பிரசங்க குறிப்புகள் 311-320

311.தூக்கியெடுத்து உயர்த்தும் கர்த்தர்

1) குப்பையில் இருந்து தூக்கியெடுக்கும் கர்த்தர் (புழுதி, சாம்பல்)
1சாமுவேல் 2:8 (1-10) அவர் சிறியவனைப் புழுதியில் இருந்து எடுத்து, எளியவனைக் குப்பையில் இருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக் களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும்…
சங்கீதம் 113:7(1-9) அவர் சிறியவனைப் புழுதியில் இருந்து தூக்கி விடுகிறார்; எளியவனைக் குப்பையில் இருந்து உயர்த்துகிறார்
2. குழியில் இருந்து தூக்கியெடுக்கும் கர்த்தர் (பள்ளம், ஆழம்)
ஆதியாகமம் 37:24,28 அவர்கள் யோசேப்பை அந்த குழியில் இருந்து தூக்கியெடுத்து அவனை இஸ்மவேலர் கையில் இருபது வெள்ளிக் காசுக்கு விற்றுப்போட்டார்கள்
சங்கீதம் 30:3 நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடே காத்தீர்
சகரியா 9:11 தண்ணீரில்லாத குழியிலே அடைபட்டிருக்கிற உன்னுடை யவர்களை நான் என் உடன்படிக்கையின் இரத்தத்தினாலே விடுதலை…
3. குகையில் இருந்து தூக்கியெடுக்கும் கர்த்தர்(கெபி, மலைமுழை)
தானியேல் 6:23 ராஜா தன்னில் மிகவும் சந்தேஷப்பட்டு, தானியேலைக் கெபியில் (குகையில்) இருந்து தூக்கிவிடச் சொன்னான்; அப்படியே தானியேல் கெபியில் இருந்து தூக்கி விடப்பட்டான்; அவன் தேவன் பேரில் விசுவாசித்திருந்தபடியால், அவனில் ஒரு சேதமும் காணப்படவில்லை
சங்கீதம் 9:13 மரணவாசல்களில் இருந்து என்னைத்தூக்கிவிடுகிற கர்த்தர்
4. குழையில் இருந்து தூக்கியெடுக்கும் கர்த்தர் (சேறு, சகதி)
சங்கீதம் 40:2,3 பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தி, நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை
சங்கீதம் 69:14 நான் அமிழ்ந்து போகாதபடிக்குச் சேற்றினின்று தூக்கிவிடும்
5. குறைவில் இருந்து தூக்கியெடுக்கும் கர்த்தர் (ஏழ்மை, நோய்)
சங்கீதம் 145:14 கர்த்தர் விழுகிற யாவரையும் தாங்கி, மடங்கடிக்கப்பட்ட (தாழ்த்தப்பட்ட) யாவரையும் தூக்கிவிடுகிறார்.
சங்கீதம் 146:8 மடங்கடிக்கப்பட்டவர்களைக் கர்த்தர் தூக்கிவிடுகிறார்.
மாற்கு 1:31 இயேசு கிறிஸ்து பேதுரு மாமியின் கையைப்பிடித்து, அவளைத் தூக்கி விட்டார்; உடனே ஜுரம் அவளை விட்டு நீங்கிற்று
மாற்கு 9:27 இயேசு அசுத்த ஆவியைப்பிடித்தவன் கையைப் பிடித்து தூக்கிவிட்டார்

312.தேசத்துக்காக நன்றி

1. கர்த்தர் கொடுத்த தேசம் உபாகமம் 8:1
2. கத்தர் பிரவேசிக்க பண்ணும் நல்ல தேசம் உபாகமம் 8:7
3. குறைவுபடாத தேசம் உபாகமம் 8:9
4.எல்லா ஆசீர்வாத ஊற்றுக்கள் புறப்படும் தேசம் உபா 8: 7
5. புசித்து திருப்தியாகி நல்ல வீடுகளை கட்டி குடியிருக்கும் தேசம் உபாகமம் 8:12
6. எல்லாம் பெருகி நம்மை வர்த்திக்கப்பண்ணும் உபாகமம் 8:13
7. கர்த்தரை ஸ்தோத்தரிக்க வைக்கும் தேசம் உபா 8 :10

313.தேடுகிறவன் கண்டடைகிறான்

எவற்றை தேட வேண்டும் ? கர்த்தரை தேட வேண்டும்
ஆமோஸ் 5 : 6

எப்படி தேட வேண்டும் ?
1. முழு இருதயத்துடன் தேட வேண்டும் எரே 29 : 13
2. அதிகாலையில் தேட வேண்டும் நீதி 8 : 17, சங் 63 : 1
3. கருத்தாக தேட வேண்டும். ஓசியா 5 : 15
4. கண்டடையத்தக்க சமீபத்தில் தேட வேண்டும் ஏசாயா 55 : 6
நன்மையை தேட வேண்டும் ஆமோஸ் 5 : 14

எது நன்மை ?
1. ஜெபம் பண்ணுவது நன்மை 1 தீமோ 2 : 1 — 3
2. தேவபக்தியை விசாரிப்பது நன்மை 1 தீமோ 5 : 4
3. நற்கிரியைகளை செய்வது நன்மை தீத்து 3 : 5.
நீதியை தேட வேண்டும் செப் 2 : 3

எது நீதி ?
1. கர்த்தரை விசுவாசிப் பது நீதி ஆதி 15 : 6
2. கிரியை செய்வது நீதி யாக் 2 : 24
3. கர்த்தரின் கட்டளை யை கைக்கொள்வது நீதி. உபாக 6 : 25
4. நியாயஞ் செய்வது நீதி. சங் 106 : 30 , 31
மனத்தாழ்மையைத் தேட வேண்டும் ? செப் 2 : 3

மனத்தாழ்மையாய் இருந்தால் என்ன கிடைக்கும் ?
1. மனத்தாழ்மையாய் இருந்தால் உயர்வு கிடைக்கும் லூக்கா 14 : 11 யாக் 4 : 10
2. மனத்தாழ்மையாய் இருந்தால் கிருபை கிடைக்கும் யாக் 4 : 6
3. மனத்தாழ்மையாய் நடந்தால் ஐசுவரியம் மகிமை கிடைக்கும் நீதி 22 : 4
4. மனத்தாழ்மையாய் நடந்தால் கணம் கிடைக்கும். நீதி 29 : 23
சமாதானத்தை தேட வேண்டும்
1 பேது 3 : 11

எப்படி சமாதானத்தை பெற முடியும் ?
1. பரிசுத்தமாயிருக்கும் போது சமாதானத்தை பெறமுடியும் சங் 85 : 8
2. வேத வசனம் தியானிக்கும் போது சமாதானம் கிடைக் கும். சங் 119 : 165
3. அவரை உறுதியாய் பற்றிக்கொள்ளும் போது சமாதானம் கிடைக்கும் ஏசா 26 : 3
4. நன்மை செய்யும் போது சமாதானம் கிடைக்கும் ரோமர் 2 : 10.

314.தேவ சமாதானம் யோவா 14 : 27

1. கர்த்தரை உறுதியாய் பற்றிக் கொண்டவர் களுக்கு சமாதானம் ஏசாயா 26 : 3
2. நன்மை செய்பவர் களுக்கு சமாதானம் ரோமர் 2 : 10
3. வேதத்தை நேசிக்கிற வர்களுக்கு சமாதான ம். சங் 119 : 166
4. புதிய சிருஷ்டியாக மாறும் போது சமாதானம் கலா 6 : 15 , 16
5. துதிக்கும் போது ஜெபிக்கும் போது சமாதானம் பிலி 4 : 6 , 7
6. கர்த்தரின் கற்பனை களைக் கவனிக்கும் போது சமாதானம் ஏசாயா 48 : 18
7. விசுவாசிக்கும் போது சமாதானம் ரோமார் 15 : 13

315.தேவ சமூகத்தில் கிடைக்கும் ஆசிர்வாதங்கள்

1) இளைப்பாறுதல் – யாத் 33:14
2) போராட்டத்தில் தைரியம் – உபா 20:1
3) உபத்திரவத்தில் ஆறுதல் – ஏசா 43:2
4) பரிபூரண ஆனந்தம் – சங் 16:11
5) இரட்சிப்பு (விடுதலை) – சங் 42:5
6) மகிழ்ச்சி – சங் 21:6
7) திருப்தி – ஏசா 23:18
8) மகிமை – 1 நாளா 16:27
9) கனம் – 1 நாளா 16:27
10) சத்துருக்கள் இடறுண்டு அழிந்து போவார்கள் – சங் 9:3
11) பிழைத்திருக்கிறோம் – ஒசியா 6:2
12) வேறுபட்டு ஜீவிப்போம் – யாத் 33:16

316.தேவ சமூகம் முன் சென்றால் ? யாத் 33 : 14

தேவ சமூகம் முன் சென்றால் இரக்கம் கிடைக்கும் யாத் 33 : 19

1. தேவ சமூகம் முன் சென்று இரக்கம் பெற்றவர்கள்
லோத். ஆதி 19 : 16
மோசே யாத் 2 : 6

தேவ சமூகம் முன் சென்றால் தேவைகள் சந்திக்கப் படும்
யாத் 17 : 5

2. தேவ சமூகம் முன் சென்றதால் என்ன தேவைகள் சந்திக்கப்பட்டது.
தண்ணீர் கொடுத்தார் யாத் 17 : 6
மன்னா கொடுத்தார் யாத் 16 : 12 , 31
இறைச்சி கொடுத்தார் யாத் 16 : 3 , 8

தேவ சமூகம் முன்சென்றால் சத்துருக்களை துரத்துவார்
உபாக 9 : 3

3. தேவ சமூகம் முன் செல்லும் போது எப்படிப்பட்ட சத்துருக்களை துரத்தினார் ?
எமோரியரின் ராஜாக்களை துரத்தி னார். உபாக 31 : 3
காணானிய ராஜா வை துரத்தினார் நியாயா 4 : 14
பெலியஸ்தரை துரத்தினார் 2 சாமு 5 : 24

தேவ சமூகம் முன் சென்றால் தேவன்
கைவிடமாட்டார் உபாக 31 : 8

4. தேவ சமூகம் முன் செல்லும் போது யாரை கைவிடமாட்டார்.
யாக்கோபை கைவிடவில்லை ஆதி 28 : 15
சாலமோனை கைவிடவில்லை 1 நாளாக 28 : 9 , 20

தேவ சமூகம் முன் செல்லும்போது
காரியம் வாய்க்கும் ஆதி 24 : 7

5. தேவ சமூகம் முன் செல்லும்போது யாருடைய காரியங்கள் வாய்த்தது
ஆசாவின் காரியம் வாய்க்கும் 2 நாளாக 14 : 7
உசியாவின் காரியம் வாய்க்கும் 2 நாளாக 26 : 5
எசேக்கியாவின் காரியம் வாய்க்கும் 2 நாளாக 32 : 30

317.தேவ சித்தம் எது

1) எல்லா மனுஷரும் இரட்சிக்கபடுவது – 1 தீமோ 2-4
2) சத்தியத்தை அறியும் அறிவை அடைவது – 1 தீமோ 2-4
3) எல்லாவற்றிலும் ஸ்தோத்திரம் செய்வது – 1 தெச 5-18
4) பரிசுத்தமாகுவது – 1 தெச 4-3
5) வியாதியில் இருந்து விடுதலை பெறுவது – மத் 8-2,3
6) உலகில் பாடு அனுபவிப்பது – எபி 10-9
7) நன்மை செய்து பாடு அனுபவிப்பது – 1 புது 3-17
8) ஞானமுள்ளவர்களாய் வாழ்வது – எபேசி 5-15-17
9) வசனத்தை கைக் கொள்வது – மத் 7-21
10) கீழ்படிதல் – மத் 21-31
11) உபதேசத்தை ஏற்றுக் கொள்ளுதல் – யோ 7-17
12) மனப்பூர்வமாக ஊழியனுக்கு ஒப்பூக் கொடுப்பது – 2 கொரி 8-5
13) உலக இச்சைகளுக்கு விலகி வாழ்வது – 1 யோ 2-17

318.தேவ சித்தத்திற்காக என்ன செய்ய வேண்டும்

1) தேவ சித்தத்திற்காக ஜெபம் பண்ண வேண்டும் – மத் 6:10
2) தேவ சித்தத்தை அறிக்கை செய்ய வேண்டும் – யாக் 4:13-15
3) தேவ சித்தத்தை பகுத்தறிய வேண்டும் – ரோ 12:2
4) தேவ சித்தத்தால் நிரம்பி இருக்க வேண்டும் – கொலோ 1:9
5) தேவ சித்தத்தை நிறைவேற்ற வேண்டும் – 2 தெச 1:12

319.தேவ சித்தம் செய்வதால் கிடைக்கும் ஆசிர்வாதங்கள்

1) தேவன் செவி கொடுப்பார் (ஜெபம் கேட்கப்படும்) – யோ 9:31
2) தேவ சித்தம் செய்கிறவன் இயேசுவுக்கு சகோதரன், சகோதரி, தாய் – மாற்கு 3:35
3) உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய் பேசுகிறனோ என்று அறிந்து கொள்வான் – யோ 7:17
4) என்றைக்கும் நிலைத்திருப்பான் – 1 யோ 2:17
5) பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பான் – மத் 7:21

320.தேவ சித்தம் யார் அறிய முடியாது

1) பாவம் இருந்தால் தேவ சித்தம் அறிய முடியாது – 1 பேது 4:1,2
2) மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை, உலகத்தின் இச்சை இருந்தால் தேவ சித்தம் அறிய முடியாது – 1 யோ 2:15-17
3) வேத வசனத்தின்படி ஜீவிக்காதவன் – மத் 7:21-26
4) புத்தியினமாக நடப்பவர்கள் – எபேசு 5:16,17

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *