601. பரிசுத்த வேதாகமத்தில் அந்நிய தேவர்களைப்பற்றியும், அவர்களை ஆராதிக்கிறவர்களைப்பற்றியும் 8 செய்திகள் சொல்லப்பட்டிருக்கிறது.
1. அந்நிய தேவர்களை ஆராதிக்கக்கூடாது. (யாத் 20:3)
2. அந்நிய தேவர்களை உருவாக்குதல். (யாத் 20:4; யாத் 32:4,20; உபா 4:23; ஏசா 40:1920; ஏசா 44:917; ஆப 2:18; அப் 19:2425)
3. அந்நிய தேவர்களை உருவாக்குவது தடைபண்ணப்பட்டிருக்கிறது (யாத் 20:4; யாத் 34:17)
4. அந்நிய தேவர்களை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள்.
(1) பொன்னும் வெள்ளியும் (யாத் 32:34; சங் 115:47; சங் 135:1517; ஏசா 2:20; ஏசா 30:22; ஏசா 31:7; ஓசி 8:4)
(2) மரமும், கல்லும் (லேவி 26:1; உபா 4:28; 2இராஜா 19:18; ஏசா 37:19; ஏசா 44:1319; ஏசா 45:20; எசே 20:32)
5. அந்நிய தெய்வங்களுக்கு பல பெயர்கள் உள்ளன.
6. விக்கிரகாராதனை முறைமைகள் வெவ்வேறாக இருக்கும்.
7. விக்கிரகங்களின் அளவும், ரூபமும் (ரோமர் 1:2127; வெளி 9:2021. உபா 4:1516)
8. விக்கிரகங்களை ஆராதிப்போருக்கு வரும் முடிவு (2கொரி 6:911; கலா 5:1921; வெளி 21:8; வெளி 22:15)
602. பரிசுத்த வேதாகமம் கூறும் மிக முக்கியமான 35 அந்நிய தெய்வங்களைப்பற்றியும், அவைகளின் பெயர்களைப்பற்றியும்
1. மோளேகு அம்மோனியரின் தேசிய தெய்வம். இது மோவாபியரின் காமோஸ் தெய்வத்தைப் போன்றது. (லேவி 18:21; லேவி 20: 25; 1இராஜா 11:57,33; 2இராஜா 23:1013; எரே 32:35; ஆமோ 5:26; அப் 7:43).
2. பாகால் மேற்கு ஆசியாவில் புறஜாதியார் மத்தியில் பிரபலமாக இருந்த தெய்வம். இது சூரிய தெய்வமென்றும் அழைக்கப்பட்டது. (எண் 22:41;நியா 2:13; நியா 6:2532; 1இராஜா 16:3132; இராஜா 18:1926,40; 1இராஜா 19:18; 1இராஜா 22:53; 2இராஜா 3:2; 2இராஜா 10:1828; 2இராஜா 11:18; 2இராஜா 17:16; 2இராஜா 21:3; 2இராஜா 23:45; 1நாளா 4:33; 1நாளா 5:5; 1நாளா 8:30; 1நாளா 9:36; 2நாளா 23:17; எரே 2:8; எரே 7:9; எரே 11:13,17; எரே 12:16; எரே 19:5; எரே 23:13,27; எரே 32:29,35; ஓசி 2:8; ஓசி 13:1; செப் 1:4; ரோமர் 11:4). பாகாலின் பலிபீடங்கள் உயர்ந்த மேடையில் இருக்கும். சூரிய உதயத்தையும், சூரிய அஸ்தமனத்தையும் காண்பதற்கு வசதியாக பாகாலின் கோவிலை மலையுச்சியில் கட்டினார்கள்.
3. பாகால்பேரீத் சேகேமியரின் தெய்வம். பாகாலின் உடன்படிக்கை என்பது இதன் பொருள். (நியா 8:33; நியா 9:4)
4. பாகால்கள் பாகாலின் பன்மைப்பெயர். (நியா 2:11; நியா 3:7; நியா 8:33; நியா 10:6,10; 1சாமு 7:4; 1சாமு 12:10; 1இராஜா 18:18; 2நாளா 17:3; 2நாளா 24:7; 2நாளா 28:2; 2நாளா 33:3; 2நாளா 34:4; எரே 2:23; எரே 9:14; ஓசி 2:13,17; ஓசி 11:2)
5. பாகால்சேபூப் இந்த எபிரெய வார்த்தைக்கு வண்டுகளின் தெய்வம் என்று பொருள். இது எக்ரோனின் தேவன் என்றும் அழைக்கப்பட்டது. (2இராஜா 1:23,6,16) பாகால்சேபூப் வண்டுகளை உற்பத்தி செய்கிறவன். வண்டுகளுக்கு எதிராக இந்தத் தெய்வம் தங்களைப் பாதுகாக்கும் என்று எக்ரோனியர் நம்பினார்கள். வண்டுகளினால் கிழக்கு தேசத்தில் மிகப்பெரிய வாதைகள் வரும் என்பது ஜனங்களுடைய நம்பிக்கை. வண்டுகள் இந்தத் தெய்வத்தின் பிரதிநிதிகள் என்று நம்பினார்கள். மழை, இடி, மின்னல் ஆகிய இயற்கை தெய்வங்களைப் போன்று, பாகால்சேபூபும் ஒரு வல்லமையான தெய்வம் என்பது ஜனங்களுடைய நம்பிக்கை. ஆகையினால் அகசியா ராஜா பாகால்சேபூபிடம் தன் விண்ணப்பத்திற்குப் பதில் எதிர்பார்த்தான்.
6. பெயல்செபூல் இது அசுத்த ஆவிகளுக்குத் தலைவன் என்று யூதர்கள் கருதினார்கள். (மத் 10:25; மத் 12:27); பரிசேயர்கள் பெயல்செபூலைப் பிசாசுகளின் தலைவன் என்று அழைத்தார்கள். (மத் 12:24; மாற்கு 3:22; லூக்கா 11:15); இயேசு இவனை சாத்தான் என்று கூறினார் (லூக்கா 11:18).
7. அஸ்தரோத் கானானியருடைய பெண் தெய்வம். சந்திரனுடைய பெயர் இதற்கு வழங்கப்படுகிறது. (நியா 2:13; நியா 10:6; 1சாமு 7:34; 1சாமு 12:10; 1சாமு 31:10; 1இராஜா 11:5,33; 2இராஜா 23:13). இந்தத் தெய்வம் நிர்வாணமாக இருக்கும். இவளுடைய கண் புருவத்தில் சந்திரனின் பிறை வடிவம் இருக்கும். ஜன உற்பத்திக்கு உகந்த தெய்வமென்று ஜனங்கள் இதை வழிபட்டார்கள். புறாக்கள் இவளுடைய புனிதமான பறவைகளாகும்.
8. ஆசேரா கானானியருடைய தெய்வம். பாகாலின் மனைவி.
9. பேல் பாபிலோனியரின் தெய்வம். (ஏசா 46:1; எரே 50:2; எரே 51:44)
10. காமோஸ் மோவாபியரின் தெய்வம். அம்மோனியருக்கு மோளேகைப் போன்றது. (நியா 11:24; 1இராஜா 11:7,33; 2இராஜா 23:13; எரே 48:7,13,46)
11. பொன் கன்றுக்குட்டி இஸ்ரவேலரில் பின்வாங்கிப் போனவர்களுடைய தெய்வம் (யாத் 32:435; உபா 9:1621; நெகே 9:18; சங் 106:19)
12. பெத்தேல், தாண் ஆகியவற்றின் பொன் கன்றுக்குட்டி இஸ்ரவேலரில் பின்வாங்கிப் போனவர்களுடைய தெய்வம். (1இராஜா 12:2832; 2இராஜா 10:29; 2இராஜா 17:16; 2நாளா 11:15; 2நாளா 13:8; ஓசி 8:56; ஓசி 10:5; ஓசி 13:2)
13. மெரொதாக் பாபிலோனியரின் தெய்வம். (எரே 50:2)
14. நேபோ பாபிலோனியரின் தெய்வம். (ஏசா 46:1)
15. நிகுஸ்தான் வெண்கல சர்ப்பம். இஸ்ரவேலரில் பின்வாங்கிப் போனவர்களுடைய தெய்வம். (2இராஜா 18:4)
16. வலை, பறி இஸ்ரவேலரில் பின்வாங்கிப் போனவர்களுடைய தெய்வம் (ஆப 1:1517
17. சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் இஸ்ரவேலரில் பின்வாங்கிப் போனவர்களுடைய தெய்வம். (உபா 4:19; 2இராஜா 17:16; 2இராஜா 21:35; 2நாளா 33:1516; செப் 1:45; அப் 7:42)
18. சுக்கோத் பெனோத் (2இராஜா 17:30) பாபிலோனின் பெண்தெய்வம். பேலின் மனைவி.
19. நேர்கால் கூத்தின் மனுஷருடைய தெய்வம். (2இராஜா 17:30). அசீரியர் மத்தியில் இந்தத் தெய்வம் பிரபலமானது.
20. ஆஷிமா ஆமாத்தின் தெய்வம். ஆட்டின் ரூபமுடையது.
21. நிஸ்ரோக் (2இராஜா 19:37) அசீரியரின் தெய்வம். நினிவேயில் இதன் கோவில் உள்ளது.
22. நிபேகாஸ் ஏவியவரின் தெய்வம். (2இராஜா 17:31). இதன் தலை நாயின் உருவமுடையது.
23. தர்காக் ஏவியரின் மற்றொரு தெய்வம். (2இராஜா 17:31) இது கழுதை உருவமுடையது.
24. ரிம்மோன் சீரியரின் தெய்வம். (2இராஜா 5:18)
25. அத்ரமலேக் (2இராஜா 17:31) மோளேகைப் போன்றது. சேபாராவியரின் தெய்வம்
26. அன்னமலேக் (2இராஜா 17:31) சேபாராவியரின் மற்றொரு தெய்வம். குதிரையின் ரூபமுடையது. இதற்கு நரபலியிட்டார்கள்.
27. வார்ப்புக்கள் (எண் 33:52; ஏசா 2:16; எசே 8:10)
28. எகிப்தியரின் தெய்வங்கள் மிருகங்கள் (யாத் 12:12)
29. தேவர்களின் நட்சத்திர ராசி (ஆமோஸ் 5:26) ரெம்பான் (அப் 7:43)
30. யூப்பித்தர் கிரேக்கரின் பிரதான தெய்வம். (அப் 14:1213; அப் 19:35)
31. மெர்கூரி ரோமரின் வியாபார தெய்வம். (அப் 14:12)
32. அறியப்படாத தேவன் கிரேக்கருடைய தேவன் (அப் 17:23)
33. தியானாள் கிரேக்கருடைய தேவதை (அப் 19:2425)
34. தாகோன் பெலிஸ்தருடைய தேசிய தெய்வம். சிறிய மீன் வடிவத்தில் இருக்கும்.
35. மிருகத்தின் சொரூபம் (வெளி 13)
இவைதவிர, அந்நிய தெய்வங்கள், வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்கள், உளியால் செதுக்கப்பட்ட தெய்வங்கள் என்று பல தெய்வங்களைப் பற்றி வேதாகமத்தில் கூறப்பட்டிருக்கிறது. இஸ்ரவேலரின் பட்டணங்களின் இலக்கமும், அவர்களுடைய தேவர்களின் இலக்கமும் சரியென்று எரேமியா தீர்க்கதரிசி கூறியிருக்கிறார். (எரே 2:28). விக்கிரகங்களை ஆராதிப்பது பிசாசுகளின் ஆராதனை என்று கூறப்பட்டிருக்கிறது. (லேவி 17:7; உபா 32:17; 2நாளா 11:15; சங் 106:37; 2கொரி 10: 78,2021; வெளி 9:2021).
603. புறஜாதி ஜனங்கள் விக்கிரகங்களை ஆராதிக்கும்போது என்னென்ன செய்கிறார்கள் என்பது பற்றிய 16 குறிப்புகள்
1. விக்கிரகங்களிடம் ஜெபம் பண்ணுகிறார்கள் (நியா 10:14; 1இராஜா 18:2529; ஏசா 16:12; ஏசா 44:17; ஏசா 45:20; ஏசா 46:7; யோனா 1:5)
2. மனுஷரைப் பலியிடுகிறார்கள் (லேவி 18:21; லேவி 20:25; உபா 12:31; உபா 18:10; 2இராஜா 3:2627; 2இராஜா 16:3; 2இராஜா 17:1718; 2இராஜா 21:6; 2இராஜா 23:10; 2நாளா 28:3; 2நாளா 33:6; சங் 106:3738; ஏசா 57:5; எரே 7:31; எரே 19:47; எரே 32:35; எசே 16:2021; எசே 20:2631; எசே 23:3739; மீகா 6:7)
3. மரித்தோருக்காக சடங்குகளை செய்கிறார்கள் (உபா 14:1)
4. அநீதியான கிரியைகள் நடப்பிக்கிறார்கள். (யாத் 32:6,25; எண் 25:13; 1இராஜா 14:24; 1இராஜா 15:12; 2இராஜா 17:30; 2இராஜா 23:7; எசே 16:17; எசே 23:144; ஓசி 4:1214; ஆமோ 2:8; மீகா 1:7; ரோமர் 1:1832; 2கொரி 10:78; 1பேதுரு 4:34; வெளி 2:1422; வெளி 9:2021; வெளி 14:8; வெளி 17:16)
5. விலங்குகளைப் பலியிடுகிறார்கள் (யாத் 32:6; 1இராஜா 18:26; அப் 14:13)
6. இரத்தபான பலிகளை செலுத்துகிறார்கள். (உபா. 32:38; சங் 16:4; ஏசா 57:6; ஏசா 65:11; எரே 7:18; எரே 19:13; எரே 32:29; எரே 44:1725; எசே 20:28; சக. 9:7)
7. போஜனபலிகளை செலுத்துகிறார்கள் (ஏசா 57:6; எசே 16:19)
8. சமாதான பலிகளை செலுத்துகிறார்கள் (யாத் 32:6)
9. தூபவர்க்கங்களைக் காண்பிக்கிறார்கள் (1இராஜா 12:33; 2நாளா 30:14; 2நாளா 34:25; ஏசா 65:3; எரே 1:16; எரே 11:12,17; எரே 44:3; எரே 48:35; எசே 16:18; எசே 23:41)
10. விக்கிரகங்களைத் துதிக்கிறார்கள். (நியா 16:24; தானி 5:4)
11. விக்கிரகங்களுக்கு முன்பு ஆடிப்பாடுகிறார்கள் (யாத் 32:18)
12. விக்கிரகங்களுக்கு வாத்தியங்களை இசைக்கிறார்கள் (தானி 3:57)
13. தங்கள் சரீரங்களைக் கீறிக்கொள்ளுகிறார்கள் (1இராஜா 18:28)
14. முழங்கால்படியிட்டு விக்கிரங்களை முத்தம் செய்கிறார்கள் (1இராஜா 19:18; 2இராஜா 5:18; யோபு 31:27; ஓசி 13:2)
15. தசமபாகங்களும், காணிக்கைகளும் செலுத்துகிறார்கள் (2இராஜா 23:11; தானி 11:38; ஆமோ 4:45)
16. விக்கிரகங்களுக்கு பண்டிகைகளை ஆசரிக்கிறார்கள் (1இராஜா 12:32; எசே 18:6,1115; எசே 22:9; தானி 3:23)
விக்கிரகங்கள் மனுஷருடைய கிரியைகளாகும். (ஏசா 2:8; ஏசா 40:1920; எரே 10:19; ஓசி 8:6; ஓசி 13:2; ஆமோ 5:26). விக்கிரகாராதனை வீணானது. (உபா 4:16; ஓசி 4:12; ஏசா 44: 910).
604. ஆசரிப்புக்கூடாரத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள்.
1. பொன்
2. வெள்ளி
3. வெண்கலம்
4. இளநீலநூல்
5. இரத்தாம்பரநூலும், தூபவர்க்கமும்
6. சிவப்புநூல்
7. மெல்-ய பஞ்சுநூல்
8. வெள்ளாட்டுமயிர்
9. தகசுத்தோல்
10. சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோல்
11. சீத்திம் மரம்
12. விளக்கெண்ணைய்
13. அபிஷேகதைலத்துக்குப் பரிமள வர்க்கங்கள்
14. கோமேதக்கற்கள்
15. ரத்தினங்கள் (யாத் 28:1529)
605. உடன்படிக்கைப் பெட்டிக்கு உள்ள 18 பெயர்கள்
1. பெட்டி (யாத் 25:10)
2. தேவனுடைய பெட்டி (1சாமு 4:1122; 2சாமு 6:212)
3. கர்த்தராகிய தேவனுடைய பெட்டி (1நாளா 13:6)
4. நமது தேவனுடைய பெட்டி (1நாளா 13:3)
5. இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டி (1சாமு 5:76:3)
6. கர்த்தருடைய பெட்டி (1சாமு 6:17:1)
7. கர்த்தராகிய ஆண்டவருடைய பெட்டி (1இராஜா 2:26)
8. உங்கள் தேவனாகிய கர்த்தரின் பெட்டி (யோசு 4:5)
9. சர்வ பூமிக்கும் ஆண்டவராகிய கர்த்தரின் பெட்டி (யோசு 3:13)
10. உடன்படிக்கைப்பெட்டி (யோசு 3:6)
11. தேவனுடைய உடன்படிக்கைப்பெட்டி (நியா 20:27; 1நாளா 16:6)
12. கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி (எண் 10:33; உபா 31:9)
13. உங்கள் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி (உபா 31:26; யோசு 3:3)
14. சர்வ பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறவருடைய உடன்படிக்கைப் பெட்டி (யோசு 3:11)
15. சேனைகளின் கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி (1சாமு 4:4)
16. சாட்சிப்பெட்டி (யாத் 25:22; யாத் 26:33,34)
17. உமது வல்லமை விளங்கும் பெட்டி (2நாளா 6:41; சங் 132:8)
18. பரிசுத்தப்பெட்டி (2நாளா 35:3)
606. வெண்கல பலிபீடத்தின் 20 பிரமாணங்கள்
1. சீத்திம் மரத்தால் ப-பீடத்தை உண்டு பண்ணுவாயாக (யாத் 27:1).
2. ஐந்து முழ நீளம் 7.5 அடி
3. ஐந்து முழ அகலம் 7.5. அடி
4. பலிபீடம் சதுரமாக இருக்க வேண்டும்.
5. மூன்று முழ உயரம் 4.5 அடி
6. பலிபீடத்தின் நாலு மூலைகளிலும் நாலு கொம்புகளை உண்டாக்குவாயாக (யாத் 27:2).
7. பலிபீடத்தை வெண்கலத் தகட்டால் மூடுவாயாக.
8. பலிபீடத்தின் சாம்பலை எடுக்கத்தக்க சட்டிகளையும் கரண்டிகளையும் உண்டாக்குவாயாக. (யாத் 27:3).
9. இரத்தத்திற்கும், தண்ணீருக்கும் கிண்ணிகளை உண்டாக்குவாயாக.
10. மாம்சத்திற்கு முள்துறடுகளை உண்டாக்குவாயாக.
11. நெருப்புக்கு நெருப்புச்சட்டிகளை உண்டாக்குவாயாக.
12. பலிபீடத்தின் பணிமுட்டுகளையெல்லாம் வெண்கலத்தால் பண்ணுவாயாக. (யாத் 27:4).
13. வலைப்பின்னல் போன்ற ஒரு வெண்கலச் சல்லடையைப் பண்ணுவாயாக.
14. சல்லடையின் நாலு மூலைகளிலும் நாலு வெண்கல வளையங்களை உண்டாக்குவாயாக.
15. சல்லடை ப-பீடத்தின் பாதியுயரத்தில் இருக்கும்படி அதைத் தாழப் ப-பீடத்தின் சுற்றடைப்புக்குக் கீழாக வைப்பாயாக. (யாத் 27:5).
16. ப-பீடத்துக்குச் சீத்திம் மரத்தால் தண்டுகளைப் பண்ணுவாயாக. (யாத் 27:6).
17. தண்டுகளை வெண்கலத்தகட்டால் மூடுவாயாக.
18. ப-பீடத்தைச் சுமக்கத்தக்கதாக அந்தத் தண்டுகளை அதின் இரண்டு பக்கங்களிலும் வளையங்களிலே பாய்ச்சுவாயாக. (யாத் 27:7).
19. பலகைகளை உள் வெளிவிட்டுப் பலகைகளினாலே பண்ணுவாயாக. (யாத் 27:8).
20. மலையில் காண்பிக்கப்பட்டபடியே பலிபீடத்தைப் பண்ணுவாயாக. (யாத் 27:8; யாத் 25:40; யாத் 26:30; எபி 8:5).
607. வெளிப்பிரகாரம் உண்டுபண்ணுவது குறித்த 16 பிரமாணங்கள்
1. வாசஸ்தலத்துக்குப் பிராகாரத்தை உண்டு பண்ணுவாயாக (யாத் 27:9).
2. தெற்கே தென்திசைக்கு எதிரான பிராகாரத்துக்குத் திரித்த மெல்-ய பஞ்சுநூலால் செய்யப்பட்ட தொங்கு திரைகள் இருக்கவேண்டும்.
3. தொங்குதிரைகளின் நீளம் 150 அடி.
4. தொங்குதிரைகளின் அகலம் 75 அடி (யாத் 27:12)
5. வெளிப்பிராகாரத்திற்கு வெண்கலத்தினாலே இருபது தூண்களும், இருபது பாதங்களும் இருக்கவேண்டும். (யாத் 27:10).
6. தூண்களின் கொக்கிகளும் அவைகளின் பூண்களும் வெள்ளியினால் செய்யப்பட வேண்டும்.
7. வடபக்கத்தின் நீளத்திற்கு “நூறுமுழ நீளமான தொங்குதிரைகள் இருக்க வேண்டும். (யாத் 27:11).
8. தொங்குதிரைகளுக்கு இருபது தூண்களும், அவைகளுக்கு இருபது வெண்கலப் பாதங்களும் பண்ண வேண்டும்.
9. தூண்களின் கொக்கிகளும் பூண்களும் வெள்ளியினால் செய்யப்படவேண்டும்.
10. பிரகாரத்தின் மேற்பக்கமான அகலத்திற்கு ஐம்பது முழ நீளமான (75 அடி) தொங்குதிரைகள் இருக்க வேண்டும்;
11. பிராகாரத்தின் கடைசியில் பத்துத் தூண்களும், அவைகளுக்குப் பத்துப் பாதங்களும் இருக்கவேண்டும். (யாத் 27:12).
12. சூரியன் உதிக்கிற திசையாகிய கீழ்ப்பக்கத்தின் பிராகாரம் ஐம்பதுமுழ (75 அடி) அகலமாயிருக்கவேண்டும். (யாத் 27:13).
13. ஒரு புறத்திற்குப் பதினைந்து முழ நீளமான (22.5அடி) தொங்குதிரைகள் இருக்க வேண்டும். (யாத் 27:14).
14. தொங்குதிரைகளுக்கு மூன்று தூண்களும், அவைகளுக்கு மூன்று பாதங்களும் இருக்கவேண்டும்.
15. மறுபுறத்துக்குப் பதினைந்து முழ நீளமான (22.5 அடி) தொங்குதிரைகள் இருக்க வேண்டும். (யாத் 27:15).
16. தொங்குதிரைகளுக்கு மூன்று தூண்களும், அவைகளுக்கு மூன்று பாதங்களும் இருக்கவேண்டும்.
608. பிரகாரத்தின் வாசல்களும், தூண்களும் செய்யப்படவேண்டிய விதத்தைப்பற்றிய 7 குறிப்புகள்
1. பிராகாரத்தின் வாசல் 30 அடி அகலம். (யாத் 27:16).
2. பிராகாரத்தின் வாசலுக்கு இளநீல நூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்பு நூலாலும் திரித்த மெல்-ய பஞ்சுநூலாலும் சித்திரத் தையல் வேலையாய்ச் செய்யப்பட்ட தொங்குதிரையை உண்டுபண்ணவேண்டும்.
3. பிராகாரத்தின் வாசலுக்கு நாலு தூண்களை உண்டுபண்ண வேண்டும்.
4. பிராகாரத்தின் தூண்களுக்கு நாலு பாதங்கள் இருக்கவேண்டும் (யாத் 27:16,17).
5. சுற்றுப் பிராகாரத்தின் தூண்களெல்லாம் வெள்ளியினால் பூண்கட்டப்பட்டிருக்க வேண்டும் (யாத் 27:17).
6. அவைகளின் கொக்கிகள் வெள்ளியினால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
7. அவைகளின் பாதங்கள் வெண்கலத்தினால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
609. பிரகாரத்தில் மொத்தம் 69 தூண்கள்
பிரகாரத்தில் மொத்தம் 69 தூண்கள் உள்ளன. அவை பிரகாரத்தின் ஒவ்வொரு பகுதியிலும் கர்த்தர் சொன்ன பிரகாரமாக வைக்கப்படுகிறது.
1. பிராகாரத்தின் தென்பகுதியில் 20 தூண்கள் (யாத் 27:910)
2. பிராகாரத்தின் வடக்கு பகுதியில் 20 தூண்கள் (யாத் 27:11)
3. பிராகாரத்தின் மேற்குபகுதியில் 10 தூண்கள் (யாத் 27:12)
4. பிராகாரத்தின் கிழக்கு அல்லது வாயில் பகுதியில் 10 தூண்கள் (யாத் 27:1416)
5. உள் மூடுதிரையில் 4 தூண்கள் (யாத் 26:32)
6. வெளி மூடுதிரையில் 5 தூண்கள் (யாத் 26:37)
610. நியாயவிதி மார்ப்பதக்கத்தில், உள்ள பன்னிரண்டு கற்கள்
நியாயவிதி மார்ப்பதக்கத்தில், பன்னிரண்டு கற்கள் பதிக்கப்படுகிறது. ஒவ்வொரு பத்தியிலும் மூன்று கற்கள் வீதமாக, நான்கு பத்திகளில் அவை பதிக்கப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:
முதலாம் பத்தி (யாத் 28:17)
1. பத்மராகமம் (நஹழ்க்ண்ன்ள்) ரூபன் (ஆதி 29:32)
2. புஷ்பராகம் (பர்ல்ஹக்ஷ்) சிமியோன் (ஆதி 29:33).
3. மாணிக்கம் (ஈஹழ்க்ஷன்ய்ஸ்ரீப்ங்) லேவி (ஆதி 29:34).
இரண்டாம் பத்தி (யாத் 28:18)
4. மரகதம் (ஊம்ங்ழ்ஹப்க்) யூதா (ஆதி 29:35).
5. இந்திரநீலம் (நஹல்ல்ட்ண்ழ்ங்) தாண் (ஆதி 30:6).
6. வச்சிரம் (உண்ஹம்ர்ய்க்) நப்தலி (ஆதி 30:8).
மூன்றாம் பத்தி (யாத் 28:19)
7. கெம்பு (கண்ஞ்ன்ழ்ங்) காத் (ஆதி 30:11).
8. வைடூரியம் (ஆஞ்ஹற்ங்) ஆசேர் (ஆதி 30:13).
9. சுகந்தி (ஆம்ங்ற்ட்ஹ்ள்ற்) இசக்கார் (ஆதி 30:18).
நான்காம் பத்தி (யாத் 28:20)
10. படிகப்பச்சை (இங்ழ்ஹ்ப்) செபுலோன் (ஆதி 30:20).
11. கோமேதகம் (ஞய்ஹ்ஷ்) யோசேப்பு (ஆதி 30:24).
12. யஸ்பி (ஓஹள்ல்ங்ழ்) பென்யமீன் (ஆதி 35:1619).
மார்ப்பதக்கத்தின் நான்கு மூலைகளிலுமுள்ள நான்கு வளையங்கள். மார்ப்பதக்கம் ஏபோத்தின் விசித்திரமான கச்சைக்கு மேலாக இருக்க வேண்டும். அது ஏபோத்தி-ருந்து நீங்கக்கூடாது. ஆகையினால் அதை அதின் வளையங்களால் ஏபோத்து வளையங்களோடே இளநீலநாடாவினால் கட்ட வேண்டும்.