிறீர்கள்’ என்று இயேசுவானவர் கூறுவதை நாம் புரிந்துகொள்ளும் போது அவருடைய செயல்திட்டத்தையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

சிலவேளைகளில் விசுவாசிகள் அவிசுவாசிகளோடு எந்த உறவையும் வைத்துக்கொள்ளாமல், “கோட்டைகட்டிக்கொள்ளும் (ஒளிந்துகொள்ளும்) மளோபாவத்தைக் கொண்டிருக்கிறார்கள். நாம் *“உப்பு ஜாடிக்குள்” நம்மை மறைத்துக்கொள்வோமானால், இந்த உலக மக்களின்மீது உப்பின் தாக்கத்தை விளைவிக்க முடியாது. நாம் இந்த உலக மக்களோடு உறவு கொள்ளும்போது மட்டுமே. இந்த மனோபாவங்களைக் கற்றுக் கொள்ளும்படி தேவன் கிருபை செய்யும்போது. கிறிஸ்துவின் சீஷருக்குரிய மனோபாவத்தை அவர்களுக்குக் காட்ட முடியும்.

இயேசுவானவர் தமது அப்போஸ்தலர்களுக்காக ஜெபித்தபோது, அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டாமென்று கேட்டுக்கொண்டார் (யோவான் 17:15). நமது குடும்பங்களை ஆதரிக்க நாம் உலக மக்களின் மத்தியில் வேலைசெய்ய வேண்டியிருக்கிறது. அது உப்பைச் சுற்றிலும் பரப்புவதற்காக ஆண்டவர் கொடுத்த வாய்ப்பாகும். நாம் வேலைசெய்யும் இடங்களில் இழந்துபோன மக்களைச் சந்திக்கிறோம். கிறிஸ்துவைப் போன்ற மனோபாவங்களோடு நம்மால் அவர்களில் தாக்கம் விளைவிக்க முடியும். துன்புறுத்தலின் மூலமாகச் சபை வரலாறு முழுவதிலும் அவர் இதைச் சாதித்திருக்கிறார்.

தேவகிருபையினால் நீங்கள் பூமிக்கு உப்பாக இருக்கிறீர்களா? கிறிஸ்து உங்களுக்கு அற்புத விதமாகக் கொடுத்திருக்கும் இந்தத் தன்மைகள் நீங்கள் சந்திக்கும் மக்களில் புரட்சிகரமான மாற்றத்தை உண்டாக்குகின்றனவா? நீங்கள் இயேசுவானவரின் சீஷன் என்று அறிக்கையிட்டுவிட்டு. இந்த மனோபாவங்களை உங்கள் வாழ்க்கையில் கொண்டிராவிட்டால், உங்களுக்குக் கடுமையான எச்சரிப்புக் கொடுக்கப் பட்டிருக்கிறது.

உப்பு மற்றும் வெளிச்சத்தைக் குறித்த இந்த இரண்டு உருவகங் களும் இயேசுவானவரின் சீஷர்கள் மாறுதலடைந்திருக்கிறார்கள் என்பதையும் காட்டுகின்றன. மாம்சத்தின்மீது மாம்சத்தைத் தடவுவது அதைக் கெட்டுப்போவதிலிருந்து தடுக்க முடியாது. உப்பாக இருக்கும் சீஷன் அவன் தாக்கம் விளைவிக்கும் மக்களிலிருந்து வேறுபட்டவனாக இருக்க வேண்டும் இன்னொரு உருவசும்: உப்பாக இருக்கும் சீஷன் தான் இயேசுவைப் பிரதிபலிப்பதின் மூலம் மற்றவர்களை அவருக்காகத் தாக மடையச் செய்கிறான். அப்படிப்பட்ட தாக்கத்தை மக்களில் ஏற்படுத்த வேண்டுமானால் நாம் மாறுதலடைந்து வேறுபட்டவர்களாக இருக்க வேண்டும். ‘நீங்கள் விசேஷித்துச் செய்கிறதென்ன?” என்று இந்த அதிகாரத்தின் இறுதியில் இயேசுவானவர் கேள்வியெழுப்புகிறார் (வச. 47). பாக்கியவசனங்கள் இந்த மாற்றத்தை உண்டுபண்ணி அவருடைய கேள்விக்குப் பதிலளிக்கின்றன.

உலகத்துக்கு வெளிச்சம்

இரண்டாவது உருவகமும் அவருடைய சீஷர்களையும் உலகத்தையும் பற்றியதாகும் “நீங்கள் மட்டுமே உலகத்துக்கு வெளிச்ச மாயிருக்கிறீர்கள்’ என்பதே இதன் அர்த்தமாகும். இயேசு திரளான மக்களைக் கண்டபோது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போல இருக்கிறார்கள் என்று மனதுருகினார் (9:36). அவர்கள் தங்கள் வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசத்தை அறியாதவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு வெளிச்சமில்லை. சீஷர்கள் மட்டுமே ஜீவனைப் பாதுகாக்கும் உப்பாக இருப்பதுபோல, அவர்கள் மட்டுமே திரளானவர்களுக்கு வெளிச்சத்தைக் காட்டுபவர்களாகவும் இருக்கிறார்கள்.

இயேசுவானவரின் மூன்றாண்டுகால ஊழியத்தின் இறுதியில் அவர் பிரதான ஆசாரியனாகத் தமது ஜெபத்தை ஏறெடுத்தார். அந்த ஜெபத்தை நாம் யோவான் 17ஆம் அதிகாரத்தில் காணலாம். அந்த ஜெபத்தில் அவர் உலகம் என்ற வார்த்தையைப் பத்தொன்பது முறை கூறுகிறார். உலகம் அவருடைய இருதயத்தில் இருந்தது. என்றாலும் அவர் “நான் அவர் களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன். உலகத்துக்காக வேண்டிக் கொள்ளாமல்,நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளு கிறேன். அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்களே” என்று ஜெபித்தார் (யோவான் 17:9).

அவருடைய சீஷர்களிடமிருந்து மட்டுமே உலகத்துக்கு வெளிச்சம் வரும். உப்பானது உப்பு ஜாடியில் இருக்கும்போது உலகத்தைச் சாரமாக்க முடியாது என்பதுபோல, சீஷர்கள் இருளுக்குள் சென்று தேவ கிருபையினால் தாங்கள் பெற்ற வெளிச்சத்தை அங்கே பிரகாசிப்பிக்கச் செய்ய வேண்டும். நீங்கள் மட்டுமே உங்கள் குடும்பத்திலோ, வேலைசெய்யும் இடத்திலோ, அண்டைப் பகுதியிலோ, கிராமத்திலோ, பல்கலைக்கழகத்திலோ விசுவாசியாக இருப்பீர்களானால். இருளில் இருக்கும் ஒரு விளக்கே ஒரு பெரிய அலங்கார விளக்கிலுள்ள பல விளக்குகளைவிட அதிக மதிப்பைப் பெற்றிருக்கிறது என்பதை நினைவில் வைத்திருங்கள். நீங்கள் ஒரே விசுவாசியாக இருப்பீர் களானால் நீங்கள் அப்படியிருக்கும்படி ஒரு நோக்கத்தோடு வைக்கப்பட்டிருக்கிறீர்கள். உங்களை அறிந்தவர்களுக்கு நீங்கள் மட்டுமே உலகத்தின் வெளிச்சமாக இருக்கிறீர்கள்.

இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு. பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது” என்று இயேசு வானவர் கட்டளையிடும்போது, உங்கள் வாழ்க்கையில் அவர்கள் காணும் நற்கிரியைகளை நீங்களாகவே செய்திருக்க முடியாது, அவரே உங்களுக்கு வெளிச்சத்தைக் கொடுத்திருக்கிறார் என்பதை அவர்கள் கண்டுகொள்வார்கள் என்பதை அவர் அறிந்திருந்தார் (மத் 5:16).

விளக்குத் தண்டின்மேல் வைக்கப்பட்ட விளக்கு

இது அசாதாரணமான ஆழமான பொருள் கொண்ட உருவக மாகும். ஒரு வீட்டில் விளக்கைக் கொளுத்தும்போது, அதை மரக்காலால் மூடிவைக்க மாட்டார்கள். விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள் என்று இயேசுவானவர் சுட்டிக்காட்டினார். எனவே நாம் தமது சாட்சியை மூடிவைக்காமல் இருளில் தாக்கம் விளைவிக்கும் இடத்தில் அதை வைக்க வேண்டும்.

ஒரு மெழுகுவர்த்தியால் தன்னைத்தானே எரித்துக்கொள்ளாமல் வெளிச்சம் கொடுக்க முடியாது தனது வெளிச்சத்தை அணைத்தால் மட்டுமே அது தான் சுரைவதைத் தடுக்க முடியும். ”நீங்கள் என்னுடைய சீஷராக மாறுவதற்கு முன்பாகக் கொளுத்தப்படாத மெழுகுவர்த்திபோல இருந்தீர்கள். இப்போது கிறிஸ்தவனாக மாறுவதிலுள்ள போராட்டதைக் கடந்துவந்துவிட்டீர்கள். உங்கள் மெழுகுவர்த்தி கொளுத்தப்பட்டிருக் கிறது. உனது வாழ்க்கைக்கு நான் வெளிச்சமூட்டியிருக்கிறேன். ஒவ்வொரு முறை நாள் ஒரு விளக்கைக் கொளுத்தும்போதும் ஒரு நோக்கத்தோடு அதை ஒரு விளக்குத் தண்டின்மேல் வைக்கிறேன்” என்பதே இயேசுவானவருடைய போதனையின் சாராம்சமாகும்.

இயேசுவானவர் தமது சீஷர்களோடு மூன்றாண்டுகளைக் கழித்த பிறகு அவர்களிடம் நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்து கொண்டேன்… நீங்கள் போய்க் கனிகொடுக்கும் படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும். நான் உங்களை ஏற்படுத்தினேன்” என்று கூறினார். (யோவான் 15:16), ”ஏற்படுத்தினேன்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்கச் சொல் “ஒரு திட்டத்தோடு வைக்கப்படுதல்” என்று அர்த்தப்படுகிறது. வேதாகமத்தில் இந்தக் கிரேக்கச் சொல் மூன்று முறை மட்டுமே குறிப்பிடப் படுகிறது. ‘நான் நானாகவே உங்களைத் தெரிந்துகொண்டு, நீங்கள் கனிகொடுக்கும்படி ஒரு திட்டத்தோடுகூடிய இடத்தில் உங்களை வைத்திருக்கிறேன்” என்பதை இந்த வசனத்தின் சாராம்சமாகும்.

நீங்கள் எப்போதாவது ஒரு வேலிக்கம்பத்தில் ஒரு ஆமையைப் பார்த்திருக்கிறீர்களா? அப்படிப் பார்த்திருப்பீர்களானால் ஒன்று மட்டும் நிச்சயம். அந்த ஆமையால் தானாக அந்தக் கம்பத்தின்மேல் ஏற முடிந்திருக்காது, யாராவது அதை அங்கே தூக்கி வைத்திருக்க வேண்டும்! கிறிஸ்துவை உண்மையோடு பின்பற்றும் ஒவ்வொருவரும் இந்த வேலிக்கம்பத்தின் மீது இருக்கும் ஆமையின் உணர்வைப் பெற வேண்டும். நாம் சுற்றிலும் பார்த்து ஏற்றதொரு இடத்தில் ஒரு திட்டத்தின்படி வைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணர வேண்டும். ”கிறிஸ்து என்னை இந்த இடத்தில் வைத்திராவிட்டால், நானாக இந்த இடத்துக்கு வந்திருக்க முடியாது” என்று கூற வேண்டும்.

மலையின்மேல் இருக்கிற பட்டணம்

”மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்க மாட்டாது” என்பது நான்காவது உருவகமாகும். நாம் தமது வாழ்க்கையில் அந்த எட்டுப் பாக்கியமான மனோபாவங்களையும் கொண்டிருப்போமானால் அவைகளை மரக்காலால் மூடிவைக்கும் விளக்கைப் போல மறைத்து வைக்க முடியாது என்பதை இயேசுவானவர் மறுபடியுமாக வலியுறுத்துகிறார். இயேசுகிறிஸ்துவுக்கு இரகசிய சீஷர் என்று எவரும் கிடையாது. தமது சீஷன் என்று அறிக்கையிடும் ஒவ்வொருவருக்கும் ஞானஸ்நானம் கொடுக்கும்படி கட்டளையிடுவதின்மூலம் இரகசிய சீஷர்கள் என்று யாரும் இருக்க முடியாது என்று இயேசுவானவர் தெளிவுபடுத்துகிறார் (மத். 28:18-20).

நாம் பூமிக்கு உப்பாகவும், உலகத்துக்கு வெளிச்சமாகவும் இருப்போமானால், அந்தப் பாக்கியமான உண்மையை மறைக்க முடியாது என்றே இயேசுவானவர் போதிக்கிறார். அவர் உண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் யதார்த்தவாதியாக இருக்கிறார். அவர் அறிக்கையிடுவதை விட செயல்படுவதையே அதிகமாக மதித்தார். இந்த நான்கு உருவகங்களும் நாம் எதை அறிக்கையிடுகிறோம் என்பதை அல்ல. எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம் என்பதை வலியுறுத்து கின்றன.

Have any Question or Comment?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page