511. தேவனோடு தனித்திருந்த 6 நபர்கள்
1. யாக்கோபு (ஆதி 32:24)
2. மோசே (யாத் 24:2)
3. எரேமியா (எரே 15:17)
4. தானியேல் (தானி 10:7-8)
5. இயேசு (லூக்கா 9:18)
6. பவுல் (1தெச 3:1)
512. பரிசங்களின் வகைகள்
1. மணவாளனிடமிருந்து மணவாட்டிக்குக் கொடுக்கப்படும் வெகுமதிகள் (ஆதி 24:22,30,53; ரூத் 4:10; ஓசி 3:2).
2. மணவாளனிடமிருந்து மணவாட்டியின் பெற்றோருக்கும், அவளுடைய குடும்பத்தின் மற்ற அங்கத்தினருக்கும் கொடுக்கப்படும் வெகுமதிகள். (ஆதி 24:53; ஆதி 34:12).
3. மணவாட்டியின் பெற்றோருக்கும், சகோதரருக்கும் கொடுக்கப்படும் கிரயம். (ஆதி 34:12; யாத் 22:17; 1சாமு 18:25).
4. மணவாட்டியின் பெற்றோருக்குச் சேவை செய்வது. (ஆதி 29:18).
5. மணவாட்டியின் பெற்றோர் மணவாளனுடைய பராக்கிரமத்தை நிரூபித்துக் காண்பிக்க வேண்டும் என்று கேட்கும்போது மணவாளன் அதை நிரூபித்துக் காண்பிப்பது. (யோசு 15:16; நியா 1:12; 1சாமு 18:25).
6. தந்தை ஒரு மகளுக்குக் கொடுக்கும் வெகுமதிகளும் பரிசங்கள் என்று அழைக்கப்படுகிறது. (நியா 1:15; 1இராஜா 9:16).
513. பரிசுத்தவேதாகமத்தில், தங்கள் வஸ்திரங்களை கிழித்துக்கொண்ட 28 நபர்கள்
1. ரூபன் – யோசேப்பு காணாமல் போனதற்காக (ஆதி 37)
2. யாக்கோபு – யோசேப்பிற்காக (ஆதி 37:34)
3. யோசுவா – வேவுகாரரின் அறிக்கைக்காக (எண் 14:6)
4. யோசுவா – பாவத்திற்காக (யோசு 7:6)
5. யெப்தா – ஆணைக்காக (நியா 11:35)
6. போர்வீரன் – தோல்விக்காக (1சாமு 4:12)
7. சாமுவேல் – சவுலுக்காக (1சாமு 15:27)
8. போர்வீரன் – தோல்விக்காக (2சாமு 1:2)
9. தாவீதும், அவன் மனுஷரும் – தோல்வியைக் கேள்விப்பட்டபோது (2சாமு 1:11-12)
10. தாமார் – தான் கெடுக்கப்பட்டதற்காக (2சாமு 13:19)
11. தாவீது – அம்னோனின் மரணத்திற்காக (2சாமு 13:31)
12. ஊசாய் – அப்சலோமுக்காக (2சாமு 15:32)
13. ஆகாப் – தன் அழிவிற்காக (1இராஜா 21:17-27)
14. எலிசா – எலியா எடுத்துக்கொள்ளப் பட்டதற்காக (2இராஜா 2:12)
15. யோராம் – துர்ச்செய்திகளுக்காக (2இராஜா 5:7-8)
16. யோராம் – தாயார் தன் பிள்ளையைத் தின்றதற்காக (2இராஜா 6:28-30)
17. அத்தாலியாள் – அவள் அழிவிற்காக (2இராஜா 11:14)
18. எலியாக்கீம், சேப்னா – எசேக்கியாவிற்கு துர்ச்செய்தியைக் கொண்டு வந்ததற்காக (2இராஜா 18:37)
19. எசேக்கியா – துர்ச்செய்தியைக் கேட்டதற்காக (2இராஜா 19:1)
20. யோசியா – நியாயப்பிரமாணத்தை கேட்டதற்காக (2இராஜா 22:11,19)
21. எஸ்றா – இஸ்ரேல் பாழாய்போனதற்காக (எஸ்றா 9:3-5)
22. மொர்தெகாய் – யூதருடைய அழிவிற்காக (எஸ் 4:1)
23. யோபு – தன் பிள்ளைகளின் மரணத்திற்காகவும், தன் ஆஸ்திகளின் அழிவிற்காகவும் (மத் 26:65; மாற்கு 14:63)
24. யோபுவின் மூன்று நண்பர்கள் – பரிதாபத்தின் நிமித்தமாக (யோபு 2:12)
25. இஸ்ரவேலர்கள் – நியாயத்தீர்ப்பிற்காக (எரே 41:5)
26. பிரதான ஆசாரியர்கள் – இயேசு கிறிஸ்து தேவதூஷணம் சொன்னார் என்று நினைத்ததற்காக (மத் 26:65; மாற்கு 14:63)
27. அப்போஸ்தலர் – தங்களுக்கு பலிகளைச் செலுத்தியதற்காக (அப் 14:14)
28. அதிகாரிகள் – பிலிப்பியில் கிறிஸ்தவ மார்க்கத்தைப் பிரசங்கம் பண்ணியதற்காக (அப் 16:22)
514. தேவனிடத்திலிருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்ட 8 நபர்கள்
1. யோசேப்பு (ஆதி 39:2-3,23; ஆதி 41:40-44)
2. யோசுவா (யோசு 1:7; யோசு 12:1-24; யோசு 24:15)
3. தாவீது (2சாமு 5:10; சங் 30:6)
4. சாலொமோன் (1இராஜா 3:13; 1இராஜா 4:1-34; 1இராஜா 10:7)
5. உசியா (2நாளா 26:5)
6. எசேக்கியா (2நாளா 31:21; 2நாளா 32:30)
7. தானியேல் (தானி 6:28)
8. மேசியா (ஏசா 53:10; எரே 23:4)
515. பரிசுத்த வேதாகமத்தில் தேவஆசீர்வாதம் பெறுவதற்கு உள்ள 7 நிபந்தனைகள்
1. தேவன் அந்த மனுஷனோடு இருக்க வேண்டும். (ஆதி 39:1-3,23; எரே 20:11)
2. மனுஷன் தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும். (உபா 28:1-14; உபா 29:9; 1இராஜா 2:3; 1நாளா 22:13)
3. தேவனையும், அவருடைய வார்த்தையையும் தியானிக்க வேண்டும். (யோசு 1:8; சங் 1:2-3)
4. தேவனிடத்தில் விசுவாசம் வைத்திருக்க வேண்டும். (2நாளா 20:20; நெகே 2:20)
5. தேவனைத் தேடவேண்டும் (2நாளா 26:5; எரே 10:21)
6. இஸ்ரவேலுக்கு நன்மை செய்ய வேண்டும். (ஆதி 12:1-3; சங் 11 122:6)
7. அந்நியரை உபசரிக்க வேண்டும். (லூக்கா 6:38; 2கொரி 8:15)
516. பரிசுத்த வேதாகமத்தில் தேவஆசீர்வாதம் பெறமுடியாமல் போவதற்கு உள்ள 3 காரணங்கள்
1. தேவனுக்கு எதிராகக் கலகம் பண்ணுதல். (உபா 28:29)
2. பாவங்களை மூடி மறைத்தல் (நீதி 28:13)
3. தேவனோடு யுத்தம் பண்ணுதல். (ஏசா 54:17)
517. பரிசுத்த வேதாகமத்தில் யோசேப்பைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் 22 செய்திகள்
1. யாக்கோபின் பன்னிரெண்டு குமாரர்களில் யோசேப்பு பதினொறாவது குமாரர். யாக்கோபுக்கு நேசமான மனைவியின் மூலமாகப் பிறந்த முதலாவது குமாரன் (ஆதி 30:22-26)
2. யோசேப்பு தன் தந்தைக்குப் பிரியமானவர். (ஆதி 37:2-3)
3. யோசேப்பு நல்ல சுபாவம் உள்ளவர். (ஆதி 37:2,14; ஆதி 39:7-20; ஆதி 50:15-21)
4. சொப்பனங்களுக்கு அர்த்தம் கூறும் தெய்வீக வரமுள்ளவர். (ஆதி 37:5-10; ஆதி 40:7-23; ஆதி 41:1-44)
5. தேவனை விசுவாசிப்பதிலும் நம்பிக்கைக்குரியவராக இருப்பதிலும் எவ்வித குறைவும் அவரிடம் காணப்படவில்லை. (ஆதி 37:2,13; ஆதி 39:1-23; ஆதி 40:1-23; ஆதி 41:14-50:21)
6. யோசேப்பின் சகோதரர்கள் அவரை வெறுத்து ஒதுக்கினார்கள். (ஆதி 37:4-33)
7. யோசேப்பை அந்நியரிடத்தில் அடிமையாக விற்றுப் போட்டார்கள். (ஆதி 37:28-36; ஆதி 39:1)
8. அடிமைத்தனத்திலும், சுயாதீனத்திலும் ஆதரவான சூழ்நிலையிலும், எதிரான சூழ்நிலையிலும், அடிமையாக இருந்த போதும், எஜமானாக இருந்தபோதும் எல்லாச் சூழ்நிலைகளிலும் யோசேப்பு தன்னுடைய வாழ்க்கை முறையை அதற்கு ஏற்றவாறு சீர்படுத்திக் கொண்டார். (ஆதி 37:2-41:57)
9. தேவன் யோசேப்பை எல்லாக் காரியங்களிலும் ஆசீர்வதித்தார். (ஆதி 39:2-3,23; ஆதி 40:1-23; ஆதி 41:14-57)
10. வெற்றியிலும், தோல்வியிலும் யோசேப்பு சந்தோஷமாகவும், போதுமென்ற மனதுடனும் இருந்தார். (ஆதி 39:3-23; ஆதி 40:1-23)
11. தேவனுக்கு சிறப்பாக சாட்சி பகர்ந்தார். (ஆதி 39:3-6; ஆதி 40:8; ஆதி 41:8-36)
12. தன்னுடைய சகோதரரைத் தவிர மற்ற எல்லாருடைய கண்களிலும் யோசேப்புக்குத் தயவு கிடைத்தது. (ஆதி 39:3-13,21-23; ஆதி 41:14-44)
13. தனக்குக் கொடுக்கப்பட்ட எல்லா பொறுப்புக்களையும் யோசேப்பு சீராகவும், சிறப்பாகவும் செய்து முடித்தார் (ஆதி 37:2; ஆதி 39:3-41:57)
14. தனிப்பட்ட காரியங்களிலும், அரச காரியங்களிலும் உயர்ந்த ஸ்தானங்களில் நம்பிக்கைக்குரியவராக அமர்த்தப்பட்டார். (ஆதி 39:3-41:57)
15. தேவன் யோசேப்பின் மூலமாக இஸ்ரவேல் தேசம் முழுவதையும் ஆசீர்வதித்தார். (ஆதி 39:4-41:57)
16. யோசேப்பு அழகான ரூபமும், சௌந்தரிய முகமும் உள்ளவர் (ஆதி 39:6)
17. சோதனையை அன்றாடம் சந்தித்த போதும் அவர் தன்னுடைய நீதிநெறி பண்பைக் காத்துக் கொண்டார்.(ஆதி 39:7-13)
18. நீதிக்காக துன்பம் அனுபவித்தார். (ஆதி 39:14-23)
19. அதிகமாகத் தாழ்த்தப்பட்டார். அதிகமாக உயர்த்தப்பட்டார். (ஆதி 39:14-41:57)
20. இஸ்ரவேலின் இரண்டு கோத்திரத்தாருக்குத் தகப்பனானார். (ஆதி 41:50-52; ஆதி 48:15-22)
21. தன்னுடைய விரோதிகளை மன்னித்தார். (ஆதி 42:1-45:20; ஆதி 50:15-21)
22. யோசேப்பு இஸ்ரவேலை மரணத்திலிருந்து இரட்சித்தார். இதன் மூலமாக மேசியா வரவேண்டிய சந்ததியைப் பாதுகாத்தார் (ஆதி 45:21-47:31; ஆதி 50:20; மத் 1).
518. போர்திபார் மணைவி போன்ற ஸ்திரீகள் நீதிமொழிகள் புஸ்தகத்தில் விவரிக்கப்பட்டிருக்கின்ற 7 விதங்கள்
1. அந்நியப்பெண்ணாகிய பரஸ்திரீ (நீதி 2:17; நீதி 6:24; நீதி 7:5; நீதி 20:16; நீதி 23:27; நீதி 27:13).
2. துன்மார்க்கஸ்திரீ (நீதி 6:24)
3. வேசி (நீதி 6:26)
4. மதியற்ற ஸ்திரீ (நீதி 9:13)
5. மதிகேடாய் நடக்கிற அழகுள்ள ஸ்திரீ. (நீதி 11:22)
6. விபசார ஸ்திரீ (நீதி 30:20)
7. பகைக்கப்படத்தக்க ஸ்திரீ (நீதி 30:23)
519. பாதாளத்தில் மரித்தோரின் ஆவிகளுக்கு உள்ள ஐந்து சிறையிருப்புக்கள்
1. டார்டரஸ் எனப்படும் காவல் 2. பரதீசு 3. நரகம் 4. பாதாளம் 5. அக்கினிக்கடல்
1. டார்டரஸ் எனப்படும் காவல் (1பேதுரு 3:19; 2பேதுரு 2:4; யூதா 1:6-7). ஜலப்பிரளயத்தின் காலத்திற்கு முன்பாக விழுந்துபோன தூதர்களைக் காவல் பண்ணி வைத்திருக்கும் இடம். இந்தச் சிறைச்சாலைக்கு மனுஷருடைய ஆவிகளோ, பிசாசுகளோ போவதில்லை (2பேதுரு 2:4)
2. பரதீசு (லூக்கா 16:19-31; லூக்கா 23:43). நீதிமான் மரித்த பின்பு, அவனுடைய ஆவியும், ஆத்துமாவும் தங்கியிருக்கும் இடம். நீதிமான்களின் சித்தத்திற்கு எதிராகப் பிசாசு இவர்களை இங்கு சிறை வைத்திருந்தான். கிறிஸ்து மரணத்தையும், நரகத்தையும், பாதாளத்தையும் ஜெயித்த பின்பு, அவர் பூமியின் தாழ்விடங்களுக்குச் சென்று அங்கு காவலிலிருந்த நீதிமான்களின் ஆவிகளை விடுவித்தார். இப்பொழுது இந்த பரதீசில் நீதிமானின் ஆவிகள் ஒன்றுமில்லை. இயேசு கிறிஸ்து நீதிமானின் ஆவிகளைச் சிறைபிடித்து அவர் பரமேறியபோது தம்மோடு அவர்களையும் பரலோகத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டார். இப்போது நீதிமான் மரிக்கும்போது அவனுடைய ஆவி பரதீசிற்குச் செல்லாமல் நேராக பரலோகத்திற்கே சென்றுவிடுகிறது. (லூக்கா 16:22; எபே 4:8; எபி 2:15)
3. நரகம் (மத் 16:18; லூக்கா 16:19-31). சீயோல் அல்லது பாதாளத்தில் உள்ள பகுதி. துன்மார்க்கர் மரித்துப்போகும்போது அவர்களுடைய ஆவிகள் இங்கே செல்லும். ஆயிரம் வருஷ அரசாட்சியின் முடிவு வரையிலும் துன்மார்க்கர் மரித்துப் போகும் போது அவர்களுடைய ஆவிகள் இங்குதான் போய் கொண்டிருக்கும். ஆயிரம் வருஷ அரசாட்சியின் முடிவில் துன்மார்க்கருடைய ஆவிகளும், ஆத்துமாக்களும் அவர்களுடைய உயிர்த்தெழுந்த சரீரங்களோடு சேர்க்கப்படும். அதன் பின்பு, அவர்கள் நித்திய அக்கினிக் கடலில் நித்திய காலமாகப் பாடுகளை அனுபவிக்குமாறு தள்ளப்படுவார்கள். (வெளி 20:11-15).
4. பாதாளம் (லூக்கா 8:26-31; ரோமர் 10:7; வெளி 9:1-3,11; வெளி 11:7; வெளி 17:8; வெளி 20:1-10) இது பிசாசுகளுக்கும், சில தூதர்களுக்கும் நியமிக்கப்பட்டிருக்கும் பகுதி. மனுஷருடைய ஆவியும், ஆத்துமாவும் இங்கு போவதில்லை. பழைய ஏற்பாட்டில் அபத்தோன் என்னும் சொல் இந்தப் பாதாளத்தையே குறிக்கிறது. (யோபு 26:6; யோபு 28:22; யோபு 31:12; சங் 88:11; நீதி 15:11; நீதி 27:20).
5. அக்கினிக்கடல் இது நித்திய நரகம். விழுந்துபோன தூதர்களும், பிசாசுகளும் துன்மார்க்கரும் இங்கு நித்திய காலமாக பாடுகளைஅனுபவிப்பதற்காகத் தள்ளப்பட்டிருப்பார்கள். (வெளி 20:6,11-15; வெளி 21:8; வெளி 22:15). கிரேக்க மொழியில் “”கெயென்னா” என்னும் வார்த்தை இந்த அக்கினிக் கடலையே குறிக்கும். (லூக்கா 12:5) பிசாசுக்கும், அவனுடைய தூதர்களுக்கும் இந்த அக்கினிக்கடல் ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிறது. (மத் 25:41) அக்கினிக் கடலில் தள்ளப்படுகிறவர்கள் இங்கு நித்திய காலமாக வேதனை அனுபவிக்கவேண்டும். (ஏசா 66:22-24; மத் 25:46; வெளி 14:9-14; வெளி 19:20; வெளி 20:10-15).
520.பரிசுத்த வேதாகமத்தில் உள்ள 7 பரிசுத்த பர்வதங்கள்
1. சீனாய் மலை ஓரேப் மலை (யாத் 3:1; யாத் 4:27; யாத் 18:5; யாத் 24:13; எண் 10:33; 1இராஜா 19:8). சீனாய் ஒரு வனாந்தரமாகவும், 37 இடங்களில் ஒரு பர்வதமாகவும் கூறப்பட்டிருக்கிறது. (யாத் 19:1-23; எண் 1:1; எண் 3:1; கலா 4:24-25). அதுபோலவே இதே வனாந்தரமும், இதே பர்வதமும் ஓரேப் என்றும் 17 இடங்களில் அழைக்கப் பட்டிருக்கிறது. (யாத் 3:1; யாத் 33:6; உபா 1:6; உபா 4:10-15; உபா 5:2; உபா 29:1; 1இராஜா 19:8; சங் 106:19; மல் 4:4)
2. மோரியா மலை (ஆதி 22:2; 1நாளா 21:18; 2நாளா 3:1)
3. சீயோன் மலை (சங் 48:2; ஏசா 2:2-4; ஏசா 8:18; ஏசா 24:23; ஏசா 66:20; மீகா 4:7; தானி 11:45; யோவே 3:17; சக 8:3)
4. ஒலிவமலை (சக 14:4; மத் 24:3; மத் 26:30; அப் 1:12)
5. மறுரூபமலை (2பேதுரு 1:18)
6. கல்வாரி மலை (லூக்கா 23:33)
7. பரலோக சீயோன் பர்வதம் (எபி 12:22; வெளி 14:1; வெளி 21:10)