281.தாமதம் செய்ய கூடாது – எதற்கு
1) வசனத்தை கைக்கொள்ள – சங் 119-60
2) ஞானஸ்தானம் (முழுக்கு ஞானஸ்தானம்) எடுக்க – அப் 22-16
3) பொருத்தனையை செலுத்த – உபா 23-21
4) காணிக்கை செலுத்த – யாத் 22-29
5) ஆலயத்தை பழுது பார்க்க (நம்மை சுத்திகரிக்க) தாமதம் செய்ய கூடாது – 2 நாள 24-5
282.தாமதிக்காதே பிரசங்கி 5:4
1. ஞானஸ்நானம் எடுக்க தாமதிக்காதே அப்போஸ்தலர் 22:16
2. பொருத்தனைகளை நிறைவேற்ற தாமதிக்காதே உபாகமம் 23:21
3. கற்பனைகளை கைக்கொள்ள தாமதிக்காதே சங்கீதம் 119:60
4. தேவனுடைய ஆலயத்தை பழுதுப் பார்க்க தாமதிக்காதே
(கட்டிடத்தையும் , நம்முடைய சரீரத்தையும்) 2 நாளாகமம் 24:5
5. இயேசு கிறிஸ்து தேவன் என்று பிரசங்கிக்க தாமதிக்காதே அப்போஸ்தலர் 9:20
283.தாயின் கருவினிலே…
1.தாயின் கருவில் அறிந்தவர் எரேமியா 1:5
2.தாயின் கருவில் அழைத்தவர் ஏசாயா 49:1 கலாத்தியர் 1:15
3.தாயின் கருவில் ஆதரித்தவர் சங்கீதம் 71:6
4.தாயின் கருவில் உருவாக்கியவர் ஏசாயா 44:24,2
5.தாயின் கருவில் எடுத்தவர் சங்கீதம் 22:9,10
6.தாயின் கருவில் ஏந்தியவர் ஏசாயா 46:3
7.தாயின் கருவில் காத்தவர் சங்கீதம் 139:13
284.தாயின் கருவும் கர்த்தரும்
1) தாயின் கருவில் அறிந்தவர் – ஏரே 1:5
2) தாயின் கருவில் அழைத்தவர் – ஏசா 49:1
3) தாயின் கருவில் ஆதரித்தவர் – சங் 71:6
4) தாயின் கருவில் உருவாக்கியவர் – ஏசா 44:2,24
5) தாயின் கருவிலிருந்து எடுத்தவர் – சங் 22:9,10
6) தாயின் கருவில் ஏந்தியவர் – ஏசா 46:3
7) தாயின் கருவில் காத்தவர் – சங் 139:13
285.தாயை கனம்பண்ணு நீதிமொழிகள் 31 : 28
1.தாய்க்கு பயந்து நடக்க வேண்டும் லேவியராகமம் 19:3
2. தாயின் போதகத்தைத் தள்ளாதே. நீதிமொழிகள் 1 : 8
3.பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள் எபேசியர் 6 : 1
4.தாயை கனம்பண்ணு எபேசியர் 6 : 2
5.தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டைபண்ணாதே நீதிமொழிகள் 23:22
6.தாயை நோக்கி: ஏன் பெற்றாய் என்று சொல்லாதே. ஏசாயா 45 : 10
7.தாயை அலட்சியம்பண்ணணாதே நீதிமொழிகள் 15 : 20 ஏசாயா 66:13
286.தாவீதின் பாவ அறிக்கை
1) என்னை கழுவும் – சங் 51:7
2) வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பாரும் – சங் 139:24
3) என்னை ஆராய்ந்து என் இருதயத்தை அறிந்து கொள்ளும் – சங் 139:23
4) என்னை சோதித்து என் சிந்தனைகளை அறிந்து கொள்ளும் – சங் 139:23
5) என்னை பரிட்சித்து சோதித்துப் பாரும் – சங் 26:2
6) உள்ளந்திரியங்களையும் இருதயத்தையும் புடமிட்டு பாரும் – சங் 26:2
7) மறைவான குற்றங்களுக்கு நீங்கலாக்கும் – சங் 19:12
287.தாவீதும் கண்ணீரும்
1) இரா முழுவதும் என் கண்ணீரால் என் படுக்கையை மிகவும் ஈரமாக்கி என் கட்டிலை நனைக்கிறேன் – சங் 6:6
2) என் கண்ணீருக்கு மவுனமாயிராதேயும் – சங் 39:12
3) இரவும் பகலும் என் கண்ணீரே எனக்கு உணவாயிற்று – சங் 42:3
4) என் கண்ணீரை உமது துருத்தியில் வையும் – சங் 56:8
5) என் கண்ணீர் உம்முடைய கணக்கில் இருக்கிறது – சங் 56:8
6) என் பானங்களை கண்ணீரோடு கலக்கிறேன் – சங் 102:10
7) என் கண்ணை கண்ணீருக்கு தப்புவித்தார் – சங் 116:8
288.தானியேலின் ஜெபம் 6:10, 2:17-19
1) தினமும் 3 வேளை ஜெபம் – தானி 6:10
2) முழங்கால்படியிட்டு ஜெபம் – தானி 6:10
3) வழக்கமான ஜெபம் – தானி 6:10
4) மேல் அறையில் ஜெபம் – தானி 6:10
5) பலகனி திறந்திருக்க ஜெபம் – தானி 6:10
6) ஸ்தோத்திரத்துடன் ஜெபம் – தானி 6:10
7) விசுவாசமுள்ள ஜெபம் – தானி 6:23
8) வீட்டுக்குள் ஜெபம் – தானி 6:10
9) முன் செய்து வந்தபடியே ஜெபம் – தானி 6:10
10) தடை வந்த பிறகும் ஜெபம் – தானி 6:10
289.தானியேல் தானி 5 : 11.
தானியேல் எப்படி இருந்தார் ?
1. தானியேல் தீர்மானம் உடையவராக தானி 1 : 8
2. தானியேல் ஜெபிப்பவராக இருந்தார் தானி 2 : 17 , 6 : 13
3. தானியேல் இடைவிடாமல் ஆராதிப்பவராக இருந்தார் தானி 6 : 18
4. தானியேல் தேவனுக்கு பிரியமானவராக இருந்தார் தானி 9 : 23
5. தானியேல் உபவாசம் செய்பவராக இருந்தார். தானி 9 : 3 .
6. தானியேல் உண்மையுள்ளவராக இருந்தார். தானி 6 : 4.
தானியேல் என்ன
பாக்கியம் பெற்றார் ?
1. தானியேல் உயர்வை பெற்றார் தானி 6 : 23
2. தானியேல் தயவை பெற்றார். தானி 1 : 9
3. தானியேல் பெரியவனாக்கப்பட்டார் தானி 2 : 48
4. தானியேல் சிங்கத்தின் வாய்க்கு காக்கப்பட்டார். தானி 6 : 22
5. தானியேல் ஜெயம் பெற்றார் தானி 6 : 22
6. தானியேல் தரிசனங்களைப் பெற்றார். தானி 7 : 1
290.தானியேல் வாழ்க்கையில் காணப்பட சில நல்ல குணங்கள்
1) தீர்மானம் பண்ணும் பழக்கம் இருந்தது (தினசரி 5 அதிகாரம், 1 மணி நேரம் ஜெபிப்பேன் என்று தீர்மானம் செய்து அதன்படி செய்ய வேண்டும்) – தானி 1:8
3) நண்பர்களோடு சேர்ந்து ஜெபிக்கும் பழக்கம் உள்ளவன் – தானி 2:17
4) ஸ்தோத்திரம் செய்யும் பழக்கம் இருந்தது – 2:19, 6:10
5) ஆகாரத்தினால் தன்னை தீட்டுப்படுத்தவில்லை (கறைபடுத்தவில்லை) – தானி 1:8
6) முழங்கால் படியிட்டு ஜெபிக்கும் பழக்கம் இருந்தது (பெரிய தலைவன் ஆனால் முழங்கால்படியிட்டான்) – தானி 6:10
7) கர்த்தருக்கு முன்பாக குற்றமற்றவனாக காணப்பட்டான் – தானி 6:22
8) மற்றவர்கள் முன்பாக சுத்த மனசாட்சி உள்ளவனாக இருந்தான் – 6:22
9) இடைவிடாமல் ஆராதனை செய்தான் – தானி 6:10
10) கர்த்தரை தேடினான் – 9:3
11) உபவாசம் இருக்கும் பழக்கம் இருந்தது – 9:3
12) ஜெப ஜிவியம் காணபட்டது – 6:10
13) உண்மையுள்ளவன் – 6:4
14) பாடுகளில் அன்பின் ஆண்டவரை அண்டிக் கொண்டான் (தானியேல் தன் உயிர் காக்கப்பட ஒரு வேளை ராஜாவாகிய தரியுவை அண்டி தன் ஜீவனுக்காக மன்றாடியிருக்கலாம் (or) தனக்கு விரோதமாக எழும்பின 120 தேசாதிபதிகளையும், 3 பிரதானிகளையும் அண்டிக் கொண்டு தன் பிராணன் காக்கப்பட மன்றாடியிருக்கலாம். ஆனால் தானியேலோ தன் அன்பின் ஆண்டவரையே அண்டிக் கொண்டார். வெகு பத்திரமாக பாதுகாக்கப்பட்டார்)
15) முணுமுனுப்பு காணப்படவில்லை ( குழியில் போடும் வாய் திறக்கவில்லை)
16) ராஜாவை பற்றி மற்றவர்கள் இடம் குறை கூறவில்லை (ஏன் ராஜா எனக்கு இப்படி செய்கிறார்)
17) கர்த்தர் தன்னை காப்பார் என்ற விசுவாசம் இருந்தது – தானி 6:23