பிரசங்க குறிப்புகள் 411-420

411.பிள்ளையை எப்படி வளர்க்கவேண்டும் ? நியாயாதிபதிகள் 13:12

1. பிள்ளைகளைக் கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் வளர்ப்பீர்களாக

– எபேசியர் 6 : 4

2. சிட்சித்து வளர்க்க வேண்டும்

– நீதி 19 : 18, நீதி 29:17, நீதி 3:12 ஏலி தன் குமாரர் தவறு செய்ததை அறிந்தும் அடக்கவில்லை அவர்கள் இஷ்டத்திற்கு விட்டு விட்டான் – 1 சாமுவேல் 3:13

3. பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து –

நீதி 22 : 6 நோவாவை போல பிள்ளைகளை கர்த்தருக்குள் எச்சரித்து நடத்து, குடும்பமாக பேழைக்குள் பிரவேசித்தான்

4. பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து நடத்து

– உபா 6 : 6-7 ஆபிரகாம் போதித்தான் தன் பிள்ளைகளுக்கு – ஆதி 18:19

5. தன் இஷ்டத்திற்கு பிள்ளைகளை விடாமல் நடத்த வேண்டும்

– நீதி 29 : 15 தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட சிம்சோன் – நியா 14:2,3

6. பிள்ளைகளுக்காக தினமும் விண்ணப்பம் செய்ய வேண்டும்

– ஆதி 17:20 ஆபிரகாம் தன் குமாரன் இஸ்மவேலுக்காக விண்ணப்பம் செய்தான்

7. பிள்ளைகளின்மேல் இயேசு கைகளை வைத்து ஜெபம்

பண்ணும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்

– மத்தேயு 19 : 13,14,

இயேசுவின் தாய் தகப்பன் ஆலயத்திற்கு பிள்ளையாகிய இயேசுவையும் கூட்டி கொண்டு போனார்கள் – லூக்கா 2:41-43

412.பின்மாற்றத்திற்கான அறிகுறிகள்

1) ஜெபம் குறைதல் – யோபு 15:4

2) வேத வசன தியானம் குறைதல் – யோபு 15:4

3) கர்த்தருடைய வசனத்தில் விருப்பமில்லாமை – ஏரே 6:10

4) சபைகூடி வருவதை விட்டு விடுதல் – எபி 10:25

5) வீண் சிந்தனைகள் – சங் 119:113

6) ஆகாத சம்பாஷணைகள் – 1 கொரி 15:33

7) மற்றவர்களின் குற்றத்தை காண்பது – ரோ 2:1

8) முன் கோபம் – நீதி 14:17

9) மனமேட்டிமை – நீதி 18:12

10) உலக அன்பு, உலக மனிதர்கள் மேல் அன்பு அதிகமாகுதல் – 1 யோ 2:15

413.பின்மாற்றம் ஆதி19.26

1 . இச்சை ஆதி13.10

2. மறுதலிப்பு மத்26.70

3. அகந்தை நீதி 16.18

4. சுயநலம் நீதி 14.14

5. விக்கிரக வழிபாடு யாத் 32.8

6. கீழ்படியாமை 1சாமு 15.11

7. பொருளின் மீது அன்பு யோசு 7.1-24

8. பணத்தின் மீது அன்பு யோ13.29

9. உலகத்தின் மீது அன்பு 2தீமோ 4.10

10. அதிகாரத்தின் மீது ஆசை அப் 8.19

32.புகழ்ச்சி உபாகமம் 26:19

1.விசுவாசம் சோதிக்கப்பட்டு வெளிப்படும் போது புகழ்ச்சி உண்டாகும்.(விசுவாசத்தை கடைசி வரை பற்றிக்கொள்ள வேண்டும்) 1 பேதுரு 1:7

2. நன்மை செய்தால் புகழ்ச்சி உண்டாகும் ரோமர் 13:3

3.இருதயங்களின் யோசனைகளின்படி புகழ்ச்சி உண்டாகும் 1 கொரிந்தியர் 4:5

4. சகித்துக் கொண்டால் புகழ்ச்சி உண்டாகும்.செப்பனியா 3:19

5. நமது மனச்சாட்சி சொல்லும் சாட்ச்சியே நமக்கு புகழ்ச்சி உண்டாகும். 2 கொரிந்தியர் 1:12

414.புத்தி

புத்தியும் & பெண்களும்

1) புத்தியுள்ள மனைவி கர்த்தர் அருளும் ஈவு – நீதிமொழிகள் 19:14

2) புத்தியுள்ள ஸ்திரி வீட்டை கட்டுகிறாள் – நீதிமொழிகள் 14:1

3) புத்தியில்லாத ஸ்திரி தன் கைகளினால் வீட்டை இடித்து போடுகிறாள் – நீதிமொழிகள் 14:1

4) ஸ்திரிகள் தெளிந்த புத்தியுள்ளவர்களாக இருக்க வேண்டும் – 1 தீமோ 3:11

415.புத்தி எதின் மூலம்

1) தேவ குமாரன் மூலம் – 1 யோ 5:20

2) பரிசுத்த ஆவி மூலம் – 2 தீமோ 1:7

3) இரவும், பகலும் வேத வசனத்தை தியானிப்பதால் – யோசுவா 1:8

4) வயது சென்றவர்கள் மூலம் – யோபு 12:12

5) தகப்பன் மூலம் – நீதி 1:8

6) பொல்லாப்பை விட்டு விலகுவதின் மூலம் – யோபு 28:28

416.புத்தியை

1) வாங்கு – நீதி 23:23

2) சம்பாதிக்க வேண்டும் – நீதி 3:13

3) புத்தியை காக்கிறவன் நன்மையடைவான் – நீதி 9:8

4) புத்தியை கொண்டு காரியத்தை நடப்பிக்க வேண்டும் – 1 சாமு 18:5

417.புத்தியுள்ள

1) புத்தியுள்ள மனுஷன் – மத்தேயு 7:24

2) புத்தியுள்ள கன்னிகை – மத்தேயு 25:4

3) புத்தியுள்ள சிற்பாசாரி – 1 கொரி 3:10

4) புத்தியுள்ள ஸ்திரி – நீதி 14:1

5) புத்தியுள்ள மனைவி – நீதி 19:14

6) புத்தியுள்ள மகன் – நீதி 10:5

7) புத்தியுள்ள வேலைக்காரன் – நீதி 17:2

8) புத்தியுள்ள மறு உத்தரவு – நீதி 26:16

9) புத்தியுள்ள ஆராதனை – ரோ 12:1

418.புத்தியின் ஆசீர்வாதம்

1) புத்தியினால் பொருள் சம்பாதிக்கலாம் – எசேக் 28:4

2) புத்தி நம்மை பாதுகாக்கும் – நீதி 2:11

3) புத்தி தன்னை உடையவர்களுக்கு ஜீவ ஊற்று – நீதி 16:22

4) புத்தியுள்ளவர்கள் வருகையில் பிரவேசிப்பார்கள் – மத் 25:6-8

419.புத்தியோடு இணைந்தது

1) புத்தியும் தேவ சமாதானமும் – பிலி 4:7

2) புத்தியும் தேறுதலும் – 1 தெச 2:12

3) புத்தியும் தெளிவும் – 1 தீமோ 1:7

4) புத்தியும் ஆறுதலும் – 1 கொரி 14:3

5) புத்தியும் வெளிச்சமும் – தானி 5:14

6) புத்தியும் அறிவும் – தானி 5:12

420.புத்தி சொல்ல வேண்டும் யாருக்கு

1) ஒழுங்கில்லாதவர்களுக்கு – 1 தெச 5:14

2) வேலைக்காரர்களுக்கு – தீத்து 2:9,10

3) சபை கூடி வருதலை விட்டு விடுகிறவர்களுக்கு – எபி 10:25

4) பாலிய புருஷர்களுக்கு – தீத்து 2:6

5) ஸ்திரிகளுக்கு – தீத்து 2:5

6) முதிர் வயதுள்ள புருஷர்களுக்கு – தீத்து 2:2

7) முதிர் வயதுள்ள ஸ்திரிகளுக்கு – தீத்து 2:5

8) ஒருவருக்கொருவர் – ரோ 15:14

9) எந்த மனுஷனுக்கும் – கொலோ 1:28

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *