431.பெரிய காரியங்கள்
வேதத்தில் சிறிய பொருட்களால் நடந்த பெரிய காரியங்கள்
1) 5 அப்பம் & 2 மீன் மூலம் 5000 பேரை போஷித்தல் – மீதி 12 கூடை எடுத்தல் – மத் 14:14-21
2) எலிசாவின் சால்வை – எலிசா முறுக்கி யோர்தான் நதியில் அடித்த போது தண்ணீர் இருபக்கமாக பிரிந்தது. – 2 இராஜ 2:7,8
3) கிதியோனின் மண்பானைகள் – மண்பானைகள் உடைக்கபட்ட போது மிதியானியரின் சேனை தோற்கடிக்கபட்டார்கள் – நியாதி 7:16-25
4) கழுதையின் பச்சை தாடை எலும்பு – சிம்சோன் பெலிஸ்தரில் 1000 பேரை கழுதையின் பச்சை தாடை எலும்பால் கொன்று போட்டான் – நியாதி 15:14,15
5) மோசேயின் கோல் (தேவனுடைய கோல்) – பாம்பாக மாறியது, எகிப்தில் வாதைகளை வருவித்தது, கன்மலையில் அடித்த போது இஸ்ரவேலருக்கு தண்ணீர் பாய்ந்து வந்தது.
6) ஆரோனின் கோல் – அது துளிர்த்து, பூப்பூத்து வாதுமை பழங்களை கொடுத்தது – எண்ணா 17:1-10
7) எலிசா வெட்டி போட்ட மரக் கொம்பு – எலிசா கொம்பை வெட்டி தண்ணீரில் எறிந்த போது கோடாரி மிதந்து வந்தது – 2 இராஜ 6:1-7
8) ராகாபின் ஜன்னலில் கட்டியிருந்த சிகப்பு நூல் – எரிகோ பட்டணத்தை இஸ்ரவேலர் அழிக்கும் போது, சகிப்பு நூல் கட்டியிருந்த ராகாப் வேசியின் வீட்டார் காப்பாற்ற பட்டார்கள் – யோசு 2:1-24
9) தாவீதின் கையிலிருந்த கவணும், கூழாங்கல்லும் – தாவீது கோலியாத்தை கவண் கல்லால் நெற்றியில் படும்படி எறிந்து அவனை கொன்று போட்டான் – 1 சாமு 17:40-54
10) பவுலின் சரீரத்திலிருந்த உறுமால்களும், கச்சைகளும் – இவைகளை வியாதியஸ்தர் மேல் போட்ட போது வியாதிகள் அவர்களை விட்டு நீங்கியது – அப்போ 19:11,12
11) கப்பற்சேதம் உண்டான போது பலகைகள், கப்பல் துண்டுகள் மூலம் கப்பலில் இருந்த 276 பேரும் தப்பி கரை சேர்ந்தார்கள் – அப்போ 27:1-44
12) ஒரு குடம் எண்ணெய் – கடன் நீங்கி, குடும்பம் ஆசிர்வதிக்கபட்டது – 2 இராஜ 4:2
432.தேவனின் பார்வையில் பெருமை/மேட்டிமை
1) தேவன் எதிர்த்து நிற்கிறார் – யாக் 4:6
2) பெருமை பேசும் நாவை கர்த்தர் அறுத்து போடுவார் – சங் 12:3
3) அகங்காரியின் வீட்டை கர்த்தர் பிடுங்கி போடுவார் – நீதி 15:25
4) தேவனிடத்தில் இருந்து ஜெபத்துக்கு பதில் வராது – யோபு 35:12
5) கர்த்தர் வெறுத்து அருவருக்கிறார் – நீதி 6:16,17
6) கர்த்தர் தூரத்தில் இருந்து அறிகிறார் – சங் 138:6
7) கர்த்தருக்கு அருவருப்பானவன் – நீதி 16:5
8) மேட்டிமையான கண்களை தாழ்த்துவார் – சங் 18:27
433.மேட்டிமை/பெருமை இருந்தால் கீழ்கண்ட காரியங்கள் காணப்படும்
1) அதிகம் பேச்சு காணப்படும் – நீதி 30:32
2) சண்டை காணப்படும் – நீதி 13:10
3) கோபம் காணப்படும் – 2 நாளா 26:16,19
4) கர்த்தரை தேட மாட்டோம் – சங் 10:4
5) கர்த்தரை அசட்டை பண்ணுதல் காணப்படும் – சங் 10:3
6) இருதயத்தில் கசப்பு, வைராக்கியம், விரோதம் காணப்படும் – யாக் 3:14-16
7) மற்றவர்களின் குறை பெரிதாக தெரியும் – லூக் 18:11-14
8) தங்களிடம் இருக்கும் குறைகள் தெரியாது – லூக் 18:11-14
434.மேட்டிமை/பெருமையின் விளைவு
1) தாழ்த்தப்படுவோம் – நீதி 29:23
2) அழிவு வரும் – நீதி 18:12
3) ஜெபம் கேட்கபட மாட்டாது – லூக் 18:11,12
4) தான் வெட்டின குழியில் அவனே விழுவான் – சங் 10:2
5) அறுப்புண்டு போவான் – லேவி 23:29
6) விழுதல் காணப்படும் – நீதி 16:18
7) பைத்தியமான நடக்கை – நீதி 30:32
8) தேவன் சிதறடித்து பதவியில் இருந்து தள்ளுவார் – லூக் 1:51,52
435.வேதத்தில் உள்ள பெருமைகள்
1) ஜீவனத்தின் பெருமை – 1 யோ 2:16
2) மனுஷனுடைய பெருமை – யோபு 33:17
3) பெலத்தின் பெருமை – எசேக் 33:28
4) பொல்லாதவர்களின் பெருமை – யோபு 35:12
5) அகங்காரனின் பெருமை – ஏசா 13:11
6) மோவாபின் பெருமை – ஏசா 48:29
7) யூதாவுடைய பெருமை – ஏரே 13:9
8) வல்லமையின் பெருமை – லேவி 26:19
436.பேசக்கூடாத பேச்சுகள் (மத்தேயு 12:36)
பரிசுத்த வேதம் போதிக்கும் “பேசக்கூடாத பேச்சுகள்”
1. பெருமையான வார்த்தைகளை பேசக்கூடாது (யாக்கோபு 3:5)
2. மேட்டிமையான வார்த்தைகளை பேசக்கூடாது (1 சாமுவேல் 2:3)
3. அகந்தையான வார்த்தைகளை பேசக்கூடாது (1 சாமுவேல் 2:3)
4. வம்பு வார்த்தைகளை பேசக்கூடாது (சங்கீதம் 75:4)
5. அதிகமான வார்த்தைகளை பேசக்கூடாது (மத்தேயு 5:37)
6. கிழவிகளின் கட்டுக்கதைகளை பேசக்கூடாது (1 தீமோத்தேயு 4:7)
7. வீணான பேச்சுகளை பேசக்கூடாது (மத்தேயு 12:36)
8. கடுஞ் சொற்களான வார்த்தைகளை பேசக்கூடாது (நீதிமொழிகள் 15:1)
9. நம்மை நாமே புகழ்ந்து பேசக்கூடாது (நீதிமொழிகள் 27:2)
10. நாம் செய்த காரியங்களை நாமே
புகழ்ந்து பேசக்கூடாது . (நீதிமொழிகள் 20:6)
11. தீமையை பேசக்கூடாது (யோபு 27:3)
12. துர்ச் செய்தியை பேசக்கூடாது (எண்ணாகமம் 13:33)
13. வம்பு வார்த்தைகளை பேசக்கூடாது (எபேசியர் 5:4)
14. புத்தியீனமானவைகளை பேசக்கூடாது (எபேசியர் 5:4)
15. யாரையும் பரியாசம் பண்ணிப் பேசக்கூடாது (எபேசியர் 5:4)
16. யாரையும் சபித்தல் கூடாது (யாக்கோபு 3:10)
17. மற்றவர்கள் மனதை புண்படுத்தும் வார்த்தைகளை பேசக்கூடாது (நீதிமொழிகள் 12:18)
18. இறுமாப்பான வார்த்தைகளை
பேசக்கூடாது (யூதா 16)
19. கோள் செல்லுதல் கூடாது (லேவியாகமம் 19:16)
20. நாவினால் புறங்கூறுதல் கூடாது (சங்கீதம் 15:3)
21. பிரயோஜனமில்லாத வார்த்தைகளை பேசக்கூடாது (யோபு 15:3)
22. தர்க்கத்தை உண்டு பண்ணும் வார்த்தைகளை பேசக்கூடாது (யோபு 15: 3)
23. கபடான வார்த்தைகளை பேசக்கூடாது (சங்கீதம் 120:2, 3)
24. கடினமான வார்த்தைகளை பேசக்கூடாது (சங்கீதம் 94:4)
25. கசப்பான வார்த்தைகளை பேசக்கூடாது (சங்கீதம் 64:4
26. தகாத காரியங்களை பேசக்கூடாது (1 தீமோத்தேயு 5:13)
27. மற்றவர்களை குற்றவாளியாக தீர்த்து பேசக்கூடாது (ரோமர் 2:1)
28. இச்சையான வார்த்தைகளை பேசக்கூடாது (1 தெசலேனிக்கேயர் 2:5)
29. பதற்றமுள்ள வார்த்தைகளை பேசக்கூடாது (நீதிமொழிகள் 29:20)
30. தந்திரமான வார்த்தைகளை பேசக்கூடாது (2 பேதுரு 2:3)
31. விரோதமான பேச்சுகளை
பேசக்கூடாது (3 யோவான் 10)
32. மாயையைக் குறித்து பேசக்கூடாது (சங்கீதம்144:8 )
33. ஆகாத சம்பாஷணைகள் கூடாது (1 கொரிந்தியர் 15:3
34. பொய்யான வார்த்தைகளை
பேசக்கூடாது (சங்கீதம் 63:11)
35. கசப்பான வார்த்தைகளை
பேசக்கூடாது (சங்கீதம் 54:4)
36. இச்சகம் பேச வேண்டாம் (சங்கீதம் 12: 3)
37. கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள்
வாயிலிருந்து புறப்பட வேண்டாம் (எபேசியர் 4: 29)
38. கள்ள நாவில் பேச வேண்டாம் (சங்கீதம் 109: 2)
39. மாயையாய் பேச வேண்டாம் ( சங்கீதம் 144:8)
40. ஒருவருக்கொருவர் விரோதமாய் பேசாதிருங்கள் (யாக்கோபு 4:11)
437.அப்படியானால் எதைத்தான் பேசவேண்டும்?
கர்த்தர் செய்த அதியசங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்.
(1 நாளாகமம் 16:9)
பிறனோடே உண்மையைப் பேசுங்கள்;
(சகரியா 8:16)
பக்திவிருத்திக்கு ஏதுவான நல்லவார்த்தைகள் உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.
(எபேசியர் 4:29)
ஞானத்தைப்பேசுங்கள்
(சங்கீதம் 49: 3)
யதார்த்தமாய் பேசுங்கள்
(சங்கீதம் 52: 3)
நீதியை பேசுங்கள்
(சங்கீதம் 58: 1)
கர்த்தருடைய சாட்சிகளைக் குறித்து, ராஜாக்களுக்கு முன்பாக வெட்கப்படாமல் பேசுங்கள்
(சங்கீதம் 119: 46)
மேம்படான காரியங்களை பேசுங்கள்
(நீதிமொழிகள் 8: 6)
சுவிஷேசத்தை குறித்து பயப்படாமல் பேசுங்கள் (அப்போஸ்தலர் 18: 9)
438.பொறுமையாக இருக்க வேண்டும்
1.புத்திமதிகளை ஏற்றுக்கொள்ள பொறுமையாயிருங்கள் எபிரெயர் 13: 22
2. உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள் ரோமர் 12:12
3. பேசுகிறதற்கு பொறுமையாயிருங்கள் யாக் 1:19
4.வாக்குத்தத்தைப் பெற பொறுமையாயிருங்கள் எபிரேயர் 10:36
5.பலன் கொடுப்பதில் பொறுமையாயிருங்கள் லூக்கா 8:15
6. கர்த்தருக்கு காத்திருந்து ஆசீர்வாதமடைய பொறுமையாகயிருங்கள் சங்கீதம் 40:1
7. இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு காத்திருப்பதில் பொறுமையாயிருங்கள் 2பேதுரு 3:9,12,15
439.”போதும்” என்று சொல்ல வேண்டிய காரியங்கள்
1) இயேசு போதும் – யோ 14-8
2) கிருபை போதும் – 2 கொரி 12-9
3) நமது சம்பளம்/வருமானம் போதும் என்று எண்ண வேண்டும் – லூக் 3-14
4) நமக்கு இருக்கிற உலக ஆசிர்வாதங்கள் (வீடு/வாடகை வீடு/2 Wheller/கார் etc.) போதும் என்று எண்ண வேண்டும் – எபி 13-5, ஆதி 33-9
5) கர்த்தர் நமக்கு உடுக்க கொடுத்த உடைகள் போதும் என்று எண்ண வேண்டும் – 1 தீமோ 6-8
6) கர்த்தர் நமக்கு உண்ண கொடுத்த உணவுகள் போதும் என்று எண்ண வேண்டும் – 1 தீமோ 6-8
7) அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும் – மத் 6-34
440.மந்தைக்கு மாதிரிகளாயிருங்கள் 1 பேது 5 : 1 — 4.
போதகர்கள் மாதிரியாக இருக்கவேண்டும்
1. தாழ்மையில் மாதிரியாக இருங்கள் யோவா 13 : 15
2. பொறுமையில் மாதிரியாக இருங்கள் 1 பேது 2 : 21
3. பரிசுத்தத்தில் மாதிரியாக இருங்கள் 1 தெச 1 : 7
4. ஒழுக்கத்தில் மாதிரியாக இருங்கள் 2 தெச 3 : 6 — 12
5. நற்கிரியையில் மாதிரியாக இருங்கள் தீத்து 2 : 7
6. அன்பில் மாதிரியாக இருங்கள் ரோமர் 15 : 5 — 7
7. நடக்கையில் மாதிரியாக இருங்கள் பிலி 3 : 17.