எரிகோ அகழ்வாராய்ச்சி
எரிகோவைப் பற்றி நான் உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை.
தன் பிரசங்கத்தில் எரிகோவைப் பற்றி பிரசங்கித்திராத பிரசங்கியாரையும், பாடலில் எரிகோவை எழுதியிராத கிறிஸ்தவ கவிஞரையும் நிச்சயம் நீங்கள் பார்த்திருக்க முடியாது. தன் வாழ்வின் தடைகளை எரிகோவிற்கு ஒப்பிட்டு ஜெபிக் கும் விசுவாசிகளின் எண்ணிக்கையும் ஏராளம்.
எரிகோவைப் பற்றி படித்து விசுவாசத்தில் புத்துணர்ச்சி கொண்டவர்களாய் பக்கத்து வீட்டை ஏழுமுறை சுற்றி வந்து ஏழா வது முறையில் தடாலடியாய் கீழே விழுந்த தீவிர விசுவாசிகளைக் கூடக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
கிறிஸ்தவ வட்டாரத்தில் அவ்வளவு பரிச்சயமான ஊர் இந்த எரிகோ.
ஆனாலும் அதன் இருப்பிடம் எல்லோருக்கும் துல்லிய மாய் தெரிந்திருக்க நியாயமில்லை. எனவே, வழக்கம் போலவே எரிகோவின் புவியியல் பற்றி இரண்டொரு வரி சொல்லுகிறேன்.
சவக் கடலுக்கு வடக்கே சுமார் இருபது மைலுக்கு நாலைந் தங்குலம் தள்ளி யோர்தான் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது எரிகோ.
எருசலேமிலிருந்து வடகிழக்கே சுமார் 30 கி.மீ., தொலை வில் எரிகோவிற்கு சுலபமாய் போய்விடலாம். எரிகோவிற்கும் எருசலேமிற்கும் இடையில் அந்த காலத்திலேயே நெடுஞ்சாலை இருந்திருக்கிறது. வாணிபத்திற்கு பயன்படுத்தப்பட்ட ரொம்பவும் சீரான சாலையாம் அது. என்ன, கொஞ்சம் திருடர் நடமாட்டம் மட்டும் அந்த சாலையில் அதிகம் போலிருக்கிறது.
எரிகோ கடல்மட்டத்திலிருந்து 800 அடி கீழே அமைந் துள்ள இடம்.
எரிகோ பற்றி தெரிந்து கொள்ள ஆர்வ மேலீட்டால் நேரடியாக அகழ்வாராய்ச்சியாளர்களிடம் போய்விடக் கூடாது நீங்கள். ‘எரிகோவா? எந்த எரிகோ. எரிகோவில் மூன்று இருக்கே தம்பி!’ என்பார்கள்.
பண்டைய எரிகோ யோசுவா காலத்தியது. பின்பு கட்டப் பட்ட எரிகோ இராஜாக்கள் காலத்தைச் சேர்ந்தது. பெத்தேல் ஊரானாகிய ஈயேல் எரிகோவை எடுத்துக் கட்டத் துவங்கி, யோசு வாவின் சாபத்தின்படி (யோசு 6 : 26 தன் பிள்ளைகளான அபிரா மையும், செகூப்பையும் சாகக் கொடுத்தான் (1 இராஜா 16 : 34)
புதிய ஏற்பாட்டுக் கால எரிகோ மகா ஏரோதினால் கட்டப் பட்டது. இயேசு கிறிஸ்து பர்திமேயுவிற்கும், வேறு குருடருக்கும் பார்வையளித்ததும், சகேயுவை சந்தித்ததும் இங்கு தான். (மத் 20: 29, மாற் 10:46, லூக் 18: 35, 19 : 1)
புராதன எரிகோ இருந்த இடத்திற்கு இப்போது பெயர் காம்-ஏல்-சுல்தான். பழைய பெயரே ‘பெட்டர்’ இல்லையா?
எரிகோவில் அகழ்வாராய்ச்சியானது நூறு ஆண்டுகளுக்கு முன்பே துவங்கிவிட்டது.
1867ல் சர். சார்லஸ் வாரன் என்பவர் எரிகோ பகுதியை குடைந்து சுமார் 9 மீட்டர் ஆழம்வரை இறங்கி சில ஆயுதத் துண்டு களைக் கொண்டு வந்தார். நல்ல அகழ்வாராய்ச்சி வசதியில்லாத அக்காலத்தில் அதற்கும் மேல் ஆராய முடியவில்லை. வாரன் “இந்த உலோக ஆயுதங்கள் தவிர எரிகோவில் வேறொன்றும் உருப்படியாய் கிடைக்கவில்லை!” என்று சலிப்புடன் மூடிவிட்டார்.
ஆனால் 1907ல் நடைபெற்ற அகழ்வராய்ச்சி எரிகோ பற்றிய பல உண்மைகளை வெளி உலகிற்கு தந்தது. E. செல்லின்.
- வாட்ஸிங்கர் என்ற ஆராய்ச்சியாளர்கள் இப்பகுதியை ஆராய்ந்த போது நகரைச் சுற்றியும் பெரிய சுவர் இருந்ததை கண்டுபிடித்தனர். இந்த சுவர் நகரைச் சுற்றிலும் இருந்ததை கண்டுபிடித்தனர்.
சுவருக்கு நடுவில் இருந்த நகரின் பரப்பு ஐந்தரை ஏக்கர் சதுர அளவாக இருந்ததாம்.
ஐந்தரை ஏக்கர் பரப்புள்ள நகரம் என்றால் அது ஒரு மிகப் பெரிய நகரமில்லையல்லவா? ஆகவே தான் இஸ்ரவேலர் ஒரே நாளில் ஏழுமுறை நகரைச் சுற்றி வர முடிந்திருக்கிறது.
சிலர், ஒரு பட்டணத்தை ஒரே நாளில் எப்படி ஏழுதரம் சுற்றி வர முடியும் என்று அதுவரை சந்தேகப்பட்டு வந்தார்கள். செல்லின் அளந்து சொன்ன பிறகு சந்தேகம் தீர்ந்து ‘அது தானே வேதம் தப்பாய் சொல்லாதே!’ என்றார்கள்.
வேதம் எரிகோவை பேரீச்சமரங்களின் பட்டணம் என்று குறிப்பிட்டாலும், ஈயம், பித்தளைப் பாத்திரங்களைப் பார்க்கும் போது நமக்கு பேரீச்சம் பழம் குறித்து உண்டாகிற அளவிற்கு ஞாபகம் எரிகோவைப் பற்றி நினைக்கும் போது உண்டாவதில்லை.
மாறாக, எரிகோவைப் பற்றி எண்ணும் போதெல்லாம் நமக்கு ஞாபகத்திற்கு வருவது சுவர். நெடிதுயர்ந்த காம்பவுண்டுச் சுவர்.
எனவே, சுவர் பற்றி எரிகோவில் நடைபெற்ற அகழ்வாராய்
வைப் பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்பது நல்லது. 1930ல் எரிகோவை ரொம்பவும் சுவராஸ்யமாக ஆராய்ந் தவர் ஜான் கார்ஸ்டிராங். இவர் லிவர் பூல் பல்கலைக் கழகத்தின் சார்பாக எரிகோவை அகழ்ந்து ஆராய்ந்தார்.
இவருடைய பெரும் பகுதி கவனம் முழுவதும் எரிகோவின் சுவர்மேல் தான்.
சுவர்கள் சுட்ட செங்கற்களினால் கட்டப்பட்டிருந்ததை இவர்தான் கண்டுபிடித்துச் சொன்னார்.
எரிகோ இரட்டைச் சுவர்களால் பாதுகாக்கப்பட்டிருந்தது.
வெளிப்புறமாக ஓடும் சுவரின் அகலம் 6 அடி. சுவற்றின் மேல் தாராளமாய் ஒரு ஆள் தலையணை வைத்து குறுக்காகப் படுக்கலாம். ஒற்றைச் செங்கல் காம்பவுண்ட் சுவர்களைப் பார்த்துப் பழகிய நமக்கு ஆறடி அகலத்தில் சுவர் என்பது பிரமாண்டம் தான்.
ஆனால் உட்புறத்துச் சுவர் பற்றி சொன்னால் அசந்து போவீர்கள். அகலம் 23 அடி! என்ன ஆச்சு, இரண்டு பஸ்கள் தாராளமாய் ஓவர் டேக் பண்ணலாம். டிராபிக் ஜாம் வராமல் சுவர் மேலேயே போக்குவரத்துப் பண்ணலாம். அவ்வளவு அகலம்.
இந்த இரண்டு சுவர்களுக்கும் இடையில் இடைவெளி 15 அடி. அதாவது வெளிப்புறச் சுவற்றிலிருந்து 44 அடி தள்ளித் தான் நகரம் துவங்குகிறது.
ஆறடி அகலமான சுவரும், 24 அடி அகலமான சுவரும் இஸ்ரவேலர்கள் சுற்றி வந்தபோது விழுந்தது என்றால் எத்தனை பெரிய அற்புதம்! நாமென்றால் சாதாரணமாக கொஞ்சம் உரத்துக் கை தட்டினாலே விழுந்து விடும் டப்பாச் சுவர்களை கண்டே கலங்கிக் கொண்டிருக்கிறோம்.
எரிகோ பட்டணத்து சுவரை மேலும் ஆராய்ந்த போது Dr. கென்யான் கண்டறிந்தது இன்னும் விசேஷம்.
எரிகோ சுவரின் மேல் பகுதி தான் 23 அடி அகலம். அது கீழே வரவர அகன்று வருகிறது. கீழ்ப்புறம் நாற்பது அடி அகலம் என்கிறார். ரொம்பவும் பலமான சுவர்தான். இல்லையா?
இன்றைய நவீன வேதாகம ஆராய்ச்சியாளர் சிலர், ஆறு லட்சம் இஸ்ரவேலர்கள் சேர்ந்து ஒரே நேரம் குரலெழுப்பிய அதிர்ச்சியில் தான் எரிகோவின் சுவர் விழுந்ததென்று புத்தகம் எழுதியுள்ளது எவ்வளவு அபத்தம் பாருங்கள்.
ஆறுலட்சம் பேர் சப்தமிட்டால் விழுவதற்கு இதென்ன சோளத்தட்டைச் சுவரா?
இந்த சுவர்கள் விஸ்தாரமானவை. பலமானவை. மேலும் Dr. கென்யானின் குறிப்பு, விழுந்த எரிகோவின் சுவர் நகரத்தின் உள்புறமாக இடிந்து விழாமல் வெளிப்புறமாய் விழுந்துள்ளது என்று சொல்கிறது.
ஆறுலட்சம் பேர் சுவற்றைச் சுற்றி நின்று கத்தினதால் சுவர் விழுந்ததாய் வைத்துக் கொண்டால் சுவர் உள்புறமாக அல்லவா விழுந்திருக்க வேண்டும்.
ஆக, சுவர் ஜனங்கள் கத்தினதால் ஏற்பட்ட அதிர்ச்சியில் விழவில்லை. தேவனுடைய ஆவியினால் தான் ஆயிற்று என்பது தெளிவாகிறது.
1953-56ல் எரிகோ நகரின் உள்பகுதிகளை ஆராய்ந்த J.B. பிட்சார்ட் என்பவர் நகரின் உள்ளிருந்த வீடுகளின் சுவர்களில் தீக்கறைகளைக் கண்டார். எல்லா வீடுகளின் சுவர்களிலும் இது காணப்பட, ஏதோ ஒரு மிகப்பெரிய விபத்து எரிகோவில் சம்பவித் திருக்க வேண்டுமென்று எண்ணினார்.
மேலும் அங்கு கிடைத்த பல பொன் ஆபரணங்கள் தீயில் பாதிக்கப்பட்டதாக கிடைத்திருக்கிறது.
அங்கு கிடைத்த சில சொரூபங்களும், விக்கிரகங்களும் கருகியிருந்தன. மாபெரும் தீ விபத்து எரிகோவில் நடந்ததா?
யோசுவா பட்டணத்தைப் பிடித்த போது அதை தீக்கிரை யாக்கினார்கள் என்கிறது வேதம். (யோசு 6 : 24) வெள்ளியும் பொன்னும் இரும்பும் தவிர மற்றொல்லாவற்றையும் கொள்ளை யிடாமல் சுட்டெரித்தனர். எனவே தான் எரிகோவின் வீட்டுச் சுவர்கள், தட்டுமுட்டுச் சாமான்களெல்லாம் தீயின் சுவடுகளுடன் காணப்பட்டுள்ளது.
எரிகோவின் விஷயத்திற்குள் நாம் கடந்து போவோம். எரிகோவின் அகலமான அலங்கங்களைக் குறித்துச் சொன்னேன். அந்த சுவர்கள் 23 அடி அகலமாயிருந்தபடியினால் அந்தச் சுவற்றின் மேலேயே பல வீடுகளும் கட்டப்பட்டிருந்தன.
ஆராய்ச்சியாளர் கார்ஸ்டிராங்க் இந்த சுவரை சுற்றி வந்த போது ஒரேயொரு பகுதி மட்டும் இடிந்து விழாமல் 22 அடி உயரத் திற்கு நின்று கொண்டிருப்பதைக் கண்டார். அதன் மேலும் கூட ஒரு வீடு இருந்த அடையாளங்கள் இருந்தன.
இப்பகுதி மட்டும் இடியாத காரணம், ராகாப்பின் வீடு அங்கிருந்திருக்க வேண்டும் என்கிறார் கார்ஸ்டிராங்.
வாசித்துப் பாருங்கள் யோசுவா 2 : 15ஐ “அவள் வீடு அலங்கத்தின் மதிலில் இருந்தது. அவள் அலங்கத்தில் குடி இருந்தாள்.”
ராகாப் யோசுவாவின் ஒற்றர்களைக் காப்பாற்றி யிருந்ததால், ராகாபின் வீட்டாரைக் காப்பாற்ற யோசுவா வாக்குறுதி தந்திருந்தார். தன் ஊழியனுடைய வாக்குறுதியை நிறைவேற்ற தேவனும் எரிகோவில் ராகாபின் வீடிருந்த மதிலை மட்டும் இடிய விடாமல் வைத்திருப்பது எத்தனை ஆச்சரியமானது.
இன்னும் எரிகோவை கென்யான் ஆராய, மதில் கல்லறை களையும் கண்டுபிடித்தார். சுவற்றைக் கொஞ்சம் தோண்டி சவத்தை அதில் நிற்க வைத்துப் பூசி விடுவதுதான் மதில் கல்லறை. ஏற்கனவே இது பற்றி சொல்லியிருக்கிறேன்.
எரிகோவில் பிணங்களை படுக்க விடாமல் நிற்கவே வைத்து சித்ரவதைப்படுத்தியது ஏன் தெரியுமா? எரிகோ சிறிய பட்டணம். ஆனால் ஜனநெருக்கம் ஜாஸ்தி.எனவேதான் வீடுகளை சுவற்றின் மீதெல்லாம் கட்டியிருந்தார்கள். இந்நிலையில் மரித்தவர் களுக்கு கல்லறை கட்டிக் கொண்டிருந்தால் கட்டுப்படி ஆகுமா? எனவே தான் Standing Type கல்லறைகள்.
இங்கு ஏதாவது கோயில்கள் இருந்ததா? – இருந்ததாம். ‘ஆனால் அதுவும் மதிலைக் குடைந்து கட்டினது தான் தம்பி” என்கிறார் கார்ஸ்ட்ராங்.
எரிகோவினருக்கு எல்லாமே அந்த சுவர் தான் போலி ருக்கிறது. எவனாவது மதிலை உழுது விவசாயம் பண்ணினானா என்பதுதான் தெரியவில்லை.
இப்படி எரிகோவிற்கு பிரதானமாக அந்த சுவர் இருந்ததால் தான் அவர்களது கீழ்ப்படியாமையின் நிமித்தம் அவர்களது அடிப் படையையே இடித்தெறிய தேவன் திட்டம் செய்தார்.
மூலம் : ஆழங்கள் சொல்லும் சாட்சிகள்
ஆசிரியர் : சகோ.வின்சென்ட் செல்வகுமார்