எபிரோன் அகழ்வாராய்ச்சி
வேதத்தை கூர்ந்து வாசிக்கும் நீங்கள் எபிரோனை மறந்திருக்கவே முடியாது. வேதத்தில் ஆபிரகாம் காலம் தொட்டே குறிக்கப்பட்டிருக்கிறது இந்த நகரம்.
இஸ்ரவேல் போனால் நீங்கள் பார்க்க வசதியாய் அதன் இருப்பிடம் பற்றி கொஞ்சம் சொல்கிறேன்.
தெற்கு பலஸ்தீனாவிலுள்ள முக்கிய நகரங்களுள் ஒன்று எபிரோன். இது எருசலேமுக்கு தெற்கே சரியாக 30.6 கி.மீ. தூரத்தி லுள்ளது. இது ஒரு மலைப்பட்டினமும் கூட. கடல் மட்டத்திலி ருந்து 2600 அடி உயரத்திலிருக்கிறது.
இந்நகரைச் சுற்றிலும் திராட்சைத் தோட்டங்களும், பழத் தோட்டங்களும், ஒலிவத் தோட்டங்களும் நிறைந்திருந்தன.
இங்கு வருடாந்திர மழைப்பொழிவு 20.3லிருந்து 25.4 செ.மீ. தான். எனவே கிணறுகள், ஊற்றுகள், குளங்கள் இவைகளின் தேவை அவசியம்.
எபிரோன் பற்றி புவியியல் பார்த்தோம். அப்படியே தொடர்ந்து கொஞ்சம் வரலாற்றையும் பார்த்து விடலாம்.
இந்த எபிரோனுக்கு அருகாமையில்தான் கூடாரம் போட்டு ஆபிரகாம் தங்கியிருந்ததாக வேதம் கூறுகிறது. அந்நாட்களில் எபிரோனில் ஏத்தியரும், அம்மோனியரும் குடியிருந்தனர். (ஆதி 23:7,8 14:13) எபிரோன் அக்காலத்தில் கீரியாத் அர்பா என்றழைக் கப்பட்டது. (ஆதி 23:2)
இந்த நகரம் கட்டப்பட்ட காலத்தை பார்க்கலாம் என்று நீங்கள் விரும்பினால் எண்ணாகமம் 13: 22க்கு உங்கள் பார்வையை திருப்ப வேண்டும்.
எகிப்திலுள்ள சோவான் கட்டப்படுவதற்கு ஏழ வருடங் களுக்கு முன்பு கட்டப்பட்டது எபிரோன் என்கிறது இந்த வசனம். இந்த சோவான் கி.மு. 1720ல் கட்டப்பட்டது. எனவே அதற்கு கொஞ்சம் முன்பு தான் எபிரோன் கட்டப்பட்டிருக்கிறது.
ஆபிரகாம் எபிரோனில் இருந்த ஏத்தியர்களிடத்தில் நானூறு சேக்கல் வெள்ளியை விலையாகக் கொடுத்து மக்பேலா என்ற குகையை விலைக்கு வாங்கினார். இந்த இடத்தை அவர் தனக்கும் தன் சந்ததியினருக்கும் கல்லறைக்காக வாங்கினதால், ராகேல் தவிர மற்றெல்லாரும் இங்கே அடக்கம் பண்ணப்பட்டனர்.
தற்காலத்தில் இந்த கல்லறைகள் இருக்குமிடத்தில் இஸ்லாமியர்களின் மசூதி கட்டப்பட்டுள்ளது. இப்பகுதி முழுவ தும் இஸ்லாமியரின் கட்டுப்பாட்டிலிருக்கிறது. காரணம், இஸ்லா மியர்களும் ஆபிரகாமை தங்கள் முற்பிதா என்கிறார்கள் என்பது தான்.
1963ம் ஆண்டு பிலிப் C. ஹாம்மான்ட் என்பவரால் இந்த நகரம் அகழ்வாராய்வு செய்யப்பட்டது.
இந்நகரத்தின் புறப்பகுதிகளில் தொடர்ச்சியான விவசாயம் நடைபெற்று வருவதாலும், இதன் உள்பகுதி இஸ்லாமியரின் கட்டுப்பாட்டில் புனிதப் பகுதியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை யாலும் இங்கு அவ்வளவு எளிதாய் அகழ்வாராய்வு செய்ய முடிய வில்லை.
அனுமதி பெறவே ரொம்பவும் கஷ்டப்பட வேண்டிய தாயிற்றாம்.
1963ல் அகழ்வாராய்வு செய்ய வேண்டிய பகுதிகளை வெறுமனே சர்வே மட்டும் செய்த பிலிப், 1964ல் ஒரு அமெரிக்க அகழ்வாராய்வுக் குழுவிற்கு தலைமையேற்று ஜூலை மாதம் இப் பகுதியில் தனது பணியினைத் தொடர்ந்தார்.
இவர்கள் முதலாவதாக எபிரோனின் மேற்குப் புறங்களில் தான் பூமியை அகழ்ந்து பார்த்தனர்.
மேலோட்டமான இந்த ஆராய்ச்சியால் பிற்காலத்திய இஸ்லாமியர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் தான் கிடைத்தன.
பின்னர் எபிரோனின் வடக்குப் பகுதியில் யாபேல், பாத்ராக் என்ற இடங்களில் நடைபெற்ற ஆய்வுகளில் நிறைய ஆதாரங்கள் கிடைத்தன. கொஞ்சம் ஏத்தியர் வணங்கிய தெய்வச் சிலைகளும் கிடைத்தன.
இரண்டாவதாக,கேசேரில் கிடைத்தது ஒரு பொன்சிலை. முழுக்க தங்கத்தாலான இரண்டடி உயரமுடைய இந்தச் சிலை ஆராய்ச்சியாளர்களை ரொம்பவே திகைக்கப் பண்ணியது.
காரணம், அது முட்புதரில் சிக்கியுள்ள ஒரு ஆட்டுக்கடாவின் சிலை. முள்ளில் சிக்கியிருந்த ஆடு ஈசாக்கிற்கு, பதிலாக பலியிடப்பட்ட சம்பவம் வேதத்தில் தான் வருகிறது.
தேவன் தன் வாழ்வில் அதிசயமாய் ஓர் ஆட்டுக்கடாவை காட்டி தன் மகனை பலியிலிருந்து விலக்கிக் கொண்டதை நினைவு கூர்வதற்காக ஆபிரகாம் இந்த சிலையை செய்து பாதுகாத்து வந்திருக்கலாம் என்று எண்ணுகின்றனர்.
கார்பன் – டேட்டிங் முறையில் இந்த சிலையை சோதித்து காலம் கணிக்க முற்பட்ட போது அது கி.மு. 1700ஐ சேர்ந்ததென தெரிய வந்திருக்கிறது. வேதத்திலுள்ள வம்சாவளி அட்டவணைப் படி பார்த்தால் ஆபிரகாம் கி.மு. 1700 – 1800குள் வாழ்ந்திருக்க வேண்டுமென கணக்கு வருகிறது.
இன்னும் சில ஆய்வாளர்கள், இந்த சிலை ஏத்தியரின் தெய்வச் சிலைகளில் ஒன்றாக இருக்க முடியுமேயல்லாமல் ஆபிரகாம் செய்து வைத்ததாயிருக்க முடியாது என்கின்றனர்.
ஆனால் ஜெரால்ட் A. லார் என்னும் ஆய்வாளர் இதை ஆபிரகாம் செய்திருக்கலாம் என்பதற்கு பல ஆதாரங்களை தருகிறார்.
1) ஏத்தியரின் தெய்வச் சிலை என்றால் ஒன்று மட்டும் கிடைக்காது. பல்வேறு இடங்களில் இதைப் போன்றே, தங்கமில்லாவிட்டால் கூட கல்லில் செய்யப்பட்ட விக்கிர கங்களாவது கிடைத்திருக்கும். இதில் கிடைத்துள்ளதோ ஒரேயொரு சிலைதான்.
11) மோசே காலத்தில் தான் விக்கிரகங்கள் செய்யக் கூடாது என்ற கட்டளை தரப்பட்டது. எனவே இக் கட்டளையை பெறாத ஆபிரகாம் தன் வாழ்வில் நிகழ்ந்த முக்கிய நிகழ்ச் சியை தனக்கும் தன் சந்ததியினருக்கும் நினைவூட்ட அதை சிலையாகச் செய்திருக்கலாம்.
III) முள்ளில் சிக்கின ஆடு என்பது ஆபிரகாமின் வாழ்வில் தான் பெரிய திருப்பத்தை உண்டு பண்ணியதாக வேதம் குறிக்கிறது. எனவே, இது ஆபிரகாமின் குடும்பத்தைச் சேர்ந்தது என்கிறார். இன்னும் கேரார் பகுதியிலே அகழ்ந்து பார்த்த போது நிறைய வெள்ளி கிடைத்துள்ளது. கிடைத்த வெள்ளியில் சில, பாத்திரங்களாக வடிக்கப்பட்டிருந்தன.
சிறு சிறு மண் ஓடுகளில் ஒரே அளவில் வார்க்கப்பட்ட உள்ளங்கை அளவிலான, வட்ட வடிவமான வெள்ளித் துண்டுகள் நிறையக் கிடைத்துள்ளன. இது தவிர ஏறத்தாழ 3cm அளவும் 1.7cm பருமனுமுள்ள சதுர வடிவ வெள்ளி துண்டுகளும் கிடைத்துள்ளன.
ஆபிரகாமின் காலத்தில் பணம் கண்டுபிடிக்கப்படாத காரணத்தினால் வெள்ளியே பணம் மாதிரி பயன்படுத்தப்பட்டது.
அதிலும் ஒரு பொருளை வாங்க மண் ஓடுகளில் வார்க்கப் பட்ட வெள்ளிகளைத் தான் பயன்படுத்த வேண்டுமாம். சட்டம்.
சதுர வெள்ளி நமக்கு வெள்ளியில் பொருட்களைச் செய்து கொள்ள பயன்படுத்திக் கொள்ள வேண்டுமாம். இரண்டு விதமான வெள்ளி இப்படி பயன்படுத்தப் பட்டதை கண்டெடுத்திருக்கிறார்கள்.
வேத ஆதாரம் இங்கே சேருகிறதை பாருங்கள். ஆபிரகாம் வர்த்தகரிடத்தில் செல்லும்படியான வெள்ளியை நானூறு சேக்கல் நிறுத்துக் கொடுத்தான். ஆதி 23: 16
வர்த்தகரிடத்தில் செல்லும்படியான வெள்ளி என்ற பதத்தை கூர்ந்து வாசித்தால் ஆபிரகாம் காலத்தில் வர்த்தகருக் கென்று தனி வெள்ளி பயன்படுத்தப்பட்டது தெரிகிறதல்லவா? அகழ்வாராய்ச்சியும் இதை நிரூபித்துள்ளது.
இன்னும் எபிரோனின் மேற்குப் புறத்தில் யாபேல்-அர்- ரூமெய்டி என்ற இடத்தில் அகழ்ந்த போது சிறு சிறு மண்பாண்டங் களில் பொன்னிலும் வெள்ளியிலுமான பல ஆபரணங்கள் கிட்டி யுள்ளன.
இவை பெரும்பாலும் கையிலணியும் கனமான வளையல் கள், காலில் அமையும் கனமான வளையங்கள், கழுத்தாபரணங் கள், காதிலணியும் காதணிகள் போன்றவைதான்.
இதில் கி.மு. 2100 – 1700 வரையுள்ள காலத்திலுள்ள நகை என்று நிரூபிக்கப்பட்ட நகைகள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட எடையிலேயே செய்யப்பட்டவை. அதற்குப் பின் வந்த காலங் களில் தான் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
அதாவது கைவளையல்கள் என்றால் 12லிருந்து 16 பவுன் வரை எடையும், காதணி என்றால் 6லிருந்து ஏழு கிராம் வரையும் காலில் அணிவதாயிருந்தால் 15லிருந்து 18 பவுன் வரையும் எடையி ருக்கும். (பெண்கள் பெருமூச்சு விடாமல் படிக்கவும்)
அக்காலத்தில் இன்னின்ன நகைக்கு இன்னின்ன எடை பொன் என்று நிர்ணயித்திருந்தார்கள் என்கிறார் ஜேம்ஸ் பிரிட்சார்ட்.
ரெபெக்காளுக்கு எலெயேசர் கொடுத்த நகைகளின் எடை யைப் பாருங்கள். அரைச் சேக்கலுள்ள பொற்காதணி, பத்துச் சேக்கலுள்ள பொற்கடகம் (கையணி) ஒரு சேக்கல் என்பது 11.4 கிராம் காதணி அரைச் சேக்கல் 11.4 X 1/2=5.7 கிராம் கைக்கடகம் 11.4X10=114 கிராம். அதாவது 11.25 பவுன். (ஏயப்பா! இவ்வளவு கனமான நகைகளை செய்து போட்டால் கணவனை ஏன் மனைவி ‘ஆண்டவனே’ என்று அழைக்கமாட்டாள் 1பேதுரு 3:6 என்கிறார் ஒரு இல்லத்தரசி)
ஆபிரகாம் வாழ்ந்த காலத்தைச் சேர்ந்தவை என்று கண்டு பிடிக்கப்பட்ட நகைகள் வேதம் சொல்லும் அதே எடையைக் கொண்டிருப்பதால் வேத வசனம் உண்மையென்று அகழ்வாராய்வு சாட்சி சொல்லுகிறதல்லவா?
ஆபிரகாம் வாழ்ந்த காலத்தில் இங்கு வசித்த ஏத்தியர்கள் தங்கள் தலைச்சன் மகன்களை நரபலி செலுத்தி, தங்கள் தெய்வத் திற்கு படைப்பது வழக்கம்.
இந்த நிகழ்ச்சிகளை அடிக்கடிக் கண்ட ஆபிரகாம் தனக்கு பிறக்கும் மகனையும் தான் புதிதாக பின்பற்றத் துவங்கியுள்ள ‘யெகோவாவிற்கு’ பலி தர வேண்டியிருக்குமோவென மனத்திற் குள் பயந்தார். எனவே தான் தேவனும் ஆபிரகாம் பயந்த காரியத் தையே செய்யச் சொல்லி அவரை சோதித்தார் என்கின்றனர் வேத நிபுணர்கள்.
1966ல் கேசேர் என்ற இடத்தில் பிரின்ஸ்டன் குழு அகழ் வாராய்ச்சி செய்த போது ஒரு பயங்கரமான பொருள் கிடைத்தது.
கரடு முரடான சுண்ணாம்புக் கல்லில் வெட்டியெடுக்கப் பட்ட இரும்பு ஆயுதம். இது அல்ல பயங்கரம். அந்த ஆயுதத்தில் சொருகிக் கிடந்த எட்டு வயது குழந்தையின் எலும்புக் கூடுதான் பயங்கரம்!
குழந்தையை கொன்ற பின் இதில் குத்தி வைப்பார்களா, அல்லது உயிருடன் குத்தி வைத்து கொல்வார்களா தெரியவில்லை. எப்படியோ, நரபலியின் பயங்கர சின்னம் கையில் கிடைத்துள்ளது.
மக்பேலா கல்லறை இஸ்லாமியர்களின் கையிலிருப்பதால் ஆராய முடியவில்லை. ஆயினும் நகரின் புற இடங்களில் ப்ரோட் டோன் மேக்னடோ மீட்டர் கொண்டு ஆராய்ந்த போது (proton Magnetometre) பல குகைகளில் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
ஆபிரகாமின் காலத்தில் வாழ்ந்த ஏத்தியர்கள் இறந்தவர் களை புதைக்க இரண்டு வழிகளை கையாண்டார்கள். ஒன்று குகையில் புதைத்து மூடுவது. இரண்டாவது, நகர புறம்பில் பெரிய சுவர்கட்டி, ஆள் மரித்தவுடன் சுவரை கொஞ்சமாய் தோண்டி மரித்தவனை சுவரில் பதித்து மேலே பூசி விடுவது, சுவரில் பதிப்பது வசதி குறைந்தவர்களுக்கான முறை. பணம் பெருத்தவர்கள் குகையில்தான் புதைக்கப்படுவார்களாம்.
செல்வச் சீமானாயிருந்த ஆபிரகாம் (ஆதி 13 : 2) தனக்கும் தன் சந்ததிக்கும் கல்லறைக்காக குகையை விலைக்கு வாங்கியது இதனால் தான் (ஆதி 23:9) ஏத்தியர் காலத்திய இந்த வழக்கம் வேத த்தில் குறிப்பிட்டுள்ளது போலவே அகழ்வாராய்விலும் நிரூபிக்கப் பட்டுள்ளது.
ஆபிரகாமின் வரலாற்றைப் பலர் நம்புவதில்லை. அது மோசே எழுதி வைத்த கதை தானே என்று என்னிடமே பலர் கேட் டிருக்கிறார்கள். ஆனால்…
இவ்வளவெல்லாம் நாங்கள் கஷ்டப்பட்டு விஞ்ஞானப் பூர்வமாக நிருபித்திருக்க, அதையெல்லாம் தெரிந்துகொள்ளாமல் ஆபிரகாமை கதை என்கிறீர்களே என்று இவர்களைப் பார்த்து சிரிக்க ஒரு பெரிய நிபுணர் குழுவே இருக்கிறது.
மூலம் : ஆழங்கள் சொல்லும் சாட்சிகள்
ஆசிரியர் : சகோ.வின்சென்ட் செல்வகுமார்