571. சுகந்த வாசனையான பலிகள்
பரிசுத்த வேதாகமத்தில் பலிகளையும் காணிக்கைகளையும் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. அவை இரண்டு வகைப்படும். அவையாவன :
1.சுகந்த வாசனையான பலிகள் (லேவி 1:1-3:17)
2.சுகந்த வாசனையல்லாத பலிகள் (லேவி 4:1-6:7)
சுகந்த வாசனையான பலிகளை மூன்று விதமாக பிரிக்கலாம். அவையாவன:
1.சர்வாங்க தகனபலிகள் – மிருகஜீவன்கள்
2.சர்வாங்க தகனபலிகள் – போஜனப்பலிகள்
3. சமாதான பலிகள்
சர்வாங்க தகனபலிகளாக செலுத்தப்படும் மிருகஜீவன்களை மூன்று வகையாக பிரிக்கலாம் (லேவி 1:1-17) அவையாவன :
1. காளைகள் (லேவி 1:1-9)
2.செம்மறியாடுகளும், வெள்ளாடுகளும் (லேவி 1:10-13)
3.காட்டுப்புறாக்களும், புறாக்களும் (லேவி 1:14-17)
சர்வாங்க தகனபலிகளாக செலுத்தப்படும் போஜனபலிகளை ஐந்து வகையாக பிரிக்கலாம் அவையாவன : (லேவி 2:1-16)
1. மெல்லியமாவு, எண்ணெய், தூபவர்க்கம் (லேவி 2:1-3)
2. புளிப்பில்லா அதிரசங்கள் (லேவி 2:4)
3. புளிப்பில்லா அடைகள் (லேவி 2:5-6)
4.பொறிக்கும் சட்டியில் பாகம்பண்ணப்பட்ட அடைகள் (லேவி 2:7-9)
5. முதற்கனிகள் (லேவி 2:12-16)
சமாதான பலிகள் மூன்று வகைப்படும் அவையாவன: (லேவி 3:1-17)
1. மாடு, காளை, பசு (லேவி 3:1-6)
2. ஆட்டுக்குட்டிகள் (லேவி 3:7-11)
3. வெள்ளாடுகள் (லேவி 3:12-17)
572. சுகந்த வாசனையல்லாத பலிகள்
சுகந்த வாசனையல்லாத பலிகளை இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம். அவையாவன : (லேவி 4:1-6:7)
1.பாவநிவாரண பலிகள் – மிருகஜீவன்கள் மட்டும். (லேவி 4:1-35):
2. குற்றநிவாரண பலிகள் (லேவி 5:1-6:7)
பாவநிவாரண பலிகளாக செலுத்தப்படும் மிருகஜீவன்களை நான்கு பிரிவாகப் பிரிக்கலாம். அவையாவன : (லேவி 4:1-35)
1.ஆசாரியருக்காகக் காளைகள் (லேவி 4:1-12)
2.ஜனங்களுக்காகக் காளைகள் (லேவி 4:13-21)
3.பிரபுக்கள் அறியாமல் செய்த பாவத்திற்காக இளங்கடா (லேவி 4:22-26)
4. சாதாரண ஜனங்கள் அறியாமல் செய்த பாவத்திற்காக வெள்ளாடுகளின் பழுதற்ற பெண்குட்டி (லேவி 4:27-35)
குற்றநிவாரண பலிகளை ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவையாவன : (லேவி 5:1-6:7)
1. ஐசுவரியவான்களுக்குக் குற்றநிவாரண பலியாக ஆடுகளிலாவது, வெள்ளாடுகளிலாவது ஒரு பெண்குட்டி. (லேவி 5:1-6)
2. ஏழைகளுக்குக் குற்றநிவாரண பலியாக இரண்டு காட்டுப்புறாக்கள், இரண்டு புறாக்குஞ்சுகள் – ஒன்று பாவநிவாரண பலியாகவும், மற்றொன்று சர்வாங்க தகனபலியாகவும். (லேவி 5:7-10)
3. மிகவும் ஏழைகளுக்குக் குற்றநிவாரண பலியாக ஒரு எப்பா அளவான மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கு. (லேவி 5:11-13)
4. அறியாமல் பாவத்திற்குட்பட்டவனுக்குக் குற்ற நிவாரண பலியாக பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவும், அவன்மீது சுமத்தப்படும் சேக்கல் கணக்கான அபராதமும் (வெள்ளி). (லேவி 5:14-19)
5.திருடுகிறவனுக்குக் குற்ற நிவாரண பலியாகத் திருட்டின் மதிப்புக்குச் சரியான பழுதற்ற ஆட்டுக்கடாவும், அவன்மீது சுமத்தப்படும் சேக்கல் கணக்கான அபராதமும் (வெள்ளி). (லேவி 6:1-7)
573. பலிகளைப்பற்றி ஒரு சில செய்திகள்
பலிகளில் இரண்டு வகைகள் உள்ளன.
1. சுகந்த வாசனையான பலிகள்
2. சுகந்த வாசனையல்லாத பலிகள்.
பலிகளைச் செலுத்துகிறவர்களில் இரண்டு பிரிவினர் உள்ளனர்.
1. தனிநபர்கள். (லேவி 1:2,10; லேவி 2:1; லேவி 3:1)
2. சபையார் எல்லோரும் (லேவி 4:13-21; லேவி 16:1-34; எண் 19)
பலிகளைச் செலுத்துவதற்கு இரண்டு விதங்கள் உள்ளன.
1. மனோற்சாகம் (லேவி 1:1-3:17)
2. கட்டளையிடப் பட்டிருக்கிற பிரகாரம் (லேவி 4:1-6:7)
574. பலிகளை செலுத்தவேண்டிய விதம்
1. சர்வாங்க தகனபலிகளை முழுவதுமாகக் தகிக்க வேண்டும். (லேவி 1:6-17; லேவி 6:8-12) அதன் ஒரு பகுதி ஆசாரியருடைய பாகமாக இருந்தால் அதைத் தகிக்கக்கூடாது.
2.போஜனப்பலிகளின் ஒரு பகுதி தகிக்கப்படவேண்டும். தகிக்கப்படாத பகுதி ஆசாரியருக்குரியது. (லேவி 2:1-16; லேவி 6:14-18)
3.ஆசாரியருக்குரிய போஜனப்பலிகள் முழுவதுமாகத் தகிக்கப்படவேண்டும். (லேவி 6:19-23)
4.சமாதானப் பலிகளின் ஒரு பகுதி சுட்டெரிக்கப்பட வேண்டும். அதின் ஒரு பகுதியை ஆசாரியரும், பலி செலுத்துகிறவரும் புசிக்க வேண்டும். (லேவி 3:1-17; லேவி 7:11-21,28-38)
5. பாவநிவாரண பலியைப் பாளயத்திற்கு உள்ளே ஒரு பகுதியையும், பாளயத்திற்குப் புறம்பே ஒரு பகுதியையும் சுட்டெரிக்க வேண்டும். (லேவி 4:1-35; லேவி 6:24-30; லேவி 8:14-17)
6.குற்ற நிவாரண பலியின் ஒரு பகுதியைச் சுட்டெரிக்க வேண்டும். மற்றொரு பகுதியைப் புசிக்கவேண்டும். (லேவி 5:1-6:7; லேவி 7:1-10)
575. பலியாக செலுத்தப்படும் மிருகஜீவன்கள்
1. மந்தை (லேவி 1:1-9; லேவி 16:1-34; எண் 19)
2.செம்மறியாடுகளும், ஆடுகளும் (லேவி 1:1-13; லேவி 3:7-11)
3.வெள்ளாடுகளும், அதன் குட்டிகளும் (லேவி 1:10-13; லேவி 4:27-35)
4. புறாக்கள் (லேவி 5:7-10; ஆதி 15:9)
5. காட்டுப்புறாக்கள் (லேவி 5:7-10)
பலியாக செலுத்தப்படும் மிருகங்களைப்பற்றிய பிரமாணங்கள்
1. சுத்தமான மிருகஜீவன்களாக இருக்க வேண்டும். (ஆதி 8:20)
2.பழுதற்ற மிருகஜீவன்களாக இருக்க வேண்டும். (லேவி 22:18-25)
3.குறைந்தபட்சம் எட்டு வயது நிரம்பியதாக இருக்க வேண்டும். (லேவி 22:27; லேவி 23:12)
576. போஜனபலி லேவி 2:1-10
இந்த அதிகாரத்தில் போஜனபலியைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆதியாகமத்தில் முதன் முதலாக போஜனபலி செலுத்தப்பட்டதைப்பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. “”காயீன் நிலத்தின் கனிகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான்” (ஆதி 4:3).
கர்த்தரிடத்தில் தான் வைத்திருக்கிற பக்தியை வெளிப்படுத்திக் காண்பிப்பதற்காகவும், கர்த்தர் தனக்கு கொடுத்திருக்கிற ஏராளமான நன்மைகளுக்கு அவருக்கு நன்றி சொல்லும் வண்ணமாகவும், இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு போஜனபலியை செலுத்துகிறார்கள்.
கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு போஜனபலியைப்பற்றிய பிரமாணத்தை சொல்லுகிறார். இஸ்ரவேல் புத்திரரில் சாதாரண ஏழைகளாகயிருக்கிறவர்கள் போஜனபலியை செலுத்துகிறார்கள். இவர்களால் காளை வெள்ளாட்டுக்கடா போன்ற மிருகங்களை சர்வாங்க தகனபலியாக செலுத்த முடியாது. அந்த அளவுக்கு இவர்களிடத்தில் பொருளாதார வசதி இருக்காது.
இஸ்ரவேல் ஜனத்தாரில் சாதாரண ஏழைகளாகயிருக்கிறவர்கள் தங்கள் அன்றாட போஜனத்திற்காக அப்பம் புசிக்கிறார்கள். இவை மெல்லிய மாவினாலும், எண்ணெயினாலும் செய்யப்பட்டவை. தாங்கள் அன்றாடம் புசிக்கிற அப்பங்களை, இவர்கள் கர்த்தருக்கு போஜனபலியாக செலுத்துகிறார்கள். கர்த்தரும் இவர்கள் செலுத்துகிற போஜனபலியை அங்கீகரிக்கிறார்.
கர்த்தர் தம்முடைய கிருபையினாலும், இரக்கத்தினாலும் தங்களுக்கு போஜனம் கொடுத்து, தங்களை பராமரிக்கிறார் என்பதை இஸ்ரவேல் ஜனத்தார் நன்றியுள்ள இருதயத்தோடு அங்கீகரிக்கிறார்கள். தங்களுடைய போஜனத்திற்கு தாங்கள் கர்த்தரையே நம்பியிருப்பதையும் இதன் மூலமாக உறுதிபண்ணுகிறார்கள். தங்களுக்கு தேவையான அன்றாட போஜனத்தை கர்த்தர் தாமே தமது கிருபையினாலே தங்களுக்கு கொடுக்கவேண்டும் என்று பயபக்தியோடு விண்ணப்பம்பண்ணுகிறார்கள்.
கர்த்தர் தங்களுக்கு போஜனம் கொடுக்கும்போது, இஸ்ரவேல் புத்திரர் அந்தப் போஜனத்தை கர்த்தருக்கு ஸ்தோத்திரம்பண்ணி புசிக்கிறார்கள். அதே வேளையில் புசிப்பதற்கு அப்பமில்லாமல் பசியோடிருக்கும் தரித்திரரரை நினைவுகூர்ந்து, தங்களிடத்திலுள்ள போஜனத்தை அவர்களுக்கும் பகிர்ந்து கொடுக்கிறார்கள். ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான். கர்த்தர் தாம் பட்ட கடனை திருப்பி செலுத்துவார்.
இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு போஜனபலியை செலுத்தும்போது, கர்த்தர் அவர்களுடைய பலியை அங்கீகரிக்கிறார். தமக்கு செலுத்தப்படும் போஜனபலியானது எப்படிப்பட்டதாயிருக்கவேண்டும் என்பதையும் கர்த்தர் தம்முடைய பிரமாணத்தில் சொல்லுகிறார். கானான் தேசத்தில் மெல்லிய மாவும், எண்ணெயும் தாரளமாய்க் கிடைக்கிறது.
“”உன் தேவனாகிய கர்த்தர் உன்னை நல்ல தேசத்திலே பிரவேசிக்கப்பண்ணுகிறார்; அது பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலுமிருந்து புறப்படுகிற ஆறுகளும் ஊற்றுகளும் ஏரிகளுமுள்ள தேசம்; அது கோதுமையும் வாற்கோதுமையும் திராட்சச்செடிகளும் அத்திமரங்களும் மாதளஞ்செடிகளுமுள்ள தேசம்; அது ஒ-வமரங்களும், எண்ணெயும் தேனுமுள்ள தேசம். அது தாழ்ச்சியில்லாமல் அப்பம் புசிக்கத்தக்கதும் ஒன்றும் உனக்குக் குறைவு படாததுமான தேசம்; அது கல்லுகள் இரும்பாயிருக்கிறதும், செம்பு வெட்டி எடுக்கத்தக்க மலைகளுள்ளதுமான தேசம்” (உபா 8:7-9).
கர்த்தருக்கு போஜனபலியாகிய காணிக்கையை செலுத்துகிறவர், அதை மெல்லிய மாவாக செலுத்தவேண்டும். அந்த மாவின்மேல் எண்ணெய் வார்த்து, அதின்மேல் தூபவர்க்கம் போடவேண்டும்.
கர்த்தர் இந்த வசனப்பகுதியில் நான்குவிதமான போஜனபலிகளைப்பற்றிச் சொல்லுகிறார். அவையாவன : 1. அடுப்பில் சுடப்படாத மெல்லியமாவு 2. அடுப்பில் பாகம்பண்ணப்பட்ட போஜனபலி. 3. தட்டையான சட்டியில் பாகம்பண்ணப்பட்ட போஜனபலி. 4. பொரிக்குஞ் சட்டியில் பாகம்பண்ணப்பட்ட போஜனபலி.
தமக்கு காணிக்கையாக செலுத்தப்படும் போஜனபலியானது, எவ்வாறு செலுத்தப்படவேண்டும் என்றும் கர்த்தர் சொல்லுகிறார். அதன் விவரம் வருமாறு :
“”போஜனபலியாகிய காணிக்கை மெல்-ய மாவாயிருப்பதாக; அவன் அதின்மேல் எண்ணெய் வார்த்து, அதின் மேல் தூபவர்க்கம் போட்டு, அதை ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்களிடத்தில் கொண்டுவருவானாக; அப்பொழுது ஆசாரியன் அந்த மாவிலும் எண்ணெயிலும் ஒரு கைப்பிடி நிறைய தூபவர்க்கம் எல்லாவற்றோடும் எடுத்து, அதைப் ப-பீடத்தின்மேல் ஞாபகக்குறியாகத் தகனிக்கக் கடவன்; அது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனப-” (லேவி 2:1,2) என்று கர்த்தர் சொல்லுகிறார்.
போஜனபலி மிருகஜீவன்களின் மாம்சத்தைக் குறிக்காது. (லேவி 1:1-17). அதின்மேல் எண்ணெய் வார்த்து, அதின் மேல் தூபவர்க்கம் போடப்பட்டிருக்கும். ஞாபகக்குறியாகப் போஜனபலியின் ஒரு பகுதி தகனிக்கப்படும். (லேவி 2:2) மீதியாயிருப்பது ஆசாரியருடைய ஊழியங்களுக்காக அவர்களைச் சேரும். (லேவி 2:3). மெல்லிய மாவு என்பது கோதுமை மாவைக்குறிக்கிறது.
கர்த்தருக்கு காணிக்கையாக செலுத்தப்படும் போஜனபலிகளைப்பற்றிய விவரம் வருமாறு :
1. மெல்லியமாவு, எண்ணெய், தூபவர்க்கம் (லேவி 2:1-3)
2. புளிப்பில்லாத அதிரசம் (லேவி 2:4)
3. புளிப்பில்லாத அடை (லேவி 2:5-6)
4. எண்ணெயில் பொறிக்கப்பட்ட அடை (லேவி 2:7-9)
5.விளைச்சலின் முதற்கனி. (லேவி 2:12-16)
கர்த்தருக்கு செலுத்தப்படும் போஜனபலியானது, அடுப்பில் பாகம்பண்ணப்பட்டதாகவும், தட்டையான சட்டியில் பாகம்பண்ணப்பட்டதாகவும் அல்லது பொரிக்குஞ்சட்டியில் பாகம்பண்ணப்பட்டதாகவும் இருக்கலாம்.
கர்த்தர் வெவ்வேறு விதமான போஜனபலிகளைப்பற்றியும் இந்த வசனப்பகுதியில் சொல்லுகிறார்.
“”நீ படைப்பது அடுப்பில் பாகம்பண்ணப்பட்ட போஜனப-யானால், அது எண்ணெயிலே பிசைந்த மெல்-ய மாவினால் செய்த புளிப்பில்லா அதிரசங்களாயாவது, எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லா அடைகளாயாவது இருப்பதாக” (லேவி 2:4)
“”நீ படைப்பது தட்டையான சட்டியில் பாகம்பண்ணப்பட்ட போஜனப-யானால், அது எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லா மெல்-ய மாவினால் செய்யப்பட்டதாயிருப்பதாக. அதைத் துண்டு துண்டாகப் பிட்டு, அதின்மேல் எண்ணெய் வார்ப்பாயாக; இது ஒரு போஜனப-” (லேவி 2:5,6).
“”நீ படைப்பது பொரிக்குஞ் சட்டியில் பாகம்பண்ணப்பட்ட போஜனப-யானால், அது எண்ணெயிலே பிசைந்த மெல்-ய மாவினால் செய்யப்படுவதாக” (லேவி 2:7).
இஸ்ரவேல் புத்திரர் குறைந்த செலவில் கர்த்தருக்கு போஜனபலியை காணிக்கையாக செலுத்துகிறார்கள். ஆனாலும் இந்தப் பலியை செலுத்தும்போதும், கர்த்தர் சொன்ன பிரகாரம் இதை செலுத்தவேண்டும்.
கர்த்தருக்கு போஜனபலியாகிய காணிக்கையை செலுத்துமாறு கொண்டு வருகிறவனே, அதை ஆசாரியரிடத்தில் கொடுக்க வேண்டும். ஆசாரியன் அந்தப் போஜனபலியை பலிபீடத்தண்டையில் கொண்டு வரவேண்டும்.
அந்தப் போஜனப-யி-ருந்து ஆசாரியன் ஞாபகக்குறியாக ஒரு பங்கை எடுத்துப் ப-பீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்; இது கர்த்தருக்குச் சுகந்தவாசனையான தகனப- (லேவி 2:8,9).
போஜனபலிகளெல்லாம் ஆசாரியனிடத்தில் கொண்டுவரப்பட வேண்டும். அது அவர்களுடைய ஊழியத்திற்குக் காணிக்கையாகும். போஜனபலியிலிருந்து ஒரு பகுதியை எடுத்து, அதைக் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாகத் தகனிக்கவேண்டும் (லேவி 2:2-3,8-10,14-16). போஜன பலிகளெல்லாம் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான பலி என்று அழைக்கப்படுகிறது. மிருகஜீவன்களின் பலிகளில் சிலவும், கர்த்தருக்குச் சுகந்த வாசனையான பலிகளாகும்.
இஸ்ரவேல் புத்திரர் செலுத்துகிற போஜனபலியில் ஒரு பகுதி பலிபீடத்தின்மேல் தகனிக்கப்படுகிறது. ஆசாரியரே இந்தப் போஜனபலியை தகனிக்கிறார். இது ஞாபகக்குறியாக தகனிக்கப்படுகிறது. கர்த்தர் தங்களுக்கு போஜனம் கொடுத்து தங்களை அதிகமாய் ஆசீர்வதித்திருக்கிறார் என்பதை நினைவுகூரும் வண்ணமாக, இஸ்ரவேல் புத்திரர் கொண்டு வரும் போஜனபலியின் ஒரு பகுதி, கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் தகனிக்கப்படுகிறது.
ஆசரிப்புக்கூடாரத்தில் கர்த்தருடைய ஊழியத்தை செய்கிற ஆசாரியருக்கும் போஜனம் கிடைக்கவேண்டும். இஸ்ரவேல் புத்திரர் கொண்டு வரும் போஜனபலியில் ஒரு பகுதி கர்த்தருக்கு சுகந்த வாசனையான தகனபலியாக, பலிபீடத்திலே தகனிக்கப்படுகிறது.
அந்தப் போஜனப-யில் மீதியாயிருப்பது ஆரோனையும் அவன் குமாரரையும் சேரும்; கர்த்தருக்கு இடும் தகனப-களில் இது மகா பரிசுத்தமானது (லேவி 2:3,10).
577. மகாபரிசுத்தமான காரியங்கள்
1. மகா பரிசுத்த ஸ்தலம் (யாத் 26:33-34)
2.வெண்கல பலிபீடம் (யாத் 29:37; யாத் 40:10)
3. பொன்பலிபீடம் (யாத் 30:10)
4.ஆசரிப்புக் கூடாரமும், அதன் பணிமுட்டுகளும், பாத்திரங்களும் (யாத் 30:29; யாத் 4:4,19)
5. தூபவர்க்கம் அல்லது சுகந்தவாசனை (யாத் 30:36)
6. எல்லா போஜனபலிகளும், அதன் ஒரு பகுதி அக்கினியினால் தகனிக்கப்படும். (லேவி 2:3,10; லேவி 6:17; லேவி 10:12; எண் 18:9)
7.பாவநிவாரண பலிகள் (லேவி 6:17,25,29; லேவி 10:17; எண் 18:9)
8.குற்றநிவாரண பலிகள் (லேவி 6:17; லேவி 7:1,6; லேவி 14:13; எண் 18:9)
9. சமுகத்தப்பம் (லேவி 24:9)
10.கர்த்தருக்காக அர்ப்பணிக்கப்பட்ட எல்லாப் பொருட்களும் (லேவி 27:28)
பரிசுத்த வேதாகமத்தில், மகாபரிசுத்தமான நபர்களைப்பற்றியும், மேலும் சில காரியங்களைப்பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் நியாயப்பிரமாணத்தின் பிரகாரம் மகாபரிசுத்தமானவை. அவற்றின் விவரம் வருமாறு :
1. பரிசுத்தப்பூமி (யாத் 3:5)
2. சபைகூடுதல் (லேவி 23; யாத் 12:16)
3. தேவனுடைய வாசஸ்தலம் (யாத் 15:13)
4. ஓய்வுநாள் (யாத் 16:23; யாத் 20:8; யாத் 35:2)
5.தேசம் (யாத் 19:6; உபா 7:6; உபா 14:2,21)
6.மனுஷர் (லேவி 11:44; யாத் 22:31; யாத் 29:37)
7. ஆசரிப்புக்கூடார ஸ்தலம் (யாத் 26:33)
8. வஸ்திரங்கள் (லேவி 16:4;யாத் 28:2-4)
9. பொருட்கள் (லேவி 22:2; யாத் 28:38)
10. வரங்கள் (யாத் 28:38)
11. கிரீடம் (யாத் 29:6; யாத் 39:30)
12.பலிகள் (லேவி 23:20; யாத் 29:33-34)
13. அபிஷேகதைலம் (யாத் 30:25)
14. தூபவர்க்கம் (யாத் 30:37)
15. பரிசுத்த ஸ்தலம் (லேவி 16:33)
16. தேவன் (லேவி 19:2; லேவி 20:7,26; லேவி 21:8)
17. முதற்கனிகள் (லேவி 19:24)
18. தேவனுடைய நாமம் (லேவி 20:3; லேவி 22:2,32)
19. ஆசாரியர்கள் (லேவி 21:6-8)
20. போஜனபலிகள் (லேவி 22:2-16)
21. தசமபாகங்கள் (லேவி 27:30-32)
22. தண்ணீர் (எண் 5:17)
23. நசரேயர் (எண் 6:5-8)
24. அசைவாட்டப்படும் பலிகள் (எண் 6:20)
25. தலையீற்று (எண் 18:17)
26. ஏறெடுக்கப்படும் பலிகள் (எண் 18:19)
27. கருவிகள் (எண் 31:6)
28. பாளயம் (உபா 23:14)
578. போஜனபலியாகிய காணிக்கையைக் குறித்த
கட்டளைகள்
1.போஜனப-யாகிய காணிக்கை மெல்-ய மாவாயிருப்பதாக. அதின்மேல் எண்ணெய் வார்த்து, அதின் மேல் தூபவர்க்கம் போடவேண்டும் (லேவி 2:1)
2. அதை ஆசாரியர்களிடத்தில் கொண்டு வருவானாக; ஆசாரியன் அதைப் ப-பீடத்தின்மேல் ஞாபகக்குறியாகத் தகனிக்கக்கடவன் (லேவி 2:2)
3. அந்தப் போஜனப-யில் மீதியாயிருப்பது ஆசாரியரைச் சேரும். இது மகா பரிசுத்தமானது. ஆசாரியர்கள் இதைப் புசிக்கலாம். (லேவி 2:3)
4.போஜனபலி அடுப்பில் பாகம்பண்ணப் பட்டதானால், அது எண்ணெயிலே பிசைந்த மெல்-ய மாவினால் செய்த புளிப்பில்லா அதிரசங்களாயாவது, எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லா அடைகளாயாவது இருப்பதாக. (லேவி 2:4)
5.போஜனபலி தட்டையான சட்டியில் பாகம்பண்ணப்பட்டதானால், அது எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லா மெல்-ய மாவினால் செய்யப் பட்டதாயிருப்பதாக. (லேவி 2:5)
6.போஜனபலியைத் துண்டு துண்டாகப் பிட்டு, அதின்மேல் எண்ணெய் வார்ப்பாயாக. (லேவி 2:6)
7.போஜனபலி பொரிக்குஞ் சட்டியில் பாகம்பண்ணப்பட்டதானால், அது எண்ணெயிலே பிசைந்த மெல்-ய மாவினால் செய்யப்படுவதாக. (லேவி 2:7)
8. இப்படிச் செய்யப்பட்ட போஜனப-யைக் கர்த்தருக்குச் செலுத்துவாயாக. (லேவி 2:8)
9.ஆசாரியன் அதைப் ப-பீடத்தண்டையில் கொண்டுவந்து, அந்தப் போஜனப-யி-ருந்து ஞாபகக்குறியாக ஒரு பங்கை எடுத்துப் ப-பீடத்தின்மேல் தகனிக்கக் கடவன் (லேவி 2:8-9)
10. இந்தப் போஜனப-யில் மீதியானது ஆசாரியரைச் சேரும். இது ஆசாரியருடைய பங்கு. அவர்கள் இதைப் போஜனம் பண்ணலாம். (லேவி 2:10)
11. நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தும் எந்த போஜனப-யும் புளித்தமாவினால் செய்யப்படாதிருப்பதாக. (லேவி 2:11)
12. முதற்கனிகளைக் காணிக்கையாகக் கொண்டுவந்து, அவைகளைக் கர்த்தருக்குச் செலுத்தலாம். ஆனாலும், ப-பீடத்தின்மேல் அவைகள் சுகந்த வாசனையாகத் தகனிக்கப்படலாகாது. (லேவி 2:12)
13. நீ படைக்கிற எந்த போஜனப-யும் உப்பினால் சாரமாக்கப்படுவதாக
14. நீ படைப்பது எல்லாவற்றோடும் உப்பையும் படைப்பாயாக. (லேவி 2:13)
15. முதற்பலன்களை போஜனப-யாகக் கொண்டுவரக்கடவாய். (லேவி 2:14)
16. போஜனபலியின்மேல் எண்ணெய் வார்த்து, அதின்மேல் தூபவர்க்கத்தைப் போடுவாயாக; (லேவி 2:15)
17. ஆசாரியன் போஜனபலியில் ஞாபகக் குறியான பங்கை அதின் தூபவர்க்கம் எல்லாவற்றோடுங்கூடத் தகனிக்கக் கடவன். (லேவி 2:16)
579. சமாதான பலிகளை படைப்பது சம்பந்தமான பிரமாணம்
1. சமாதானபலியை அது காளையானாலும் சரி, பசுவானாலும் சரி, அதைக் கர்த்தருடைய சந்நிதியில் செலுத்தக் கடவன்.
2. அது பழுதற்றிருக்க வேண்டும்.
3. பலிசெலுத்துகிறவன் ப-யின் தலைமேல் தன் கையை வைத்து, ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாக அதைக் கொல்லக்கடவன். (லேவி 3:2).
4.ஆசாரியர் அதின் இரத்தத்தைப் ப-பீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக் கடவர்கள்.
5.சமாதான ப-யிலே குடல்களை மூடிய கொழுப்பையும், குடல்களிலுள்ள கொழுப்பு முழுவதையும், இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், குண்டிக்காய்களோடே கூடக் கல்லீர-ன்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்து, கர்த்தருக்குத் தகனப-யாக பலிசெலுத்துகிறவன் செலுத்துவானாக. அதை ஆசாரியன் ப-பீடத்து அக்கினியிலுள்ள கட்டைகளின் மேல் போட்டிருக்கும் சர்வாங்க தகனப-யின் மீதில் போட்டுத் தகனிக்கக்கடவர்கள். (லேவி 3:3-6).
6. பலிசெலுத்துகிறவன் ஆட்டுக்குட்டியைப் ப-யாகச் செலுத்தவேண்டுமானால், அதைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரக்கடவன் (லேவி 2:7).
7. பலிசெலுத்துகிறவன் ப-யின் தலைமேல் தன் கையை வைத்து, ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாக அதைக் கொல்லக்கடவன்; (லேவி 3:8).
8.ஆசாரியர் அதின் இரத்தத்தைப் ப-பீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.
9.சமாதான ப-யிலே அதின் கொழுப்பையும், நடுவெலும்பி-ருந்து எடுத்த முழு வாலையும், குடல்களை மூடிய கொழுப்பையும், அவைகளின்மேல் இருக்கிற கொழுப்பு முழுவதையும், இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், குண்டிக்காய்களோடே கூடக் கல்லீர-ன்மேல் இருக்கிற ஜவ்வையும் ஆசாரியன் ப-பீடத்தின் மேல் தகனிக்கக்கடவன்; (லேவி 3:9-11).
10. பலிசெலுத்துகிறவன் செலுத்துவது வெள்ளாடாயிருக்குமானால், அவன் அதை கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரக்கடவன். (லேவி 3:12).
11. பலிசெலுத்துகிறவன் அதின் தலைமேல் தன் கையை வைத்து, ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாக அதைக் கொல்லக்கடவன்; (லேவி 3:13).
12. ஆசாரியர் அதின் இரத்தத்தைப் ப-பீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.
13. அதிலே குடல்களை மூடிய கொழுப்பையும், அவைகள்மே-ருக்கிற கொழுப்பு முழுவதையும், இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின் மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், குண்டிக்காய்களோடே கூடக் கல்லீர-ன்மேல் இருக்கிற ஜவ்வையும் ஆசாரியர் ப-பீடத்தின்மேல் அவைகளைத் தகனிக்கக்கடவர்கள்; (லேவி 3:14-16).
14. கொழுப்பையாவது இரத்தத்தையாவது உங்கள் தலைமுறைதோறும் நீங்கள் புசிக்கலாகாது (லேவி 3:17).
580. பலி மிருகங்கள்
சர்வாங்க தகனபலிகளாக செலுத்தப்படும் மிருகங்கள் :
1. காளை – நான்கு வயதிற்கு மேற்பட்டது. (லேவி 1:3; லேவி 8:2; லேவி 16:3)
2.செம்மறியாடு அல்லது வெள்ளாடு (லேவி 1:10; லேவி 9:2; லேவி 16:3,5-28)
சமாதானபலிகளாக செலுத்தப்படும் மிருகங்கள் :
1. காளை அல்லது பசு (லேவி 3:1)
2. ஆட்டுமந்தையிலுள்ள ஆண் அல்லது பெண் அல்லது குட்டி (லேவி 3:6-7,12)
பாவநிவாரணபலிகளாக செலுத்தப்படும் மிருகங்கள் :
1.இளங்காளை – நான்கு வயதிற்கு மேற்பட்டது (லேவி 4:3-4,8,12-21)
2. இளங்காடா (லேவி 4:23)
3. ஆடுகளிலாவது, வெள்ளாடுகளிலாவது ஒரு பெண்குட்டி அல்லது குட்டி (லேவி 5:6)
4. இளங்காளை (லேவி 9:2)
குற்றநிவாரணபலிகளாக செலுத்தப்படும் மிருகங்கள் :
1.பெண்குட்டி அல்லது குட்டி (லேவி 5:6)
2.ஆட்டுக்கடா (லேவி 5:15,18; லேவி 6:6)
மனோற்சாகமாக செலுத்தப்படும் பலிகள் :
1.சர்வாங்க தகனபலிகள் – மாடுகளிலாகிலும், ஆடுகளிலாகிலும், வெள்ளாடுகளிலாகிலும் பழுதற்ற ஒரு ஆண் (லேவி 22:18-21).
2.விசேஷித்த பொருத்தனைகள் – மாடுகளிலாகிலும், ஆடுகளிலாகிலும், வெள்ளாடுகளிலாகிலும் பழுதற்ற ஒரு ஆண். (லேவி 22:18-21,27)
3. மாடு – நான்கு வயதிற்கு மேற்பட்டது. (லேவி 22:23)
4. வெள்ளாடுகளில் ஆண் அல்லது குட்டி (லேவி 22:23)
பண்டிகைகாலத்துப் பலிகள்
1. பஸ்கா பண்டிகை – ஆண் ஆட்டுக்குட்டி (யாத் 12:5)
2.பெந்தெகொஸ்தே – ஒன்பது ஆட்டுக்குட்டிகள், ஒரு காளை, இரண்டு ஆட்டுக்கடாக்கள், ஒரு வெள்ளாட்டுக்கடா (லேவி 23:18-19)