391.பயப்படக்கூடாது – எதற்கு
1) பாடுகளை கண்டு – வெளி 2-10
2) சத்துருக்களை கண்டு – உபா 20:3
3) ஜசுவரியவானை கண்டு – சங் 49:16
4) துர்செய்தியை கேட்டு – சங் 112:7
5) ஆபத்துக்கு – 1 பேது 3:6
6) மனுஷனின் நிந்தனைக்கு – ஏசா 51:7
7) பொல்லாப்புக்கு – சங் 23:4
8) சரிரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு – மத் 10:28
9) பார்வோனுக்கு (பிசாசுக்கு) – உபா 7:19
10) மனிதனின் முகத்திற்கு – உபா 1:17
11) பொய் தீர்க்கதரிசிக்கு – உபா18:22
12) இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கு – சங் 91:5,6
13) கொள்ளை நோயை கண்டு – சங் 91:5,6
392. பயப்படாதிருங்கள் (தூதன் சொன்னது)
1.யோசேப்பே, பயப்படாதே *மத்தேயு 1:20(18-25)*
2.மரியாளே, பயப்படாதே *லூக்கா 1:30(26-38)*
3. சகரியாவே, பயப்படாதே *லூக்கா 1:13(5-25)*
[4. மேய்ப்பர்களே, பயப்படாதிருங்கள் *லூக்கா 2:10(8-20)*
393.பரிசுத்த ஆவியும் தேவனுடைய பிள்ளை களும் , யோவா 20 : 22
தேவ பிள்ளைகளே !
1. தேவ பிள்ளைகளே பரிசுத்த ஆவியினால் நிறைந்திருங்கள் எபே 5 : 18
2. தேவ பிள்ளைகளே ஆவியிலே அனலா யிருங்கள் ரோம 12 : 11
3. தேவ பிள்ளைகளே ஆவியை அவிழ்த்து போடாதிருங்கள் 1 தெச 5 : 19
4. தேவ பிள்ளைகளே பரிசுத்த ஆவிக்கு எதிர்த்து நில்லாதிருங்கள் அப் 7 : 51 — 54
5. தேவ பிள்ளைகளே பரிசுத்த ஆவிக்கேற்ற படி நடவுங்கள் கலா 5 : 18
394.பலப்படு கலாத்தியர் 6 : 2.
1. கிருபையில் பலப்படு 2 தீமோ 2 : 1
2. சத்துவத்தின் வல்லமையில் பலப்படு எபே 6 : 10
3. ஆவியினாலே உள்ளான மனுஷனில் பலப்படு எபே 3 : 16
4. விசுவாசத்தில் பலப்படு ரோமர் 4 : 21
5. வேத வசனம் உள்ளத்தில் நிலைத்திருப்பதில் பலப்படு. 1 யோவா 2 : 14
395.பலமாய் செய்யப்பட்ட காரியம் ரோமர் 1:5
1.பலமாய் விருத்தியடைந்து மேற்கொண்ட வசனம் அப்போஸ்தலர் 19:20
2.பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரன் ரோமர் 1:5
3.பலமாய் நிறைவேறும் தேவசித்தமும் , விசுவாசத்தின் கிரியையும் நிறைவேறும் 2 தெசலோனிக்கேயர் 1:12
396.பலன் அளிக்க கர்த்தர் வருகிறார் வெளி 22 : 12.
1. தானதர்மம் செய்யும் போது பலன் அளிப்பார் மத் 6 : 1 — 4.
2. ஜெபம் பண்ணும் போது பலன் அளிப்பார். மத் 6 : 5 , 6
3. உபவாசிக்கும்போது பலன் அளிப்பார் மத் 6 : 17 , 18
4. கர்த்தரிடத்தில் அடைக்கலம் புகும் போது பலன் அளிப்பார். ரூத் 2 : 12
5. கர்த்தருக்காக ஊழியம் செய்யும் போது பலன் அளிப்பார். கொலோ 3 : 22 , 23
6. ஊழியர்களுக்கு உதவி செய்யும்போது பலன் அளிப்பார் மத் 10 : 40 , 41 , 42
7. அவருக்காக பாடுகளை சகிக்கும் போது பலன் அளிப்பார். மத் 5 : 11 , 12
397.பவுலுக்கு துணை நின்ற கர்த்தர். 2 தீமோ 4 : 17.
பவுல் எப்படியிருந்தார் பவுல் என்ன செய்தார்?
1. துணை நிற்பதற்கு பவுல் இடைவிடாமல் ஜெபித்தார் கொலோ 1 : 9
2. துணை நிற்பதற்கு பவுல் இடைவிடாமல் ஸ்தோத்திரித்தார் எபே 1 : 16
3. துணை நிற்பதற்கு பவுல் ஆத்துமாக்கள் மேல் வாஞ்சையாக இருந்தார். பிலி 1 : 8
4. துணை நிற்பதற்கு பவுல் சுவிசேஷத்தை அறிவிக்க நாடினார் ரோமர் 15 : 21
5. துணை நிற்பதற்கு பவுல் கிறிஸ்துவுகாக அனைத்தையும் நஷ்ட மாக விட்டார் பிலி 3 : 7.
6. துணை நிற்பதற்கு பவுல் சிலுவையை மேன்மைபடுத்தினார் கலா 6 : 14.
7. துணை நிற்பதற்கு பவுல் கிறிஸ்துவுக்கு பிரியமாய் பேசினார் 1 தெச 2 : 3.
398.பற்றிக்கொள்
1. இந்நாள்மட்டும் நீங்கள் செய்தது போல உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பற்றிக் கொண்டிருங்கள் யோசுவா : 23 : 8
2. நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்.. 1 தீமோ : 6 12
3. உன் வேதத்தை பற்றி கொண்டு , என் முழு இருதயத்தோடும் அதைக் கைக்கொள் ளுவேன். சங் : 119 : 34
4. நமக்குமுன் வைக்கப் பட்ட நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும் படி எபி : 6 : 18
5. தீமையை வெறுத்து நன்மையை பற்றிக் கொண்டிருங்கள் ரோமர் : 12 : 9
6. நாம் பண்ணின்ன அறிக்கையை உறுதி யாய் பற்றிக்கொண் டிருக்க கடவோம் எபி : 4 : 14
7. ஞானத்தைப் பற்றிக் கொள்ளுகிற எவனும் பாக்கியவான் நீதி : 3 : 18
8. நம்பிக்கையினாலே உண்டாக்கும் தைரியத்தை உறுதி யாய் பற்றிக்கொண்டு ருப்போமானால் , நாம் அவருடைய வீடாயிரு போம். எபி 3 : 6
9. தேவனுக்கு பிரிய மாய் ஆராதனை செய்யும்படி கிருபை யைப் பற்றிக்கொள்ள
ன கடவோம் . வெளி : 3 : 11
10 ஒருவனும் உன் கீரிடத்தை எடுத்துக் கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப்த பற்றிக்கொண்டிரு வெளி : 3 : 11
399.பனைமரம்
பனைமரம் (சங் 92:12 நீதிமான்கள்) மூலம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஆவிக்குரிய சத்தியங்கள்
1) பனைமரம் வனாந்திரத்தில் இருந்தாலும் அதின் இலைகள் பச்சையாக இருக்கும். ஏற்ற காலத்தில் கனி கொடுக்கும். (நான் தோட்டத்தில் இல்லை வனாந்திரத்தில் இருக்கிறேன் கனி கொடுக்க முடியாது என்று கூறுவதில்லை) = அது போல நாம் வனாந்திரத்தில் (உலகம்) இருந்தாலும் கனி கொடுக்க வேண்டும் (கலா 5:22,23)
2) பனை மரத்துக்கு ஆணி வேர் கிடையாது (ஆணி வேர் பூமியை இறுக பற்றி கொள்ளூம் வேர்) = அது போல நாமும் உலகத்தானாக ஜிவிக்காதபடி இருக்க வேண்டும் (யோ 17:14)
3) பனை மரத்துக்கு கிளைகள் கிடையாது = பக்க வழியாக தோன்றுகிற ஆசைக்கு, இன்பத்துக்கு இடம் கொடுக்க கூடாது (எபி 12:1)
4) பனை மரத்தின் வெளிப்பகுதி கறுப்பாக இருக்கும் = உலகத்தில் நமக்கு உள்ள பாடுகளினால் நாமும் அழகற்றவர்களாய் இருக்கிறோம் (ஏசா 53:2 இயேசு பாடுகளினால் அழகற்றவராக காணபட்டார்)
5) பனை மரத்தின் வெளிப்பகுதி கடினமாக இருக்கும் = பாவத்திற்கு விரோதமாக நாம் கடினமாக இருக்க வேண்டும். உலக அசுத்தங்கள் நமக்குள் புகாதபடி நாம் போராட வேண்டும் (எபி 12:4)
6) பனை மரத்தின் உட்பகுதி மிருதுவாக இருக்கும் = இது இரக்கம், நன்மை செய்யும் சுபாவத்தை காட்டுகிறது
7) பனை மரத்தின் எல்லா பாகமும் மனிதனுக்கு பயன் படுகிறது = நாமும் மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்க வேண்டும்.
8) பனைமரம் பலமான காற்று அடித்தாலும் கிழே விழாது. உறுதியாக இருக்கும் (தென்னை, பாக்கு மரம் பலமான காற்று அடித்தால் கிழே விழுந்து விடும்) – நீதிமான் உபத்திரவம், சோதனை போன்ற காற்று அடித்தாலும் உறுதியாக இருப்பான்
9) பனை மரம் வானத்தை பார்த்து வளர்கிறது = நாமும் வருகையை எதிர்பார்த்து ஜிவிக்க வேண்டும் (லூக் 21:28)
400.பாவத்தின் விளைவு
1) பாவம் நமக்கு நன்மை வராமல் தடுக்கிறது – ஏரே 5:25
2) பாவத்தினால் வியாதி வருகிறது – ரோ 5:14
3) பாவத்தின் சம்பளம் மரணம் – ரோ 6:23
4) பாவம் செய்கிற ஆத்துமா சாகும் – எசேக் 18:4
5) பாவம் மனுஷனை தீட்டுப்படுத்தும் – மாற் 7:21-23
6) பாவம் தேவனுக்கும் மனிதனுக்குமிடையே பிரிவினை உண்டாக்குகிறது – ஏசா 59:2
7) ஜெபத்துக்கு பதில் வராது – ஏசா 59:2
8) அதிக கேடு வரும் – யோ 5:14
9) பாவத்தினால் எலும்புகளில் சவுக்கியமில்லை – சங் 38:3
10) பாவம் தேவ மகிமையை இழக்க செய்யும் – ரோ 8:6
11) பாவம் செய்கிறவன் பாவத்துக்கு அடிமை – யோ 8:34
12) எந்த ஜனத்துக்கும் இகழ்ச்சி – நீதி 14:34
13) பாவங்களினால் தேவனை மறுபடியும் சிலுவையில் அறையக்கூடாது – எபி 10:26
14) நமது பெயர் ஜீவபுஸ்தகத்தில் இருந்து கிருக்கி போடப்படும் – யாத் 32:32