531. நம்பிக்கையாயிருப்பேன் செப்பனியா 3:12
1. அவர் இரட்சிப்பில் நான் நம்பிக்கையாயிருப்பேன் ஏசாயா 12:2
2. அவர் வல்லமையில் நான் நம்பிக்கையாயிருப்பேன் சங்கீதம் 27:3
3. அவர் நாமத்தின் மேல் நான் நம்பிக்கையாயிருப்பேன் செப்பனியா 3:12
4. அவர் வழிகளில் நான் நம்பிக்கையாயிருப்பேன் யோபு 13:15
532. கோலினால் செய்யப்பட்ட 15 அற்புதங்கள்
1. கோல் சர்ப்பமாயிற்று. (யாத் 4:2-3).
2. சர்ப்பம் மறுபடியும் கோலாயிற்று (யாத் 4:4).
3. கோல் சர்ப்பமாயிற்று. (யாத் 4:30).
4. சர்ப்பம் மறுபடியும் கோலாயிற்று (யாத் 4:30).
5. கோல் சர்ப்பமாயிற்று. (யாத் 7:9-10).
6. ஆரோனின் கோல் மற்ற கோல்களை விழுங்கிற்று. (யாத் 7:12).
7. தண்ணீர் இரத்தமாக மாறிற்று. (யாத் 7:15-25).
8. தவளைகள் உண்டாயிற்று (யாத் 8:5).
9. பேன்கள் உண்டாயிற்று (யாத் 8:16-17).
10. அக்கினியும், கல்மழையும் உண்டாயிற்று (யாத் 9:23).
11. வெட்டுக்கிளிகள் உண்டாயிற்று. (யாத் 10:13).
12. செங்கடல் இரண்டாகப் பிளவுண்டது. (யாத் 14:16).
13. தண்ணீர் உண்டாயிற்று. (யாத் 17:6).
14. யுத்தத்தில் வெற்றி (யாத் 17:8-9).
15. தண்ணீர் உண்டாயிற்று (எண் 20:8-11).
533. வேதாகமத்தில் “”பரிசுத்தம்” என்னும் வார்த்தைக்கு கொல்லப்பட்டுள்ள 18 அர்த்தங்கள்
1. தேவனுடைய மெய்யான சுபாவம். (யாத் 15:11; சங் 30:4; சங் 97:12)
2. பிரதான ஆசாரியருடைய பட்டயத்தில் “”கர்த்தருக்குப் பரிசுத்தம்” என்று அதிலே முத்திரை வெட்டாக வெட்டப்பட்டிருந்தது. (யாத் 28:36; யாத் 39:30)
3. தேவனை ஆராதிப்பது. (1நாளா 16:29; சங் 29:2; சங் 96:9)
4. தேவனைத் துதிப்பது. (2நாளா 20:21)
5. தேவனுக்காக வேறுபிரிக்கப்படுவது. (2நாளா 31:18)
6. தேவனுடைய சிங்காசனம் (சங் 47:8)
7. தேவனுடைய வாசஸ்தலம். (சங் 48:1; ஏசா 63:15; எரே 31:23)
8. தேவனுடைய வெளிப்பாடு (சங் 60:6; சங் 108:7; எரே 23:9)
9. தேவனுடைய ஆணை (சங் 89:35; ஆமோ 4:2)
10. தேவனுடைய வீடு (சங் 93:5; ஏசா 62:9)
11. தேவனுக்காகப் பொருத்தனை செய்யப்பட்டிருக்கிறவைகள் (ஏசா 23:18)
12. தேவனுடைய ஆலயத்திற்குப் போகும் பெரும்பாதை. (ஏசா 35:8)
13. தேவனுடைய ஜனங்கள். (ஏசா 63:18; எரே 2:3)
14. மனுஷருடைய வம்சம். (ஒப 17; லூக்கா 1:75)
15. மணிகளிலும், பானைகளிலும் எழுதப்பட்டிருக்கும் விலாசம். (சக 14:20-21)
16. தேவனுடைய ஆவியானவர் (ரோமர் 1:4)
17. கிறிஸ்தவ ஜீவியம் (ரோமர் 6:19,22; 2கொரி 7:1; எபே 4:24; 1தெச 3:13; 1தெச 4:7; 1தீமோ 2:15; தீத்து 2:3; எபி 12:10,14)
18. பரலோகத்தில் விசுவாசிகளுடைய நித்திய ஸ்தானமும், சுபாவமும் (1தெச 3:13)
534. வலது கரத்தின் ஏழு அடையாளங்கள்
1. தேவனுடைய வல்லமை (யாத் 15:6; சங் 17:7; சங் 44:3)
2. உயர்த்தப்படுதல் (சங் 16:11)
3. பாதுகாக்கப்படுதல் (சங் 18:35; சங் 63:8)
4. நீதி (சங் 48:10)
5. நாட்டுதல் (சங் 80:15)
6. தீர்க்காயுசு (நீதி 3:16)
7. ஐக்கியம் (கலா 2:9)
535. கால்கள் என்பதற்கான ஏழு அடையாளங்கள்
1. வெற்றி (சங் 8:6; சங் 91:13; மல் 4:3; 2கொரி 15:24-28; எபே 1:22)
2. வேகம் (சங் 18:33)
3. ஸ்திரத்தன்மை (சங் 40:2)
4. நற்செய்தி (ஏசா 52:7; நாகூம் 1:15)
5. வல்லமை (தானி 7:7,19)
6. அழகு (ரோமர் 10:15)
7. வெற்றி (ரோமர் 16:20)
536. வேதாகமத்தில் உள்ள 14 பெண் தீர்க்கதரிசிகள்
1. ராகேல் (ஆதி 30:24)
2. மிரியாம் (யாத் 15:20)
3. தெபொராள். (நியா 4:4)
4. உல்தாள் (2இராஜா 22:14; 2நாளா 34:22)
5. நொவாதியா (நெகே 6:14)
6. ஏசாயாவின் மனைவி (ஏசா 8:3)
7. எலிசபெத்து (லூக்கா 1:41-45)
8. இயேசுவின் தாயாகிய மரியாள் (லூக்கா 1:46-55)
9. அன்னாள் (லூக்கா 2:36-38)
10. யேசபேல் – கள்ளத்தீர்க்கதரிசினி (வெளி 2:20)
11-14. பிலிப்புவின் நான்கு குமாரத்திகள் (அப் 21:9)
537. மாரா(கசப்பு) என்பதன் 15 ஆவிக்குரிய சத்தியங்கள்
1. வெளிச்சத்திற்கு முன்பாக இருள். (ஆதி 1:2-5)
2. இரட்சிப்பிற்கு முன்பாக வீழ்ச்சி (ஆதி 3)
3. ஆசீர்வாதத்திற்கு முன்பாக பலி. (ஆதி 4)
4. ஏலிமிற்கு முன்பாக மாரா. (யாத் 15:23-27)
5. கானானுக்கு முன்பாக வனாந்தரம். (யாத் 16)
6. உயர்வுக்கு முன்பாகத் தாழ்மை (லூக்கா 14:11)
7. ஜீவனுக்கு முன்பாக மரணம். (யோவான் 12:24)
8. பிரசவத்திற்கு முன்பாக வேதனை (யோவான் 16:21; கலா 4:19)
9. மீட்பிற்கு முன்பாக மீட்பின் கிரயம். (ரோமர் 5)
10. பொறுமைக்கு முன்பாக உபத்திரவம். (ரோமர் 5)
11. மகிமைக்கு முன்பாக பாடு (ரோமர் 8:18; 1பேதுரு 1:11; 1பேதுரு :13; 1பேதுரு 5:1)
12. வெகுமதி முன்பாக உழைப்பு (2கொரி 3:11-15)
13. கிரீடத்திற்கு முன்பாக சிலுவை (கலா 6:14; 2தீமோ 4:8)
14. வெற்றிக்கு முன்பாக யுத்தம். (2தீமோ 4:7-8)
15. மேற்கொள்வதற்கு முன்பாக சோதனை. (யாக் 1:12-16; வெளி 2:7,11,17)
538. மோசே செய்த 30 ஜெபங்களும் அதற்கான பதில்களும்
1. மோசே பயந்தபோது தேவன் பதில் கொடுத்தார் (யாத் 3:10-12).
2. தேவன் தமது நாமத்தை வெளிப்படுத்தினார் (யாத் 3:13-15).
3. தேவன் அற்புதங்கள் மூலமாக மோசேக்குப் பதில் கொடுத்தார் (யாத் 4:1-9).
4. மோசேயை வாக்கு வல்லவனாக ஆக்குவதாகத் தேவன் வாக்குப் பண்ணினார் (யாத் 4:10-12).
5. மோசேக்கு உதவி புரிய தேவன் ஆரோனை அனுப்பினார் (யாத் 4:13-17).
6. தாம் மோசேயை அழைத்ததைத் தேவன் உறுதிபண்ணினார் (யாத் 5:22-6:8).
7. தேவன் மோசேயைப் பார்வோனுக்கு தேவனைப் போன்றவனாக்கினார் (யாத் 6:30-7:5).
8. தேவன் தவளைகளை அகற்றினார் (யாத் 8:8-15).
9. தேவன் வண்டுஜாதிகளை அகற்றினார் (யாத் 8:29-32).
10. தேவன் அக்கினியையும், கல்மழையையும் அகற்றினார் (யாத் 9:28-35).
11. தேவன் வெட்டுக்கிளிகளை அகற்றினார். (யாத் 10:18-20).
12. தேவன் செங்கடலை இரண்டாகப் பிரித்தார் (யாத் 14:15).
13. தேவன் கசப்பான தண்ணீரை மதுரமான தண்ணீராக மாற்றினார் (யாத் 15:24-25).
14. தேவன் கற்பாறையிலிருந்து தண்ணீர் வரவழைத்தார் (யாத் 17:4-7).
15. தேவன் இஸ்ரவேலரை மரணத்திலிருந்து விடுவித்தார் (யாத் 32:9-14).
16. மோசே தேவனுடைய வெளிப்பாட்டைப் பெற்றுக் ண்டார் (யாத் 32:31-35).
17. மோசே கிருபையின் நிச்சயத்தைப் பெற்றுக் கொண்டார் (யாத் ).
18. மோசே தேவனுடைய மகிமையின் ஒரு பகுதியைக்
கண்டார் (யாத் 33:18-23)
19. மோசே தேவனுடைய நிச்சயத்தை கூடுதலாகப் பெற்றுக் கொண் டார் (யாத் 34:8-17).
20. அக்கினி அவிந்தது (எண் 11:2).
21. மாம்சபோஜனம் கொடுக்கப்பட்டது (எண் 11:10-23,31-35).
22. எழுபது மூப்பர்கள்மீது ஆவியானவர் வந்திறங்கினார் (எண் 11:14-25).
23. மிரியாம் குணமடைந்தாள் (எண் 12:13-16).
24. இஸ்ரவேல் புத்திரர் மரணத்திலிருந்து விடுவிக்கப்பட்டார்கள் (எண் 14:5-20).
25. கோராகுவின்மீது நியாயத்தீர்ப்பு வந்தது (எண் 16:4-33).
26. இஸ்ரவேல் புத்திரர் மரணத்திலிருந்து விடுவிக்கப்பட்டார்கள் (எண் 16:44-50).
27. சர்ப்பத்தினால் கடிக்கப்பட்டவர்கள் குணமடைந்தார்கள் (எண் 21:5-9).
28. ஆரோன் மரணத்திலிருந்து விடுவிக்கப்பட்டார் (உபா 9:20).
29. இஸ்ரவேல் புத்திரர் மரணத்திலிருந்து விடுவிக்கப்பட்டார்கள் (உபா 10:10).
30. யோசுவாவின்மீது ஆவியானவர் வந்திறங்கினார் (உபா 34:9).
538. மன்னா குறித்த 14 சத்தியங்கள்
1. விடியற்காலத்தில் பாளயத்தைச் சுற்றி பனி பெய்திருந்தது. பெய்திருந்த பனி நீங்கின பின், மன்னா தரையின்மேல் கிடந்தது. (யாத் 16:13-14).
2. இது தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாகும். இதற்கு முன்பு, இயற்கையாக இதுபோன்று மன்னா பெய்ததில்லை. (யாத் 16:8,12).
3. ஜனங்களுடைய தேவையைத் தேவன் பராமரிக்கிறவர் என்பதை நிரூபிப்பதற்காக இது தேவன் திட்டமிட்ட அற்புதமாகும் (யாத் 16:6,8,12).
4. சீனாய் வனாந்தரப் பகுதியில் இயற்கையாக மன்னா விளையுமென்றால், ஜனங்களுக்கு அதற்கு முன்பாகவே அது போஜனமாகக் கிடைத்திருக்கும். (யாத் 16:14).
5. மன்னா ஒரு தெய்வீக அப்பம். ஆகையினால் நாற்பது வருஷத்தின் ஆரம்பத்தில் இது முதல் முறையாகக் கிடைக்கிறது. நாற்பது வருஷம் முடிந்தபின்பு, மன்னா பெய்வது நின்றுபோயிற்று. (யாத் 16:35; யோசு 5:12).
6. மன்னா பெய்வதற்கு முன்பாக ஜனங்களுக்கு இது என்ன என்று தெரியவில்லை. நாற்பது வருஷங்களுக்குப் பின்பு, யாரும் மன்னாவைப் பார்த்ததில்லை. (உபா 8:3,16; யோசு 5:12).
7. தேவன் மன்னாவை வானத்திலிருந்து பெய்யப் பண்ணினார். (சங் 78:24; யோவான் 6:31-32).
8. ஒவ்வொரு வாரமும் ஆறு நாட்களுக்கு மன்னா பெய்தது. ஓய்வுநாளில் மன்னா பெய்யவில்லை. (யாத் 16: 24-27).
9. ஓய்வுநாளைத் தவிர மற்ற நாளில் இரண்டாம் நாளுக்காகச் சேர்த்து வைக்கப்பட்டிருந்த மன்னா கெட்டுப் போயிற்று. (யாத் 16:19-23).
10. மன்னா செடிகளிலிருந்து வளரவில்லை. இது தரையில் காணப்பட்டது. (யாத் 16:14).
11. மன்னாவின் ஒரு பகுதியை ஒரு பாத்திரத்தில் எடுத்து, உடன்படிக்கைப் பெட்டியில் ஒரு ஞாபகார்த்தமாக வைத்திருந்தார்கள். பல நூறு வருஷங்களுக்குப் பெட்டிக்குள் மன்னா இருந்தபோதிலும், அது கெட்டுப் போகவில்லை. (யாத் 16:19-20,33; எபி 9:4).
12. வெயில் ஏறஏற மன்னா உருகிப்போகும். (யாத் 16:21,33; எபி 9:4).
13. மன்னாவானது வானத்திலிருந்து வரும் தேவதூதரின் போஜனமாகும். (யாத் 16:4; சங் 78:25; யோவான் 6:31-32)
14. மன்னாவைத் தேவன் வானத்திலிருந்து அனுப்பினார் என்று இயேசு கிறிஸ்து சாட்சி பகர்ந்திருக்கிறார். மோசே இதை அனுப்பவில்லை. (யோவான் 6:31-32). தேவனே மன்னாவை அனுப்பியதாக மோசேயும் கூறியிருக்கிறர். (யாத் 16:6,8,12,15)
539. மன்னா குறித்த நான்கு கட்டளை
1. ஒவ்வொருவரும் அவரவர் புசிக்கும் அளவுக்குத் தக்கதாக அதில் எடுத்துச் சேர்க்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் ஐந்து நாட்களுக்கு இவ்வாறு சேர்க்க வேண்டும். (யாத் 16:16-23).
2. சேகரித்த மன்னாவை அந்தந்த நாளில் புசித்து விடவேண்டும். ஒருவனும் விடியற்கால மட்டும் அதில் ஒன்றும் வைக்கக்கூடாது. (யாத் 16:19).
3. ஆறாம் நாளில் தலைக்கு இரண்டு ஓமர் வீதமாக இரண்டத்தனையாய் ஆகாரம் சேர்க்க வேண்டும். ஒரு பங்கு ஆறாம் நாளுக்கும், மற்றொரு பங்கு ஓய்வுநாளுக்கும் உரியது. (யாத் 16:22-30).
4. ஆறாம் நாளில் சேகரித்த இரண்டு பங்கு மன்னாவை அன்றைய தினமே சுட்டு வேவிக்க வேண்டும். ஓய்வுநாளில் சுடவோ, வேவிக்கவோ கூடாது. (யாத் 16:23-30).
540. ஓய்வு நாள் குறித்த 22 சத்தியங்கள்
1. “”சாபத்” “”ஏழாவது” ஆகிய இரண்டு வார்த்தைகளும் ஒரே வார்த்தையிலிருந்து வரவில்லை. சாபத் என்பதற்கான எபிரெய வார்த்தை “”சப்பத்” என்பதாகும். இதற்கு வேலை செய்வதிலிருந்து ஓய்வு எடுத்தல், இடைவேளை என்று பொருள். இந்த எபிரெய வார்த்தை “”சாபத்” என்னும் வினைச்சொல்லிலிருந்து வந்திருக்கிறது. இதற்கு ஓய்ந்திரு என்று பொருள். இந்த ஓய்வை ஏழாவது நாளில்தான் எடுக்கவேண்டும் என்னும் நியதி எதுவும் இல்லை. ஒரு வேலை செய்வதிலிருந்து ஓய்வு எடுப்பதினால் இது “”சப்பத்” என்றழைக்கப் படுகிறது. சப்பத் என்பது ஓய்வைக் குறிக்குமேயல்லாமல், ஓய்வு நாளைக் குறிக்காது.
2. ஓய்வை வெவ்வேறு நாட்களில் ஆசரிக்கலாம். ஓய்வு எடுக்கும் கால அளவும் வேறுபடலாம். வேதாகமத்தில் வெவ்வேறு நாட்களில் ஓய்வு எடுத்ததற்கான சான்றுகள் உள்ளன.
(1) முதலாவது நாளில் (லேவி 23:39)
(2) ஏழாவது நாளில் (யாத் 20:10)
(3) எட்டாவது நாளில் (லேவி 23:39)
ஓய்வு எடுக்கும் காலஅளவுகள்
(1) ஒரு நாள் ஓய்வு. (யாத் 16:23-29)
(2) இரண்டு நாட்கள் ஓய்வு. (லேவி 23:6-8, 15-22)
(3) ஒரு வருஷ ஓய்வு (லேவி 25:4)
(4) எழுபது வருஷ ஓய்வு (2நாளா 36:21)
(5) நித்திய ஓய்வு (எபி 4:9)
3. இஸ்ரவேலரின் ஏழாம் நாள் ஓய்வுகள் மாறிக் கொண்டே வரும். அவர்கள் ஒவ்வொரு வருஷமும் இரண்டு வெவ்வேறு நாட்களில் ஓய்வுநாளை ஆசரித்தார்கள். பெந்தெகொஸ்தே நாளில் கூடுதலாக ஒரு ஓய்வுநாள் ஆசரிக்கப்படுவதால், இப்படியொரு மாற்றம் உண்டாயிற்று.
இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து ஆபிப் மாதம் பதினைந்தாம் நாள் புறப்பட்டுச் சென்றார்கள். இந்த ஓய்வுநாள் சனிக்கிழமையில் ஆசரிக்கப்படுவதாக எடுத்துக் கொண்டால், ஏழு வாரங்களுக்கு அதாவது 49 நாட்களுக்கு ஓய்வுநாள் சனிக்கிழமையிலேயே வரும். 50 ஆவது நாள் ஞாயிற்றுக்கிழமை. அன்று பெந்தெகொஸ்தே நாள் வருகிறது. பெந்தெகொஸ்தே நாளுக்குப் பின்பு, வரும் ஏழாவது நாள் ஞாயிற்றுக் கிழமையாக இருக்கும். அடுத்த வருஷம் பெந்தெகொஸ்தே நாள் வரையிலும், ஓய்வுநாள் ஞாயிற்றுக்கிழமையாக இருந்து, அதன்பின்பு மறுபடியும் வேறு நாளுக்கு மாறும். ஆகையினால், ஓய்வுநாள் என்பது நிரந்தரமாகச் சனிக்கிழமையில் வரும் என்று கூறமுடியாது.
4. ஓய்வு எடுப்பது மனம் மகிழ்ச்சியான காரியம். ஓய்வு பாரமானதல்ல. சட்டத்தின் பிரகாரம் யாரையும், ஓய்வு எடுக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஜனங்கள் உண்மையான ஓய்வையும், ஆராதனையையும் காத்துக் கொள்ள வேண்டும். (ஏசா 58:13).
5. ஓய்வுநாள் பிரமாணம் இஸ்ரவேலருக்கே உரியது. (யாத் 16:29; யாத் 31:14; எசே 20:12). இஸ்ரவேல் தேசத்தில் அங்கம் வகிக்க விரும்பும் புறஜாதியார் ஒருசில நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும். அதன்பின்பு, ஓய்வுநாள் பிரமாணம் அவர்களுக்கும் பொருந்தும். (யாத் 12:49; எண் 15:16).
6. ஓய்வுநாளைப் பரிசுத்தமாக ஆசரிக்க வேண்டும். (யாத் 16:23; யாத் 20:8; யாத் 35:2; ஏசா 58:13; எரே 17:21-27).
7. ஓய்வுநாளைத் தேவனுக்கென்று ஆசரிக்க வேண்டும். (யாத் 16:25).
8. ஓய்வுநாள் கர்த்தரிடமிருந்து வந்திருக்கிறது. (யாத் 20:10; யாத் 35:2; லேவி 23:3; உபா 5:14).
9. இஸ்ரவேல் புத்திரர் ஓய்வுநாளை ஆசரிக்க வேண்டும். (யாத் 31:14)
10. ஓய்வுநாளில் யாதொரு வேலையும் செய்யக்கூடாது. (யாத் 20:8-11; யாத் 31:15; யாத் 35:3; எண் 15:32; எரே 17: 21-27) ஓய்வுநாள் பிரமாணத்தை மீறுகிறவன் அறுப்புண்டுபோவான். (எண் 15:30-36).
11. ஓய்வுநாளை ஓய்வு எடுக்கும் வேளையாக ஆசரிக்க வேண்டும் (யாத் 35:2 லேவி 16:31; லேவி 23:3,32).
12. இஸ்ரவேல் புத்திரர் ஓய்வுநாளை வேறுபிரித்துப் பரிசுத்தப்படுத்தினார்கள். (உபா 5:12).
13. ஓய்வுநாள் பிரமாணமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது (யாத் 20:8-11; உபா 5:15).
14. இஸ்ரவேலருக்கு ஓய்வுநாள் என்பது பார்வோனின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டதற்கான அடையாளமாகும். (உபா 5:15) தேவன் தம்முடைய கிரியைகளைச் செய்து முடித்துவிட்டு, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்ததை இந்த ஓய்வுநாள் குறிப்பிடாது. தேவனுடைய ஓய்வுநாள் மனுஷனுடைய ஓய்வு நாளாகாது. தேவன் மனுஷனைச் சிருஷ்டித்த மறுநாளில் ஓய்ந்திருந்தார். வாரத்தின் ஓய்வுநாளை ஆசரிப்பதற்கு ஆறு நாட்கள் வேலை செய்திருக்க வேண்டும். ஆனால் ஆதியில் மனுஷன் சிருஷ்டிக்கப்பட்டு ஒருநாள் மட்டுமே வேலைசெய்திருக்கிறான். மறுநாள் தேவனுடைய ஓய்வுநாளாக இருக்கிறது. (யாத் 20:8-11) எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப் பட்டதற்காக இஸ்ரவேலர் ஓய்வுநாளை ஓர் அடையாளமாக ஆசரிக்கிறார்கள். திருச்சபையார் இதை ஓர் அடையாளமாக ஆசரிக்க வேண்டிய அவசியமில்லை. திருச்சபையார் எகிப்தில் அடிமையாயிருந்ததில்லை.
15. ஆயிரம் வருஷ அரசாட்சியிலும், புதிய பூமியிலும், ஓய்வுநாள் ஆசரிக்கப்படும். இதனால் மாம்சமான யாவரும் தேவனுக்கு முன்பாக அவரை ஆராதனை செய்ய வருவார்கள். (ஏசா 66:22-24; எசே 44:24; எசே 45:17; எசே 46:3). எந்த நாளில் ஓய்வுநாளை ஆசரிக்க வேண்டுமென்று வேதாகமம் தெளிவாக வெளிப்படுத்திக் கூறவில்லை. அதுமட்டுமல்ல, பூமியின் ஒரு பகுதியில் சனிக்கிழமை மாலை என்பது பூமியின் மறுபகுதியில் வெள்ளிக் கிழமை காலையாகவோ, ஞாயிற்றுக்கிழமை காலையாகவோ இருக்கும். உலகம் முழுவதிலுமுள்ளவர்கள் தேவனை ஆராதிப்பதற்குக் கூடிவருவார்கள்.
16. ஓய்வுநாளில் நன்மை செய்வதை ஏற்றுக் கொள்ளலாம். (மத் 12:2,12; மாற்கு 2:27-28; மாற்கு 3:4; லூக்கா 6:9).
17. மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை. ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டிருக்கிறது. (மத் 12:8; மாற்கு 2:27-28; லூக்கா 6:5)
18. தேவன் ஏழாவது நாளில் ஓய்ந்திருந்தார். அந்த நாளைப் பரிசுத்தப்படுத்தினார். இந்த நாளை ஓய்வுநாளாக ஆசரிக்க வேண்டும் என்று மனுஷனுக்குத் துவக்கத்தில் கூறப்படவில்லை. தேவனும் ஓய்வுநாளை தொடர்ந்து ஆசரிக்கவில்லை. உடனடியாக உலகத்தில் பாவம் வந்துவிட்டபடியினால், தேவன் தமது மீட்பின் கிரியையை ஆரம்பித்து விடுகிறார். வாரத்தின் ஒவ்வொரு நாளிலும் தேவன் தம்முடைய மீட்பின் கிரியையைச் செய்து கொண்டிருக்கிறார். (ஆதி 3:8-21) பாவிகள் எந்த நாளிலும் மனந்திருந்தி, தேவனிடம் வந்து அவருடைய இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ள முடியும். சிருஷ்டிப்பின் காலத்தில் தேவன் ஓய்ந்திருந்ததற்குப் பின்பு, 2513 வருஷங்கள் கழித்து, இஸ்ரவேல் புத்திரருக்கு ஓய்வுநாள் பிரமாணம் கொடுக்கப்படுகிறது. (யாத் 16:23-29; யாத் 20:8-11).
19. ஓய்வுநாளில் நன்மை செய்வதையும், அத்தியாவசியமான வேலைகளைச் செய்வதையும் யூதர்கள் அங்கிகரித்திருக்கிறார்கள்.
(1) பலிகளைச் செலுத்துவது (எண் 28:9-10; 1நாளா 9:32)
(2) மிருகஜீவன்களைப் பராமரிப்பது. (மத் 12:11; மாற்கு 2:27; லூக்கா 13:15; லூக்கா 14:5)
(3) விருத்தசேதனம் பண்ணுவது (யோவான் 7:22-23)
(4) அத்தியாவசியமான வேலைகளைச் செய்வது. (மத் 12:5)
20. ஓய்வுநாட்கள் நித்திய ஓய்விற்கு அடையாளமாகும். (கொலோ 2:14-17; எபி 4:1-11; எபி 10:1).
21. ஓய்வுநாள் பிரமாணம் மோசேயின் பிரமாணத்தோடு ஒழிந்துபோயிற்று. (அப் 15:24)
22. கற்பனைகளைக் கைக்கொள்ள வேண்டும் என்றும், ஓய்வுநாளை ஆசரிக்க வேண்டுமென்றும் அப்போஸ்தலர்கள் வலியுறுத்தி உபதேசம் பண்ணவில்லை (அப் 15:5-29; ரோமர் 14:5-6; கலா 4:9-11; கொலோ 2:14-17).