481.ஆதியாகமம் புஸ்தகத்தில் மேசியாவுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் உருவக பெயர்கள்
1. ஸ்திரீயின் வித்து (ஆதி 3:15)
2. ஆபிரகாமின் குமாரன். (ஆதி 22:18; மத் 1:1; லூக்கா 3:23-34; கலா 3:16)
3. ஈசாக்கின் குமாரன். (ஆதி 21:12; ஆதி 26:4; மத் 1:2; லூக்கா 3:23-34; ரோமர் 9:6-9)
4. யாக்கோவின் குமாரன் (ஆதி 28:13-14; மத் 1:2; லூக்கா 3:23-34)
5. சமாதான கர்த்தர் – சைலோ (ஆதி 49:10)
6. இஸ்ரவேலின் மேய்ப்பன் (ஆதி 49:24; சக 13:7; யோவான் 10:1-18)
7. இஸ்ரவேலின் கன்மலை (ஆதி 49:24)
482.வேததில் உள்ள 11 நாற்பதுநாள்”
1. நோவாவின் ஜலப்பிரளயம் (ஆதி 7:4, 12,17; ஆதி 8:6)
2. யாக்கோபின் மரணம் (ஆதி 50:3)
3. பர்வதத்தில் மோசே (யாத் 24:18)
4. பர்வதத்தில் மறுபடியும் மோசே (யாத் 34:28; உபா 10:10)
5. கானானை வேவுபார்த்த வேவுகாரர்கள். (எண் 13:25; எண் 14:34)
6. மோசேயின் உபவாசம் (உபா 9:18; உபா 9: 9-11)
7. எலியா ஓரேப் என்னும் தேவனுடைய பர்வதத்தில் நடந்துபோன காலம். (1இராஜா 19:8)
8. எசேக்கியேல் வலதுபக்கமாய் ஒருக்களித்து படுத்த காலம். (எசே 4:6)
9. நினிவேயின் நியாயத்தீர்ப்பு (யோனா 3:4)
10. கிறிஸ்துவின் உபவாசம். (மத் 4:2)
11. உயிர்த்தெழுந்த பின்பு கிறிஸ்துவின் ஊழியக்காலம். (அப் 1:3)
483.மரணதண்டனைக்கு ஏதுவான 42 கொடிய பாவங்கள்
1. கொலைபண்ணுதல். (ஆதி 9:6; யாத் 21: 12-14,20,23; லேவி 24:17,21; எண் 35: 16-34; உபா 19)
2. விருத்தசேதனம் பண்ணாமல் இருத்தல். (ஆதி 17:14; யாத் 4:24-25)
3. புளிப்பில்லா அப்பப்பண்டிகையின்போது புளிப்புள்ள அப்பத்தைப் புசித்தல். (யாத் 12:15,19)
4. பெற்றோரை அடித்தல். (யாத் 21:15)
5. மனுஷரைத் திருடி விற்றுப்போடுதல். (யாத் 21:16; உபா 24:7)
6. பெற்றோரைச் சபித்தல். (யாத் 21:17; லேவி 20:9)
7. மனுஷரைக் கொல்லும் விலங்குகளை அழிக்காமல் இருத்தல். (யாத் 21:28-32)
8. சூனியம். (யாத் 22:18)
9. மிருகத்தோடே புணருதல். (யாத் 22:19; லேவி 18:23-29; லேவி 20:15-16)
10. விக்கிரகாராதனை. (யாத் 22:20)
11. வேறொரு பரிசுத்த தைலத்தைச் செய்தல். (யாத் 30:33)
12. பரிசுத்த தைலத்தை அந்நியன்மேல் வார்த்தல். (யாத் 30:33)
13. வேறொரு தூபவர்க்கத்தைச் செய்தல். (யாத் 30:38)
14. ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்குதல். (யாத் 31:14)
15. ஓய்வுநாளில் வேலைசெய்தல். (யாத் 35:2)
16. ஒருவன் தீட்டுள்ளவனாக இருக்கையில் கர்த்தருடைய சமாதான பலியின் மாம்சத்தைப் புசித்தல். (லேவி 7:20-21)
17. கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்தப்படும் மிருகத்தின் கொழுப்பைப் புசித்தல். (லேவி 7:25)
18. ஆசரிப்புக்கூடார வாசலுக்கு முன்பாக பலிசெலுத்தாமல் வேறிடத்தில் பலிசெலுத்துதல். (லேவி 17:1-9)
19. இரத்தத்தைப் புசித்தல். (லேவி 17:10-14)
20. தனக்கு நெருங்கின இனமாகிய ஒருத்தியோடு சேருதல். (லேவி 18:6-29; லேவி 20:11-22)
21. பலிகளைத் தவறான காலத்தில் புசித்தல். (லேவி 19:5-8)
22. சிறுபிள்ளைகளைவிக்கிரகங்களுக்குப் பலியிடுதல். (லேவி 20:1-5)
23. அஞ்சனம்பார்த்தல். (லேவி 20:6,27)
24. விபசாரம். (லேவி 20:10; உபா 22:22-30)
25. ஓரினச்சேர்க்கை. (லேவி 20:13)
26. சூதகஸ்திரீயோடே சயனித்தல். (லேவி 20:18)
27. வேசித்தனம் பண்ணுதல். (லேவி 21:9; உபா 22:21-22)
28. தான் தீட்டுப்பட்டிருக்கும்போது கர்த்தருக்கு நியமித்து செலுத்துகிற பரிசுத்தமானவைகளண்டையில் சேருதல். (லேவி 22:3)
29. பாவநிவாரண நாளில் உபவாசம் பண்ணாமல் இருத்தல். (லேவி 23:29)
30. பாவநிவாரண நாளில் வேலை செய்தல். (லேவி 23:30)
31. தேவனுடைய நாமத்தைத் தூஷித்தல். (லேவி 24:11-16)
32. பஸ்கா ஆசரியாமல் இருத்தல். (எண் 9:13)
33. துணிகரமான பாவம் செய்தல். (எண் 15:30-31)
34. ஓய்வுநாளில் விறகுபொறுக்குதல். (எண் 15:32-36)
35. ஆராதிக்கும் முன்பாக தன்னைச் சுத்திகரித்துக் கொள்ளாமல் இருத்தல். (எண் 19:13,20)
36. கள்ளத்தீர்க்கதரிசனம் உரைத்தல். (உபா13:1-18; உபா 18:20)
37. மனுஷரைக் கர்த்தரிடமிருந்து பிரித்து வேறே தேவர்களைச் சேவிப்பதற்கு வழிநடத்துதல். (உபா 13:6-18)
38. பின்மாறிப்போதல். (உபா 17:2-7)
39. யார் சொல்லையும் கேளாமல் அடங்காத துஷ்டனாயிருத்தல். (உபா 21:18-23)
40. பெருந்தீனிக்காரனாயிருத்தல். (உபா 21:20-23)
41. குடியனாயிருத்தல். (உபா 21:20-23)
42. கள்ளச்சொப்பனங்களும், கள்ளத் தரிசனங்களும் காணுதல். (உபா 13: 1-18)
484.ஆதி 15:13-16 விளக்கம்
“”உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப் படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியக் கடவாய்……..” (ஆதி 15:13-16) என்பது தீர்க்கதரிசன வாக்கியம்.
ஆபிரகாமின் சந்ததியார் அந்நிய தேசத்தில் இன்னும் நானூறு வருஷங்கள் தங்கியிருப்பார்கள். இஸ்ரவேலை ஒடுக்கியதற்காக எகிப்து தண்டிக்கப்படும். இஸ்ரவேலர் மிகுந்த ஐசுவரியங்களைப் பெற்றுக் கொள்வார்கள். ஆபிரகாம் நல்ல முதிர் வயதிலே அடக்கம் பண்ணப்படுவார். ஆபிரகாமின் சந்ததியார் நான்காம் தலைமுறையில் எகிப்தை விட்டு வெளியேறி எமோரியரை ஜெயிப்பார்கள்.
இந்தத் தீர்க்கதரிசனம் முழுவதும் மோசே, யோசுவா ஆகியோரின் தலைமையின்கீழ் இஸ்ரவேல் தேசத்தாருடைய வனாந்தர யாத்திரையின்போதும், கானான் தேசத்தில் குடியேறியபோதும் நிறைவேறிற்று. (யாத் 7:1-14:31; எண் 21:21-25; யோசு 12).
ஆபிரகாமின் சந்ததியார் எகிப்து தேசத்தில் 215 வருஷங்களுக்குப் பரதேசிகளாய்த் தங்கியிருப்பார்கள். (ஆதி 12:1-20; ஆதி 13:1-18; ஆதி 15:13-14; ஆதி 20:1-18; ஆதி 21:22-34; ஆதி 23:4; ஆதி 26:3-35; ஆதி 28:10; ஆதி 29:1; ஆதி 31:13-55; ஆதி 35:6; ஆதி 37:1; ஆதி 46:1-7; ஆதி 47:27; ஆதி 50:22-26 ; யாத் 1-12; எபி 11:8-10).
ஈசாக்கு பெரியவனாகி, ஆபிரகாமின் சுதந்தரவாளியாக உறுதிபண்ணப்படுகிறான். இஸ்மவேல் வெளியே அனுப்பப்படுகிறான். இக்காலத்தில் ஈசாக்கின் வயது ஐந்து. ஆதி 15:13, அப் 7:6 ஆகிய வசனங்களில் நானூறு வருஷம் என்று கூறப்பட்டிருப்பது ஈசாக்கு சுதந்தரவாளியாக உறுதிபண்ணப்பட்ட நாளிலிருந்து கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
வேறுசில வசனங்களில் இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தில் 430 வருஷங்கள் பரதேசிகளாய்த் தங்கியிருப்பார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. (யாத் 12:40; கலா 3:14-17) ஈசாக்கின் ஐந்து வயதும், அவனுடைய பிறப்பிற்கு முன்பு 25 வருஷங்களும் இதில் கூட்டி கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. அப்பொழுது ஆபிரகாம் கானானில் தங்குவதற்காகப் புறப்பட்டுப் போனார் (ஆதி 47:9).
இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தில் 430 வருஷங்கள் பரதேசிகளாய் தங்கியிருப்பார்கள் என்றும் சில வசனங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அதற்கான காலஅட்டவணையின் விவரம் வருமாறு:
1. ஆபிரகாமின் 75 ஆவது வயதிலிருந்து ஈசாக்கின் பிறப்பு வரையிலும் – 25 வருஷங்கள்
2. ஈசாக்கின் பிறப்பிலிருந்து யாக்கோபின் பிறப்பு வரையிலும் (ஆதி 25:26) – 60 வருஷங்கள்
3. யாக்கோபின் பிறப்பிலிருந்து அவருடைய மரணம் வரையிலும் (ஆதி 47:28) – 147 வருஷங்கள்
4. யாக்கோபின் மரணத்திலிருந்து யோசேப்பின் பிறப்பு வரையிலும் (ஆதி 37:2; ஆதி 41:46; ஆதி 47:28; ஆதி 50:22) # 54 வருஷங்கள்
5. யோசேப்பின் மரணத்திலிருந்து எகிப்திலிருந்து வெளியேறிய நாள் வரையிலும் (யாத் 12:40; கலா 3:14-17) # 144 வருஷங்கள்
மொத்தம் # 430 வருஷங்கள்
“”நானூறு வருஷம்” என்பது ஆபிரகாமின் சுதந்தரவாளிகளாகவும், வித்தாகவும் ஈசாக்கு உறுதிபண்ணப்பட்ட நாளிலிருந்து நானூறு வருஷம். அது வரையிலும் ஆபிரகாமிற்கு அதிகாரப்பூர்வமாகிய வித்து இல்லை. (அப் 7:6).
“”இவர்கள் சேவிக்கும் ஜாதிகளை நான் நியாயந்தீர்ப்பேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். இந்த வாக்கியம் யாத் 7-14 ஆகிய அதிகாரங்களில் கூறப்பட்டிருக்கும் வாதைகளைக் குறிக்கும்.
எமோரியருடைய அக்கிரமம்
கர்த்தர் ஆபிராமை நோக்கி, “”நாலாம் தலைமுறையிலே அவர்கள் இவ்விடத்துக்குத் திரும்ப வருவார்கள்; ஏனென்றால் எமோரியருடைய அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை” (ஆதி 15:16) என்று சொல்லுகிறார்.
“”எமோரியருடைய அக்கிரமம்” என்பது கானானியருடைய பாவங்களைக் குறிக்கும். எமோரியர் அழிக்கப்படவேண்டியவர்கள். கானனியருடைய பாவங்களின் விவரம் வருமாறு:
1. ஓரினச்சேர்க்கை (ஆதி 13:13; ஆதி 19:1-29; லேவி 18:22-30; லேவி 20:13)
2. தனக்கு நெருங்கின இனமாகிய ஒருத்தியோடு சேருதல் (லேவி 18:6-30; லேவி 20:12-23)
3. சூதகஸ்திரீயோடே சயனித்தல் (லேவி 18:19-30; லேவி 20:18-23)
4. விபசாரம் (லேவி 18:20-30; லேவி 20:10-23)
5. விக்கிரகாராதனை (லேவி 18:21-30; லேவி 20:2-5; உபா 12)
6. தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்குதல். (லேவி 18:21-30)
7. மிருகத்தோடே புணருதல் (லேவி 18:23-30; லேவி 20:15-23)
8. சூனியம் (லேவி 20:6,23; உபா 18:9-14)
9. வேசித்தனம் பண்ணுதல் (லேவி 20:1-23)
10. பெற்றோரை அவமதித்தல் (லேவி 20:9-23)
11. கொலைபண்ணுதல் (உபா 12:31; உபா 18:9-10)
12. திருடுதல் (லேவி 19:11-13 = லேவி 20:23)
13. பொய்கூறுதல் (லேவி 19:11-16 = லேவி 20:23).
485.எருசலேமின்மீது போடப்பட்ட முற்றுகைகளுக்கு பரிசுத்த வேதாகமத்திலிருந்து 12 ஆதாரங்கள்.
1. யூதா (நியா 1:8)
2. தாவீதும், யூதாவும் (2சாமு 5:6-10)
3. எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் (1இராஜா 14:25)
4. இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாகாஸ் (2இராஜா 14:13)
5. அசீரியாவின் ராஜாவாகிய சனகெரிப் (2இராஜா 18)
6. பெலிஸ்தரும், அரபியரும் (2நாளா 21:16-17)
7. இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் (2நாளா 25:23)
8. எகிப்தின் ராஜா (2நாளா 36:3)
9. பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார். (2நாளா 36:6-7)
10. நேபுகாத்நேச்சார். (2நாளா 36:10)
11. நேபுகாத்நேச்சார். (2நாளா 36:17-19)
12. ரோமர்கள் – கி.பி. 70 ( மத் 24:1-2; லூக்கா 19:42-44; லூக்கா 21:20-24)
486.எருசலேமின்மீது போடப்பட்ட முற்றுகைகளுக்கு சரித்திர ஆகமங்களிலிருந்து 18 ஆதாரங்கள்.
1. எகிப்து – கி.மு. 320
2. ஸ்கோபஸ் – கி.மு. 299
3. சீரியா – கி.மு. 203
4. சீரியா – கி.மு. 168
5. சீரியா – கி.மு. 162
6. சீரியா – கி.மு. 135
7. ஹைக்கிரானஸ் – கி.மு. 63
8. பாம்பி – கி.மு. 63
9. ஏரோது – கி.மு. 39
10. ரோமப்பேரரசு – கி.பி. 135
11. பெர்சியர் – கி.பி. 559
12. ஓமர் – கி.பி. 636
13. அப்தல் – கி.பி. 1098
14. குருசேடர்கள் அல்லது சிலுவைப் போர்வீரர்கள் – கி.பி. 1099
15. சலாடின் – கி.பி. 1187
16. டார்டார்ஸ் – கி.பி. 1244
17. பிரிட்டிஷ் – கி.பி. 1917
18. இஸ்ரவேல் – கி.பி. 1948
487.ஏதேன் தோட்டத்து சர்ப்பத்தின் 15 குணாதிசயங்கள்
1. ஒரு காட்டு ஜீவன். (ஆதி 3:1).
2. மற்ற காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் தந்திரமுள்ளது. (ஆதி 3:1).
3. தேவனாகிய கர்த்தர் இதை உண்டாக்கினார். (ஆதி 3:1).
4. இது ஒரு சர்ப்பம். சாத்தான் அல்ல. (ஆதி 3:1).
5. சர்ப்பத்திற்குப் பேசும் ஆற்றல் இருந்தது. (ஆதி 3:1-6).
6. சர்ப்பத்திற்குச் சிந்திக்கும் ஆற்றல் இருந்தது. (ஆதி 3:1-6).
7. சர்ப்பத்திற்கு ஏமாற்றும் ஆற்றல் இருந்தது. (ஆதி 3:1-6).
8. தேவனுடைய திட்டத்தைப் பற்றி சர்ப்பம் தெரிந்து வைத்திருந்தது. (ஆதி 3:1-6).
9. மனுஷன் பாவத்தில் விழுவதற்கு முன்பாக சர்ப்பம் வயிற்றினால் நகராமல், நேராக நடந்திருக்கும் (ஆதி 3:14).
10. மற்ற காட்டு ஜீவன்களுக்கு இது தலையாக இருந்தது. (ஆதி 3:1,14).
11. சர்ப்பம் பகை உண்டாக்கும் தன்மையுடையது. (ஆதி 3:15).
12. ஏதேன் தோட்டத்தில் மனுஷனுக்கு அருகில் இருந்தது. (ஆதி 3:1-15).
13. சர்ப்பம் சம்பாஷணை பண்ணிற்று. (ஆதி 3:1-6).
14. சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டு மிருகங்களிலும் சர்ப்பம் சபிக்கப்பட்டிருக்கிறது. (ஆதி 3:14).
15. மனுஷனை வஞ்சிப்பதற்குச் சாத்தான் சர்ப்பத்தைப் பயன்படுத்தினான். (ஆதி 3:1-19).
488.சேஷ்டபுத்திரபாகத்தின் 22 ஆசீர்வாதங்கள்
1. குடும்ப சுதந்தரவீதம். (ஆதி 25:5)
2. குடும்ப தலைமைஸ்தானம். (ஆதி 24:65; ஆதி 25:5; ஆதி 27:29,37)
3. தகப்பனின் ஆசீர்வாதம் (ஆதி 27:4, 27-38)
4. குடும்பத்தலைவரும், ஆசாரியரும் (ஆதி 26:25; ஆதி 35:3-7)
5. குடும்ப நிலங்கள் எல்லாவற்றிலும் விசேஷித்த சுதந்தரம் (ஆதி 25:5-6; ஆதி 27:28,37; ஆதி 28:4; ஆதி 35:12)
6. சந்ததி பலுகிப்பெருகுதல். (ஆதி 13:16; ஆதி 15:5; ஆதி 17:2,5; ஆதி 22:17; ஆதி 26:4,24; ஆதி 28:3,14; ஆதி 32:12; ஆதி 35:11)
7. விசேஷித்த பராமரிப்பு (ஆதி 12:2-3; ஆதி 26:3-4,24; ஆதி 27:28; ஆதி 28:15)
8. தனிப்பட்ட ஆசீர்வாதங்கள் (ஆதி 12:2; ஆதி 22:17; ஆதி 26:3)
9. பெரிய பெயர் (ஆதி 12:2; ஆதி 27:28-29,37)
10. எல்லா தேசங்களுக்கும் ஆசீர்வாதம். (ஆதி 12:2-3; ஆதி 18:18; ஆதி 22:18; ஆதி 26:4; ஆதி 28:14)
11. நித்திய சுதந்தரம் (ஆதி 13:15; ஆதி 17:7-8; ஆதி 28:13; ஆதி 35:12)
12. ஆபிரகாமின் உடன்படிக்கையில் விசேஷித்த நபர். (ஆதி 17:7,19; ஆதி 26:3-4; ஆதி 28:4,13-15)
13. மேசியாவின் “”தகப்பன்” (ஆதி 12:3; ஆதி 21:12; ஆதி 22:17; ஆதி 26:5; ஆதி 28:14; ரோமர் 9:7; கலா 3:16)
14. பல தேசங்களுக்குத் தகப்பன். (ஆதி 17:5; ஆதி 18:18; ஆதி 35:11)
15. ராஜாக்களுக்கு தகப்பன் (ஆதி 17:6; ஆதி 35:11)
16. நித்திய இயற்கையான சந்ததி (ஆதி 17:7-8,19; 2சாமு 7; ஏசா 9:6-7; ஏசா 59:21; லூக்கா 1:31-32)
17. விசேஷித்த தேவனாக யெகோவாவைப் பெற்றிருப்பது. (ஆதி 17:7-8; ஆதி 28:15; ஆதி 32:9,12)
18. விரோதிகள்மீது அதிகாரம். (ஆதி 22:17; ஆதி 27:29)
19. தேசங்களின்மீது தலைமை (ஆதி 27:29)
20. பொருளாதார ஆசீர்வாதங்கள் (ஆதி 12:7; ஆதி 13:15; ஆதி 15:18; ஆதி 26:3-4; ஆதி 27:28-29,37; ஆதி 28:13; ஆதி 35:12)
21. ஆபிரகாமின் ஆவிக்குரிய ஆசீர்வாதம் – விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதல். (ஆதி 28:4; ரோமர் 4; கலா 3:14)
22. விரோதிகள்மீது சாபம். (ஆதி 12:3; ஆதி 27:29)
489.தேவனுடைய குணாதிசயங்களை விளக்கும் அவருடைய 8 நாமங்கள்
தேவன் வல்லமையுள்ளவர். எல்லாவற்றிற்கும் முதன்மையானவர். அவர் வானத்திற்கும், பூமிக்கும் அதிபதி. வேதாகமத்தில் உன்னதமான தேவன் என்னும் வார்த்தை 245 தடவை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தேவனுடைய குணாதிசயங்களை அவருடைய திருநாமங்கள் விளக்கும். அவையாவன:
1. தேவனாகிய கர்த்தர் (ஆதி 17:1)
2. சதாகாலமுமுள்ள தேவன்(ஆதி 21:33)
3. எரிச்சலுள்ள தேவன்.(யாத் 20:5)
4. மகத்துவமான தேவன் (உபா10:17)
5. ஜீவனுள்ள தேவன் (யோசு 3:10)
6. இரக்கமுள்ள தேவன் (உபா 4:31)
7. உண்மையுள்ள தேவன் (உபா 7:9)
8. வல்லமையுள்ள தேவன் (உபா 7:21).
490.தேவன் ஆபிராமுக்கு கொடுத்த 14 கட்டளைகள்
1. உன் தேசத்தை விட்டுப் புறப்பட்டுப்போ. (ஆதி 12:1; அப் 7:2).
2. உன் இனத்தை விட்டுப் புறப்பட்டுப்போ (ஆதி 12:1).
3. உன் தகப்பனுடைய வீட்டை விட்டுப் புறப்பட்டுப்போ (ஆதி 12:1).
4. நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்திற்குப் போ. (ஆதி 12:1).
5. நீ எழுந்து, தேசத்தின் நீளமும், அகலமும் எம்மட்டோ அம்மட்டும் நடந்து திரி. (ஆதி 13:17).
6. நீ எனக்கு பலி செலுத்து. (ஆதி 15:9-12).
7. நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாயிரு. (ஆதி 17:1).
8. என் உடன்படிக்கையைக் கைக்கொள். (ஆதி 17:9-14).
9. உங்களுக்குள் பிறக்கும் சகல ஆண்பிள்ளைகளையும், விருத்தசேதனம்பண்ணு. (ஆதி 17:10-14).
10. எட்டாம் நாளிலே விருத்தசேதனம் பண்ணு. (ஆதி 17:12).
11. உன் மகனுக்கு ஈசாக்கு என்று பேரிடு. (ஆதி 17:19).
12. சாராள் இந்த விஷயத்தில் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள். (ஆதி 21:12).
13. உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கைத் தகன பலியாகப் பலியிடு. (ஆதி 22:2).
14. பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே. (ஆதி 22:12).