41. இயேசு தரும் விடுதலை
குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலை யாவீர்கள். யோவா : 8 : 36 2 கொரி : 3 : 17
இயேசு நம்மை எதில் இருந்தெல்லாம் விடுதலை செய்வார்
1. பாவத்திலிருந்து இயேசு விடுதலை தருவார் ரோமர் : 6 : 22
2. பலவீனத்திலிருந்து இயேசு விடுதலை தருவார் லூக் : 13 : 12
3. அடிமையிலிருந்து இயேசு விடுதலை தருவார். யாத் : 3 : 8
4. அக்கினியிலிருந்து இயேசு விடுதலை தருவார். தானி : 3 : 25
5. அதிகாரத்திலிருந்து இயேசு விடுதலை தருவார் கொலோ : 1 : 13
6. கட்டுகளிலிருந்து இயேசு விடுதலை தருவார் சங் : 146 : 17
7. கடனிலிருந்து இயேசு விடுதலை தருவார் மத் : 18 : 27
8. சந்துருவிலிருந்து இயேசு விடுதலை தருவார் சங் : 136 : 24, 106 : 40 சங் : 18 : 17 , 48
9. சிறையிலிருந்து இயேசு விடுதலை தருவார் ஏசா : 61 : 1, 51 : 14 லூக் : 4 : 18.
42. இயேசு பாவம் இல்லாதவர் என்பதற்கு இவர்களே சாட்சிகள்
1) யூதாஸ் → குற்றம் இல்லாத இரத்தத்தை காட்டி கொடுத்தேன் – மத் 27:4
2) பொந்தி பிலாத்து → ஒரு குற்றத்தையும் காணேன் – யோ 19:4,6
3) ஏரோது → இவனிடத்தில் குற்றம் காணவில்லை – லூக் 23:15
4) பிலாத்தின் மனைவி → அவர் நீதிமான் – மத் 27:19
5) மரிக்கும் கள்ளன் → இவர் தகாதொன்றையும் நடப்பிக்கவில்லை – லூக் 23:41
6) இயேசுவை சிலுவையில் அறைந்த 100 க்கு அதிபதி → இவர் நீதிமான் – லூக் 23:47
7) இயேசுவை சிலுவையில் அறைந்த ரோம் சிப்பாய்கள் → இவர் தேவனுடைய குமாரன் – மத் 27:54
43. இயேசு வைக்கப்பட்ட கல்லறை
மத்தேயு 28 : 6 அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்;
1. ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்பட்டிராத கல்லறை
லூக்கா 23:53, யோவான் 19:41
லூக்கா 23:53 அதை இறக்கி, மெல்லிய துப்பட்டியிலே சுற்றி, கன்மலையில் வெட்டப்பட்டதுமாய் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்படாததுமாயிருந்த ஒரு கல்லறையிலே வைத்தான்.
2. தோட்டத்தில் இருந்த புதிய கல்லறை
யோவான் 19:41 அவர் சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டமும், அந்தத் தோட்டத்தில் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்பட்டிராத ஒரு புதிய கல்லறையும் இருந்தது.
3. கன்மலையில் வெட்டியிருந்த கல்லறை
மாற்கு 15:46 அவன் போய், மெல்லிய துப்பட்டியை வாங்கிக்கொண்டுவந்து, அவரை இறக்கி, அந்தத் துப்பட்டியிலே சுற்றி, கன்மலையில் வெட்டியிருந்த
கல்லறையிலே அவரை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு கல்லைப் புரட்டிவைத்தான்.
4. முத்திரைபோட்டு, காவல் வைத்து, பத்திரப்படுத்தின கல்லறை
மத்தேயு 27:66 அவர்கள் போய்க் கல்லுக்கு முத்திரைபோட்டு, காவல் வைத்து, கல்லறையைப் பத்திரப்படுத்தினார்கள்
5. கல் வைத்து அடைத்திருந்த கல்லறை
யோவான் 20:1 வாரத்தின் முதல்நாள் காலையில், அதிக இருட்டோடே, மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்துப்போட்டிருக்கக்கண்டாள்.
6. சமீபமாயிருந்த கல்லறை
யோவான் 19:42
யூதருடைய ஆயத்தநாளானபடியினாலும், அந்தக் கல்லறை சமீபமாயிருந்த
படியினாலும், அவ்விடத்திலே இயேசுவை வைத்தார்கள்.
7. திறந்திருக்கும் கல்லறை
லூக்கா 24:2
கல்லறையை அடைத்திருந்த கல் புரட்டித் தள்ளப்பட்டிருக்கிறதைக் கண்டு,
44. இயேசுவில் நிலைத்திருப்பதால் நமக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள்
1) தேவனோடு ஐக்கியப்படுகிறோம் – யோ 15:4
2) கனி கொடுப்போம் – யோ 15:4
3) மிகுந்த கனி கொடுப்போம் – யோ 15:5
4) ஜெபத்துக்கு பதில் உடனே கிடைக்கும் – யோ 15:7
5) இரகசியங்களை அறியும் அறிவு கிடைக்கிறது – யோ 15:15
6) பாவம் செய்ய மாட்டான் – 1 யோ 3:6
7) வருகையில் எடுத்து கொள்ளப்படுவான் – 1 யோ 2:28,29
இயேசுவில் எப்படி நிலைத்திருக்க முடியும்
1) பரிசுத்த ஆவியின் மூலம் அவருக்குள் நிலைத்திருக்க முடியும் – 1 யோ 4:13
2) கேட்டதில் நிலைத்திருந்தால் அவருக்குள் நிலைத்திருக்க முடியும் – 1 யோ 2:24
3) தேவ அன்பில் நிலைத்திருந்தால் அவருக்குள் நிலைத்திருக்க முடியும் – 1 யோ 4:16
4) கனி கொடுப்பதினால் அவருக்குள் நிலைத்திருக்கிறோம் – யோ 15:5
5) இயேசு நடந்தபடி நடப்பதினால் அவருக்குள் நிலைத்திருக்கிறோம் – 1 யோ 2:6
45. இயேசுவின் இரத்தத்தின் ஆசிர்வாதங்கள்
1) பாவமன்னிப்பு உண்டாக்கும் இரத்தம் (மத் 26:28)
2) இரத்தத்தின் மூலம் மீட்பு (எபேசு 1:7)
3) இரத்தத்தின் மூலம் நீதிமான் (ரோ 5:9)
4) இரத்தத்தின் மூலம் சமீபம் (எபேசி 2:13)
5) இரத்தத்தின் மூலம் சமாதானம் (ஒப்புரவு) (கொலோ 1:20)
6) இரத்தம் மனசாட்சியை சுத்திகரிக்கிறது (கழுவுகிறது) (எபி 9:14)
7) இரத்தத்தினால் வஸ்திரத்தை சுத்தப்படுத்துதல் (வெளி 7:14)
8) விடுதலை கொடுக்கும் இரத்தம் (சகரியா 9:14)
9) பரிசுத்தபடுத்தும் இரத்தம் (எபி 13:12)
10) இரத்தத்தினால் தைரியம் (எபி 10:19,20)
11) இரத்தத்தின் மூலம் பரிசுத்த ஸ்தலத்தில் சேருதல் (எபி 10:19,20)
12) ஜெயமளிக்கும் இரத்தம் (வெளி 12:11)
13) நித்திய ஜீவன் (ரோ 6:54)
14) அவரில் நிலைக்க செய்கிற இரத்தம் (யோ 6:56)
15) ஐக்கியபடுத்தும் இரத்தம் (1 கொரி 10:16)
16) இயேசுவை நினைவு கூற செய்யும் இரத்தம் (1 கொரி 11:25)
17) சகல பாவங்களையும் நம்மை விட்டு நீக்கும் இரத்தம் (1 யோ 1:7)
18) நம்மை சுத்திகரிக்கும் இரத்தம் (1 யோ 1:7)
19) செத்த கிரியைகளை நீக்கும் இரத்தம் (எபி 9:14)
20) ஊழியம் செய்ய வைக்கும் இரத்தம் (எபி 9:14)
46. இயேசுவின் ஞானஸ்நானம்
1) இயேசு யோவான்ஸ்தானகனிடம் ஞானஸ்நானம் பெற்றார் – மத் 3:13
2) இயேசு தண்ணிரில் மூழ்கி ஞானஸ்நானம் பெற்றார் – மத் 3:16 மாற் 1:10
3) இயேசு 30வது வயதில் ஞானஸ்நானம் பெற்றார் – லூக் 3:21-23
4) இயேசு ஞானஸ்நானம் பெற்றதின் முலமாக தேவநீதியை நிறைவேற்றினார் – மத் 3:15
5) இயேசுவுக்கு வானம் திறக்கப்பட்டது – மத் 3:16
6) தேவ ஆவியானவர் புறாவை போல இறங்கி தம் மேல் வருவதைக் கண்டார் – மத் 3:16
7) இயேசுவை குறித்து பிதா சாட்சி கொடுத்தார் – மத் 3:17
8) இயேசுவின் அடிச்சுவடுகளை தொடர்ந்து வரும்படி நமக்கு அவர் மாதிரியை வைத்து போனார் – 1 பேது 2:21
9) இயேசு ஞானஸ்நானத்தை குறித்து போதித்தார் – யோ 3:5
10) இயேசு ஞானஸ்நானம் கொடுத்தார் – யோ 3:22, 4:1
47. இயேசுவின் பாதம் ஒன்றே போதும்
1. இயேசுவின் பாதத்தில் அமர்ந்திடுங்கள்
லூக்கா 10:38,39 மார்த்தாள் இயேசுவைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டாள். அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள்; அவள் இயேசுவின்
பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள்
லூக்கா 8:35 பிசாசுகள் விட்டுப்போன மனுஷன் வஸ்திரந்தரித்து இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து புத்தித்தெளிந்திருக்கிறதைக் கண்டு பயந்தனர்
2. இயேசுவின் பாதத்தில் விழுந்திடுங்கள்
மாற்கு 5:22 ஜெபஆலயத்தலைவரில் ஒருவனாகிய யவீரு என்பவன் வந்து,அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்திலே விழுந்து:
மாற்கு 7:25 அசுத்த ஆவி பிடித்திருந்த ஒரு சிறுபெண்ணின் தாய் அவரைக்குறித்துக் கேள்விப்பட்டு, வந்து அவர் பாதத்தில் விழுந்தாள்
லூக்கா 17:16 சமாரியன் அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து
யோவான் 11:32 இயேசு இருந்த இடத்தில் மரியாள் வந்து, அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்தில் விழுந்து:
3. இயேசுவின் பாதத்தில் வைத்திடுங்கள்
மத்தேயு 15:30; மாற்கு 6:56 அப்பொழுது, சப்பாணிகள், குருடர், ஊமையர், ஊனர் முதலிய
அநேகரை, திரளான ஜனங்கள் கூட்டிக்கொண்டு இயேசுவினிடத்தில் வந்து, அவர்களை
அவர் பாதத்திலே வைத்தார்கள்; அவர்களை அவர் சொஸ்தப்படுத்தினார்.
4. இயேசுவின் பாதத்தைக் கழுவிடுங்கள்
லூக்கா 7:38; யோவான் 12:3 மரியாள் அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரால்
நனைத்து, தன் தலை மயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து,
பரிமளதைலத்தைப் பூசினாள்
யோவான் 11:2 கர்த்தருக்குப் பரிமளத்தைலம் பூசி, தன் தலைமயிரால் அவருடைய
பாதங்களைத் துடைத்தவள் அந்த மரியாளே
5. இயேசுவின் பாதத்தைத் தழுவிடுங்கள்
மத்தேயு 28:9 அவர்கள் (மகதலேனா மரியாளும், மற்ற மரியாளும்) அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப்போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்ப்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள்
48. இயேசுவின் போதனை ஏன் பயனுள்ளதாய் இருக்கிறது ?
1) அவர் ஜனங்களை மரியாதையுடன் நடத்தினார்.
(மாற்கு 10:25-46)
2) அவர் தெளிவாகப் பேசினார்.
(யோவான் 3: 1-3, 4:1-4)
3) அவர் இரக்கத்தோடு பேசினார்.
( மாற்கு 8:2; லூக்கா 13:34)
4) அவர் பாரபட்சம் காட்டவில்லை.
(மத் 8:2,3; மாற்கு 10:21 )
5) அவர் அதிகாரம் உடையவராக பேசினார்.
(மத்தேயு 7 :28, 29; 4:4-10)
6) அவர் போதித்தது போலவே வாழ்ந்தும் காட்டினார்.
( எபி 4:15; 7:26; யோவான் 8: 29; 1 பேதுரு 1: 19)
49. இயேசுவை போல – நாமும்
1) ஸ்தோத்தரிக்க (துதிக்க) வேண்டும் – ரோ 11:41
2) ஜெபிக்க வேண்டும் – லூக் 22:41,42
3) கீழ்படிய வேண்டும் – பிலி 2:8, எபி 5:8
4) அன்பு கூர வேண்டும் – யோ 13:1,34
5) மன்னிக்க வேண்டும் – லூக் 23:34
6) ஞானமாய் பேச வேண்டும் – லூக் 20:22-25
7) பிதாவின் சித்தம் செய்ய வேண்டும் – யோ 4:34
8) மனது உருக வேண்டும் – மத் 9:36
9) கடிந்து கொள்ள வேண்டும் – மத் 23:13,27
10) போதிக்க வேண்டும் – மத் 7:28
11) வைராக்கியம் வேண்டும் – லூக் 19:45,46
12) கிரியை நடப்பிக்க வேண்டும் – மத் 8:16
13) சாந்தமாக இருக்க வேண்டும் – மத் 11:29
14) பொறுமையாக இருக்க வேண்டும் – 2 தெச 3:5, ஏசா 50:6
15) பரிசுத்தமாய் ஜீவிக்க வேண்டும் – 1 பேதுரு 1:16
16) வீண் வார்த்தை பேச கூடாது – லூக் 20:26
17) தாயை கனம் பண்ண வேண்டும் – யோ 19:26
50. இரட்சிப்பு
அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பெயரிடு வாயாக, ஏனெனில் அவர் தமது ஜனங்களி
ன் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் மத் 1 : 20
1. பாவமன்னிப்பாகிய இரட்சிப்பு
லூக் 1 : 77, எபே 1 : 7
2. நோய்களிலிருந்து விடுதலையாகிய இரட்சிப்பு யாக் 5 : 15
3. அற்புதமாகிய இரட்சிப்பு 1 சாமு 2 : 1
4. பொருளாதார செழிப்பாகிய இரட்சிப்பு 2 இராஜா 6 : 26 , 27
5. நீடித்த ஆயுளாகிய இரட்சிப்பு சங் 91 : 16
6. சத்துருக்களை முறியடித்தலாகிய இரட்சிப்பு யாத் 14 : 13 , 14
7. ஆபத்திலிருந்து அழிவிலிருந்து காக்கும் இரட்சிப்பு எபி 9 : 28.