51. இரண்டு வித அலங்காரம்
மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல்,
அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது
(1 பேதுரு 3:3,4)
1. புறம்பான அலங்காரம் (1 பேதுரு 3:3)
2. உள்ளான அலங்காரம் (1 பேதுரு 3:4).
1. வெளியே தெரியும் அலங்காரம் (1 பேதுரு 3:3).
2. மறைந்திருக்கிற அலங்காரம் (1 பேதுரு 3:4).
1. சரீரத்தில் செய்யப்படும் அலங்காரம் (1 பேதுரு 3:3)
2. ஆவியில்(சிந்தையில்) பெற்றுக்கொள்ளும் அலங்காரம் (1 பேதுரு 3:4)
1. மயிரைப் பின்னுவது, பொன் ஆபரணங்களை அணிவது, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்துவது (1 பேதுரு 3:3).
2. சாந்தமும் அமைதலுள்ள ஆவியால் அலங்கரிப்பது (குணத்தால்) (1 பேதுரு 3:4).
1. விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது (1 பேதுரு 3:3)
2. விலையேறப்பெற்றது (1 பேதுரு 3:4).
1. அழியக்கூடிய அலங்காரம் (1 பேதுரு 3:3)
2. அழியாத அலங்காரம் (1 பேதுரு 3:4).
1. பூமிக்குரிய மனைவியின் அலங்காரம் (1 கொரி. 7:34).
2. கிறிஸ்துவின் மணவாட்டியின் அலங்காரம் (சங். 45:13).
உங்களுடைய அலங்காரம் எது? புறம்பான அலங்கரிப்பா? உள்ளான அலங்கரிப்பா? உங்களைப் பார்த்தால் தேவனுடைய பிள்ளை என்ற வெளிப்படையான அடையாளம் இருக்கிறதா? பழைய ஏற்பாட்டு சபை மற்றவர்களை விட்டு பிரித்தெடுக்கப்பட்ட சபையாக மற்றவர்களுக்குத் தெரிந்தது (எண். 23:9). புதிய ஏற்பாட்டு சபையாரும் மற்ற மார்க்கத்தினரை விட்டு பிரித்தெடுக்கப்பட்ட வாழ்க்கை வாழ வேண்டும் என்பது கிறிஸ்துவின் அஸ்திபார உபதேசம் (அப். 2:40). இதுவே இரட்சிக்கப்பட்டவர்களின் அடையாளம். இதுவே புதிய ஏற்பாட்டு இரட்சிப்பு.
52. இரவில் செய்ய வேண்டியது
1) துதிக்க வேண்டும் – அப் 16:25
2) ஜெபிக்க வேண்டும் – அப் 16:25
3) வேத வசனத்தை தியானிக்க வேண்டும் – சங் 1:2
4) ஆத்துமா கர்த்தரை வாஞ்சிக்க வேண்டும் – ஏசா 26:9
5) பாடல் பாட வேண்டும் – சங் 42:8
6) ஆலயத்தில் காணப்பட வேண்டும் – லூக் 2:37
7) உபவாசிக்க வேண்டும் – லூக் 2:37
8) ஆராதனை காணப்பட வேண்டும் – லூக் 2:37
6) வேலை செய்து சுவிசேஷம் சொல்ல வேண்டும் – பிரச 11:6
7) வருகைக்கு ஆயத்தத்தோடு படுக்க செல்ல வேண்டும் – லூக் 17:34
53. இரவும் பகலும் செய்ய வேண்டிய காரியங்ள்
1) துதிக்க வேண்டும் – அப் 26-7
2) ஜெபிக்க வேண்டும் – லூக் 18-7, சங் 88-1
3) வேத வசனத்தை தியானிக்க வேண்டும் – சங் 1-2, யோசு 1-8
4) உபவாசிக்க வேண்டும் – லூக் 2-37
5) ஆராதனை காணப்பட வேண்டும் – லூக் 2-37
6) தேவ ஆலயத்தில் காணப்பட வேண்டும் – லூக் 2-37
7) வேலை செய்து சுவிஷேம் சொல்ல வேண்டும் – 2 தெச 2-9
54. இருதயத்தில்
1.இருதயத்தில் தீர்மானம் உள்ளவர்களாய் காணப்பட வேண்டும்.
தானியேல் 1:8
தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம்பண்ணிக்கொண்டு, தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டான்.
2. இருதயத்தில் விருப்பம் இருக்க வேண்டும்.(தேவனுடைய காரியத்தில்)
1 இராஜாக்கள் 8:17
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்கிற விருப்பம் என் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தில் இருந்தது.
3. இருதயத்தில் தேவவார்த்தை இருக்க வேண்டும்.
எரேமியா 20:9
ஆதலால் நான் அவரைப் பிரஸ்தாபம்பண்ணாமலும் இனிக் கர்த்தருடைய நாமத்திலே பேசாமலும் இருப்பேன் என்றேன், ஆனாலும் அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப்போல் என் இருதயத்தில் இருந்தது, அதைச் சகித்து இளைத்துப்போனேன், எனக்குப் பொறுக்கக்கூடாமற்போயிற்று.
4. இதயத்தில் சந்தேகப்படாத விசுவாசம் இருக்க வேண்டும்.
மாற்கு 11:23
எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
5. இருதயத்தில் சாந்தமும் அமைதலுமுள்ள குணம் இருக்க வேண்டும்
1 பேதுரு 3:4
அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது. அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது.
55. இருதயத்தில் இருக்க வேண்டியது
1) நல்ல குணங்கள் – 1 பேதுரு 3:4
2) ஜெபம் – 1 சாமு 1:13
3) பாட்டு – கொ 3:16
4) துதி – சங் 138:1
5) விசுவாசம் – ரோ 10:9
6) சுத்தம் – மத் 5:8
7) வேத வசனம் – சங் 37:31
8) தேவ சமாதானம் – கொ 3:15
9) பொறுமை – 2 தெச 3:5
10) கர்த்தரை தேடுதல் – 2 நாளா 11:16
11) திர்மானம் – தானி 1:8
12) ஆயத்தம் – யோபு 11:13
13) கிருபை – நீதி 3:3
14) சத்தியம – நீதி 3:3
15) உண்மை – எபி 10:22
16) உத்தமம் – 1 இரா 11:4
17) கற்பனைகளை கை கொள்ளுதல் – உபா 5:29
18) கொழுந்து விட்டு எரிய வேண்டும் (வசனத்தை தியானிக்கையில்) – லூக் 24:32
19) குத்தப்படுதல் – அப் 2:37
20) பரிசுத்த ஆவி – கலா 4:6
21) தேவ அன்பு – ரோ 5:5
22) தியானம் – சங 19:14
23) ஞானம் – 1 இராஐ 3:12
24) செம்மை – சங் 125:4
25) இயேசு கிறிஸ்து – 2 கொரி 13:5
26) கெம்பிர சத்சம் – சங 84:2
27) தேவ பயம் – ஏரே 32:40
28) இரட்சிப்பின் களிகூறுதல் – சங் 13:5
29) ஸ்திரம் – சங் 27:14
56. இருதயமும் கர்த்தரும்
1) மனுஷன் முகத்தை பார்ப்பான், கர்த்தரோ இருதயத்தை பார்க்கிறார் – 1 சாமு 16:7
2) இருதயத்தின் வேண்டுதல்களை நமக்கு அருள் செய்வார் – சங் 37:4
3) நொருங்குண்ட இருதயம் உள்ளவர்களுக்கு கர்த்தர் சமிபம் – சங் 34:18
4) சுத்த இருதயமுள்ளவர்களுக்கு கர்த்தர் நல்லவர் – சங் 73:1
5) இருதயத்தின் அந்தரங்கங்களை அவர் அறிந்திருக்கிறார் – சங் 44:21
6) இருதயங்களை சோதிக்கிறவர் கர்த்தர் – நீதி 17:3
7) இருநயங்களை நிறுத்து பார்க்கிறவர் – நீதி 21:2
8) இருதயங்களை ஆராய்கிறவர் – வெளி 2:23
9) பிரமாணங்களை இருதயத்தில் எழுதுகிறார் – எபி 10:16
10) இருதயத்தை தேற்றுகிறவர் இயேசு – 2 தெச 2:17
11) இருதயத்தை ஸ்திரப்படுத்துகிறவர் இயேசு – 1 தெச 3:13
12) இருதயங்களில் பிரகாசிக்கிறவர் இயேசு – 2 கொரி 4:6
13) இருதயங்களை சுத்தமாக்குகிறவர் இயேசு – அப்போ 15:9
14) இருதயம் நொருங்குண்டவர்களை குணமாக்குகிறார் – லூக் 4:18
15) கல்லான இருதயத்தை எடுத்து, சதையான இருதயத்தை கொடுப்பார் – எசேக் 36:26
57. இருதயமும் சகோதரனும்
1) சகோதரன் குறைச்சலை கண்டு இருதயத்தை அடைத்துக் கொள்ள கூடாது – 1 யோ 3:17
2) சகோதரனை உள்ளத்தில் பகைக்க கூடாது – லேவி 19:17
3) சகோதரனுக்கு கொடுக்கும் போது இருதயம் விசனபடக்கூடாது – உபா 15:10
4) சகோதரனுக்கு விரோதமாக இருதயத்தில் தீங்கு நினைக்கக்கூடாது – சகரியா 7:10
58. இல்லாமல்
யோவான் 15:5
நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான், என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.
1.பரிசுத்தமில்லாமல் கர்த்தரைத் தரிசிக்க முடியாது
எபிரேயர் 12:14
யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள். பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே.
2.விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்
எபிரேயர் 11:6
விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம். ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.
3. இயேசு இல்லாமல் நம்மால் ஒன்றும் செய்யக்கூடாது
யோவான் 15:5
நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான், என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.
4.இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு இல்லை
எபிரேயர் 9:22
நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும். இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது.
59. இழந்து போகாதே
இழந்து போனதைப் தேடவும் இரட்சிக்கவு மே மனுஷகுமாரன்
வந்திருக்கிறார் என்றான். லூக்கா 19 : 10
நாம் எதையெல்லாம் இழந்துபோக கூடாது என்பதைக் குறித்து சிந்திக்கலாம்.
1. ஊழியத்தை இழந்துபோகாதே அப் 1 : 24
2. தேவ கிருபையை இழந்துபோகாதே எபி 12 : 15 , 16
3. பந்தயபொருளை இழந்துபோகாதே கொலோ 2 : 18 , 19
4. உங்கள் செய்கை களின் பலனை
இழந்துபோகாதே 2யோவன் 1 : 8.
60. இனி இல்லை
எரேமியா 30:8 அந்நாளில் நான் அவன் நுகத்தை உன் கழுத்தின்மேல் இராதபடிக்கு உடைத்து, உன் கட்டுகளை அறுப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார், அந்நியர் இனி அவனை அடிமைகொள்வதில்லை.
1.நீ இனி அலைந்து திரிவதில்லை(அருவருப்புகளை அகற்றிவிடு)
எரேமியா 4:1இஸ்ரவேலே, நீ திரும்புகிறதற்கு மனதாயிருந்தால் என்னிடத்தில் திரும்பு என்று கர்த்தர் சொல்லுகிறார், நீ உன் அருவருப்புகளை என் பார்வையினின்று அகற்றிவிட்டால், நீ இனி அலைந்து திரிவதில்லை.
2. துஷ்டன் இனி உன் வழியாய்க் கடந்து வருவதில்லை(உன் பொருத்தனைகளை செலுத்து)
நாகூம் 1:15 இதோ, சமாதானத்தைக் கூறுகிற சுவிசேஷகனுடைய கால்கள் மலைகளின்மேல் வருகிறது. யூதாவே, என் பண்டிகைகளை ஆசரி. உன் பொருத்தனைகளைச் செலுத்து. துஷ்டன் இனி உன் வழியாய்க் கடந்து வருவதில்லை. அவன் முழுவதும் சங்கரிக்கப்பட்டான்.
3.அந்நியர் இனி உன்னை அடிமைகொள்வதில்லை
எரேமியா 30:8 அந்நாளில் நான் அவன் நுகத்தை உன் கழுத்தின்மேல் இராதபடிக்கு உடைத்து, உன் கட்டுகளை அறுப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார், அந்நியர் இனி அவனை அடிமைகொள்வதில்லை.
4.இனித் தொய்ந்துபோவதில்லை(சீயோனின் அனுபவத்திற்க்குள் வர வேண்டும்)
எரேமியா 31:12 அவர்கள் வந்து, சீயோனின் உச்சியிலே கெம்பீரித்து, கர்த்தர் அருளும் கோதுமை, திராட்சரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள், கன்றுக்குட்டிகள் என்பவைகளாகிய இந்த நன்மைகளுக்காக ஓடிவருவார்கள், அவர்களுடைய ஆத்துமா நீர்ப்பாய்ச்சலான தோட்டம்போலிருக்கும், அவர்கள் இனித் தொய்ந்துபோவதில்லை.
5.அந்நியர்(உலக காரியங்கள்) இனி உன்னை கடந்து போவதில்லை.(பரிசுத்த தேவனை அறிந்துக்கொள்ள வேண்டும்)
யோவேல் 3:17 என் பரிசுத்த பர்வதமாகிய சீயோனிலே வாசமாயிருக்கிற நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று அப்பொழுது அறிந்துகொள்வீர்கள், அப்பொழுது எருசலேம் பரிசுத்தமாயிருக்கும், அந்நியர் இனி அதைக் கடந்து போவதில்லை.
6.இனித் தாமதிப்பதில்லை(கர்த்தர் சொன்ன காரியம் எல்லாம் நடக்கும்)
எசேக்கியேல் 12:28 ஆகையால் என் வார்த்தைகளில் ஒன்றாகிலும் இனித் தாமதிப்பதில்லையென்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், நான் சொன்ன வார்த்தை நிறைவேறும் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று அவர்களோடே சொல் என்றார்.