பிரசங்க குறிப்புகள் 521-530

521. எகிப்தில் தேவன் அனுப்பிய 10 வாதைகளின் பின்னணி

எகிப்து தேசத்தில் தேவன் பத்து வாதைகளை அனுப்புகிறார். இந்த வாதைகள் அனைத்தும், எகிப்தியரின் தெய்வங்கள்மீது நியாயத்தீர்ப்பாக அனுப்பப்பட்டவையாகும் (ஏசா 37:6-13).

1. எகிப்தியர்கள் நைல்நதியை ஒரு தெய்வமாக வழிபட்டார்கள். இதற்கு பல்வேறு பெயர்களும், பல்வேறு அடையாளங்களும் உண்டு. தெய்வங்களின் பிதா, ஜீவியத்தின் பிதா என்றெல்லாம் எகிப்தியர் நைல் நதியை அழைத்தார்கள். மேலும் எகிப்தியர் இரத்தத்தை அருவருத்தார்கள். தங்களுடைய புனித நதி இரத்தமாக மாறியபோது, எகிப்தியர் அனைவரும் பயந்திருப்பார்கள். தங்களுடைய நதி தெய்வம் வல்லமை இழந்து, ஏன் இரத்தமாயிற்று என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் குழம்பிப் போயிருப்பார்கள் (யாத் 7:19-21).

2. எகிப்து தேசத்தில் தவளையும், ஒரு தெய்வமாகக் கருதப்பட்டது. ஏராளமான தவளைகள் எகிப்திற்கு வந்தன. இவற்றைக் கண்டு, எகிப்தியர் அருவருப்படைந்தார்கள். தவளை தங்கள் தெய்வமாக இருந்த போதிலும், அவை திரளாக வந்தபடியினால், தங்களுடைய தெய்வத்தையே அருவருக்கிறார்கள் (யாத் 8:5-6).

3. புழுதியிலிருந்து பேன்களும் (யாத் 8:16-19), திரளான வண்டு ஜாதிகளும் (சங் 78:45), எகிப்து தேசத்தின்மீது வருகிறது. எகிப்தியரின் தெய்வங்களினால் அவர்களைப் பாதுகாக்க முடியவில்லை. அந்தத் தெய்வங்களின் வல்லமையையும் மீறி, எகிப்து தேசம் முழுவதையும் பேன்களும், வண்டு ஜாதிகளும் நிரப்பிற்று.

4. எகிப்தியர் விக்கிரகாராதனை செய்தாலும், தங்களுடைய விக்கிரகக் கோவில்களைச் சுத்தமாக வைத்திருப்பார்கள். எகிப்து தேசம் முழுவதும் வண்டு ஜாதிகள் வந்து நிரம்புகிறது. (யாத் 8:24) பெயல்செபூல் வண்டுகளின் தெய்வம் என்று கருதப்பட்டன. எகிப்து ஜனங்களை அவனால் வண்டுகளிடமிருந்து காப்பாற்ற முடியவில்லை. அவனுக்கு வல்லமையில்லை என்பது இதனால் தெளிவாயிற்று.

5. எகிப்தியர்கள் தங்கள் மிருகஜீவன்களைப் புனிதமானவைகளாகக் கருதினார்கள். அவைகளின்மீது கொடிய கொள்ளை நோய் வந்தது. (யாத் 9:5-7) எகிப்தியரின் தெய்வங்களினால் அவர்களுடைய புனிதமான மிருகஜீவன்களைப் பாதுகாக்க முடியவில்லை. எகிப்தியர் சந்திரன், சூரியன், நட்சத்திரங்கள், ஆறுகள், மலைகள், மிருகஜீவன்கள், தாவர வகைகள் ஆகிய எல்லாவற்றையும் தெய்வங்களாக வழிபட்டார்கள். எகிப்தியர்கள் மிருகங்களைப் பலியிட மாட்டார்கள். தங்களுடைய மிருக ஜீவன்களுக்குக் கொடிய வாதைகள் வந்ததினால், தங்கள்மீது ஏதோ ஒரு தெய்வத்திடமிருந்து நியாயத்தீர்ப்பு வந்திருப்பதாகக் கருதினார்கள். அந்தத் தெய்வத்திற்கு முன்பாக எகிப்தியரின் தெய்வத்திற்கு வல்லமையில்லை என்பதையும் புரிந்து கொண்டார்கள்.

6. எரிபந்தமான கொப்புளங்கள் எகிப்து தேசத்து மனுஷர்மீதும், மிருகஜீவன்கள் மீதும் எழும்பப்பண்ணிற்று. (யாத் 9:9) இதுபோன்ற வாதைகளிலிருந்து தங்களைப் பாதுகாக்க வேண்டுமென்று எகிப்து தேசத்தார் தங்கள் தெய்வங்களிடம் வழிபட்டார்கள். ஆனால் அந்தத் தெய்வங்களால் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை. (யாத் 9:8).

7. எகிப்து தேசமெங்கும் அக்கினியும், கல்மழையும் பொழிந்தது. (யாத் 9:22-26) எகிப்தியர்கள் தண்ணீரையும், அக்கினியையும், காற்றையும், பூமியையும், தாவரவர்க்கங்களையும் தெய்வங்களாகக் கருதி அவற்றை வழிபட்டார்கள். அக்கினியும், கல்மழையும் பயிர் வகைகளையெல்லாம் அழித்துப் போட்டது. வெளியின் மிருகங்களையெல்லாம் முறித்துப் போட்டது. எகிப்தியர்கள் தங்களுடைய தெய்வமென்று கருதியவைகளெல்லாம் அக்கினியினாலும், கல்மழையினாலும் அழிந்தன. எகிப்தியர்கள் அக்கினியையும், வெளிச்சத்தையும் ஈசிஸ், ஓசிரிஸ் என்னும் தெய்வங்களாகப் பாவித்து அவற்றை வழிபட்டார்கள். எகிப்தியருடைய தெய்வங்களால் தங்களைக் காத்துக் கொள்ள முடியவில்லை. எகிப்திய ஜனங்களுக்கு அவைகளால் உதவி புரியவும் முடியவில்லை.

8. எகிப்தியரின் சேராபீஸ் என்னும் தெய்வம் பயிர் வகைகளை வெட்டுக் கிளிகளிடமிருந்து பாதுகாக்கும் என்று எகிப்தியர் நம்பினார்கள் (யாத் 10:12-15) ஆனால் அந்தத் தெய்வத்தால் வெட்டுக்கிளிகளை ஒன்றும் செய்ய முடியவில்லை. தேவனுடைய கட்டளைப்படி அவை வந்தன. தேவனுடைய கட்டளைப்படியே அவை செயல்படுகின்றன. எகிப்தியரின் தெய்வத்திற்கு அவை கீழ்ப்படியவில்லை. எபிரெயரின் தேவனாகிய கர்த்தர் சர்வ வல்லமையுள்ள தேவன். எகிப்தியரின் தெய்வங்கள் மாயையானவை (யாத் 10:4).

9. எகிப்தியர் சூரியனைத் தங்கள் தெய்வமாக ஆராதனை செய்தார்கள். சூரிய தெய்வம் தங்களை இருளிலிருந்து பாதுகாத்து வெளிச்சத்தைத்தரும் என்பது எகிப்தியரின் நம்பிக்கை. ஆனால் இந்தத் தெய்வத்தால் எகிப்தியருக்கு வந்த காரிருளிலிருந்து அவர்களை விடுவித்து, அவர்களுக்கு வெளிச்சத்தைத் தரமுடியவில்லை. (யாத் 10:21-23)

10. எகிப்தியரின் தெய்வங்கள் எகிப்தியரையும், அவர்களுடைய மிருகஜீவன்களையும் பாதுகாக்க வேண்டும். எகிப்தியரின் தலைச்சன் பிள்ளைகளுக்கு மரணம் நேர்ந்த போது, எகிப்தியரின் தெய்வங்களால் அவர்களைப் பாதுகாக்க முடியவில்லை. (யாத் 12:29-30) எகிப்தியரின் தலைச்சன் பிள்ளைகள் கர்த்தருடைய கட்டளைப்பிரகாரம் மாண்டுபோனார்கள். எகிப்தியரின் தெய்வத்தினால் இஸ்ரவேலின் தேவனுக்கு எதிராக எதிர்த்து நிற்க முடியவில்லை.

522. பரிசுத்த வேதாமத்தில், சொல்லப்பட்ட 7 காரிருள்

1. பூமி சிருஷ்டிக்கப்பட்டபோது இருந்த காரிருள். (யோபு 38:9) பூமியின்மீது வருங்காலத்தில் சூரியன் கறுப்புக் கம்பளியைப்போல கறுத்திருக்கும். (வெளி 6:12)

2. பூமியின் ஆழத்தின்மேல் இருள் இருந்தது. (ஆதி 1:2).

3. ஆபிரகாமைத் திகிலும், காரிருளும் மூடிக் கொண்டது. (ஆதி 15:12).

4. எகிப்தின்மீது காரிருள் வாதையாக வந்தது. (யாத் 10:21-22).

5. எகிப்தியருக்கும், இஸ்ரவேலருக்கும் நடுவே அந்தகாரம் இருந்தது. (யாத் 14:20; யோசு 24:7).

6. நியாயப்பிரமாணம் சீனாய் மலையில் கொடுக்கப்பட்ட போது, தேவன் கார்மேகத்திற்குள் இருந்தார். (யாத் 20:21; உபா 4:11; உபா 5:22-23; எபி 12:18).

7. இயேசு கிறிஸ்துவைச் சிலுவையில் அறைந்தபோது பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று. (மத் 27:45; மாற்கு 15:33; லூக்கா 23:44).

523. கர்த்தருடைய ஊழியக்காரரின் வார்த்தைகளைக் கேட்டு கோபமடைந்த 14 ராஜாக்கள்

1. பார்வோன் ஆபிரகாமால் கோபமடைந்தான். (ஆதி 12:10-20)

2. அபிமெலேக்கு ஆபிரகாமால் கோபமடைந்தான். (ஆதி 20)

3. அபிமெலேக்கு ஈசாக்கால் கோபமடைந்தான். (ஆதி 26:6-16)

4. பார்வோன் மோசேயால் கோபமடைந்தான். (யாத் 10:24-29)

5. பாலாக்கு பிலேயாமினால் கோபமடைந்தான். (எண் 24:10-11)

6. யெரொபெயாம் ஒரு தீர்க்கதரிசியினால் கோபமடைந்தான். (1இராஜா 13:4)

7. ஆகாப் மிகாயாவினால் கோபமடைந்தான். (1இராஜா 22:6-28)

8. நாகமான் எலிசாவினால் கோபமடைந்தான். (2இராஜா 5:10-19)

9. ஆசா அனானியால் கோபமடைந்தான். (2நாளா 16:7-11)

10. யோவாஸ் சகரியாவினால் கோபமடைந்தான். (2நாளா 24:20-22)

11. உசியா அசரியாவினால் கோபமடைந்தான். (2நாளா 26:16-21)

12. யோயாக்கீம் ஊரியாவினால் கோபமடைந்தான். (எரே 26:20-24)

13. செதேக்கியா எரேமியாவினால் கோபமடைந்தான். (எரே 32:1-5)

14. ஏரோது யோவான்ஸ்நானனால் கோபமடைந்தான். (மத் 14:3)

524. பரிசுத்த வேதாகமத்தில் கோபப்பட்டவர்களுக்கு 14 எடுத்துக்காட்டுகள்

1. ஏசா யாக்கோபின்மீது கோபப்பட்டான் (ஆதி 27:45).

2. யாக்கோபு ராகேலின்மீது கோபப்பட்டார். (ஆதி 30:2).

3. சிமியோனும், லேவியும் சீகேமின்மீது கோபப்பட்டார்கள். (ஆதி 49:6-7).

4. மோசே பார்வோன்மீதும், (யாத் 11:8) இஸ்ரவேலர்மீதும் கோபப்பட்டார். (யாத் 32:19).

5. பிலேயாம் கழுதையின்மீது கோபப்பட்டான். (எண் 22:27).

6. பாலாக் பிலேயாம்மீது கோபப்பட்டான். (எண் 24:10).

7. சிம்சோன் பெலிஸ்தியரின்மீது கோபப்பட்டார் (நியா 14:19).

8. சவுல் அம்மோனியர்மீதும் (1சாமு 11:6) யோனத்தான்மீதும் கோபப்பட்டார். (1சாமு 20:30-34).

9. எலியாப் தாவீதுமீது கோபப்பட்டான் (1சாமு 17:28).

10. தாவீது ஒரு ஐசுவரியவான்மீது கோபப்பட்டார். (2சாமு 12:5).

11. அகாஸ்வேரு ராஜா வஸ்தியின்மீது கோபப்பட்டான். (எஸ் 1:12).

12. நேபுகாத்நேச்சார் ஞானிகளின்மீது கோபப்பட்டான். (தானி 2:12).

13. யோனா தேவன்மீது கோபப்பட்டார். (யோனா 4).

14. இயேசு மாய்மாலக்காரர்மீது கோபப்பட்டார். (மாற்கு 3:5).

525. பரிசுத்த வேதாகமத்தில் பஸ்காவை பற்றிய 26 நியமங்கள்

1. நிசான் மாதம் 10ஆம் தேதி. இது வருஷத்தின் முதலாம் மாதம். ஒரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்து கொண்டு அதைப் பதினாலாம் தேதி வரையிலும் வைத்திருக்க வேண்டும். (யாத் 12:3-6).

2. ஒரு ஆட்டுக்குட்டியைப் புசிப்பதற்கு வீட்டில் போதுமான நபர்கள் இல்லையென்றால், அவர்கள் அயல்வீட்டுக்காரரைச் சேர்த்துக் கொள்ளலாம். ஆட்டுக்குட்டி வீணாகக் கூடாது. (யாத் 12:4).

3. அந்த ஆட்டுக்குட்டி பழுதற்றதாக இருக்க வேண்டும். (யாத் 12:5).

4. அந்த ஆட்டுக்குட்டி ஆணும், ஒரு வயதுள்ளதுமாய் இருக்க வேண்டும். (யாத் 12:5).

5. நிசான் மாதம் பதினாலாம் தேதி சாயங்காலத்தில் அந்த ஆட்டுக்குட்டியை அடிக்க வேண்டும். (யாத் 12:6)

6. அந்த ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை வீட்டு வாசல் நிலைக்கால்கள் இரண்டின் நிலையின் மேற்சட்டத்திலும் தெளிக்க வேண்டும். (யாத் 12:7,22-23).

7. அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியின் மாம்சத்தை நெருப்பினால் சுட்டு, புளிப்பில்லா அப்பத்தோடும் கசப்பான கீரையோடும் அதைப் புசிக்க வேண்டும். (யாத் 12:8-9)

8. பச்சையாயும், தண்ணீரில் அவிக்கப் பட்டதாயும், அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியின் மாம்சத்தைப் புசிக்கக்கூடாது. (யாத் 12:9).

9. அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியின் மாம்சத்தை விடியற்காலம் மட்டும் மீதியாக வைக்காமல், விடியற்காலம்மட்டும் அதிலே மீதியாய் இருக்கிறதை அக்கினியால் சுட்டெரிக்க வேண்டும். (யாத் 12:10).

10. அதைத் தீவிரமாய் புசிக்கவேண்டும். அரைகளில் கச்சை கட்டிக்கொண்டு, கால்களில் பாதரட்சை தொடுத்துக் கொண்டு பிரயாணத்திற்கு ஆயத்தமாக அதைப்புசிக்க வேண்டும். (யாத் 12:11).

11. ராத்திரியில் அதைப் புசிக்க வேண்டும் (யாத் 12:8,10,18).

12. பஸ்கா நியமம் இஸ்ரவேலருக்கு நித்திய நினைவுகூருதலாக இருக்க வேண்டும். (யாத் 12:14,17,24; எசே 45:17).

13. வீடுகளிலிருந்து புளித்த மாவை நீக்க வேண்டும். புளிப்பில்லா அப்பத்தை மாத்திரம் புசிக்க வேண்டும். (யாத் 12:15,19லி-20; யாத் 13:3-7).

14. பஸ்காவின்போது, புளிப்பில்லா அப்பப் பண்டிகையை ஆசரிக்கத் துவங்க வேண்டும். (யாத் 12:15-20).

15. புளிப்பில்லா அப்பத்தை ஏழு நாளளவும் புசிக்க வேண்டும். (யாத் 12:15).

16. முதலாம் நாளிலும், ஏழாம் நாளிலும் ஒரு வேலையும் செய்யப்படலாகாது. அந்த நாட்களில் பரிசுத்த சபை கூடுதல் இருக்க வேண்டும். (யாத் 12:16).

17. ஏழு நாளளவும் வீடுகளில் புளித்தமா காணப்படலாகாது. (யாத் 12:18-19).

18. அந்நிய புத்திரன் ஒருவனும் பஸ்காவைப் புசிக்கக்கூடாது. (யாத் 12:43).

19. விருத்தசேதனம் பண்ணாத எந்த மனுஷனும் பஸ்காவைப் புசிக்கக்கூடாது. (யாத் 12:44-48).

20. அந்நியனும், கூலியாளும் பஸ்காவைப் புசிக்கக்கூடாது. (யாத் 12:45).

21. பஸ்காவை ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் புசிக்கவேண்டும்; அந்த மாம்சத்தில் கொஞ்சமாகிலும் வீட்டி-ருந்து வெளியே கொண்டுபோகக்கூடாது. (யாத் 12:46).

22. பஸ்கா ஆட்டுக்குட்டியின் ஒரு எலும்பையும் முறிக்கக்கூடாது. (யாத் 12:46; யோவான் 19:33,36).

23. இஸ்ரவேல் சபையார் எல்லாரும் பஸ்காவை ஆசரிக்கவேண்டும். (யாத் 12:47).

24. ஆபிப் அல்லது நிசான் மாதத்தில் பஸ்காவை ஆசரிக்க வேண்டும். (யாத் 13:5) பஸ்காவை ஒவ்வொரு வருஷமும் ஆசரிக்க வேண்டும் (எண் 9:2-6).

25. பஸ்காவை ஆசரிக்க வேண்டிய நாளில், ஜனங்கள் தீட்டுப்பட்டிருந்தால், அதை அவர்கள் ஒருமாதத்திற்குப் பின்பு புசிக்கலாம். (எண் 9:2-14).

26. பஸ்கா ஆட்டுக்குட்டியை ஆசரிப்புக் கூடாரத்தில் மட்டுமே அடிக்க வேண்டும். (உபா 16:5-6).

526. ஆசை நீதிமொழிகள் 11:23

1. தேவனைக் காண ஆசை சங்கீதம் 63:2 , லூக்கா 23:8

2.தேவவசனத்தைக் கேட்க ஆசை அப்போஸ்தலர் 13:7

3.கிறிஸ்துவுடனேகூட இருக்க ஆசை பிலிப்பியர் 1:23

4. இலக்கை நோக்கி தோடர ஆசை பிலிப்பியர் 3:12

5. பஸ்காவைப் புசிக்க ஆசை லூக்கா 22:15

527. சபை ஐக்கியத்தில் கிறிஸ்துவர்களுக்கு எவைகள் இருக்க வேண்டும் ? அப் 11 : 26.

1. கிறிஸ்துவர்களுக்ககு கிறிஸ்துவின் ஆவி இருக்கவேண்டும். ரோமர் 8 : 9 1பேது 1 : 11

2. கிறிஸ்துவர்களுக்கு கிறிஸ்துவின் சிந்தை இருக்க வேண்டும். பிலி 2 : 5 1 கொரி 2 : 16

3. கிறிஸ்துவர்களுக்கு கிறிஸ்துவின் அன்பு இருக்க வேண்டும். 2 கொரி 5 : 14 பிலி 1 : 8, ரோம 8:35 யோவா 15 : 10 , 12

4. கிறிஸ்துவர்களுக்கு கிறிஸ்துவின் ஜீவன் வேண்டும் 2 கொரி 4 : 10 , 11 பிலி 1 : 21 கலா 2 : 20

5. கிறிஸ்துவர்களுக்கு கிறிஸ்துவின் பொறுமைவேண்டு ம். 2 தெச 3 : 5

6. கிறிஸ்துவர்களுக்கு கிறிஸ்துவின் மகிமை வேண்டும் எபே 1 : 11 2 தெச 2 : 14

7. கிறிஸ்துவர்களுக்கு கிறிஸ்துவை அறிகிற அறிவு வேண்டும் 2 கொரி 5 : 16 பிலி 3 : 8 2 பேது 1 : 8 , 2 : 20 2 பேது 3 : 18.

528. திருப்தியாவார்கள் எரே 31 : 14

எந்தெந்த காரியத்தில் திருப்தியாக்குவார்

1. நன்மையினால் திருப்தியாக்குவார் சங் 103 : 5

2. கன்மலை தேனினால் திருப்தியாக்குவார். சங் 81 : 16

3. கோதுமையினால் திருப்தியாக்குவார் சங் 81 : 16

4. எண்ணெயினால் திருப்தியாக்குவார் யோவே 2 : 19

5. வான அப்பத்தினால் திருப்தியாக்குவார். சங் 105 : 40

6. கிருபையினால் திருப்தியாக்குவார் சங் 91 : 14

7. நீடித்த நாட்களால் திருப்தியாக்குவார் சங் 91 : 16

8. புத்திரபாக்கியத் தினால் திருப்தியாக்குவார் சங் 17 : 14

9. பலனினாலும் குடியிருப்பிலும் திருப்தியாக்குவார் சங் 104 : 3, லேவி 26 : 5

529. எந்தெந்த சூழ்நிலையில் திருப்தியாக்கு வார் ?

1. வனாந்திரத்தில் இல்லாமை சூழ்நிலையில் திருப்தியாக்குவார். மத் 14: 20

2. வறட்சியான நெருக்க சூழ்நிலையில் திருப்தியாக்குவார் ரூத் 2 : 14 , 18

3. வறுமையில் கஷ்ட சூழ்நிலையில் திருப்தியாக்குவார் ஆதி 45 : 11 , 18

4. பஞ்சகாலத்தில் திருப்தியாக்குவார் ஆதி 26 : 1, 12, 13

5. பற்றாக்குறையில் திருப்தியாக்குவார் 2 இராஜா 4 : 42, 43

6. பலனற்ற சூழ்நிலையில் திருப்தியாக்குவார். ஆதி 4 : 12 , 15

7. பகைவர் மத்தியில் திருப்தியாக்குவார் 1 சாமு 30 , 8 , 19

530. யாருடைய வாழ்க்கையில் திருப்தி உண்டாகும் ?

1. உத்தமர் வாழ்க்கையில் கர்த்தர் திருப்தி உண்டாக்குவார் சங் 37: 18 , 19

2. சாந்தகுணமுள்ளவர்களுடைய வாழ்வில் திருப்திப்படுத்துவார் சங் 22 :26

3. துதிக்கிறர்களுடைய வாழ்க்கையை திருப்திபடுத்துவார். சங் 103 : 1 ,2, 5

4. கண் விழிக்கிறவர்கள் வாழ்க்கையை திருப்திபடுத்துவார் நீதியா 20 : 13

5. வாஞ்சையுள்ள ஆத்துமாவை கர்த்தர் திருப்தி படுத்துவார் சங் 107 : 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *