பிரசங்க குறிப்புகள் 331-340

331.தேவனுக்கு விரோதமானது

1) உலக சிநேகம் – யாக் 4:4
2) மாம்ச சிந்தை – ரோ 8:7
3) பொய் சொல்வது – யோசுவா 24:27
4) முணுமுணுப்பது – யாத் 16:8
5) பாவம் – ஆதி 39:9
6) மேட்டிமை – 2 கொரி 10:5
7) அவபக்தி – யூதா:15
8) தீமை செய்தல் – 1 பேது 3:12

332.தேவனுடைய ஆசீர்வாதத்தை பெற்று கொள்வது எப்படி ? லூக்கா 24 : 50 , 51.

தம்முடைய கைகளை உயர்த்தும் போது வெளிப்பட்ட ஐந்து ஆசீர்வாதங்கள்.
1. தம்முடைய கைகளை உயர்த்தும்போது ஆவிக்குரிய ஆசீர்வா தம் வெளிப்பட்டது. எபே 1 : 3
2. தம்முடைய கைகளை உயர்த்தும் போது சகல காரியங்களின் ஆசீர்வாதம் வெளிப் பட்டது ‌. ஆதி 24 : 1
3. தம்முடைய கைகளை உயர்த்தும் போது வியாதியை விலக்கு கிற ஆசீர்வாதம் வெளிப்பட்டது யாத் 23 : 25.
4. தம்முடைய கைகளை உயர்த்தும் போது கையிட்டு செய்யும் எல்லா வேலைகளின் ஆசீர்வாதம் வெளிப் பட்டது. உபாக 28 : 8
5. தம்முடைய கைகளை உயர்த்தும்போது சாபமெல்லாம் ஆசீர்வாதங்களாக வெளிப்பட்டது. உபாக 23 : 25.
அவர் கையிலிருந்து வெளிப்பட்ட ஆசீர்வாதத் தைப் பெற்றுக்கொள்ள நாம் எப்படி இருக்க வேண்டும் ?
1. ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ள நாம் கர்த்தருக்கு பயப்பட வேண்டும் சங் 115 : 13
2. ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள உண்மையாய் இருக்கவேண்டும் நீதி 28 : 20 2 தீமோ 2 : 13
3. ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள நீதிமானாய் இருக்க வேண்டும். நீதி 10 : 6 சங் 37 : 25 , 26
4. ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள இரக்கமுள்ளவராய் இருக்கவேண்டும் நீதி 22 : 9 , மத் 5 : 7
5. ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள கர்த்தருக்கென்று கொடுக்கவேண்டும் மல்கியா 3 : 10

333.தேவனுடைய ஆலயம் யோவா 10 : 23

1. தேவாலயம் அது பரிசுத்தமான இடம் சங் 93 : 5
2. தேவாலயம் அது ஆசீர்வாதத்தை கொடுக்கும் இடம் சங் 118 : 26
3. தேவாலயம் அது சம்பூர்ண திருப்தி அளிக்கிற இடம் சங் 36 : 8
4. தேவாலயம் அது பொருத்தனை செலுத்தும் இடம் சங் 116 : 18 , 19
5. தேவாலயம் அது மகிழ்ச்சியை கொடுக்கும் இடம் சங் 1221 : 1 , 9

334.தேவனுடைய பிள்ளைகளகளுக்கு உதவி செய்து ஆசிர்வாதத்தை பெற்றவர்கள் (மாற் 9-41) →*

1) ஆபிரகாம் தேவனுடைய பிள்ளைகளை ஏற்றுக் கொண்டு உபசரித்தார் (ஆதி 18:1-10)
வயதான காலத்தில் தேவனுடைய பிள்ளைகளை உபசரித்தான். கர்த்தருடைய பிள்ளைகளை உங்களால் ஆனமட்டும் தாங்குங்கள், உபசரியுங்கள். தேவனுடைய பிள்ளைகளுக்கு விரோதமாக பேசாதிருங்கள். தேவனுடைய பிள்ளைகளை உபசரித்தன் மூலம் கர்த்தர் அவர்களுக்கு ஒரு ஆண் பிள்ளையை கட்டளையிட்டார்.
2) லோத்து தூதர்களுக்கு அப்பங்களை சுட்டு விருந்து பண்ணினான் (ஆதி 19:1-16)
அதனால் பொல்லாத மனுஷர் கைகளில் இருந்து தப்புவிக்கபட்டான். அதுமட்டுமல்ல தனது குடும்பத்தை அழிவில் இருந்து காத்தான்.
3) சுனேமியாள் எலிசா தீர்க்கதரிசியை ஏற்றுக் கொண்டு சகல பணிவிடைகளை செய்தாள். வீட்டிற்கு வரும் போதெல்லாம் ஆகாரம் கொடுதது போஷித்தாள். அதுமட்டுமல்ல தங்கி செல்ல ஒரு அறையும் ஏற்பாடு செய்து கொடுத்தாள். (2 இரா 4:8-17)
இதனால் பிள்ளை இல்லாத சுனேமியாளுக்கு குழந்தை பிறந்தது. அதுமட்டுமல்ல மரணம் அடைந்த குழந்தைக்கு உயிர் வந்தது. தேசத்தில் பஞ்சம் உண்டாவதற்கு முன் அறிவிக்கபட்டு காப்பாற்ற படுகிறாள்.
4) சாரிபாத் விதவை எலியா தீர்க்கதரிசிக்கு ஆகாரம் (அடை) கொடுத்ததினால் அவளது வறுமை நீங்கியது (1 இரா 17:10-15)
சாப்பிட்டு செத்து போக வேண்டியவள் அநேக நாள் சாப்பிட்டாள். காப்பாற்றபட்டாள்.
5) ரெபேக்காள் ஆபிரகாம் ஊழியக்காரர்க்கும், 10 ஒட்டகங்களுக்கும் தண்ணீர் கொடுத்தாள். ஒட்டகங்கங்கள் தண்ணீர் அதிகம் குடிக்கும்.
இதனால் ஈசாக்கை மணவாளனாக பெற்றாள்.
6) மார்த்தாள், மரியாள் இயேசுவை தங்கள் வீட்டில் ஏற்றுக் கொண்டார்கள் (லூக் 10-38)
இதனால் லாசரு உயிரோடு எழுப்பபட்டான்.
7) பேதுரு தனது படகை ஆண்டவருக்கு கொடுத்தபடியால்
(பிரசங்கம் பண்ண) (லூக் 5-3) 2 படகு நிறைய மீன்கள் கிடைத்தது (இரவு முழுவதும் 1 மீன் கூட கிடைக்கவில்லை). நமது உள்ளத்தை, வீட்டை இயேசுவுக்கு கொடுத்தால் அது ஆசிர்வதிக்கபடும்.

335.தேவனுடைய பிள்ளைகள் யார்

1. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் மேல் விசுவாசம் உள்ளவர்கள் யோவான் 1 :12 ,13 1 யோவான் 3 : 1,2 கலாத்தியர் 3:26.
2. தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்கள் ரோமர் 8 :14 ,15
3. சத்துருக்களை சிநேகிக்கிறவர்கள் மத்தேயு 5 :44 ,45
4. சமாதானம் பண்ணுகிறவர்கள் மத்தேயு 5 :9
5. அவிசுவாசிகள் உடன் பிணைக்கப்படாதிருப்பவர்கள் 2 கொரி6:14-18
6. சிட்சையை சகிக்கிறவர்கள் எபி12.7

336.தேவனுடைய ராஜ்யத்தில் யார் பிரவேசிப்பார்கள்

1) மறுபடியும் பிறந்தவர்கள் – யோ 3:3,5
2) ஆவியில் எளிமையுள்ளவர்கள் – மத் 5:3
3) பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் – மத் 7:21
4) நீதியின் நிமித்தம் துன்பபடுகிறவர்கள் – மத் 5:10,12
5) வேதபாரகர், பரிசேயர் என்பவர்களின் நீதியிலும் அதிகமான நீதியுள்ளவர்கள் – மத் 5:20
6) மனந்திரும்பி பிள்ளைகளை போல ஆனவர்கள் – மத் 18:3
7) ஜசுவரியத்தின் மேல் நம்பிக்கை வைக்காதவன் – மாற் 10:25
8) கலப்பையின் மேல் கையை வைத்து பின்னிட்டு பார்க்காதவன் – லூக் 9:62

337.தேவனை மகிமைபடுத்துவது எப்படி

1) ஸ்தோத்திர பலி செலுத்தி (துதித்து) – சங் 69:30, 50:24
2) மிகுந்த கனிகளை கொடுத்து – யோ 15:8
3) நற்கிரியைகளை செய்து – மத் 5:16, 1 பேதுரு 2:12
4) விசுவாசத்தால் – ரோ 4:21, யோ 11:40
5) ஒரு மனதினால் – ரோ 15:5
6) கிறிஸ்தவனாயிருந்து பாடுபடும் போது – 1 பேதுரு 4:16
7) இரக்கம் பெற்றதினால் – ரோ 15:9
8) தெய்வீக சுகம் அடையும் போது – மத் 9:6-8

338.தேவன் அறிந்திருக்கிறார் நாகூம் 1:7

1.நாம் போகும் வழியை அவர் அறிவார்
யோபு 23:10
ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார். அவர் என்னைச் சோதித்தபின் பொன்னாக விளங்குவேன்.
2. நம்முடைய இருதயத்தின் நினைவுகளை கர்த்தர் அறிவார்
ஆதியாகமம் 22:12
அப்பொழுது அவர்: பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே. நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஓப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார்.
3. நம்முடைய நிலையை அவர் அறிவார்
உபாகமம் 2:7
உன் தேவனாகிய கர்த்தர் உன் கைக்கிரியைகளிலெல்லாம் உன்னை ஆசீர்வதித்து வருகிறார், இந்தப் பெரிய வனாந்தரவழியாய் நீ நடந்துவருகிறதை அறிவார்,; இந்த நாற்பது வருஷமும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருந்தார், உனக்கு ஒன்றும் குறைவுபடவில்லை என்று சொல் என்றார்.

339.தேவன் மனிதனுக்கு கொடுக்கிற வஸ்திரங்கள்

1) தோல் உடை – ஆதி 3:21
2) துதியின் உடை – ஏசா 61:3
3) நீதியின் சால்வை – ஏசா 1:10
4) இரட்சிப்பின் வஸ்திரங்கள் – ஏசா 61:10
5) வெண் வஸ்திரம் – வெளி 3:18
6) கல்யாண வஸ்திரம் – மத் 22:11
7) சுத்தமும் பிரகாசமுமான வஸ்திரம் – வெளி 19:8

340.தேவன் யாருக்கு நன்மை செய்கிறார்

1.தேவனுக்குப் பயப்படுகிறவர்களுக்கு
யாத்திராகமம் 1:17,20 மருத்துவச்சிகளோ, தேவனுக்குப் பயந்ததினால், எகிப்தின் ராஜா தங்களுக்கு இட்ட கட்டளைப்படி செய்யாமல், ஆண்பிள்ளைகளையும் உயிரோடே காப்பாற்றினார்கள்.
20 இதினிமித்தம் தேவன் மருத்துவச்சிகளுக்கு நன்மைசெய்தார். ஜனங்கள் பெருகி மிகுதியும் பலத்துப்போனர்கள்.
2.மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும்
சங்கீதம் 31:19
உமக்குப் பயந்தவர்களுக்கும், மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டு பண்ணிவைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது!
3.கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கு
சங்கீதம் 34:10
சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும், கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது.
4. தேவனிடத்தில் மனம்பொருந்திச் செவிகொடுத்தால்
ஏசாயா 1:19 நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால், தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள்.
5. தீங்கை அனுபவிக்கிறவர்களாய் இருக்க வேண்டும்
ஆதியாகமம் 50:20
நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள். தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்.
6. நாம் மற்றவர்களுக்கு நன்மை செய்யும் போது
நெகேமியா 5:19

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *