பிரசங்க குறிப்புகள் 561-570

561. இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு காணிக்கையாக கொடுத்த 18 பொருட்கள்

1. அஸ்தகடகங்கள்

2. காதணிகள்

3. மோதிரங்கள்

4. ஆரங்கள்

5. சகலவித பொன்னாபரணங்கள்

6. இளநீலநூல் (யாத் 35:23)

7. இரத்தாம்பரநூல் (யாத் 35:27; யாத் 28:17-21)

8. சிவப்புநூல்

9. மெல்-ய பஞ்சு நூல்

10. வெள்ளாட்டு மயிர்

11. சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோல்

12. தகசுத்தோல்

13. வெள்ளி (யாத் 35:24)

14. வெண்கலம்

15. சீத்திம் மரம்

16. கோமேதக்கற்களும், மற்றக் கற்களும்

17. தூபவர்க்கங்கள் (யாத் 35:28)

18. அபிஷேகத்தைலம்

562. அடையாளங்கள்

பழைய ஏற்பாட்டில் எழுதப்பட்டிருக்கும் பல நிகழ்ச்சிகள் புதிய ஏற்பாட்டின் சத்தியங்கள் பலவற்றிற்கு அடையாளமாக உள்ளன. தேவன் தமது மீட்பின் திட்டத்தை வெளிப்படையாகவும், அடையாளமாகவும் கூறியிருக்கிறார். (கொலோ 2:17; எபி 8:5; எபி 10:1).

கிரேக்க மொழியில் ஐந்து வார்த்தைகள் “”அடையாளம்” என்னும் பொருளைத் தருகிறது. அவையாவன: 1. சொரூபம், 2. ஒப்பனை 3. சாயல் 4. உவமை 5. நிழல்.

அடையாளங்களுக்கு இவ்வாறு விளக்கம் கொடுக்கலாம்.

1. அடையாளத்திற்கும் மெய்ப்பொருளுக்கும் ஒற்றுமை காணப்பட வேண்டும். (கொலோ 2:14-17; எபி 10:1).

2. அடையாளமும், மெய்ப்பொருளும் தீர்க்கதரிசனத்தினால் இணைக்கப்பட வேண்டும். (யோவான் 3:14; ரோமர் 5:14; கொலோ 2:14-17; எபி 8:5; எபி 9:23-24; எபி 10:1; 1பேதுரு 3:21).

3. அடையாளம் வரப்போகிற உண்மைக்கு நிழலாயிருக்கிறது. அடையாளம் மெய்ப்பொருளல்ல. (கொலோ 2:14-17; எபி 8:5; எபி 10:1).

4. அடையாளம் உலகத்திற்குரியது. மெய்ப்பொருளோ பரலோகத்திற்குரியது. (எபி 8:5; எபி 9:24; 1பேதுரு 3:21).

5. அடையாளமும், மெய்ப்பொருளும் சத்தியத்தை விளக்குவதற்காகத் தேவனால் முன்னறியப்பட்டிருக்கிறது. (ரோமர் 5:14; எபி 9:23-24; எபி 10:1-21).

அடையாளங்களில் நான்கு வகைகள் உள்ளன. அவையாவன:

1. அடையாள நபர்கள்

2. அடையாள நிகழ்ச்சிகள்

3. அடையாளச்செயல்கள்

4. அடையாள முறைமைகள்

563. அடையாள நபர்கள்

(1) ஆதாம் கிறிஸ்துவிற்கு அடையாளமாக இருந்தார். (ரோமர் 5:12-21; 2கொரி 15:45-49).

(2) மெல்கிசேதேக்கு கிறிஸ்துவின் நித்திய ஆசாரியத்துவதற்கு அடையாளமாக இருந்தார். (ஆதி 14:18-24; எபி 5:5-9; எபி 6:20; எபி 7:1-10,17); ஆசாரியத்துவத்திற்கும், ராஜரிகத்திற்கும் சேர்ந்து அடையாளமாக இருந்தார். (எபி 7:1-3=சக 6:12-13); நித்தியமானவருக்கு அடையாளமாக இருந்தார். (எபி 7:3,6= மீகா 5:1-2; யோவான் 1:1-3; எபி 1:8).

(3) ஆபிரகாம் தன் ஒரே குமாரனாகிய ஈசாக்கைப் பலியிடப்போனது தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைப் பலியிடக் கொடுத்ததற்கு அடையாளமாகும். (ஆதி 22; யோவான் 3:16; எபி 11:17-19).

(4) ஈசாக்கு இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு அடையாளம். (ஆதி 22; எபி 11:19).

(5) மோசே தேவனுடைய தீர்க்கதரிசி (உபா 18:15-19; அப் 3:19-26), உண்மையுள்ளவர் (அப் 3:1-6) ஆகிய காரியங்களில் கிறிஸ்துவின் அடையாளமாக இருந்தார்.

(6) ஆரோன் கிறிஸ்துவின் பிரதான ஆசாரியத்துவத்திற்கு அடையாளமாக இருந்தார்.

(7) யோனா கிறிஸ்துவின் மரணம், அடக்கம் பண்ணப்படுதல், பாதாளத்திற்கு இறங்கிப் போதல், உயிர்த்தெழுதல் ஆகியவற்றிற்கு அடையாளமாக இருந்தார். (யோனா 2; மத் 12:40; எபே 4:8-10).

564. அடையாள நிகழ்ச்சிகள்

(1) ஜலப்பிரளயம் ஞானஸ்நானத்திற்கு அடையாளம். (1பேதுரு 3:20-21).

(2) வனாந்தரத்தில் இஸ்ரவேல் புத்திரர் சந்தித்த நிகழ்ச்சிகள், கிறிஸ்தவ விசுவாசிகள் தங்கள் ஜீவியங்களில் சந்திக்கப்போகும் நிகழ்ச்சிகளுக்கு அடையாளம். (2கொரி 10:1-13).

(3) வனாந்தரத்தில் வெண்கலச் சர்ப்பம் உயர்த்தப்பட்டது இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கும், கிறிஸ்துவின் சிலுவை மரணத்தினால் உண்டாகும் ஆசீர்வாதங்களுக்கும் அடையாளமாகும். (யோவான் 3:14; எண் 21).

565. அடையாளச்செயல்கள்

(1) யாத் 17 ஆவது அதிகாரத்தில் கற்பாறையை அடிப்பது இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப் படுவதற்கும், ஜனங்களுக்காக அடிக்கப்படுவதற்கும் அடையாளமாகும். (2கொரி 10:4).

(2)இரண்டாம் முறையாகக் கற்பாறையிடம் பேசுவதற்குப் பதிலாகக் கற்பாறையை அடிப்பது கிறிஸ்துவை மறுபடியும் சிலுவையில் அறைவதற்கு அடையாளமாகும். (எண் 20; 2கொரி 10:4; எபி 6:6).

(3)தலைக்கல்லாகிய மூலைக்கல்லைப் புறக்கணிப்பது இயேசு கிறிஸ்துவைப் புறக்கணிப்பதற்கு அடையாளமாகும். (ஏசா 28:16; மத் 21:42).

(4)ஆசரிப்புக் கூடாரத்தில் ஆசாரியருடைய பல்வேறு பணிவிடைகள் இயேசு கிறிஸ்துவின் மூலமாக வரும் மீட்பிற்கு அடையாளமாகும். மிருகஜீவன்களைக் கொல்லுதல், இரத்தம் சிந்துதல், இரத்தத்தைத் தெளித்தல், தூபபீடத்தில் தூபம் ஏற்றுதல், சமுகத்தப்பம், விளக்குகளை ஏற்றுதல், வருஷாந்திர பண்டிகைகள் ஆகியவை அனைத்துமே அடையாளச் செயல்களாகும். இவை கிறிஸ்துவிலும், அவருடைய மீட்பின் கிரியையிலும் நிறைவேறிற்று. (எபி 7:11-28; எபி 8:1-6; எபி 9:1-28; எபி 10:1-22).

566. அடையாள முறைமைகள்

(1) பலிசெலுத்துதல், ஆராதனை செலுத்துதல் சம்பந்தமான மோசேயின் முறைமைகள் அனைத்தும் இயேசு கிறிஸ்துவின் பலிமரணத்திற்கும், அவருடைய மீட்பின் கிரியைக்கும் அடையாளமாகும். தேவனை உண்மையோடு தொழுது கொள்வதற்கும், இதை அடையாளமாகச் சொல்லலாம். (யாத் 12-13; யாத் 25:1-40:38; எபி 7-10).

(2)ஆரோனின் ஆசாரியத்துவம், ஆசாரியர்களின் வஸ்திரங்கள், ஊழியம் சம்பந்தமான பிரமாணங்கள் ஆகியவை அனைத்தும், கிறிஸ்துவிற்கும் அவருடைய மீட்பின் கிரியைக்கும் அடையாளமாகும். (யாத் 28-29; எபி 7-10).

(3) இஸ்ரவேல் புத்திரரின் ஓய்வுநாள் ஆசரிப்பு இரட்சிக்கப்பட்டவர்களுக்கு இயேசு கிறிஸ்துவில் உண்டாகும் நித்திய ஓய்விற்கு அடையாளம். (யாத் 20:8-11; யாத் 31:12-18; உபா 5:15; எபி 4).

(4)இஸ்ரவேல் புத்திரரின் பண்டிகைகள் கிறிஸ்துவின் மூலமாக வரும் மீட்பின் கிரியைகளுக்கு அடையாளம். (யாத் 12; லேவி 23; 2கொரி 5:7; எபி 5-10).

(5)தேவாலயம், அதில் கடைப்பிடிக்கப்பட்ட ஆராதனை முறைமைகள் ஆகியவை அனைத்துமே மெய்யான தேவனை ஆவியோடும்,உண்மையோடும் ஆராதிப்பதற்கு அடையாளமாகும்.

(6) ஆசரிப்புக்கூடாரம், தேவாலயம், அதின் பணிமுட்டுக்கள் ஆகியவை பரலோகத்தின் தேவாலயத்திற்கு அடையாளமாகும். (எபி 8:1-5; எபி 9:1-10,23-24).

அடையாளங்களை வியாக்கியானம் பண்ணும்போது மிகவும் கவனமாக வியாக்கியானம் பண்ணவேண்டும். அதன் விவரம் வருமாறு:

1. அடையாளத்திற்கும், மெய்ப்பொருளுக்கும் இடையிலுள்ள ஒற்றுமையை மட்டும் வலியுறுத்த வேண்டும். உபதேசத்திற்கு அடையாளம் அடிப்படையாக இருக்கக் கூடாது.

2.அடையாளங்களை அவற்றின் மெய்ப்பொருளோடு தொடர்புபடுத்தியே வியாக்கியானம் பண்ண வேண்டும்.

3. தெளிவான வரலாற்று நிகழ்ச்சிகளை அடையாளங்களாகக் கருதக்கூடாது.

4.அடையாளமும், மெய்ப்பொருளும் ஒன்றுக்கொன்று ஒத்துப்போகவேண்டும். அவை வேதவாக்கியத்திற்கு முரண்படக்கூடாது.

5.வேதாகமத்தின் வரலாற்றுச் செய்திகளுக்கு அடையாளத்தின் அடிப்படையில் வியாக்கியானம் பண்ணி, வரலாற்றின் உண்மைகளை மாற்றிவிடக்கூடாது.

567. இஸ்ரவேல் புத்திரர் மோசேயினிடத்தில் கொண்டு வந்த 40 பொருட்கள்

கீழே சொல்லப்பட்டிருக்கிற எல்லாவற்றையும் இஸ்ரவேல் புத்திரர் மோசேயினிடத்தில் கொண்டு வருகிறார்கள். கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியெல்லாம் இஸ்ரவேல் புத்திரர் சகல வேலைகளையும் செய்திருக்கிறார்கள் (யாத் 39:33-42).

1. கூடாரம்

2. அதற்குரிய எல்லாப் பணிமுட்டுகள்

3. அதின் துறடுகள்

4. அதின் பலகைகள்

5. அதின் தாழ்ப்பாள்கள்

6. அதின் தூண்கள்

7. அதின் பாதங்கள்

8. சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோல் மூடி

9. தகசுத்தோல் மூடி

10. மறைவின் திரைச்சீலை

11. சாட்சிப்பெட்டி

12. அதின் தண்டுகள்

13. கிருபாசனம்

14. மேஜை

15. அதின் எல்லாப் பணிமுட்டுகள்

16. சமுகத்தப்பங்கள்

17. சுத்தமான குத்துவிளக்கு

18. வரிசையாய் ஒழுங்குபடுத்தப்பட்ட அதின் அகல்கள்

19. அதின் எல்லாப் பணிமுட்டுகள்

20. வெளிச்சத்திற்கு எண்ணெய்

21. பொற்பீடம்

22. அபிஷேக தைலம்

23. சுகந்த தூபவர்க்கம்

24. வாசஸ்தலத்தின் வாசல் தொங்குதிரை

25. வெண்கலப் ப-பீடம்,

26. அதின் வெண்கலச் சல்லடை

27. அதின் தண்டுகள்

28. அதின் சகல பணிமுட்டுள்

29. தொட்டி

30. அதின் பாதம்

31. பிரகாரத்தின் தொங்குதிரைகள்

32. அதின் தூண்கள்,

33. அதின் பாதங்கள்

34. பிராகாரத்து வாசல் மறைவு

35. அதின் கயிறுகள்

36. அதின் முளைகள்

37. ஆசரிப்புக் கூடாரமான வாசஸ்தலத்தின் வேலைக்கடுத்த சகல பணிமுட்டுகள்

38. பரிசுத்த ஸ்தலத்திலே செய்யும் ஆராதனைக்கடுத்த வஸ்திரங்கள்

39. ஆசாரிய ஊழியஞ்செய்கிற ஆரோனின் பரிசுத்த வஸ்திரங்கள்

40. அவன் குமாரரின் வஸ்திரங்கள்.

568. ஆசரிப்புக்கூடாரத்தின் வாசஸ்தலத்தை ஸ்தாபனம்பண்ணுவது சம்பந்தமாக கர்த்தர் மோசேக்கு கொடுத்த 8 கட்டளைகள்

1.முதலாம் மாதம் முதல் தேதியில் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசஸ்தலத்தை ஸ்தாபனம் பண்ணு. (யாத் 40:2). எகிப்திலிருந்து இஸ்ரவேலர்கள் புறப்பட்டு இந்த நாளோடு பதினொன்றரை மாதம் ஆயிற்று (யாத் 12:40-41; எண் 33:1-3).

2. ஆசரிப்புக் கூடாரத்தின் வாசஸ்தலத்தில் சாட்சிப்பெட்டியை வைத்து, பெட்டியைத் திரையினால் மறைத்துவை. (யாத் 40:3).

3.மேஜையைக் கொண்டுவந்து, அதில் வைக்கவேண்டியதைக் கிரமமாய் வை. (யாத் 40:4).

4.குத்துவிளக்கைக் கொண்டு வந்து, அதின் விளக்குகளை ஏற்று.

5. பொன் தூபபீடத்தைச் சாட்சிப்பெட்டிக்கு முன்னே வைத்து, வாசஸ்தலத்து வாச-ன் தொங்குதிரையைத் தூக்கி வை. (யாத் 40:5).

6.தகன ப-பீடத்தை ஆசரிப்புக் கூடாரமாகிய வாசஸ்தலத்தின் வாசலுக்கு முன்பாக வை. (யாத் 40:6).

7. தொட்டியை ஆசரிப்புக் கூடாரத்துக்கும் ப-பீடத்துக்கும் நடுவே வைத்து, அதிலே தண்ணீர் வார்த்துவை (யாத் 40:7).

8. சுற்றுப் பிராகாரத்தை நிறுத்தி, பிராகார வாசல் தொங்குதிரையைத் தூக்கிவை. (யாத் 40:8).

569. வாசஸ்தலத்தையும் அதிலுள்ள யாவையையும் அபிஷேகம்பண்ணுவது சம்பந்தமாக கர்த்தர் மோசேக்கு கொடுத்த 3 கட்டளைகள்

1. அபிஷேக தைலத்தை எடுத்து, வாசஸ்தலத்தையும் அதிலுள்ள யாவையும் அபிஷேகம்பண்ணி, அதையும் அதிலுள்ள சகல பணிமுட்டுகளையும் பரிசுத்தப் படுத்துவாயாக. (யாத் 40:9).

2.தகனப-பீடத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும் அபிஷேகம்பண்ணி, அதைப் பரிசுத்தப்படுத்துவாயாக (யாத் 40:10).

3.தொட்டியையும் அதின் பாதத்தையும் அபிஷேகம்பண்ணி, பரிசுத்தப் படுத்துவாயாக. (யாத் 40:11).

570. ஆசாரியரை பரிசுத்தம்பண்ணுவது சம்பந்தமாக கர்த்தர் மோசேக்கு கொடுத்த 4 கட்டளைகள்

1.ஆரோனையும் அவன் குமாரரையும் ஆசரிப்புக் கூடாரவாச-ல் வரச்செய்து, அவர்களை ஜலத்தினால் ஸ்நானம் பண்ணுவிப்பாயாக. (யாத் 40:12).

2. ஆரோனுக்குப் பரிசுத்த வஸ்திரங்களை உடுத்தி, கர்த்தருக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு அவனை அபிஷேகம் பண்ணி, அவனைப் பரிசுத்தப் படுத்துவாயாக. (யாத் 40:13).

3.அவன் குமாரரை வரச்செய்து, அவர்களுக்கு அங்கிகளை உடுத்துவாயாக. (யாத் 40:14).

4.அவர்கள் கர்த்தருக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, அவர்களையும், அவர்கள் தகப்பனை அபிஷேகம்பண்ணினபடியே, அபிஷேகம்பண்ணுவாயாக (யாத் 40:15).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *