241.சாராள் மூலம் பெண்கள் கற்றுக் கொள்ள வேண்டிய காரியங்கள்
1) விசுவாசம் உள்ளவள் – எபி 11:11
2) கணவனுக்கு கீழ்படிந்தவள் – 1 பேது 3:6
3) கணவனை “ஆண்டவனே” என்று மரியாதையாக கூப்பிட்டாள் – 1 பேது 3:6
4) கணவனை கனப்படுத்தினாள் – 1 பேது 3:6
5) தேவனால் பெயர் மாற்றப்பட்டவள் – ஆதி 17:15
6) பார்வைக்கு மிகுந்த அழுகுள்ளவள் – ஆதி 12:11,14
7) மற்றவர்களை உபசரித்தவள் – ஆதி 18:2-8
8) கடின உழைப்பாளி (90 வயதில் 3 படி மாவு பிசைந்து அப்பம் சுட்டாள்) – ஆதி 18:6
9) 127 வருஷம் உயிரோடிருந்தாள் – ஆதி 23:1
242. சார்ந்துகொள் ஏசாயா 10 : 20 , 26 : 13
1. கர்த்தரை சார்ந்து கொண்டால் இருள் வெளிச்சமாகும் ஏசா 50 : 10 , சங் 23 : 4 சங் 91 : 6 , 18 : 28
2. கர்த்தரை சார்ந்து கொண்டால் சத்துரு வை மேற்கொள்ளலாம். 2 நாளாக 13 : 18 2 நாளாக 13 : 1 — 17
3. கர்த்தரை சார்ந்து கொண்டால் வனாந்தரத்தை கடக்கலாம். உன் 8 : 5 , உபா 8 : 15எண் 20 : 4 , 5
4. கர்த்தரை சார்ந்து கொண்டால் கர்த்தரே யுத்தம்பண்ணுவார் 2 நாளாக 14 : 9 — 15 2 நாளாக 16 : 7 — 9..
243.சிங்கம் மூலம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஆவிக்குரிய சத்தியங்கள்
1) சிங்கம் கெர்ச்சிக்கிற ஒரு மிருகம் (வெளி 10-3)
(துதி) (சங் 132-16). (சங் 118-15). (2 நாளா 20:19)
2) பின்னடையாது (நீதி 30-30)
எபிரேயர் 10:38. , (லூக் 8:13)
3) தைரியமான மிருகம் (நீதி 28-1)
(1 யோ 3-21). (எபேசி 3-12)
4) பலமானது (நியாதி 14-18)
சங் 84-7
5) அதனுடைய கெபி ஆகாரத்தினால் நிரம்பி இருக்கும் (நாகூம் 2-12)
(உபா 8-3). (யோபு 23-12)
6) சிங்கம் தன் குட்டிகளுக்கு ஆகார குறைவு இல்லாதபடி பார்த்துக் கொள்ளும் மத் 7-11)
7) பயப்படாத (மாற்கு 4-40).
8) மறைவிடத்தில் தங்கும் (புலம்பல் 3-10)
9) காட்டுக்கு ராஜா
(வெளி 1-6)
244.சிம்சோன் இழந்துப் போன ஆசீர்வாதங்கள்
1.தன் பிரதிஷ்டையை இழந்தான். நியா.16:19-21.
2.பரிசுத்தத்தை இழந்தான். 16:1.
3.பலம் இழந்தான்.16:19.
4.கண்ணை இழந்தான்.16:21.
5.கர்த்தரை இழந்தான்.16:20.
6.தேவ நடத்துதல் இழந்தான்.16:26.
7.நியாதிபதியின் தன்மை இழந்தான். 16:21
8.தன் மேன்மையை இழந்தான். 16:25.
9.தன் ஊழியத்தை இழந்தான்.16:30,31.
245.சிலுவை
1) சிலுவையை அனுதினமும் எடுக்க வேண்டும் – லூக் 9:23
2) சிலுவையை சுமக்க வேண்டும் – லூக் 14:27
3) சிலுவையை பற்றிய உபதேசம் தேவை – 1 கொரி 1:18
4) சிலுவையை (பாடுகளை) சகிக்க வேண்டும் – எபி 12:2
5) சிலுவையை குறித்தே மேன்மை பாராட்ட வேண்டும் – கலா 6:14
6) சிலுவை எப்போதும் முன்னால் இருக்க வேண்டும் (இயேசு பட்ட பாடுகள் நான் படவில்லையே) – கலா 3:1
7) சிலுவையை நினைக்க வேண்டும் – (எபி 12:3)
8) சிலுவையில் அறையப்படுதல் வேண்டும் – கலா 6:14
246.சிலுவை என்ன போதிக்கிறது
1) பிழைக்கிறவர்கள் தங்களுக்கென்று பிழைக்க கூடாது – 2 கொரி 5:15
2) பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி நமது அவயங்களை ஒப்புக் கொடுக்க வேண்டும் – ரோ 6:16,19
3) கிறிஸ்துவில் இருந்த சிந்தையே நம்மில் இருக்க வேண்டும் – பிலி 2:5-8
4) ஒழுங்காக நடக்க வேண்டும் – பிலி 3:16-18
5) அன்பில் நடக்க வேண்டும் – எபேசி 5:2
6) கீழ்படிதலை கற்றுக் கொள்ள வேண்டும் – எபி 5:8-10
7) வருகையை எதிர்பார்த்து ஜீவிக்க வேண்டும் – தீத்து 2:13,14
247.சிலுவை தரிசனத்தை கண்ட சிலரின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாறுதல்கள்
1) கள்ளன் (லூக் 23:41,43) →தனது தவறுகளை கண்டு பிடித்தான், (சங் 19:12)
2) 100 க்கு அதிபதி (லூக் 23:47)→ இயேசுவின் கிரியைகளை (சிலுவையில்) கண்டு 100 க்கு அதிபதி தேவனை மகிமை படுத்தினான். (லூக் 23:47);
3) யூதாஸ் (மத் 27:1-5)→ நான்று கொண்டு செத்தான் (தூக்கு போட்டு செத்தான்). 2 பேது 2:20
4) பேதுரு (மத் 26:70,71,75)→ உள்ளான மனந்திரும்புதல் பேதுருவிடம் காணப்பட்டது. 2 கொரி 7:9,10
5) சீமோன் (லூக் 23:26)→ சீமோன் சிலுவையை சுமந்தான். மத் 27:32 –
228.சிலுவை நமது சரீரத்தில் எங்கெல்லாம் இருக்க வேண்டும்
1) முதுகில் சிலுவை (பாடுகள்) – யோ 19:17
2) கண்கள் முன்னால் சிலுவை (ஆறுதல்) – கலா 3:1, எபி 12:3
3) வாயில் சிலுவை (உலக காரியங்களை மேன்மைபாராட்டாமல் இருக்க) – கலா 6:14
4) சிந்தையில் சிலுவை (தாழ்மையுடன் ஜிவிக்க) – பிலி 2:5-8, எபி 12:3
249.சிலுவையில் அடுக்குத் தொடர்.. Power-Series on the cross
1. மத்தேயு 26:22 நானோ, நானோ?
2. லூக்கா 23:21
சிலுவையில் அறையும்.. சிலுவையில் அறையும்..
3. யோவான் 19:22 எழுதினது எழுதினதே
4. யோவான் 19:15 அகற்றும் அகற்றும்
5. மத்தேயு 27:46 ஏலி! ஏலி!.
6. மத்தேயு 27:46 என் தேவனே! என் தேவனே!..
7. மாற்கு 15:34 எலோயீ! எலோயீ!
8. மாற்கு 15:29 ஆ!ஆ!.
9. யோவான் 12:24 மெய்யாகவே மெய்யாகவே
250.சிலுவையில் அனுதினமும் நாம் செய்ய வேண்டியவை
1) சிலுவையை விரும்ப வேண்டும் – லூக் 9:23
2) சிலுவையை எடுக்க வேண்டும் – லூக் 9:23
3) சிலுவையை சுமக்க வேண்டும் – லூக் 14:27
4) சிலுவையை எடுத்து பின்பற்ற வேண்டும் – லூக் 9:23
5) தன்னைத்தான் வெறுக்க வேண்டும் – லூக் 14:27
6) சிலுவையில் அறையப்பட வேண்டும் – கலா 6:14
7) சிலுவையில் மரிக்க வேண்டும் – 2 தீமோ 2:11
8) சிலுவையை தரிசிக்க வேண்டும் – கலா 3:1
9) சிலுவையை குறித்து மேன்மை பாராட்ட வேண்டும் – கலா 6:14
10) பிழைத்திருக்க வேண்டும் – கலா 2:20
11) சிலுவையை நினைக்க வேண்டும் – எபி 12:3