பிரசங்க குறிப்புகள் 421-430

421.புத்தி சொல்ல வேண்டும் எப்படி

1) ஞானமாய் – நீதி 25:12

2) இடைவிடாமல் – அப்போ 20:31

3) நாடோறும் – எபி 3:13

4) வேத வசனத்தைக் கொண்டு – தீத்து 1:9

5) கடிந்து கொண்டு – 2 தீமோ 4:2

6) சகோதரனாக எண்ணி – 2 தெச 3:15

422.புத்தி சொல்ல வேண்டும் எதற்கு

1) புற ஜாதிகள் மத்தியில் நல்நடக்கையுள்ளவர்களாய் நடக்கும்படி – 1 பேதுரு 2:12

2) அமைதலுள்ளவர்களாயிருக்கும்படி – 1 தெச 4:12

3) கற்றுக் கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய் பிரிவினைகளையும், இடறல்களையும் உண்டாக்குபவர்களை விட்டு விலக வேண்டும் என்று – ரோ 16:17

4) விசுவாசத்தில் நிலைத்திருக்கும்படி – அப் 14:22

5) ஜெபிக்கும்படி – 1 தீமோ 2:1

6) புருஷர்களுக்கு கீழ்படியும்படி – தீத்து 2:5

7) வீட்டில் தரித்திருக்கும்படி – தீத்து 2:5

8) அழைக்கப்பட்ட அழைப்புக்கு பாத்திரவான்களாக நடக்கும்படி – எபேசு 4:1

9) தேவனுடைய கிருபையில் நிலை கொண்டிருக்கும்படி – அப் 13:42

10) மாறுபாடுள்ள சந்ததியை விட்டு விலகும்படி – அப் 2:40

11) விசுவாசத்திலும், அன்பிலும், பொறுமையிலும் ஆரோக்கியமுள்ளவர்களாக இருக்குமபடி – தீத்து 2:2

12) சபைக்கு ஏன் இந்த வாரம் ஆராதனைக்கு வரவில்லை என்றும் சபை கூடி வருவதை விட்டு விடக் கூடாது என்றும் – எபி 10:25

13) இயேசுவின் வருகை சமீபம் என்று – எபி 10:25

423.புத்திமான்

1) புத்திமான் தன் உதடுகளை அடக்குகிறான் – நீதி 10:19

2) புத்திமான் தன் வாயை அடக்கி கொண்டு இருக்கிறான் – நீதி 11:12

3) புத்திமான் தன் உதடுகளை மூடுவான் – நீதி 17:28

4) புத்திமான் மெளனமாயிருப்பான் – ஆமோஸ் 5:13

5) நீடிய சாந்தமுள்ளவன் – நீதி 14:29

6) அறிவில் தேறுவான் (தேவனை பற்றிய அறிவு) – நீதி 1:5

424.தெளிந்த புத்தி எதற்கு தேவை ?

1) பிசாசின் தந்திரங்களை அறிய (1 பேது 5:8)

2) பாவம் செய்யாமல் இருக்க (1 கொரி 15:34)

3) நமது நிலையை அறிய (லூக் 15:17)

4) ஜெபம் பண்ண (1 பேது 4:7)

5) வருகையில் பிரவேசிக்க (1 பேது 1:13)

425.புத்திமான் எவைகளில்

1) போகும் இடமெல்லாம் புத்திமான் – யோசு 1:7

2) செய்கைகளிலெல்லாம் புத்திமான் – 1 சாமு 18:1

3) எல்லாவற்றிலேயும் புத்திமான் – 1 இராஜ 2:3

4) எல்லாரை பார்க்கிலும் புத்திமான் – 1 சாமு 18:30

426.புத்தியுள்ள சிந்தை

நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை தரித்துக் கொள்ளுங்கள். 1 பேது 4 : 1

எவைகளிலெல்லாம் புத்தியுள்ள சிந்தை இருக்க வேண்டும் ?

1. ஜெபம் பண்ணுவதில் புத்தியுள்ள சிந்தை இருக்க வேண்டும் 1 பேது 4 : 7

2. ஆராதனை செய்வ தில் புத்தியுள்ள சிந்தை இருக்க வேண்டும் ரோமர் 12 : 1

3. பரிசுத்த ஆவியைக் குறித்து புத்தியுள்ள சிந்தை இருக்க வேண்டும் 2 தீமோ 1 : 7

4. சரியான சத்தியத்தை உபதேசிக்கிறதிலே மற்றும் கேட்கிறதிலே புத்தியுள்ள சிந்தை இருக்க வேண்டும் 2 தீமோ 3 : 8

5. கர்த்தருடைய சித்தத்தை உணர்ந்து கொள்ளும்படியான புத்தியுள்ள சிந்தை இருக்க வேண்டும் எபே 5 ; 17

6. அற்பணிப்பிலே தெளிந்த புத்தியுள்ள சிந்தை இருக்க வேண்டும். மத் 19 : 27 , 28

427.புத்தியுள்ள மனைவி நீதி 19 : 14 நீதி 14 : 1 நீதி 31 : 10 , 30 1 பேது 3 : 7

புத்தியுள்ள மனைவி

அபிகாயில்.

1. அபிகாயில் உபசரிக்கிறவள் 1 சாமு : 25 : 18 ரெபாக்கள் கொடுக் கிறவள். ஆதி 24 : 46

2. அபிகாயில் நாவில் அடக்கமுள்ளவள் 1 சாமு 25 : 19 நீதி 31 : 26. ஞானம் விளங்க திறக்கிறவள்

3. அபிகாயில் பயபக்தியுள்ளவள் 1 சாமு 25 : 23 , 24 எபே 5 : 33 1 தீமோ 2 : 12

4. அபிகாயில் மன்னிப்பு கேட்கிறவள் 1 சாமு 25 : 28

5. அபிகாயில் தேவனுடைய வார்த்தையை அறிந்திருந்தவள் 1 சாமு 25 : 30. ஆசீர்வாதம் 1 சாமு : 25 : 32 — 35

428.புறாக்கள் மூலம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஆவிக்குரிய சத்தியங்கள்

1) நற்செய்தி கொண்டு வந்த புறா (ஆதி 8-11)

தண்ணீர் வற்றி விட்டது என்ற நற்செய்தியை புறா கொண்டு வந்தது. நாமும் எப்பொழுதும் மற்றவர்களுக்கு நற்செய்தியையே கூற வேண்டும். துர்செய்தி நமது வாயில் இருந்து வரவே கூடாது. (எண் 13:33, 14:1-3)

2) தீட்டுபடாத புறா

நோவா முதலில் காகத்தை பேழையில் இருந்து வெளியே விட்டான். அதற்கு வேண்டிய ஆகாரங்கள் (பிணங்கள்) கிடைத்தபடியால் பேழைக்குள் வரவில்லை. ஆனால் வெளியே போன புறா அசுத்தமான பிணங்களை உண்டு தன்னை தீட்டு படுத்தவில்லை. மீண்டும் பேழைக்கு வந்தது.

3) புறா கன்மலை வெடிப்புகளிலும், சிகரங்களீன் மறைவிடத்தில் தங்கும் – உன் 2-14

கன்மலை வெடிப்பு பாடு, தேவ பிள்ளைகளுக்கு இந்த உலகத்தில் பாடுகள் உண்டு. பாடுகளில் சோர்ந்து போக கூடாது.

4) புறா கபடற்ற பறவை (மத் 10-16)

புறாவை போல நாமும் கபடற்றவர்களாக இருக்க வேண்டும். கபடு நமக்கு தீங்கிழைக்க முற்படுகிறவர்கள் மேல் யாதொரு கசப்பும், வைராக்கியமும் இன்றி கபடற்றவர்களாய் நம்மை காத்து கொள்ள வேண்டும்.

5) புறா எப்போதும் புலம்பி கூவி கொண்டிருக்கும் (ஏசா 38-14, 59-11)

இது ஜெப ஜிவியத்தை காட்டுகிறது. ஜெபம் நமக்கு ஒரு ஆயுதமாக இருக்கிறது. நாம் யுத்த களத்தில் இருக்கிறோம் – எபேசி 6:11-13

6) புறா சத்தம் (துதி) எழுப்பும் பறவை (உன் 2-12)

தாவீது துதியின் சத்தத்தை தொனிக்க பண்ணுவேன் என்கிறான் (சங் 26-8) நமது கூடாரத்தில் இரட்சிப்பின் கெம்பிர சத்தம் காணப்பட வேண்டும் (சங் 118-15). துதியின் சத்தம் எப்போதும் நமது உள்ளத்தில் இருக்க வேண்டும்.

7) புறா பயந்த சுபாவம் கொண்டது (ஓசியா 11-11)

தேவபயம் நமது வாழ்க்கையில் எப்போதும் காணப்பட வேண்டும்

8) இயேசுவுக்கு பலியாக மாறின புறாக்கள் (லூக் 2-24)

நாமும் நமது அவயங்களை தேவனுக்கு ஜீவ பலியாக ஒப்புக் கொடுக்க வேண்டும் (ரோ 12-1)

9) தண்ணீர் நிறைந்த நதிகள் ஒரமாய் தங்கும் புறா (உன் 5-12)

நமது வேர் நீர்க்கால்கள் ஒரமாக இருக்க வேண்டும் (ஏரே 17-8). அப்போதுதான் கனி கொடுக்க முடியும். நீர்க்கால்கள் ஒரமாக நமது வேர் செல்ல நாம் வேதத்தில் பிரியமாயிருந்து இரவும் பகலும் தியானிக்க வேண்டும். (சங் 1-3)

10) பலகணி துவாரங்களுக்கு திவிரிக்கிற புறா (ஏசா 60-8)

புறாக்கள் மாலை மயங்கும் வேளையில் தங்கள் கூடுகளை நோக்கி திவிரித்து செல்லும் இரகசிய வருகையில் ஆண்டவரை சந்திக்க பறந்து சொல்வோம் (1 தெச 4-17, ஏசா 60-8)

11) மணவாட்டியை வேத வசனம் புறாவுக்கு ஒப்பிடுகிறது – உன் 6-9

429.புஷ்டியுள்ள எலும்பு (லேவியராகமம் 17:11).

நம் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. இந்த எலும்புகள் நன்றாக இருந்தால் நாம் நல்ல ஆரோக்கியமான சுகத்தில் இருக்கிறோம் என்று அர்த்தம். எலும்புகளில் ஏதாவது பிரச்சனை இருந்தால், அது மொத்த ஆரோக்கியத்திற்கே பிரச்சனையாகும். ஏனென்றால், எலும்புகளில் உள்ளே காணப்படும் Bone Marrow என்னும் இரத்தம் உற்பத்தியாகும் இடம் இந்த எலும்புகளிலே ஆகும். மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது என்று வேதம் நமக்கு போதிக்கின்றது. இந்த இரத்தமே ஆத்துமாவிற்காக பாவநிவிர்த்தி செய்கிறதாகும். வேதத்தில் எலும்புகளை குறித்து எழுதப்பட்டிருக்கிறதா? என்று பார்த்தால், அநேக காரியங்கள் நம்முடைய எலும்பை பாதிக்கிறதையும் அதினிமித்தம் மொத்த ஆரோக்கியமே கெடுவதையும் குறித்தும் தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது.

கெட்ட செய்தி கேட்கும்போது, எலும்புகளில் உக்கல் (Rottenness) உண்டாகிறது. ‘நான் கேட்டபொழுது என் குடல் குழம்பிற்று; அந்தச் சத்தத்துக்கு என் உதடுகள் துடித்தது; என் எலும்புகளில் உக்கல் உண்டாயிற்று; என் நிலையிலே நடுங்கினேன்; ஆனாலும் எங்களோடே எதிர்க்கும் ஜனங்கள் வரும்போது, இக்கட்டுநாளிலே நான் இளைப்பாறுதல் அடைவேன்’. – (ஆபகூக் 3:16).

2. இலச்சை (வெட்கம்) எலும்பை உருக செய்யும். குணசாலியான ஸ்தீரி தன் புருஷனுக்குக் கிரீடமாயிருக்கிறாள்; இலச்சை உண்டுபண்ணுகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாயிருக்கிறாள். – (நீதிமொழிகள் 12:4).

நிந்தனை எலும்புகளை பட்டயத்தால் உருவ குத்துவது போல இருக்கும். ‘உன் தேவன் எங்கே என்று என் சத்துருக்கள் நாள்தோறும் என்னோடே சொல்லி, என்னை நிந்திப்பது என் எலும்புகளை உருவக்குத்துகிறதுபோல் இருக்கிறது. – (சங்கீதம் 42:10).

சாபம் எலும்புகளில் சுடுகின்ற எண்ணை பாய்வது போல இருக்கும். சாபத்தை அவன் தனக்கு அங்கியாக உடுத்திக்கொண்டான்; அது அவன் உள்ளத்தில் தண்ணீரைப்போலவும், அவன் எலும்புகளில் எண்ணெயைப்போலவும் பாயும். – (சங்கீதம் 109:18).

அறிக்கையிடாத பாவம் எலும்புகளை உலர பண்ணும். நான் அடக்கிவைத்தமட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று. – (சங்கீதம் 32:3).

பாவம் எலும்புகளை பெலவீனப்படுத்தும். ‘உமது கோபத்தினால் என் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை; என் பாவத்தினால் என் எலும்புகளில் சவுக்கியமில்லை’. – (சங்கீதம் 38:3).

பொறாமை எலும்புகளை உருக வைக்கும். சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன்; பொறாமையோ எலும்புருக்கி. – (நீதிமொழிகள் 14:30).

முறிந்த ஆவி எலும்புகளை உலர பண்ணும். மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும். – (நீதிமொழிகள் 17:22).

வேதனையின் நாட்கள் நெருப்பை போல எலும்புகளில் எரியும். என் நாட்கள் புகையைப்போல் ஒழிந்தது; என் எலும்புகள் ஒரு கொள்ளியைப்போல் எரியுண்டது. – (சங்கீதம் 102:3).

பயம் எலும்புகளை நடுங்க வைக்கும். ‘திகிலும் நடுக்கமும் என்னைப் பிடித்தது, என் எலும்புகளெல்லாம் நடுங்கினது’. – (யோபு 4:14).

பாவம் எலும்புகளை நிறைத்து விடும். ‘அவன் எலும்புகள் அவனுடைய வாலவயதின் பாவங்களினால் நிறைந்திருந்து, அவனோடேகூட மண்ணிலே படுத்துக்கொள்ளும்’. – (யோபு 20:11).

தேவனுடைய தண்டனை எலும்புகளில் அதிக வேதனையை கொடுக்கிறது. அவன் தன் படுக்கையிலே வாதையினாலும், தன் சகல எலும்புகளிலும் அகோரமான நோவினாலும் தண்டிக்கப்படுகிறான். – (யோபு 33:19).

ஆத்துமாவின் உபத்திரவம் எலும்புகளை துளைக்கிறது. இராக்காலத்திலே என் எலும்புகள் துளைக்கப்பட்டு, என் நரம்புகளுக்கு இளைப்பாறுதல் இல்லாதிருக்கிறது. – (யோபு 30:17).

அக்கிரமங்கள் எலும்புகளின் மேல் இருக்கும். அவர்கள் தங்கள் பட்டயங்களைத் தங்கள் தலைகளின்கீழ் வைத்தார்கள்; ஆனாலும் அவர்களுடைய அக்கிரமம் தங்கள் எலும்புகளின்மேல் இருக்கும். – (எசேக்கியேல். – 32:27).

சஞ்சலமும் அக்கிரமத்தினாலும் எலும்புகள் உலர்ந்து போகும். என் பிராணன் சஞ்சலத்தினாலும், என் வருஷங்கள் தவிப்பினாலும் கழிந்து போயிற்று; என் அக்கிரமத்தினாலே என் பெலன் குறைந்து, என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று. – (சங்கீதம் 31:10).

16.பாவத்தின் சாபம் எலும்புகளை கட்டு விட செய்யும். ‘தண்ணீரைப்போல் ஊற்றுண்டேன்; என் எலும்புகளெல்லாம் கட்டுவிட்டது, என் இருதயம் மெழுகுபோலாகி, என் குடல்களின் நடுவே உருகிற்று’. – (சங்கீதம் 22:14).

ஆனால் சில காரியங்கள் எலும்பை பெலப்படுத்துகின்றன. அவை:

கர்த்தருக்கு பயப்படுதல் எலும்புக்கு ஊனாகும் (Bone Marrow). நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு. அது உன் நாபிக்கு ஆரோக்கியமும், உன் எலும்புகளுக்கு ஊனுமாகும். – (நீதிமொழிகள் 3:7-8).

நற்செய்தி எலும்புகளைப் புஷ்டியாக்கும். – (நீதிமொழிகள் 15:30).

இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு மதுரமும், எலும்புகளுக்கு ஒளஷதமுமாகும். – (நீதிமொழிகள் 16:24).

ஆரோக்கிய வாழ்வு எலும்புகளை புஷ்டியாக்குகிறது. ‘அவனுடைய பால்பாத்திரங்கள் பாலால் நிரம்பியிருக்கிறது, அவன் எலும்புகளின் ஊன் புஷ்டியாயிருக்கிறது’. – (யோபு 21:24).

சுத்த மனசாட்சி எலும்புகளை களிகூர செய்யும். நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூரும். – (சங்கீதம் 51:8).

நம் தேவன் நம் எலும்புகளை காப்பாற்றுகிறார். ‘அவனுடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறார் அவைகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை’. – (சங்கீதம் 34:20).

7. சமாதானமும் தேறுதலும் எலும்பை செழிக்க வைக்கும். ‘நீங்கள் அதைக் காணும்போது, உங்கள் இருதயம் மகிழ்ந்து, உங்கள் எலும்புகள் பசும்புல்லைப்போலச் செழிக்கும்; அப்பொழுது கர்த்தருடைய ஊழியக்காரரிடத்தில் அவருடைய கரமும், அவருடைய சத்துருக்களிடத்தில் அவருடைய சினமும் அறியப்படும்’. – (ஏசாயா 66:14).

பசியுள்ளவரையும், சிறுமையானவர்களையும் திருப்தியாக்கினால் எலும்புகள் நிணமுள்ளதாகும். பசியுள்ளவனிடத்தில் உன் ஆத்துமாவைச் சாய்த்து, சிறுமைப்பட்ட ஆத்துமாவைத் திருப்தியாக்கினால், அப்பொழுது இருளில் உன் வெளிச்சம் உதித்து, உன் அந்தகாரம் மத்தியானத்தைப்போலாகும். கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய். ஆமென் அல்லேலூயா!

430.பெண்கள் இடம் இருக்க வேண்டிய நல்ல குணங்கள

1) அதிகாலையில் எழும்ப வேண்டும் (சூரியன் உதிக்கும் முன்னதாக) – நீதி 31:15

2) ஏழைகளுக்கு உதவ வேண்டும் – நீதி 31:20

3) புருஷன் சாட்சி கொடுக்க வேண்டும் – நீதி 31:29

4) தேவ பயம் காணப்பட வேண்டும் – நீதி 31:30

5) குணசாலியாக இருக்க வேண்டும் – நீதி 12:4

6) புருஷனுக்கு கிரிடமாக இருக்க வேண்டும் – நீதி 12:4

7) நல்லொழுக்கம் காணப்பட வேண்டும் – நீதி 11:16

8) பயபக்தி காணப்பட வேண்டும் – எபேசி 5:33

9) சாந்த குணம் வேண்டும் – 1 பேது 3:4

5) புருஷருக்கு கீழ்படிய வேண்டும் – கொ 3:18

10) அடக்கம் – 1 தீமோ 2:11

11) அமைதல் – 1 தீமோ 2:12

12) நாணம் – 1 தீமோ 2:10

13) தெளிந்த புத்தி – 1 தீமோ 2:10

14) நற்கிரியைகள் – 1 தீமோ 2:10

15) தேவ பக்தி – 1 தீமோ 2:10

16) விசுவாசம் – 1 தீமோ 2:15

17) அன்பு – 1 தீமோ 2:15

18) பரிசுத்தம் – 1 தீமோ 2:15

19) அவதூறு பண்ணாமை – 1 தீமோ 3:1

20) எல்லாவற்றிலும் உண்மை – 1 தீமோ 3:1

21) புத்தி – நீதி 14:1

22) விட்டை கட்ட வேண்டும் – நீதி 14:1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *