பிரசங்க குறிப்புகள் 61-70

61. அதிகாலையில் எழுந்தால்,
உதாரணங்கள்:-

1, ஆபிரகாமின் அதிகாலை ஜெபத்தால் லோத்துவை சோதோம் கொமார பட்டணத்தின் அழிவில் இருந்து காப்பாற்றப்பட்டார். ஆதி 19:27
2, ஈசாக் பெயர்செபா வை உடன்படிக்கை செய்து சுதந்தரித்த நேரம் அதிகாலை. ஆதி 26:31-33
3, அதிகாலையில் கர்த்தர் மோசேக்கு ஆணையிடுதல், (என் ஜனங்களை ஆராதனைக்கு போக விடு ) யாத் 8:20
4,அதிகாலையில் கர்த்தர் தனது பெயரை மோசேக்கு தெரிவிக்கிறார். யாத் 34:4-6
5,யோசுவா மோசேக்கு பிறகு தனது பயணத்தை அதிகாலையில் தொடங்குகிறார்.
(கானானை சுதந்தரித்தார் ) யோசுவா 3:1
எரிகோவை வீழ்த்தியதும் அதிகாலமே. யோசுவா 6:15.
6,கிதியோன் கண் கண்ட கர்த்தரின் அற்புதம் அதிகாலை.
தேவன் எங்கள் ஜனகளோட இருக்கிறார் என்பதை நிரூபிக்கும் நேரம் அதிகாலை. நியாயதி 6:38
7,தாகோன் சிலை கர்த்தருடைய பெட்டிக்கு நேராக உடைந்து நொறுங்கும் நேரம் அதிகாலை. 1சாமு 5:4
8. இஸ்ரவேலின் முதல் ராஜாவை அபிஷேகம் பண்ணும் நேரம் அதிகாலை.
(கழுதையைத் தேடிச் சென்றவன் ராஜாவாக வீடு திரும்புகிறான் ) 1சாமு 9:26
9, தாவீது முதன்முதலில் யுத்த களத்திற்கு சென்ற நேரமும் அதிகாலை.
(கோலியாத்தை முறியடித்து வெற்றியும் கண்டார் ) 1சாமு 17:20
10, யோசாபாத் அதிகாலையில் எழுந்திருந்து ஜனங்களை கர்த்தர் பக்கமாய் நடத்தினார். (எதிரிகள் விழுந்தார்கள் ) 2நாளா 20:20

இறுதியாக,
நமக்காக அல்ல, சுய பிரயோஜனத்திற்காக அல்ல, எல்லோரும் இரட்ச்சிக்கப்படும்படியாக நாம் எழுந்திருக்க வேண்டும். 1கொரி 10:32

62. அதிசியமானவர்

நான் பிரம்மிக்கத்தக்க அதிசியமாய் உண்டாக் கப்பட்டபடியால், உம்மை
துதிப்பேன். உமது கிரியைகள் அதிசிய மானவைகள் . அது என் ஆத்துமாவுக்கு நன்றாய் தெரியும். சங் 139 : 14
அவரது நாமம் அதிசயம் ஏசாயா 9 : 6
அவரது கிருபை அதிசயம் சங் 31 : 21
அவரது நடத்துதல் அதிசயம் யோவேல் 2 : 26
அவரது சாட்சிகள் அதிசயம் சங் 119 : 129
அவரது பிறப்பு அதிசயம் சங் 139 : 14.

63. உங்கள் முழு இருதயத்தோடு

♥ கர்த்தரை தேடுங்கள் ( உபாகமம் 4: 29)
♥ கர்த்தரை நாடுங்கள் (எரேமியா 29:13)
♥ கர்த்தரிடம் திரும்பி வாருங்கள் ( பின் மாற்றத்தில் இருந்து ) (1 சாமுயேல் 7: 3)
♥ கர்த்தரை நேசியுங்கள் (மத்தேயு 22: 36- 38, உபா 6:5)
♥ கர்த்தரை சேவியுங்கள் (உபாகமம் 10: 12)
♥ கர்த்தருடைய சத்தத்திற்கு செவி கொடுங்கள் (உபாகமம் 30: 2)
♥ கர்த்தரை கூப்பிடுங்கள் (சங்கீதம் 119: 145)
♥ ஊழியஞ் செய்யுங்கள் (யோசுவா 22: 5)
♥ கர்த்தருக்கு முன்பாக உண்மையாக நடந்து கொள்ளுங்கள். (1 இராஜா 2: 3)
♥ நியாயப் பிரமாணத்திற்க்கு செவி சாயுங்கள். (2 இராஜா 23: 25)
♥ தேவனின் ஆலயப்பணிகளை செய்யுங்கள். (2 நாளாகமம் 31: 21)
♥ கர்த்தரிடத்தில் நம்பிக்கையாயிருங்கள் (நீதிமொழிகள் 3: 5)
♥ மகிழ்ந்து களிகூருங்கள் (செப்பானியா 3:14)
♥ விசுவாசியுங்கள் (அப்போஸ்தலர் 8: 37)

64. உசியாவின் வாலிபம்

அப்பொழுது யூதா ஜனங்கள் எல்லோரும் பதினாறு வயதான
உசியாவை அழைத்து வந்து, அவனை அவன் தகப்பனாகிய
அமித்சியாவின் ஸ்தானத்திலே ராஜாவாக்கினார்கள். 2 நாளாக 26 :1.

உசியராஜாவை 15 வயதில் அதாவது அவனது வாலிய வயதில் ராஜாவாக்கினார்கள். அவன் கர்த்தரை தேடும்போது அவன் எப்படியிருந்தான் என்றும், கர்த்தரை விட்டு விலகும்போது அவன் எப்படியிருந்தானென்றும் இதில் நாம் கவனிக்கலாம். 

2 நாளாக 26ஆம் அதிகாரம்

1. உசியா கர்த்தரை தேடினவன், கர்த்தருக்கு பயந்தவன் 2 நாளாக 26 : 4
2. உசியா கர்த்தரை தேடியதால் அவன் காரியங்களை வாய்க்கச்செய்தார் 2 நாளா 26 : 5
3. உசியாவுக்கு தேவன் துணையிருந்ததால் அவன் எங்கும் வெற்றி வாகை சூடினான். 2 நாளா 26 : 7
4. உசியா கீர்த்தி பெற்றவன் 2 நாளா 26 : 8
5. உசியாவிற்கு ஐசுவரியமும் மகிமையும் உண்டாயிற்று 2 நாளாக 26 : 10

கர்த்தரை விட்டு விலகிய உசியா

1. கர்த்தரைவிட்டு அவன் விலகியபோது அவன் இருதயம் மேட்டிமையடைந்தான் 2 நாளா 26 :16
2. தேவ கட்டளையை மீறி தூபங்காட்டின தால் தேவ கோபத்தை பெற்றான் 2 நாளாக 26 : 17
3. உசியா ராஜ்ஜிய பதவி இழந்தான் 2 நாளாக 26 : 17

65. உடன்படாதே

ஒருவன்மேலும் சீக்கிய மாய்க் கைகளை வையாதே. மற்றவர்கள் செய்யும் பாவங்களுக்கும் உடன்படாதே, உன்னைச் சுத்தவனாக காத்துக்கொள்ள. 1 தீமோ 5 : 22.

உடன்படாதிருங்கள்

1. பாவத்திற்கு உடன்படாதிருங்கள் ஆதி 39 : 9 , வெளி 18 : 4, எரே 35 : 1 — 19
2. இரகசிய ஆலோசனைகளுக்கு உடன்படாதிருங்கள் ஆதி 49 : 5 — 7, லூக்கா 22 : 1 — 6
3. பிணைப்படுவதற்கு உடன்படாதிருங்கள் நீதி 22 : 26 , 27, நீதி 6 : 1 — 5
4. அந்தகாரக் கிரியை களுக்கு உடன்படாதே எபே 5 : 11 , 3 : 8 , ரோமர் 13 : 12 — 14 , 1 தெச 5 : 5 — 8.

66. உண்மையுள்ளவனுக்கு கிடைக்கும் ஆசீர்வாதங்கள்

1) கர்த்தர் பாதுகாக்கிறார் – சங் 31:23
2) பூரண ஆசிர்வாதம் கிடைக்கும் – நீதி 28:20
3) அநேகத்தின் மேல் அதிகாரி – மத் 25:23
4) பலன் அளிப்பார் – 1 சாமு 26:23
5) கர்த்தர் சமீபம் – சங் 145:18
6) பிழைக்கவே பிழைப்பான் – எசேக் 18:9
7) ஊழியத்துக்கு அழைப்பு கிடைக்கும் – 1 தீமோ 1:12

67. உத்தமமாய்

சங்கீதம் 119:80 நான் வெட்கப்பட்டுப் போகாதபடிக்கு, என் இருதயம் உமது பிரமாணங்களில் உத்தமமாயிருக்கக்கடவது. 

1. நடக்கையில் உத்தமமாய் இருங்கள் எண்ணாகமம் 14:24
2.நற்குணத்தில் உத்தமமாய் இருங்கள் ரூத் 3:10
3.பிரமாணங்களில் உத்தமமாய் கீழ்படிய வேண்டும். சங்கீதம் 119:80
4. சேவிப்பதில் உத்தமமாய் இருங்கள் யோசுவா 24:14

உத்தமனுக்கு கிடைக்கிற ஆசிர்வாதங்கள்

1) உத்தமனுக்கு கர்த்தர் துணை – 2 நாளா 19:11

2) உத்தமனுடைய முடிவு சமாதானம் – சங் 37:37
3) உத்தமனாய் நடக்கிறவன் இரட்சிக்கபடுவான் – நீதி 28:18
4) உத்தமமாய் நடப்பவர்களுக்கு கர்த்தர் கேடகமாயிருக்கிறார் – நீதி 2:7
5) உத்தம குணத்தில் தேவன் பிரியப்படுகிறார் – 1 நாளா 29:17
6) உத்தமனை தேவன் வெறுப்பது இல்லை – யோபு 8:20
7) உத்தமனை கர்த்தர் தாங்குகிறார் – சங் 41:12
8) உத்தமனுக்கு கர்த்தர் நன்மையை வழங்காதிரார் – சங் 84:11
9) உத்தமர்களின் நாட்களை கர்த்தர் அறிந்திருக்கிறார் – சங் 37:18
10) உத்தமமாய் நடக்கிறவன் பத்திரமாக நடக்கிறான் – நீதி 10:9
11) உத்தமர்கள் பூமியிலே தங்கி இருப்பார்கள் – நீதி 2:21
12) ஜீவ கிரிடம் பெறுவான் – யாக் 1:12
13) 1000 வருஷ அரசாட்சியில் 10 பட்டணங்களுக்கு அதிகாரி – லூக் 19:17

68. உபதேசம்

உபதேசம் என்ன செய்யும்

1) சுத்திகரிக்கும் – யோ 15:3
2) ஆரோக்கியப்படுத்தும் (பெலவினம் இராதபடி) – தீத்து 2:1, 2 தீமோ 4:13
3) நிதானமான, நியாயமான கிரியைகள் வெளிப்படும் – நீதி 1:2,3
4) பெலன் உண்டாக்கும் – 1 கொரி 1:18
5) தேவபக்தி பெருகும் – 1 தீமோ 6:3
6) கர்த்தரை அறிகிற அறிவில் விருத்தியடைய செய்யும் – நீதி 9:9
7) நம்மை தேறினவர்களாக மாற்றும் – மத் 13:52

வேதத்தில் உள்ள உபதேசங்கள்

1) புதிய உபதேசம் – மாற் 1:27
2) கடின உபதேசம் – யோ 6:60
3) என் (இயேசு) உபதேசம் – யோ 7:16, அப் 13:12
4) அப்போஸ்தலருடைய உபதேசம் – அப் 2:42
5) சிலுவையை பற்றிய உபதேசம் – 1 கொரி 1:18
6) ஒப்புரவாக்குதலின் உபதேசம் – 2 கொரி 5:19
7) பிசாசுகளின் உபதேசம் – 1 தீமோ 4:1
8) வேற்றுமையான உபதேசம் – 1 தீமோ 1:3
9) மூல உபதேசம் – எபி 5:12
10) ஆரோக்கியமான உபதேசம் – 1 தீமோ 1:11

உபதேசம் யாருக்கு

1) நீதிமானுக்கு – நீதி 9:9
2) பால் மறந்தவனுக்கு (பால் = ஆசிர்வாத பிரசங்கம் எபி 5:12) – ஏசா 28:9
3) சீஷர்களுக்கு – மத் 28:19,20
4) பரிசுத்தம் அடைகிறவனுக்கு – யோ 15:3

69. உபத்திரவத்தில் கர்த்தர்

1) கைவிடமாட்டார் – புலம் 3:31
2) காப்பார் – வெளி 3:10.
3) திடப்படுத்துகிறார் – அப் 23:11
4) சுமக்கிறார் – ஏசா 63:9
5) நம்மோடு இருக்கிறார் – சங் 91:15
6) உதவி செய்வார் – எபி 2:18
7) நம்மை உயிர்ப்பிப்பார் – சங் 138:7
8) இரங்குவார் – புலம் 3:32

உபத்திரவத்தில் நமது அறிக்கை

1) கர்த்தர் பார்த்து கொள்வார் – ஆதி 22:8
2) கர்த்தர் எனக்காக யுத்தம் செய்வார் – யாத் 14:14
3) கர்த்தர் தப்புவிப்பார் – 1 சாமு 17:37
4) கர்த்தர் என் பெலன் – ஆபகூக் 3:17,18
5) என் குறைவெல்லாம் நிறைவாக்குவார் – பிலி 4:19

70. உபத்திரவத்தின் ஆசிர்வாதம்

1) நீதியின் கிரிடம் கிடைக்கும் – 2 தீமோ 4:,7,8
2) கிறிஸ்துவுடன் மகிமைபடுவோம் – ரோ 8:17
3) இயேசு கிறிஸ்து வெளிபடும் போது களி கூர்ந்து மகிழ்வோம்- 1 பேது 4:12,13
4) நீத்திய கன மகிமையை உண்டாக்குகிறது – 2 கொரி 4:17
5) அவரோடு ஆளுகை செய்வோம் – 2 தீமோ 2:12
6) ஜீவ கிரிடம் சூடுவோம் – வெளி 2:10
7) பொன்னாக விளங்குவோம் – யோபு 23:10
8) பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க செய்கிறது – அப் 14:22

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *