231.சங்கீதம், Chapter 53
நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.
நன்மைசெய்ய மறவாதிருங்கள். (எபிரேயா் 13:6)
நன்மைசெய்வதிலே சாேர்ந்துபாேவாதிருங்கள். (கலாத்தியா் 6:9)
நன்மைசெய்யப் படியுங்கள்; (ஏசாயா 1:17)
நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே. (நீதிமொழிகள் 3:27)
உங்களுக்கு நன்மைசெய்கிறவர்களுக்கே நீங்கள் நன்மைசெய்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் அப்படிச் செய்கிறார்களே. (லு}க்கா 6:33)
உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்யுங்கள். (லு}க்கா 6:27)
உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்ய நாடுங்கள். (1 தெசலோனிக்கேயா 5:15)
எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும். (ரோமா 2:10)
232.சத்தத்திற்கு செவிகொடு உபாகமம் 28 : 1
1. தோட்டத்தில் கர்த்தருடைய சத்தம்
ஆதியாகமம் 3 : 8 2. வாசற்படியிலே ஒரு சத்தம்
வெளி 3 : 20 இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்
பண்ணுவான்.
3. வீட்டில் தேவதூதன் சத்தம்
லூக்கா 1 : 28 அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான்.
4. முட்செடியின் நடுவிலிருந்து சத்தம்
யாத்திராகமம் 3 : 4 அவன் பார்க்கும்படி கிட்ட வருகிறதைக் கர்த்தர் கண்டார். முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி: மோசே, மோசே என்று கூப்பிட்டார். அவன்: இதோ, அடியேன் என்றான்.
5. ஆலயத்தில் தேவனுடைய சத்தம்
I சாமுவேல் 3 : 3,4 தேவனுடைய பெட்டி இருக்கிற கர்த்தருடைய ஆலயத்தில் தேவனுடைய விளக்கு அணைந்துபோகுமுன்னே சாமுவேலும் படுத்துக்கொண்
டிருந்தான். அப்பொழுது கர்த்தர், சாமுவேலைக் கூப்பிட்டார். அதற்கு அவன்: இதோ, இருக்கிறேன் என்று சொல்லி,
6. கெபிக்குள் கர்த்தருடைய சத்தம்
I இராஜாக்கள் 19 : 9 அங்கே அவன் ஒரு கெபிக்குள் போய்த் தங்கினான்; இதோ,
கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி, அவர்: எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம் என்றார்.
7. சிங்காசனத்திலிருந்து ஆண்டவருடைய சத்தம்
ஏசாயா 6 : 8 பின்பு: யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றேன்.
233.சத்தத்திற்கு செவிகொடு உபாகமம் 28 : 1
தோட்டத்தில் கர்த்தருடைய சத்தம் ஆதியாகமம் 3 : 8
வாசற்படியிலே ஒரு சத்தம் வெளி 3 : 20
வீட்டில் தேவதூதன் சத்தம் லூக்கா 1 : 28
முட்செடியின் நடுவிலிருந்து சத்தம் யாத்திராகமம் 3 : 4
ஆலயத்தில் தேவனுடைய சத்தம் I சாமுவேல் 3 : 3,4
கெபிக்குள் கர்த்தருடைய சத்தம் I இராஜாக்கள் 19 : 9
சிங்காசனத்திலிருந்து ஆண்டவருடைய சத்தம் ஏசாயா 6 : 8
234.’சந்தோஷமாயிருங்கள்’ பிலிப்பியர் 4:4 ‘2கொரிந்தியர் 13:11; 1தெசலோனிக்கேயர் 5:6’
‘1.துக்கத்தில் சந்தோஷம்’ யோவான் 16:20(20-24) ‘எரேமியா 31:13’
‘2.உபத்திவத்தில் சந்தோஷம்’ 2 கொரிந்தியர் 7:4(4-16) ‘1தெசலோனிக்கேயர் 1:6; மத்தேயு 5:11,12’
‘3.பலவீனத்தில் சந்தோஷம்’ 2 கொரிந்தியர் 12:9
‘4.சோதனையில் சந்தோஷம்’ யாக்கோபு 1:2-3.
‘5.நம்பிக்கையில் சந்தோஷம்’ ரோமர் 12:12 ‘1சாமுவேல் 2:1’ அன்னாள்
‘6.இல்லாமையில் சந்தோஷம்’ ஆபகூக் 3:17,18
‘யாருக்கு சந்தோஷம்’
தேடுகிறவர்களுக்கு ‘சங்கீதம் 5:11’
‘சங்கீதம் 40:16; 70:4’ அடைக்கலம் புகுவோருக்கு
‘சங்கீதம் 68:3’ நீதிமான்களுக்கு ‘
சங்கீதம் 69:32′ சாந்தகுணமுள்ளவருக்கு ‘
ஏசாயா 35:10; 51:3,11; 61:7; 65:13′ மீட்கப்பட்டவர்களுக்கு
. ‘எதிலே சந்தோஷம்’
‘லூக்கா 15:5-7’ மனந்திரும்புவதில்
‘1நாளாகமம் 29:9-17’ கொடுப்பதில்
‘சங்கீதம் 122:1’ ஆலயத்திற்கு செல்வதில்
235.சமீபாமாயிருக்கிறார் ஏசாயா 55:6
1.கூப்பிடுகிறவர்களுக்கு கர்த்தர் சமீபமாயிருக்கிறார், உதவி செய்கிறார். சங்கீதம் 145:18 மத்தேயு 14:30,31
2.நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருக்கிறார் சங்கீதம் 34:18
3. தொழுதுக் கொள்ளும் போது (ஆராதிக்கும்போதெல்லாம்)சமீபமாயிருக்கிறார். உபாகமம் 4:7
236.சம்பாதியுங்கள் லூக்கா 16 : 9
1. ஞானத்தை சம்பாதியுங்கள் நீதி 4 : 5 – 9 , 3 : 13 யோபு 28 : 28
2. ஆஸ்தியை சம்பாதியுங்கள ஆதி 12 : 5 , 31 : 18 உபா 8 : 17, 18 : 2 2 கொரி 12 : 14
3. பொக்கிஷத்தை சம்பாதியுங்கள் லூக் 12 : 33 , 34 அப் 2 : 44 , 45 எபி 13 : 16
4. சிநேகிதரை சம்பாதியுங்கள் லூக் 16 : 9, கலா 6 : 6, யாக் 2 : 14 — 26
237.” சர்வ வல்லவர் ” யோபு 42 : 2
1. உதவி செய்ய வல்லவர் எபி 2 : 18
2. கிருபையை பெருக செய்ய வல்லவர் 2 கொரி 9 : 8
3. வாக்குத்தத்தங்களை நிறைவேற்றவல்லவர் ரோமர் 4 : 21
4. இரட்சிக்க வல்லவர் எபி 7 : 25
5. தப்புவிக்க வல்லவர் தானி 3 : 17
6. நிலைநிறுத்த வல்லவர் ரோமர் 14 : 4
7. யுத்தத்தில் வல்லவர் யாத் 15 : 1 — 7
8. காத்துக்கொள்ள வல்லவர் 2 தீமோ 1 : 12
9. செயலிலே வல்லவர் எரே 32 : 19
10 ஸ்திரப்படுத்த வல்லவர் ரோமர் 16 : 26
238.சாத்தானின் ஆயுதங்கள்
1. மனிதன் மனதைக் குருடாக்குவது 2 கொரிந்தியர் 4 : 4 (ஏசாயா 14 :12-15)
2. அவன் கண்காணிக்கும் ஆயுதம் ஆதியாகமம் 3 : 15
3. பிசாசிற்கு தரிசனங்களை காட்டவும் முடியும். இதுவும் ஒரு ஆயுதம். மத்தேயு 4 : 8- 9
4. மாம்ச இச்சைகளை ஈர்க்க வைப்பதும் சாத்தானின் ஆயுதம் 6 பேதுரு 2 : 11
5. கசப்பான வேர்களை நமக்குள் ஊடுருவச் செய்வதும் சாத்தானின் ஆயுதம் எபிரெயர் 12 : 15-16
6. உலகப் பொருளின் மீது ஆசை உண்டாக்குவது, இதுவும் ஒரு ஆயுதம் 1 யோவான் 2 : 15-16
7. கீழேயுள்ள இவைகளே அவனுடைய கடைசி ஆயுதம் கலாத்தியர் 5 : 19- 21
239.நம்முடைய ஆயுதங்கள் என்ன? எபேசியர் 6: 11 – 13
என்ன சர்வ ஆயுதங்கள் என பார்ப்போம். எபேசியர் 6: 14 -18
1. சத்தியம் என்னும் கச்சையை
2. நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்;
3. விசுவாசமென்னும் கேடகம்
4. இரட்சிப்பு என்னும் தலைக்கவசம்
5. தேவவசனமாகிய ஆவியின் பட்டயம்..
6.இவை எல்லாவற்றிற்க்கும் மேல்,ஜெபத்தை எடுத்துக்கொள்ளுங்கள்….
240.சாந்தகுணமுள்ளவர்கள் மத்தேயு 5:5
1.சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார் சங்கீதம் 149:4
2.சாந்தகுணமுள்ளவர்கள் திருப்தியடைந்து துதிப்ப்பார்கள் , இருதயம் என்றென்றைக்கும் வாழும் சங்கீதம் 22:26
3.சாந்தகுணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தப்பட்டு போதிக்கப்படுவார்கள் சங்கீதம் 25:9
4.சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார் சங்கீதம் 147:6
5.சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து மனமகிழ்ச்சியாயிருப்பார்கள் சங்கீதம் 37:11