461.மேட்டிமை/பெருமை அடைகிற அவயங்கள்
1) வாய் – 1 சாமு 2:3
2) கண் – நீதி 6:17
3) இருதயம் – நீதி 18:12
4) மனது – 2 நாளா 26:16
5) நாவு – சங் 12:3
6) இமைகள் – நீதி 30:13
7) சிந்தனை – ரோ 11-20
8) புயம் – யோபு 38-15
462.வேதாகமத்தில் மனமேட்டிமை/பெருமை
அடைந்தவர்கள்
1) எசேக்கியா ராஜா – 2 நாளா 32:25
2) உசியா ராஜா – 2 நாளா 26:16
3) பரிசேயன் – லூக் 18:11
4) நேபுகாத்நேச்சார் – தானி 5:20
5) லூசிபர் – ஏசா 14-13
6) மோவாப் – ஏரே 48-42
463.மேட்டிமை/பெருமையின் விளைவு
1) தாழ்த்தப்படுவோம் – நீதி 29:23
2) அழிவு வரும் – நீதி 18:12
3) ஜெபம் கேட்கபட மாட்டாது – லூக் 18:11,12
4) தான் வெட்டின குழியில் அவனே விழுவான் – சங் 10:2
5) அறுப்புண்டு போவான் – லேவி 23:29
6) விழுதல் காணப்படும் – நீதி 16:18
7) பைத்தியமான நடக்கை – நீதி 30:32
8) தேவன் சிதறடித்து பதவியில் இருந்து தள்ளுவார் – லூக் 1:51,52
464.தேவனின் பார்வையில் பெருமை/மேட்டிமை
1) தேவன் எதிர்த்து நிற்கிறார் – யாக் 4:6
2) பெருமை பேசும் நாவை கர்த்தர் அறுத்து போடுவார் – சங் 12:3
3) அகங்காரியின் வீட்டை கர்த்தர் பிடுங்கி போடுவார் – நீதி 15:25
4) தேவனிடத்தில் இருந்து ஜெபத்துக்கு பதில் வராது – யோபு 35:12
5) கர்த்தர் வெறுத்து அருவருக்கிறார் – நீதி 6:16,17
6) கர்த்தர் தூரத்தில் இருந்து அறிகிறார் – சங் 138:6
7) கர்த்தருக்கு அருவருப்பானவன் – நீதி 16:5
8) மேட்டிமையான கண்களை தாழ்த்துவார் – சங் 18:27
465.யாரிடத்தில் அன்பாயிருக்க வேண்டும்
1) தேவனிடத்தில் அன்பாயிரு (முழு அன்பு) – லூக் 10:27
2) சகோதரனிடத்தில் அன்பாயிரு – 1 யோ 4:21
3) பரிசுத்தவான்களெல்லார் மேலும் அன்பாயிரு – எபேசி 1:15
4) உன்னை துக்கபடுத்தினவனை மன்னித்து அவனிடத்தில் அன்பாயிரு – 2 கொரி 2:5,8
5) புருஷர் மனைவி இடத்தில் அன்பாய் இருக்க வேண்டும் – கொலோ 3:19
6) ஸ்திரிகள் புருஷரிடத்திலும், பிள்ளைகள் இடம் அன்பாய் இருக்க வேண்டும் – தீத்து 2:4,5
7) அப்பா மகன் இடம் அன்பாய் இருக்க வேண்டும் – நீதி 3:12
8) ஒருவரில் ஒருவர் அன்பாய் இருக்க வேண்டும் – 1 பேது 1:22
9) அந்நியனிடத்தில் – லேவி 19:34
466.யாருக்காக ஜெபிக்க வேண்டும்
1) உங்கள் சகோதரனுக்காக – 1 யோ 5:16
2) ராஜாக்களுக்காக – 1 தீமோ 2:2
3) எல்லா மனுஷர்களுக்காக – 1 தீமோ 2:1
4) உங்களை நிந்திக்கிறவர்களுக்காக – மத் 5:44
5) உங்களை துன்பபடுத்துகிறவர்களுக்காக – மத் 5:44
6) தீங்கு அநுபவிக்கிறவர்களுக்காக – எபி 13:3
7) உங்களுக்காக – 1 நாளா 4:10
8) உங்கள் பிள்ளைகளுக்காக – ஆதி 17:18
9) உங்கள் மனைவி/கணவனுக்காக – ஆதி 25:21
10) சகல பரிசுத்தவான்களுக்காக – எபேசி 6:18
11) உங்கள் நண்பர்களுக்காக – யோபு 42:10
467.யாருக்கு கர்த்தர் எதிர்த்து நிற்கிறார்?
1) பெருமை உள்ளவர்களுக்கு – 1 பேது 5:5
2) தேவ சித்தத்தை மீறுபவர்களுக்கு – எண் 22:22
3) அவரின் வார்த்தைக்கு செவி கொடுக்காவிட்டால் – லேவி 26:27,28
4) நாள் பார்த்தல், நேரம் பார்ப்பவர்களுக்கு – லேவி 20:6
5) உலகத்தின் திருப்தியால் மேட்டிமை கொள்ளும் போது – ஒசியா 13:8 (5-9)
468.யாருக்கு ஞானஸ்நானம் கொடுக்க கூடாது
1) குழந்தைக்கு ஞானஸ்நானம் கொடுக்க கூடாது – குழந்தைக்கு மேற்கண்ட அனுபவங்கள் கிடையாது. இயேசு ஞானஸ்நானம் எடுத்த போது அவர் வயது 30 (லூக் 3:21,22,23)
2) மனந்திரும்பாதவனுக்கு
ஞானஸ்நானம் கொடுக்க கூடாது – அப்போ 2:38
3) பாவம் மன்னிக்கபடாதவனுக்கு – மத் 3:6
469.யாருக்கு தேவ ராஜ்யம் கொடுக்கப்படுகிறது
பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள். மத்தேயு 10:7
உங்களுக்கு ராஜ்யத்தை கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருகக்கிறார் லூக்கா 12:31,32
தேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.
பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள்பிதா பிரியமாயிருக்கிறார்.
1) தம்மிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கு யாக்கோபு 2:5 யாக்கோபு 1:12 1 கொரி 2:9
2) தரித்திரராகிய சீஷர்களுக்கு
லூக்கா 6:20 மத்தேயு 11:5 2 கொரி 8:9 லூக்கா 16:22-25
3) ஆவியில் எளிமையுள்ளவர்களுக்கு
மத்தேயு 5:3 ஏசாயா 66:2 லூக்கா 18:14 மீகா 6:8, ஏசாயா 57:15 மத்தேயு 18:1-3
4) நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்களுக்கு
மத்தேயு 5:10 2 கொரி 4:17 2 தீமோ 2:12 வெளி 2:10
5) சிறுபிள்ளைகளைப் போல உள்ளவர்களுக்கு
மாற்கு 10:14 1 கொரி 14:20 வெளி 14:5 1 பேதுரு 2:1,2 மத்தேயு 18:4
470.யாருக்கு நன்மை செய்கிறார் சங்கீதம் 125:4
1. தம்முடைய ஜனத்திற்க்கு நன்மை செய்கிறார் எரேமியா 32:40,41
2. தேவனுடைய காரியமாய் நிற்கும் போது (மருத்துவச்சிகள்) கர்த்தர் நன்மை செய்வார் யாத்திராகமம் 1:19 to 21
3.நல்லவர்களுக்கும் இருதயத்தில் செம்மையானவர்களுக்கும் நன்மைசெய்கிறார் சங்கீதம் 125:4
4. சீயோனுக்கு (பரிசுத்த கூட்டத்திற்க்கு) நன்மை செய்வார் சங்கீதம் 51:18