31 . அன்பின் ஆசீர்வாதங்கள்
தேவனின் அன்பு கூறுகிறவனெவனோ அவன் தேவனால் அறியப்பட்டிருக்கிறான் 1 கொரி 8 : 3.
1. அன்புகூர்ந்தால் கிருபை கிடைக்கும் எபே 6 : 24
2. அன்புகூர்ந்தால் நன்மைக்கு ஏதுவாக நடக்கும் ரோமர் 8 : 28
3. அன்புகூர்ந்தால் ஆசீர்வாதம் பெற்றுக் கொள்ள முடியும் உபாக 30 : 16
4. அன்புகூர்ந்தால் பாதுகாப்பை பெறுவோம் சங் 145 : 20
5. அன்புகூர்ந்தால் பிரகாசம் அடைவோம் நியாயா 5 : 31
6. அன்புகூர்ந்தால் ஊழியம் செய்யும் பாக்கியம் பெறுவோம் யோவா 21 : 15
7. அன்புகூர்ந்தால் ராஜ்ஜியத்தை பெற்று கொள்வோம் யாக் 2 : 5 , 1 : 12
32. அன்பின் வகைகள்
தாங்கும் அன்பு – எபேசி 4:2
ஊழியம் செய்யும் அன்பு – கலா 5:13
ஜீவனை கொடுக்கும் அன்பு – ரோ 16:4
நிலை கொண்டிருக்கும் அன்பு – 1 யோ 2:10
மாறாத அன்பு – யோ 13:1
பிரிக்கமாட்டாத அன்பு – ரோ 8:39
நெருக்கி ஏவும் அன்பு – 2 கொரி 5:14
தன்னை அர்ப்பணிக்கும் அன்பு – கலா 2:20
உள்ளத்தை உடைக்க வைக்கும் அன்பு – யோ 21:17
அழியாத அன்பு – எபேசி 6:24
சுபாவ அன்பு – ரோ 1:31
33 . ” அன்பு கூருங்கள் “
தேவனின் அன்பு கூறுகிறவனெவனோ
அவன் தேவனால் அறியப்பட்டிருக்கிறான் 1 கொரி 8 : 3.
1. அன்புகூர்ந்தால் கிருபை கிடைக்கும் எபே 6 : 24
2. அன்புகூர்ந்தால் நன்மைக்கு ஏதுவாக நடக்கும் ரோமர் 8 : 28
3. அன்புகூர்ந்தால் ஆசீர்வாதம் பெற்றுக் கொள்ள முடியும் உபாக 30 : 16
4. அன்புகூர்ந்தால் பாதுகாப்பை பெறுவோம் சங் 145 : 20
5. அன்புகூர்ந்தால் பிரகாசம் அடைவோம் நியாயா 5 : 31
6. அன்புகூர்ந்தால் ஊழியம் செய்யும் பாக்கியம் பெறுவோம் யோவா 21 : 15
7. அன்புகூர்ந்தால் ராஜ்ஜியத்தை பெற்று கொள்வோம் யாக் 2 : 5 , 1 : 12
34 . ஆண்டவரின் எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்
1) மற்ற 9 பேர் எங்கே ? (லூக் 17:17,18)
ஆண்டவரிடத்தில் ஆசிர்வாத்த்தையும், நன்மையும் பெற்ற நாம் அவருக்கு நன்றி செலுத்த வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். மேற்கண்ட சம்பவம் நமக்கு நன்கு தெரியும். 10 குஷ்டரோகிகள் சுகமானர்கள். ஆனால் ஒருவன் மாத்திரம் வந்து தேவனை மகிமைபடுத்துகிறான். நீ குடிக்கும் ஒரு தம்ளர் தண்ணீர்க்கு கூட தேவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். தேவ பிள்ளையே உனது வாழ்க்கையில் நீ அனுபவிக்கும் ஒவ்வொரு ஆசிர்வாத்த்திற்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்த மறந்து விடாதே (சங் 103:2). உங்கள் பிள்ளைகளை கூட சிறு வயதில் இருந்து இந்த அனுபவத்தில் நடத்துங்கள். குடும்ப ஜெபத்தில் பிள்ளைகளை 5 நிமிடம் ஸ்தோத்திரம் பண்ண (பெற்ற ஆசிர்வாதத்திற்காக) செய்யுங்கள்.
2) ஒரு மணி நேரமாவது என்னோடு விழித்திருக்க கூடாதா ? – லூக் 26:49
சிஷர்கள் இடம் கேட்ட இன்று இயேசு உன்னை பார்த்து இயேசு கேட்கிறார்.
இயேசுவின் வருகையில் காணப்பட நம்மிடம் இருக்க வேண்டிய ஒரு காரியம் எப்பொழுதும் ஜெபம் (லூக் 21:36) ஜெபத்தில் சோர்வு கூடாது (லூக் 18:1) தாவிதுக்கு அநேக போராட்டம் இருந்தது. ஆனாலும் அவன் அந்தி, சந்தி மத்தியான நேரத்தில் ஜெபித்தான்.
ஜெபத்தில் உறுதியாய் இருங்கள் (ரோ 12:12) 84 வயது விதவை இரவும் பகலும் ஜெபம் செய்தாள். (லூக் 2:34)
எலிப்பாஸ் யோபுவிடம் நீர் தேவனுக்கு முன்பாக ஜெப, தியானத்தைக் குறையப்பண்ணுகிறீர்.
(யோபு 15:4) என்றான். உன்னுடைய ஜெபம் அதிகரிக்கிறதா ? குறைகிறதா ? கலகம் இல்லாமல் அமைதல் உள்ள ஜீவியம் செய்ய ஜெபம் அவசியம் (1 தீமோ 2:2)
3) விசுவாசமில்லாத மாறுபாடுள்ள சந்நதியே எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன் ( மத் 17:17)
எந்த சூழ்நிலையிலும் நமது விசுவாசம் குறைய கூடாது. நமது விசுவாசம் சோதிக்கபடும் (1 பேது 1:7) விசுவாசத்தில் பலவினமாக இருக்க கூடாது ( ரோ 4:19). விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் (மாற்கு 9-23) தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும். (எபிரேயர் 11:6)
அவர்களுடைய அவிசுவாசத்தினிமித்தம் அவர் அங்கே அநேக அற்புதங்களைச் செய்யவில்லை (மத்தேயு 13-58)
4) நற்கனிக்கு பதிலாக கசப்பான கனி (ஏசா 5:1-5)
கரத்தர் இஸ்ரவேல் ஐனங்கள் வாழ்க்கையில் எவ்வளவு எதிர்பார்த்தார் எவ்வளவு ஏமாற்றம் அடைந்தார் என்பதை மேலே கண்ட வசனத்தில் காணலாம்.
கனி = நல்ல சுபாவம், நல்ல குணங்கள்
மனம் திரும்புதலுக் கேற்ற கனிகளை கொடுங்கள் (மத் 3:7,8)
சுபாவ மாற்றம் ஒரு நாளில் நடப்பது இல்லை. சுபாவம் (கனி கொடுக்க) மாற காலம் கொடுக்கபட்டுள்ளது. லூக் 13:6-9 ல் 3 வருடம் கனி கொடுக்கவில்லை என்று வாசிக்கிறோம். கர்த்தர் வளரும் வரை பார்ப்பார், வளர்ந்த பிறகு நீ கனி கொடுக்காவிட்டால் வெட்டப்படுவாய் (மத் 7-19) தன் காலத்தில் தன் கனியை தந்து என்று சங் 1:1-3 ல் வாசிக்கிறோம். போய் கனி கொடுங்கள் (யோ 15-16) என்றார்.
இஸ்ரவேல் ஜனங்கள் கெட்டு போக காரணம் அவர்கள் சுபாவம் மாறவில்லை. கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்தில் இருந்து கானானுக்கு ஒரே நாளில் கூட்டி சென்று இருப்பார், 40 வருடங்கள் ஆக காரணம் அவர்கள் குணம் (சுபாவம்) மாறவில்லை. வீட்டில்/குடும்பத்தில்/office ல் உங்கள் இடம் என்னென்ன கெட்ட சுபாவம் தினமும் வெளிபடுகிறது ? இரவில் ஒரு list எடுத்து பாருங்கள். இன்றைக்கு உலக மனிதர்கள் இடம் காண்கிற அநேக நல்ல சுபாவங்கள் விசுவாசிகள், ஊழியர்கள் இடம் இல்லை. தேவ ஜனமே மனம் திரும்பு
5) நீ அநேக காரியங்களை குறித்து கவலைபட்டு கலங்குகிறாய் (லூக் 10:41)
தேவ பிள்ளைகள் உலக காரியங்களுக்காக கவலை படக்கூடாது.
அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள் (1 பேதுரு 5:7)
ஒன்றுக்கும் கவலைபடாமல் என்று பிலி 4:8 ல் வாசிக்கிறோம். உலக கவலை இருந்தால் ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர முடியாது (மாற் 4:18). இருதயம் பாரம் அடையும் (லூக் 21:34) இருதயத்தை ஒடுக்கும் (நீதி 12:25)
6) வேத வாக்கியங்களை விசுவாசிக்கிறதற்கு புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே (லூக் 24:25-26)
இயேசு சிலுவையில் அறையப்பட போவதையும், 3 நாள் கழித்து எழுந்திருக்க போவதையும் சிஷர்களுக்கு பல முறை சொல்லி இருந்தார். இயேசுவின் வார்த்தைகளை சிஷர்கள் முற்றிலும் மறந்து விட்டார்கள். எம்மாவூருக்கு சென்ற சிஷர்கள் கர்த்தருடைய வார்த்தையை மறந்த காரணத்தினால் அவர்களுக்கு சோர்வு வந்து விட்டது. நமது வாழ்க்கையில் ஆண்டவருடைய வசனத்தை நாம் நம்புவதற்கு மந்த இருதயமுள்ளவர்களாக மாறும் போது இயேசுவின் இருதயம் வேதனையடைகிறது, ஏமாற்றம் அடைகிறது. ஆண்டவர் சொன்ன வார்த்தைகள், வாக்குத்தத்தங்களை அடிக்கடி நினைவு கூற வேண்டும், அதை உரிமை பாராட்டி உங்களுக்கு சொந்தமாக்கி கொள்ளுங்கள்.
7) இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா (யோ 21:15)
தேவன் அன்பில் வைராக்கியம் உள்ளவர். இந்த உலகில் எல்லாரை காட்டிலும் இயேசுவை அதிகம் நேசிக்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார்
தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல, மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல.
மத் 10 :37 உலகத்தில் உள்ளவைகளில் அன்பு கூறாதிருங்கள- 1 யோ 2:15
ஆபிரகாம் தன் மகனை விட இயேசுவை அதிகம் நேசித்தான் (அதனால் தான் இயேசுவின் வார்த்தைக்கு கீழ்படிந்து ஈசாக்கை பலியிட துணிந்தான்)
கிறிஸ்துவின் அன்பை விட்டு நம்மை பிரிப்பவன் யார் ? – ரோ 8:36. தேவ அன்பு இருந்தால் தான் உபத்திரவங்களை சகிக்க முடியும்.உங்கள் தேவனாகிய கர்த்தரில் அன்புகூரும்படி, உங்கள் ஆத்துமாக்களை குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள் – யோசு 23 :11
35 . ஆராதனை எப்படி செய்ய வேண்டும்
1) பரிசுத்த அலங்காரத்துடன் – சங் 29:2
2) மகிழ்ச்சியுடன் – சங் 100:2
3) பயத்துடன் – சங் 2:11
4) பக்தியோடு – எபி 12:28
5) தேவனுக்கு பிரியமாய் – எபி 12:28
6) உத்தம இருதயத்தோடு – 1 நாள 28:9
7) உற்சாக மனதோடு – 1 நாள 28:9
8) முழு இருதயத்தோடு – உபா 10:12
9) முழு ஆத்துமாவோடு- யோசுவா 22:5
10) உண்மையாய் – யோசுவா 24:14
11) உத்தமுமாய் – யோசுவா 24:14
12) களிப்போடு – உபா 28:47
13) இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்து – சங் 116:13
14) ஆவியில் நிறைந்து – பிலி 3:3
15) ஆனந்த சத்தத்துடன் – சங் 100:2
16) ஸ்தோத்திர பலி செலுத்தி – சங் 116:17
17) அனுதினமும் – எபி 10:11
18) இடைவிடாமல் – தானி 6:20
19) இரவும் பகலும் – லூக் 2:37
36 . ஆலயத்துக்கு வர வேண்டிய விதம்
1) தாழ்மையுடன் (தாழ்த்தி) வர வேண்டும் – லூக் 18:10-14
2) சகோதரனுடன் ஒப்பரவாகி வர வேண்டும் – மத் 5:24
3) ஒரு மனதுடன் (pastor,மூப்பர்கள், விசுவாசிகளோடு ஜக்கியம் வேண்டும்) கூடி வர வேண்டும் – அப்போ 2:44
4) தேவ பயத்தோடு வர வேண்டும் – எபி 12:28
5) பக்தியோடு வர வேண்டும் – எபி 12:28
6) காணிக்கை கொண்டு வர வேண்டும் – உபா 16:16,17
7) பரிசுத்தத்தோடு வர வேண்டும் – லேவி 23:3,4
8) அப்பம் பிட்கும்படி கூடி வர வேண்டும் – அப்போ 20:7
9) பொருத்தனையுடன் வர வேண்டும் – 1 சாமு 1:24
37. ஆவியிலே
லூக்கா 10:21
அந்த வேளையில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன், ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது.
1. ஆவியிலே பெலன்
லூக்கா 2:40
பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பெலன்கொண்டு, ஞானத்தினால் நிறைந்தது. தேவனுடைய கிருபையும் அவர்மேல் இருந்தது.
2.ஆவியிலே களிகூருதல்
லூக்கா 10:21
அந்த வேளையில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன், ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது.
3. ஆவியிலே கலக்கம்
யோவான் 11:33
அவள் அழுகிறதையும் அவளோடே கூட வந்த யூதர்கள் அழுகிறதையும் இயேசு கண்டபோது ஆவியிலே கலங்கித்துயரமடைந்து.
4.ஆவியிலே கட்டு
அப்போஸ்தலர் 20:22
இப்பொழுதும் நான் ஆவியிலே கட்டுண்டவனாய் எருசலேமுக்குப் போகிறேன். அங்கே எனக்கு நேரிடுங்காரியங்களை நான் அறியேன்.
5.ஆவியிலே அனலாயிருங்கள்
ரோமர் 12:11
அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள், ஆவியிலே அனலாயிருங்கள், கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்.
6.ஆவியிலே உறுதியாய் இருங்கள்
பிலிப்பியர் 1:27
நான் வந்து உங்களைக் கண்டாலும், நான் வராமலிருந்தாலும், நீங்கள் ஒரே ஆவியிலே உறுதியாய் நின்று, ஒரே ஆத்மாவினாலே சுவிசேஷத்தின் விசுவாசத்திற்காகக் கூடப்போராடி, எதிர்க்கிறவர்களால் ஒன்றிலும் மருளாதிருக்கிறீர்களென்று உங்களைக்குறித்து நான் கேள்விப்படும்படி, எவ்விதத்திலும், நீங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குப் பாத்திரராக மாத்திரம் நடந்துகொள்ளுங்கள்.
7.ஆவியிலே நீதி
1 தீமோத்தேயு 3:16
அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.
8.ஆவியிலே உயிர்
1 பேதுரு 3:18
ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார். அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.
9.ஆவியிலே பிழைத்திருக்கவேண்டும்
1 பேதுரு 4:6
இதற்காக மரித்தோரானவர்கள், மனுஷர்முன்பாக மாம்சத்திலே ஆக்கினைக்குள்ளாக்கப்பட்டிருந்தும், தேவன்முன்பாக ஆவியிலே பிழைக்கும்படியாக, அவர்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது.
38 . இடங்கொடாதே
ரோமர் 14:16 உங்கள் நன்மை தூஷிக்கப்பட இடங்கொடாதிருங்கள்.
1.பிசாசுக்கு இடங்கொடாதே
*எபேசியர் 4:27*n பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்.
2.நன்மை தூஷிக்கப்பட இடங்கொடாதே
*ரோமர் 14:16*உங்கள் நன்மை தூஷிக்கப்பட இடங்கொடாதிருங்கள்.
3.ஒருவனும் உன்னை அசட்டைபண்ண இடங்கொடாதே
*தீத்து 2:15* இவைகளை நீ பேசி, போதித்து, சகல அதிகாரத்தோடும் கடிந்துகொள். ஒருவனும் உன்னை அசட்டைபண்ண இடங்கொடாதிருப்பாயாக.
4.மோளேகுக்கென்று தீக்கடக்கும்படி(விக்கிரக ஆராதனைக்கு) இடங்கொடாதே
*லேவியராகமம் 18:21*
நீ உன் சந்ததியில் யாரையாகிலும் மோளேகுக்கென்று தீக்கடக்கும்படி இடங்கொடாதே, உன் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதே,; நான் கர்த்தர்.
5.உன் மாம்சத்தைப் பாவத்துக்குள்ளாக்க உன் வாய்க்கு இடங்கொடாதே
*பிரசங்கி 5:6*
உன் மாம்சத்தைப் பாவத்துக்குள்ளாக்க உன் வாய்க்கு இடங்கொடாதே, அது புத்திபிசகினால் செய்தது என்று தூதனுக்குமுன் சொல்லாதே, தேவன் உன் வார்த்தைகளினாலே கோபங்கொண்டு, உன் கைகளின் கிரியையை அழிப்பானேன்?
39 . இயேசு கிறிஸ்த்துவின் புகார்கள்
1. தண்ணிர் தரவில்லை லூக்கா : 7 : 44
2. எண்ணெய் பூசவில்லை : லூக்கா : 7 : 46
3. முத்தஞ் செய்ய வில்லை : லூக்கா : 7 : 45
4. போஜனம் கொடுக்க வில்லை : மத் : 25 : 42
5. என்னை சேர்த்துக் கொள்ளவில்லை : மத் : 25 : 43
6. எனக்கு வஸ்த்திரம் கொடுக்கவில்லை : மத் 25 : 43
7. என்னை விசாரிக்க வில்லை : மத் : 25 : 43
40 . சிலுவையில் இயேசு ஏன் அடிக்கபட்டார்
1) நமது பாவத்திற்காக அடிக்கபட்டார் – ஏசா 53:5,6
2) நாம் பரிசுத்தமாக வேண்டும் என்பதற்காக – எபிரேயர் 13:12
3) நமது அவயம் முழுவதும் பரிசுத்தமாக வேண்டும் என்பதற்காக – எபி 9:14
4) நாம் ஒருவரை ஒருவர் நேசிக்க வேண்டும் என்பதற்காக – யோ 15:12,13
5) தேவனிடத்தில் சேர்க்கும்படி – 1 பேதுரு 3:18