541. ஞாயிற்றுக்கிழமையை பரிசுத்த நாளாக அனுசரிப்பதற்கான 24 காரணங்கள்
1. மோசேயின் பிரமாணத்திலுள்ள ஓய்வுநாட்கள் ஒழிக்கப்பட்டு விட்டது.
2. ஒரு குறிப்பிட்ட நாளை ஓய்வுநாளாக ஆசரிக்க வேண்டுமென்று புதிய பிரமாணம் விசுவாசிகளுக்குக் கட்டளையிடவில்லை. (ரோமர் 14:5-6; கலா 4:9-11).
3. தங்களுக்கு உகந்த ஓய்வுநாளைத் தெரிந்தெடுப்பதற்கு விசுவாசிகளுக்குச் சுயாதீனம் உள்ளது. (ரோமர் 14:5-6).
4. ஓய்வுநாளைக் குறித்து, யாரும் யாரையும் நியாயந்தீர்க்கக்கூடாது. (கொலோ 2:14-17).
5. நாட்களைக் கடுமையாக ஆசரிப்பதைப் பவுல் கடிந்து கூறியிருக்கிறார். (கலா 4:9-11).
6. ஓய்வுநாள் ஆசரிப்பது சுவிசேஷத்தின் ஒரு பகுதியல்ல. (அப் 15:1-29).
7. மெய்யான ஓய்வும், நித்திய ஓய்வும் இயேசு கிறிஸ்துவில் இருக்கிறது. அந்த ஓய்வு எந்த ஒரு நாளிலும் இல்லை. (மத் 11:28-29; எபி 4).
8. பத்து கட்டளைகளில் நான்காம் கட்டளை (யாத் 20:8-11) புதிய உடன்படிக்கையிலிருந்து விடுவிக்கப் பட்டிருக்கிறது. (அப் 15:24).
9. யூதருடைய ஓய்வுநாள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேல் புத்திரர் விடுதலை பெற்றதற்கு அடையாளமாகும். கிறிஸ்தவ விசுவாசிகளுக்கு எகிப்தின் அடிமைத்தனத்தில் பங்கேதும் இல்லை. (உபா 5:15).
10. ஓய்வுநாள் பிரமாணத்தை ஆசரிக்க விரும்புகிறவர் மோசேயின் எல்லா பிரமாணங்களையும் ஆசரிப்பதற்குக் கடமைப்பட்டவராக இருக்கிறார். (கலா 3:10-14; கலா 5:3,9-11; யாக் 2:10).
11. சனிக்கிழமையில் ஓய்வெடுத்து தேவனை ஆராதிப்பதற்குப் பதிலாக ஞாயிற்றுக் கிழமையில் ஓய்வெடுத்து தேவனை ஆராதிக்கலாம். ஞாயிற்றுக்கிழமை ஆராதிப்பதினால் விசுவாசிகளுக்கு ஒரு பாதிப்பும் ஏற்படப்போவதில்லை.
12. ஆதித்திருச்சபையின் கிறிஸ்தவ விசுவாசிகள் வாரத்தின் முதலாம் நாளைப் பரிசுத்த நாளாக ஆசரித்தார்கள். (யோவான் 20:1,19, 26-29; அப் 20:6-12; 2கொரி 16:1-2).
13. கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வாரத்தின் முதல் நாளாகிய ஞாயிற்றுக்கிழமையில் தம்முடைய மீட்பின் கிரியையை நிறைவேற்றினார். மரணம், பாதாளம், கல்லறை ஆகியவற்றிலிருந்து அவர் ஞாயிற்றுக் கிழமையில் வெற்றி சிறந்தார்.
14. இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்பு, தம்முடைய சீஷர்களுக்கு வெளிப்படுத்திய விசேஷித்த சம்பவங்கள் வாரத்தின் முதல் நாளாகிய ஞாயிற்றுக்கிழமையிலேயே நடைபெற்றது. (மத் 28; மாற்கு 16; லூக்கா 23-24; யோவான் 20:19,26).
15. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்பு, யூதருடைய ஏழாம் நாளின் ஓய்வுநாள் பிரமாணத்தை அப்போஸ்தலர்கள் யாரும் அங்கிகரிக்கவில்லை.
16. வாரத்தின் முதலாம் நாளில் பரிசுத்த ஆவியானவரின் அருள்மாரி ஊற்றப் பட்டது. இந்த நாள் யூதருடைய ஏழு ஓய்வுநாட்களுக்குப் பின்பு வரும் ஓய்வுநாளாகும். (அப் 2:1).
17. இயேசு கிறிஸ்து பரமேறியபின்பு, அப்போஸ்தலர்கள் வாரத்தின் முதலாம் நாளில் தங்களது முதலாவது செய்தியைப் பிரசங்கம் பண்ணினார்கள். சுவிசேஷத்தைக் கேட்டு, முதலாவதாக சுமார் 3,000 பேர் வாரத்தின் முதலாம் நாளில் இரட்சிக்கப்பட்டார்கள். (அப் 2:1-42).
18. வாரத்தின் முதலாம் நாளில் தேவனை ஆராதிப்பது “”மிருகத்தின் அடையாளம்” என்று ஒருசிலர் உபதேசம் பண்ணுகிறார்கள். ஆனால் இதற்கு வேதஆதாரம் எதுவுமில்லை. வாரத்தின் முதலாம் நாளில் ஓய்வெடுத்து, அந்நாளில்தானே தேவனை ஆராதிக்கலாம்.
19. பழைய உடன்படிக்கையிலும், வாரத்தின் முதலாம் நாள் முக்கியமானதாக இருந்தது. முதற்கனிகளின் பண்டிகை, பெந்தெகொஸ்தே பண்டிகை, புளிப்பில்லா அப்பப்பண்டிகை, கூடாரப் பண்டிகை ஆகியவற்றை வாரத்தின் முதலாம் நாளில் கொண்டாடினார்கள். (லேவி 23:8-14, 34-39).
20. தேவன் முதலாம் நாளில் கற்பனைகளைக் கொடுத்து, அந்த நாளைக் கனப்படுத்தியிருக்கிறார். (யாத் 19:1,3,11; லேவி 23:5-6= யாத் 12:2-18).
21. தேவன் இஸ்ரவேலில் வாரத்தின் பல முதல் நாட்களைக் கனப்படுத்தியிருக்கிறார். (2நாளா 7:10; 2நாளா 29:17; எஸ்றா 3:6; நெகே 8:14-18)
22. வாரத்தின் முதல் நாளில் வெளிப்படுத்தின விசேஷம் புஸ்தகத்தைக் கொடுத்து, தேவன் அந்த நாளை மறுபடியுமாகக் கனப்படுத்தியிருக்கிறார். (வெளி 1:10, அப் 20:7)
23. பழைய உடன்படிக்கையினால் உண்டான அடிமைத்தனத்திலிருந்து புதிய உடன்படிக்கை ஜனங்களை விடுவிக்கிறது. பழைய உடன்படிக்கையில் ஓய்வுநாளில் சமையல் பண்ணுவது, விறகு பொறுக்குவது, போன்ற காரியங்களைச் செய்வதற்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டது. (யாத் 16:23; யாத் 20:8-10; யாத் 31:15; யாத் 35:2-5; லேவி 23:3; எண் 15:32). புதிய உடன்படிக்கை ஜனங்களை இந்தத் தண்டனையிலிருந்து விடுவிக்கிறது.
24. யூதருடைய ஓய்வுநாளில் கிறிஸ்தவ விசுவாசிகள் தேவனை ஆராதனை செய்ததாக ஒரு சம்பவமும் புதிய ஏற்பாட்டில் கூறப்படவில்லை. வாரத்தின் முதலாவது நாள் கர்த்தருடைய நாள் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் தேவனுடைய பிள்ளைகள் தேவனை ஆராதனை செய்திருக்கிறார்கள். (வெளி 1:10; யோவான் 20:1,19; அப் 20:7; 2கொரி 16:2).
542. வேதத்தில் மனிதர்கள் மீது கல் எரியும் ஒன்பது சம்பவங்கள்
1. தூஷிக்கிறவர்கள் (லேவி 24:11-23)
2. ஓய்வுநாள் பிரமாணத்தை மீறுகிறவர்கள் (எண் 15:36)
3. ஆகானும் அவன் குடும்பத்தாரும் (யோசு 7:25)
4. அபிமெலேக்கு (நியா 9:53)
5. அதோராம் (1இராஜா 12:18)
6. நாபோத் (1இராஜா 21:13-15)
7. சகரியா (2நாளா 24:21)
8. ஸ்தேவான் (அப் 7:58-59)
9. பவுல் (அப் 14:5,19; 2கொரி 11:25)
543. யாத்திராகமம் 18-ஆவது அதிகாரம் எண் 10:10 ஆவது வசனத்திற்கும், எண் 10:11 ஆவது வசனத்திற்கும் இடையில் வரவேண்டும். இதற்கான 5 காரணங்கள்
1. இஸ்ரவேலர்கள் சீனாயில் இன்னும் பாளயமிறங்கவில்லை. (யாத் 19:1-2) ஆனால் எத்திரோ மோசேயைப் பார்க்க வந்தபோது, அவர்கள் ஏற்கெனவே சீனாயில் இருக்கிறார்கள். (யாத் 18:5).
2. உபா 1:6-15 ஆவது வசனத்தின் வரலாற்றின் பிரகாரம் இஸ்ரவேலர்கள் சீனாயிலிருந்து புறப்பட ஆயத்தமாக இருக்கும்பொழுது, மோசே தன்மீது விழுந்திருக்கும் பாரத்தைப் பற்றி முறையிடுகிறார். மோசே எத்திரோவிடம் பேசுவதிலிருந்து இது தெரியவருகிறது. (யாத் 18:13-26; எண் 11:10-18).
3. இஸ்ரவேலர்கள் சீனாயிலிருந்து புறப்படும்போது, எத்திரோ இன்னும் அவர்களோடு கூட இருக்கிறார். அவ்வேளையில் எத்திரோ தன் வீட்டிற்குத் திரும்பிப் போவதற்காக அவர்களை விட்டுப் பிரிகிறார் (யாத் 18:24-27; எண் 10:11-36).
4. சீனாயைவிட்டுப், புறப்பட்டுப் போனபின்பு, ஆரோனும், மிரியாமும் மோசேயின் மனைவிக்கு விரோதமாகப் பேசுகிறார்கள். (எண் 12) இந்த நிகழ்ச்சி எத்திரோ அவர்களைவிட்டுப் புறப்பட்டுப் போனவுடன் நடைபெறுகிறது.
5. தேவன் இஸ்ரவேலருக்குப் பிரமாணத்தைக் கொடுத்தபின்பு, எத்திரோ மோசேயைப் பார்க்க வருகிறார் (யாத் 20-24, யாத் 18:16-26). யாத் 20-40 ஆகிய அதிகாரங்களில் மோசே இந்தப் பிரமாணங்களைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். இதற்கு முன்பாக மோசே தன்னுடைய குடும்பத்தைப் பற்றிய செய்தியை எழுதி இந்தப் பகுதியில் இணைத்திருக்கலாம்.
544. எத்திரோவின் 10 நற்குணங்கள்
1. பக்திமான் (யாத் 2:16; யாத் 3:1; யாத் 18:1-12)
2. குடும்பஸ்தர் (யாத் 2:16; யாத் 18:1-7)
3. ஐசுவரியவான். (யாத் 2:16-3:1)
4. சூழ்நிலைகளைக் கவனிக்கிறவர். (யாத் 2:18; யாத் 18:1-12)
5. விருந்தினரை உபசரிக்கிறவர் (யாத் 2:20).
6. புரிந்து கொண்டு பாராட்டுகிறவர் (யாத் 2:20; யாத் 18:1-12).
7. நற்குணமுடையவர் (யாத் 2:21; யாத் 18:1-12).
8. சமாதானத்தை விரும்புகிறவர் (யாத் 4:18; யாத் 18:1-12).
9. சுயநலமில்லாத பரந்த மனமுடையவர் (யாத் 18:1-12).
10. ஞானமுள்ளவர் (யாத் 18: 13-27).
545. மோசே சீனாய் மலையில் 8 முறை ஏறி இறங்கிய சம்பவங்கள்
1. ஏறிப்போனது (யாத் 19:3-6); இறங்கி வந்தது (யாத் 19:7-8)
2. ஏறிப்போனது (யாத் 19:8-13); இறங்கி வந்தது (யாத் 19:14-19)
3. ஏறிப்போனது (யாத் 19:20-24); இறங்கி வந்தது (யாத் 19:25)
4. ஏறிப்போனது (யாத் 20:21); இறங்கி வந்தது (யாத் 24:3)
5. ஏறிப்போனதும், இறங்கி வந்ததும் (யாத் 24:9-11)
6. ஏறிப்போனது (மலையின்மீது முதலாவது நாற்பது நாட்கள்) (யாத் 24:12-32:14; உபா 9:9); இறங்கி வந்தது (யாத் 32:15-30)
7. ஏறிப்போனது (யாத் 32:30-33); இறங்கி வந்தது (யாத் 32:24)
8. ஏறிப்போனது (மலையின்மீது இரண்டாவது நாற்பது நாட்கள் (யாத் 34:1-28; உபா 10:10); இறங்கி வந்தது (யாத் 34:29)
546. பாளையத்துக்கு புறம்பே நடைபெற்ற ஏழு காரியங்கள்
1. தேவன் இஸ்ரவேலரைச் சந்தித்த இடம். (யாத் 19:17)
2. முதலாவது ஆசரிப்புக்கூடாரம். (மோசே சீனாய் வனாந்தரத்தில் உண்டு பண்ணியதல்ல) எல்லா பலிகளும், ஆராதனைகளும் (யாத் 29:14; யாத் 33:7-11; லேவி 4:12,21; லேவி 6:11; லேவி 8:17; லேவி 9:11; லேவி 10:4-5; லேவி 16:23-28; எபி 13:11).
3. பலிகளைச் செலுத்துதல் (எண் 19:3,9).
. குஷ்டரோகிகள் (லேவி 13:45-46; லேவி 14:3,8; எண் 5:2-4; எண் :14-15).
5. மரணதண்டனை நிறைவேற்றுதல் (எண் 15:35-36).
6. சுத்திகரித்தல். (எண் 31:23-24; உபா 23:10-11).
7. கிறிஸ்து தம்மைத்தாமே பலியாகச் செலுத்தியது. (எபி 13:13
547. கர்த்தரை நின்று கொண்டு ஆராதித்த 14 சம்பவங்கள்
1. தேவனுடைய சமூகத்தில் ஆபிரகாம் (ஆதி 18:22; ஆதி 19:27)
2. சீனாயில் தேவனுடைய பிரசன்னத்தில் இஸ்ரவேலர்கள். (யாத் 19:17)
3. சீனாய் மலையில் தேவனுடைய பிரசன்னத்தில் மோசே. (யாத் 34:5)
4. சீனாயில் தேவனுடைய பிரசன்னத்தில் இஸ்ரவேலர்கள். (லேவி 9:5)
5. எஸ்றாவிற்கு முன்பாக இஸ்ரவேலர்கள். (நெகே 8:4-9:4)
6. கிறிஸ்துவிற்கு முன்பாக திரளான ஜனங்கள். (மத் 13:2)
7. வாசிப்பதற்குக் கிறிஸ்து எழுந்து நின்றார். (லேவி 4:16)
8. சமமான பூமியில் திரளான ஜனங்கள். (லூக்கா 6:17)
9. இயேசுவிற்கு முன்பாக பாவியான ஸ்திரீ. (லூக்கா 7:38)
10. பரிசேயரும், ஆயக்காரரும் (லூக்கா 18:11)
11. பரலோகத்தில் தேவனுடைய பிரசன்னத்திற்கு முன்பாக இரட்சிக்கப் பட்டவர்கள். (வெளி 7:9)
12. தேவனுடைய பிரசன்னத்தில் தூதர்கள். (வெளி 7:11)
13. பரலோகத்திலுள்ள பலிபீடத்தில் தூதர்கள். (வெளி 8:3)
14. பரலோகத்தில் 144,000 பேர் (வெளி 14:1)
548. 10 கட்டளை குறித்த 20 சத்தியங்கள்
1. பத்துக் கற்பனைகள் என்னும் வாக்கியம் வேதாகமத்தில் மூன்று முறைகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. (யாத் 34:28; உபா 4:13; உபா 10:4).
2. மோசேயின் மொத்த பிரமாணத்திற்கும், பத்து கற்பனைகள் ஓர் அடிப்படையாகும். இயேசு கிறிஸ்து மத் 22:35-40 ஆகிய வசனங்களில் “”இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது” என்று கூறியிருப்பது போன்று, பத்துக் கற்பனைகளில் மோசேயின் மொத்த பிரமாணமும் அடங்கியிருக்கிறது.
3. மோசேயின் பிரமாணத்தில் இந்தப் பகுதியை மட்டுமே கர்த்தர் இஸ்ரவேல் ஜனத்தாரின் செவிகளில் தொனிக்கும் படியாகக் கூறினார். (உபா 5:22; உபா 10:4).
4. ஆதாமுக்குப் பத்துக் கற்பனைகளைப் பற்றித் தெரியாது. அவருக்கு ஒரு கட்டளை மட்டுமே கொடுக்கப்பட்டது. அவர் அதற்குக் கீழ்ப்படியாமல் போனதினால் மனுக்குலம் முழுவதற்கும் அவர் மூலமாக பாவம் வந்தது (ஆதி 2:17; ரோமர் 5:12-21). தன் தாயையும், தகப்பனையும் கனம்பண்ணுவதற்கு ஆதாமிற்குப் பெற்றோர் யாருமில்லை. அதுபோலவே விபசாரம் பண்ணாதிருப்பாயாக, பிறர்பொருளை இச்சியாதிருப்பாயாக என்னும் பிரமாணங்களும் ஆதாமும், ஏவாளும் மட்டும் இருந்த காலத்தில் அவர்களுக்குப் பொருந்தாது.
5. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, சீனாய் வனாந்தரத்திற்கு இஸ்ரவேலர் வருவதற்கு முன்பாக இருந்த அவர்களுடைய முற்பிதாக்கள் ஆகியோருக்குப் பத்துக் கற்பனைகளைப் பற்றித் தெரியாது. (உபா 5:2-3). ஆபிரகாமிற்கும், அவர் சந்ததிக்கும் தேவன் பதினான்கு கட்டளைகளைக் கொடுத்தார். (ஆதி 12:1; ஆதி 26:5) இவை தவிர, நோவாவின் மூலமாக மனுஷரைக் குறித்த சில பிரமாணங்களும் மனுக்குலத்திற்குக் கொடுக்கப்பட்டது. (ஆதி 9:1-18). தேவன் இஸ்ரவேலருக்குச் சீனாய்மலையில் பத்துக் கற்பனைகளைக் கொடுப்பதற்கு முன்பாக மோசேக்கு ஏற்கெனவே 184 கற்பனைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. (யாத் 16:28)
6. சீனாய் வனாந்தரத்திற்கு வருவதற்கு முன்பாக இஸ்ரவேலருக்கும் பத்துக் கற்பனைகளைப் பற்றித் தெரியாது. (உபா 4:7-8; உபா 5:2-3; நெகே 9:13-14).
7. மோசேயின் பிரமாணத்தில் மட்டுமே பத்துக் கற்பனைகள் காணப்படுகிறது. (யாத் 20; உபா 5). மோசேயின் பிரமாணத்தில் இவை சேர்க்கப்படவில்லையென்றால், இஸ்ரவேலருக்குப் பத்துக் கற்பனைகளைப் பற்றித் தெரிந்திருப்பதற்கு வாய்ப்பில்லை. ஏனெனில் தேவன் பத்துக் கற்பனைகளை எழுதிய கற்பலகைகள் இப்பொழுது எங்குள்ளது என்று தெரியவில்லை. ஒருசிலர் மோசேயின் பிரமாணத்தைப் பத்துக் கட்டளையிலிருந்து வேறுபிரித்து அதைத் தேவனுடைய பிரமாணம் என்று கூறுகிறார்கள். ஆனால் இது தவறான உபதேசம். மோசேயின் பிரமாணத்தில் ஒரு பகுதியே பத்துக் கற்பனைகளாகும்.
8. மோசேயின் பிரமாணத்தில் பத்துக் கற்பனைகளோடு மேலும் 203 கட்டளைகள் இடம் பெற்றுள்ளன. இவை சீனாய் மலையில் தேவன் மோசேயிடம் பத்துக் கற்பனைகளைக் கொடுப்பதற்கு முன்பாகக் கொடுக்கப்பட்டவையாகும். மோசே பத்துக் கற்பனைகளைப் பெற்றுக் கொண்டபோது, மேலும் 155 கற்பனைகளைத் தேவனிடத்திலிருந்து பெற்றுக் கொண்டார் (யாத் 20:18-23:33). இந்தக் கற்பனைகள் எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டபின்பு, நியாயப் பிரமாணப் புஸ்தகம் மிருகங்களின் இரத்தத்தினால் உறுதிபண்ணப்பட்டது. (யாத் 24:1-8). இதன்பின்பு, மோசேயின் பிரமாணப் புஸ்தகத்தில் மேலும் 2,345 கற்பனைகள் சேர்க்கப்பட்டன. (யாத் 24-உபா 34).
9. பத்துக் கற்பனைகள் உடன்படிக்கை என்று அழைக்கப்படுகிறது. சீனாய் வனாந்தரத்தில் தேவனுக்கும், இஸ்ரவேலருக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் அஸ்திபாரம் பத்துக்கட்டளையாகும். (யாத் 34:28; உபா 4:13). பத்துக் கட்டளைகள் மட்டுமே தேவனுடைய பிரமாணம் என்றோ, மோசேயின் பிரமாணம் என்றோ கூறமுடியாது. இவை தேவன் உரைத்த பிரமாணத்தின் முதற்பகுதியாகும். (உபா 5:22) பத்துக் கற்பனைகள் கொடுத்தவுடன், பிரமாணம் முடிந்துபோகவில்லை. தேவனுடைய சப்தத்தை இனிமேல் தங்களால் கேட்க முடியாது என்று இஸ்ரவேலர்கள் முறையிட்டார்கள். தேவன் அவர்களுடைய முறையீட்டைக் கேட்டு, அவர்களோடு நேரடியாகப் பேசுவதை நிறுத்திக் கொண்டார். (உபா 5:23-29; எபி 12:18-21).
10. பத்துக் கற்பனைகளும், தேவனுடைய இதர பிரமாணங்களும், மோசேயின் முழுப் பிரமாணமும் இஸ்ரவேல் புத்திரருக்கு மாத்திரம் கொடுக்கப்பட்டவை (யாத் 24:7-8; யாத் 34:27-28; லேவி 26:9,44-45; 1இராஜா 8:53; அப் 3:25; ரோமர் 2:14-29; ரோமர் 3:1-2; ரோமர் 9:4-5) புறஜாதியாருக்கும், பத்துக் கற்பனைகளுக்கும் சம்பந்தம் எதுவுமில்லை. புறஜாதியார் இஸ்ரவேல் தேசத்தில் அங்கம் வகிக்க விரும்பும்போது அவர்கள் மோசேயின் பிரமாணத்திற்குக் கீழ்ப்படியவேண்டும். (யாத் 12:24;எண் 15:16,29).
11. ஆதித்திருச்சபையில் இருந்த விசுவாசிகள் பத்துக்கற்பனைகளுக்கும் கீழ்ப்படிந்து ஜீவித்தார்கள் என்று சிலர் உபதேசம் பண்ணுகிறார்கள். ஆனால் இது தவறான உபதேசம். புதிய ஏற்பாட்டுச் சபையில் பத்துக் கற்பனைகளில் ஒன்பது கற்பனைகளை மட்டுமே விசுவாசிகள் கடைபிடித்தார்கள். ஓய்வுநாள் பிரமாணம் முழுவதுமாக ஒதுக்கி வைக்கப்பட்டது. யூதருடைய ஓய்வுநாள் பிரமாணத்தை ஆசரிக்க வேண்டிய அவசியம் கிறிஸ்தவ விசுவாசிகளுக்கு நியமிக்கப்படவில்லை. ஆகையினால் ஆதித் திருச்சபையின் விசுவாசிகள் யூதருடைய ஓய்வுநாளை ஆசரிக்கவில்லை. மற்றவர்களையும், இதை ஆசரிக்குமாறு உபதேசம் பண்ணவும் இல்லை. (ரோமர் 14:5-6; கலா 4:9-10; கொலோ 2:14-17). அவர்கள் வாரத்தின் முதலாம் நாளை ஓய்வுநாளாக ஆசரித்து அதைப் பரிசுத்தப்படுத்தினார்கள்.
12. சீனாய் மலையில் தேவன் மோசேயிடம் பத்துக்கற்பனைகளைக் கொடுப்பதற்கு முன்பாக இவை செவி வழிசெய்தியாகப் பல சந்ததிகளுக்குக் கடந்து வந்திருக்கிறது என்று ஒருசிலர் உபதேசம் பண்ணுகிறார்கள். ஆனால் இதற்கு வேதாகமத்தில் ஆதாரம் எதுவுமில்லை.
13. மோசேயின் பிரமாணத்தின் இந்தப் பகுதி மட்டுமே இரண்டு கற்பலகைகளில் எழுதப்பட்டது (உபா 4:13; உபா 9:9-15; உபா 10:4). அதே சமயத்தில் அப்போஸ்தலர் பவுல் மோசேயின் பிரமாணத்தில் இந்தப் பகுதி மட்டுமே ஒழிந்துபோயிற்று என்று வலியுறுத்திக் கூறுகிறார் (2கொரி 3:6-15, கொலோ 2:14-17).
14. சடங்காச்சார பிரமாணங்கள் (ஸ்ரீங்ழ்ங்ம்ர்ய்ண்ஹப் ப்ஹஜ்ள்) கொடுக்கப்பட்ட அதே சமயத்தில் பத்துக் கற்பனைகளும் கொடுக்கப்பட்டிருக்கிறது (யாத் 19:1-23; யாத் 24:12-18; யாத் 25:40; யாத் 26:30; யாத் 27:8; யாத் 31:18; யாத் 32:1-19; யாத் 33:6; யாத் 34:1-32; லேவி 7:38; லேவி 25:1; லேவி 26:46; லேவி 27:34; எண் 3:1; எண் 15:22-23; எண் 28:6; எபி 8:5).
15. பத்துக் கற்பனைகளை மோசேயின் பிரமாணம் என்றும், தேவனுடைய பிரமாணம் என்றும் வேதாகமம் அங்கீகரிக்கிறது. தேவனுடைய பிரமாணம் இல்லையென்றால், அது மோசேயின் பிரமாணமாகவும் இராது.ƒபிரமாணத்திற்கு வேதாகமத்தில் பல பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
16. கிறிஸ்துவும் அப்போஸ்தலர்களும் பத்துக் கற்பனைகளை மோசேயினுடைய பிரமாணத்தின் ஒரு பகுதியாகக் கூறியிருக்கிறார்கள். இதை தேவனுடைய பிரமாணம் என்று கூறும்போது அப்போஸ்தலரின் உபதேசத்திற்கு இது மாற்று உபதேசமாக இருக்கிறது (மத் 22:36-40=யாத் 20:1-6; மாற்கு 7:10= யாத் 20:12; ரோமர் 2:21-22; ரோமர் 7:7-16= யாத் 20:12-17, யோசு 7:11; யாத் 20:15)
17. வேதாகமத்தின் மற்ற புஸ்தகங்களை எழுதியிருக்கும் ஆசிரியர்கள் பத்துக் கற்பனைகளை மோசேயினுடைய பிரமாணத்தின் ஒரு பகுதி என்று அறிவித்திருக்கிறார்கள். (யோசு 1:8-9; நியா 3:4; 1இராஜா 2:3; 2இராஜா 18:6; 2இராஜா 21:8; 2இராஜா 23:25; 2நாளா 35:12; நெகே 1:7; நெகே 8:1; நெகே 10:29; மல் 4:4). ஓய்வுநாள் பிரமாணத்தை மோசேயே கொடுத்தார் என்று நெகேமியாவில் கூறப்பட்டிருக்கிறது. (நெகே 9:14).
18. தேவன் மோசேயோடும், இஸ்ரவேல் புத்திரரோடும் செய்துகொண்ட உடன்படிக்கையே பத்துக் கற்பனைகள் என்னும் உபதேசமும் உள்ளது. (யாத் 34:28; 2நாளா 5:10). மோசே உடன்படிக்கை புஸ்தகத்தை எடுத்து, அதைப் பிரதிஷ்டை பண்ணினார். இதில் பத்துக் கற்பனைகளும், மேலும் 115 கட்டளைகளும் உள்ளன (யாத் 24:7-8).
19. தேவனுடைய பிரமாணமும், மோசேயின் பிரமாணமும் நீதிநெறி பிரமாணம் (ம்ர்ழ்ஹப் ப்ஹஜ்) என்றும், சடங்காச்சார பிரமாணம் (ஸ்ரீங்ழ்ங்ம்ர்ய்ண்ஹப் ப்ஹஜ்) என்றும் பிரிக்கப்படவில்லை. பத்துக் கற்பனைகள் கற்பலகைகளில் எழுதப்பட்டது. மற்றவை புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. ஏற்ற வேளையில் மோசேயின் புஸ்தகத்தில் பத்துக் கற்பனைகளும், மற்ற எல்லாக் கட்டளைகளும் எழுதப்பட்டிருக்கிறது.
நீதிநெறி பிரமாணத்தில் வாழவேண்டிய முறையைப் பற்றி யாத் 20:18-23:33 ஆகிய வசனங்களில் பதினான்கு கட்டளைகள் உள்ளன. (யாத் 20:26; யாத் 21:2-11,22-23; யாத் 22:16-17,19)
பத்துக் கற்பனைகளில் மூன்று கற்பனைகள் மனுஷன் தேவனோடு வைத்திருக்க வேண்டிய ஐக்கியத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறது. யாத் 20:18-23:33 ஆகிய வசனங்களில் இதுபோன்று 35 கட்டளைகள் உள்ளன. (யாத் 20:23-26; யாத் 22:20,28-31; யாத் 23:13-19, 21-22,24-25,32-33).
மோசேயின் பிரமாணத்தில் தெய்வீகச் சட்டங்கள் (ள்ற்ஹற்ன்ற்ங்ள்), பிரமாணங்கள் (த்ன்க்ஞ்ம்ங்ய்ற்ள்), நியமங்கள் (ர்ழ்க்ண்ய்ஹய்ஸ்ரீங்ள்) ஆகியவை அடங்கியுள்ளன. மார்க்கச் சம்பந்தமான நியமங்களும் (யாத் 12:14; யாத் 13:10; எசே 46:14; 2கொரி 11:2) வாழும்முறை நியமங்களும் (ஸ்ரீண்ஸ்ண்ப் ப்ஹஜ்ள்) (யாத் 15:25-26; லேவி 18:1-30; லேவி 22:1-9; யோசு 24:20-25; 1சாமு 30:25; ஏசா 58:2) மோசேயின் பிரமாணங்களில் உள்ளன.
20. வேதாகமத்தில் கற்பனை என்று கூறப்பட்டிருப்பது பத்துக் கற்பனைகளை மட்டும் குறிக்காமல், அநேக கற்பனைகளைக் குறிக்கிறது. பழைய ஏற்பாட்டில் பத்துக் கற்பனைகள் என்னும் வாக்கியம் எல்லாக் கற்பனைகளையும் குறிப்பதில்லை. (யாத் 15:26; ஆதி 26:5; லேவி 4:2,13,22; லேவி 22:31; லேவி 27:34)
மத் 5:19; யோவான் 14:15-21; யோவான் 15:10; அப் 1:2; 2கொரி 7:19; 2கொரி 14:37; 1யோவான் 2:3-4; 1யோவான் 3:22-24; 1யோவான் 5:2-6; 2யோவான் 1:6; வெளி 12:17; வெளி 14:12; வெளி 22:14 ஆகிய வசனங்களில் கற்பனைகள் என்னும் வார்த்தை புதிய ஏற்பாட்டின் கற்பனைகள் அனைத்தையும் குறிக்கும். இது பத்துக் கற்பனைகளைக் குறிப்பதில்லை.
புதிய ஏற்பாட்டிலுள்ள கற்பனைகளை ஆராய்ந்து பார்க்கும்பொழுது, பத்துக் கற்பனைகளில் ஒன்பது கற்பனைகள் புதிய ஏற்பாட்டில் அங்கிகரிக்கப்பட்டிருக்கின்றன. ஓய்வுநாள் கற்பனை மட்டும் அங்கீகரிக்கப்படவில்லை. (ரோமர் 14:5-6; கொலோ 2:14-17).
549. மோசேயின் பிரமாணத்தில் புறஜாதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள 10 தடைகள்
1. விருத்தசேதனம் பண்ணிக் கொள்ளாமல் பஸ்காவைப் புசிக்கக்கூடாது (யாத் 12:43,45)
2. பரிசுத்தமானவைகளைப் புசிக்கக் கூடாது. (யாத் 29:33; லேவி 22:10-13).
3. பரிசுத்த அபிஷேக எண்ணெயினால் அபிஷேகம் பண்ணிக்கொள்ளக்கூடாது. (யாத் 30:33).
4. ஆசரிப்புக்கூடார வேலையில் பங்குபெறக் கூடாது. அதற்கு அருகிலும் வரக்கூடாது. (எண் 1:51).
5. ஆசாரிய ஊழியம் செய்யக்கூடாது. (எண் 3:10,38).
6. தூபம் காண்பிக்கக்கூடாது (எண் 16:40).
7. ஆசாரியருடைய ஊழியத்தில் அவர்களுக்கு அருகில் போகக்கூடாது. (எண் 18:4,7).
8. இஸ்ரவேலருக்கு ராஜாவாக இருக்கக் கூடாது. (உபா 17:15).
9. வட்டி கொடுப்பதிலிருந்து விலக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது (உபா 23:20).
10. இஸ்ரவேலிலுள்ள விதவைகளைத் திருமணம் செய்யக்கூடாது (உபா 25:5).
550. மோசேயின் பிரமாணத்தில் பிரஜாதிகளுக்கு பங்கு இல்லை இதற்கான ஏழு காரணங்கள்
1. இயேசு கிறிஸ்து நியாயப்பிரமாணத்தை நிறைவேற்ற வந்தபோது, அவர் இஸ்ரவேல் ஜனத்தாரிடம் மட்டுமே சென்றார். (மத் 10:5-6; மத் 15:24)
2. யூதர்கள் இயேசு கிறிஸ்துவையும், அவருடைய சுவிசேஷத்தையும் ஏற்றுக் கொள்ளாமல் புறக்கணித்தார்கள். ஆகையினால் இயேசு கிறிஸ்து யூதரிடமிருந்து தேவனுடைய ராஜ்ஜியத்தை எடுத்து அதைப் புறஜாதியாருக்குக் கொடுத்தார். மோசேயின் பிரமாணத்தைப் புறஜாதியாருக்குக் கொடுக்கவில்லை. (மத் 21:33-46; யோவான் 10:16).
3. புதிய ஏற்பாட்டின் சுவிசேஷத்தினால் புறஜாதியாரும் இஸ்ரவேலரோடு ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். மோசேயின் பிரமாணத்தினால் புறஜாதியார் ஆசீர்வதிக்கப்படவில்லை. (யோவான் 3:16; ரோமர் 1:16; ரோமர் 11:1-25; 2கொரி 12:13; கலா 3:28-29; எபே 3:1-6; கொலோ 3:11).
4. புறஜாதியார் விசுவாசத்தினால் யூதராக முடியாது. (ரோமர் 2:28-29; ரோமர் 9:6-7).
5. மோசேயினுடைய பிரமாணத்தின் பிரகாரம் புறஜாதியார்மீது இஸ்ரவேலருக்கு அநேக சிலாக்கியங்கள் கொடுக்கப்பட்டிருந்தது. (ரோமர் 2:17-29; ரோமர் 3:1-2; ரோமர் 9:4-5). புதிய ஏற்பாட்டிலும், சுவிசேஷத்திலும் பட்சபாதம் எதுவுமில்லை. (ரோமர் 10:9-21; ரோமர் 11:1-25; 2கொரி 12:13; கலா 3:28; கொலோ 3:11).
6. புறஜாதியார் நியாயப்பிரமாணத்தைப் பெற்றிருக்கவில்லை என்று பவுல் கூறியிருக்கிறார். (ரோமர் 2:12-16).
7. இஸ்ரவேலின் வாக்குத்தத்தங்களுக்கும், உடன்படிக்கைகளுக்கும் புறஜாதியார் அந்நியராகவும், பரதேசிகளாகவும் இருப்பதாக அப்போஸ்தலர்கள் உபதேசம் பண்ணியிருக்கிறார்கள் (எபே 2:12,19).