11. 8 விதமான மனுஷன்
- • கர்த்தருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் சங்கீதம் 1:2
- • கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் – சங்கீதம் 128:4
- • உண்மையுள்ள மனுஷன் – நீதிமொழிகள் 28:20
- • கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக்கொண்டிருக்கிற மனுஷன் எரேமியா 17:7
- • கர்த்தருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் – சங்கீதம் 112:1
- • தேவன் தண்டிக்கிற மனுஷன் – யோபு 5:17
- • சிட்சித்து போதிக்கிற மனுஷன் – சங்கீதம் 94:13
- • வாசற்படியில் நித்தம் விழித்திருந்து செவிகொடுக்கிற மனுஷன் நீதிமொழிகள் 8:34
12. 10 கட்டளைகளும் அதை மீறியவர்களும்
கட்டளை 1 (யாத் 20:3)
என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்.
மீறியவர்: சாலொமோன் இராஜா ( 1இராஜா 11 அதி)
- • 700 மனைவிகளும் 300 மறுமனையாட்டிகளும் திருமணம் செய்து, அந்த ஸ்திரீகளின் நிமித்தம் அநேக புற ஜாதி தேவர்களை சேவித்து முதல் கட்டளையை மீறினார்.
கட்டளை 2 (யாத்20:4-6)
யாதொரு விக்கிரகத்தையாகிலும் உனக்கு உண்டாக்க வேண்டாம்.
மீறினவர் : இஸ்ரயேலர்
- • பொன் கன்றுக்குட்டிகளையும் (யாத் 32 அதி)
- • தங்களைச்சுற்றியிருந்த அநேக புறஜாதி தேவர்களுக்கு பலிபீடம் கட்டி விக்கிரக தோப்புகளை உண்டாக்கி (நியா2:10-14, 2இராஜா 21:1-15, எரேமி 1:16) இரண்டாவது கட்டளையை மீறினர்.
கட்டளை 3 (யாத் 20:7)
தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக.
மீறினவர் : சிதேக்கியா இராஜா (எசேக் 17:15-21)
- • தன்னுடன் உடன் படிக்கை செய்து தன்னை எருசலேமுக்கு இராஜாவாக்கிய நேபுகாத்நேச்சாரின் உடன்படிக்கையை முறியடித்து, நயமாக ஆசைகாட்டிய எகிப்துடன் உறவு வைத்து மூன்றாவது கட்டளையை மீறி தேவனுடைய நாமத்தை தூஷித்தார்.
கட்டளை 4 (யாத் 20:8):
ஓய்வு நாளை பரிசுத்தமாய் ஆசரிப்பாயாக.
மீறியவர் :ஒரு மனிதன் (எண்15:32-36)
- • இஸ்ரயேலர்களின் வனாந்திரப்பிரயானத்தில் ஒரு மனிதன் ஓய்வு நாளில் விறகு பொறுக்கியதால் கட்டளையை மீறினான்.
- யூதா கோத்திரம் (2நாளா 36:21)
- • இவர்கள் ஓய்வு வருஷங்களை கட்டளைப்படி அநுசரிக்காததால் (லேவி 25:4,26:33-35) தேசம் தன்னுடைய ஓய்வு வருசங்களை அனுபவித்து தீருமட்டும் 70 வருடம் அது பாழாய் கிடந்தது.
கட்டளை 5 (யாத்20:12)
தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக.
மீறியவர் : ஏலியின் குமாரர்களான ஓப்னியும், பினெகாசும் (1சாமு 2:12,23-25)
- • தன் தகப்பனின் சொல்லைக் கேளாமல் பரிசுத்த ஸ்தலத்தில் தவறுகள் செய்து கட்டளையை மீறினர்.
கட்டளை 6 (யாத் 20:13)
கொலை செய்யாதிருப்பாயாக.
மீறியவர்: அபிமெலேக்கு (நியாயா 9:5,56)
- • தன் தகப்பனாகிய யெருபாகாலின் குமாரர்கள் 70 பேரை ஒரே கல்லின் மேல் கொலை செய்து கட்டளையை மீறினான்.
கட்டளை 7 (யாத் 20:14)
விபச்சாரம் செய்யாதிருப்பாயாக.
மீறியவர் : தாவீது (2சாமு 11:2-5)
- • உரியாவின் மனைவியை இச்சித்து ,விபச்சாரம் செய்து ,உரியாவை கொலை செய்து கட்டளையை மீறினார்.
கட்டளை 8 (யாத்20:15)
களவு செய்யாதிருப்பாயாக.
மீறியவர் : ஆகாப் இராஜா 1இராஜா21:1-19
- • நாபோத்தின் தோட்டத்தை இச்சித்து, அதற்காக அவனை கொலை செய்து,அவன் தோட்டத்தை களவாடி தேவனுடைய கட்டளையை மீறினான்.
கட்டளை 9 (யாத் 20:16)
பொய் சாட்சி சொல்லாதிருப்பாயாக.
மீறியவர்: சவுல் ராஜா(1சாமு 15:13-25)
- • அமலேக்கியரை மடங்கடிக்கும்போது எல்லாவற்றையும் சங்கரித்து கொன்று போடக்கடவாய் என்ற கட்டளையை மீறி, நலமானதையும் கொழுத்தவைகளையும் எடுத்துக்கொண்டு வந்து,தேவனுக்கு பலியிடவே எடுத்தோம் என்று பொய் சொல்லி கட்டளையை மீறினார்.
கட்டளை 10 (யாத்20:17)
இச்சியாதிருப்பாயாக
மீறியவர்: ஆகான் (யோசு7:10-26)
- • யூதா கோத்திரத்தைச் சேர்ந்த ஆகான் கொள்ளையிலே நேர்த்தியான பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும்,ஐம்பது சேக்கல் நிறையான பொன்பாளத்தையும் இச்சித்து தேவனுடைய கட்டளையை மீறினான்.
13. அக்கினி
பூமியின்மேல் அக்கினி யைப் போடவந்தேன். அது இப்பொழுதே
பற்றி எரிய வேண்டு மென்று விரும்புகிறேன் லூக்கா 12 : 49
அக்கினியை போட..
- • 1. அக்கினி நாம் சுத்திகரிக்கப்பட மல்கியா 3 : 2,3
- • 2. அக்கினி நம்மை சோதிக்க 1 பேது 4 : 12 , 13
- • 3. அக்கினி நம்மை வழிநடத்த நெகோ 9 : 12 யாத் 13 : 21
- • 4. அக்கினி நம்மை பாதுகாக்க யாத் 13 : 19 , 20 ஏசாயா 4 : 5
- • 5. அக்கினி வெளிச்சம் காட்ட யாத் 13 : 21
- • 6. அக்கினி நம்மை வேறு மனிதர் களாக மாற்ற அப் 2 : 2 — 4
14 . அடங்குங்கள்
அவர்கள் அடங்கிஅவரை சேவித்தால்,தங்கள் நாட்களை
நன்மையாகும் ,தங்கள் வருஷங்களை செல்வவாழ்வாகவும்
போக்குவார்கள்.யோபு : 36 : 11
அடங்கினால்.. !
- • 1. ஆளுகைக்கு அடங்குங்கள் தீத்து 3 : 1 , 2, 2 : 9 , 10 1 நாளாக 29 : 24
- • 2. குடும்பத்திற்கு அடங்குங்கள் எபி 12 : 9 உபா 21 : 18 – 20 ஆதி 16 : 4 : 13 1 பேது 5 : 5
- • 3. ஊழியர்களுக்கு அடங்குங்கள் எபி 13 : 17 , 1 இராஜா 17 : 10 — 16 2 இராஜா 4 : 1 — 17
- • 4. ஆண்டவருக்கு அடங்குங்கள் 1 பேது 5 : 6 யோபு : 36 : 5 — 12 ஏசாயா 1 : 19
15 . அதிகாலையில் செய்ய வேண்டியது
- 1. துதிக்க வேண்டும் – சங் 119:62
- 2. ஜெபிக்க வேண்டும் – சங் 5:3, மாற் 1;35
- 3. வேத வசனத்தை தியானிக்க வேண்டும் – சங் 119:148
- 4. கர்த்தரை தேட (ஜெபம், வேதவாசிப்பு, துதி) வேண்டும் – ஏசா 26:9, நீதி 8:17
- 5. தேவனுடைய ராஜயத்தை தேட வேண்டும் – மத் 6:33
- 6. பாடல் பாட வேண்டும் – சங் 59:16
- 7. கிருபை பெற வேண்டும் – சங் 90:14
- 8. சுவிசேஷம் சொல்ல வேண்டும் – பிரச 11:6
- 9. கர்த்தரை பணிந்து கொள்ள வேண்டும் – 1 சாமு 1:19
- 10. நாமும் நமது குடும்பமும் இயேசுவின் இரத்தத்தால் கழுவபட வேண்டும் (சுத்திகரிப்பு) – யோபு 1:5
16 . அதிசயமான தேவன்
- • 1. உமது கிரியைகள் அதிசயமானவைகள் – சங்கீதம் 139:14
- • 2.உமது ஆலோசனைகள் அருமையானவைகள் -சங் 139:17
- • 3.உமது அறிவு அளவிள்ளாதவைகள். சங்கீதம் 147:5
- • 4. உமது வழிகள் ஆராயப்படாதவைகள். ரோமர் 11:33
- • 5.உமது நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள். ரோமர் 11:33
- • 6. உமது நினைவுகள் உயர்ந்தவைகள். ஏசாயா 55:8,9
- • 7. உமது அன்பு மாறாதவைகள். யோவான் 13:1
யோவான் 3:16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.
17 . அநியாயம்
- 1. அவர்கள் அநியாயம் செய்வதில்லை, அவருடைய வழிகளில்
- நடக்கிறார்கள் சங 119 : 3
- 2. அநியாயம் செய்வது இராஜாக்களுக்கு அருவருப்பு. நீதி 16 : 12.
அநியாயம் இருக்கக்கூடாது.
- • 1. அளவில் அநியாயம் இருக்கக்கூடாது லேவி 19 : 35
- • 2. இருதயத்தில் அநியாயம் இருக்கக் கூடாது. ஏசா 32 : 6
- • 3. உதடுகளில் அநியாய ம் இருக்கக்கூடாது மல்கியா 2 : 6
- • 4. கைகளில் அநியாயம் இருக்கக்கூடாது எசே 18 : 8
- • 5. கூடாரத்தில் அநியாய ம் இருக்கக்கூடாது யோபு 11 : 14
- • 6. கூலி கொடுப்பதில் அநியாயம் இருக்கக் கூடாது. எரே 22 : 14
- • 7. தீர்ப்பு கூறுவதில் அநியாயம் இருக்கக் கூடாது. ஏசா 10 : 2
- • 8. நமது வருமானத்தில் அநியாயம் இருக்கக் கூடாது. நீதி 16 : 8
- • 9. நியாய விசாரனை யில், படியில் அநியா யம் இருக்கக்கூடாது லேவி 19 : 35
- • 10 பொருள் ஐசுவரியத் தை சம்பாதிப்பதில் அநியாயம் இருக்கக் கூடாது. எசே 22 : 27 எரே 17 : 11
- • 11 வியாபாரத்தில் அநிநியாம் இருக்கக் கூடாது. ஓசியா 12 : 7
18 . அநியாயம் செய்வதில்லை சங்கீதம் 119:2,3
- • அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள்.
- • அவர்கள் அநியாயம் செய்வதில்லை, அவருடைய வழிகளில் நடக்கிறார்கள்.
- 1.நீதிமான்கள் அநியாயம் செய்வதில்லை சங்கீதம் 125:3
- 2.தேவனுக்குப் பயப்படுகிறவர்கள் அநியாயம் செய்வதில்லை லேவியராகமம் 25:17
- 3.வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் அநியாயம் செய்வதில்லை சங்கீதம் 119:1,3
3. தேவனை தேடுகிறவர்கள் அநியாயம் செய்வதில்லை சங்கீதம் 119:2,3
19 . அபிஷேகத்தின் வல்லமை
சங்கீதம் 23:5 என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர், என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.
- 1.நம்முடைய வாழ்க்கையில் காணப்படும் நூகங்களை அபிஷேகத்தின் வல்லமை முறிக்கும். ஏசாயா 10:27
- 2. அபிஷேகம் நமக்கு போதிக்க வல்லமையுள்ளது. 1 யோவான் 2:27
- 3. அபிஷேகம் ஒரு மனுஷனை உயர்த்த வல்லமையுள்ளது. 1 சாமுவேல் 2:10
- 4. அபிஷேகத்தின் வல்லமை தேவ கிருபையை கொண்டுவரும் 2 சாமுவேல் 22:51
- 5. அபிஷேகம் தேவ வல்லமையினால் நிரப்பும். சங்கீதம் 23:5
20 . அரணுக்கு திரும்புங்கள்
நம்பிக்கையுடையசிறைகளே, அரணுக்குதிரும்புங்கள், இரட்டிப்
பான நன்மையைதருவேன் இன்றைக்கேதருவேன்.சகரியா 9 : 12
அரண் என்பது யார் ?
- • தேவனே நம் அரண்சங் 43 : 2
எப்படி திரும்ப வேண்டும் ?
- • 1. வழிகளை சோதித்து ஆராய்ந்து திரும்ப வேண்டும் புலம்பல் 3 : 40
- • 2. ஜாக்கிரதையாயிருந்து திரும்ப வேண்டும் வெளி 3 : 19
- • 3. கைக்கொண்டு திரும்ப வேண்டும் வெளி 3 : 3
- • 4. விழுந்த நிலையை நினைத்து திரும்ப வேண்டும் வெளி 2 : 5
எவற்றிலிருந்து திரும்ப வேண்டும் ?
- • அருவருப்புகளைவிட்டுதிரும்ப வேணாடும்எசே 14 : 6
எது அருவருப்பு ?
- • 1. பொய் உதடுகள் அருவருப்பு நீதி 12 : 22
- • 2. மாறுபடுள்ள இருதய ம் அருவருப்பு நீதி 11 : 20
- • 3. மேட்டிமை அருவருப்பு நீதி 16 : 5
- • 4. வெவ்வேறான நிறை கற்கள் அருவருப்பு நீதி 20 : 23
- • 5. மறுதலிக்கிறவர்கள் அருவருப்பு
- • தீத்து 1 : 16
- • பொல்லாத வழியைவிட்டு திரும்ப வேண்டும்எரே 18 : 11
எது பொல்லாதது ?
- • 1. கர்த்தரை விட்டுவிடு வது பொல்லாதது எரே 2 : 19
- • 2. கர்த்தருக்கு பயப்படாமல் இருப்பது பொல்லாதது எரே 2 : 19
- • 3. சத்துருக்கள் விழுவ தை பார்த்து மகிழ்வது பொல்லாதது நீதி 24 : 18
• இருதயங்களை கிழித்துதிரும்ப வேண்டும்யோவேல் 2 : 13
இருதயத்தை கிழித்தல் என்றால் என்ன ?
• கர்த்தருக்கு முன்பாக தாழ்த்துதல்
கர்த்தருக்கு முன்பாக தாழ்த்தினவர்கள் யார்
- • 1. யோசிய கர்த்தருக்கு முன்பாக தாழ்த்தினவன். 2 இராஜா 22 : 19
- • 2. நினிவே மக்கள் கர்த்தருக்கு முன்பாக தாழ்த்தினவர்கள் யோனா 3 : 4 , 10
- • 3. மானோச இராஜா கர்த்தருக்கு முன்பாக தாழ்த்தினவன் 2 நாளா 33 : 12 , 13
• காணிக்கை கொடுத்துதிரும்ப வேண்டும்மல்கியா 3 : 7 , 8
எப்படி கர்த்தருக்குகாணிக்கை கொடுக்கவேண்டும் ?
- • 1. மணபூர்வமாய் கொடுக்க வேண்டும் யாத் 25 : 2 1 நாளா 29 : 9 , 14, 17
- • 2. உத்தம இருதயத்தோ டு கொடுக்க வேண்டும். 1 நாளா 29 : 9
- • 3. உற்சாகத்தோடு காணிக்கை கொடுக்க வேண்டும் 2 கொரி 9 : 7
- • 4. இஷ்டமாக கொடுக்க வேண்டும்
- • யாத் 36 : 3