441.மவுனமாயிராதே எஸ்தர் 4:14
1. நாம் மவுனமாயிருந்தால் நம் மேல் குற்றம் சுமரும் *2 இராஜாக்கள் 7:9*
2. நாம் மவுனமாயிருந்தால் சகாயமும் , இரட்சிப்பும் வேறு இடத்திலிருந்து எழும்பும் *எஸ்தர் 4:14*
3. நாம் மவுனமாயிருக்க கூடாது காரணம் கர்த்தர் சொல்லியிருக்கிறார் *அப்போஸ்தலர் 18:9,10*
442.மற்றவர்களை மன்னிப்பதால் நமக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள்
1) நோய்கள் குணமாகும் – சங் 103:3/மாற் 4:12
2) ஜெபம் கேட்கப்படும் – மாற் 11:25
3) நமது தப்பிதங்களை கர்த்தர் மன்னிப்பார் – மத் 6:14
4) மற்றவர்கள் பாவங்கள் மன்னிக்கப்படும் – யோ 20:23
5) மன்னிப்பது நமக்கு மகிமை – நீதி 19:11
6) பிசாசின் கண்ணிக்கு தப்பலாம் – 2 கொரி 2:10,11
443.மனத்தாழ்மை
1) மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுங்கள் – 1 பேது 5:5
2) மனத்தாழ்மையை தேடுங்கள்- செப்பனியா 2:3
3) மனத்தாழ்மையாய் இருப்பது நலம் – நீதி 16:19
4) தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடக்கவேண்டும் – மீகா 6:8
5) மனத்தாழ்மையோடு கர்த்தரைச் சேவியுங்கள் – அப்போ 20:19
6) மனத்தாழ்மையினால் ஒருவரையொருவர் மேன்மையாக எண்ணக்கடவர்கள் – பிலி 2:3
7) மனத்தாழ்மையினால் ஒருவரை ஒருவர் தாங்குங்கள் – எபேசி 4:2
8) மனத்தாழ்மையுள்ளவன் கனமடைவான் – நீதி 29:23
9) இயேசு மனத்தாழ்மையுள்ளவர் – மத் 11:29
10) மனத்தாழ்மையை இயேசுவிடம் கற்றுக் கொள்ள வேண்டும் – மத் 11:29
444.மனந்திரும்பியவன் செய்ய வேண்டியது
1) கனி கொடுக்க வேண்டும் – மத் 3:8
2) மனந்திரும்புதலுக்கு ஏற்ற கிரியை வேண்டும் அப் 26:20
3) குழந்தையை போல மாற வேண்டும் (குழந்தைக்கு கபடு, சூது, வாது கிடையாது) – மத் 18:3
4) வசனத்தின்படி ஜீவிக்க வேண்டும் – உபா 30:8
5) ஜெபிக்க வேண்டும் – நெகேமியா 9:28
6) சுவிசேஷத்தை விசுவாசிக்க வேண்டும் – மாற் 1:15
7) ஞானஸ்நானம் பெற வேண்டும் – அப்போ 2:38
445.மனந்திரும்புதலின் ஆசிர்வாதம்
1) திரும்ப கட்டப்படுவோம் – யோபு 22:23
2) இரட்சிக்கபடுவோம் – ஏசா 30:15, 2 கொரி 7:10
3) பாவங்கள் நிவர்த்தி செய்யப்படும் – அப்போ 3:20
4) ஜீவனுக்கேதுவாது – அப்போ 11:18
5) பரலோக ராஜ்யம் சமிபம் – மத் 3:2
6) பிழைப்பிர்கள் – எசேக் 18:32
7) மனந்திரும்புகிற பாவியின் நிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாகும் – லூக் 15:7
446.மனந்திரும்புதல்
1.யோவான்ஸ்நானகனின் பிரசங்கத்தின் முதல் வார்த்தை – மனந்திரும்புங்கள். மத்தேயு 3:2
2.இயேசு கிறிஸ்துவின் பிரசங்கத்தின் முதல் வார்த்தை – மனந்திரும்புங்கள். மத்தேயு 4:17
3.பன்னிரண்டு சீஷர்களின் பிரசங்க ஊழியத்தின் முதல் பிரசங்கம் – மனந்திரும்புங்கள். மாற்கு 6:12
4. உயிர்த்தெழுந்த கர்த்தர் முதலில் பிரசங்கிக்க கட்டளையிட்டது மனந்திரும்புதல், லூக்கா 24:47
5.ஆதினிசுவாசத்தின் முதல் போதனை – மனந்திரும்பி. அப் 2:38
6.பவுலின் ஊழியத்தில் அவர் பிரசங்கித்த முக்கிய செய்தி – மனந்திரும்புவதைக்குறித்து. அப் 20:26, 26:20
7. ஏழு சபைகளுக்கு கொடுக்கப்பட்ட செய்தியில் முதல் ஆலோசனை – மனந்திரும்பி. வெளி 2:5
447.மனுஷன் முன்பாக செய்ய வேண்டியது
1) கர்த்தரை அறிக்கை பண்ண வேண்டும் – லூக் 12:8
2) துன்மார்க்கன் முன்பாக இருக்கும் போது நாவை கடிவாளத்தால் அடக்கி வைக்க வேண்டும் – சங் 39:1
3) நரைத்தவனுக்கு முன்பாக எழும்ப வேண்டும் – லேவி 19:32
4) புறம்பே இருக்கிறவர்களுக்கு முன்பாக ஞானமாக நடக்க வேண்டும் – கொலோ 4:5
5) மனுஷனுக்கு முன்பாக யோக்கியமானவைகளை செய்ய வேண்டும் – 2 கொரி 8:21
6) மனுஷர் முன்பாக கர்த்தரை நம்ப வேண்டும் – சங் 31:19
7) மனுஷனுக்கு முன்பாக குற்றமற்ற மனசாட்சி உடையவர்களாக வேண்டும் – அப் 24:16
8) மனுஷனுக்கு முன்பாக நல்மனசாட்சி உடையவர்களாக இருக்க வேண்டும் – அப் 23:1
448.மன்னிக்க வேண்டும் யாரை ? (யோ 20:23/மத் 6:14,15)
1) கணவன் மனைவியை / மனைவி கணவனை – கொலோ 3:13
2) பிள்ளைகளை – லூக் 15:20
3) சக விசுவாசிகளை – 2 கொரி 2:10,11/எபேசு 4:32/கொலோ 3:13
4) சகோதர சகோதரிகளை – மத் 18:35/லூக் 17:3,4
5) புறஜாதி மக்களை – யோசுவா 9:1-22
6) நமக்கு துக்கமுண்டாக்கினவரை – 2 கொரி 2:5,7
7) கடன்பட்டவர்களை – மத் 18:25-27
8) பொல்லாங்கு செய்த சகோதரனை – ஆதி 50:16
449.மன்னிப்பின் ஆசிர்வாதங்கள்
1) நமது நோய்கள் குணமாகும் – சங் 103:3/மாற் 4:12
2) ஜெபம் கேட்கப்படும் – மாற் 11:25
3) நமது தப்பிதங்களை கர்த்தர் மன்னிப்பார் – மத் 6:14
4) மற்றவர்கள் பாவங்கள் மன்னிக்கப்படும் – யோ 20:23
5) மன்னிப்பது நமக்கு மகிமை – நீதி 19:11
6) பிசாசின் கண்ணிக்கு தப்பலாம் – 2 கொரி 2:10,11
450.மாயமற்ற ரோமர் 12:9
1.மாயமற்ற சகோதர சிநேகம் 1 பேதுரு 1:22
2.மாயமற்ற விசுவாசம் 2 தீமோத்தேயு 1:4
3. மாயமற்ற அன்பு ரோமர் 12:9