பிரசங்க குறிப்புகள் 211-220

211.கிறிஸ்துவுடனே கூட எபேசியர் 2:7

  • 1.கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்படுதல் வேண்டும் கலாத்தியர் 2:20
  • 2.கிறிஸ்துவுடனேகூட மரிக்க வேண்டும் ரோமர் 6:8
  • 3.கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட வேண்டும் ரோமர் 6:4
  • 4.கிறிஸ்துவுடனேகூட எழும்ப வேண்டும் எபேசியர் 2:7
  • 5.கிறிஸ்துவுடனேகூட உட்காரவும் வேண்டும் எபேசியர் 2:7
  • 6.கிறிஸ்துவுடனேகூட மகிமைப்பட வேண்டும் ரோமர் 8:17
  • 7.கிறிஸ்துவுடனேகூட நடக்க வேண்டும் வெளிப்படுத்தி 3:4

212.கிறிஸ்துவுடன் கொலோ 3 : 1.

கிறிஸ்துவுடன்…

  • 1. கிறிஸ்துவுடன் அடக்கம் பண்ணப் படுதல் ரோம 6 : 4 கொலோ 2 : 12
  • 2. கிறிஸ்துவுடன் ஆளுகை செய்தல் 2 தீமோ 2 : 12 வெளி 20 : 6
  • 3. கிறிஸ்துவுடன் இணைக்கப்படுதல் ரோம 6 : 5
  • 4. கிறிஸ்துவுடன் உட்காருதல் எபே 2 : 7 , வெளி 3 : 22
  • 5. கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருத்தல் யோவா 8 : 31
  • 6. கிறிஸ்துவுடன் ஊழியம் செய்தல் 1 கொரி 3 : 9 2 கொரி 6 : 1
  • 7. கிறிஸ்துவுடன் எழுந்திருத்தல் எபே 2 : 7 கொலோ 3 : 1
  • 8. கிறிஸ்துவுடன்கூட உயிர்த்தல் எபே 2 : 2
  • 9. கிறிஸ்துவுடன் சுதந்திரமடைதல் ரோம 8 : 7
  • 10 கிறிஸ்துவுடன் நடத்தல் வெளி 3 : 4
  • 11 கிறிஸ்துவுடன் நிந்தை சுமத்தல் எபி 13 : 13
  • 12 கிறிஸ்துவுடன் பாடுபடுதல் ரோமர் 8 : 17 , 18
  • 13 கிறிஸ்துவுடன் பிழைத்தல் ரோம 6 : 8 1 தெச 5 : 10
  • 14 கிறிஸ்துவுடன் மகிமைபடுதல் ரோம 8 : 17
  • 15 கிறிஸ்துவுடன் மரித்தல் ரோம 6 : 8 கொலோ 2 : 20 2 தீமோ 2 : 11
  • 16 கிறிஸ்துவுடன் மாதிரியை பின் பற்றுதல். 1 பேது 2 : 21
  • 17 கிறிஸ்துவின் வார்த்தைகளில் நிலைத்திருந்தால் யோவா 15 : 7
  • 18 கிறிஸ்துவுடனேகூட சிலுவையில் அறையப்படுதல் கலா 2 : 20

213.கீர்த்தி எப்போது உண்டாகும் சங்கீதம் 112:6

  • 1. தேவனின் வார்த்தைக்கு கீழ்ப்படியும்போது கீர்த்தி உண்டாகும் யோசுவா 6:27
  • 2. தன் ஜனத்திற்க்கு உண்மையுள்ளவனாய் இருக்கும் போது கீர்த்தி உண்டாகும் எஸ்தர் 9:4
  • 3. ஜெயம் பெறுகிறவர்கள் கீர்த்தி பெறுவார்கள் 2 சாமுவேல் 8:13

214.கீலேயாத்

  • 1 . கீலேயாத்- மலைப்பகுதி
  • _கீலேயாத் குன்றுகளாகவும் மலைகளாகவும் அமைந்துள்ள ஒரு உயர் மலைப்பகுதி._
  • _கீலேயாத் மலையில் கிடைக்கும் தைலம்தான்_
  • 2. கீலேயாத் தைலம் பிசின் தைலம்
  • _சீத்திம் மரத்திலிருந்து கிடைப்பதும் பிசின்தான். தைலம் பிசு பிசு ன்னு இருப்பதால் பிசின் என்ற சொல். மருத்துவ குணம் வேறு வேறு._
  • 3. கீலேயாத் என்ற பெயர் மனுஷனுக்கும் உள்ளது. யெப்தாவின் தகப்பன்.
  • _நியாயாதிபதிகள் 11: 11_
  • _கீலேயாத் கோத்திரத்தைச் சேர்ந்தவர் யெப்தா, அவர் சிறந்த வீரன். ஆனால் யெப்தா ஒரு வேசியின் மகன். அவர் தந்தை கிலேயாத் என்பவர்._
  • கீலேயாத்தின் தைலம் குணமாக்கும் தைலம்
  • _எகிப்தை நோக்கி இஸ்மயேல் வியாபாரிகள் கூட்டமாகப் பயணிக்கிறார்கள். கீலேயாத்திலிருந்து அவர்கள் புறப்பட்டு வந்திருக்கிறார்கள்; அவர்களின் ஒட்டகங்கள் பிசின் தைலத்தையும், மற்ற பொருள்களையும் சுமந்து வருகின்றன. இந்த வியாபாரிகளிடம்தான் யோசேப்பின் அண்ணன்மார்கள் அவரை விற்றுவிடுகிறார்கள்._
  • _இச்சம்பவம் பைபிளிலுள்ள ஆதியாகமப் புத்தகத்தை வாசித்தவர்களுக்கு நன்கு பரிச்சயம்._
  • _(ஆதியாகமம் 37:25) மருத்துவ குணம் கொண்ட கீலேயாத்தின் பிசின் தைலத்திற்கு மத்தியக் கிழக்குப் பகுதிகளில் ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது என்பதை இதிலிருந்து தெரிந்துகொள்கிறோம்._
  • _கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த எரேமியா தீர்க்கதரிசி வருத்தத்தோடு இவ்வாறு கேட்டார்: “கீலேயாத்திலே பிசின் தைலம் இல்லையோ?”_ _(எரேமியா 8:22)_
  • _*எரேமியா இப்படிக் கேட்டதற்குக் காரணம் என்ன?
  • சரி, இந்தப் பிசின் தைலம் எதிலிருந்து கிடைக்கிறது?
  • நிவாரணமளிக்கும் ‘பிசின் தைலம்’ இன்றும் கிடைக்கிறதா?*
  • பைபிள் காலங்களில் பிசின் தைலம்
  • _இந்தப் பிசின் தைலம் நறுமணம் உள்ளதாகவும், எண்ணெய்ப் பசை உள்ளதாகவும் இருந்தது;_
  • _இது பலவகை தாவரங்கள் மற்றும் புதர்ச் செடிகளிலிருந்து கிடைத்தது. தூபப் பொருள்களையும் வாசனைப் பொருள்களையும் தயாரிக்க இந்தத் தைலம் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டது; பண்டைய கால மத்தியக் கிழக்கு நாடுகளில் இது ஓர் ஆடம்பரப் பொருளாக இருந்தது. இஸ்ரயேலர்கள் எகிப்திலிருந்து வந்த சில காலத்திற்குப் பிறகு ஆசரிப்புக் கூடாரத்தைக் கட்டினார்கள்; அங்கே பயன்படுத்தப்பட்ட அபிஷேகத் தைலத்திலும் தூபப் பொருள்களிலும் இந்தத் தைலம் சேர்க்கப்பட்டது._
  • _(யாத்திராகமம் 25:6; 35:8,) சேபா நாட்டு ராணி சாலொமோன் ராஜாவுக்குக் கொண்டு வந்த ஏராளமான பரிசுகளில் இந்தத் தைலமும் இருந்தது. (1 இராஜாக்கள் 10:2, 10, )_
  • _எஸ்தர், பெர்சிய ராஜா அகாஸ்வேருவின் முன்பு நிறுத்தப்படுவதற்கு முன்னால், “ஆறுமாதம் . . . வாசனைத் தைலங்கள், நறுமணப் பொருள்கள்” ஆகியவற்றால் அழகுபடுத்தப்பட்டாள்.—எஸ்தர் 1:1; 2:12_
  • _பிசின் தைலம் மத்தியக் கிழக்கிலுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து வந்தது; கீலேயாத்தின் பிசின் தைலமோ வாக்குபண்ணப்பட்ட தேசத்திலேயே கிடைத்தது. ஆம், யோர்தான் நதியின் கிழக்குப் பகுதியில்தான் கீலேயாத் இருந்தது. இஸ்ரயேல் மக்களின் மூதாதையான யாக்கோபு பிசின் தைலத்தை, “இந்தத் தேசத்தின் உச்சிதமான வஸ்து” என்று சொன்னார். அதை எகிப்தின் அதிபதிக்குப் பரிசாகக் கொடுத்தனுப்பினார்._ _(ஆதியாகமம் 43:11) யூதாவும் இஸ்ரயேல் தேசமும் தீருவுக்கு ஏற்றுமதி செய்த பொருள்களில் அந்தத் தைலமும் இருந்ததாக எசேக்கியேல் தீர்க்கதரிசி குறிப்பிட்டார்._
  • _(எசேக்கியேல் 27:17)_
  • _இந்தப் பிசின் தைலம் ,அதன் மருத்துவ குணங்களுக்குப் பேர்போனது. இந்தத் தைலத்திற்குக் குணப்படுத்தவும் புத்துணர்வு அளிக்கவும் ,சக்தி இருந்ததெனப் பூர்வ இலக்கியப் புத்தகங்கள் அடிக்கடி குறிப்பிடுகின்றன;_ _முக்கியமாய், காயத்தை ஆற்றும் சக்தி அதற்கு இருந்ததாக அவை குறிப்பிடுகின்றன._
  • நோய்வாய்ப்பட்ட தேசத்திற்கு மருந்து
  • _“கீலேயாத்திலே பிசின் தைலம் இல்லையோ” என எரேமியா ஏன் கேட்டார்? இதைத் தெரிந்துகொள்ள அன்றைய இஸ்ரயேல் தேசத்தாரின் நிலைமையைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவர்களுடைய மோசமான ஆவிக்குரிய நிலைமையைப் பற்றி ஏசாயா தீர்க்கதரிசி முன்பு இவ்வாறு வர்ணித்திருந்தார்: “உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை உங்கள் உடலில் நலமே இல்லை; ஆனால், காயங்கள், கன்றிப்போன வடுக்கள், சீழ்வடியும் புண்களே நிறைந்துள்ளன; அங்கே சீழ் பிதுக்கப்படவில்லை, கட்டு போடப்படவில்லை.”_
  • _(ஏசாயா 1:6)_

215.கீழ்க்கண்ட உலக காரியங்கள் தேவ பிள்ளைகளிடம் இருக்க கூடாது

1) உலக அன்பு – 1 யோ 2:15
2) உலக இச்சை – 1 யோ 2:17
3) உலக வேஷம் (உலகத்தாரை போல தாடி வளர்த்தல், முடி வெட்டுதல், உடை உடுத்துதல், etc.,) – 1 கொரி 7:31
4) உலக கவலை – மத் 13:22
5) உலகத்தின் ஆவி – 1 கொரி 2:12
6) உலக ஞானம் – 1 கொரி 1:20
7) உலக பழக்க வழக்கம் (நாள் பார்த்தல், நேரம் பார்த்தல் etc., ) – கொலோ 2:20
8) உலக சிநேகம் – யாக் 4:4
9) உலக கறை – யாக் 1:27
10) உலக அசுத்தம் – 2 பேது 2:20
11) உலக ஆசை – 2 தீமோ 4:10

216.கீழ்படிந்தார்கள் – யார் யாருக்கு

1) ஆபிரகாமுக்கு கீழ்படிந்த சாராள் – 1 பேது 3:5,6
2) பெற்றோர்க்கு கீழ்படிந்த யாக்கோபு – ஆதி 28:7-9
3) தேவனுக்கு கீழ்படிந்த ஆபிரகாம் – ஆதி 22:18
4) பெற்றோர்க்கு கீழ்படிந்த இயேசு – லூக் 2:51
5) குருவுக்கு கீழ்படிந்த சீஷன் – லூக் 5:5
6) எஜமானுக்கு கீழ்படிந்த பணியாளன் – யோ 2:5-7
7) ராஜாவுக்கு கீழ்படிந்த இஸ்ரவேலர் – 1 நாளா 29:23

217.கீழ்படிதலின் ஆசிர்வாதம்

1) நமது சந்ததியை ஆசிர்வதிக்கிறார் – ஆதி 26:4,5
2) நமது சந்ததியை பெருக பண்ணுகிறார் ஆதி 26:4,5
3) நமது சந்ததிக்கு தேசத்தை கொடுப்பார் – ஆதி 26:4,5
4) கர்த்தர் நம்மை கைவிடமாட்டார் – உபா 4:30,31
5) சாப்பிட்டு திருப்தி அடைவோம் – உபா 11:13,14,15
6) நீதிமானாகுதல் – ரோ 5:19
7) ஆசிர்வாதம் வரும் – உபா 11:27
8) நன்மை உண்டாகும் – ஏரே 42:6
9) பரிசுத்த ஆவி கிடைக்கும் – அப்போ 5:32
10) உயர்வு – பிலி 2:8,9
11) பிசாசிடம் இருந்து விடுதலை – யாக் 4:7
12) நித்திய இரட்சிப்பு – எபி 5:9

218.குடும்பத்தில் மனைவியின் பங்கு

Companion– தோழியானவள் மல்கியா 2:14
Crown – கிரீடமானவள் நீதிமொழிகள் 12:4
Good – நன்மையானவள் நீதிமொழிகள் 18:22
Weaker – பெலவீனமானவள் 1 பேதுரு 3:7
Submissive – கீழ்ப்படிகிறவள் 1 பேதுரு 3:5,6
Reverent – பயபக்தியானவள் எபேசியர் 5:33
Loving – அன்புள்ளவள் தீத்து 2:4
Trust worthy – நம்பத்தகுந்தவள் நீதிமொழிகள் 31:11

219.குணசாலியான ஸ்திரீகள் கிலும் உயர்ந்தது நீதி 31 : 10

1. சாராள் கீழ்படிதல் உள்ள ஸ்திரீ 1 பேது 3 : 6
2. லேயாள் கர்த்தரை துதிக்கிற ஸ்திரீ ஆதி 29 : 35
3. ரெபேக்காள் மற்றவர் களை ஆறுதல் படுத் தும் ஸ்திரீ ஆதி 24 : 67
4. மிரியாம் கர்த்தரை புகழ்ந்து பாடிய ஸ்திரீ நியாயபதி 5 : 1
5. தெபொராள் ராணு வத்துக்கு போன ஸ்திரீ. நியாயா 4 : 10
6. யாகேல் ஞானமுள்ள ஸ்திரீ. நியா 4 : 18 – 21
7. நகோமி மற்றவர் களுக்கு செளகியத் தை தேடிதந்த ஸ்திரீ ரூத் 3 : 1
8. ரூத் குணசாலியான ஸ்திரீ. ரூத் 3 : 10 , 11
9. அபிகாயில் பணி விடை ஆவியுள்ள ஸ்திரீ. 1 சாமு 25 : 41
10 இயேசு கிறிஸ்துவை பெற்ற மரியாள் அடிமை குணமுள்ள ஸ்திரீ லூக் 1 : 38
11 பெத்தேனியாவில் வாழ்ந்த மரியாள் இயேசுவின் பாதத் தை நேசித்த ஸ்திரீ லூக்கா 10 : 39

220.குற்றமற்ற வாழ்வு 1 தெசலோனிக்கேயர் 5:23

1.கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்துக் கொள்ள வேண்டும் லூக்கா 1:5,6
2.தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியை உடையவனாயிருக்க வேண்டும் அப்போஸ்தலர் 24:16
3.அன்பிலே பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்போம் எபேசியர் 1:4,5,6
4. எல்லாவற்றிலும் , பொறுமையிலும் , காத்திருப்பதிலும் குற்றமற்றவர்களாய் இருங்கள் பிலிப்பியர் 2:14,15,16
5. தேவனுக்கு முன்பாகவும் ராஜாவின் முன்பாகவும் குற்றமற்றவனாய் இருங்கள் தானியேல் 6:22

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *