491.தேவன் ஆபிராமுக்கு கொடுத்த 48 வாக்குதத்தங்கள்
1. நான் உனக்குத் தேசத்தைக் காண்பிப்பேன். (ஆதி 12:1).
2. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்குவேன். (ஆதி 12:2).
3. நான் உன்னை ஆசீர்வதிப்பேன். (ஆதி 12:2; ஆதி 22:17).
4. நான் உன் பேரைப் பெருமைப்படுத்துவேன். (ஆதி 12:2).
5. நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். (ஆதி 12:2).
6. உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன். (ஆதி 12:3).
7. உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன். (ஆதி 12:3)
8. பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும். (ஆதி 12:3; ஆதி 22:18).
9. உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தை நித்தியமாகக் கொடுப்பேன். (ஆதி 12:7; ஆதி 13:14#17; ஆதி 15:18#21; ஆதி 17:8)
10. உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போலப் பெருகப்பண்ணுவேன். (ஆதி 13:16).
11. நான் உனக்குக் கேடகமாயிருக்கிறேன். (ஆதி 15:1).
12. நான் உனக்கு மகா பெரிய பலனாயிருக்கிறேன். (ஆதி 15:1).
13. உன் வீட்டிலே பிறந்த பிள்ளை உனக்குச் சுதந்தரவாளியாய் இருப்பாôன். (ஆதி 15:2#4).
14. உன் சந்ததி வானத்து நட்சத்திரங்களைப்போல எண்ண முடியாத அளவுக்குத் திரளாக இருக்கும். (ஆதி 15:5; ஆதி 22:17)
15. உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் (ஆதி 15:13).
16. இவர்கள் சேவிக்கும் ஜாதிகளை நான் நியாயந்தீர்ப்பேன். (ஆதி 15:14).
17. அடிமைத்தனத்திலிருந்து உன் சந்ததியை விடுவித்து வெளியே கொண்டுவருவேன். (ஆதி 15:14#16, யாத் 12)
18. உன் சந்ததியை மிகுந்த பொருள்களுடனே ஆசீர்வதிப்பேன். (ஆதி 15:14).
19. நீ சமாதானத்தோடே உன் பிதாக்களிடத்தில் சேருவாய். (ஆதி 15:15).
20. நல்ல முதிர்வயதிலே அடக்கம் பண்ணப்படுவாய். (ஆதி 15:15).
21. என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன். (ஆதி 17:4,7).
22. உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன். (ஆதி 17:2; ஆதி 22:17).
23. நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்துவேன். (ஆதி 17:5#6).
24. உன்னை மிகவும் அதிகமாய்ப் பலுகப்பண்ணுவேன். (ஆதி 17:6).
25. உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள். (ஆதி 17:6).
26. தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன். (ஆதி 17:7).
27. உனக்கும், உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருப்பேன். (ஆதி 17:7#8).
28. நான் உன் மனைவியை (சாராளை) ஆசீர்வதிப்பேன். (ஆதி 17:16).
29. அவளாலே (சாராளாலே) உனக்கு ஒரு குமாரனைத் தருவேன் (ஆதி 17:16#19).
30. அவள் (சாராள்) பல ஜாதிகளுக்குத் தாயாக அவளை ஆசீர்வதிப்பேன். (ஆதி 17:16).
31. அவளாலே (சாராளாலே) ஜாதிகளின் ராஜாக்கள் உண்டாக அவளை ஆசீர்வதிப்பேன். (ஆதி 17:16).
32. என் உடன்படிக்கையை ஈசாக்குக்கும், அவனுக்குப் பின்வரும் அவன் சந்ததிக்கும் நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன். (ஆதி 17:19#21).
33. நான் இஸ்மவேலை ஆசீர்வதிப்பேன். (ஆதி 17:20).
34. அவனை மிகவும் அதிகமாகப் பலுகப் பண்ணுவேன். (ஆதி 17:20).
35. அவனை மிகவும் அதிகமாகப் பெருகப் பண்ணுவேன் (ஆதி 17:20).
36. அவன் பன்னிரண்டு பிரபுக்களைப் பெறுவான். (ஆதி 17:20).
37. அவனைப் பெரிய ஜாதியாக்குவேன். (ஆதி 17:20).
38. வருகிற வருஷத்தில் குறித்த காலத்திலே சாராள் ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பாள். (ஆதி 17:21; ஆதி 18:10,14).
39. நான் சோதோமில் ஐம்பது நீதிமான்களைக் கண்டால், அவர்கள் நிமித்தம் அந்த ஸ்தலமுழுதையும் இரட்சிப்பேன். (ஆதி 18:26).
40. நான் நாற்பத்தைந்து நீதிமான்களை அங்கே கண்டால், சோதோமை அழிப்பதில்லை. (ஆதி 18:28).
41. நாற்பது நீதிமான்கள் நிமித்தம் சோதோமை அழிப்பதில்லை. (ஆதி 18:29).
42. நான் முப்பது நீதிமான்களை அங்கே கண்டால் சோதோமை அழிப்பதில்லை. (ஆதி 18:30).
43. இருபது நீதிமான்கள் நிமித்தம் சோதோமை அழிப்பதில்லை. (ஆதி 18:31).
44. பத்து நீதிமான்கள் நிமித்தம் சோதோமை அழிப்பதில்லை. (ஆதி 18:32).
45. ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும். (ஆதி 21:12).
46. உன் சந்ததியை கடற்கரை மணலைப்போல பெருகவே பெருகப் பண்ணுவேன். (ஆதி 22:17).
47. உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக் கொள்ளுவார்கள். (ஆதி 22:17).
48. உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும். (ஆதி 22:18).
492.நெருங்கின உறவினர் மத்தியிலே சரீர உறவு ஏற்படுத்திக்கொண்ட 10 நபர்கள்
1. லோத்தும், அவனுடைய இரண்டு குமாரத்திகளும் (ஆதி 19:31-36)
2. ஆபிரகாமும், சாராளும் (ஆதி 20:12-13)
3. நாகோரும், மில்காளும் (ஆதி 11:29)
4. ரூபனும், பில்க்காளும் (1கொரி 5)
5. யூதாவும், தாமாரும் (ஆதி 38:16-18; 1நாளா 2:4)
6. அம்ராமும், யோகெபேத்தும் (யாத் 6:20)
7. அம்னோனும், தாமாரும் (2சாமு 13:14)
8. அப்சலோமும், தாவீதின் மனைவிமார்களும் (2சாமு 16:21)
9. ஏரோது (மத் 14:3-4; மாற்கு 6:17-18; லூக்கா 3:19)
10. கொரிந்தியரில் ஒருவன். (1கொரி 5)
493.பரிசுத்த வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள 50 இருதயங்கள்
1. நொருங்குண்டது (சங் 34:18; சங் 51:17; சங் 69:20)
2. நருங்குண்டது (சங் 51:17)
3. மனம் கசந்தது (ஆதி 6:6; சங் 73:21)
4. மனப்பூர்வமானது (யாத் 25:2; யாத் 35:5,29)
5. திடனற்றுப்போனது. (எண் 32:7-9; உபா 1:28)
6. கடினமானது (உபா 2:30)
7. பெருமையானது (உபா 8:14; சங் 101:5; எசே 28:5,17)
8. பொல்லாதது (உபா 15:9; நீதி 6:14,18; எரே 4:14-18)
9. தத்தளிக்கிறது (உபா 28:65; ஏசா 66:2)
10. உத்தமமானது (1இராஜா 8:61; 1நாளா 29:9)
11. வஞ்சனையானது (1நாளா 12:33; யாக் 4:8)
12. இளகியது. (2இராஜா 22:19; 2நாளா 34:27; எபே 4:32)
13. மென்மையானது (1சாமு 24:5; யோபு 23:16)
14. சுத்தமானது (சங் 24:4; மத் 5:8; 1பேதுரு 1:22)
15. நேர்மையானது (சங் 32:11; சங் 36:10; சங் 64:10; சங் 97:11)
16. சுத்தமானது (சங் 51:10; சங் 73:1; நீதி 20:9)
17. ஆயத்தமானது (சங் 57:7; சங் 112:7)
18. தந்திரமானது (நீதி 7:10)
19. மாறுபாடுள்ளது (நீதி 11:20; நீதி 12:8)
20. ஞானமுள்ளது (யாத் 28:3; யாத் 35:25; நீதி 10:8; நீதி 11:29)
21. மனமகிழ்ச்சியானது (2நாளா 7:10; நீதி 15:13-15; நீதி 17:22)
22. துக்கமானது நீதி 14:13; நீதி 15:13)
23. இறுமாப்புள்ளது (நீதி 18:12; எரே 48:29)
24. தாங்கலானது(நீதி 19:3; நீதி 24:19; சங் 37:1-8)
25. மனதுக்கமுள்ளது (நீதி 25:20; நீதி 31:6)
26. ஆராயமுடியாதது (நீதி 25:3; சங் 64:6)
27. கேடுள்ளது (எசே 25:15; ரோமர் 1:30)
28. மனக்கசப்பானது (எசே 27:31; எபி 12:15; யாக் 3:14)
29. புதியது (எசே 18:31; எசே 36:26; 2கொரி 5:17-18)
30. கல்லானது (எசே 11:19; எசே 36:26)
31. மாம்சமானது (எசே 11:19; எசே 36:26)
32. விருத்தசேதனமில்லாதது (எசே 44:7; எரே 9:26; அப் 7:51)
33. சாந்தமும், மனத்தாழ்மையுமானது. (மத் 11:29)
34. உண்மையும், நன்மையுமானது. (லூக்கா 8:15)
35. பாரமடைந்தது (லூக்கா 21:34)
36. கலங்கினது (யோவான் 14:1-3,27)
37. ஒருமனப்பட்டது (அப் 2:46; எபே 6:5)
38. மதியீனமானது, இருளானது (ரோமர் 1:21)
39. குணப்படாதது (ரோமர் 1:21; ரோமர் 2:5)
40. விருத்தசேதனமானது (ரோமர் 2:29; பிலி 3:3)
41. பொல்லாதது (எரே 3:17; எரே7:24; எரே 11:8; எரே 16:12; எபி 3:12)
42. உண்மையுள்ளது (எபி 10:22; மத் 22:16)
43. கரையக்கூடியது. (யோசு 2:11; யோசு 5:1; யோசு 7:5; யோசு 14:8)
44. கபடமுள்ளது (எரே 14:14; எரே 17:9; மாற்கு 7:21-23)
45. கடினமானது (உபா 15:7; சங் 95:8; எபி 3:8)
46. சோரமானது (எசே 6:9; ஓசி 4:12; ஓசி 9:1)
47. தீங்கானது (நீதி 28:14; நீதி 22:15; ரோமர் 1:21)
48. வஞ்சிக்கக்கூடியது (யோவான் 13:2; அப் 5:3)
49. பேராசையுடையது (எரே 22:17; 2பேதுரு 2:14)
50. வியாகுலமானது (சங் 55:4; எரே 4:19)
494.பரிசுத்த வேதாகமத்தில் வில்வித்தையில் வல்லவர்களுக்கு 14 எடுத்துக்காட்டுக்கள்
1. இஸ்மவேல் (ஆதி 21:20)
2. ஏசா (ஆதி 27:3)
3. யோனத்தான் (1சாமு 20:20,36-37; 2சாமு 1:185-22)
4. தாவீது (2சாமு 22:35; சங் 18:34)
5. சீரியர்கள் (1இராஜா 22:34)
6. யெகூ (2இராஜா 9:24)
7. யோவாஸ் (2இராஜா 13:15-17)
8. பெலிஸ்தர்கள் (1சாமு 31:3; 1நாளா 10:3)
9. இஸ்ரவேலர்கள் (2சாமு 1:18; 1நாளா 5:18; 1நாளா 12:2; 2நாளா 14:8; 2நாளா 17:17; 2நாளா 26:14; நெகே. 4:13)
10. ஊலாமின் குமாரன் (1நாளா 8:40)
11. யோபு (யோபு 29:20)
12. மேதியரும், பெர்சியரும் (ஏசா 13:17-18)
13. கேதேரின் ஜனங்கள் (ஏசா 21:17)
14. லீதியரும், மற்றவர்களும் (ஏசா 66:19; எரே 6:23; எரே 46:9; எரே 49:35)
495.பரிசுத்த வேதாகமத்தில் மனுஷர்கள் உடன்படிக்கை பண்ணிக்கொண்ட 22 சம்பவங்கள்
1. அபிமெலேக்கோடு ஆபிரகாம் (ஆதி 21:27-34)
2. அபிமெலேக்கோடு ஈசாக்கு (ஆதி 26:26-31)
3. தேவனோடு யாக்கோபு. (ஆதி 28:20)
4. லாபானோடு யாக்கோபு (ஆதி 31:44-45)
5. கிபியோனியரோடு யோசுவா (யோசு 9:15)
6. இஸ்ரவேலோடு யோசுவா (யோசு 24:25-28)
7. தாவீதோடு யோனத்தான். (1சாமு 18:3; 1சாமு 20:8,16,42; 1சாமு 23:18; 2சாமு 21:7)
8. அப்னேரோடு தாவீது. (2சாமு 3:12-21)
9. இஸ்ரவேலோடு தாவீது. (2சாமு 5:3; 1நாளா 11:3)
10. ஈராமோடு சாலொமோன். (1இராஜா 5:12)
11. பெனாதாத்தோடு ஆசா. (1இராஜா 15:19-20)
12. யூதாவோடு ஆசா. (1நாளா 15:12)
13. பெனாதாத்தோடு ஆகாப். (1இராஜா 20:34)
14. யூதாவோடு யோய்தா (2இராஜா 11:4,17)
15. யூதாவோடு யோசியா (2இராஜா 23:3)
16. தேவனோடு ஆசா (2நாளா 15:8-15)
17. தேவனோடு எசேக்கியா (2நாளா 29:10)
18. இஸ்ரவேலோடு எஸ்றா (எஸ்றா 10:3; நெகே 10:29)
19. யூதாவோடு சிதேக்கியா (எரே 34:8)
20. யூதாவோடு நேபுகாத்நேச்சார் (எசே 17:13)
21. அசீரியரோடு இஸ்ரவேல். (ஓசி 12:1)
22. பரிசேயரோடு யூதாஸ். (மத் 26:15)
496.பரிசுத்த வேதாகமத்தில், தேவன் மனுஷரோடிருந்ததற்கு 12 எடுத்துக்காட்டுக்கள்
1. இஸ்மவேல் (ஆதி 21:20)
2. ஆபிரகாம் (ஆதி 21:22)
3. யாக்கோபு (ஆதி 28:15,20)
4. யோசேப்பு (ஆதி 39:2,21; அப் 7:9)
5. மோசே (யோசு 1:5)
6. யோசுவா (யோசு 1:5,9)
7. சாமுவேல் (1சாமு 3:19)
8. தாவீது (2சாமு 5:10; 1நாளா 17:2)
9. சாலொமோன் (1நாளா 28:20; 2நாளா 1:1)
10. எரேமியா (எரே 20:11)
11. இயேசு (யோவான் 3:2; அப் 10:38)
12. பவுல் (2தீமோ 4:17)
497. பரிசுத்தவேதாகமத்தில் சொப்பனங்கண்ட 14 நபர்கள்
1. அபிமெலேக்கு (ஆதி 20:3,6)
2. யாக்கோபு (ஆதி 28:12;ஆதி 31:10-11)
3. லாபான் (ஆதி 31:24)
4. யோசேப்பு (ஆதி 37:5-10)
5. பானபாத்திரக்காரரின் தலைவன் (ஆதி 40:9-15)
6. சுயம்பாகிகளின் தலைவன் (ஆதி 40:16-23)
7. பார்வோன் (ஆதி 41:1-32)
8. மீதியானியரில் ஒருவன்(நியா 7:13-15)
9. சாலொமோன் (1இராஜா 3:5-15)
10. நேபுகாத்நேச்சார் (தானி 2,4)
11. தானியேல் (தானி 2, தானி 7)
12. யோசேப்பு (மத் 1:20; மத் 2:13-22)
13. சாஸ்திரிகள் (மத் 2:12)
14. பிலாத்துவின் மனைவி (மத் 27:19)
498.பிறப்பதற்கு முன்பாகவே பெயரிடப்பட்ட 7 நபர்கள்
வேதாகமத்தில் 7 பேருக்கு அவர்கள் பிறப்பதற்கு முன்பாகவே பெயரிடப்பட்டது.
1. இஸ்மவேல் (ஆதி 16:11)
2. ஈசாக்கு (ஆதி 17:19)
3. சாலொமோ (1நாளா 22:9)
4. யோசியா (பிறப்பதற்கு 325 வருஷங்களுக்கு முன்பாக) (1இராஜா 13:2; 2இராஜா 22:1)
5. கோரேஸ் (பிறப்பதற்கு 175 வருஷங்களுக்கு முன்பாக) (ஏசா 44:28#45:1)
6. யோவான் ஸ்நானன் (லூக் 1:13,60#63)
7. இயேசு (மத் 1:21)
499.மெல்கிசேதேக்கும் கிறிஸ்துவும்
1. வம்சவரலாறு (எபி 7:3,6 = மீகா 5:2)
2. பலி (ஆதி 14:18= லூக்கா 22:14-30)
3. ஆசாரியத்துவம். (சங் 110=எபி 5:10; எபி 6:20; எபி 7:3,17,21,23-28)
4. ராஜா-ஆசாரியன் (எபி 7:1= சக 6:12-13)
5. ஆபிரகாமைவிட பெரியவர். (எபி 7:4-8= யோவான் 8:55-59)
6. நீதியின் ராஜா (எபி 7:2=1கொரி 1:30; எபி 1:8)
7. சமாதானத்தின் ராஜா (எபி 7:2= ஏசா 9:6)
500.வேதத்தில் தரிசனம் பெற்ற 21 நபர்கள்
1. ஆபிரகாம் (ஆதி 15:1)
2. யாக்கோபு (ஆதி 46:2)
3. பிலேயாம் (எண் 24:4,16)
4. சாமுவேல் (1சாமு 3:1,15)
5. நாத்தான் (2சாமு 7:17; 1நாளா 17:15)
6. ஏசாயா (ஏசா 1:1; 2நாளா 32:32)
7. மேசியா (சங் 89:19)
8. எசேக்கியேல் (எசே 7:13; எசே 8:1-4; எசே 11:24)
9. இத்தோ (2நாளா 9:29)
10. தானியேல் (தானி 2:19; தானி 8:1-27; தானி 9:21-24)
11. நேபுகாத்நேச்சார் (தானி 2)
12. ஒபதியா (ஒப 1)
13. நாகூம் (நாகூம் 1:1)
14. ஆபகூக் (ஆப 2:2-3)
15. பேதுரு (மத் 17:1; அப் 10:19; அப் 11:5)
16. யாக்கோபு (மத் 17:1)
17. யோவான் (மத் 17:1; வெளி 9:17)
18. சகரியா (லூக்கா 1:22)
19. அனனியா(அப் 9:10-12)
20. கொர்நேலியு (அப் 10:3,17)
21. பவுல் (அப் 16:9-10; அப் 18:9; 2கொரி 12)