581. இரத்தம் பூசப்பட்ட ஒரு சில இடங்கள்
ஏழுதரம் என்பது ஒரு பரிபூரணமான கிரியையின் நிறைவைக் குறிக்கும்.
பரிசுத்த வேதாகமத்தில் இரத்தம் பூசப்பட்ட ஒரு சில இடங்களைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. அதன் விவரம் வருமாறு :
1.சுகந்த தூபபீடத்து கொம்புகள் (லேவி 4:7)
2. தகனபலிபீடத்தின் அடியில்
3. பரிசுத்த ஸ்தலத்தின் திரைக்கு எதிரே (லேவி 4:6)
4. தகனபீடத்துக் கொம்புகள் (லேவி 4:30)
5.தகனபீடத்து மீது (லேவி 1:5,11; லேவி 3:2)
6. பலிபீடத்தின் பக்கத்தில் (லேவி 5:9)
7.பரிசுத்த ஸ்தலத்தில் (லேவி 6:30; லேவி 16:27)
8.ஆசாரியரின் வலதுகாதின் மடலில் (லேவி 8:23-24)
9.ஆசாரியரின் வலதுகையின் பெருவிரலில் (லேவி 8:23-24)
10. ஆசாரியரின் வலதுகாலின் பெருவிரலில் (லேவி 8:23-24)
11. வீடுகளின்மீது (லேவி 14:51-53)
12. சுத்திகரிக்கப்படும் நபருடைய வலது காதின்மீது (லேவி 14:25,28)
13. சுத்திகரிக்கப்படும் நபரின் வலதுகை பெருவிரல் (லேவி 14:25,28)
14. சுத்திகரிக்கப்படும் நபரின் வலதுகால் பெருவிரல் (லேவி 14:25,28)
15. கிருபாசனத்தின்மீது (லேவி 16:14-15)
16. ஆசரிப்புக்கூடாரத்திற்கு எதிரில் (எண்19:4)
17. ஜனங்களின்மீது (யாத் 24:6-8)
18. உடன்படிக்கைப் புஸ்தகம்மீது (யாத் 24:6-8)
19. ஆசாரியர்மீது (யாத் 29:21)
20. ஆசாரியரின் வஸ்திரங்கள்மீது (யாத் 29:21)
582. பாவநிவாரண பலிகள் சம்பந்தமான கட்டளைகள்
1. அபிஷேகம் பெற்ற ஆசாரியன், பாவஞ் செய்தால், தான் செய்த பாவத்தினிமித்தம் பழுதற்ற ஒரு இளங்காளையை பாவநிவாரண ப-யாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரக்கடவன் (லேவி 4:2-3).
2. அவன் அந்தக் காளையை ஆசரிப்புக் கூடாரவாச-லே கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரக்கடவன். (லேவி 4:4).
3.அதின் தலைமேல் தன் கையை வைத்து, கர்த்தருடைய சந்நிதியில் அதைக் கொல்லக்கடவன்.
4. அபிஷேகம் பெற்ற ஆசாரியன் அந்தக் காளையின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, அதை ஆசரிப்புக்கூடாரத்தில் கொண்டுவரக்கடவன் (லேவி 4:5).
5. தன் விரலை இரத்தத்தில் தோய்த்து, பரிசுத்த ஸ்தலத்தின் திரைக்கு எதிரே கர்த்தருடைய சந்நிதியில் ஏழுதரம் தெளிக்கக்கடவன் (லேவி 4:6).
6.ஆசாரியன் அந்த இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆசரிப்புக் கூடாரத்திலே கர்த்தருடைய சந்நிதியில் இருக்கும் சுகந்த தூபபீடத்துக் கொம்புகளின் மேல் பூசக்கடவன். (லேவி 4:7).
7.ஆசாரியன் காளையினுடைய மற்ற இரத்தம் முழுவதையும் ஆசரிப்புக் கூடார வாசலுக்கு முன்பாக இருக்கிற தகனப-பீடத்தின் அடியிலே ஊற்றிவிடக்கடவன்.
8.பாவநிவாரணப-யான காளையின் எல்லாக் கொழுப்புமாகிய குடல்களை மூடிய கொழுப்பையும், அவைகள்மேல் இருக்கிற கொழுப்பு முழுவதையும், இரண்டு குண்டிக்காய்களையும், அவைகள்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், குண்டிக் காய்களோடே கூடக் கல்லீர-ன்மேல் இருக்கிற ஜவ்வையும், சமாதானப-யின் காளையி-ருந்து எடுக்கிறதுபோல அதி-ருந்து எடுத்து, அவைகளைத் தகனப-பீடத்தின்மேல் தகனிக்கக்கடவன். (லேவி 4:8-10).
9. காளையின் தோலையும், அதின் மாம்சம் முழுவதையும், அதின் தலையையும், தொடைகளையும், அதின் குடல்களையும், அதின் சாணியையும், காளை முழுவதையும் பாளயத்துக்குப் புறம்பே சாம்பல் கொட்டுகிற சுத்தமான இடத்திலே கொண்டுபோய், கட்டைகளின்மேல் போட்டு, அக்கினியாலே சுட்டெரிக்கக்கடவன்; சாம்பல் கொட்டியிருக்கிற இடத்திலே அதைச் சுட்டெரிக்கக்கடவன். (லேவி 4:11-12).
10. இஸ்ரவேல் சபையார் எல்லாரும் அறியாமையினால் பாவஞ்செய்தால், சபையார் அந்தப் பாவத்தினிமித்தம் ஒரு இளங்காளையை ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாகப் ப-யிடக் கொண்டுவரவேண்டும். (லேவி 4:13-14).
11. சபையின் மூப்பர் கர்த்தருடைய சந்நிதியில் தங்கள் கைகளை அதின் தலைமேல் வைக்கக்கடவர்கள்; பின்பு கர்த்தருடைய சந்நிதியில் அந்தக் காளையைக் கொல்லவேண்டும். (லேவி 4:15).
12. அபிஷேகம் பெற்ற ஆசாரியன் அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆசரிப்புக்கூடாரத்தில் கொண்டுவரக் கடவன். (லேவி 4:16).
13. தன் விரலை இரத்தத்தில் தோய்த்து, கர்த்தருடைய சந்நிதியில் திரைக்கு எதிரே ஏழுதரம் தெளிக்கக்கடவன். (லேவி 4:17).
14. ஆசாரியன் ஆசரிப்புக் கூடாரத்தில் கர்த்தருடைய சந்நிதியில் இருக்கும் ப-பீடத்தின் கொம்புகளின்மேல் அந்த இரத்தத்தில் கொஞ்சம் பூசக்கடவன். (லேவி 4:18).
15. ஆசாரியன் மற்ற இரத்தத்தையெல்லாம் ஆசரிப்புக் கூடாரவாச-ல் இருக்கிற தகனப-பீடத்தின் அடியிலே ஊற்றிவிடக்கடவன்.
16. அதின் கொழுப்பு முழுவதையும் அதி-ருந்து எடுத்து, ப-பீடத்தின்மேல் தகனிக்கக்கடவன். (லேவி 4:19-20).
17. காளையைப் பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோய், சுட்டெரிக்கக்கடவன் (லேவி 4:21).
18. ஒரு பிரபு தான் செய்தது பாவம் என்று தனக்குத் தெரியவரும்போது, அவன் வெள்ளாடுகளில் பழுதற்ற ஒரு இளங்கடாவைப் ப-யாகக் கொண்டு வரக்கடவன். (லேவி 4:22-23).
19. அந்தக் கடாவின் தலைமேல் தன் கையை வைத்து, கர்த்தருடைய சந்நிதியில் சர்வாங்க தகனப- கொல்லப்படும் இடத்தில் அதைக் கொல்லக்கடவன். (லேவி 1:11, 4:24).
20. ஆசாரியன் அதின் இரத்தத்தில் கொஞ்சம் தன் விரலால் எடுத்து, தகனப-பீடத்துக் கொம்புகளின்மேல் பூசி, மற்ற இரத்தத்தைத் தகனப-பீடத்தின் அடியிலே ஊற்றிவிடக்கடவன் (லேவி 4:25).
21. ஆசாரியன் அதின் கொழுப்பு முழுவதையும், ப-பீடத்தின்மேல் தகனிக்கக்கடவன். (லேவி 3:3-5, 4:26).
22. சாதாரண ஜனங்களில் ஒருவன் தான் செய்தது பாவம் என்று தனக்குத் தெரியவரும்போது, அவன் தான் செய்த பாவத்தினிமித்தம் வெள்ளாடுகளில் பழுதற்ற ஒரு பெண்குட்டியைப் ப-யாகக் கொண்டுவரக்கடவன். (லேவி 4:27-28,32).
23. பாவநிவாரணப-யின் தலைமேல் பாவம் செய்த சாதாரண ஜனங்களில் ஒருவன் தன் கையை வைத்து, சர்வாங்க தகனப-யிடும் இடத்தில் அந்தப் பாவநிவாரணப-யைக் கொல்லக்கடவன். (லேவி 1:11, லேவி 4:29,32-33).
24. ஆசாரியன் அதின் இரத்தத்தில் கொஞ்சம் தன் விரலால் எடுத்து, தகனப-பீடத்துக் கொம்புகளின்மேல் பூசி, மற்ற இரத்தத்தையெல்லாம் ப-பீடத்தின் அடியிலே ஊற்றிவிடக்கடவன் (லேவி 4:30,34).
25. ஆசாரியன் அதின் கொழுப்பு முழுவதையும் எடுத்து, ஆசாரியன் ப-பீடத்தின்மேல் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகத் தகனிக்கக்கடவன். (லேவி 3:3-5, லேவி 4:31,35).
583. ஒருவனை தீட்டுப்படுத்தும் காரியங்கள்
1. மரித்தோருடைய சரீரத்தைத் தொடுவது. (எண் 9:10; எண் 19:13)
2.அசுத்தமான நபரைத் தொடுவது. (லேவி 5:3; லேவி 22:4-6)
3.அசுத்தமான மிருகஜீவன்களைப் புசிப்பது (லேவி 11; உபா 14)
4.பிள்ளையைப் பெற்றிருக்கும் ஸ்திரீ (லேவி 12:1-8)
5. வியாதியஸ்தர் (லேவி 13:1-15:33)
6. தீட்டான வீடு (லேவி 14:34-57)
7.தானாக இறந்துபோன மிருகஜீவன். (லேவி 17:15)
8.ஆசாரியர் செய்யும் சில சேவைகள் (எண் 19)
9.நெருங்கிய உறவினரிடையே சேருதல். (லேவி 20:19-21)
10. மனுஷ எலும்பையாவது, பிரேதக் குழியையாவது தொடுதல் (எண் 19:16)
11. செத்துப்போன மனுஷனுடைய கூடாரத்தில் பிரவேசித்தல் (எண் 19:14)
584. பரிசுத்தவேதாகமத்தில் ஒரு சில பாவங்கள் “”குற்றங்கள்” என்று அழைக்கப்படுகிறது.
1.ஆணையைக் குறித்து உண்மையில்லாதிருத்தல் (லேவி 5:1).
2.அசுத்தமானதைத் தொடுதல். (லேவி 5:2-3)
3. பதறி ஆணையிடுதல். (லேவி 5:4)
4.கர்த்தருக்குரிய பரிசுத்தமான சடங்குகளில் அறியாமையினால் குற்றம் செய்தல். (லேவி 5:15; லேவி 22:14-16)
5. தன் வசத்தில் நம்பி ஒப்படைக்கப்பட்ட பொருளில் அநியாயம் செய்தல். (லேவி 6:2-3; யாத் 22:9-13; எண் 5:6-27)
585. குற்றநிவாரண பலியாக செலுத்த வேண்டியவை
1. ஆடுகளில் ஒருபெண்குட்டி (லேவி 5:6)
2. வெள்ளாடுகளில் ஒரு பெண்குட்டி
3. காட்டுப்புறா (லேவி 5:7)
4. புறா
5. ஒரு எப்பா அளவான மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கு (லேவி 5:11).
6. ஆட்டுக்கடா (லேவி 5:15,18)
586. ஒருவன் எந்தெந்த காரியங்களிலெல்லாம் பொய்யாணையிடுவான்
1.தன் வசனத்தில் ஒப்புவிக்கப்பட்ட பொருளைப் பற்றி (லேவி 6:2,5)
2.கொடுக்கல் வாங்கலில் இடுக்கண் செய்தல். (லேவி 6:2,4)
3.ஒரு வஸ்துவைப் பலாத்காரமாய்த் பரித்துக் கொள்ளுதல். (லேவி 6:2,4)
4.ஏமாற்றி ஒரு பொருளைப் பெற்றுக் கொள்ளுதல். (லேவி 6:2,4)
5.காணாமற்போயிருந்து கண்டு எடுத்த பொருளைப் பற்றி (லேவி 6:3,4)
587.பரிசுத்த வேதாகமத்தில் குற்றநிவாரண பலிகளின் பிரமாணத்தைப்பற்றி
1.சில குறிப்பிட்ட பாவங்களைச் செய்தவன். (லேவி 6:1-5) தன் குற்றநிவாரண பலியைக் கொண்டு வரவேண்டும் (லேவி 5:6).
2.தான் செய்த பாவத்துக்குப் பாவநிவாரணப-யாக, ஆடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது, ஒரு பெண்குட்டியைக் குற்றநிவாரண ப-யாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவர வேண்டும் (லேவி 5:6).
3.அதினாலே ஆசாரியன் அவன் செய்த பாவத்தைக்குறித்து அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.
4.ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர அவனுக்குச் சக்தியில்லாதிருந்தால், அவன் செய்த குற்றத்தினிமித்தம் இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஒன்றைப் பாவநிவாரண ப-யாகவும் மற்றொன்றைச் சர்வாங்க தகனப-யாகவும், கர்த்தருடைய சந்நிதியில் கொண்டு வரக்கடவன். (லேவி 5:7).
5.அவைகளை ஆசாரியனிடத்தில் கொண்டுவருவானாக. (யாத் 5:8)
6.அவன் பாவநிவாரண ப-க்கானதை முன்னே செலுத்தி, அதின் தலையை அதின் கழுத்தினிடத்தில் கிள்ளி, அதை இரண்டாக்காமல் வைத்து, அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ப-பீடத்தின் பக்கத்தில் தெளிப்பானாக. (யாத் 5:8-9)
7.மீதியான இரத்தத்தைப் ப-பீடத்தின் அடியிலே வடியவிடுவானாக; (லேவி 5:9).
8.மற்றதை நியமத்தின்படியே அவன் தகனப-யாய்ச் செலுத்தக்கடவன். (லேவி 5:10).
9. இவ்விதமாக அவன் செய்த பாவத்தை ஆசாரியன் நிவிர்த்திசெய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும். (லேவி 5:10).
10. இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது கொண்டு வர அவனுக்குச் சக்தியில்லாதிருந்தால், பாவம் செய்தவன் பாவநிவாரணத்துக்காக ஒரு எப்பா அளவான மெல்-ய மாவிலே பத்தில் ஒரு பங்கைத் தன் காணிக்கையாகக் கொண்டுவருவானாக; (லேவி 5:11).
11. அதிலே ஆசாரியன் ஞாபகக்குறியான பங்காகத் தன் கைப்பிடி நிறைய எடுத்து, கர்த்தருக்கு இடும் தகனப-களைப்போல, ப-பீடத்தின் மேல் தகனிக்கக்கடவன்; (லேவி 5:12).
12. அவன் செய்த பாவத்துக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும் (லேவி 5:13).
13. மீதியானது போஜன ப-யைப்போல ஆசாரியனைச் சேரும் (லேவி 5:13).
14. ஒருவன் கர்த்தருக்குரிய பரிசுத்தமானவைகளில் குற்றஞ்செய்து, அறியாமையினால் பாவத்துக்குட்பட்டால், அவன் தன் குற்றத்தினிமித்தம் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படியே, அவன் மேல் சுமத்தும் அபராதம் எவ்வளவோ, அவ்வளவு வெள்ளிச் சேக்கல் பெறும் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவைக் குற்றநிவாரணப-யாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, பரிசுத்தமானதைக் குறித்துத் தான் செய்த தப்பிதத்தினால் உண்டான நஷ்டத்தைச் செலுத்தி, அதினோடு ஐந்தில் ஒரு பங்கை அதிகமாகக் கூட்டிக் கொடுப்பானாக; (லேவி 5:15-16).
15. இதை ஆசாரியனுக்குக் கொடுப்பானாக. குற்றநிவாரண ப-யாகிய ஆட்டுக்கடாவினாலே அவனுக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யக் கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும் (லேவி 5:16).
16. ஒருவன் செய்யத்தகாதென்று கர்த்தருடைய கட்டளைகளினால் விலக்கப்பட்ட யாதொன்றைச் செய்து பாவத்துக்குட்பட்டால், அதினிமித்தம் அவன் குற்றநிவாரணப-யாக, பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவை ஆசாரியனிடத்தில் கொண்டுவருவானாக; ஆசாரியன் அவனுக்காக நிவிர்த்திசெய்யக் கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும். (லேவி 5:17-18).
17. ஒருவன் கர்த்தருக்கு விரோதமாக அநியாயம் செய்து, மனுஷருக்கு விரோதமாகவும் அநியாயம் செய்து பாவம் செய்தவன் தான் நஷ்டப்படுத்திய பொருளைத் திரும்பக் கொடுக்கக்கடவன். அதினோடு ஐந்தில் ஒரு பங்கு அதிகமாகவுங் கூட்டிக் கொடுக்கக்கடவன். (லேவி 6:1-5).
18. தன் குற்றநிவாரணப-யாக, பழுதற்ற ஆட்டுக்கடாவைக் கர்த்தருக்குச் செலுத்தும்படி, அதை ஆசாரியனிடத்தில் குற்றநிவாரண ப-யாகக் கொண்டு வருவானாக. கர்த்தருடைய சந்நிதியில் அவன் பாவத்தை ஆசாரியன் நிவிர்த்தி செய்யக்கடவன். (லேவி 6:6-7).
588. பரிசுத்த வேதாகமத்தில் சர்வாங்க தகனபலிக்குரிய பிரமாணத்தைப்பற்றி
1.ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் சர்வாங்க தகனப-க்குரிய பிரமாணத்தைப் பற்றி கற்பிப்பாயாக. (லேவி 6:9).
2.சர்வாங்க தகனப-யானது இராமுழுவதும் விடியற்காலமட்டும் ப-பீடத்தின்மேல் எரியவேண்டும்.
3. ஆசாரியன் தன் சணல்நூல் அங்கியைத் தரித்து, தன் சணல்நூல் ஜல்லடத்தை அரையில் போட்டுக்கொண்டு, ப-பீடத்தின்மேல் அக்கினியில் எரிந்த சர்வாங்க தகனப-யின் சாம்பலை எடுத்து, ப-பீடத்துப் பக்கத்தில் கொட்ட வேண்டும் (லேவி 6:10).
4.தன் வஸ்திரங்களைக் கழற்றி, வேறு வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, அந்தச் சாம்பலைப் பாளயத்துக்குப் புறம்பே சுத்தமான ஒரு இடத்திலே கொண்டு போய்க் கொட்டக்கடவன். (லேவி 6:11).
5.ப-பீடத்தின்மே-ருக்கிற அக்கினி அவியாமல் எரிந்துகொண்டிருக்க வேண்டும்; (லேவி 6:12).
6.ஆசாரியன் காலைதோறும் அதின் மேல் எரியும்படி கட்டைகளைப் போட்டு, அதின்மேல் சர்வாங்க தகனப-யை வரிசையாக வைத்து, அதின்மேல் சமாதான ப-களின் கொழுப்பைப் போட்டுத் தகனிக்கக்கடவன். (லேவி 6:12).
7.ப-பீடத்தின்மேல் அக்கினி எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்க வேண்டும்; அது ஒருபொழுதும் அவிந்துபோகலாகாது. (லேவி 6:13).
589. பரிசுத்த வேதாகமத்தில் போஜனபலியின் பிரமாணத்தைப்பற்றி
1.ஆரோனின் குமாரர் போஜனபலியைக் கர்த்தருடைய சந்நிதியில் ப-பீடத்துக்கு முன்னே படைக்கவேண்டும் (லேவி 6:14).
2.ஆசாரியன் போஜனப-யின் மெல்-ய மாவிலும் அதின் எண்ணெயிலும் தன் கைப்பிடி நிறைய எடுத்து, போஜனப-யின்மேலுள்ள தூபவர்க்கம் யாவற்றோடும் கூட அதை ஞாபகக்குறியாகப் ப-பீடத்தின்மேல் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகத் தகனிக்கக்கடவன். (லேவி 6:15).
3. இதில் மீதியானதை ஆரோனும் அவன் குமாரரும் புசிப்பார்களாக; அது புளிப்பில்லா அப்பத்துடன் பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கப்படக்கடவது; ஆசரிப்புக் கூடாரத்தின் பிராகாரத்தில் அதைப் புசிக்கவேண்டும் (லேவி 6:16,18).
4.இதைப் புளித்தமாவுள்ளதாகப் பாகம் பண்ணவேண்டாம் (லேவி 6:17).
5.இது கர்த்தருக்கு இடப்படும் தகனங்களில் கர்த்தர் ஆசாரியருக்குக் கொடுத்த அவர்களுடைய பங்காகும்.
6.இது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாய் இருக்கக்கடவது. (லேவி 6:18).
590. பரிசுத்த வேதாகமத்தில் நித்தியபோஜனபலி சம்பந்தமான கட்டளைகள்
1. ஆரோன் அபிஷேகம் பண்ணப்படும் நாளில், அவனும் அவன் குமாரரும் கர்த்தருக்கு நித்திய போஜனப-யாகச் செலுத்தக்கடவர்கள் (லேவி 6:20,22-23).
2.ஒரு எப்பா அளவான மெல்-ய மாவிலே பத்தில் ஒரு பங்கை, காலையில் பாதியும் மாலையில் பாதியும், நித்திய போஜனப-யாகச் செலுத்தக்கடவர்கள்.
3.அது சட்டியிலே எண்ணெய்விட்டுப் பாகம்பண்ணப்படக்கடவது (லேவி 16:18,21).
4.பாகம்பண்ணப் பட்டபின்பு அதைக் கொண்டுவந்து, போஜனப-யாகப் பாகம்பண்ணப்பட்ட துண்டுகளைக் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகப் படைக்கக்கடவாய். (லேவி 16:21).
5.பிரதான ஆசாரியனும், மற்ற ஆசாரியரும் அவர்களுடைய ஸ்தானத்தில் அபிஷேகம் பண்ணப்படுகிறவர்களும் போஜன ப-யாகப் பாகம்பண்ணப்பட்ட துண்டுகளைக் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகப் படைக்கக்கடவர்கள். (லேவி 6:22).
6.அது முழுவதும் தகனிக்கப்பட வேண்டும்; (லேவி 6:22-23) அதைப் புசிக்கக்கூடாது. இயேசு கிறிஸ்துவின் பரிபூரண பலிக்கும் அவருடைய உயிர்த்தெழுதலுக்கும், அவர் பரமேறியதற்கும் இது அடையாளமாகும். (லூக்கா 24:39-53; அப் 1:9-11).
7.அது கர்த்தர் நியமித்த நித்திய கட்டளை (லேவி 6:20,22-23).